Advertisement

16 – முத்தக் கவிதை நீ
சிலரைப் பார்த்தால் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பதாய் அவ்வளவு சாந்த சொரூபியாக இருப்பார்கள். ஆனால் கோபம் என்று வந்துவிட்டால் அவர்கள் எல்லாம் துர்வாசர் பரம்பரை தான். நேத்ராவை பொதுவாக பார்ப்பவர்கள் ரொம்ப அமைதி என்று தான் எண்ணியிருப்பார்கள். மைக்கேல் முதல்முறையே வாஷ்ரூம் அருகே இவள் யாருடனோ தகராறு செய்து விட்டு வந்ததைப் பார்த்திருந்தான்  தான். ஆனால் அதன் பின்னான அவளது நடவடிக்கைகள் அவளை அமைதியோ என்றே எண்ண வைத்திருந்தது.
இப்போது அவள் ஒருவனை கீழே தள்ளி அவனது முகத்தில் குத்தியதைப் பார்த்தவனுக்கு ஒருநிமிடம் ‘என்னடா இவள் பார்க்க பார்பி பொம்மை மாதிரி இருக்கா.  ஆனால் நிஜத்தில் அன்னாபெல்லோ???’ என்ற எண்ணம் உதித்தது. அடிவாங்கும் பையனின் அலறல் அதிகமாகவே ஓடிச்சென்று நேத்ராவை விலக்க முயன்றான். அருகில் வந்த மைக்கேலை நிமிர்ந்து பார்த்தவள் பின் தலையைக் கவிழ்த்து எதுவும் பேசாமல் நகர்ந்து சென்றாள். மைக்கேலும் இன்னொரு மாணவனுமாக அந்த மாணவனுக்கு முதலுதவி செய்தனர். 
உடனிருந்த மற்றொரு மாணவன் ப்ரின்ஸிபலிடம் புகார் சொல்லலாம் என்றதற்கு அந்த மாணவன் மறுத்து விட்டான். காரணம் கேட்ட மைக்கேலிடம் “ஐ நோ ஹௌ டு ஹேண்டில் திஸ்” என்று விட்டான். மற்ற மாணவர்களும் அதுவே சரியென்று விட்டு விட்டனர். ஏனோ மைக்கேலுக்கு மட்டும் ஏதோ சரியில்லை என மனதுக்குள் அடித்துக் கொண்டது.
என்னவென்று யோசித்தபடி வெளியே நடந்தவனுக்கு முதன்முறையாக அந்த ஸ்பிரிங் தலை மட்டும் தனியாக கூடைப்பந்து மைதானத்தில் அமர்ந்திருப்பது தெரிந்தது. இவளிடம் பேசலாமா வேண்டாமா என்று மனசுக்குள் பட்டிமன்றம் நடத்தியபடி நடந்தவனின் கால்கள் நேரே அவனை அவளிருந்த இடத்திற்கு கொண்டு சேர்த்திருந்தது.
ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த ஸ்பிரிங் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். எப்படியும் தன்னைக் கண்டவள் இங்கிருந்து அகன்று விடுவாள் என்று எண்ணியிருந்தவனைப் பார்த்து தான் அமர்ந்திருந்த பெஞ்சில் அமரும்படி கைகாட்டினாள். மைக்கேலுக்கு பெருத்த ஆச்சரியம். வழக்கமாக இவனைப் பார்த்ததும் அந்த இடத்தை விட்டு நகன்று விடுவாள். இன்றோ அமரச் சொல்கிறாளே.
மௌனமாக அமர்ந்திருந்தவன் அவளை சற்று நேரம் பார்த்திருந்தான். அவளிடம் எந்த அசைவும் இல்லை. ஆனால் இப்படி அமைதியாக அவளுடன் அமர்ந்திருப்பது கூட சுகமாகவே இருந்தது மைக்கேலுக்கு. ஏனோ யாருமில்லா கூடைப்பந்து மைதானத்தின் அமைதியும் தனக்கு மனதுக்கு பிடித்தவளின் அருகாமையும் இவர்களுக்கான தனிமை நிமிடங்களை அவன் ரசித்தான்.
