அத்தியாயம் -18

மீனாட்சி, ஸ்ரீ இருவரும் கிளம்பி வெளியில் வர, தீரன் அவர்களுக்காக காத்து கொண்டிருந்தான்.

மீனா அவனிடம் “அண்ணா காபி குடிக்கறீங்களா?போட்டுட்டு வரவா” என்று கேட்க,

ஸ்ரீ, “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். மண்டபத்துல போய் குடிச்சுப்பாரு. வா போலாம். எப்போ பாரு. எதாவது செஞ்சுட்டே இருக்கணும்னு சபதம் போட்டுருக்கியா என்ன?” என்றவாறு அவளை வெளியே இழுத்து செல்ல, தீரனும் அவர்கள் பின்னோடு சென்றான்.

தீரன், “நீ எதாவது சாப்பிடுறியாம்மா” என்று மீனாவிடம் பாசமாக கேட்க, கலங்கிய கண்களோடு அவனை பார்த்தவள் “இ….இ…. ம்கூம்…. இல்ல அண்ணா. எனக்கு எதுவும் வேண்டாம். அங்க மண்டபத்துல போய் பார்த்துக்கலாம்” என்க,

அவளை யோசனையாக பார்த்தவன் ‘என்னாச்சு இந்த பொண்ணுக்கு. எப்போ பாரு அமைதியா, எதையோ இழந்த மாதிரியே இருக்கு’ என்று எண்ணி கொண்டே மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.

ஸ்ரீ, மீனாட்சி இருவரும் முன்னால் சென்றுவிட, தீரன் காரை பார்க் செய்ய சென்றுவிட்டான்.

அண்ணன் சொன்னதில் இருந்து அஸ்வின் ஸ்ரீயை அண்ணி என்றே அழைக்க துவங்கினான். ஸ்ரீ எவ்வளவோ முறை சொல்லி பார்த்துவிட்டாள்.சாதாரணமா எப்பவும் போல கூப்பிடுடா” என்று,

அவனோ “அதெல்லாம் முடியாது. அண்ணிதான்” என்று பிடிவாதமாக சொல்லிவிட, எப்படியோ போ…என்றவள் அவனை விட்டு விட்டாள்.

ஸ்ரீ வருவதை பார்த்த அஷ்வின் வேகமாக அவர்கள் அருகில் செல்ல, அவளோ மீனாவிடம் “நீ போய் முதல்ல எதாவது சாப்பிடு. அப்புறம் இங்க வா”என்று அனுப்பிவிட்டாள்.

அஷ்வின் ஸ்ரீயிடம் வர இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது எதேச்சையாக திரும்பிய ஸ்ரீ தீரன் வருவதை இமைக்க மறந்து பார்க்க ஆரம்பித்தாள். காரில் வரும்போது அவனை பார்த்து கொண்டுதான் வந்தாள்.

ஆனால் ஆறடி உயரமும் கோதுமை நிறமுமாக வெள்ளை வேஷ்டி சட்டையில் ஆண்மைக்கே இலக்கணமாக வேக நடையுடன் வந்தவனை தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருக்க,

அவள் முன் வந்து நின்ற அஸ்வின் “உன் புருஷன் தான். அதுக்காக இம்புட்டு அம்பட்டமாவா சைட் அடிக்கிறது” என்று கேட்க,

“என் புருஷன் நான் பார்க்கிறேன். உனக்கு என்னடா” என்றவளை முறைத்தவன், “நான் பிரியா நம்பர் கேட்டு எவ்வளவு நாளாச்சு கொஞ்சமாவது உனக்கு பொறுப்பு இருக்கா” என்க,

அவனை மேலும் கீழும் பார்த்தவள்

“ தம்பி உங்க குடும்பத்துக்கெல்லாம் அவ சரிப்பட்டு வர மாட்டாடா”.

“எதே…. சரிபட்டு வர மாட்டாளா, ஏன் என் குடும்பத்துக்கு என்ன? உன்னையவே வச்சு சமாளிக்கறோம். அவளை சமாளிக்க முடியாதா? அவ நம்பர் தர போறியா? இல்லையாடி?…. ச்சி….. இல்லையா அண்ணி” என்று பல்லை கடித்து கொண்டு கேட்க,
அவளோ கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள். அந்த சிரிப்பு சத்தத்தில் தீரன் திரும்பிப் பார்க்க அஷ்வினும் ஸ்ரீயும் பேசிக் கொண்டிருப்பதை கண்டு கடுப்பானான்.

