Advertisement

“இப்போ விவாகரத்து  யாருக்கு வேண்டும் உங்களுக்கா…? அவங்களுக்கா…?” என்ற குருமூர்த்தியின் கேள்வியில் பத்மினி வாய் தன்னால் மூடிக் கொண்டாள்.
இப்போது குருமூர்த்தி மீண்டும் தன் பார்வையை கீதாவின் பக்கம் திருப்பியவன்…
“தோ பாருங்க..எதுக்கு விவாகரத்து…?என்ன காரணத்துக்கு விவாகரத்து வேண்டும்…? ஒரு   லாயரா என் கிட்ட சொல்லவே நீங்க இப்படி யோசிச்சா  உங்க கேசை நான் எப்படி எடுத்துக்குறது..? அப்படி எடுக்கும் பட்சத்தில் மீட்சுவல் டைவஸ்ன்னா பிரச்சனை இல்ல..
அந்த பக்கத்தில் இருந்து எதிர்ப்பு வரும் போது அவங்க வைக்கும் லாயர் கேட்கும் கேள்விக்கு நீங்க எப்படி பதில் சொல்ல முடியும்..உங்கல நம்பி நான் எப்படி உங்க கேசை எடுத்துக்க… ஒன்று தெரியுங்களா…? இது வரை நான் எடுத்த  எந்த  தோத்தது கிடையாது…
பெண்கள் சென்டி மென்ட் என் கிட்ட இருக்கு தான்…ஆனாலும் அந்த சென்டி மென்ட் என்னுடைய கேரியரை  பாதிக்கும் என்றால்….” அடுத்து பேசாது தன் கை இரண்டையும் விரித்து தன் தோளை குலுக்கியவனாய் தன் பேச்சை அவன் முடித்துக் கொண்டான்…
இப்போது கீதா தன்னை தைரியப்படுத்திக் கொண்டவளாய்..இந்த சேரில் இருந்து நாம் மீள வேண்டும் என்றால் நாம் பேசி தான் ஆக வேண்டும் என்று முடிவு செய்தவளாய்…
“எனக்கு கல்யாணம் முடிந்து ஆறு மாசம் தான் ஆகி இருக்கு..இந்த இடம் எட்டு மாசத்துக்கு முன்ன வந்தது..மாப்பிள்ளை பெயர் ஜெய்… அப்பா அம்மா இல்ல… ஒரு அண்ணன் மட்டும் தான்…சொந்த வீடு நல்ல வேலை எங்களோட நல்ல வசதி பார்க்கவும் ரொம்ப நல்லா இருந்தார்..
எனக்கு போட்டோ பார்த்த உடனே இந்த இடம் எங்கு எனக்கு முடியும் 
 …?பார்க்க சுமாரா இருக்கிறவனே என்னை அழகு இல்லேன்னு அவ்வளவு நகை கேட்பான்..இவன் அழகுக்கு எங்க வீட்டை எழுதி வெச்சா கூட போதாது போல… நினச்சி அப்பா கிட்ட கேட்டேன்..
“அப்பா அவங்க  வீட்டுக்கு என் போட்டோவை கொடுத்திங்கலான்னு..”
