Advertisement

“ இல்ல பூஜா அக்காவுக்கு இப்போ இந்த காப்பகத்துக்கு வர முடியாது..அவளுக்கு கொஞ்சம் பர்சனல் ஒர்க் இருக்குன்னு சொன்னேன்…” என்ற்வனின் பேச்சு  பத்மினிக்கு இன்னும் புரியாது இன்னும் குழப்பத்தை தான் ஏற்படுத்தியது..
“ ஏன் அப்படி சொன்னிங்க…? ” என்று அவனை விட்டு தள்ளி போக பார்த்தவளை மீண்டும் தன்னுள் அடக்கியவனாய்..
 “சும்மா சும்மா தூரம் போய் நிக்காதடி.. மனுஷனின் நிலை புரியாது…” என்று சொல்லி பத்மினியை கடிந்த குருமூர்த்தி..
தான் சொல்ல வந்ததின் தொடர்ச்சியாய்…
“ பூஜா அக்கா வந்தா கீதாவுக்கும் கிரிதரனுக்கும் தனிமை எப்படி கிடைக்கும்..? இப்போ பார் இந்த காப்பகத்தின் கட்டடம் பத்தி பேசனுமுன்னா கீதா கிரிதரனிடம் பேசி தான் ஆகனும்..
இப்போ பூஜா அக்கா இருந்தா அவள் மூலமா பேச்சு வார்த்தை நடத்திக்குவா… இதோ இந்த ஆறுமாசத்தில் அவங்க சாதரணமா பேசிக்கிறங்க தானே..
அதான் பூஜா அக்காவுக்கு பர்சனல் வேலை இருக்குன்னு பொய் சொன்னேன்..  “ என்று சொன்ன குருமூர்த்தி…
 தொடர்ந்து…
 “ பொய் கூட நியாயத்தின் வழி என்று சொல்லலாம்.. “ என்று சொன்ன குருமூர்த்தியை பார்த்து பத்மினி..
“ எப்போதிலிருந்து பொய் நியாயமா ஆச்சி..” என்ற கேள்விக்கு..
 “ அதுவா  இந்த பொய் கிரிதரனின் காதலை சேர்த்து வைக்கும் போது… அது தான் பொய்யா சொல்றேன்…” என்று குருமூர்த்தி  என்னவோ இது வரை பொய்யே சொன்னது இல்லை என்பது போல் பேசிட பேச்சில்..
“ ஓ அப்போ அய்யா பொய்யே சொன்னது இல்ல.. “ என்று கேட்டவள்..
பின்..
“ அப்போ கோர்ட்டில் என்ன என்று வாதாடுறிங்க…” என்று புருவத்தை உயர்த்தி பத்மினி கேலியாக கேட்டாள்..
அதற்க்கு குருமூர்த்தி..
“அதுவா..அதுவா…” என்று கேட்டவன் பின்..
“காதலுக்கு பொய் நியாயம் போல்… பணத்துக்கு பொய் சொல்வது நேர்மையில் சேர்த்துட்டாங்க… டீ” என்று சொல்லி விட்டு..
“ நம்ம பேசுவதை நான் வீட்டுக்கு போய் நினச்சி பார்த்தா.. எனக்கு அப்போ அப்போ சந்தேகமா இருக்கு..நாம காதலர்களா என்று… என்ன டீ இது உப்பு சப்பு இல்லாத காதல்.. காதலுன்னா ஒரு கிக் இருக்கனுமுடீ..
வீட்டுக்கு போனா சும்மா நாம் பேசுனதை நினச்சாலே.. நினைச்சாலே..” என்று சொல்லிக் கொண்டே அவளின் முகம் நோக்கி குனிந்தவன் எனக்கு பேச்சோடு செயலில் தான் கிக் அதிகம் என்று பத்மினிக்கு நிரூபித்து காடியவனாய் அவளை விடுவித்தவனின் முகம் இப்போது  வெட்கத்தில் வண்ணமயமாய் காட்சி அளித்தது…
அதை பார்த்த பத்மினி..
“என்ன இது இப்படி வெட்க படுறிங்க…? அய்யோ பேச்சு தான் சும்மா வண்ணமயமா வரும் என்று பார்த்தா முகம் கூட வண்ணமைய்யமா  மாறுது.. கடவுளே.. இதுக்கே இப்படின்னா அப்போ மத்ததுக்கு….” என்று சொன்ன பத்மினியை இன்னும் இன்னும் இறுக்கி கொண்டவனாய்..
