Advertisement

அத்தியாயம்…16 
அவர்களை மிரட்டி பார்க்கவே கெளதம் போட்டோ எடுத்தது…அது மட்டும் இல்லாது தான் எடுக்காத வீடியோவை வைத்து தன்னை ஒரு வாரம் சிறையில் இருக்க வைத்தவனைய் தான் மிரட்ட வேண்டும் என்று  நினைத்தும் தான் அந்த புகை படத்தை  கெளதம் எடுத்தது..
ஆனால் இவன் நினைத்தது போல் பயப்படாது, குறைந்த பட்சம் அதிர்ந்து கூட போகாது…இன்னும் நெருக்கமாக எடு என்று சொல்றா… அதுவும் பத்மினி..
இதே வார்த்தை குருமூர்த்தி சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை. அவன் ஆண்.  அது போன்ற இடத்திற்க்கே அனைவரும் பார்க்க சென்று வருபவனுக்கு, இது  எல்லாம்  அவனுக்கு ஒரு பெரிய விசயமாகவே  இருக்காது தான்..
ஆனால் இந்த பெண்.. அதை நினைக்க நினைக்க தான் கெளதமுக்கு ஆற்றாமையாக போய் விட்டது..
அந்த கோபத்தில்…
“சீ உனக்கு வெட்கமா இல்ல.. நீ என்னவோ நல்ல குடும்பத்து பெண் என்று நினைச்சிட்டு இருந்தேன்…” என்று கெளதம் பேச..
“ கடவுளே… “ என்று இரு கை கூப்பி வானத்தை அன்னாந்து பார்த்த பத்மினி பின் கெளதம் முகத்தை  பார்த்து..
“நல்ல குடும்பம்..நல்ல பெண். இது போல் வார்த்தை எல்லாம் உன் வாயில் இருந்து  வரலாமா…? சொல். உன் வாயில் அது போன்ற வார்த்தைகள் எல்லாம் வரலாமா…? தப்பு தப்பு கன்னத்தில் போடு…” என்று அவனை பார்த்து சொன்ன பத்மினி…
பின் ஜெய்யை பார்த்து… “என்ன எங்களையும் உங்கல போல நினச்சிட்டு இருக்கிங்களா…? இதோ யார்…? யார்…? யாருக்கு பிறந்தது என்று கூட  தெரியாது. உன்னை சித்தப்பாவாகவும் உன் அண்ணனை அப்பாவாகவும் ஆக்கி வெச்சிட்டு.. என்ன  குடும்பம்…? சீ…
நீங்க என்ன எங்களை பத்தி போடுறது. நானே நாளைக்கு பேஸ் புக்கில் நான் கமிட் என்று இவர் பெயரோட போட்டோ போட்டே  போட்டுடுறேன்.. போங்க போங்க ..
உங்க  குடும்பம் ஒரு  கேடு கெட்ட குடும்பம் என்று  எல்லோரும்  தெரியப்போகுது.. அதை எப்படி சமாளிக்க போறிங்கன்னு பாருங்க.. இதில் என்ன ஒரு கொடுமைன்னா இதோ உன் மேல உட்கார்ந்துட்டு இருக்கானே இந்த குழந்தை இதுவும்  பாதிக்கப்படும்.
 அது தான் கவலை.. ஆனா இதில் யாராலும் ஒன்னும் செய்ய முடியாது..  என்ன விதைத்தானோ அதை தான் அறுவடை செய்வான்… “ என்று சொல்லி விட்டு  பத்மினி குருவை பார்த்தாள்
இதோ சாமியே சரணம் என்பது போல் பத்துவின் கண் பார்வையில் அவன் எழுந்து விட்டான்..
எழுந்தவன்.. தன்னை அன்னாந்து பார்த்து அமர்ந்து இருந்தவர்களிடம்..
“ எஸ் க்யூஸ்மீ…கொஞ்சம்  எழுந்துக்குறிங்களா… இது என் பெட்சீட்… “ என்று மிக  தன்மையாக சொல்லி அவர்களை எழ வைத்தவன்.. போகும் போது..
“ நாம அடுத்து கோர்ட்டில் பார்க்கலாம்.. “ என்று சொல்லி சல்யூட் அடிப்பது போல் சைகை செய்து அவனின் பத்துவின் கையை பத்திரமாக பற்றிய வாறு சென்று விட்டான்..
பத்மினியின் வீட்டு முன் தன் காரை நிறுத்திய குருமூர்த்தி.. பத்மினி காரின் கதவின் மீது கை வைக்கவும், குருமூர்த்தி பத்மினியின் கை மீது தன் கை வைக்கவும் சரியாக இருந்தது..
