Advertisement

இந்த காரணத்தை ஜெய் மறுப்பான் என்று தெரிந்தே குருமூர்த்தி தன் வாதத்தை முன் வைத்தான்.
“இல்ல கண்டிப்பா அப்படி இல்ல.. தெரிந்தால் பிரச்சனை ஆகி விடும். அதனால  ஆண் வாரிசு இல்லாத வசதியிலும்,   அழகிலும்  குறைந்த… கீதாவை நான் திருமணம் செய்ய நினைக்க வில்லை.” என்று குருமூர்த்தி சொல்லாத  அழகு என்ற வார்த்தையும் கூட சேர்த்து சொன்ன ஜெய். அதை சொல்லும் போது கீதாவை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தான்.
அதை கேட்ட குருமூர்த்திக்கே கோபம் வந்தது தான்.  ஆனால் இந்த இடம் தன் கோபத்தை கைய்யால் காட்ட வேண்டிய இடம் அல்ல..வாதத்தால் அவனை மடக்க வேண்டிய இடம் என்று நினைத்து அமைதி காத்தான்.
ஆனால் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த கிரிதரனுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது.. அந்த கோபம் ஜெய்யின் மீதோடு தன் மீதே தான் வந்தது எனலாம்..
நான் மட்டும் சொல்ல வேண்டிய நேரத்தில் என் காதலை சொல்லி இருந்தால், கீதா இது போல் கேவலமான இவனிடம் சிக்கி இருக்க மாட்டாள்.
அதே  போல் பார்க்க கூடாத காட்சி எல்லாம் பார்த்து..இதோ கேட்க கூடாத வார்த்தைகள் எல்லாம் கேட்டுக் கொண்டு கண் கலங்கி நிற்க  வேண்டியது இல்லாது போய் இருக்குமே..
ஆம் அவள் கண் கலங்கி தான் இருந்தாள். எந்த பெண்ணுக்கும் நீ அழகில் குறைந்தவள் என்று நேருக்கு நேர் சொல்ல கேட்டால், அந்த வார்த்தை அவள் மனதை  பலமாக தாக்க தான் செய்யும்.
அதுவும் இத்தனை பேர் சூழ கேட்டால், அதோடு கொடுமை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.. அதுவும் அவன் அந்த வார்த்தையை சொல்லும் போது தன்னை பார்த்த அந்த நக்கல் பார்வையில், உன் தலையில் இடி விழ கூடாதா…? என்று தான் நினைக்க தோன்றியது..
பத்தினி பெண்கள் நினைத்தால் நடக்குமாமே..தெய்வமே நீ இருப்பது உண்மையானால் இப்போது நான் நினைக்கிறேன் என் மனதை பொசுக்கிய இவனை நீ பொசுக்கி விட வேண்டும்  என்று அந்த கடவுளிடம் வேண்டிக் கொண்டு கண் மூடியவளின் விழிகளில்  இருந்து கண்ணீர் கொட்டியது..
அதை பார்த்து பத்மினி கிரிதரனின் மனது துடித்தது என்றால், ஜெய்யுக்கு மனது துள்ளியது என்று தான் சொல்ல வேண்டும். 
யார் கிட்ட…? உனக்கு நான் கிடைத்தது வரம் போல..உன்  அழகுக்கும் உன் வசதிக்கும் நான் கிடைத்தது எல்லாம் பெரிய விசயம்.. ஏதோ ஒன்று அட்ஜஸ்ட் பண்ணிட்டு போறத விட்டுட்டு விவாகரத்தா கேட்கிற..
சரி நிறம் கம்மியா இருந்தாலும், கும்முன்னு இருக்கா.. பரவாயில்ல நினச்சா… என் கிட்ட உன் ஆட்டத்தை காட்டுறியா…? ப்ரியா முன்ன நீ நிற்க கூட தகுதி இல்லாதவள்… 
 என்னையும்  அண்ணனையும்  அசிங்கப்படுத்த பார்த்த பார்த்தியா..உன்னை அசிங்கப்படுத்தாம விட மாட்டேன்டீ என்று மனதில் நினைத்துக் கொண்டே அவளை ஒரு பார்வை பார்த்த ஜெய்..
நீதிபதியை நோக்கி..
“நான் கீதா கிட்ட எல்லா உண்மையும் சொல்லி தான் அவளை கல்யாணம் செய்துக்கிட்டேன்…” என்று என்ன என்ன அவனின் திட்டம் என்று காத்திருந்த குருமூர்த்தி சத்தியமாய் இப்படி சொல்வான் என்று அவன் எதிர் பார்க்கவில்லை..