“ தோ பார் என்னை  நம்பி உங்க அப்பா இங்கு நான் தனியா இருக்கேன் என்று தெரிந்தே விடுறார்.. அத நினச்சி தான் நான் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன்..இல்லேன்னா நான் வில்லன் டீ…” என்று கொஞ்சியவனின் குறுந்தாடியை இழுத்தவளாய்..
“ நீங்க வில்லன் கிடையாது.. என் நாயகன்…” என்று  பத்மினி சொல்ல…
அதற்க்கு குருமூர்த்தி..
“நான் எப்போ நாயகன் ஆனேன்.. அதுவும் எனக்கே தெரியாது…” என்று கேட்டான்.
அதற்க்கு பத்மினி..
“ என்னை லவ் பண்ண ஆராம்பித்ததில் இருந்து..ஏன்னா நான் நாயகி.. அப்போ நீங்க நாயகனாய் தான் இருந்து ஆகனும்.. அது தானே எழுத படாத சட்டம்…” என்று பத்மினி சொன்னாள்..
“ தோ பார் நான் நாயகனோ வில்லனோ..நீ எப்படி வேணா நினச்சிக்கோ எனக்கு அதை பத்தி கவலை இல்லை..
ஆனால் நீங்க இப்படி பேசாதிங்க..அப்படி பேசாதிங்கன்னு சொல்ல கூடாது.. ஏன்னா என்னை எதிலும்  என்னால் மாத்திக்க முடியாது..” என்று  குருமூர்த்தி பத்மினியிடம் திட்ட வட்டமாய் சொல்லி  விட்டான்..
பின் என்ன  இவள் தன்னை பார்த்து வில்லன் என்று சொல்லி இருந்தால் கூட அவன் கவலை பட்டு இருக்க மாட்டான்.. ஏன்னா வில்லனா இருப்பது அவ்வளவு பெரிய கஷ்டம் எல்லாம் கிடையாது. .அவன்  இஷ்டம் படி இருக்கலாம்..
இவ பாட்டுக்கு பொசுக்குன்னு என்னை நாயகனாக்கி விட்டு.. அது படி இப்படி நடக்கனும்… இப்படி பேசனும். இதை செய்யனும். அதை செய்ய கூடாது.. என்று  அவள்  பாட்டுக்கு  அடக்கிட்டே போனா யார் அதை பாலோ பண்றது..
அது தான் குருமூர்த்தி முன் எச்சரிக்கையாய் நான் எதிலும் மாற மாட்டேன் என்று சொன்னது..
அதற்க்கு பத்மினி..
“ என் விருப்ப படி நீங்க மாத்திக்கலேன்னா என்ன..நான் உங்க விருப்ப படி மாத்திக்கிறேன்.. ஏன்னா நீங்க தான் என் நாயகன்…” என்று  இவர்களின் காதல் ஒரு வழியில் வளர்ந்து கொண்டு இருக்க..
மறு பக்கம் கிரிதரன் கீதாவின் மனதில் மெல்ல மெல்ல இடம் பிடித்தான்.. ஒரு நாள்  ஆல்டேஷ்ன் செய்யும் தன் காப்பகத்துக்கு டையில்ஸ் வந்ததில் இரு வகையாக அதாவது ஒரே டிசைன் தான். ஒரே கலரும்..
ஆனால் அந்த கலரில் கொஞ்சம் கொஞ்சமே வித்தியாசம் தெரிந்தது.. அதை உத்து பார்த்தால் தான் தெரியும்.. சரி விட்டு விடலாம் என்று கீதா நினைக்கும் போது தான் அதில் ஒன்றை கவனித்தாள்… கொஞ்சம் கலர் கூடுதலாய் இருக்கும் டையிஸ்  ஷைனிங்காகவும்…
 கலர் கம்மியால இருக்கும் டையிஸில் ஷைனிங் கொஞ்சம் கம்மியாகவும் தெரிந்ததில் அதன் தரத்தின் வித்தியாசம் புரிய..
அதை பற்றி பேச கிரிதரனுக்கு பேசியில் தொடர்பு கொள்ள பார்க்க..பேசியில் அவனின் அழைப்பு கிடைக்காது போக… சரி நாம் வீட்டுக்கு போகும் வழியில் தானே கிரிதரனின் அலுவலகம் இருக்கிறது.
போகும் போது பார்த்து விட்டு செல்லலாம்  என்று நினைத்து அங்கு போனவளுக்கு அங்கும் கிரிதரன் இல்லாது அவன் எங்கு இருக்கிறான் என்ற தகவல் மட்டுமே கிடைத்தது..
