இந்த நிலையில்.. கோகிலாவின்.. அதாவது கிருபாவின் அத்தை வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. நேரில் வந்திருந்தனர்.. நாத்தனார் பெண்ணிற்கு மாப்பிள்ளை அமைந்திருப்பதால்.. நிச்சயம் திருமணம் என.. கோகிலாவை அழைக்க.. முன்பே வந்து நிற்க வேண்டும் என்ற கோரிக்கையோடு கோகிலாவின் நாத்தனார்.. மற்றும் புகுந்த வீட்டினர் வந்திருந்தனர்.
கிருபாவினை பற்றி அப்போது விசாரிக்க, தாத்தா.. “ஷங்கர் பையனுக்குதான் கிருபாவை பேசலாம்ன்னு இருக்கோம்.. அவன் வெளிநாட்டில் இருக்கான்.. ஆறுமாதத்தில் வந்திடுவான். வந்ததும் பேசலாம்ன்னு இருக்கோம்” என.. கிருபாவின் சித்தப்பாவிடம் சொல்லிவிட்டார். அவர்களுக்கு பெரிதாக எந்த கருத்தும் இல்லை.. “சந்தோஷம்” என் முடித்துக் கொண்டனர்.
கோகிலாவினை அவர்கள் முறையாக அழைத்து சென்றனர். அத்தோடு குடும்பம் மொத்தத்தையும் அழைத்து சென்றனர்.
‘ஷங்கர் பெண் சஹானாவிற்கு வரன் பார்க்கிறோம்’ என அவர்களிடமும் சொல்லி வைத்தார் தாத்தா. இப்படியே சென்று வரும்.. விஷேஷ வீடுகளில் ஷங்கரின் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம்.. என தாத்தா எல்லோரிடமும் சொன்னார். அப்படியே கிருபாவின் விஷயமும் எல்லோரின் காதுகளையும் சென்றடைந்தது.
குடும்பமாக எல்லோரும் மதுரைக்கு, திருமணத்திற்கு சென்று வந்தனர். சண்முகமும் மீனாட்சியும் வந்தனர். ஆக, எல்லோருமாக சென்று வந்தனர்.
அப்போதுதான் சம்பூர்ணா பரீட்சை முடிந்து லீவிற்கு என விட்டு சென்றனர் சண்முகம் தம்பதி. இரண்டு மாதம் சம்பூர்ணா இங்கேதான் இருந்தாள். எல்லோரிடமும் சகஜமாக பேசினாள்.
சஹா, வந்தாள் ஒரு விடுமுறை தினங்களில்.. ஆக, கிருபா சம்பூர்ணா சஹா என மூவரும் நன்றாக ஊர் சுற்றினார். மூவரும் ஒரே அறையில் இருந்துக் கொண்டு படம் பார்ப்பது பாட்டு கேட்பது என.. அந்த வீடே சத்தமாக தெரிந்தது.
ஈசன், தாத்தாவிற்கு அழைக்கும் போதெல்லாம் பேசினாள்.. சின்ன தங்கை. எனக்கு இந்த ப்ரண்ட் லிப்ஸ்டிக் வேண்டும் என கோரிக்கையும் வைத்தாள். ஈசனும் சரி சரி என எல்லாம் பொறுப்பாக குறிப்பெடுத்துக் கொண்டான். அவள் சண்முகம் போல உயரம்.. அதனால் கல்லூரி படிப்பாள் என எண்ணியிருந்தான்.
ஆனால், இப்போது பேசும் போதுதான் தெரியும்.. அவள் இப்போதுதான் ட்டுவெல்த் எழுதி இருக்கிறாள் என்பதே. இன்னும் குழந்தைதனம் மாறாமல் இருப்பதாக அவனுக்கு தோன்றியது. அவனுக்கு சம்பூர்ணாவின் பேச்சு.. குழந்தைத்தனம் எல்லாம் பிடித்திருந்தது. அத்தோடு, சண்முகத்தையும் நல்லவரோ என யோசிக்க வைத்தது. ம்.. தன்னிடம் பேச கூடாது என்றோ.. தன்னோடு அப்போது வெளியே வந்தாளே.. வர கூடாது என்றோ அவர் சொல்லவில்லை.. என்பதால், நல்லவரோ என யோசித்தான் ஈசன்.
ரிசல்ட் வரும் நேரம்தான் சின்னவள் சென்னைக்கு சென்றாள். நல்ல மதிப்பெண் வாங்கியிருந்தாள்.. CA படிக்க போகிறேன் என சொல்லிக் கொண்டிருந்தாள். ஈசன், அவளின் எண்ணுக்கு அழைத்து வாழ்த்துகள் சொன்னான்.. ஆர்பாட்டமாக பேசினாள் சம்பூர்ணா.
சண்முகம் “யாருடா..” என பெண்ணின் பேச்சு சத்தத்தில் கேட்டார்.
சம்பூர்ணா “அண்ணா ப்பா” என்றாள்.
சண்முகம் மறுவார்த்தை பேசவில்லை. சென்றுவிட்டார்.
