Advertisement

அத்தியாயம்…18
நீதிபதி உங்கள் வாதத்தை தொடங்கலாம் என்றதும் குருமூர்த்தி..
“என் கட்சிக்காரர் கீதாவுக்கு  அவர் கணவரிடம் இருந்து விவாகரத்தை கேட்கிறார்..காரணம் அவருக்கும் அவர் அண்ணன் மனைவிக்கும் தகாத உறவு இருப்பதே காரணம்..” என்று சொல்லி  அதற்க்கு தான் திரட்டிய..
கெளதமின் மருத்துவ பரிசோதனையை சமர்பித்தவன் நீதிபதி அதை படிக்கும் வரை அவகாசம்  கொடுத்து விட்டு…
“இப்போ அவங்க அண்ணனுக்கு ஒரு குழந்தை இருக்கிறது… அந்த குழந்தை இவருக்கு பிறந்தது. அதை அவர் மறுத்தால், அதற்க்கு உண்டான  மருத்துவ பரிசோதனை செய்து அதையும்   நான் நிரூபிக்க தயாராய் இருக்கிறேன்.” என்று தன் வாதத்தை முன் வைத்து விட்டு காத்திருந்தான். தன் வண்ணமயமான வார்த்தைகளை கோர்த்து ஜெய்யின் கழுத்தில் மாலையை சூட..
ஆனால் பாருங்க.. குருமூர்த்தியின் ஆசையில் மட்டும் அல்லாது நம் அனைவரின் ஆசையையும் குழி தோண்டி புதைக்கும் வகையாக…
“அக்குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை எல்லாம் தேவையில்லை.. அந்த குழந்தை எனக்கு பிறந்தது தான்..” என்று ஜெய் ஒத்துக் கொண்டான்..
அவனின் பேச்சில் குருமூர்த்தி தன் நெற்றியை சுருக்கிய வாறே அவனை பார்த்த போது ஜெய் அவனை பார்த்து ஒரு மார்க்கமாய் சிரித்து வைக்க..
நானே கிரிமினல் லாயர் இவன் என்னோடு கிரிமினலா இருப்பான் போலவே… டேய் நீ எனக்கு ரொம்ப டப் கொடுக்கிறடா… இருக்கு இதுக்கு எல்லாம் மொத்தமா சேர்த்து உனக்கு இருக்குடா என்று குருமூர்த்தி மனதில் நினைத்துக் கொண்டே ..
கீதாவையும், பத்மினியையும் பார்த்தான். இருவரின் முகத்திலும், குழப்பம், பயம் இரண்டும் கலந்து  ஒரு வித பீதியோடு தன்னை பார்க்கவும், சைகையில் பார்க்கலாம் நான் இருக்கேன் என்று அவர்களுக்கு தைரியம் சொன்ன குருமூர்த்தியின் பார்வை இப்போது ஜெய்யிடம் வந்து நின்றது..
நீதிபதி இப்போது ஜெய்யை பார்த்து..
“இது தப்பு இல்லையா…?” என்று கேட்டார்.
“தப்பு தான்.  இல்லை என்று சொல்லலே… ஆனால் இந்த தப்பின் ஆரம்பம் தெரியாது என் அண்ணாவுக்கு திருமணம் செய்தது தான். அவர் பிரச்சனை அவருக்கே தெரியாது.. பத்து வருடம் முன் அண்ணாவுக்கு அம்மை வார்த்தது அப்போது எங்க  அம்மா இருந்தாங்க..
அதனால அண்ணாவை முழுக்க முழுக்க பார்த்துக்  கொண்ட்து அம்மா தான். அப்போ நான் படித்துக் கொண்டு இருந்தேன். அண்ணா அப்போது தான் வங்கியில் பணியில் அமர்ந்த புதிது…
 எல்லோரும் செய்வது போல தான் அம்மை சரியான பின் அவர் வங்கிக்கு போக தொடங்கி விட்டார்…  அம்மா முதல் ஆண் மகன் பார்த்து பார்த்து அண்ணாவுக்கு தேர்வு செய்து பெண் எடுத்தாங்க..
பின் ஒரு வாரம் ஹனி மூன் போய் வந்த பின் அண்ணன் முகமும் சரியில்ல..அண்ணியின்  முகமும் சரியில்ல… கல்யாணம் ஆன புதியது அவங்களுக்குள்  எவ்வளவோ பர்சனல் இருக்கும் என்று நினைத்து நான் எதையும் அப்போது கண்டுக்கல..
அம்மா கூட என் கிட்ட… “ என்ன அவங்க ஒரு மாதிரியா இருக்காங்க…?” என்று கேட்டாங்க..
