Advertisement

அத்தியாயம்…20
குருமூர்த்தி வாதத்தில் முக்கியமானத்தை குறித்து வைத்துக் கொண்ட நீதிபதி… ஜெய்யை பார்த்து…
“நீங்க ஏதாவது சொல்ல விரும்புறிங்களா…?” என்ற கேள்விக்கு, அவனால் ..
“இல்லை…” என்று மட்டும் தான் தலையாட்ட முடிந்தது…
ஜெய் வேலையாட்களில், குருமூர்த்தி  சாந்தியை தனக்கு  எதிராக சாட்சி சொல்ல அழைப்பான் என்று அவன் எதிர் பார்த்தது தான்..
அவன் தான் அதை ஒத்துக் கொள்ள போகிறானே… முதலில் செயற்க்கை மூலம் தான் ப்ரியா கருத்தரித்தால், நான் என் விந்தணுக்களை மட்டும் தான் தானமாக கொடுத்தேன் என்று சொல்ல தான் நினைத்தான்.
ஆனால் அது போன்ற பிரசவத்திற்க்கு முறையே வேறு அல்லவா…? ப்ரியா பிரசவம் பார்த்த மருத்துவமனைக்கு போனால் தெரிந்து விடும்.. அதனால் இதற்க்கு வேறு வழி தான் கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்தவனின் மனதில் கீதாவை பற்றிய வன்மை கூடிக் கொண்டே போனது…
அவளுக்கு நான் கிடைத்ததே பெரியது..இது தான் அவன் எண்ணமாக இதோ இப்போது கூட அவன் நினைப்பது… அப்படி இருக்க தங்களை பற்றி தெரிந்ததும், அமைதியாக இருந்தால் அவளும் வசதியாக தானே இருக்க போகிறாள்.
என்ன தான் நான் ப்ரியாவுடன் குடும்பம் நடத்தினாலும்,  உலகத்திற்க்கு இவள் தானே என் மனைவி..இவளுக்கு பிறக்கும் குழந்தையை  தானே நாளை என் பிள்ளை என்று வெளியில் சொல்லும்…
இன்னும் கேட்டால் ப்ரியா தான் கோபப்பட வேண்டும்… நான் ஊருக்கு இல்லாது வீட்டில் தானே என்று.. அதே போல் சொத்தும் நாளை இவளுக்கு பிறக்கும் குழந்தைக்கு தானே வரும்..
கெளதம் சொத்தும் என் குழந்தை அதாவது ப்ரியாவுக்கு பிறந்த குழந்தை..இப்படி இருக்க அவனுக்கு இது தான் என்ன தோன்றியது..
அனுசரித்து சென்று இருக்கலாம். இது போல் தங்கள் குடும்பத்தை சந்தி சிரிக்க வைத்திருக்க தேவையில்லை என்பதே அவன் எண்ணம்…
எங்கள் குடும்பத்தை அவமானப் படுத்தியவளை தான் அனைவரின் முன்னும் தலை குனிய வைக்க வேண்டும்… என்ற வன்மமும்.. அவன் மனதில் சேர ..உதிர்த்த திட்டம் தான்..
அவளுக்கு முன்பே தெரியும். அனைத்தும் நான் சொல்லி விட்டேன். என் பணத்துக்கும் சொத்துக்கும் ஆசைப்பட்டு தான் என்னை மணந்தாள்  என்று நிருபித்து விட்டால், அடுத்து குருமூர்த்தி சொன்ன உன் சொத்தை அவளுக்கு வாங்கி கொடுத்து விடுவேன் என்பது நடக்காது போய் விடும்..
ஆம் நான் இது போல் ஒரு பழியை கீதா மீது போட்டால், குருமூர்த்தி சொத்து கேட்டாலே நான் சொன்னது தான் உண்மை என்பது போல் அனைவருக்கும் தெரியும் படி ஆகி விடுமே..
ஒன்று குருமூர்த்தி கேட்க மாட்டான். கேட்டாலும் அது செல்லாது என்று அவன் மனதில் ஆயிரம் கணக்கிடலோடு ஜெய் இங்கு வந்தான் என்றால்,
குருமூர்த்தி ஒரு லட்சம் திட்டங்களோடு… அவன் எந்த வழி சென்றாலும், அனைத்து வழியையும் மூடு விழா செய்வது போல் சாட்சியங்களை கொண்டு வந்து நிறுத்துவான் என்பது அவன் எதிர் பாராதது.
எதிர் பார்த்து இருக்க வேண்டுமோ.. தன் நண்பனின் விசயத்தில் இவன் வாத திறமையை பார்த்தும், மற்றவர்கள் உனக்கு எதிராக குருமூர்த்தியா… அவ்வளவு தான் என்று சொன்ன போதும், தான் கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்து விட்டோமோ… என்று நினைத்த மனது கூடவே..