அதுக்கு அப்பா… “கொடுத்தேன்..பிடிச்சி போய் தான் பாக்க வர்றாங்க..ஏன் உன் மனச வீணா  போட்டு குழப்பிக்கிற… உனக்கு இந்த இடம் தான் முடியும்னா முடியும்.” என்று சொன்னார்.. அப்போ கூட எனக்கு நம்பிக்கை இல்லாம தான் ஏனோ தானோன்னு நான் என்னை அலங்கரிச்சிக்கிட்டேன்..” என்று  சொன்ன கீதா  தன் பக்கத்தில் அமர்ந்திருந்த பத்மினியை காட்டி…
“இவள் என் தங்கை எப்போவும் என்னை யாராவது பெண் பார்க்க வந்தா வீட்டில் இருக்க மாட்டா..இப்போ தான் அவளுக்கு தனியா கடை இருக்கு..அப்போ எங்க வீட்டு முன் கடையில் ஒரு கடை பேன்ஸி ஸ்டோருக்கு வாடகை விட்டு இருந்தோம்.. அவ அங்கு தான் இருப்பா…
ஏன்னா ஒரு வாட்டி என்னை பாக்க வந்தவங்க… அப்பா கிட்ட உங்க சின்ன பெண்ணை தான் என்  மகனுக்கு பிடிச்சி இருக்கு…உங்க சின்ன பெண்ணை  கொடுக்குறதா இருந்தா மேற்க்கொண்டு பேசலாம்.” என்று அவங்க என் தங்கையை கேட்கும் போது அப்போ அவளுக்கு பதினெழு வயது தான்..
அப்போதிலிருந்தே  என் தங்கை என்னை பார்க்க மாப்பிள்ளை  வீடு வந்தா வீட்டில் இருக்க மாட்டா அவ கடையில் தான் இருப்பா..அவங்க வந்த அன்னைக்கு கூட இவ வீட்டில் இல்லை..ஆனா அவங்களுக்கு தெரியாம  இவள் எப்படியாவது மாப்பிள்ளையையும் அவங்க குடும்பத்தையும் பார்த்துடுவா..
அதே போல் இவங்களையும் பார்த்துட்டா.. ஜெய் வீட்டில் இருந்து வந்தவங்க எங்களுக்கு பெண்ணை  ரொம்ப பிடிச்சி போயிடுச்சி இப்போவே தட்டை மாத்திக்கலாம் அடுத்த மாசம் கல்யாணத்தை வெச்சிக்கலாம்.”  என்று சொன்னதை கேட்டதும்.. என்னால் நம்ப முடியவில்லை.” என்ற அவளின் வார்த்தையில்…
“ஏன் நம்ப முடியவில்லை….?” என்று கேட்டான்.
இது வரை கீதா பேச பேச  எந்த இடையூறும் செய்யாது அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த குருமூர்த்தி கீதா சொன்ன… “அவங்களுக்கு என்னை பிடிச்சி இருக்குன்னு..” சொன்னதை நம்ப முடியவில்லை என்று சொன்னதுமே… குருமூர்த்தி கேள்வி எழுப்ப…
அவனின் கேள்வியில் கீதா கொஞ்சம் தயங்கி பின்… “நான் பார்க்க சுமாரா தான் இருக்கேன்..ஆனா மாப்பிள்ளை பார்க்க அவ்வளவு அழகா இருந்தார்..படிப்பாகட்டும் அந்தஸ்த்தாகட்டும் எல்லாம் என்னை விட கூடுதல் .அப்படி இருக்கும் போது பிடிச்சது என்று சொன்னதும் நமக்கு நம்ப தானே முடியாது.” என்று கீதா சொன்ன விளக்கத்தில்…
குருமூர்த்தி …“அப்படியா….?” என்று அவன் ஒரு கேள்வி எழுப்பியதில். அங்கு இருந்த அனைவருக்கும் இவன் அப்படியா…?என்று கேட்டது ,கிண்டலிலா…? தெனவெட்டில்லா… என்று தெரியாது முழித்திருக்க..
மேலும் அவர்களை  முழித்து இருக்க வைக்காது… “ம் அப்புறம் சொல்லுங்க.” என்ற குருமூர்த்தி திரும்பவும் தன் கேசில் பக்கம் திசை  திருப்பியதில்..
கீதா தான் குழம்பி போய் பின்… “ அப்புறம் தான் பத்து கிட்ட சொல்லி கடையில் இருந்து வந்தா… அவங்க பிடிச்சது என்று சொன்னதில் அப்பாக்கு ரொம்ப சந்தோஷம்…”
இப்போது குருமூர்த்தி.. “உங்களுக்கு…?” என்று மீண்டும் கேள்வி எழுப்பினான்..