அதற்க்கு நான்… “ தெரியலேம்மா.. நீங்க எதுவும் கேட்டுக்காதிங்க… பார்க்கலாம்.” என்று சொல்லிட்டேன்..
எனக்கு அப்போது ஐடியில் வேலை கிடைத்த புதிது. நான் அதில் மூழ்கி இருந்த போது தான் அண்ணா சூசைட் அட்டம்ட் பண்ணிட்டாங்கன்னு அம்மாவிடம் இருந்து  போன் வந்தது.
 எனக்கு  அப்போ சுத்தமா புரியல.. என்ன காரணம் என் அண்ணா கிட்ட பேசிய பின் தான் எனக்கு தெரிஞ்சது..அதாவது ஹனிமூன் போன இடத்தில் அண்ணாவின் குறை..
அது தான் ஹனிமூனில்  இருந்து வீட்டுக்கு வந்த போது அண்ணா அண்ணியின் முகம் ஒரு மாதிரி இருந்தது.. பின் அண்ணா அன்று மாலையே  ஒரு மருத்துவ சோதனை செஞ்சதில்  கிடைத்த  ரிசல்ட் அண்ணாவால் எப்போதும் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாது என்பது தான்.
நிஜமா அண்ணாவுக்கு இது முன்பே தெரிஞ்சி  இருந்தா கல்யாணமே  பண்ணி இருக்க மாட்டாங்க.. அது தான் இப்படி ஒரு பெண்ணோட வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்னு தான் அண்ணா தற்கொலைக்கு முயன்றது..
அப்போ அண்ணா என் கிட்ட சொன்னது இது தான் ஒரு குழந்தைகு தந்தை ஆக முடியாதுன்னு சொன்னா கூட தத்து எடுத்துக்கலாம்.. ஆனா இது.. அதுவும் இது வெளியில் தெரிஞ்சா எனக்கு எவ்வளவு அவமானம் இது வேறு அண்ணாவுக்கு ரொம்ப கவலை கொடுத்தது…” என்று சொன்ன ஜெய்யின் பேச்சில் இப்போதும் கொஞ்சம் தயக்கம் ஏற்ப்பட்டது.
 தான் கலெக்ட் செய்த அத்தனை ஆவணங்களையும் தன் முன் வைத்திருந்த குருமூர்த்தி இப்போது ஜெய்யை பார்த்தான்.. இதோ தன் முன் இருக்கும் தகவல்களும் அவன் சொன்னதும் அனைத்தும் சரியே..
கெளதம் ஏமாற்றி எல்லாம் திருமணம் செய்யவில்லை. திருமணம் செய்த பின் தான் அவன் குறையே அவனுக்கு தெரிந்து இருக்கிறது என்பது உண்மையே..இதே தான் அந்த மருத்துவரும் குருமூர்த்தியிடம் சொன்னது..
குருமூர்த்தி  கூட.. “ அது எப்படி…? தெரியாம போகும்…” என்று தன் சந்தேகத்தை கேட்டான்.
அதற்க்கு அந்த மருத்துவர்.. “ஒரு சிலர் சுய இன்பத்தில் ஈடுபவர். அவர்கள் போல் இருந்தால் கண்டிப்பாக தெரிந்து இருக்கும். ஆனால் இவர் அப்படி இல்லை போல்..
ஒரு சிலருக்கு செக்ஸ் பற்றிய அறிவு முன்னவே தெரிந்து இருந்தால், ஒரு சில காட்சிகள்.. ஒரு சிலதை படிக்க நேர்ந்தால் , இப்படி அவர்களுக்கு தெரிய நேரும்..
இவர் அது போல் பார்த்தது இல்லையா..? இல்லை படித்தது இல்லையா..? இல்லை அவரால் அதை சரியாக இனம் காண முடியவில்லையா..? என்று தெரியல..ஆனா ஒன்று மட்டும் நிச்சயம்..அவரால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாது என்று தெரிந்தது அவரின்  திருமணத்திற்க்கு பின் தான்..” என்று அந்த மருத்துவர் சொன்னார்..
குருமூர்த்தி சேகரித்த தகவல்களை தான் ஜெய் சொல்லிக் கொண்டு இருந்தான்.. அவன் சொல்லும் உண்மையில் கடைசியாக  தங்களுக்கு ஏதோ ஆப்பு வைக்க போகிறான்  என்று குருமூர்த்தி நினைத்துக் கொண்டே அவன் ஜெய்யின் பேச்சை கேட்டிருந்தான்.
ஜெய் பேச்சை நிறுத்தவும், நீதிபதி குருமூர்த்தியிடம்..
