இப்போது ஈசன் அதற்கு புது வழி கண்டிருந்தான். ம்.. தாத்தாவிற்கு வீடியோ காலில் அழைத்தான், கிருபா வீட்டில் இருக்கும் நேரங்களில்.
தாத்தா பேசும் போது.. இரவு உணவு நேரமாக இருக்க.. எல்லோரும் உடனிருந்தனர். பாட்டி பேசினார்.. கோகிலா பேசினார்.. கண்ணம்மா அக்கா பேசினார். அப்படி பேசும் போது, அவளை பார்த்துக் கொண்டான் ஈசன். அவனுக்கு, அவளை நேரடியாக அழைக்க ஈகோ தடுக்கிறது. அதனால் தாத்தாவிற்கு அழைத்தான்.
கிருபாவும் அப்போதுதான் ஈசனை பார்த்தாள். அவ்வளவுதான், அவளின் வைராக்கியம் எல்லாம்.. கைமாறும் அலைபேசி திரையில்.. தெரியும் அவனின் உருவத்தின் முன் காணாமல் போனது.
சண்டையென்றால், எப்போதுமே, ஈசனாக அவளிடம் பேச மாட்டான். கிருபாதான் பேச வேண்டும். இப்போது போனில் அவனின் உருவத்தை பார்த்துவிட்டால்.. அவளுக்கு கண்கள் அவனை தேட தொடங்கிவிட்டது.
கூச்சமே இல்லாமல், தாத்தாவின் போன் வாங்கி “எப்படி இருக்கீங்க” என்றாள், கிருபா. ம்.. அதுதானே கிருபா, கிருபையானவள். எல்லோரிடமும் அன்பு.. அதிலும் தன்னவன் எனும் போது.. எந்த ஈகோவும் அவளுக்கு இல்லாமல் போனது.
அவள் பேச தொடங்கினாள்.. தாத்தா முதற்கொண்டு.. யாரும் அங்கே இருக்கவில்லை.
கிருபாவிற்கு கொஞ்ச பழகிய குரல்தான்.. இந்த அதட்டல், மிரட்டல் எல்லாம். ஆனால் முகம் அப்படி அல்லவே. அவனின் கண்களில் ஒரு தேடல் தெரிகிறதே.. இந்த வீடியோ காலில். உதடுகள்.. அவனின் இயல்பாக பேசினாலும்.. கண்கள் அவளை எப்போதும் தேடும்.. என உணர்ந்தவள் அமைதியாகவே, தன்னவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஈசன்தான் இறங்கி வந்தான்.. “கிறுக்கி, கொஞ்சம் முகத்தை நல்லாதான் காட்டேன். கல்யாணம் ஆகறத்துக்கு முன்னாடியே, எனக்கு எதுக்கு இவ்வளோ பெரிய தண்டனை. ம்.. முகத்தை திருப்பிக்கிற” என்றான்.
கிருபா “நான் ஒன்னும் திருப்பிக்கலை.. தாத்தா போனில் இவ்வளவுதான் தெரியும்” என்றாள், வீம்பான புன்னகையோடு. அந்த புன்னகை சொன்னது.. நான் சொல்லுவது பொய் என.
கிருபாவின் முகத்திலும் புன்னகை.. தன்னவனை பார்த்துக் கொண்டே இருந்தாள்.. அவன், தன் போனினை.. டேபிளில் வைத்துவிட்டு.. ப்ளூடுத் போட்டு பேசிக் கொண்டிருந்தான். அவன் எதோ வேலை செய்துக் கொண்டிருந்தான்.
கிருபாவின் விழுங்கும் பார்வையை உணர்ந்து.. ஈசன் “என்ன.. 185 சென்ட்டிமீட்டர்தான் இருக்கேன்.. ஒருவாரம் பார்க்காததில் குறைந்துவிடவில்லை. அப்படியேதான் இருக்கேன். உன் ஈசன் நல்லாத்தான் இருக்கான். ஆனால், என் கிறுக்குதான். கொஞ்சம் வாடி போச்சு.” என்றான்.