தீரன், ‘இவளுக்கு எங்க போனாலும் அவன் இருந்தா போதும். உடனே அங்க போய் நின்னுகிறது. புருஷன்னு ஒருத்தன் இருக்கானே அவன்கூட வந்து நிற்போன்னு தோணுதா’ என்று யோசிக்கும் பொழுதே,

அவனது மற்றொரு மனம் ‘அப்போ அவளை மனைவியா ஏத்துக்கிட்டியா’ என்று கேட்க, அதற்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறியவன் ‘வேலைய முதல்ல கவனிக்கறேன்’ என்று சொல்லி அவர்களை நோக்கி ஓடி விட, அது அவனை பார்த்து ஏளனமாக சிரித்தது.

அதை கண்டு கொள்ளாதவன் வேகமாக நடக்க துவங்கினான். அண்ணன் வருவதை பார்த்த அஷ்வின் “போச்சு…. போச்சு…. உன் புருஷன் வர்றான். வந்து “இங்க என்ன பேச்சு. வேலை இல்லையானு கேட்பான் நான் போறேன்” என்று ஓடி விட,

தீரன் அவளை கடந்து சமைக்கும் அறை நோக்கி செல்ல, தலையில் அடித்து கொண்ட ஸ்ரீ ‘அதானே இவன் கண்ணு என் பக்கம் திரும்பிட்டாலும்’ என்று நொடித்து கொண்டு நிற்க,

மீனாட்சி அவள் அருகில் வந்தாள். அவளைப் பார்த்த ஸ்ரீ “உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே.பரவால்லல. என்ன சாப்பிட்ட” என்று கேட்க,

அவள் கையை பிடித்த மீனா “ம்ம்…. ஒன்னும் பிரச்சனை இல்ல அக்கா. இட்லி ரெண்டு சாப்பிட்டேன்.நீங்கள் இல்லைனா. என் நிலைமை என்ன ஆகியிருக்கும். ரொம்ப நன்றிக்கா” என்று சொல்ல,

ஸ்ரீயோ, “அடடா எப்ப பார்த்தாலும் எமோஷனல் படமாவே ஒட்டிக்கிட்டு இருக்க கொஞ்சம் ஜாலியா இரும்மா” என்க,

அவளோ “ம்ம்…நானும் ஜாலியா இருக்கணும்னு தான்கா நினைக்கிறேன். ஆனா……” என்று இழுக்க,

ஸ்ரீ, “அம்மா தாயே உடனே வயலின் வாசிக்க ஆரம்பிச்சுறாத. அப்புறமா சொல்லலாம்னு பார்த்தேன். நீ முகாரி வாசிக்கறத பார்த்து இப்போவே சொல்றேன்”.

“என்னக்கா?”

“நான் அதை சொல்லனும்னா,நீ சந்தோசமா சிரிக்கனும். அப்போதான் அந்த விஷயத்தை சொல்லுவேன்”

மீனா, வலி நிறைந்த சிரிப்பை உதிர்த்து “நான் சந்தோஷப்படுற அளவுக்கு என் வாழ்க்கையில் எதுவும் சிறப்பா நடக்கல அக்கா” என்று விட்டேத்தியாக சொல்லி தலை குனிய,

“அப்படியா உன் புருஷன பத்தி சொல்றதுனாலும் உனக்கு அது சிறப்பானது இல்லையா” என்று குறும்பு சிரிப்போடு கேட்க,

உடனே வேகமாக நிமிர்ந்தவள் “அக்கா நெஜமாதான் சொல்றீங்களா அவரை பார்த்தீர்களா. பேசுனீங்களா. நல்லா இருக்காரா”என்று பர பரப்பாக கேட்க,

“ம்ம்கும்…..நான் சொன்ன மாதிரி நீ சிரி. அப்போதான் சொல்லுவேன்” என்க,

மீனாட்சியோ கண்கள் கலங்க வராத சிரிப்பை இழுத்து “ஈஈஈ……” என்று இளிக்க,

“இது சிரிக்கிற மாதிரி இல்ல என்னை பயமுறுத்துற மாதிரி இருக்கு” என்றாள் , மீனா அவளை பாவமாக பார்க்க,

“சரி…. சரி உடனே மூஞ்சை இப்படி வைக்காத. “ம்ம் ….உன் புருஷன் நல்லா இருக்காரு. எந்த பிரச்சனையும் இல்லை” என்று சொல்ல மீனாட்சிக்கு அளவில்லாத மகிழ்ச்சி .