“ஒருத்தரோட இயலாமையை இல்லை அவங்க தோற்றத்தை வச்சு கிண்டல் பண்ணா சும்மா விடலாமா?” என்றாள் நேத்ரா. ஒரு நிமிடம் புரியாமல் முழித்தவன் “சாரி????” என்றதும் இவன் புறம் திரும்பி அமர்ந்தவள் “இஃப் சம்படி மேக்ஸ் ஃபன் ஆஃப் அதர்ஸ் இன்எபிலிட்டி, ஆர் அப்பியரன்ஸ் இஸ் இட் ஓகே?” என்றாள். தான் அந்த இடத்தில் இருந்திருந்தாலும் இப்படித்தான் தனக்கும் கோபம் வந்திருக்குமோ என்று தோன்ற, ஆனால் கட்டாயம் இப்படி வன்முறையை கையில் எடுத்திருக்க மாட்டோம் என்றும் தோன்றியது.
“கரெக்ட் தான். ஆனா கொஞ்சம் கோபத்தை கண்ட்ரோல் பண்ணலாம். அவன்கிட்ட வாயால் பேசியிருக்கலாம். இப்படி கையால பேசியிருக்க வேண்டாம்.” எங்கோ வெறித்தபடி சொன்னான் மைக்கேல். இதைக் கேட்டதும் சிரிப்புடன் திரும்பியவள் “புரியுது. ஆனா கண்முன்னாடி யாராவது தப்பு பண்ணும் போது அதுவும் அடுத்தவங்களை காயப்படுத்தும்னு தெரிஞ்சும் செய்யும் போது என்னை மீறி ரியாக்ட் செஞ்சுடறேன். குறைச்சுக்கனும்.” ஆமோதிப்பாய் தலையசைத்தபடி சொன்னாள்.
“தாங்க்ஸ் ஃபார் அண்டர்ஸ்டாண்டிங்” என்றான் சிரித்தபடி. அவளது முகத்தில் அவ்வளவு நேரம் இருந்த டென்ஷன் இப்போது விடைபெற்று போயிருந்தது. “ஐ லைக் யுவர் கர்ல்ஸ்” என்று ஸ்பிரிங் போன்று சுருண்டிருந்த முடியைக் காட்டி சொன்னான். மறுப்பாக தலையசைப்புடன் சிரித்தவள் “ஐ ஹேட் இட். மெய்டெய்ன் பண்றது ரொம்ப கஷ்டம்.” என்றவள் சட்டென்று ஏதோ தோன்ற “ஐம் சாரி ஃபார் மை பிஹேவியர் தட் டே. நீங்க படியில வர்றதை நான் பார்க்கல. கீழே விழுந்திருவேனோனு பயந்து…….. அது அன்னிக்கு….. ஐம் சாரி” முகம் சிவக்க மன்னிப்பு வேண்டினாள்.
இவளது முதல் முத்தத்தை ரசித்திருந்தவன் அந்த நினைப்பில் ஆழ்ந்தவனாய் “ஹா ஹா தட்ஸ் ஃபைன். ஐ என்ஜாய்ட் இட்” கண்களைச் சிமிட்டியபடி சொன்னான். இவனது பதிலால் கோபம் கொண்டவளாய் அவனைப் பார்த்து நேத்ரா முறைக்க “சில் டியர். ஜஸ்ட் ஃபன். இப்போ நாந்தான் உங்கிட்ட சாரி கேட்கனும். உங்கிட்ட கிஸ்ஸெல்லாம் வாங்கிட்டேன், ஆனா பாரு உன்னோட பெயர் மட்டும் தெரியாது.” சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்ட மைக்கேலை வெட்டவா குத்தவா ரேஞ்சுக்கு முறைத்து வைத்தாள் நேத்ரா.
