வம்சி, பவானி இருவரும் அன்று தியேட்டருக்கு போய் விட்டு சற்று லேட்டாக தான் வீட்டுக்கு வந்தார்கள்.
“வீக் என்டுன்றதால இன்னிக்கு சரியான கூட்டம் பார்த்தீங்களா…?” என பேசியபடி, வரும் வழியில் வாங்கி வந்த சில அத்தியாவசிய பொருட்களை ஹாலில் வைத்த பவானி, கிச்சன் பக்கம் நகர, வம்சி போட்டிருந்த சட்டையை மாற்றி கொண்டு பனியன் சகிதம் அவள் பின்னோடு வந்தான்.
“வாணி…. அடுத்த மாசம் ஒரு மூணு நாள் சென்னை போற மாதிரி இருக்கும்ன்னு நினைக்கிறேன்!”
அவன் சொன்னதை கேட்ட பவானி, “நானுமா?” என்றாள்.
“ம்ம்… ப்ரெண்ட்ஸ் கெட்டுகெதர் இருக்குடி. நான் போக வேணாம்ன்னு தான் நினைச்சேன். ஆனா அவங்க ரொம்ப கெஞ்சி கேட்குறாங்க…!” என்று கேலியாக சொல்ல,
“சார் தான் காலேஜ்ல பெரிய செலிப்ரேட்டி ஆச்சே…!”
என பவானியும் நக்கல் அடித்தாள்.
“அதெல்லாம் அப்போ… வாழ்க்கைன்னா என்னன்னு தெரியாத நாட்கள்!” என்று சிரித்தபடியே சொன்ன வம்சி,
“உனக்கு ஒகே தான… இல்ல கோபால் அப்பா வீட்ல இருக்கியா. அலைஞ்சா உனக்கும் கஷ்டம் தான?” என்றவன் யோசனையாக கேட்க, பவானி புன்னகையோடு, “என் கணவர் இருக்கும் இடமே எனக்கு அயோத்தி.. ஆகையால் நானும் உங்களோடு வருகிறேன் பிராணநாதா…!” என்று ராஜ பாணியில் சொல்ல,
“போய் ட்ரெஸ் சேஞ் பண்ணிட்டு வாடி…!” என்று சொல்லி கொண்டிருக்க கண்கள் கூசும் அளவுக்கு பெரிய மின்னல் ஒன்று வெட்டியது.
“மழை வரும் போல… மாடில துணி இருக்கு. போய் எடுத்துட்டு வந்துடுறீங்களா?” என பவானி கேட்க, “நல்லவேள சொன்ன….!” என்று மாடிக்கு ஓடினான் வம்சி.
“மழைய நம்பவே முடியாது போல…!” என்று புலம்பிய வாணி,
“அடுத்த மாசம் அத்தை மாமாவ பார்த்துட்டு அம்மா அப்பாவையும் பார்த்துட்டு வரணும். இந்த காயத்ரி போன் பண்ணா கூட எடுக்க மாட்றாளே. இருக்கட்டும் அவளையும் போய் பார்க்கணும்!” என்று பவானி தன் போக்கில் பேசியபடி இரவு உணவுக்கு ரெடி பண்ணி கொண்டிருக்க, மழையும் பிடிக்க ஆரம்பித்தது.
“அச்சச்சோ… நனைய போறாரு இவரு…!” என நாக்கை கடித்தவள், அவசரமாக குடையை எடுத்து கொண்டு மேலே ஓட, சரியாக வம்சியே தொப்பலாக நனைந்து உள்ளே வந்து விட்டான்.
“என்னங்க…. உள்ள வர வேண்டியது தான?” என்றவள் அழுக்க, வம்சி விளையாட்டாய் முடியை சிலுப்பி அவளை வம்பிழுத்து,
“ஒரு சட்டைய மிஸ் பண்ணிட்டேன் மேடம்… இதோ துணிய இதுல எடுத்து போட்டுட்டேன்!” என்று மாடி வாசலுக்கு அருகே இந்த சின்ன பெட்டியை காட்டியவன்,
“நீ எடுத்துட்டு வா… எனக்கு செம்மையா குளிருது!” என்று கீழே விரைந்தான். ‘இவர் இருக்காரே!’ என்று அலுத்த பவானி துணிகளை எடுத்து வந்து ரூமில் வைக்க, அவன் குளிக்கவே ஆரம்பித்து விட்டான்.