பத்மினி காரின் லாக் மீது வைத்திருந்த கையை எடுக்காது, அதே சமயத்தில் லாக்கை திறவாது திரும்பி குருமூர்த்தியை பார்த்தாள்…
“உனக்கு ஒகே தானே பத்து…” என்று திரும்பவும் ஒரு முறை பத்துவின் விருப்பம் அறிய கேட்டான்..
“என்ன இது திரும்பவும் முதலில் இருந்து…நாம தான் அவ்வளவு பேசி, அதுவும் அவனுங்க கிட்டயே சொல்லிட்டு வந்து இருக்கேன்.. உங்களுக்கு ஏன் இந்த சந்தேகம்…” என்று குருமூர்த்தியின் குழம்பிய முகத்தை பார்த்த  வாறே..
குருமூர்த்தி  கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காது… பத்மினி அந்த கேள்வியை குருமூர்த்தியிடமே திருப்பி படித்தாள்…
“உனக்கும் எனக்கும் வயது வித்தியாசம். எட்டு…” என்று மேலும் ஏதோ சொல்ல வந்தவனை..
“அதற்க்கு….” என்று கேட்டு பத்மினி குருமூர்த்தியின் பேச்சை பாதியில் நிறுத்த..
“இரு பத்து… முதல்லேயே தெளிவா பேசிட்டா பெட்டர்..” என்று சொன்ன குருமூர்த்தி..
பின்… “இப்போ சின்ன விசயமா தெரியிறது தான்,  நாளைக்கு கல்யாணம் ஆன பின் அதே  பெரிய விசயமா தெரியும்…..” என்று  கூறுபவனின் பேச்சை நான் கேட்கிறேன் என்று…
இப்போது பத்மினி காரின் கதவின் இருந்து கை எடுத்து விட்டு தன் வாய் பொத்து… “சொல்லு… “ என்பது போல் சைகை செய்தாள்…
“நீ என்னை கிண்டல் செய்தாலும் சொல்ல வேண்டியதை நான் சொல்லிடனும் பத்து.. 
“என் அம்மா பத்தி உனக்கு தெரியும்…” என்ற குருமூர்த்தியின் பேச்சில், இப்போது பத்மினி அவனின் முகத்தை கூர்ந்து கவனித்தாள். அவன்  வேதனை படுகிறானா…? என்று…
ஆனால் அவனின் முகத்தில்  வேதனையின் சாயல் சிறிதும் இல்லாது தன் அம்மாவை பற்றி பேசினான்..
“அவங்க இப்போ எங்கு இருக்காங்க..எப்படி இருக்காங்க தெரியாது.. ஒரு பத்து வருடம் முன் அந்த இடத்துக்கு ஒரு கஸ்ட்டமரா போனேன்.. விசாரித்தேன்.. யாருக்கும் அவங்கல பத்தி தெரியல..
அங்கு இல்ல..அது மட்டும் எனக்கு நிச்சயம்.. எங்கு இருக்காங்க…? இருக்காங்கலா…? என்னமோ விசாரிக்க தோனல… அவங்க இந்த உலகத்தில் இருக்காங்கலா…? தெரியல…
இப்போ எல்லாம் சொல்லிட்டேன்.. நாளைய பின்ன என் அம்மா இப்படி என்று உன் வாயில் இருந்து வரக்கூடாது.. உனக்கு இதுல ஏதாவது உன் மனசு உறுத்தல் இருந்தா… என்னோடனான  நாளைய வாழ்க்கையில் ஏதாவது உனக்கு பிரச்சனை வரும் என்று  நினைத்தால்.. அதாவது நாளை நம் குழந்தை இதால் பாதிக்கும் என்று  நீ நினைத்தால்,
இதோ இப்போது  கூட… இந்த நொடி கூட நீ விலகிக்கலாம்..” என்று சொன்னவனை முறைத்து பார்த்த பத்மினியின் பார்வையை சட்டை செய்யாது..
குருமூர்த்தி தொடர்ந்து… 
 “உனக்கு இப்போ தான் இந்த நேரம்.. நாளை கல்யாணம் ஆன பின்…
“இல்ல எனக்கு உன்னோடு எப்படி.? இப்படின்னு… என் கிட்ட பேச்சே இருக்க கூடாது…  கடைசி வரை என்னோடு தான் நீ இருக்கனும்…” என்று அவன்  தீர்க்கத்தோடு சொல்லி முடித்து விட்டு பத்மினியின் முகத்தை பார்த்தான்..