பெண் வாய் திறக்க கூடாது என்றால் ஆண்கள் கையில் எடுக்கும் ஆயுதம் அவர்களின் ஒழுக்கத்தை தரம் குறைத்து பேசுவதே ஆகும்…ஆனால் இவன் தான் நினைத்ததிற்க்கு எதிர் பதமாய்… கீதாவின் நேர்மை மீது அதாவது இது அடுத்து அவன் என்ன சொல்ல வருவான் என்று அவன் பாதையை சரியாக ஊகித்தவனாய்..
அடுத்து தான் என்ன பேச வேண்டும் என்ற முடிவோடு ஜெய்யை பார்த்தான்.. குருமூர்த்தியின் அந்த  பார்வையின் தீவிரம்..ஜெய்யின் மனதில் ஏதோ அபாய மணி அடித்தது…
இருந்தும் ஜெய் தொடர்ந்து…
“ அண்ணாவின் நிலையை விளக்கி அவர்களின் குழந்தைக்கு நான் தான் தந்தை… உறவு முறையில் பேச்சை கேட்க முடியாது தான் உன்னை பார்க்க வந்தேன்..நீயே என்னை பிடிக்கவில்லை என்று சொல்..” என்று நான் கீதாவிடம் சொன்னேன்..
“நான் அவளிடம் தனியாக பேசியது இந்த இடத்தை முடித்து வைத்த தரகர் அதோ பார்வையாளர்கள் இருக்கு இடத்தில் இருக்கிறார். கூப்பிட்டு கேளுங்க…” என்று பேசி விட்டு கீதாவை பார்த்தான்.
கீதா இதற்க்கு என்ன…? என்று பதில் அளிப்பாள்.. பேசினான் தான் தனியாக பேசினான் தான்.. பெயர்.. படிப்பு.. பிடித்து இருக்கா../? இது தான் அவன் கேள்வி..அதற்க்கு நான் பதில் அளித்தேன்..அதுவும் எப்போதும் போல அப்போதும் என் கை கால் நடுங்க.. நான்  சொன்ன பதிலில்..
அவன் பேசிய பேச்சான… “எனக்கு உன்னோட இந்த பயந்த சுபாவம் தான் உன்னை கல்யாணம் செய்ய காரணம்..” என்று சொல்லி விட்டு சென்றதற்க்கான அர்த்தம் அவளுக்கு அப்போது தெரியவில்லை என்றாலும், பின் தெரிந்து விட்டது தான்..
இப்போது தரகர் வந்து என்ன சொல்வார்…? தனியாக பேசினார்கள் என்று..ஆனால் என்ன பேசினோம்  என்று என்னையும் அவனையும் தவிர வேறு யாருக்கும் தெரியாதே என்று நினைக்கும் வேளயில்..
கீதா நினைத்தது போல தான் தரகர் வந்து…
ஆமாம் மாப்பிள்ளை தான் நான் பெண்ணிடம் தனியா பேசனும் என்று கேட்டார். அவங்ளும் பேசினாங்க ” என்று  கேட்ட கேள்வியோடு கேட்காத கேள்விக்கும் பதிலாய்..
“ ஆனாலும் எனக்கு இது போல் எல்லாம் தெரியாது.. அதுவும் நான் இதை கேட்கவே அசிங்கமா இருக்கு… எனக்கு உண்மை தெரிஞ்சி இருந்தா அந்த பையனுக்கு நான் இடமே  பார்த்து இருக்க மாட்டேன்.” என்று வருத்ததுடன் சொல்லி விட்டு சென்றார்.
“ நான் சொன்னதற்க்கு கீதா எனக்கு ஐந்து வருடமா இடம் பார்த்துட்டு இருக்காங்க.. முடியல.. பரவாயில்ல..அதாவது வசதியையும், என் அழகையும்  பார்த்துட்டு என்னை கல்யாணம் செய்து கிட்டா…
பின் அந்த வசதி மொத்தமும் தனக்கே  தனக்கு வேண்டும் என்று  எங்களுக்கு மூன்று வீடு இருக்கு. எல்லாம் என் பெயரில் எழுதனும் சொன்னா.. இல்லேன்னா உங்க விசயம் வெளியில் கொண்டு வந்து விவாகரத்து என்ற பெயரில் மொத்த சொத்தையும் நான் வாங்கிடுவேன் என்று சொன்னா..
நான் கூட  இதில் என் மட்டுமான விசயம் கிடையாது. இது என் அண்ணன் சம்மந்தப்பட்டது.. இந்த விசயம் வெளியில் தெரிந்தால் அசிங்கம்…
ஆம் நான் செய்தது அசிங்கம் தான். நான் இல்லேன்னு சொல்லலே..ஆனா நான் ஏமாத்தி எல்லாம் கல்யாணம் செய்யல உண்மை சொல்லி தான் கீதா கழுத்தில் தாலி கட்டினேன். 
