Advertisement

இரு பெண் குழந்தைகளின் தாயாய்… அந்த பெரியம்மாவின் மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தோடு ஒரு பெண் வாழ்க்கை பாழாக நாமும் ஒரு காரணம் ஆகி விட்டோமே என்று  குற்ற உணர்ச்சியிலும் அந்த பெண் சாந்தி  தன் ஆதாங்கத்தை கொட்டி தீர்த்தாள்.
சாந்தி பேசிய பின் நீதிபதி… ஜெய்யின் வக்கீலிடம்..
“நீங்க ஏதாவது கேட்கனுமா…?” என்று கேட்டார்.
அதற்க்கு அந்த வக்கீல்…
“இல்லை…” என்பது போல் மறுத்து அமர்ந்து விட்டான்.
திரும்பவும் குருமூர்த்தி நீதிபதையை பார்த்து…
“ இப்போ  சாந்தி அவங்கள எதுக்கு கூப்பிட்டு விசாரணை செய்தேன். அதுவும் இப்போ அவங்க சொன்னது எல்லாம் ஜெய்யே ஒத்துக் கொண்டு இருக்கும் போது என்ன இது…? என்று நினைக்கலாம்..
ஆனால் இதில் இருந்து நான் நிருபிக்க வருவது ஜெய்யின் மனநிலை.. இந்த தவறை அவங்க  தவறு என்றே நினைக்கவில்லை.. அது எல்லாம அதாவது  இவர் அண்ணி இல்லாம அவரால் இருக்க முடியாது..
அதற்க்கு உதாரணம்.. தாய் இவர்களின் தகாத உறவை பார்த்து தற்கொலை செய்த பின்னும், அதை விடாது தொடர்ந்து இருக்காங்க… அதுவும் பார்த்த சாட்சியை  சொல்ல கூடாது என்று அவர்கள் பெண் குழந்தைகளை காட்டி  ஒரு கிரிமினல் ரேஞ்சுக்கு…” என்று சொன்னவன்..
பின்.. “ கிரிமினர் ரேஞ் என்ன…? கிரிமினல் தான்.. அவங்க அம்மா சாவுக்கு மறைமுகம் இல்லை நேரிடை காரணம் இவங்க தான்.. அதோடு விடாது ஒரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து… அவங்களை மனதில் பலமாக அடி வாங்க வைத்து இருக்காங்க…
அது மட்டும் இல்லாது அவங்க மேல பொல்லாத பழி அதாவது தெரியும். சொத்துக்கு ஆசைபட்டு தான் திருமணம் செய்தாங்க என்று அவர் மேல் வீண் அமாண்ட பழி சுமத்தி இருக்கார்..
அவர் சொல்வது அதாவது என் கட்சிக்காரர் கீதாவுக்கு அவர்களை பற்றிய எந்த உண்மையும் தெரியாது என்பதற்க்கு சாட்சி…
அன்று என் கட்சிக்காரர் கீதா ஜெய்யை அவர் அண்ணியோடு பார்க்க கூடாத விதத்தில் பார்த்த பின் அந்த அர்த்த ராத்திரியில் ஜெய்யின் வீட்டு முனையில் வந்துக் கொண்டு இருந்த ஆட்டோவில் தான் அவர்கள் அப்பா வீட்டுக்கு போய் இருக்காங்க.. அவரை சாட்சியாக அழைக்க கோருகிறேன் என்றதும்…
அந்த ஆட்டோக்கார்ர் வந்து நிற்க…
“உங்க பெயர்…” என்ற குருமூர்த்தியின் கேள்விக்கு…
“சந்திரன் சார்…” என்று பதில் அளித்தார்…
கீதாவை காட்டி… “இவரை உங்களுக்கு நியாபகம் இருக்கா…?” என்று கேட்ட்தற்க்கு..
“ம் நல்லா நியாபகம் இருக்கு சார்…” என்ற சந்திரனின் பதிலில் குருமூர்த்தி..