சம்பூர்ணா, ஈசனிடம் தொடர்ந்து பேசினாள்.
ஈசனுக்கு கூட அங்கே நடந்த உரையாடல் கேட்டது. மனதுக்குள் குறித்துக் கொண்டான்.. ஷண்முகத்திற்கு என, மனதில் கொடுத்திருந்த மதிப்பெண்களில்.. இன்னமொரு இரண்டு மதிப்பெண்களை சேர்த்துக் கொண்டான்.
சண்முகமும் முன்போல தள்ளி எல்லாம் இல்லை. அடிக்கடி தன் ஊருக்கு வந்து போனார். கடையில் கிருபாவிடம் பேசினார்.. கணக்குகள் பார்த்தார். அந்த கடையை வாடகைக்கு விடுவது பற்றி இருவரும் சேர்ந்து பேசினர். முன்போல முடிவுகள் எடுத்தனர்.
சண்முகம் “யோசித்து சொல்றேன்” என முடித்துக் கொண்டார். அவருக்கும் நல்ல யோசனையாகத்தான் தெரிந்தது. அவர் பட்ஜெட்.. மெயின்டனன்ஸ்.. பற்றி யோசிக்க வேண்டி இருந்தது. அதனால், யோசிக்கிறேன் என்றார்.
அதே சண்முகம் வீட்டில் கிருபாவிடம் அதிகம் பேசுவதில்லை. முன்போல.. “லாப்டாப் எடு.. டா, சாப்பிடலாமா கிருபா.. உனக்கு மீனாட்சி எதோ ட்ரெஸ் வாங்கி கொடுத்தாள் இந்தா..” என முன்போல எந்த பேச்சும் இல்லை.
வீட்டில் எல்லோருக்கும் இது நன்றாக தெரிந்திருந்தது. யாரும் கேட்டு.. மீண்டும் ஒரு சண்டை வேண்டாமென அமைதியாகினர். பாட்டிதான் அடிக்கடி சண்முகத்திடம் பேசுவார்.. கிருபாவின் பெருமையை.
சஹாவிற்கு மாப்பிள்ளை பார்ப்பது பற்றியும் தந்தையும் அன்னையும் சொல்லியிருக்கின்றனார். சண்முகம், மறுத்தோ.. இல்லை.. நானும் பார்க்கிறேன் என்றோ ஏதும் பேசவில்லை. தலையை லேசாக அசைத்தார்.. கேட்டுக் கொண்டேன் என்ற விதமாக.அதுமட்டும் அன்னை தந்தைக்கு சந்தோஷம்.
ஈசன் வாரத்தில் ஒருநாள் தானாகவே அழைப்பான். அவனுக்கு கிருபாவிடம் பேசாமல் இருக்க முடியாது. அதுவும் தனிமை அவனை எந்த அளவிற்கு வேலையில் கவனத்தினை குவித்ததோ.. அந்த அளவு கிருபாவின் மேலும் கவனத்தை குவித்தது.
சென்ற முறை வந்திருந்த போது.. உணவுகள் செய்வதற்கு என கோகிலாவினை அழைத்து சந்தேகம் கேட்பான். இந்தமுறை.. எந்த சந்தேகமாக இருந்தாலும் கிருபாவைதான் அழைத்தான்.
ஈசன் எப்போதும் அவசரம் போலவே அழைப்பான்.. “எந்த கொரியர் அனுப்பியிருக்க கிருபா..” என்பான் சாமான்களை வாங்கும் சாக்கில்.
கிருபா பொறுப்பாக பதில் சொன்னாள்.
அடுத்த ஒரு நான்கு நாட்களில் “ இந்த டிஷ் எப்படி செய்யணும் கிருபா” என.. போனில் அழைத்து கேட்பான். அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம்.. வீடியோ காலில் பேசிக் கொள்ள கூடாது என. அதனால் எல்லாம் நார்மல் கால்ஸ்தான்.
என்னமோ அதிகம் தேடவில்லை என இருவரும் காட்டிக் கொண்டனர் சிலநாட்கள்.
ஆனால், அதுவும் ஒரு கட்டத்தில் முடியாமல் போக.. கிருபாவிற்கு தினமும் பேச வேண்டும் என எண்ண தொடங்கிவிட்டாள். அதுவும் தனது மாமா வரும் நாட்களில்.. அவரின் புறக்கணிப்பில்.. ஈசன் மேல் கோவமும் வரும்.. அவனை தேடவும் செய்வாள்.
ஆனால், அவன் வேலை கெடுமோ.. என வாரம் ஒருதரம் என இருந்த அழைப்பு.. நான்கு நாட்களுக்கு ஒருமுறை என அழைத்து.. பேசினாள், பெண்.
கிருபாவிற்கே தோன்றும்.. இது காதலா.. என சந்தேகம் தோன்றும். எப்படி நாங்க எல்லா ரூல்ஸ்சினையும் ஃப்பால்லோ பண்றோம்.. நாங்க உணமையாகவே லவ் பண்றோமா.. என தீவிர சந்தேகம் அவளுக்கு. ஈசனிடம் கேட்க்கும் தைரியம் இல்லை. அமைதியாகவே இருந்தாள்.
