Advertisement

15 – முத்தக் கவிதை நீ
சில சமயம் நம் உயிர் நண்பர்கள் தான் உயிர் வாங்கும் நண்பர்களாக மாறிப் போவார்கள். நேத்ராவிற்கு கொஞ்சம் கூட தனது நட்புக்களின் மீது சந்தேகமே எழவில்லை. தான் ஒன்று சொன்னால் தன் பேபீஸ் அதை தவறாமல் கேட்பார்கள் என்று நம்பிக்கை இருந்தது அவளுக்கு. ஹரிணிக்கு தனது உயிர் நட்பு நேத்ரா பேபி இப்படி தன்னை குற்றவுணர்ச்சியில் வருத்திக் கொள்கிறாளே குடும்பத்துக்காக தனது காதலைத் தூக்கியெறியவும் தயங்கவில்லையே என்ற ஆதங்கம்.
எப்படியாவது இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று நினைத்தாள். பேசாத வரைக்கும் தானே ப்ரச்சனை. பேசினால் தீர்ந்து விடுமே என்று தோன்றவே அவள் மைக்கேலை வரவழைத்தாள். ஆனால் சிலபல கண்டிஷன்களை அவனுக்கு போட்டிருந்தாள் தான். நேத்ராவின் மனம் நோகும் அளவிற்கு எந்தவிதத்திலும் செயல்படக் கூடாதென்றும், இனி எந்த வகையிலும் இணையத்தில் நேத்ராவின் புகைப்படங்கள் வரக்கூடாதென்றும், ஒருவேளை நேத்ராவிற்குப் பிடிக்கவில்லை எனில் எந்த வகையிலும் அவளைத் தொந்திரவு செய்யக் கூடாதென்றும் அவனுக்கு இடப்பட்ட கன்டிஷன்கள் பலப்பல. மைக்கேலுக்கு ஹரிணியின் மேல் பெரும் மதிப்பே ஏற்பட்டது.
மியாவுக்கு உள்ளூர சந்தேகம் தான். டெட்டி ஒன்றும் இப்படி அமைதியாக எதையும் கேட்டுக் கொள்ளும் ரகமே இல்லை. அப்படி இருக்க இந்த வெளிநாட்டு விநோதமோ இந்தியா வந்ததும் சொல்லி வைத்தாற் போல் இரண்டாவது நாளே வந்து நேத்ராவின் முன் நிற்கின்றான். எங்கேயோ ஏதோ சரியில்லையே என்று தலையைக் குடைந்து யோசித்துக் கொண்டிருந்தாள்.
நேத்ராவின் படபடப்பை புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் எப்போதுமே ஸ்பிரிங்கிற்கு ஒன்றென்றால்  பாலாய் பொங்கும் டெட்டி இன்று அடங்கி அமைதியாய் தான் உண்டு தன் மொபைல் உண்டு என்று இருக்கிறாள் என்றால் ஏதோ சரி இல்லை என்பது புரிபட அவளையே ஓரக்கண்ணால் பார்த்திருந்தாள் மியா. நேத்ராவை வைத்துக் கொண்டு டெட்டியிடம் எதுவும் கேட்க இயலாது என்பதால் வந்தது தான் இந்த திடீர் பசியும் வலியும். நேத்ராவை கேண்டீனுக்கு அனுப்பி வைத்தால் அவள் வரும்முன் இங்கு இவளிடம் விஷயத்தைக் கறக்கலாம் என்ற எண்ணம் தோன்ற “ஸ்பிரிங் எனக்கு கேண்டீன்ல சாண்ட்விச் வாங்கிட்டு வர்றியா?” என்றாள். 
மியாவிற்குப் பசியென்றதும் வேறெதுவும் யோசியாமல் கிளம்பி விட்டாள் நேத்ரா கேண்டீனை நோக்கி. அவள் அகன்றதும் டெட்டி “பேபி!!!!! எப்படி பேபி நீ இவ்வளவு ப்ரெய்னியான? ஐயோ மியா பேபி சூப்பர் போ. கரெக்டா எப்படி அவள கேண்டீனுக்கு அனுப்பனும்னு தோணுச்சு. நானே அவளை எப்படி அனுப்பனு யோசிச்சிட்டிருந்தேன்” மியாவைக் கட்டிக் கொண்டாள் டெட்டி.
“ஹரிணி!! சௌமியா!!! ஸ்டாப் டாக்கிங் ஆர் ஔட் ஆஃப் மை கிளாஸ்” வாயிலை நோக்கி கைகாட்டிய ப்ரொபஸரின் கோபத்தை விட இப்போது தனது தலையைத் தின்னும் கேள்விகளே பெரிதாகத் தெரிய “சாரி மேம்” என்றுவிட்டு டெட்டியின் கைகளைப் பற்றியிழுத்துக் கொண்டு வகுப்பை விட்டு வெளியேறினாள் மியா.