“சரி போ நீ நேம் சொல்லலைன்னா உன்ன நான் ட்வார்ஃப்னு கூப்பிடுவேன் இல்லைன்னா ஸ்பிரிங்னு கூப்பிடுவேன். எது நல்லாருக்கு? சாய்ஸ் இஸ் யுவர்ஸ்” வேண்டுமென்றே சீண்டினான். இடுப்பில் கைவைத்து அவனை முறைத்துப் பார்த்தவள் “இப்போ தானே சொன்னேன் மத்தவங்களோட தோற்றத்தை வச்சோ அவங்களோட இயலாமையை வச்சோ கிண்டல் செய்யக் கூடாதுனு” என்றாள்.
சரண்டர் என்பதாய் இருகைகளையும் மேலே தூக்கியவன் “சாரி!!! பட் நீ எனக்கு வேற ஆப்ஷன் குடுக்கலியே. நான் பெயர் கேட்டேன். நீ சொல்லல” என்றான். மெல்ல முறுவல் ஒன்று எட்டிப்பார்க்க தலையைச் சரித்து அவனைப் பார்த்தவளிடம் “ஃப்ரெண்ட்ஸ்?” என்று கைகலுக்க கை நீட்டினான் மைக். அவனையே முறுவலுடன் பார்த்திருந்தவள் சற்று யோசித்து பின் “ஃப்ரெண்ட்ஸ்” என்று கைகுலுக்கினாள். “ஐம் நேத்ரா” என்றாள்.
அவள் பெயரை ஒருமுறை மனதுக்குள் சொல்லிப் பார்த்தவன் இவள் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் ஏன் தனக்கு சுகமான உணர்வைத் தருகிறது என்று யோசித்தான். ஆனாலும் ஏனோ அவளை ஸ்பிரிங் என்றே அழைக்கத் தோன்றியது. சொன்னால் எங்கே குலுக்கும் கைகளை எடுத்துக் கொள்வாளோ என்ற பயத்தில் ஒன்றும் சொல்லாது பஞ்சாய் மெத்து மெத்தென்று இருந்த கைகளை தன் கைகளுக்குள் இதமாய் இறுக்கிக் கொண்டான்.
அவனது க்ரே நிற விழிகளில் கட்டுண்டவள் வேறு சிந்தனையற்றுப் போனாள். இவன் என்ன காந்தமா? இப்படி இழுத்துக் கொள்கிறானே. பார்வையை வேறு பக்கம் திருப்பக்கூட முடியவில்லையே. இவனைக் கண்ட நாள்முதல் நடப்பது தான் அவளுக்கு. எங்கே தான் அவனை வைத்தகண் எடுக்காமல் பார்ப்பது அவனுக்குத் தெரிந்து விடுமோ என்று தானே ஒதுங்கியே இருந்தாள். 
“ஹேய் நேத்ரா!!! பெல்லடிச்சாச்சு. போகலாம் வா” பானுவின் குரல் இவளை உலுக்க அப்போது தான் உணர்ந்தாள் எங்கிருக்கிறோம் என. ‘இந்தப் பெண் இப்போது கட்டாயம் வந்து ஸ்பிர்ங்கை கூப்பிட்டே ஆக வேண்டுமா? கொஞ்சம் நேரம் கழித்து வரக்கூடாதா?’ மனதுக்குள் அவளைத் திட்டித் தீர்த்தான்.  அவனது கரங்களுக்குள் இதமாகப் பொதிந்திருந்த தனது கரத்தை விடுவித்துக் கொண்டவள் “ஓகே மைக். ஐ ஹேவ் டு கோ.” என்றாள். அவளையே வைத்த கண் எடுக்காது பார்த்தவன் “ஸீ யூ சூன்” என்றான். ஆமோதிப்பாய் ஒரு தலையசைப்பைக் கொடுத்தவள் திரும்பித் திரும்பி பார்த்தபடியே சென்றாள். பிரிய மனமேயில்லாதது போல் இருந்தது மைக்கேலுக்கு
_—————————————————————————————————————————————
“யுவர் சாண்ட்விச் மேம்” என்று கேண்டீன் சாண்ட்விச் ஸ்டாலில் இருந்த பையனின் குரலில் தன்னுணர்வு பெற்ற நேத்ரா பதறி மைக்கேலின் அணைப்பில் இருந்து விலக அவளது கரங்களைப் பற்றியவன் “லெட்ஸ் ஸிட் அண்ட் டாக் பேபி. ப்ளீஸ்.” என்றான். பார்வையில் மீண்டும் ஓடிவிடாதே என்ற கெஞ்சல் அதிகமாகவே இருந்தது. நேத்ராவிற்கு வேறு வழி தெரியவில்லை. மௌனமாக மூலையில் இருந்த டேபிளை நோக்கி நடந்தாள்.