“அது எப்படி மிஸ்டர் சந்திரன் உங்க ஆட்டோவில் எத்தனையோ பேர் ஏறுவாங்க..  அப்படி இருக்கும் போது  ரொம்ப நாள் முன் ஒரே ஒரு தடவை உங்க ஆட்டோவில் ஏறிய இந்த பெண்ணை நியாபகம் இருக்கு என்று சொல்றிங்க…?” என்ற குருமூர்த்தியின் மீண்டும் மீண்டுமான கேள்விக்கு சந்திரனும் அசராது பதில் அளித்தார்…
“எத்தனையே பேர் ஏறுவாங்க சார்.. ஆனா அர்த்த ராத்திரியில் கையில் பணம் இல்லாது ஏறிய பெண் இவங்க தான் சார்.” என்று கீதாவின் பக்கம் கை காட்டி சொன்னார்..
பின் தொடர்ந்து…
“அதுவும் ஏறியதில் இருந்து அழுதுட்டே வந்து இருந்தாங்க… எனக்கும் மூன்று தங்கச்சி இருக்கு சார்.. கழுத்தில் தாலி அர்த்த ராத்திரியில் அழுகை…”
நான்  அவங்க கிட்ட… “ ஏன்மா அழுவுற…?” கேட்டதற்க்கு…
“ அன்னைக்கும் தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாதது விலங்கு  மட்டும் இல்லே அண்ணே..சில மனுஷ ஜென்மங்களும் தான் இருக்கு” என்று சொன்னாங்க..
அவங்களுக்கு வேணா இது போல் புதுசா இருக்கலாம்.. ஆனா வெளியே சுத்துற என்னை போல இருக்கிறவங்க..இது போல எத்தனையோ பாத்து இருக்கோம்.
அதனால அவங்க சொன்ன விசயம் எனக்கு ஒரளவுக்கு புரிஞ்சி போயிடுச்சி..அப்புறம் அவங்க சொன்ன வீட்டுக்கு முன்னே நிறுத்திட்டு காசு இல்லேன்னு சொன்னதற்க்கு பரவாயில்லேன்னு சொல்லிட்டு, அவங்க வீட்டுக்குள் நுழையிற வரை நான் பார்த்துட்டு தான் சார் போனேன்.” என்று சொன்னதும்..
திரும்புவும் ஜெய்யின் வக்கீலிடம்..
“நீங்க  ஏதாவது கேட்பது என்றால் கேட்கலாம்..”
அவர் என்ன கேட்க முடியும்… “இல்லை…” என்று இது வரை சொன்ன பதிலேயே தான் அந்த வக்கீல் படித்தார்…
பின் குருமூர்த்தி நீதிபதியிடம்..என் கடைசி சாட்சி… ஜெய் வீட்டில் இப்போதைய வேலை செய்யும் பெண் செல்வி அழைக்கிறேன் என்று சொல்லி நீதிபதியின் அனுமதி பெற்று செல்வியை அழைத்தான் குருமூர்த்தி…
செல்வி வந்த உடன் குருமூர்த்தி… ஜெய்யை கை காட்டி..
“நீங்க இவர் வீட்டில் தானே வேலை பார்க்கிறிங்க…?” என்ற குருமூர்த்தியின் கேள்விக்கு..
செல்வி..” ஆமாம்.” என்று சொல்ல…
கீதாவை காட்டி.. “இவங்கல தெரியுமா…?” என்று திரும்பவும் குருமூர்த்தி செல்வியிடம் கேள்வியை  எழுப்பினான்
.செல்வி… “தெரியும் சார்..” ஜெய்யை காட்டி… “இவங்க சம்சாரம்…” என்று உறவு முறையோடு விளக்கினார் செல்வி…
குருமூர்த்தி… “இப்போது அந்த உறவு முறையில் தான் பிரச்சனை..அது தெரியும் தானே…” என்று கேட்ட்தற்க்கு..