“ஏங்க… ட்ரெஸ் மட்டும் சேஞ் பண்ண வேண்டியது தான… ஆல்ரெடி கதகதன்னு இருந்துச்சு உங்களுக்கு. ரொம்ப அலும்பு பண்ணுறீங்க…!” என்று கடுப்பானவள், “ரொம்ப நேரம் தண்ணில நிக்காதீங்க…!” என்று ட்ரெஸ் சேஞ் பண்ணி விட்டு கையேடு துணிகளை மடித்து வைக்க,
“என்ன மேடம்… ஏதோ விரட்டிட்டு இருந்தீங்க…?” என்று சற்று நேரத்தில் தலையை துடைத்தபடி வந்தான் வம்சி.
“ம்ம்… உங்களுக்கு ரொம்ப கொழுப்பாகி போச்சுன்னு சொன்னேன்!” என்று நாக்கை துருத்திய வாணி,
“பீவர் வர்ற மாதிரி இருந்துச்சுல.. எதுக்கு நைட் ரிஸ் எடுக்குறீங்க?” என்று முறைக்க,
“அதான் என்னை கூல் டவுன் பண்ண நீ இருக்கியே?” என்று கண்ணடித்து முகம் சிவக்க வைத்தவன், அப்படியே பூனை நடை போட்டு வந்து அவளிடம் நைசாக அமர, வாணி தள்ளி அமர்ந்தாள்.
“நீங்க என்ன பண்ண போறீங்கன்னு தெரியும். ஒழுங்கா ஓடி போயிடுங்க!” என்றவள் சீரியசாக சொல்ல,
“ஏய் ஒரு கிஸ்டி!” என்று அவனும் நெருங்கி வந்தான்.
“ம்ஹும்… முடியாது…!” என்று வாணி மக்கர் பண்ண,
“நீ கோவாப்ரேட் பண்ணா ஒன்னோட போயிடும். இல்லைன்னா பின்னாடி பிரச்சனை ஆகிடும்!” என்றவள் பின்னங்கழுத்தில் முத்தம் வைக்க, அவன் ஈர முடி அழுத்தமாய் பட்டு உடலை சிலிர்க்க வைத்தது. பவானி நெளிந்தபடி, அவனை திரும்பி பார்க்க, குறும்பாக சிரித்து கன்னத்திலும் முத்தம் வைத்தான்.
“ஒரே ஒரு கிஸ்…?” என்றவன் புருவம் உயர்த்த, பவானி எச்சில் விழுங்கினாள். எத்தனையோ இதழ் முத்தத்தை கடந்து விட்டாலும், இன்று மேலும் ஏதோ வேண்டும் என மனம் தப்பு தப்பாக யோசித்து குளறுபடி ஆக்கி விட்டது.
“வேணாமே…?” என்றவள் உள்ளே போன குரலில் வாயை அசைக்க,
“வேணுமே…!” என்றந்த கள்வன் அடம் பிடித்தான்.
‘விட மாட்டார் போலையே….?’ என கலவரமான பவானி, “சரி நானே த… தரேன்…!” என்று அவனிடம் முன்னேற, அவனோ வியப்பாய் பார்த்தான்.
“என்ன இன்னிக்கு என் பொண்டாட்டிக்கு தாராள மனசு வந்துடுச்சு போல….?” என்றவன் இன்னும் நெருங்கம் வேண்டி அவள் இடையை பற்றி இழுக்க, பவானிக்கு குதிரை வேகத்தில் இதயம் துடித்தது.
அவனோ வட போச்சே… என்ற ரீதியில் பார்க்க, “அது… கிச்சன்.. கிச்சன்ல….!” என்று ஓரேடியாக ஓடி விட்டாள் பெண்ணானவள்.
