Advertisement

ஆனால் பத்மினியின் பார்வை  குருமூர்த்தி முகத்தில் மட்டுமே படிந்து இருந்தது…
பத்மினியின் அந்த பார்வையில் குருமூர்த்தி முதலில் குழம்பி போய் பின் எதோ நினைத்துக் கொண்டவனாய்…
“கீ.. என்று ஆரம்பித்தவன் உங்க அக்கா…” என்று குருமூர்த்தி தன் பேச்சை தொடங்கும் முன் பத்மினி கை நீட்டி அதை தடுத்தவனாய்…
“எங்க அக்கா உங்களோட சின்ன வயசு தான்.. அதனால் உங்களுக்கு இயல்பா வர்ற  அவள் பெயரை வெச்சே  பேசுங்க….” 
குருமூர்த்திக்கு தன் மனம்  பத்மினியின் பக்கம்  சாய்கிறது என்று அவன்  எப்போது உணர்ந்தானோ அன்றில் இருந்தே..கீதாவை அழைப்பதில் அவனுக்கு குழப்பம் ஏற்ப்பட்டது..
குருமூர்த்தி தன்னோடு பேசும் பெண்கள் தன்னை விட வயதில் சிறியவர்களாய் இருந்தால் எந்த தயக்கமும் இல்லாது பெயர் வைத்து தான் கூப்பிடுவான்..
எப்போதும் பெண்களுக்கு உண்டான மரியாதை நம் மனதில் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் அவன்.. நேரில் மரியாதையாக … மேடம் என்று அழைத்து விட்டு,
அந்த பெண்மனி அந்த இடத்தை விட்டு அகன்றதும்.. தன் கூட இருப்பவர்களிடன்..
“சரியான நாட்டு கட்டை என்று சொல்வதும்.. பார்த்தாலே பத்திக்கும் போல சம ஹாட் மச்சி என்று அந்த பெண்ணின்  பின்  பேசும் பேச்சை அவன் கேட்டு இருக்கிறான்..
ஆனால் குருமூர்த்தி அப்படி கிடையாது…  அவர்கள் தன்னோடு வயதில் சிறியவர்கள்  என்று தெரிந்தால் பெயர் வைத்து தான் அழைப்பான்..
பெரியவர்கள் இருந்தால் அந்த நபரை பொறுத்து மேடமோ அக்கா என்றோ கூப்பிடுவான்.. ஆனால் கீதாவை முதலில் கீதா என்று அழைத்து விட்டு இப்போது பத்மினியின் அக்கா என்பதில் அவன் அழைப்பில் தடுமாற்றம் ஏற்ப்பட்டது]
அவனின் அந்த தயக்கத்தை  உணர்ந்த பத்மினி குருமூர்த்தியிடம் சொல்லும் போதே அவள் மனது இதை தான் நினைத்தது….
நான் உன்னை நீ சொல்லாமலேயே உன்னை அறிகிறேனே.. அப்படி தான் என் பிரச்சனை என்ன…? எனக்கு உன்னை திருமணம் செய்தால் என்ன பிரச்சனை வரக்கூடும் என்று நான் சொல்லாமலே  அதற்க்கு உண்டான ஏற்பாட்டை நீ செய்ய வேண்டும் என்று நான் நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லையே… என்று பத்மினி நினைத்து முடிக்கும் வேளயில்…
“கீதாவுக்கு அந்த பெண்கள் நாம கல்யாணம் ஆன பின்னும் வந்தால், உன்னையும் அது போல் பார்ப்பாங்க…அது தானே கீதா கவலை…? “ என்று குருமூர்த்தி கேட்டதில், இங்கு வந்த்தில் இருந்து பத்மினியின் முகத்தில் முதலில் கோபம்..பின் மயக்கம்..பின் அதில் ஒரு ஆதங்கம் என்று மாறி மாறி வந்து போனது..
ஆனால் குருமூர்த்தியின் இந்த பேச்சில் பத்மினியின் முகத்தில் அப்படி ஒரு  நிம்மதி வந்து அவள் முகத்தில் தங்கி விட்டது.. அவளின் இந்த நிம்மதிக்கு காரணம் நான் இவனை பத்தி சரியாக தான் கணித்து இருக்கிறேன் என்பதே காரணம் ஆகும்.