“எ..னக்கும் தான்.” என்று இப்போது அதை சொல்லும் போது கீதாவின்  குரலில் அவமானமே  மேலோங்கி இருந்தது..இதுவே இத்திருமணம் முடிவான போது இக்கேள்வியை கேட்டு இருந்தால் வெட்கப்பட்டுக் கொண்டு சொல்லி இருப்பாள்…பெண்களின் மனநிலையை அறிந்தவனாய் குருமூர்த்தி நினைத்தான்.
“ஆனா நாங்க பட்ட சந்தோஷத்தை என் தங்கை படவில்லை.” என்ற கீதாவின் பேச்சில்…
“ஏன்…” என்பது போல் குருமூர்த்தி பத்மினியின் பக்கம் பார்வையை திருப்ப…
அவள் நிமிர்ந்து பார்த்தால் தானே… குருமூர்த்தி பார்ப்பது தெரிவதற்க்கு, தன் அக்கா பேச ஆராம்பித்த உடன் தலை குனிந்தவள் தான் நிமிரவே இல்லை..
இவள் இதை சொல்ல சொல்ல அவள் மனதில் இருக்கும் ரணம் மேலும் கிளறி விடுவது போல தானே ஆகும்…ரணத்தை அப்படியே விட்டால் அது சீழ் பிடித்து மேலும் பிரச்சனையை ஏற்படுதுவது போல..கீதா பேசினால் தானே அவள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்… என்று அவளின் அறிவு எடுத்துரைத்தாலும்..
யாரோ முன் இவள் அடுத்து தன் அந்தரங்கத்தை பகிர வேண்டும் என்ற அந்த நினைவிலேயே தலை குனிந்தவள்  நிமிரவில்லை..
பத்மினியின் பக்கம் பார்வையை திருப்பிய குருமூர்த்தி பத்மினி தலை குனிந்து இருப்பதை பார்தது…
”பெண்கள்  தலை  குனிந்து இருப்பதை பார்த்தா எனக்கு பிடிக்கவே பிடிக்காது.” என்ற குருமூர்த்தியின் பேச்சில் பத்மினி நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
“தட்ஸ் குட்.” என்று சொன்ன குருமூர்த்தி தொடர்ந்து…  “உங்களுக்கு ஏன் இந்த சம்மந்தம் பிடிக்கலே…” என்று அவளிடம் கேட்டதும்..
கொஞ்சம் யோசித்த பத்மினி… “தெரியல..ஆனா என் மனசுக்கு ஏதோ தப்பா தோனுச்சி.. அதான்  அப்பா கிட்ட வேண்டாமுன்னு சொன்னேன்..அதுக்கு அப்பா ரீசன் சொல்லு அப்படின்னு சொன்னார்..
அவர் கேட்டதும் நியாயம் தானே.. ஒரு மத்தியவர்க்கத்தின் தலைவராய் இரு பெண்களின் தந்தையாய் தன் மகள்களை கட்டி கொடுக்க வேண்டும்..இது தான் அனைவரின் பெற்றோர்களின் எண்ணமும்..அதே எண்ணம் தான் எங்க அப்பாவுக்கும்..
அதுவும் இல்லாம அப்பா கொஞ்சம் சுகவீனம் இல்லாதவர்..அக்காவுக்கு ஐந்து வருடமா இடம் பார்த்துட்டு இருந்தோம்..ஏதோ ஒரு காரணத்தால அக்காவின் கல்யாணம் தள்ளி போயிட்டே இருந்தது.