நீ எவ்வளவு தான் ஜாக்கிரதையாக இருந்து இருந்தாலும் கூட, அவன் உன்னை கிழித்து தோரணம் கட்டாது விட்டு இருக்க மாட்டான் என்று எடுத்துரைத்தது…
அதுவும் செல்வி சாட்சி மிக ஸ்டாங்கனா சாட்சி… ஒரு வக்கீலாய் இல்லை என்றாலும், இது அவனுக்கு தெரிந்தே இருந்தது…
குழந்தை அவனுக்கு பெத்துக்க விருப்பம் தான்… என்ன தான் ப்ரியாவின் குழந்தை தன்னுடையதாக  இருந்தாலும், வெளி உலகுக்கு நான் தந்தையாகி விட்டேன் என்று பெருமையாக சொல்ல முடியாது அல்லவா..?
அது மட்டும் இல்லாது திருமணம் முடிந்து அடுத்து கேட்கும் கேள்வி என்ன விசேஷம்..? என்பதே ஆகும்… குழந்தை பேறு தள்ளினால் தன்னையும் ஒரு மாதிரியாக தான் அனைவரும் பார்ப்பர்..
அதனால் அந்த கருத்தடை மாத்திரை விசயத்தில் ஜெய்யும் அவ்வளவாக விருப்பம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..
 ஜெய் பத்ம ப்ரியாவிடம்… “ப்ரியா எதுக்கு இப்போ இது போல் மாத்திரை கொடுக்கனும் என்று சொல்ற… அவளுக்கு என்று ஒரு குழந்தை பிறந்து விட்டால், அவள் கவனம் அதில் போய் விடும்..
நம்மை அவள் அவ்வளவு கண்டுக்க மாட்டா… அதுவும் இல்லாம குழந்தை பிறப்பதற்க்கு அவள் தாய் வீடு போய் விடுவாள்..இது போல் தூக்க மாத்திரை கொடுக்க தேவையில்லை… என்று சொன்னவன்..
கூடுதலாய்…
“நம்ம விசயம் தெரிந்தாலும், இந்த பந்தத்தை விட்டு அவளாள் விலக முடியாது…” என்று ஜெய் சொன்னதை அனைத்தும் பொறுமையாக கேட்ட ப்ரியா..
ஜெய் சொன்ன… “ இந்த பந்தத்தை விட்டு விலக முடியாது…” என்ற வார்த்தையை பிடித்துக் கொண்ட ப்ரியா…
“ஓ உன் பொண்டாட்டிய தக்க வெச்சிக்க  உடனே குழந்தை கொடுக்கனும் என்று  நினைக்கிற..  பரவாயில்ல பார்க்க  அழகுலேயும், கலரிலேயும் சுமாரா இருந்தாலும், புருஷனை பிடித்து வைத்து இருப்பதில் மட்டும் சாமார்த்தியமா தான் இருக்க போல்..
ஆம் ப்ரியா சொல்வது ஒருவகையில் உண்மை என்று கீதாவுக்கு தெரியவில்லை என்றாலும் ஜெய்யுக்கு தெரியுமே… 
பார்க்க சுமார் வசதி இல்ல..கலர் குறைவு என்று ஏகப்பட்ட குறை கீதாவிடம் இருந்தாலும், அவளின் உடல் வடிவு… இடை மெலிவு… அவளின் ஏற்ற இறக்கங்களில் ஜெய் வீழ்ந்து தான் போனான் எனலாம்..
அப்போது ப்ரியாவிடம் ஜெய்  பேசும் போது அவன் நினைத்தது இது தான். தனக்கு இருவருமே வேண்டும் என்பதே… ப்ரியாவை  ருசிக்கண்ட பூனை.. போல் அவனால் அவளையும் விட முடியாது..
அதே போல் கீதாவை அணைத்தாளே தன் உடம்பில் தணலை கொட்டி விட்டது போல,  உடல் முழுவதும் சூடேறுகிறதே..அதை அவளால் மட்டுமே அணைக்க முடியும்… 
அது என்னவோ கீதாவுக்கு குழந்தை பிறந்தால், தன் குழந்தை மீது இருக்கும் பாசம் குறைந்து விடுமோ என்று அஞ்சினாளோ… அல்லது தன் குடும்பம் என்று பாசம் வந்து நான் மொத்தமும் கீதாவிடமே சென்று விடுவேன் என்று பயந்தாளோ…
“ஜெய்.. எனக்கு என்னவோ நீ என்னை விட்டு தூரம் போறியோன்னு இப்போ எல்லாம் பயம் வருது.. அதுவும் பார்க்க ரொம்ப ரொம்ப சுமாரா இருக்க அவளை அழைத்துக் கொண்டு கொடைக்கானல் போனதில் இருந்து.. எனக்கு ஏதோ சரியில்லாதது போல இருக்கு ஜெய்..
ப்ளீஸ் ப்ள்ஸ் எனக்கு இந்த பயம் போற வரை கீதா கன்சீவ் ஆகாம இருப்பது தான் நல்லது ஜெய்…” என்று அவள் கெஞ்சலிலும்.. கொஞ்சலிலும் .. மனம் இறங்கி சரி என்று அவளுக்கே தெரியாது அந்த கருத்தடை மாத்திரையை..