பத்மினியின் முகத்தையே பார்த்திருந்த குருமூர்த்திக்கு அவள் முகத்தில் தங்கிய நிம்மதியில்…
“என்ன பத்து எனக்கு இது தோனாதா…? என்னை பத்தி யார் என்ன நினைத்தாலும் எனக்கு கவலை இல்லை..ஆனால் உன்னை பத்தி யாராவது தவறாய் நினைப்பது என்ன..? பார்த்த கூட அவ்வளவு தான்..
உன்னை யாரும் தவறாய் நினைக்காதே வேலையை நான் ஆராம்பித்து விட்டு தான் இங்கு  வந்தேன்.” என்ற அவன் பேச்சில் நெகிழ்ந்து போய் அவனை பார்த்தாள்.
“பத்தும்மா இனி நீ என்  பொறுப்பு. என் கடமை இதுக்கு எல்லாம் இந்த பார்வை தேவையில்லை..அதே போல் தான் என்னுடைய அனைத்திற்க்கும் உன் பொறுப்பு இருக்கு புரியுதா…? பத்து.
நான் இது போல் பெண்களின் சார்பாய் வாதாடுவதால  என்னை பத்தி பல  செய்திகள் வெளியில் உலாவுவது எனக்கு தெரியும்.. அதை பத்தி எனக்கு பெரியதாய் பாதிப்பும் இல்லை..எனக்கு கவலையும் இல்லை..
நாளைக்கு நம் திருமணத்திற்க்கு பின் இது போல் பேச்சு உன் காதில் விழலாம். விழலாம் என்ன விழும். கண்டிப்பா விழும்.. அப்போ இந்த பேச்சால் நமக்குள்ள  நாளை பின்ன எந்த பிரச்சனையும் வரக்கூடாது.
அதனால் தான் என்னை பத்தின அத்தனையும் ஒன்னு விடாம சொன்னேன்.. அதாவது நம்ம கல்யாணம் பின்னும் நான் அவங்களுக்கு செய்யும் உதவியை செய்வேன்.” என்று சொல்லி விட்டு குருமூர்த்தி பத்மினியை  பார்த்தான்.
பத்மினி ஏதாவது சொல்வாள் என்று..ஆனால் பத்மினி எதுவும் பேசாது அமைதியாக குருமூர்த்தியின் முகத்தையே பார்த்திருந்தாள்.. அதாவது நீங்க பேசுங்க நான் கேட்கிறேன் என்ற பாவனையே அவள் பார்வையில்..மீண்டும் குருமூர்த்தி தான் தன் பேச்சை தொடர வேண்டியதாகி விட்டது.. 
பின் அவனே… “ஆனால் உனக்கான பெயருக்கும் நான் தான் பொறுப்பு அதனால நீ கல்யாணம் ஆன பின்..நாம முன் இருந்த வீட்டில் இருக்க வேண்டாம்… வேறு வீடு பார்க்க சொல்லி இருக்கேன்.
ஆனால் பூஜா  அக்கா எப்போவும் நம்ம கூட தான் இருப்பாங்க.. அவங்களே விருப்ப பட்டு திருமணம் செய்ய நினைத்தால் தான் நான் செய்து வைப்பேன்..
அப்படி இல்லாத பட்சத்தில் அக்கா  எப்போதும் நம்ம  கூட தான் இருப்பா..நாளைக்கு இதை வைத்தும் ஒரு பிரச்சனையும் வரக்கூடாது. ஆ முக்கியமானதை மறந்துட்டேன்..
நம்ம கல்யாணத்துக்கு முன் கீதாவுக்கு ஒரு நல்ல வழி..அதாவது அவளுக்கு ஒரு கல்யாணம் செய்த பின் தான் நம் திருமணம்.” என்று  கிரிதரனை மனத்தில் வைத்து குருமூர்த்தி இதை பேசினான்.