செல்வி தயங்கிய வாறு… “தெரியும் சார்…” என்று வார்த்தையை  மென்று முழுங்க…
“தோ பாரும்மா உங்களுக்கு முன்ன வேலை செய்தவங்க கொஞ்ச நேரம் முன்ன சொன்னதை கேட்டு இருப்பிங்க.. அவங்க போன பின் இந்த இரண்டு வருடமா நீங்க தான் அங்கு வேலை பார்க்குறிங்க.. ஒரு வீட்டில் வேலைக்காரங்க கண்ணுக்கு தப்பாது எந்த விசயமும் நடக்க முடியாது..
அதோடு பெண்களுக்கு என்று ஒரு உள் உணர்வு இருக்கு..ஏதோ வரை முறைக்கு மீறி நடந்தா.. சம் திங் ராங் என்பது போல..அது போல உங்களுக்கு அந்த வீட்டில் நடந்ததில் ஏதாவது வித்தியாசமா தெரிஞ்சதா…” என்று குருமூர்த்தி கேட்கவும்..
செல்வி கொஞ்சம் தயங்கிய வாறு…
கீதாவை காட்டி.. “இவங்களுக்கு தெரியாம இவங்களுக்கு ஒரு மாத்திரை கொடுப்பாங்க…” என்ற செல்வியின் பேச்சு கீதாவுக்கே புதியது.
அதிர்ந்து போய் செல்வியை பார்க்க..செல்வியோ தொடர்ந்து…
“இந்த குழாய் மாதிரி ப்ளாஸ்ட்டிக் டூயூபுல சத்து குறைவா இருக்குறவங்களுக்கு மாத்திரை இருக்குமே..அதை தினம் அந்த பொண்ணுக்கு அந்த அம்மா…” என்று சொல்லி பத்ம ப்ரியா பக்கம் கை காட்டிய செல்வி..
“கொடுப்பாங்க..” என்று சொல்ல..
“சத்து மாத்திரை தானே..அது ஏன் கீதாவுக்கு தெரியாம கொடுக்கனும்.” என்று குருமூர்த்தி கேட்டான்.
அதற்க்கு செல்வி… 
“ சத்து மாத்திரைக்குள் கருத்தடை மாத்திரையை பொடி பண்ணி அதில் போட்டு கொடுப்பாங்க சார்.” என்ற செல்வியின் பேச்சில் அங்கு இருந்த அனைவரும் வாய் அடைத்து தான் போய் விட்டனர்…
குருமூர்த்தி  அனைவருக்கும் இன்னும் தெளிவாக்கும் பொருட்டு.
“நீங்க சொல்வது புரியல..” என்று செல்வியை விளக்கமாக சொல்ல  கேட்டான்..
“அது தான் சார் அந்த சத்து மாத்திரை ட்யூப் தானே சார்..அது இரண்டு  பக்கமும் குப்பி போல தானே சார் இருக்கும்.. அதை திறந்து அதில் இருக்கும் மாத்திரி தூளை கொட்டிட்டு… கருத்தடை மாத்திரையை தூள் பண்ணி வெச்சி இருக்கிறத அதில் நிறப்பி அந்த அம்மாவுக்கு கொடுப்பாங்க சார்…” என்று  செல்வி விளக்கி சொன்னாள்.
“அவங்க அப்படி செய்றாங்கன்னு உங்களுக்கு எப்படி தெரியும் …?” என்று குருமூர்த்தி கேட்டதற்க்கு..
“ நான் அந்த வீட்டில் காலையில் சாமன் விளக்கி  வீட்டை பெறுக்கி . துணி வாஷிங் மெஷினில் போட்டு கொடுத்தா அதை காய வெச்சிட்டு போயிடுவேன் சார்.
சாயங்காலம் காய வெச்ச துணிய மடிச்சி இருக்குற சாமன துலக்கிட்டு, வீடு குப்பையா இருந்தா பெறுக்குவேன். இல்லேன்னா அப்படியே போயிடுவேன்.