“உங்களுக்கு அவர் சொன்னதில் இருந்து ஏதாவது  கேள்வி கேட்க  வேண்டுமா…?” என்று கேட்டதற்க்கு,
குருமூர்த்தி எழுந்து நின்று… “தேவையில்லை…” என்று மறுத்து விட்டு தான் அமர்ந்திருந்த இருக்கையில் மீண்டும் அமர்ந்துக் கொண்டான்..
அப்போது ஜெய்யின் முகத்தில் ஒரு தெனவெட்டான சிரிப்பை குருமூர்த்தியால் காண முடிந்தது.. 
அந்த புன்னகைக்கு பதிலாய் குருமூர்த்தியிடம் மிக மிக தெனவெட்டாக ஜெய்யை பார்த்து புன்னகை புரிந்தான்.
குருமூர்த்தியின் புன்னகையை பார்த்து இப்போது குழம்பி போவது ஜெய்யின் முறையானது..
நீதிபதி ஜெய்யிடம்… “மேல சொல்லுங்க…” என்று சொன்னார்..
ஜெய் தயங்கி தயங்கி…  “அண்ணிக்கு மூன்று தங்கைங்க..” என்று ஜெய் தன் பேச்சை தொடர..
இவ்வளவு நேரமும் ஜெய் பேசுவதை எந்த வித தடையும் சொல்லாது கேட்டுக் கொண்டு இருந்தவன்.. எழுந்து நின்று… 
“அப்ஜெக்ஷன் யூவர் ஆனர்… இனி அவர் வாயில் இருந்து மிஸ்ஸ் பத்ம ப்ரியாவை அண்ணி என்று கூப்பிடாது அவர் எப்போதும் அழைக்கும் ப்ரியா  என்று சொல்லும் மாறு மிக மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.” என்று சொல்லி விட்டு அமராது நின்றுக் கொண்டு இருந்தான்..
ஏன் என்றால் அடுத்து நீதிபதி “எதற்க்கு…?” என்று கேட்பார் என்று..
அமர்ந்து பின் எழுந்து ஏன் என்று  அமராமல் இருக்க அவன் நினைத்தது போல் தான்..
“ஏன்..?” என்று நீதிபதி கேட்டார்..
“நம் இந்து சாஸ்த்திரப்படி அண்ணி என்ற உறவுக்கு அன்னை என்று பொருட்ப்படும்.. இன்றும் அந்த உறவை  நிறைய குடும்பங்கள் அதே உயர்ந்த இடத்தில் தான் வைத்துக் கொண்டு இருக்கின்றனர்..
ஆனால் ஒரு சிலர் இவரை போல…” என்று சொல்லிக் கொண்டு வந்தவன் தன் பேச்சை பாதியில் நிறுத்தியவனாய்..
நீதிபதியை பார்த்து… “மை லாட் இப்போ இவர் அண்ணி என்று சொன்னால், பலர்  உண்மையிம் அம்மா என்று நினைத்து  கூப்பிடும் அந்த அழைப்புக்கே கேவலமாக ஆகிவிடும்.” என்று சொல்லி அமர்ந்து விட்டான்.
நீதிபதியும் சிறிது நேரம் யோசித்தவர் முதலில் ஜெய் சொன்ன அது என் குழந்தை தான் அதை மனதில் வைத்து…
“நீங்க உங்க உறவு முறை சொல்லாது சொல்லுங்க…” என்று சொல்லி விட்டார்..
நீதிபதியே இப்படி சொன்ன பின் ஜெய்… பல்லை கடித்துக் கொண்டு…
“ப்ரியாவுக்கு மூன்று  தங்கை இருக்காங்க.. அண்ணன் நான் உனக்கு விவாகரத்து கொடுத்து விடுகிறேன்.. ஜீவனம்சம் கூட நீ கேட்பது எல்லாம் கொடுக்கிறேன். “ என்று சொன்னதற்க்கு..
ப்ரியா காரணம் என்ன சொல்ல…? உண்மையான காரணம் சொல்லாம நான் விவாகரத்து வாங்கினா  தப்பு என் மீது தான் என்று எல்லோரும் சொல்வாங்க..
 பின்  அக்காவே வாழல தங்கை… இது தான் பேச்சா பேசுவாங்க… அடுத்து தங்கைகள்  திருமணம் தான் கேள்வி குறியாக ஆகிவிடும்… அதனால நான் இங்கேயே இருக்கேன்.” என்று சொன்னாங்க. என்று ஜெய் சொல்லி முடிக்கவும்..