பத்மினிக்கு அவன் சொன்ன பேச்சில் மற்றதை விட இந்த  பேச்சு அவளுக்கு மிக மிக பிடித்தது..என்று சொல்லலாம்…
கீதா வாழ்ந்த வாழ்க்கை ஒரு அர்த்தம் இல்லாதது..அது ஒரு திருமணத்தில் சேர்த்தி என்று எந்த விதத்திலும் சொல்ல முடியாது. அப்படி இருக்க இதோடு அவள் வாழ்க்கை முடிந்தது என்று பத்மினி நினைக்கவில்லை..
அதற்க்கு முன் தன் திருமணம் கூடாது என்று அவளும் தான் நினைத்தாள். ஆனால் அதை எப்படி சொல்வது என்று தயங்கியவளை குருமூர்த்தி தன் பேச்சால் ஆச்சரியப்பட வைத்து விட்டான்..
அவனின்  இந்த பேச்சில் மகிழ்ந்து போய் அவனின் கைய் பற்றிக் கொண்டு… முதன் முறை இது வரை பார்வையிலும் பின் இதோ கொஞ்சம் தொடுதல் கூட நடந்து விட்டது..  ஆனால் அவள் தன் விருப்பத்தை அவனிடம் நேரிடையாக சொல்லவில்லை..
அப்போது அவள் சொல்லி இருந்தால் எப்படி இருந்து இருக்குமோ ஆனால் இப்போது குருமூர்த்தியை இன்னும் இன்னும் பிடித்து போய்… “லவ்யூ குரு லவ் யூ..ஐம் … “ என்று அதற்க்கு அடுத்து பேச முடியாது அவள் தொண்டையில் ஏதோ அடைப்பது போல் இருக்க..
அதற்க்கு அடுத்து பேசாது தான் பிடித்திருந்த அவன் கைய் மீதே தன் முகத்தை புதைத்துக் கொண்டாள்..
பத்மினி சொன்ன அந்த ஐ லவ் யூவில் குருமூர்த்தி மகிழ்ந்து போனாலும், அவளின் இந்த நெகிழ்வில் இருந்து அவள் சாதரணமாக  மாற்ற..
“இப்போ கொஞ்ச நேரம் முன்ன நான் நெருக்கத்தில் இருந்தால் மட்டும் இது பொது  இடம் என்று  சொன்னாங்க… இப்போ அவங்க மட்டும் என் கை பிடிக்கலாமா…” என்று கேட்டு அவளை சகஜமாக்க முயன்றான்.
அவனின் அந்த  முயற்ச்சிக்கு நல்ல பலனும் கிடைத்தது..  “கை பிடிக்கலாம். அது எல்லாம் தப்புல சேராது.” என்று பத்மினி சொன்னதும்..
“அப்படியா.. அப்போ சரி… இந்த பேச்சு எப்போவும் மாறக் கூடாது. என்று சொன்னவன் அதற்க்கு பின் அவளின் கையை விடவே இல்லை…
பேச்சு எங்கு எங்கே சென்று கடைசியில்.. பத்மினி… “கீதாவுக்கு நல்ல இடமா கிடைக்குமா…? முதல்லயே…” என்று சொல்லிக் கொண்டு வந்தவள் அடுத்து பேசாது கொஞ்சம் தயங்கி தன் பேச்சை நிறுத்தி விட்டாள்.
தன் காதலனே ஆனாலும் தன் அக்காவை பற்றியதை வெளிப்படையாக சொல்ல தயங்கினாள்..
குருமூர்த்தி அவள் சொல்லாத்தை சரியாக கனித்தவனாய்… “முதல்ல வரன் பார்க்கும் போதே..உன் கண்னை கொஞ்சம் திறந்து பார்த்து இருந்தா கீதாவுக்கு முதல் வாழ்க்கையே நல்ல வாழ்க்கையா அமஞ்சி இருக்கும்.” என்று சொன்னவனின் பேச்சில் குழம்பி போய் என்ன என்பது போல் பத்மினி குருமூர்த்தியை பார்த்தாள்.