அங்கு அவளின் தீவிர முக பாவனையை பார்த்து விட்டு குருமூர்த்தி..
“என்ன இவ யோசிக்கிறா…? என்று அவனுக்கு கொஞ்சம் பயம் ஏற்ப்பட்டது என்பது உண்மை தான்.. அவன் தான் சொன்னான்.. விலகி கொள்வது என்றால் இப்போது விலகி விடு என்று..
ஆனால் விலகி விடுவாளோ என்ற பயத்தோடு அவளின் முகம் பார்க்க… அவளோ…
“நீங்க ஏன் பூஜா அக்காவை அழச்சிட்டு வரும் போது கூடவே உங்க அம்மாவையும் சேர்த்து அழச்சிட்டு வரல…?” என்று கேட்டாள்.
ஒரு நிமிடம்.. இவளின் பதில் என்ன என்று பயத்தோடு காத்துக் கொண்டு இருந்த குருமூர்த்திக்கு சம்மந்தமே இல்லாத  பத்மினியின் கேள்வியை கிரகித்துக் கொள்ளவே  அவனுக்கு  சிறிது நேரம் தேவைப்பட்டது.
பின்  பத்மினியின் கேள்வியை புரிந்துக் கொண்டவனாய்… 
“அந்த இடம்  டூரிஸ்ட் பார்ட் கிடையாது… கூடிட்டு போனவங்க எல்லோரையும் கை பிடிச்சிட்டு அழச்சிட்டு வர… அங்கு  இருக்கவங்க ஒன்னு  உடல் நிலை சரியில்லாது.. அவங்களாளே அங்கு எந்த வித பிரயோசனமும் இல்லேன்னு ஆனா… இல்ல ஓரே அடியா…”
தன் நாக்கை கீழ் நோக்கி தள்ளியது போல் சைகை செய்தவனாய்..
“அப்படி போனவங்க தான் அங்கு இருந்து போக முடியும்… நான் அங்கே வளர்ந்த பையன். படிக்க வெளியே போனதால..இது போல் ஒரு சில தடவை யாராவது என்னோடு அங்கு இருக்கும் பைய்யனோடு நான் வெளியில் வருவேன்.அதனால தான் எங்களால்   அன்னைக்கு தப்பிக்க முடிந்தது.
அது மட்டும் இல்லாம..அம்மாவை அங்கு யாரு பிடித்து வைக்கல… அதனால அதனால…” அடுத்து பேசாது தயங்கி அவன் பேச்சை நிறுத்தி விட்டான்.
கேட்க கேட்க பத்மினிக்கு குருமூர்த்தியை பார்த்து பாவமாக இருந்தது…எப்படி அவனின் குழந்தை பருவமும் டீன் ஏஜ் பருவமும் இருந்து இருக்கும்…?
யாராவது தன் அம்மாவை தவறாய் சொன்னால், நடத்தையை விடு.. உன் அம்மா வாயாடி பஜாரி என்று சொன்னால் கூட நமக்கு எப்படி கோபம் வரும்..
ஆனால் இவன் சொல்ல கூடாத வார்த்தையின் பிம்பமாய்  நிற்க்கிறான்.. ஆனால் தைரியமாய் நான் அப்படி பட்டவரின் மகன் என்று சொல்கிறான்.
இதை சொல்லவும் ஒரு துணிச்சல் வேண்டும் தானே… இவன் மறைக்க நினைத்து இருந்தால், மறைத்து இருக்கலாம். யாருக்கு இவன் எங்கு இருந்து வந்தான் என்று தெரியப்போகிறது..
ஆனால் நான் இப்படி தான் என்று சொன்னானே… அந்த அவனின் தைரியமும், அதை அவன் எதிர் கொள்ளும் விதமும், இப்போது தன் தாய் பற்றி சொல்லும் போது கூட அவர்களை குறையாய் சொல்லாது  சொன்ன விதமும்…
பத்மினிக்கு  அவன் மீது பிடித்தம் என்ற வார்த்தை அவளுக்கு  மிக சிறியதாக  தோன்றியது.. அதற்க்கு மேல் அதை என்ன வார்த்தை என்று சொல்ல முடியாது..
தன் ஒட்டு மொத்த காதலையும் ஒரே முத்தத்தில் கொட்டி கொடுத்தாள்..ஆம் கொட்டி கொடுத்தாள் என்று தான் சொல்ல வேண்டும்..
அவனின் சட்டையின் இரு பக்கம் பிடித்து அவளை நோக்கி தன்னை இழுக்கும் போதே அவளின் நோக்கம் புரிந்தவனாய்.