இப்போது எழுந்து நின்ற குருமூர்த்தி..
“அவங்க அங்கேயே இருக்கேன் என்று சொன்னதற்க்கு நீங்களும் ஒருவகையில் காரணம். அப்படி தானே…” என்று கேட்டதற்க்கு, 
ஜெய்.. “ஆமாம்…” என்று தலையாட்டினான்.
அவன் தலையாட்டலை எதிரில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த கீதாவுக்கு இவன் எப்படி இப்படி எந்த குற்றவுணர்வும் இல்லாது பேசுகிறான்.. அனைத்தையும் ஒத்துக் கொள்கிறான் என்று அதிசயத்து அவனை பார்த்துக் கொண்டு இருந்தாள்..
பாவம் அவன் தனக்கு ஒரு ஆப்பை ரெடி செய்து விட்டு தான்.. இவன் அனைத்தையும் சொல்ல ஆரம்பித்து இருக்கிறான் என்று புரியாது. அதிசயத்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“எல்லாம் சரி… இதற்க்கு உங்க அண்ணன் எப்படி ஒத்துக் கொண்டார்…?” என்று குருமூர்த்தி கேட்ட்தற்க்கு..
“அண்ணாவுக்கு தன் குறை வெளியில் தெரிய கூடாது. அதான்..”
“ஓ…” என்று சொன்னவன்..
பின் குருமூர்த்தி ஜெய்யை பார்த்து..
“எல்லாம் சரி… எல்லாம் பக்காவா உங்க ப்ளான் படி நடக்கும் போது…” கீதாவின் பக்கம் கை காட்டி..
“இவங்கள ஏன் இழுத்திங்க…? அது தான் என் கேள்வி…” என்று கேட்டான்.
ஒரு நிமிடம் அமைதியாக கீதாவையே பார்த்துக் கொண்டு இருந்தான் ஜெய்..
ஜெய் தன்னை பார்ப்பதை பார்த்த கீதா வெறுப்புடன் தலை குனிந்துக் கொள்ள..யோசனையுடன் இதை பார்த்துக் கொண்டு இருந்த குருமூர்த்தியை பார்த்து நக்கலாய் ஒரு பார்வை செலுத்திய ஜெய்..
பின் தன் பார்வையை நீதிபதியின் பக்கம் செலுத்தி தன் பேச்சை தொடர்ந்தான்..
“என் வயசு முப்பது ஆகவும் எல்லோரும் உனக்கு எப்போ கல்யாணம் என்று கேட்க ஆரம்பிச்சிட்டாங்க… எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. ஆனால் எல்லோரும் இப்போ அம்மா உயிரோட இருந்தா பண்ணி இருப்பாங்க..
உன் அண்ணாவுக்கு சரியான வயசுல பண்ணினாங்க தானே… அது தான் அம்மா வேணும் என்று சொல்வது.. அண்ணன் அவனும் அவன் குடும்பம் என்று ஆகி விட்டான்.” என்று எல்லோரும் பேசியதை கேட்டு தான்/..
அண்ணா… “நீ பண்ணலேன்னா பிரச்சனை தான் வரும். அதனால  பண்ணிக்கோ என்று சொன்னாங்க..அதான் பண்ணினேன்..” என்று ஏதோ டிபன் சாப்பிட்ட கூடவே காபியும் குடி என்று சொன்னதற்க்கு இவன் சரி என்று சொன்னது போல பேசியவனின் பேச்சை கேட்டு அங்கு இருக்கும் 
அனைவருக்கும் ஒரு அருவெறுப்பு தான் வந்தது.
என்ன செய்வது..? இது போல ஒரு சில ஜென்மங்களும் உலகத்தில் வாழ தானே செய்கிறார்கள்…
இப்போது குருமூர்த்தி எழுந்து நின்று..
“அது தான் பார்த்து பார்த்து நீங்க செய்யும் தப்பு தெரிந்தாலும், வாய் திறக்காத வசதி இல்லாத வீட்டில் பெண் எடுத்தால்,  நமக்கு அனைத்துக்கும் வசதியாக போய் விடும் என்று நினைத்து..
நீங்க குறிப்பாய் கீதாவை கட்ட காரணம்..ஒரே தங்கை. தந்தை உடல் நிலை சரியில்லாதவர்.. அண்ணன் தம்பி என்று யாரும் இல்லை. தங்கைக்கு இன்னும் கொஞ்ச நாளில் திருமணம்  ஆகி விடும். தெரிந்தாலும், கீதாவால் ஒன்றும் செய்ய முடியாது.. அதானே கீதாவை திருமணம் செய்ய காரணம்…”

Advertisement