“அதான் இப்ப தெரிஞ்சிடுச்சுல. போய் சொல்லுங்க.”

“சொன்னாலும் நம்ப மாட்டாருங்ற தைரியத்துல தானே சொல்ல சொல்ற?”

“தெரியுதுல அப்புறமென்ன?” என்றவள், “வரப்போறிங்களா இல்லையா?” என்றுவிட்டாள்.

“வா  வா ன்னா எப்படி வரது. கையில் இவ்வளவு பெரிய கட்டு போட்டு வச்சிருக்கியே. கார் எப்படி ஓட்டுறது?

“அதெல்லாம் நான் ஓட்டிக்கறேன். வாங்க.”

“காலைல ஓட்டமாட்டேன். எங்க அம்மாவுக்கு பிடிக்காதுன்னு சொன்ன?”

அவனை முறைத்தவள் “அதான் இப்ப எங்க அம்மா இங்கே இல்லைல. அதனால ஓட்டுவேன் போதுமா? இப்ப வரப்போறிங்களா இல்லையா?” கோபத்தில் கத்தியே விட்டாள்.

“சரி சரி கத்தாத வரேன்.” என்றுவிட்டு வந்து காரில் ஏறினான்.

அவ காரை எடுக்கும் வரை அமைதியாக இருந்தவன், “உன்ன நம்பி தான் வரேன். பத்திரமா கூட்டிட்டு போவதானே?” என்றான்.

அவன் கேள்வியில் கடுப்பானவள், “இப்படியே பேசிட்டு இருந்திங்கன்னா கார எதாவது வண்டிமேல கொண்டு போய் விட்ருவேன்.” என்றுவிட்டாள்.

“சரி சரி நான் எதுவும் பேசல. நீ அந்த மாதிரி எதுவும் செஞ்சிடாத ஆத்தா. எனக்கே இப்ப தான் ஒரே ஒரு கல்யாணம் தான் ஆகிருக்கு. இருந்தும் வெர்ஜின் பாயா சுத்திட்டு இருக்கேன். கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும்னு கூட தெரியாது. அதுக்குள்ள போய் சேர்ந்துட்டா என்னோட ஆத்மா கூட சாந்தி அடையாது.” அவன் பேசியதை கேட்டு இவ்வளவு நேரம் இருந்த டென்ஷன் போய் சிரித்து விட்டாள்.

“நீ ஏன்ம்மா சிரிக்க மாட்ட! எங்கள மாதிரி 90’s கிட்ஸ்க்கு கல்யாணம் ஆகறதே பெருசு. அப்படி ஆன பிறகும் மிங்கிள் ஆகாம இருக்கேன்ல. அந்த கஷ்டம் எல்லாம் எங்கள மாதிரி 90’s பசங்களுக்கு மட்டும் தான் புரியும். உங்களுக்கு எங்க புரிய போகுது.?” என்றான்.

“ஹலோ நாங்களும் 90’s கிட்ஸ் தான். உங்கள விட 3 ஜஸ்ட் இயர்ஸ்தான் குறைவு. உங்களுக்கு இருக்க பிரச்சினை தான் எங்களுக்கும் இருக்கு. என்னமோ நீங்க மட்டும் தான் 90’s பொறந்த மாதிரி சீன் போடவேண்டாம்.” அவன் எதிர்பார்த்ததை பேசுகிறோம் என தெரியாமலே பேச்சுவாக்கில் அவனுக்கு தேவையானதை பேசினாள்.

“அப்ப உனக்கு ஓகேவா மதி?” எதிர்பார்ப்பு கலந்த குரலில் கேட்டான்.

“எனக்கு ஓகேவான்னா புரியலை?”

“நம்ம லைப்ப ஸ்டார்ட் பண்ணலாமா மதி?” என்றுவிட்டான். மறுநொடியே அதிர்ச்சியில் காரை சடன் ப்ரேக் போட்டு ரோட்டிலே நிறுத்தி விட்டாள்.

அவள் ப்ரேக் போட்ட வேகத்தில் இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்தால் முன்னால் வந்து கண்ணாடியில் மோதவில்லை.

நல்லவேளை இவர்களுக்கு பின்னால் வந்த வாகனம் சற்று தொலைவில் வந்துக் கொண்டிருந்தது. அதனால் இருவரும் தப்பித்தார்கள்.

முதலில் அதிர்ச்சியில் இருந்து மீண்ட சூர்யா தான் “மதி என்ன ஆச்சு? ஆர் யூ ஓகே?” என்றான்.

அதற்குள் பின்னால் வந்துக்க கொண்டிருந்த வாகனம் அவர்கள் அருகில் வந்து நின்று “நீங்க சாகறதுக்கு இந்த ரோடு தான் கிடச்சதா? நடுரோட்ல வண்டிய ப்ரேக் போட்டு நிறுத்தற. கொஞ்சம் முன்னாடி வந்துருந்தேனா உன்னால நானும்ல அடிபட்டு சாகனும்.” கத்த ஆரம்பித்து விட்டார்.