கிருபாவிற்கு வெட்கம்தான் வந்தது.. “ஆமாம், கூப்பிடவேயில்லை நீங்க” என்றாள்.. புகார் சொல்லும் குரலில்.
ஈசன் இப்போது அமைதியானான்.. கிருபா, முன்பு செய்த வேலையை இப்போது ஈசன் செய்தான்.. அதான், அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
கிருபா “ஒன்னுமில்லையே.. நீங்க ஒருவாரம் கழித்து பார்ப்பதால் அப்படி இருக்கு” என்றாள்.
இவள் சரியில்லை எனவும்.. “என்ன.. சொல்லு.. இந்த வாரம் என்ன செய்தார் உன் மாமா” என்றான் கொஞ்சம் குரல் மாரிதான் இருந்தது.
கிருபாவும், அவன் கடுப்பாக கேட்க்கிறான்.. என உணர்ந்தாலும்.. தன்னுடைய தாக்கத்தை சொல்லியே தீர்த்தாள் “இந்த வாரம், என் மாமா.. ஊருக்கு வரவேயில்ல.. அத்தைகிட்டதான் பேசினேன். வேற ஒண்ணுமில்ல” என்றாள்.
கிருபா “அதானே, உங்க முகம் ப்ரைட்டாக இருக்கு.. என்ன காரணம்..” என்றாள்.
ஈசன் “நாளைக்கு லீவ், நாங்க சுத்தி பார்க்க போறோம்.” என்றான் குதுகலமாக.
கிருபாவிற்கும் சந்தோஷம் ஆனது.. “அப்பா, கஞ்சாம்பட்டி.. ஒருவழியா.. வெளியே போய் பார்க்க போறீங்க.. என்ஜாய்” என்றாள்.
ஈசன் “யாரு, நான் கஞ்சனா… எல்லாம் உங்களுக்காகத்தானே பார்க்கிறேன்” என்றான் ராகமாக.
கிருபா “வேண்டாமே.. என்ஜாய் பண்ணுங்க. கொஞ்சம் ஜாலியாகதான் இருங்களேன். பார்த்துக்கலாம்” என்றாள் உண்மையான அக்கறையில்.
ஈசன் “நீ ரொம்ப நல்லவடி” என்றான்.
கிருபா “அவ்வளவு நல்லவள் எல்லாம் இல்ல.. இப்போ போய் பார்த்துகிட்டால் தானே.. என்னை கூட்டி போக வசதியாக இருக்கும், அதான்” என்றாள்.
ஈசன் “ப்பா.. கிருபாவின் மூளை எப்படி எல்லாம் யோசிக்குது” என்றான் ஆச்சர்யமாக.
கிருபாவும் அதே கிண்டல் குரலில் “என்ன செய்ய.. ஈசனை கல்யாணம் செய்துக்க போறேனே.. இப்படி யோசிப்பதெல்லாம் தான்.. பெசிக் ரூல்’லாம்” என்றாள்.. முயன்று சிரிக்காத குரலில்.
ஈசன் அவளின் உதடுகளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
கிருபா அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் வெட்கத்தோடு சிரித்தாள்.
ஈசன் “தெரிகிறது.. நன்றாக தெரிகிறது.. ஈசன் பொண்டாட்டியாக பத்து பொருத்தமும் இருக்கு டி உனக்கு” என்றான்.. ரசனையாக.
“அவள் விழி மொழியை..
படிக்கும் மாணவனானேன்..
அவள் நடைமுறையை..
ரசிக்கும் ரசிகனுமானேன்..”
பேச்சுக்கள் நீண்டது இரவருக்குள்ளும்.
நாட்கள் கடந்தது.. ஈசனும் இந்தியா வரும் தேதியும் உறுதியானது.
பெரியவர்களுக்கு பாரம் ஏறிகொண்டது. என்ன இது.. சஹாவிற்கு வரன் அமையவில்லையே என எண்ணிக் கொண்டே இருந்தனர்.