அவளையே பின்தொடர்ந்த மைக்கேல் அவளுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்து அவளையே பார்த்தபடி இருந்தான். “மேக்னெட்!!!! நம்ம தான் முன்னமே பேசி ஒரு முடிவெடுத்திட்டோமே!!! நௌ வாட்?” என்றாள் இளகாத குரலில். “பேபி ப்ளீஸ்!! கொஞ்சம் யோசிச்சு சொல்லு. உனக்கு நிஜமாவே நான் வேண்டாமா? பீ ட்ரூ டு யுவர்செல்வ்ஸ். என் மேல் சத்தியம் பண்ணி சொல்லு?” என்றான்.
அவனுக்கு நன்கு தெரியும் இந்த ஒரு சத்தியம் நேத்ரா கட்டாயம் செய்ய மாட்டாளென. பதில் சொல்ல முடியாமல் திணறியவள் பின் முடிவுக்கு வந்தவளாய் “மேக்னெட் இது வேணும் வேண்டாம் அப்படிங்கிறதப் பத்தியில்ல. இது நடக்காது. அவ்வளவு தான். நடக்காத ஒரு விஷயத்தை எதுக்கு நாம் தொடரனும்?” என்றாள்.
“சரி நடக்காத விஷயம்னு சொல்றவ ஏன் நான் போட்ட மோதிரத்தை இன்னும் கழட்டாம இருக்க. இன்னும் ஏன் என்னையே நினைச்சுட்டு வருத்தப்படனும்? இப்பவும் ஏன் எங்கிட்ட போன்னு சொல்லிட்டு அழனும்?” குரலில் சற்று காரம் ஏறியிருந்தது. மாட்டிக் கொண்டு விட்டோமே என்பதாய் தன் வலது கரத்தில் இருந்த மோதிரத்தைப் பார்த்தாள்.  கண்கள் தானாக கண்ணீரைச் சொரிந்தன.
“என்னை வேண்டாம்னு நீ சொல்லல. எனக்குப் புரியுது. உன்னால் அப்படிச் சொல்லவும் முடியாது. ஆனா இது நடக்காதுனு சொல்றதுக்கு ஒரு நியாயமான காரணம் சொல்லு. நான் போயிடறேன் பேபி. எனக்குமே உன்னோட அழுகையை தாங்கிக்க முடியாது.” அடிபட்ட உணர்வு அவன் குரலில் தெளிவாக.
“மேக்னெட்!!! ப்ளீஸ்… காரணம் தான் ஏற்கனவே சொன்னேனே. இப்பவும் ஒன்னுமே மாறல. புரிஞ்சுக்கோ.” என்றாள். அவளது குரலிலும் அதே வலி இருந்தது என்றாலும் இவனுக்கு எப்படியாவது புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. “புல்ஷிட் ரீசன்ஸ். உங்க நாட்டுல யாரும் லவ் மேரேஜ் பண்ணிக்கறதே இல்லேயா? நீ ஸ்கூல் படிக்கும் போது உங்கிட்ட நான் லவ் சொனன்து தப்பு தான். ஆனா மியூச்சுவல் ஃபீலிங்க்ஸ் இருக்கப் போய் சொன்னேன். ஆனா நீ என்னை போயிடுனு சொன்னப்போ சில விஷயங்களுக்காக நானும் கொஞ்சம் அவகாசம் குடுக்க வேண்டி விட்டுட்டேன். இப்போ நீ மெச்சூர்ட் தானே!!! இப்போ சரியா முடிவெடுக்கிற தானே?? இப்பவுமா உனக்குப் புரியல பேபி????”