வம்சியோ, “என்ன கலட்டி விட்டுட்டு போயிட்டா… ஒரு முத்தம் கேட்டதுக்கே வெளி நடப்பு பண்றாளே… எல்லாம் கேட்டா என்ன பண்ணுவா… ம்ஹும். விட கூடாது… இன்னிக்கு எனக்கு என் கிஸ் வேணும்…!” என்றவன் ஒரு துள்ளளோடு பொண்டாட்டியை பாலோ பண்ண அவளோ,
“இன்னிக்கு எனக்கு என்ன ஆச்சு… ஏன் அவரு பக்கத்துல வந்தா எனக்கு காய்ச்சல் வர்ற மாதிரி இருக்கு?” என்று கிலியானவள், வம்சி வருவதை பார்த்து,
“வேணாம்ங்க…. கிட்ட வராதீங்க…!” என்று போக்கு காட்ட தொடங்க,
“அப்படி தான் வருவேன். என்னடி பண்ணுவ…?” என்று அணை போட்டு பிடித்தவன், கார்னரில் வைத்து நழுவ விடாமல் லாக் பண்ணி, அவள் முகத்தை பிடித்து தன் அருகே இழுத்தான். அவன் கண்களை மாறி மாறி பார்த்தவள், இதழை அழுத்தமாய் மூடி கொள்ள,
“என்னடி ஆச்சு உனக்கு?” என்றான் வம்சி இன்னும் நெருக்கமாய் வந்து. அவன் பிரத்யேக வாசத்தில் தடுமாறிய பவானி, “தெரியல…!” என்று தலை குனிந்து கொள்ள, கன்னங்கள் வேறு சதி செய்வது போல் சிவந்தது.
“லுக்கிங் கார்ஜியஸ்டி என் அழகு பெண்டாட்டி!” என்றவளை ரசித்த வம்சி, “என்னைய பாரு…!” என்று அழுத்தமாய் சொல்ல, மாட்டேன் என்றாள் மனையாள்.
“பாரு வாணி…!” என வம்சி அவள் இடையை வருட, அவள் நெஞ்சம் ஏறி இறங்கியது.
“காட்… யூ ஆர் கில்லிங் மீ… !” என பெருமூச்சு விட்டவன், “உன்னை எடுத்துக்கவா…?” என்று கேட்க, பவானி ஜெர்க் ஆகி,
“என்னது….?” என்று அதிர, “நீ வேணும்டி… எடுத்துக்கவா?” என்றான் சிறிதும் தயங்காமல்.
ஒரு முத்தத்தில் ஆரம்பித்து இப்பொழுது மொத்தமும் தர சொல்கிறானா என்று உள்ளம் தரிகொட்டு ஓட, மனம் எப்படியோ ஜெயிக்க தொடங்கியது….
இதனால் வேலிகளை உடைத்து மன்னவன் கழுத்தில் கரம் கோர்த்தவள், “பெர்மிசனும் வேணுமா…?” என்று கேட்டபடி அவன் இதழ்களை குற்றுகையிட்டு இருக்க, கொண்டவன் விழிகளோ கர்வ புன்னகை.
பெண் மயிலை வீழ்த்திய ஆடவன், தயக்கம் உடைத்து தன்னவளை எடுத்து கொள்ள ஆரம்பித்தான். முத்தத்தில் இருந்த வேகம், பெட்ரூமின் தூரத்தை குறைத்து இருக்க, கதவை சாத்தும் சத்தம் கூட இருவர் காதிலும் கேட்கவில்லை.
உடலை மறைத்திருந்த ஆடைகள் காணாமல் போன பொழுது நேரமும் மெதுவாகி போக, பொண்ணுக்குள் ஆணும் ஆணுக்குள் பெண்ணும் உருக தொடங்கினார்கள்…
முதல்முறை தடுமாற்றங்கள் அனைத்தும் இனிய நினைவுகளாய் மாற, முத்தத்தின் வரையறைகள் கடக்கபட்டு அந்த உறவின் தொடக்கத்தில் உருவான காதல் காமத்தோடு இணைந்து அழகிய கூடல் ஒன்று நடக்க தொடங்கியது.