ஒரு வாட்டி சாயங்காலம் வேலை செஞ்சிட்டு, என் செல்லை அந்த வீட்டில் மறந்து விட்டுட்டு அடுத்த  வீட்டுக்கு வேலை பார்க்க போயிட்டேன் சார்//
அந்த வீட்டில் வேலை பார்க்கும் போதே என் செல் இவங்க வீட்டில் விட்டது நியாபகத்தில் வந்துடுச்சி.. சரி ஒரே முட்டா வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு போகும் போது எடுத்துட்டு போகலாம் என்று எல்லா வீட்டிலும் வேலை முடிக்க ஏழு மணி ஆயிடுச்சி சார்.” என்று சொல்லி தன் பேச்சை நிறுத்திய செல்வி..
பின் தயங்கிய வாறு…
“நான் போகும் போது ஹாலில் யாரும் இல்ல சார்..எனக்கு நல்லா நியாபகம் இருக்கு என் செல்லை சாமன் துலக்கும் போது தான் ஷிங் பக்கத்துல ஒரு மேடை இருக்கும் அதுல தான் நான் எப்போவும் வைப்பேன்.
அன்னைக்கும் நான் அங்கு தான் வெச்சேன். சரி மத்தவங்கள எதுக்கு தொந்தரவு  செய்யனும் நாமலே போய் எடுத்துட்டு போயிடலாம் என்று சமையல் கட்டுக்கு போனேன் சார். அங்கு ..”
ஜெய்யை காண்பித்து … “இவரும்.” பத்ம ப்ரியாவை காண்பித்து இவங்களும் இருந்தாங்க சார்..”
“அது அது என்று இழுத்த செல்வி பின்… அவங்க இரண்டு பேரும் கொஞ்சம் தூரமா நின்னு இருந்து இருந்தா நான் சத்தம் போட்டுட்டு போய் இருப்பேன் சார்..
ஆனா அவங்க இரண்டு பேரும் ரொம்ப பக்கத்துல பக்கத்துல நெருக்கமா நின்னுட்டு இருந்தாங்க சார்… அவங்க இரண்டு பேர் உறவு என்ன என்று எனக்கு தெரியும்..
இதே அவர் அண்ணனா இருந்தா  அப்படி ஒளிஞ்சி  பார்க்க தோனி இருக்காது… இவங்க இரண்டு பேரும் என்பதால சத்தம் போடாம என்ன பண்றாங்கன்னு பார்த்தேன் சார்..
அப்போ ஒரு அட்டையில் இருக்கும் மாத்திரை எல்லாம் ஒரு பேப்பரில் கொட்டி ஜெய் அய்யா தூள் பண்ணிட்டு இருந்தாங்க.. இந்த அம்மா சத்து  மாத்திரையில் இருக்கும் மருந்தை கொட்டிட்டு இருந்தாங்க..
அப்புறம் ஜெய் அய்யா தூள் பண்ண மாத்திரையை இரண்டு பேரும் சேர்ந்து நிறப்பிட்டு..அப்பறம் கட்டி பிடிச்சிக்கிட்டாங்க சார்… அதுக்கு அப்புறம் செல்லை அப்புறம் எடுத்துக்கலாமுன்னு அங்கு இருந்து ஓடி போயிட்டேன் சார்.” என்று குருமூர்த்திக்கு செல்வி விளக்கம் அளித்தார்…
“அது கருத்தடை மாத்திரை என்று எப்படி உனக்கு தெரியும்…?” என்று குருமூர்த்தி திரும்ப கேள்வி கேட்க..
செல்வியும் அசராது…
“நான் மறுநாள் வேலைக்கு போனேன்..அப்போ குப்பை கூடையில் இருக்க அந்த அட்டையை எடுத்து பார்த்தேன் சார்..அது கருத்தடை மாத்திரை தான் எனக்கு நல்லா தெரியும்.” என்று இது வரை சத்தமாக பேசிக் கொண்டு இருந்தவள் பின் மெல்ல..