“உனக்கு எது ப்ரச்சனைன்னு சொல்லு. அதைப் பேசி தீர்க்கலாம்னு தானே சொல்றேன். ஒய் ஆர் யூ ஹர்டிங் மீ அண்ட் யுவர்செல்ஃப்???” சாந்தமான குரலில் ஆரம்பித்தவனின் குரல் சற்றே உயரத் தொடங்க இதற்கு மேல் விட்டால் இவர்கள் இருவரும் கேண்டீனையே டீவி சீரியல் பார்க்க வைத்து விடுவார்கள் என்று தோன்ற மியாவும் டெட்டியும் இவர்களிடம் விரைந்து வந்தனர்.
மியாவைக் கண்டதும் அவளிடம் ஒண்டிக் கொண்ட நேத்ரா அழத் தொடங்கினாள். மியாவிற்கு இவளை எப்படித் தேற்ற என்று தெரியவில்லை. அவளிடம் கண்களால் சமிக்ஞை செய்த டெட்டி மைக்கேலிடம் அமரும்படி கைகாட்டினாள். பின்பு  மணக்க மணக்க ஃபில்டர் காஃபி ஒன்றை வாங்கி வந்தவள் அழுத கொண்டிருந்தவளின் முன் வைத்தாள்.
ஹரிணியின் இந்த செய்கை மியாவுக்குச் சிரிப்பை வரவழைத்தது. இது இவர்களுக்குள் வழக்கமாக நடக்கும் விஷயம் தான். பொதுவாக அதிகம் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத நேத்ரா எப்போதாவது எதற்காவது கோபப்பட்டாலோ இல்லை அழுதாலோ அவளை மீட்கும் ஒரே விஷயம் இந்த ஃபில்டர் காஃபி தான்.
எதுவும் பேசாமல் மெல்ல காஃபியை கையிலெடுத்தவள் மறுபேச்சின்றி குடித்து முடித்தாள். அவள் குடித்து முடிக்கும் வரை காத்திருந்து ஹரிணி மைக்கேலிடம் “அண்ணா உங்க ரெண்டு பேருக்கிடையில் நாங்க வரக்கூடாது என்று தான் நினைச்சோம். பட் நீங்க கொஞ்சம் சத்தமா பேசவும் தான் வரவேண்டியதா போச்சு. எங்க நேத்ராவுக்கு உங்களைப் பிடிக்கல போல. ஸோ நீங்க இனி அவளை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. சரியா? நீங்க உங்க நாட்டுக்குத்தான் போவீஙகளோ இல்லை இங்கேயே வேற பொண்ணு பார்த்து லவ் பண்ணுவீங்களோ அது உங்க சாமர்த்தியம். பட் நேத்ரா உங்களை லவ் பண்ணலியாம். சரியா. மேட்டர் ஓவர். வா பேபி. போகலாம்” என்றபடி நேத்ராவையும் மியாவையும் கிளப்பினாள்.
அவளைத் தவிர மற்ற மூவருக்கும் பலத்த அதிர்ச்சி. மியா ‘இவ என்ன லூசா? அங்க அப்படி பேசினா, இங்க இப்படி பல்டி அடிக்கிறா? இவ டெட்டியா அந்நியனா?’ என்றா இவளைப் பார்த்து வைக்க, நேத்ராவோ என்ன செய்வது என்று திருதிருவென முழித்தாள். ‘இப்போது இவளுடன் கிளம்பினால் இவள் சொல்வதை தானும் ஒத்துக் கொண்டதாகும். அது மைக்கேலின மனதை உடைத்து விடும். கிளம்பாவிட்டால் இவளிடம் மாட்டிக் கொள்வோம். என்ன செய்ய’ என்று குழம்பித் தவித்தாள்.
நேத்ராவின் மௌனத்தை தனக்கு சாதகமாக்கியவள் அவளது கரங்களைக் பிடித்து இழுத்து திரும்பி நடக்கத் தொடங்கினாள். இரண்டு அடி எடுத்து வைப்பதற்குள் ஸ்பிரிங் இவளது கைகளை உதறிவிட்டு திரும்பி அவனிடமே ஓடினாள்.
கவிதையாவாள்!!!!!!!!!!

Advertisement