குருமூர்த்தி கிரிதரனை பற்றி இப்போது தான் சொல்வது சரி இல்லை.. முதலில் கிரிதரனிடம் இதை பற்றி நேரிடையாக பேசி தெளிந்த பின் தான் இதை பற்றி பத்துவிடமே பேச வேண்டும்..
கிரிதரனின் பார்வையை வைத்து இவன் ஒரு ஊகத்தில் பேசி கலாட்டா செய்தாலுமே…  இந்த பார்வை இந்த பேச்சில் மட்டுமே இது முடிவு செய்யும் விசயம் கிடையாது.
அதுவும் கீதாவின்  முதல் வாழ்க்கை இப்படி ஆனதில், அடுத்த வாழ்க்கை எந்த வித்த்திலும் சின்ன பிரச்சனை கூட வந்திட கூடாது..அதில் அவன் கவனமாக இருந்தான்..முதலில் கிரிதரனிடம் பேசி விட வேண்டும் என்று அவன் நினைத்துக் கொண்டான்..
பத்மினியோ அவன் முகத்தை பார்த்தும் அவன் பதில் அளிகாதி வேறு யோசனையில் இருப்பதை பார்த்து தவராஅய் புரிந்துக் கொண்டு..
“என்ன குரு விவாகரத்தில் ஏதாவது பிரச்சனை வருமா…?” என்று  பயந்து போய் கேட்டாள்.
“ஏய் லூசு… நான் மத்த பெண்கள் இது போல் கேசு வந்தாலே அவனை வெளுத்து ஒரு வழி பண்ணி விட்டுடுவேன்.. இப்போ கீதா கேசு என் மனைவியோட அக்கா..எனக்கு தங்கை போல..அவனை விட்டு விடுவேனா.. இருக்கு அவனுக்கு.. ஏற்கனவே  அவன் மேல எனக்கு கொல வெறி தான்..
ஆனா அவன் இது போல திட்டம் போடாது இருந்து இருந்தா..எவ்வளவு நல்லா இருந்து இருக்கும்…” என்று இப்போதும் அவன் கீதாவை பற்றி பேசும் போது கிரிதரன் தான் மனதில் தோன்றினான்..
கூட்டி கழித்து பார்த்தில் கீதா திருமணம்   முடிவு செய்யும் போது தான் கிரிதரன் அந்த நிலம் விசயத்தில் மாட்டிக் கொண்டு இருந்த நேரம்..இவன் தான் அந்த கேசை எடுத்ததால் அந்த சமயம் நன்றாக நினைவு இருக்கிறது..
இந்த ஜெய் குரங்கு உள்ளே நுழையாது இருந்து இருந்தால், கண்டிப்பாக கிரிதரன் தன் விருப்பத்தை கீதாவிடம் சொல்லி இருப்பான்.. இப்படி அவன் நினைவு ஓடும் போதே..
“நான் இங்கு இருக்கும் போது என்ன உங்க கவனம் அப்போ அப்போ எங்கேயோ பறந்து போயிடுது…” என்று சொல்லிக் கொண்டே அவன் கை பிடியில் இருக்கும் தன் கையை உருவிக் கொள்ள பார்த்தாள்..
“பத்தும்மா கை பிடித்தால் தப்பு இல்லேன்னு நீ தான் சொன்ன.. அதனால் விட மாட்டேன்.” என்று சொன்னவன்.
பின் “என் கவனம் எங்கு சென்றாலும் அதில் நீயும் தான் இருப்படி…” என்று இவர்கள் பேசிக் கொண்டு இருக்க..
அங்கு ஜெய்…கெளதம்..பத்ம ப்ரியா… மூன்று பேரும் குழந்தையோடு அங்கு வர..இவர்களின் அசிங்கமான பேச்சுக்கு தனியாக இருக்கும் இடம் தான் சிறந்தது என்று நினைத்து சரியாக குருமூர்த்தி இருக்கும் இடத்தை நோக்கி வந்தவர்களின் கண்ணில்  குருமூர்த்தி, பத்மினியின் நெருக்கம் கண்ணில் பட அதிர்ச்சியாகி மூன்று பேரும் நின்று விட்டனர்…

Advertisement