“அதை நான் போடுறேன் சார்..அது தான் எனக்கு நல்லா தெரியும்.என்று சொன்னேன்…” என்று செல்வி எவ்வளவு சொல்ல முடியுமோ அனைத்தையும் விளக்கி விட்டு தான் அங்கு இருந்து சென்றார்..
இப்போது குருமூர்த்தி ஜெய்யின் வக்கீல் பக்கம் தன் பார்வையை கூட திருப்பவில்லை. எப்படியும் அவர் எழுந்திருக்க  போவது கிடையாது என்று நினைத்த குருமூர்த்தி நீதிபதியை  பார்த்து..
“என் கட்சிக்காரர் கீதாவிடம் உண்மை சொல்லி தான் திருமணம் செய்து இருந்தால், கருத்தடை மாத்திரை அனைவரும் இப்போது குழந்தை வேண்டாம் என்று உபயோகிப்பது தான். ஆனால் அதை மனைவியின் அனுமதியோடு தான் கொடுப்பார்கள்.
இப்படி சத்து மாத்திரையில் பில் பண்ணி கொடுப்பதிலேயே இதையே சொல்லாதவர் எந்த பெண்ணும்  ஏற்றுக் கொள்ள கூடாத அந்த உறவை ஏற்று இவரை திருமணம் செய்துக் கொண்டார் என்று சொல்வது அப்பட்டமான பச்சை பொய் என்று தெரியலையா யூவர் ஹனர்…
அம்மா இறந்தாலும் பரவாயில்லை… எனக்கு அந்த தகாத உறவு தான் வேண்டும் என்றால், ஜெய் ஏன் என் கட்சிக்காரரை ஏமாற்றி திருமணம் செய்ய வேண்டும்,…?
ஒழுக்கமாக வாழ்ந்த ஒரு பெண்ணுக்கு இது எவ்வளவு மன வேதனையை கொடுக்க கூடியது… பணம் இருந்தால் போதும், ஒரு பெண்ணை எப்படி என்றாலும் ஏமாற்றி விடலாம்…
நம் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் இது போல் இருக்கும் உறவை நாம் தண்டிக்கா விட்டால், கீதா இங்கு வந்ததிற்க்கு அர்த்தமே இல்லாது போய் விடும்..
இது சாதாரண விவாகரத்து வழக்காய் பார்க்காது… ஒழுக்கம் தவறிய நம் கலாசாரத்தை சீர் குலைக்கும் ஒரு செயலை நினைத்து என் கட்சிக்காரருக்கு விவாகரத்தோடு எதை வைத்து தன்னிடம் பணம் இருக்கு எது என்றாலும் செய்து விடலாம் என்று  பணம் திமிரில் செய்த அந்த பணத்தில் அதாவது ஜெய்யிடம் இருக்கும் பாதி சொத்தை என் கட்சிக்காரருக்கு ஜீவன்மசமாய் விவாகரத்தோடு இதையும் தர வேண்டும்.என்று மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.” என்று ஒரே மூச்சில் தான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு குருமூர்த்தி தன் இருக்கையில் அமர்ந்தான்..
நீதி பதி என்ன தீர்ப்பு வழங்குவார்..பார்க்கலாம்..
இந்த கோர்ட் சீன் இந்த அத்தியாயத்தில் முடித்து விட்டு அடுத்த அத்தியாயத்தில் கீதா கிரிதரன்.. அடுத்து அடுத்த அத்தியாயத்தில் குருமூர்த்தி பத்மினி என்று கொடுத்து முடிக்கனும் என்று நினைத்தேன்..எங்கு இந்த கோர்ட் சீன் என்னை இழு இழு என்று இழுத்து விட்ட்து என்று தான் சொல்ல வேன்டும் வாசகர்களே…
 

Advertisement