“உண்மையாவேவாக்கா. நீங்க அவர பார்த்தீங்களா….பேசினீங்களா” என்று ஆர்வமாக கேட்க,

ஸ்ரீயோ, “நான் பேசல, பார்க்கல அஷ்வின் பார்த்தான்” என்க,

அதிர்ந்து போன மீனாட்சி “அக்கா அவரு…. எல்லாமே….” என்று பயப்பட,

“அதெல்லாம் அவன் எதுவும் சொல்லல, எல்லா உண்மையும் சொல்லித்தான் அனுப்பி இருந்தேன்”

“அக்கா…. அவர் என்னபத்தி……”

“அடடா கொஞ்சம் பொறுமையாதான் கேளேன். அவன் ஹாஸ்பிடல் ஐடி ஃபைல் பண்ற அக்கவுண்டர் உடம்பு சரியில்லாம இருந்தாரு. இப்ப அவர் மகன் கூட , பாரின் போயிட்டாரு இவங்க கம்பெனி, ஹாஸ்பிடல் எல்லாம் பார்த்துக்க ஒரு அக்கவுண்டன்ட் தேவைன்னு என்கிட்ட சொன்னான். சரி உன் ஆளு அக்கவுண்டன்ட்தானேனு ரெகமெண்ட் பண்ணுனேன் இவனும் கோயம்புத்தூர் போயி அவர பார்த்து பேசிட்டு வந்து இருக்கான். அவரும் யோசிச்சு சொல்றதா சொன்னாராம். சோ… அவரு நல்லா இருக்காரு. எந்த பிரச்சனையும் இல்ல கவலைப்படாம இரு” என்று கூற,

அவளை அணைத்துக் கொண்ட மீனாட்சி “ரொம்ப ரொம்ப நன்றிக்கா. அவரை பத்தி எதுவும் தெரியாம, உணர்வு இல்லாத ஜடமா சுத்திட்டு இருந்தேன். இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு. ரொம்ப சந்தோசம்க்கா” என்று சொல்ல,

அப்பொழுது அங்கு வந்த அஸ்வின் “டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே….” என்று பாட,

அவனை சிரிப்புடன் எதிர்கொண்ட மீனாட்சி “போங்க சார்….” எப்ப பாத்தாலும் என்ன கிண்டல் பண்ணிட்டே இருக்கீங்க” என்க,

உடனே நெஞ்சை பிடித்த அஷ்வின் “ஹே…. நித்தி…என்னை பிடி…. பிடி….மீனாட்சி சிரிக்குது. இது கனவா நினைவான்னு தெரியலையே” என்றவாறு ஸ்ரீ மீது சாய , அவளும் சிரிப்போடு அவனை பிடித்து கொண்டாள்.

கணவனைபற்றி தெரிந்து கொண்டதில் மனம் மகிழ்வாக இருந்த மீனாட்சி “நினைவுதான் சார். நான் இப்போ கன்பார்ம் பண்றேன்” என்றவள் அவன் கையை கிள்ளிவிட்டு ஓடிவிட,

“ஆஆஆஆ……” என்று அலறிய அஷ்வினை கண்ட, ஸ்ரீ “பாவம்டா அவ. இந்த சின்ன வயசுல பெத்த அம்மா, அப்பாவால வாழ்க்கையை இழந்து நிக்கறா. அவ இங்க வந்ததுல இருந்து சிரிச்சு இப்போதான் பார்க்கறேன். இந்த சிரிப்பு அவ முகத்துல எப்போ நிலைக்க போகுதோ தெரியல” என்று பெரு மூச்சுவிட,

மீனாவின் விஷயம் தெரிந்த அஷும் ‘ஆமாம்…..’ என்பது போல் தலையசைத்து ஓடும் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.