இந்த இடம் மாப்பிள்ளை வீட்டு ஆளுங்களுக்கு  பிடிச்சி போயிட  அப்பாவுக்கு இந்த  சம்மந்தத்தை விட மனசு இல்ல.. அப்போ கூட நான் டிடக்டீவ் ஏஜன்ஸி வெச்சி மாப்பிள்ளை பத்தி விசாரிச்சேன்.. அவங்க ஒன்னும் தப்பா சொல்லலே…அதனால நானும் ஒத்துக் கொண்டேன்.” என்று பத்மினி சொல்லவும்..
“அப்படியா…?” என்பது போல் பார்த்தானே தவிர அவன் வேறு எதுவும் பேசவில்லை.
இப்போது கீதாவிடம்… “இப்போ நீங்க எதுக்கு  விவாகரத்து கேட்கிறிங்க…?”
கீதாவை இவ்வளவு நேரம் பேச விட்டு…பெண்ணின் மனம்..பெண்ணின் குணம் அறிய முயன்றவன்.. கீதாவின் இயல்பை ஒரளவுக்கு  புரிந்துக் கொண்டவனாய் இப்போது தான் விசயத்துக்கு வந்தான்…
கீதா அந்த சாதரண விசயத்தையே கொஞ்சம் தயங்கி தயங்கி தான் சொன்னது..இப்போது இந்த விசயம்..அதுவும் இரு ஆடவர் முன்.. அதை நினைக்கும் போதே அவளின் கண்கள் தன்னால் கலங்கி தான் போனது..
திருமணம் ஆகாமலேயே இருந்து இருந்தால்..கல்யாணம் ஆகவில்லை..இது ஒரு கவலை மட்டும் தான்..ஆனால் ஆன பின்…நடுங்கிய தன் உதட்டை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்த அவளின் தோற்றம் குருமூர்த்தியை ஏதோ செய்தது தான்..
ஆனாலும்  கீதா தானே இதை  சொல்லி  ஆகவேண்டும்.. என்ற பட்சத்தில் அமைதி காத்தான்..அதே  எண்ணம் தான் கீதாவுக்கும் போல்…
“அவங்க அண்ணி கூட இருந்தாங்க…” என்று அவள் அதை சொல்லும் போதே அவள் குரல் உடைந்து விட்டது..
கீதா அண்ணி கூட இருந்தாங்க என்ற வார்த்தையின் அர்த்தம் கீதா விளக்காமலேயே குருமூர்த்திக்கு புரிந்து விட்டது… அவன் இது போல் எத்தனை கேசுகளை  பார்த்து இருக்கிறான்.
“நீங்களே  பார்த்திங்களா..?இல்ல யாரவது சொல்லி/…”
“இல்ல இல்ல நானே பார்த்தேன்…”  என்று சொன்ன கீதாவின் குரலில் முன் இருந்த தயக்கம் இல்லை.
“நேரில் பார்த்திங்க..அதுக்கு முன்ன அவங்க நடவடிக்கையில் ஏதாவது உங்களுக்கு சந்தேகம்…” என்று குருமூர்த்தி கேட்க..
“கல்யாணம் ஆன நாளில் இருந்தே..அதாவது..எங்க கல்யாணம் ஆன அன்னைக்கு எங்க வீட்டில் அந்த சடங்கு… “ என்று சொன்னவளின் பேச்சு தடைப்பட தன் பக்கத்தில் அமர்ந்திருந்த பத்மினியையும் இந்த பக்கம் அமர்ந்திருந்த கிரிஜா…மறு பக்கம் பத்மினியின் பக்கத்தில் அமர்ந்திருந்த கிரிதரனையும் தயக்கத்துடன் பார்த்து.. இவர்கள் முன் எப்படி சொல்வது என்று தன் பேச்சை நிறுத்தினாள்…
இந்த நான்கு பேர் முன் சொல்லவே தயங்கும் கீதா நீதிமன்றத்தில் அத்தனை பேர் முன்நிலையில் எப்படி சொல்லுவாள்…ஜெய் இந்த விவாகரத்திற்க்கு சம்மதிக்காத பட்சத்தில்…?

Advertisement