கடையில் அமர்ந்துக் கொண்டு தங்களையே பார்திருந்த கீதாவை பார்த்து..
“ஏய்…” என்று அவன் வாய் திறந்ததும் கூட அவளுக்கு ஏதுவாக போய் விட்டது என்று சொல்லலாம்…. 
குருமூர்த்தி… “ ஏய் …” என்று சொல்ல வாய் திறக்கவும், அவன் வாய் மேல் பத்மினி தன் உதட்டை பதிக்கவும் சரியாக இருந்தது..
காதலில் எழுதப்படாத விதிப்படி ஆண் தான் பெண்ணுக்கு முத்தம் கொடுப்பான்.. பெண் அதை தடுப்பாள்.. ஆனால் இங்கு பத்மினி முத்தம் பதிக்க அதை அவன் தடுக்க.. என்ன என்று கேட்க கூட தன் உதட்டை அவனின் உதட்டில் இருந்து பிரிக்க வேண்டுமே என்று நினைத்து பிரிக்க தோனாது கேட்க தோனாது இருந்து விட்டாள்.
அதே போல்  முத்தத்தின்  விதிப்படி முத்தம் பெற்றவர்களுக்கு தான்.. ஒரு கட்டத்துக்கு மேல் மூச்சு விட சிரமம் ஏற்படும். ஆனால் இங்கு முத்தம் கொடுத்தவளுக்கு ஒரு அளவுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது முத்த்த்தை ஒரு முடிவுக்கு கொண்டு வர நினைத்து அவனை தன்னில் இருந்து விடுவித்தாள்.
குருமூர்த்தி தீதா தங்களை பார்க்கவும் தான். பத்மினியை தடுத்தது.. தீதா எதை பார்க்க கூடாது என்று குருமூர்த்தி நினைத்தானோ..அவள் அதை பார்த்து விட்டு அவசர அவசரமாக அவள் தன் வீட்டுக்குள் நுழைந்ததும், குருமூர்த்தியும் பத்மினியின் முத்தத்தில்  கரைந்தான்.
பத்மினி தன் முத்த்த்தை முடித்து விட்டதும்..
“என்ன இதுக்கே இந்த மூச்சு வாங்குது…” என்ன கேட்டவன்..
“ இன்னும் எவ்வளவோ இருக்கும் போ…” என்று சொல்லி முத்தத்தின் ரகத்தினை படி படியாக அவளுக்கு படிப்பித்தான்..
“ஏய் விடுடா விடு…” 
பிடித்திருந்த அவனின் சட்டை காலரை விடுவித்து அவன் மார்பில் கை வைத்து தள்ள பார்த்தவளுக்கு முடியாது..
“விடு.. விடு…” என்று சொல்ல..
நான் நினைத்தால் தான் விட முடியும் என்று நினைத்தானோ..அவனுக்கே போதுமென நினைத்தானோ அவன் அவளை விடுவிக்கும் போது அவளின் உதடு சிவந்து கன்றி போய் இருந்தது…
“ என்ன குரு இது…?” 
தன் உதட்டை தடவிய வாறு கேட்டவளுக்கு… “இது பெயர் தான் முத்தம்.. நீ கொடுத்தது சத்தம்…” என்று சொல்ல அவனை எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறைத்து விட்டு..
“எனக்கு சத்தம் இட மட்டும் தான் தெரியும்.. யாருக்கு முத்தம் கொடுக்க தெரியுதோ அவளையே பார்த்துக்கோ…” என்று சொல்லி காரின் கதவு மேல் கை வைக்க பார்த்தவளின் கையை பற்றிய குருமூர்த்தி…
“ எனக்கு இது முதல் அனுபவம் டீ…” என்று சொன்னவனின் கண்ணில் மயக்கம்   மீண்டும் அவளை தன் வசமாக்கியவன்..
“எனக்கு இது தினம் வேண்டுமடி… சீக்கிரம் கல்யாணம் செய்துக்கலாமா…?” என்று ஆசையாக கேட்டான்..
“ இப்போ தான் கொஞ்ச நேரம் முன் யாரோ கீதா அக்காவுக்கு வாழ்க்கை அமச்சி கொடுத்த பின் தான் நமக்கு என்று  சொன்னாங்க. அது யாருங்க…?” என்று சொல்லி பத்மினி குருமூர்த்தியை வம்புக்கு இழுத்தாள்.