அப்போது அந்த பக்கமாக வந்த தீரன் அஷ்வின் ஸ்ரீ மீது சாய்ந்திருப்பதை கண்டு கோபம் புசுபுசுவென்று வர, வேகமாக அவர்களை நோக்கி சென்றான். அதை கவனித்த அஸ்வின் “போச்சு போச்சு அண்ணன் வறான். இப்ப என்ன அட்வைஸ் சொல்ல போறான்னு தெரியலையே. ஏன் அண்ணி அண்ணனுக்கு மனசுல இவ்ளோ பொசசிவ்னஸ் இருக்கே. அது எதனாலன்னு ஓபனா உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தா என்ன” என்று கேட்க,

ஸ்ரீயோ, “ பொஸசிவ்னஸ் யாருக்கு? உன் நொண்ணனுக்கா. இந்த பக்கமா எதாவது வேலை இருக்கும். அதை பார்க்க போறாரா இருக்கும். நீ ஓவர் இமேஜின்பண்ணாத” என்க,

“எனக்கென்னம்மோ அப்படி தோணல. இப்ப பாரு இங்க வந்து. என்ன இப்படி நின்னுட்டு இருக்கீங்க.பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க. அண்ணியும் கொழுந்தனும் மாதிரியா இருக்கீங்க. அப்படின்னு ஓவரா பாடம் எடுப்பாரு” என்க,

ஸ்ரீயோ வேக நடையுடன் வரும் கணவனையே பார்த்திருந்தாள். அவர்கள் அருகில் வந்த தீரன். அஷ்வின் சொன்னது போலவே சொல்ல அஸ்வினுக்கு சிரிப்பு வந்துவிட்டது. உடனே தீரன் அவனை தீயாக முறைக்க,

“நான் இல்ல அண்ணா…. அவதான்…” என்றவனை, தீரன் உக்கிரமாக முறைக்க,

வாயில் அடித்து கொண்டவன் “அண்ணிதான் அண்ணா…” என்று தடுமாறியவன். அண்ணன் முறைப்பு குறையாமல் இருப்பதை கண்டு “அண்ணா அங்க… அங்க….. கூப்பிடுறாங்க. நான் மேடைக்கு போறேன்” என்றுவிட்டு ஓடிவிட.

ஓடும் தம்பியை முறைத்தவன், மனைவி புறம் திரும்பி “அவனுக்குதான் அறிவு இல்லை. உனக்குமா இல்லை. கல்யாண மண்டபத்துல எப்படி நடந்துக்கணும்னு தெரியாதா.

ஒழுங்கா அண்ணின்னு கூப்பிடுடான்னு சொல்ல மாட்டியா, அவன்……”

“அவன் ஏன் என்னை அண்ணின்னு கூப்பிடணும்” என்று அழுத்தமாக கேட்க,

அவனோ…. அவளை முறைத்து. “என்ன சொல்ற…”.

“ஆமாம். உண்மையதான சொல்றேன். பத்து நாள் இந்த வீட்ல இருக்க போற என்னை. எதுக்காக அவன் அண்ணின்னு சொல்லணும். எப்படியும் இங்க இருந்து போன பிறகும் எங்க நட்பு தொடரும். அதுக்கு அவன் எப்போதும் போலவே என்னை கூப்பிடட்டும். இதை கேட்க உங்களுக்கு உரிமை இல்லை” என்று சொல்ல,

கோபத்தில் என்ன செய்கிறோம் என்று புரியாத தீரன் அவளை தன் அருகில் இழுத்து “எனக்கா உரிமை இல்லைனு சொல்ற. உன்னை…….” என்றவன் அருகில் இருக்கும் ஸ்டோர் ரூமிற்குள் இழுத்து செல்ல,

அவளோ “ஆமா. உங்களைதான் சொல்றேன். என்னை கேள்வி கேட்கற உரிமை உங்களுக்கு இல்லை…. இல்லை……இல்லை” என்றவள் மென் இதழ் அவன் முரட்டு இதழால் சிறை செய்யப்பட்டது.

கணவனின் செயலில் அதிர்ந்து போனவள் விழிகளை தட்டி விழிக்க, வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வு, விரல்கள் நடுங்க அவன் தோளில் கை வைத்து தள்ள முனைந்தவளுக்கு தோல்வியே மிஞ்சியது.

ஆறடி ஆண்மகனை இம்மிகூட நகற்ற முடியாமல் தோற்றவள். அவன் சட்டையை இறுக்கி பிடிக்க, தன்னை மறந்து மனையாள் இதழில் மூழ்கி இருக்க, பெண்ணவளுக்கோ மூச்சு திணறல் ஏற்பட, அதே நேரம் ஆணவன் காதில் வெளியில் அடிக்கும் மேல சத்தம் விழ, தன்னிலை அடைந்து உடனே அவளிடம் இருந்து விலகினான்.