“அடிப்பாவி!!! எப்படி பேபி இன்னிக்கு ஷாக் மேல் ஷாக் குடுக்கிற. கிளாஸ் விட்டெல்லாம் வரவே மாட்ட. இன்னிக்கு பங்க் பண்ணிட்டு வர்ற? என்னாச்சு மியா? ஆர் யூ ஓகே? ஓ காட். இன்னிக்கு பெங்களூர் வெள்ளத்துல முங்கிரும் போலயே” ஓவர் டிரமாட்டிக்காக டெட்டி புலம்பித் தள்ள அவளது வாயைப் பொத்தி அவளை அந்த காரிடாரில்  கரகரவென இழுத்துக் கொண்டு நடந்தாள் மியா.
கேண்டீன் போகும் வழியில் இருந்த மரத்தடியில் ஹரிணியை நிறுத்தி அவளை முறைத்தபடி “இப்போ சொல்லு டெட்டி!!!! என்ன செஞ்சு வச்ச?? எப்படி அந்த பூனைக்கண்ணன் இங்கே வந்தான்? உன் வேல தானே? உண்மையச் சொல்லு.” உலுக்கியெடுத்தாள். இவ்வளவு கோபமாக மியாவைப் பார்த்திராத ஹரிணி தனக்கு வந்த சிரிப்பை அடக்கியவளாய் மியாவின் கைகளைப் பற்றிக் கொண்டு “பேபி ரிலாகஸ். நான் சொல்லப்போறத நடுவுல குறுக்கிடாம பொறுமையா கேளு. ஒகே” என்றாள்.
இப்படிச் சொன்னதுமே புரிந்தது இவள் ஏதோ பெரிய வெடியாக வைத்திருக்கிறாள் என. என்ன பூதம் வெளியே வரப்போகிறதோ என்ற பயத்துடன் அமைதியாகப் பார்த்திருந்தாள். குறும்பு தவள அவளைப் பார்த்திருந்த டெட்டி “மியா! ஒரு விஷயம் நீ புரிஞ்சுக்கனும். நான் ஸ்பிரிங்கிற்கு நல்லது மட்டுமே நினைப்பேன். அவளுக்கு எந்தக் கஷ்டமும் வரவிடமாட்டேன். அவ ஃபோட்டோ ஆன்லைன்ல இருந்தா நல்லதில்லன்னு தோணிச்சு. ஆல்ஸோ எனக்கு மைக் பார்த்தா ஜென்யூனா தோணுச்சு. இவங்க ரெண்டு பேரும் ப்ரச்சனையைப் பேசித் தீர்த்துகிட்டா நல்லதுன்னும் தோணுச்சு. அதான் நான் மைக்க வரச் சொன்னேன்.” என்றாள்.
மியாவுக்கு மயக்கமே வரும் போல் இருந்தது. எவ்வளவு பெரிய விஷயத்தை செய்து விட்டு இப்போது என்னவோ ஒன்றுமே இல்லாதது போல பேசுகிறாளே என்று கோபமாகக் கூட வந்தது. “டெட்டி!!! ஆர் யூ சீரியஸ். அந்த வெளிநாட்டு விநோதம் நல்லவன்னு என்ன உத்திரவாதம்? ஒருவேளை அவன் பேபிக்கு ப்ரச்சனை பண்ணினா?????” பயம் டண்கணக்கில் தெறித்தது மியாவின் குரலில்.
“மியா. அந்தண்ணாவ அப்படி கூப்பிடறத ஸ்டாப் பண்ணு. ஹீ லுக்ஸ் ஜென்யூன். இது எல்லாம் நாடகமா இருக்க சான்ஸ் இல்லை. அப்படியே இருந்தாலும் என்னிக்கா இருந்தாலும் பேபி இதை எப்படியாவது சால்வ் பண்ணித்தான் ஆகனும். நீ பார்த்த தானே!!!! அவ என்னவோ பெரிய தப்பு பண்ணிட்டா மாதிரி குற்றவுணர்ச்சில அவளையே கஷ்டப்படுத்திக்கிறா. அவ அவளா இல்லையோன்னு எனக்கு நிறைய தோணியிருக்கு மியா. அவ நமக்காக சந்தோஷமா இருக்கிறா மாதிரி முகமூடி போட்டுட்டு இருக்கா. டாமிட் ஷீ லவ்ஸ் ஹிம். அதான் ரெண்டு பேருமே பேசித் தீர்த்துக்கட்டும்னு வரவச்சேன்.” என்றாள் ஹரிணி.