“அந்த நல்லவனை நீ தான் முத்தம் கொடுத்து கெடுத்துட்டியே…? இப்போ மொத்தமும் வேண்டும் என்று அடம் பிடிக்குது என்ன செய்ய…?” என்று சொன்ன குருமூர்த்தி …
மீண்டும்…
“பத்து நாம் பேசியதில் எந்த மாற்றமும் வராதே..நாளை பின்ன எந்த பிரச்சனையும் நமக்குள் வரக்கூடாது..” என்று குருமூர்த்தி தங்களின் வாழ்க்கை பற்றிய உறுதி மொழியை மீண்டும் மீண்டும் பத்மினியிடம் கேட்க..
“குரு உனக்கு என்ன பிரச்சனை…? நீங்க சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிட்டிங்க.. எதுவும் என் கிட்ட இருந்து நீங்க மறைக்கல… அப்புறம் என்ன நமக்குள் பிரச்சனை ஆகும் என்று என் கிட்ட இதையே கேட்டுட்டு இருக்கிங்க…” என்று ஒரு வித சலிப்புடன் தான் பத்மினி குருமூர்த்தியை பார்த்து கேட்டாள்.
“ நான் தினம் தினம் விவாகரத்து வழக்கை பார்க்கிறேன் பத்து… நிஜமா சொல்றேன்.. அவங்க சொல்ற ரீசனை பார்த்தா இவங்க இந்த ரீசனுக்காக விவாகரத்து வாங்குறாங்களா…?
இல்ல விவாகரத்துக்காக இந்த ரீசனை சொல்றாங்களா…? சம் டைம் எனக்கு இது போல தோனும் பத்து..
அதுவும் ஆறுமாதம் முன்..  என் கிட்ட வந்த விவாகரத்து வழக்கு அதுக்கு காரணம் என்ன தெரியுமா…? அவளுக்கும் அவனுக்கும் வயது வித்தியாசம் அதிகமா இருக்கா..
அந்த பெண் விவாகரத்து கேட்குது..அதுவும் ஒரு வயதில் குழந்தையை வெச்சிட்டு எனக்கும் இவருக்கும் பத்து வயது வித்தியாசம்.. எனக்கு இப்போ தான் இருபத்தி நாளு ஆகுது..
இவருக்கு முப்பத்தி நாளு… என் பிரண்சுங்க ஒவ்வொருத்தருக்கும் இப்போ தான் கல்யாணம் நடந்துட்டு வருது.. அவங்க கல்யாணத்துக்கு போகும் போது அவங்க எல்லாம் என்ன உன் கணவருக்கு வயது அதிகமா தெரியுதேன்னு கேட்டு என்னை பாவமா ஒரு பார்வை பார்க்கும் போது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா..? எனக்கு ரொம்ப அசிங்கமா போயிடுச்சின்னு…” அந்த பெண் சொல்லுது..
நான் கூட… “ஏம்மா கல்யாணம் ஆகும் போது உனக்கு அவர் வயது தெரியலையான்னு …?” கேட்டதற்க்கு..
அந்த பெண்.. “அப்போ நான் கல்லூரி படிச்சி முடிச்ச உடன் பண்ணிட்டாங்க..எனக்கு வெளி உலகம் தெரியல.. என் பிரன்சுங்க புருஷ்ன்ங்க எல்லாம் எவ்வளவு சின்ன வயசா இருக்காங்க தெரியுமா…? அவங்க இரண்டு பேருக்கும் இரண்டு வயது தான் வித்தியாசம்…” 
இப்படி கூட சொல்லிட்டு வர்றாங்க..அது தான் முன்னவே கேட்டு க்ளியர்  செய்வது நல்லது தானே.. சொல் நம்ம இரண்டு பேருக்கு, இருக்கும் வயது வித்தியாசம்..
நாளைய பின் எனக்கு வயசு அதிகமா தெரியுது இப்படி எல்லாம் சொல்ல கூடாது..” என்று குருமூர்த்தியின் அனுபவம் இப்படி கேட்க வைத்தது..
அதற்க்கு பத்மினி..
“உங்க கதை எல்லாம் சரி..நாளை நமக்கு குழந்தை பிறந்துட்டு.. நான் பார் சிக்ஸ் பேக்.. எப்படி கம்பீரமா இருக்கேன். உனக்கு இங்கே என்னடி தொங்கி போயிடுச்சி..
இங்கே என்னடி சதைபிடிச்சி போயி இருக்கு..என்னடி இப்படி ஊதி போய் இருக்க… நீங்க சொல்ல கூடாது..என்ன…?”  என்று கேட்டாள்.
அதற்க்கு குருமூர்த்தியின் பதில் என்னவாக இருக்கும்…?

Advertisement