பெரிய பெரிய மூச்சுகளாக எடுத்து சமாளித்து கொண்டிருந்த பெண்ணை பார்க்காமல் முகத்தை திருப்பி கொண்டவன் தன் பின்னந்தலையை கோதியவாறு குரலை செருமி,

“இன்னொரு முறை உன் வாயில பத்து நாள் தானேன்னு வந்துச்சு. மோசமான பின் விளைவுகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் பார்த்துக்கோ” என்று விட்டு சென்றுவிட,

ஸ்ரீயோ “இதை விடவா. மோசமான பின் விளைவு வர போகுது. சண்டாள பாவி மனசுல நான்தான் இருக்கேன்னு சொன்னா. என்னவாம் தலைல இருக்க கிரீடம் விழுந்தரவா போகுது.

உண்மைய ஒத்துக்க மனசு வரல. ஆனா, நான் யார்கிட்டயாவது பேசுனா கோபம் மட்டும் வருது. பாவி மனுஷன் இப்படி கடிச்சு வச்சுட்டான். உதடு வேற வீங்கிடுச்சே. இப்போ எப்படி நான் வெளிய போவேன்.

அதுமட்டும் இல்லாம போட்ட மேக்கப் எல்லாம் களஞ்சு போச்சு, இப்போ இப்படியே நான் வெளிய போனா அஷ் ஆயிரம் கேள்வி கேட்பானே. அதுக்கு எல்லாம் எப்படி நான் பதில் சொல்லுவேன்.

சரி முத்தம் குடுத்தானே இப்போவாவது மூஞ்ச பார்த்துட்டு போறானா. அதுவும் இல்ல. லூசு பய பொண்டாட்டின்னு தெரியுதே ஒழுங்கா வாழ வேண்டியதுதானே. எதுக்கு கண்டதை யோசிச்சு நீயும் கஷ்டப்பட்டு என்னையும் கஷ்டப்படுத்தற,

இதுக்கே இவ்ளோ கோவம் வருதா. நல்லா வரட்டும். இருடி உனக்கு நல்ல பீதியை கிளப்பி விட்டு அப்புறம் என்னோட மதிப்ப தெரிய வைக்கிறேன்’ என்று தனக்குள் கருவி கொண்டா நித்தியா.

தன்னை சரி செய்து கொண்டு வெளியில் சென்றவள் கணவனை தேட, அவன் கண்ணில் படவே இல்லை.

வேலைகளை எல்லாம் யோசனையோடே முடித்த தீரன். திருமணம் முடிந்து மணமக்கள் வீட்டிற்கு கிளம்பிய உடனே தானும் காரை எடுத்து கொண்டு தனிமை நாடி சென்றவன் மனதில் ஆயிரம் குழப்பங்கள்.

அவனின் ஒரு மனம் ‘நீ சந்தியாவை மறந்துட்டியா’ என்று கேட்க, மற்றொரு மனமோ ‘அதுக்காக என் பொண்டாட்டி என்னைவிட்டு போறேன்னு சொல்றதை. கேட்டுட்டு அமைதியா இருக்க சொல்றியா?.

‘அப்போ சந்தியாக்கு என்ன பதில் சொல்ல போற?’.

சந்தியா ஒன்னும் இப்போ உயிரோட இல்லை. அதே மாதிரி நான் அவளை ஏமாத்தவும் இல்லை. அதுமட்டும் இல்லாம அவ இறந்தகாலம். ஸ்ரீதான் என் நிகழ் காலம் எதிர்காலம் எல்லாம்.

‘அப்போ சந்தியா……?’ என்ற கேள்வி அவனுள் மீண்டும் மீண்டும் எழ, இறந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையில் போராடி. அதற்கு ஒரு முடிவு தெரியாமல் அவன் வண்டி நின்ற இடம் பேமசான ஒரு பப்.

காரைவிட்டு இறங்கியவன் வேகமாக அந்த பப்பினுள் சென்று குடிக்க துவங்கினான்.

குடியால் வாழ்க்கை சரியாகுமா, இல்லை இன்னும் பிரச்சனை அதிகமாகுமா. காத்திருந்து பார்ப்போம்.

மறப்பாள்…….