இன்று அவன் கட்டி கொடுக்கும் ஒரு வீட்டுக்கு இன்று தளம் போடுவதால், காலையில் இருந்து அங்கு தான் இருக்கிறான்.. இது போல் நேரத்தில் கிரிதரன் தன் பேசியை அணைத்து விடுவார் என்ற கூடுதல் தகவலும் கீதாவுக்கு கிடைத்தது…
சரி நேரம் ஆனாலும் பரவாயில்லை. இதை இன்றே பேசிவிடலாம். ஏன் என்றால் நாளை டையில்ஸ் போடுறவங்க வருவாங்க என்று நேற்று தான் கிரிதரன் அவளிடம் சொன்னான்..
அதனால் தன் சந்தேகத்தை சொல்லி விடலாம் என்று நினைத்து கிரிதரன் இருக்கும் இடத்தின் விலாசம் வாங்கியவள் நேராக தன் ஸ்கூட்டியை அவன் இருக்கும் இடத்தை நோக்கி செலுத்தினாள்.
ஆம் ஸ்கூட்டி தான்… ஆறு மாதம் முன்  பாதையை கூட தனியாக கடக்க பயந்து துணையோடு சென்று வந்து கொண்டு இருந்த கீதா..
இன்று தனியாக ஸ்கூட்டியை அநாவசியமாக போக்கு வரத்து சாலையில்,  லாவகமாக ஓட்டிய வாறு  கிரிதரன் கட்டி கொடுக்கும் இருக்கும் இடத்திற்க்கு சென்று நிறுத்தினாள்.
அப்போது முதல் தளத்தில் சிமெண்ட் கலவை போட்டு முடித்து விட்டு இரண்டாம் தளத்திற்க்கு சிமெண்ட்டின் கலவை கலந்துக் கொண்டு இருக்க, அதை பார்த்த வாறு  சிமெண்டின் கலவை தன் சேலையில் படியாமல் இருக்க…
தன் சேலையின் நுனியை  பிடித்த வாறு மற்றவர்கள் வேலை செய்வதில் இடஞ்சல் ஏற்படுத்தாது மெல்ல மெல்ல கிரிதரன் இருக்கும் இடத்திற்க்கு சென்ற போது…
 அங்கு  கிரிதரன்  அழும் குழந்தையை தூக்கிக் கொண்டு  அங்கு வேலை செய்யும் பெண்களை பார்த்து..
“ யாரு குழந்தை? …” அந்த மெஷின் சத்தத்தில் கேட்க வேண்டும் என்று நினைத்து சத்தமாக கேட்க..அது கீதா காதிலும் நன்றகாவே விழுந்தது…
கிரிதரன்  தன் சட்டையில் ஒட்டிய வாறு தூக்கி அணைத்த வாறு  வைத்துக் கொண்டு இருந்த குழந்தை பார்க்க அவ்வளவு அழுக்காக இருந்தது..
மூக்கில் சளி ஒழுக.. அதை அருவெறுத்து பார்க்காது “ என்னடா பசியா..?  இதோ அம்மா வந்துடுவாங்க..” என்று கொஞ்சிய வாறு அந்த குழந்தையை சமாதானம் படுத்துவதை இடையூறு செய்யாது கீதா பார்த்தாள் என்பதை விட ரசித்தாள் என்று சொன்னால் சரியாக இருக்கும்…
கிரிதரன் பக்கத்தில் வந்த ஒரு பெண்மணி..
“சார் அது என் குழந்தை தான் சார்…” என்று மெல்ல தயங்கிய வாறு சொல்லிக் கொண்டே தன் குழந்தையை வாங்க கை நீட்டினாள்..
அவளிடம் குழந்தையை கொடுத்த கிரிதரன்..
“ குழந்தையை அழ விட்டுட்டு நீங்க என்னம்மா செய்யிறிங்க…?” என்று கடித்துக் கொண்டு கேட்டான்.
அதற்க்கு அந்த குழந்தையின் தாய்… பயந்துக் கொண்டே..
“அப்போ அப்போ வேலையை விட்டு போனா மேஸ்த்திரி திட்டுறாரு சார்…அது தான்..” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அந்த இடத்திற்க்கு வந்த  மேஸ்த்திரி..
அந்த குழந்தையின் தாயை பார்த்து ஏதோ சொல்ல வாய் திறக்கும் வேளயில் கிரிதரன்..
“ மேஸ்த்திரி குழந்தைக்கு பால் ஊட்ட தடுப்பதை விட பெரிய பாவம் வேறு எதுவும் இல்ல.. நம்ம சைட்டில்  பால் குடிக்கும் குழந்தையின் தாய் மார்கள் யார் யாரோ அவங்களுக்கு  ஒரு சில சலுகை கொடுங்க…” 
கிரிதரனின் பேச்சில்,  அந்த  மேஸ்த்திரி மீண்டும் ஏதோ பேச வர..