அந்த நேரத்தில், ஒருநாள் காலை எட்டுமணிக்கு , சண்முகம் அழைத்தார் தன் தந்தைக்கு.. “அப்பா, நானும் மீனாட்சியும் கல்யாணத்திற்கு வந்தோம்.. அவர்களின் உறவில் சஹானாவை பெண் கேட்க்கிறார்கள் ப்பா.. நான் உங்க நம்பர் கொடுக்கிறேன் பேசிக்கோங்க” என்றார்.
அருணாச்சலம் “சரி ப்பா” என்றார்.
அதன்படியே மதியமாக அவர்களும் அழைத்து பேசினார். அருணாசலம் தீர விசாரித்தார். என்ன சொந்தம், எங்கே வேலை.. என அவர்களிடம் விசாரித்த பின்தான் ஜாதகம் கொடுக்க ஒப்புக் கொண்டார். மகன் ஏதாவது கோவத்தில் செய்திடுவானோ என பயம்.
ஆனால், அடுத்த ஒருவாரத்தில் நல்ல தகவல் வந்தது.. சஹாவின் ஜாதகம் பொருந்தி இருக்கிறது என. எனவே, மேற்கொண்டு பேச தொடங்கினர்.
அருணாசலம் இந்தமுறை சண்முகத்தை கலந்துக் கொண்டார்.. “என்ன ப்பா சொல்ற, எப்போ வர சொல்லாம்.. நீயும் கண்டிப்பா இருக்கணும். உன் மூலமாகத்தானே வந்தது.. அதனால் மறுக்காமல் வரணும் நீ” என்றுவிட்டார்.
சண்முகம் “ஏன் ப்பா, நான் வந்து என்ன பேச” என்றார்.
அருணாசலம் “நீ வா.. அது போதும்..” என்றார்.
ஷண்முகத்தால் மறுக்க முடியவில்லை.
அடுத்த வாரத்தில் ஒருநாள் சஹானாவை பெண் பார்க்க வந்தனர். சண்முகம் மீனாட்சி இருவரும் காலையில்தான் வந்தனர். ஏதும் கலந்துக் கொள்ளவில்லை.. கருத்துக்களை சொல்லவில்லை ஆனால், சபையில் வந்து நின்றனர்.
ஈசனுக்கு மாப்பிள்ளையின் போட்டோ முன்பே அனுப்பட்டிருந்தது. அவனும் வீடியோ காலில் இருந்தான். சாம்பூர்ணாதான்.. நடக்கும் நிகழ்வுகளை விளக்கி சொல்லிக் கொண்டிருந்தாள், ஈசனுக்கு.
தாத்தா வந்திருந்தவர்களிடம் நல்லவிதமாக பேசினார். விவரங்களை கேட்டுக் கொண்டார். தங்களின் நிலையையும் சொன்னார். அவர்களும் “அருணாசலத்தின் பேத்தி என்பதே எங்களுக்கு போதும்.. ஷங்கரும் அவர் மனைவியும் பிள்ளைகளை உங்களிடம் சேர்த்த பிறகு.. நீங்கள்தானே பொறுப்பு. எங்களுக்கு எந்த குறையுமில்லை” என்றனர்.
ஈசன் வரும் நாளினை கணக்கிட்டு, நிச்சயத்திற்கு நாள் குறித்தனர். சண்முகமும் மீனாட்சியும்தான் பெண் வீட்டு சார்பாக.. தாம்பூலம் வாங்கிக் கொண்டனர்.
சண்முகம் வாங்கி, தன் அன்னையின் கையில் கொடுத்துவிட்டார் உடனேயே. ஆனாலும், வீட்டில் எல்லோருக்கும் சந்தோஷம்.
ஈசன் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். ஒருமாதிரி.. வெள்ளை போல இருக்கும்.. சந்தனவண்ண கொடியை இருவரும் கையிலெடுத்துக் கொண்டனர் போல.. அமைதியாக இடத்திற்கு தக்க இருவரும் நடந்துக் கொள்ள தொடங்கியிருந்தனர்.