ஆனா கீதா பக்காவா ப்ளான் போட்டு கல்யாணம் செய்து… எல்லா சொத்தையும் வாங்கிக்க பார்த்தா… எப்படி எப்படி முடியும்.. அப்போ கூட ஒரு வீடு எழுதி வைக்கிறேன் என்று சொன்னதற்க்கு எப்படி எங்கு போய் வாங்கனும் என்று எனக்கு நல்லாவே தெரியும் என்று சொல்லிட்டு இதோ என்னை  இங்கு கொண்டு வந்து நிறுத்திட்டா….” என்று சொன்னவனின் பேச்சை கேட்டு குருமூர்த்தியே அசந்து விட்டான் என்றால் பாருங்க..
அவன் நினைத்தது இது தான்.  இவன் மட்டும் வக்கீலுக்கு படித்து இருந்தால் நம்ம பொழப்பில் மண்ணை அள்ளி கண்டிப்பாக போட்டு இருப்பான் என்று நினைத்தவனாய் எழுந்து நின்றவன்…
“அவ்வளவு தானே சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லி முடிச்சிட்டிங்களா…” என்று குருமூர்த்தி ஜெய்யை பார்த்து கேட்டான்..
“முடித்து விட்டேன்.” என்று ஜெய் சொல்லும் போதே, இதை  வைத்து  இவனால் என்ன செய்ய முடியும்…? என்று அவன் யோசித்து  முடிப்பதற்க்குள்..
குருமூர்த்தி..
“உங்க அம்மா எப்போ இறந்தாங்க….?” என்ற  குருமூர்த்தியின் கேள்விக்கு..ஜெய் பதில் அளிக்காது..
தன் வக்கீலை ஜெய் பார்த்தான். கொடுத்த காசுக்கு இப்போவாவது ஏதாவது பேசுடா என்பது போல்…
அப்போது தான் நான் ஜெய்யுக்காக வாதாடும் வக்கீல் என்று தன் கருப்பு அங்கியை சரி செய்த வாறு எழுந்து நின்றவன்.. குருமூர்த்தியை  பார்த்து…
“வழக்குக்கு சமந்தம் இல்லாத இந்த கேள்வி எதற்க்கு…?” என்று வீரமாய் தான் பேச்சை தொடங்க தான் எதிர்கட்சி வக்கீல் நினைத்தார்.
ஆனால் அதே நீதிமன்றத்தில்  அமர்ந்து இருக்கும்  அந்த மரத்தடி வக்கீல்  குருமூர்த்தியை பற்றி நன்கு தெரியும் என்பதால்..
திக்கி திணறி…
“அ..ம்..மா போயிட்டாங்க..அவ..ங்களு..க்கு வயசு..ஆகும்ல..அதா..ன் இப்போ…” எதுக்கு…? என்பதை கூட முடிக்காது அமர்ந்து விட்டார் ஜெய் தனக்காக வாதட நியாமித்த வக்கீல்..
பின் என்ன இவன் உண்மை சொல்லி தான் தனக்கான வக்கீலை தேடினான்.. உண்மை சொன்னால் தானே முன்னவே அதுக்கு உண்டான மாற்று ஏற்ப்பாட்டை ஏதாவது செய்ய முடியும்..அதனால்..
ஆனால் இவன் கதை கேட்டு  கேசை எடுக்காத வக்கீலுக்கு நடுவில், ஒரு சிலர் பணத்துக்காக வாதடுபவர்கள் வாதாடலாமே என்று எதிர் தரப்பு வக்கீல் யார்…? என்ற கேள்விக்கு பதில் கிடைத்ததும்..
அவனா..? வாயை திறந்தால் என் மொத்த குடுபத்தையும்  இழுத்து விடுவானே  என்று பயந்து ஒதுங்கி விட்டனர்.. பின் தேடி தேடி கிடைத்தவர் தான் இந்த மரத்தடி வக்கீல்.
அந்த மரத்தடி வக்கீல் பேசிய திக்கி திணறல் பேச்சுக்கு குருமூர்த்தி…
“எப்போ இறந்தாங்க… என்று கேட்டதற்க்கே இப்படி திக்குதே..எப்படி இறந்தாங்க…? என்று கேட்டால்… என்று எதிர் கட்சி வக்கீலை பார்த்து கேட்ட குருமூர்த்தி..
ஜெய்யை பார்த்து…
“உங்க லாயருக்கே தெரியாது போல உங்க அம்மா எப்படி இறந்தாங்க…?என்று..
ஆம் நிஜமாகவே  அவங்க எப்படி இறந்தாங்க என்று எதிர் கட்சி லாயர் என்ன கீதாவுக்கே தெரியாது தான் முழித்துக் கொண்டு இருந்தாள்…
 
 

Advertisement