“தெரியும் மேஸ்த்திரி இதனால் உங்களுக்கு கொஞ்சம் நஷ்டம் வரும்.. அதை நீங்க என் கணக்கில் சேர்த்துடுங்க…” என்று சொன்னதும் அந்த மேஸ்த்திரி.. இதற்க்கு மேல் சொல்ல என்ன இருக்கு..
சிரித்துக் கொண்டே..
“அது எல்லாம் பண்ணிடலாம் சார்.” என்று சொல்லி விட்டு சென்று விட்டார்…
இதை எல்லாம் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த கீதாவின் மனதில் மெல்ல மெல்ல மாற்றங்கள்.. கூடவே கனவோடு யாரோ குழந்தைக்கே இந்த அளவு பார்க்கும் போது தன் குழந்தைக்கு… நினைக்கும் போதே அவள் கன்னம் கொஞ்சம் சிவந்து தான் போனது..
ஏதோ ஒரு உணர்வில் கிரிதரன் சட்டென்று தன் பார்வையை கீதா இருக்கும் பக்கம் செலுத்தினான்.. அங்கு சிவந்த கன்னங்களோடு தன்னையே பார்த்திருந்த கீதாவை பார்த்தவனுக்கு, இத்தனை நாள் காத்துக்கிடந்ததுக்கு உண்டான பலன் கிடைத்து விட்டது என்று உணர்ந்தவனாய்..
கீதாவின்  அருகில் சென்று  அவள் கையை மெல்ல பற்ற..அதற்க்கு எந்த எதிர்ப்பும் சொல்லாது கீதா இருப்பதை பார்த்து..
“ அப்பா அம்மாவை உங்க வீட்டுக்கு அனுப்புட்டா கீது…?” என்ற கேள்விக்கு கீதா “ ஏன்..? எதற்க்கு…? என்று கேட்காது…
“ கிரிஜா…” என்று தன் சம்மதத்தை மறைமுகமாக கிரிதரனுக்கு கீதா உணர்த்தினாள்..
“ போன வாரம் ஒருத்தவங்க  கிரிஜாவை பெண் பார்த்துட்டு போனாங்கன்னு சொன்னேன் இல்லையா.. காலையில் தான் அவங்க ஓகே சொல்லிட்டாங்க..” என்று கிரிதரன் சொல்லிய வினாடி கீதாவிடம் இருந்து…
“ பையன் வீட்டை பத்தி நல்லா விசாரிச்சிடிங்கலா…?” என்று அக்கறையுடன் கீதா கேட்க..
அங்கு கிரிதரனிடம் ஏதோ பேச வந்த குருமூர்த்தி இதை கேட்டுக் கொண்டே வந்தவன்..
 “நான் தான் கீதா தனிப்பட்டு விசாரிச்சேன் எல்லாம் ஓகே.. இப்போ உனக்கு ஓகேவா..?” என்று கேட்டான்..
 “ ம் என் கிட்டவே சொல்லிட்டா….” என்று  பதில் கிரிதரனிடம் இருந்து  வந்தது..
“ம் சரி நடத்து நடத்து.. இனி நான் இங்கு அதிகப்படி என்று நினைக்கிறேன். எனக்கும் மூன்று திருமணம் ஒரே நாளில் நடத்துவதால் ஏகப்பட்ட வேலை இருக்கு…” என்று சொன்னது போலவே..
ஒரே நாளில் ஒரு பெரிய கல்யாண மண்டபத்தை எடுத்து… மூன்று மேடை அமைத்து ஜாம் ஜாம் என்று கல்யாணத்தை நடத்தி முடித்தான்..
அந்த பெண்கள் காப்பகமும் உண்மையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு அடைக்கலமாய் இருந்தது.. உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் கீதாவும், பூஜாவும் இதை நடத்துவதால் அவர்களின் மனது புரிந்து உண்மையான ஒரு காப்பகமாய் அது விளங்கியது..
பார்க்க நாயகன் போல் இருப்பவர்கள் அனைவரும் நாயகர்களாகி விட முடியாது… தங்கள் துணைவியர்களின் கண்ணுக்கு நாயகனாய் தெரிய வேண்டும்..அப்படி பார்த்தால் இந்த மூன்று நாயகியின் பக்கத்தில் அமர்ந்து தாலி கட்டும் இவர்கள் மூன்று பேரும் நாயகர்களே..
நாயகியின் நாயகி…..
                 நிறைவு..

Advertisement