தலைவன், தலைவியின் வலியில் முகம் சுருங்க, மங்கையவள் மனமோ கணவனின் காதலில் பூரித்து, உடல் வலியை மறந்து அவனோடு ஒன்றினாள். அவன் வேகத்தில் தடுமாறிய இடங்களில் அவள் தாங்கினாள்… அவள் தடுமாறிய இடத்தில் அவன் கட்டி அணைத்து வழி காட்டினான்.
மொத்தத்தில் முதல் கூடல் இருவர் இணைப்பையும் வலு சேர்த்து இருக்க, உரிமையாக தன்னவள் இடையில் தலை சாய்த்து கொண்டான் வம்சி… பவானியின் முகம் பூரிப்பில் தெளிந்து இருக்க, மன்னவன் ஆளுகையாலோ மேனி முழுவதும் குறுகுறுத்தது…
“வாணி….!” என்று வம்சி அவள் கையை எடுத்து நெஞ்சோடு வைத்து கொள்ள, பவானிக்கு தமிழே மறந்து விட்டது போல் இருந்தது. எனவே, “ம்ம்…!” என்றாள் ரகசியமாக.
“நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்… நீ…?” என்றவன் கேட்க, பவானி பதில் சொல்லாமல், அதற்கும் “ம்ம்….!” என்று மட்டுமே சொல்ல,
“என்ன ம்ம்… ஏதாவது சொல்லு… எவ்ளோ தேருவேன்னு மார்க்காச்சும் கொடு…!” என்றவன் சேட்டை பண்ண, பவானி அவன் கேலியில் சிரித்து தலை கலைத்து விட்டாள்.
“ஒரே தடவைல எப்படி சொல்ல முடியும்.. லைப் லாங் எவாளுவேசன் இருக்குல…?” என்றவள் தைரியமாகவே சொல்லி விட்டு பின்பு முகத்தை மறைத்து கொள்ள, வம்சி அவளை திரும்பி பார்த்து,
“அப்போ ஹார்ட் வொர்க் பண்ண நானும் தயாரா தான் இருக்கேன்!” என்று அடுத்த கட்டத்திற்கு தயாராக, “அச்சோ… விளையாட்டுக்கு சொன்னேன்… என்னங்க… வேணாம்!” என்று பவானி சிரிக்க, அந்த இரவு அத்தம்பதிகளின் வாழ்வை இன்னொரு இனிப்பான கட்டத்திற்கு எடுத்து சென்றிருந்தது…
பவானி தான் நினைத்த வாழ்க்கை கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியில் இருந்தால், வம்சியோ நீண்ட வருடங்களுக்கு பின்பு முகத்தில் புன்னகையோடும் மனதில் நிம்மதியோடும், நடையில் துள்ளலோடும் வளைய வந்தான்.
அவன் உடன் வேலை பார்க்கும் ஆட்களுக்கு எல்லாம், “இவருக்கு என்ன ஆச்சு… ஆளே மாறி போயிட்டாரு?” என்று வியப்பாக பார்த்து வைத்தார்கள். கேட்ட கேள்விக்கு எமோசனே காட்டாமல் பேசுபவன், தற்பொழுது கண்ணால் சிரிக்கிறான். சஹஜமாய் பேசியும் மிரள வைத்தான்.
“ஆவி எதுவும் அடிச்சிடுச்சா?’ என்ற சந்தேகம் கூட வந்து விட்டது. அந்த அளவிற்கு பையன் வாணிமயமாகி போயிருந்தான். அவளுக்கோ இளையராஜா முதல் ஏஆர் ரகுமான் வரை அனைவர் போட்ட காதல் பாடலும் தனக்கு தான் என்ற ரீதியில் இருந்தாள்.
வாட்ஸ் அப் ஸ்ட்டேஸ் என்றால் எதற்கு என்று கேட்பவள், கணவனுக்காக ஹார்ட் விட்டு சாங்காக வைத்து தள்ள, அது பலரின் வைத்தெரிச்சலை சேர்த்து கொண்டிருந்தது. இப்படியே சில நாட்கள் வசந்த காலமாக ஓடினாலும் அதில் ஒரு திருப்புமுனை வந்தது… அதில் அவர்கள் இருவர் வாழ்வும் வேறு வேறு விதமாக திரும்பியும் விட்டது.