சூர்யா, “சாரி சார். எங்க தப்புதான் எங்களோடது தான்.” அவரிடம்  மன்னிப்பு கேட்டு அனுப்பி வைத்தான்.

தன்னுடைய அஜாக்கிரதையால் இருவரின் உயிருக்கும் ஆபத்து வந்திருக்கும் என்ற குற்ற உணர்ச்சியில், “சாரி சூர்யா…” என்றாள்.

“இட்ஸ் ஓகே ம்மா. பரவாயில்லை விடு. நீ என்ன வேணும்னா செஞ்ச? தவறு என்னோடதும் தான். இப்ப இத பேசியிருக்க கூடாதுல.” அவளை திட்டாமல் பேசி  அவளுடைய பயத்தை போக்கினான்.

அவளின் நடுக்கம் இன்னும் குறையாமல் இருக்கவும் “நான் எடுக்கிறேன் நீ இந்த பக்கம் வா மதி?” என்றான்.

“நான் ஓகேதான் சூர்யா. பரவாயில்லை நானே ஓட்டுறேன்.” என்றவள் காரை எடுத்தாள்.

அதன் பிறகு இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மருத்துவரை பார்த்து விட்டு கட்டுப்போட்டு கொண்டு திரும்ப வீட்டுக்கு வரும் போது மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது.

காரை நிறுத்தி விட்டு இருவரும் வீட்டுக்குள் வந்ததும் வாங்கி வந்த மாத்திரை கவரை அவனிடம் கொடுத்தவள், “டேப்லெட் போட்டுட்டு தூங்குங்க சூர்யா.” என்று விட்டு அறைக்கு செல்ல போனாள்.

“நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லல மதி?”  அவனின் கேள்வியில் நின்றவள் திரும்பி அவனை பார்த்து, “நீங்க தான் என்ன சகிச்சிட்டு இருக்கேன்னு சொன்னிங்க. அதுக்குள்ள மறந்துட்டிங்க போல.” என்றாள்.

“நான் எதையும் மறக்கல மதி. நம்மோட கல்யாணம் எப்படி நடந்ததுனு உனக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. நான் ஒத்துக்கறேன் பிடிக்காம தான் கல்யாணம் பண்ணேன். ஆனா அது எப்ப மாறுச்சுன்னு எனக்கு தெரியலை. நேத்து நான் ஊருக்கு வந்தது கூட அப்பா சொன்னதுக்காக இல்லை. உனக்காக மட்டும் தான் வந்தேன். நீ இங்க இல்லாம எதையோ இழந்தது மாதிரி பீல் பண்ணேன். வீட்டுக்கே வர பிடிக்கலை. நேத்து இத சொல்ல என்னோட ஈகோ விடலை. ஏதேதோ சொல்லி சமாளிச்சேன். நீயும் அதே நம்பிட்ட. உனக்கே தெரியும் எனக்கும் என்னோட அப்பாவுக்கும் எப்பவும் ஒத்து போகாதுன்னு. அவர் ஏதேதோ பேசி அந்த கோபத்துல நானும் உன்ன காயப்படுத்தும்னு யோசிக்காமையே எல்லாத்தையும் பேசி வச்சிட்டேன்.

எனக்கு தெரியும்  கோபத்தில பேசுனாலும் அப்படி பேசுனது தவறு தான். அதுக்கு நீ என்ன தண்டனை குடுத்தாலும் ஏத்துக்கறேன். ஆனா என்ன விட்டுட்டு போறேன்னு மட்டும் சொல்லாத. என்னால கண்டிப்பா உன்ன விட்டுக்குடுக்க முடியாது. அது நீ கேட்கிற டைவர்ஸ் மூலமாக  இருந்தாலும் சரி. எனக்கு நீ வேணும். இத நீ எப்படி வேணாலும் எடுத்துக்கலாம்.”

“நான் என்ன சொல்லனும்னு எதிர் பாக்குறீங்க சூர்யா?” என்றுவிட்டாள்

“என்ன விட்டு போறேங்கிறத தவிர வேற எத வேணாலும் சொல்லலாம்.” கேலியாக புன்னகைத்தவள் “இப்ப வரையிலும் என்னோட விருப்பம்னு ஒன்னு இருக்கும்னு யோசிக்கவே இல்லை சூர்யா நீங்க? நீங்க எதிர்பார்க்கறதை மட்டும் தான் சொல்லனும்னு ஆர்டர் போடுறீங்களே தவிர என்னோட விருப்பத்தை கேட்க நினைக்கல.”