ஈசனுக்கு, அங்கே சில நண்பர்கள் அவ்வளவுதான். வீடு.. அலுவலகம்.. உணவு என.. அவ்வளவு பெரிய வெளிநாடும்.. சின்ன உலகமாக சுருங்கி போனது ஈசனுக்கு. தங்கைக்கு கல்யாணம் செய்யணும் என எங்கும் சுற்றவில்லை.. இருக்கிபிடித்து செலவு செய்கிறான். இந்த நாளில் இவள் இந்த நேரத்தில் அழைப்பாள் என எதிர்பாக்க தொடங்கிவிட்டான், ஈசன்.
இன்றும் அப்படியே, ஈசன் அந்த நேரத்திற்காக தனது வேலையை முடித்து.. கொஞ்சம் ப்ரீ செய்துக் கொண்டு காத்திருந்தான், கிருபாவின் அழைப்பிற்காக.
கிருபாவின் குரலில் இன்று துள்ளல் இல்லை “சொல்லுங்க” என்றாள்.
ஈசனுக்கு அந்த சுரத்தே இல்லாத குரலை கேட்டதும்.. எதிர்பார்பெல்லாம் வடிய.. “என்னாச்சு குரல் ஒருமாதிரி இருக்கு” என்றான், அதட்டலாக.
கிருபா “மாமா, இந்த வாரம் வந்தாங்க.. கடையை வாடகை விடுவது பற்றி என்கிட்டே கேட்டாங்க.. கணக்கெல்லாம் பார்த்தோம். ஆனாலும், ஒரு வார்த்தை கூட எப்படி இருக்கேன்னு இன்னும் என்கிட்டே கேட்கலைங்க” என்றாள்.
ஈசன் சலித்துக் கொண்டான் தனக்குள்.
ஈசனிடம் கிருபா பேசும் போதெல்லாம் சொல்லும் ஒரு வாக்கியம் “மாமா என்கிட்டே பேசவேயில்லை” என்பதுதான்.
ஈசனும் அங்கே சென்ற புதிதில் கிருபா சொல்லவும் கொஞ்சம் வருத்தம் கொண்டான். ஆனால், தொடர்ந்து இப்படியே சொல்லவும் கடுப்பாகினான் இப்போது. ஈசன் “வாரா வாரம் இதை சொல்ற, நான் என்ன செய்யனும்ன்னு சொல்லு.. செய்யறேன். நான் வேணும்ன்னா சொல்லவா.. நீங்க கிருபா கூட பேசுங்கன்னு.. இரு போன் பேசிட்டு வரேன்” என்றான் கிண்டலாக.. எரிச்சலாக.
கிருபாவிற்கு வருத்தமாகத்தான் இருந்தது.. ஈசனின் கிண்டல் குரல். யார்தான் என்ன செய்ய முடியும்.. என புரிந்தாலும்.. அவர் இயல்பாக தன்னிடம் பேசவில்லை என்பது வருத்தம்.. அதை ஈசனிடம் சொன்னால்.. இப்படிதான் கிண்டல் செய்கிறான்.. இல்லை எரிந்து விழுந்தான். ஆனால், சண்முகத்தின் புறக்கணிப்பில்.. பெண்ணவளுக்கு ஒரு குற்றயுணர்வு எழுகிறது. அதனால், ஈசனிடம் சரியாக பேச முடியவில்லை. அதனால் இப்போதும் அமைதிதான் கிருபா.
ஈசன்தான் இறங்கி வர வேண்டியிருந்தது “விடு, எங்க போய்டுவார்.. பேசிடுவார். நீ இதுக்கு எல்லாம் கவலை படாத. பார்த்துக்கலாம்” என அவனும் சமாதானம் செய்தான். ஆனாலும் கிருபாவின் மனம் ஏற்க மறுக்கிறது.
ஈசன் அடுத்து என ஏதாவது பேச வர.. கிருபா மனம் அதை ஏற்க தடுமாறுகிறது. மாமா, பேசவில்லை என்ற குற்றவுணர்வுதான் அதிகமாகிறதே அன்றி.. அவனின் பேச்சுக்களில் கவனம் இல்லை.
ஈசன் அவள் “ம்..” கூட சொல்லாததை உணர்ந்து.. அழைப்பை துண்டித்துவிட்டான்.
அதுதொட்டு.. ஒரு விலகல் அடிக்கடி இருவரிடமும்.. அவளிடம் பேசினாள் புலம்புவாளோ என அவனும். அவனிடம் பேசினால்.. மாமாவை பற்றி புலம்புகிறோமோ.. என கிருபாவும் அடிக்கடி பேசுவதை குறைத்துக் கொண்டனர், இருவரும்.
சஹா வந்தால்.. ஈசனோடு வீடியோ காலில் பேசினர். அப்போது சண்டைகள் சமாதானம் ஆகும் இருவருக்குள்ளும். மற்றபடி.. இருவரும் தயக்கத்திலேயே இருந்தனர்.