“ பார் நீ ரொம்ப வீக்கா இருக்க ..? இப்படி இருந்தா நம்ம குழந்தையை எப்படி நீ தாங்குவே…” என்று குழந்தை பெயர் சொல்லி அந்த குழந்தையே பிறக்க கூடாது என்று மாத்திரை கொடுக்க ஆரம்பித்தான்..
இதோ செல்வி சாட்சி சொல்லி விட்டு செல்கிறாளே.. அன்று கூட அனைத்து மாத்திரைகளிலும் கருத்தடை மாத்திரையின் துகள்களை அடைத்த பின் ..
ப்ரியாவை  அணைத்த வாறு..
“இதோட விட்டு விடலாம் ப்ரியா… மாட்டினா பிரச்சனை…” என்று சொன்னான்..
காரணம் தொடர்ந்து கருத்தடை மாத்திரை உபயோகித்தால் , பின் நாளில் கற்பம் தரிப்பதில் பிரச்சனை ஏற்படும் என்று தெரிந்ததில் இருந்து..ஏனோ வேண்டாம் கீதாவுக்கு பிறக்கும் குழந்தை தான் தம் ஆண்மையை  வெளி  உலகுக்கு கொண்டு வருபவை..அதனால் அதில் பிரச்சனை ஏற்பட கூடாது என்று காரணம் ஒன்று என்றால், 
மற்றொரு காரணம் ப்ரியா நினைத்தது போல் கீதாவுக்கு குழந்தை என்று ஒன்று ஆகி விட்டால், தங்களை பற்றி தெரிந்தாலும், தன்னை விட்டு விலக முடியாது என்பது மற்றொரு காரணம் ஆகும்..
ப்ரியாவின் பயம் உண்மை என்பது போல் தான் ஜெய்யும் இருந்தான்.. அவன் கீதாவை அழைத்துக் கொண்டு ஹனிமூன் என்று கொடைக்கானல் அழைத்துக் கொண்டு போக காரணம்.
பகலில் கதவு அடைத்தால், ப்ரியாவை சமாளிக்க வேண்டி இருக்கும். ஆனால் கீதாவிடம் இரவு பகல் பாராது கூட வேண்டும் என்ற ஆசையில் தான் ..
 ஜெய் ப்ரியாவிடம்..
“ பிரண்சுங்க என்னை கேக்காம  புக் பண்ணிட்டாங்க.. மறுத்தால் என்ன காரணம் என்று சொல்வது…” என்று ப்ரியாவை சமாளித்து விட்டு கீதாவை கொடைக்கானலுக்கு அழைத்து சென்றவனின் மோகம் கொடைக்கானலை விட்டு சென்னை வந்த பின்னும் அடங்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்..
கீதாவிடம் பிடிப்பட்ட அன்று கீதாவுக்கு ப்ரீயட்ஸ்… அது என்னவோ இப்போது எல்லாம் கீதாவை விட்டு ப்ரியாவிடம் நாட்டம் அவனுக்கு குறைந்து விட்டது என்று தான் சொல்ல முடியும்..
அதனால் தான் தூக்க மாத்திரையில் விளைவால் கீதா நன்றாக உறங்கிய பின்னும், அவளை அணைத்துக் கொண்டும்.. அவளின் அங்கங்களை தொட்டுக் கொண்டு இருக்க தோன்றுகிறதே தவிர.. ப்ரியாவின் அறைக்கு செல்ல தோனாது  ஒரு வாரம் ப்ரியாவிடம் செல்லாததிற்க்கு…
அன்று காலை கீதா குளிக்கும் போது… 
“என்ன ஜெய்…” என்று கோபித்துக் கொண்டவளிடம்..
“இன்னைக்கு கண்டிப்பா வர்றேன்..” என்று  ப்ரியாவிடன் வாக்கு கொடுத்தான்..
காரணம் கீதா இன்று வீட்டுக்கு தூரம் என்று தெரிந்ததால் வருகிறேன் என்று சொன்னான்..  சொன்னது போல் போனான் தான்.. அவனின் கெட்ட நேரமா கீதாவின் நல்ல நேரமா  மாட்டிக் கொண்டான்…
பின் கீதாவை சமாளித்து விடலாம் என்று நினைத்து பின் அவள் சண்டை போட்டு சென்ற போது கூட எங்கு போய் விடுவா…? என்று ஜெய் கொஞ்சம் மெத்தனமாக தான் இருந்து விட்டான் என்று சொல்ல வேண்டும்..
விளைவு இதோ இப்போது இங்கு நின்றுக் கொண்டு இருக்கிறேன்.. என்று பழைய நினைவுகளில்  மூழ்கிக் கொண்டு இருந்தவனின் சேவியில்..
“நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டுமா..?” என்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியாது தலை குனிந்து நின்றான்..
நீதிபதி கீதாவை பார்த்து…
“நீங்கம்மா..” என்ற கேள்விக்கு..
கீதா உடனே…
“பேசனும். கண்டிப்பா பேசனும்.” என்று சொன்னவள் தொடர்ந்து…

Advertisement