நான் நீங்க வச்சி விளையாடற பொம்மை இல்லை சூர்யா. வேணும்னா வச்சி விளையாடவும் வேணாம்னா தூக்கி எறியறதுக்கும்.”

“மதி ஏன் இப்படி எல்லாம் பேசற?”

“ப்ளீஸ் சூர்யா. நான் இப்பவாவது பேசிக்கறேன். உங்களுக்கு எப்படி இந்த கல்யாணம் பிடிக்கலையோ அப்படித்தான் எனக்கும். உண்மைய சொல்லனும்னா கல்யாணம்ங்கிற பந்தத்தையே வெறுக்கிறேன். அந்த அளவுக்கு மண்டபத்துலையே காயப்பட்டுவிட்டேன். அங்க என்னோட விருப்பத்தை யாரும் கேட்கல. எப்பவும் என்னோட விருப்பத்தை மட்டுமே கேட்டு செய்யும் என்னோட குடும்பம் கூட. அந்த இடத்துலையே நான் தோத்து போயிட்டேன்.

ஒரு நடை பிணமா தான் மணவறையில் வந்து உட்கார்ந்தேன். தாலி கட்டுன அன்னைக்கே கொஞ்சம் நஞ்சம் ஓட்டிட்டு இருந்த உசுரையும் நீங்க கொன்னுபோட்டிங்க. பத்தாததுக்கு ஒவ்வொரு முறையும் வார்த்தைகளாலையே இந்த கல்யாண வாழ்க்கையையே வெறுக்க வச்சிட்டிங்க.  நீங்க சொல்லலாம் கோபத்துல பேசுனேன்னு. உங்களுக்கு அது ஜஸ்ட் சாதாரண ஒரு வார்த்தை அவ்வளவு தான். ஆனா கேட்கற எனக்கு அப்படி இல்லை.

கோபத்துல ஒருமுறை குத்துனாலும் பலமுறை குத்துனாலும் போறது என்னவோ உயிர் தான். அத திரும்ப எல்லாம் கொண்டு வர முடியாது. அதேதான் மனசுக்கும்.  உங்க வார்த்தையால ஏற்கனவே மனசளவுல செத்துட்டேன். இனி உங்க கூட வாழ்ந்தாலும் அதுக்கு உயிர் இருக்காது.”

கத்தியின்றி ரத்தமின்றி  வார்த்தை எனும் வாள் கொண்டு அவனை கொன்றுக் கொண்டிருந்தாள்.  முதல் தடவையாக வார்த்தைக்கு உயிர் இருக்கும் என்பதை உணர்ந்தான்.

கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டவன், “நான் உன்ன ரொம்பவே காயப்படுத்தி இருக்கேன்னு புரியுது. நான் செஞ்சது தப்புதான். இத தவிர வேற என்ன சொல்றதுனே  எனக்கு தெரியலை. உன்னால மன்னிக்க முடியலைனாலும் பரவாயில்லை. எனக்காக மறக்க முயற்சி பண்ணு மதி. ப்ளீஸ்.” அவளிடம் கெஞ்சினான்.

“மன்னிப்பேனானு சொல்ல முடியாது. ஆனா மறக்க முயற்சி பண்றேன் சூர்யா.”

“தேங்க்ஸ் மதி. எனக்கு ஒரு வாய்ப்பு குடு. நான் எல்லாத்தையும் சரி பண்றேன். நாம நல்லா வாழ்வோம் எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு மதி.”

 “இப்ப வரையிலும் உங்க மேல எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் வரலை சூர்யா. இனியும் வரும்னு எனக்கு தோணலை. மனதளவில் நீங்க எனக்கு யாரோ தான். அதனால் ரொம்ப எதிர் பார்க்காதிங்க சூர்யா.”

“காலம் எல்லாத்தையும் மாத்தும்னு நான் நம்பறேன் மதி. கண்டிப்பா உன் மனசும் மாறும். அதுவரையிலும் நான் வெயிட் பண்ணுவேன். அது எவ்வளவு காலமா இருந்தாலும் சரி.”

“இதுக்கு மேல உங்க விருப்பம் சூர்யா.” என்றவள், “மறக்காம டேப்லெட் போட்டு படுங்க.” என்றுவிட்டு அவளுடைய அறைக்கு போனாள்.

“இந்தா இப்ப சொன்ன பார்த்தியா இதுவே போதும். உனக்கு என்மேல் அக்கறை இருக்குன்னு காட்டுது மதி.” ஒரு நொடி நின்று திரும்பி அவனை பார்த்தவள் உதடுகள் வளைய சிறு  புன்னகை செய்து  விட்டு சென்றுவிட்டாள்

அவனுக்கு அந்த சிறு புன்னகையே போதுமானதாக இருந்தது. அதே மகிழ்ச்சியுடன்  டேப்லெட் போட்டுவிட்டு தூங்க சென்றான்.