ஒரு வேளை இவள் சொல்வது போலத் தானோ என்ற கேள்வி உதிக்க மியா சிந்தனையில் ஆழ்ந்தாள். அவளையே பார்த்திருந்த ஹரிணி “அது சரி பேபி!! ஆனா எப்படி நீ அவளை கரெக்டா கேண்டீனுக்கு அனுப்பின? அங்க தான் அந்தண்ணா இருப்பாங்கன்னு நீ எப்படி ஜட்ஜ் பண்ண?” என்றாள். இது மியாவுக்கு மில்லியன் வோல்ட் அதிர்ச்சி. ‘என்னது!!!!! அவன் கேண்டீன்ல இருக்கானா? ஐயோ பேபி!!!!!!!’ கேண்டீனை நோக்கி ஓடினாள் மியா. அவளைத் தடுத்து நிறுத்த அவள் பின் ஓடிய டெட்டியும் கேண்டீன் வாசலை அடைய, ப்ரேக்கடித்து நின்ற மியாவின் பின்னோடு வந்தவளுக்கும் அதிர்ச்சியே. இவர்கள் யாருக்காக வந்தார்களோ அவள் மைக்கேலின் அணைப்பில் நின்றிருந்தாள்.
மியாவிற்குப் பசி என்றதும் வேறு யோசிக்கத் தோன்றாமல் வகுப்பிலிருந்து கிளம்பி கேண்டீனை நோக்கி நடந்தாள் நேத்ரா. மியாவிற்கு அசிடிட்டி தொல்லை இருப்பதால் அவளது உணவில் எப்போதுமே நேத்ரா கவனமாக இருப்பாள். இன்று காலையின் அவசரத்தில் எப்படியோ விட்டுவிட்டாள்.  மனம் முழுவதும் விடை தெரியா ஆயிரம் கேள்விகள். ‘இவன் எப்படி இங்கே வந்தான்? இப்போது என்ன செய்வது? இப்போதைக்கு சமாளித்தாயிற்று. ஆனால் அடுத்து வந்தால் என்ன செய்வது? மியாவும் டெட்டியும் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் அவர்களிடம் உதவி கேட்பதா வேண்டாமா?’ யோசித்தபடி நடையை எட்டிப் போட்டவள் கேண்டீனை அடைந்தாள்.
தனக்கும் மனசுக்கும் நடக்கும் போராட்டத்தில் தனது சுற்றத்தைப் பற்றிய கவனம் பதியவே இல்லை. இயந்திரகதியில் மியாவுக்கு சாண்ட்விச் ஆர்டர் கொடுத்தவள் தனது கடந்த கால நினைவுகளில் மூழ்கியபடி காத்திருந்தாள். அவளுக்கு தான் எப்படி உணர்கிறோம் என்பதே புரியாத புதிராக இருந்தது. தன்னவன் தனக்காக வந்துவிட்டான், இன்றும் அவன் மனதில் தான் தான் என்று சந்தோஷப்படவா இல்லை இந்த சந்தோஷம் நிலைக்காதே என்று அழவா புரியவில்லை.
அவன் கண்களில் தெரிந்த காதலும் என்னை ஏன் மறுக்கிறாய் என்ற ஏக்கமும் இவளை ரணமாய் தைத்தது. ஆனால் அவனுக்கு எப்படிப் புரிய வைக்க என்று தான் தெரியவில்லை. முன்னை விட இன்னும் ஹேண்டஸமாகத் தெரியும் அவன் முன் குள்ளமாக பரட்டைத் தலையுடன் தானா?? ‘டேய் மேக்னெட் என்ன டேஸ்ட்டுடா உன்னோடது?’ மனதுக்குள்ளேயே செல்லமாக கேட்டுக் கொண்டாள். “என்ன பேபி!! மனசுக்குள்ள என்னோட பேசிக்கிற. ஆனா நேர்ல பார்த்தா தெரியாது சொல்ற?” கிசுகிசுப்பான குரலில் இவளுக்கு மட்டும் கேட்கும் படியாக நின்று கேட்டான்.
‘அவனையே நினைத்துக் கொண்டு வந்ததால் இது பிரமையோ?’ என்றெண்ணியவள் தனது அருகில் அவன் நிற்பது புரிய துள்ளிக் குதித்தபடி விலக யத்தனித்தாள். எங்கே அருகிருந்த பெஞ்ச் தடுக்கி விழுந்திடுவாளோ என்று அவளை இடையோடு பற்றியவன் மெல்ல தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அதிர்ச்சியில் அவனது கண்களைப் பார்த்தவள் அதில் தெரிந்த வலியில் அவளையும் அறியாமல் கண்ணீர்  வடித்தாள்.
“என்ன பேபி இது. இப்படி நீ அழறதைப் பார்க்கவா நான் இந்தியா வந்தேன். நான் இருக்கும் போது நீ அழலாமா? என்ன ப்ராப்ளம் சொல்லு. எதுனாலும் நாம சேர்ந்து ஸால்வ் பண்ணலாம். ட்ரஸ்ட் மீ பேபி. டோண்ட் இக்னோர் மீ. இட் ஹர்ட்ஸ்” அவளது மென்கரத்தை எடுத்து தனது இதயத்தில் வைத்து இது தான் உன்னிடம் என்பதாய் காட்டினான். இப்படித்தான் இவன் எப்போதுமே. அன்பாய்!!!!! அக்கறையாய்!!!!!
மைக்கேலுக்கு நேத்ரா வை தன்னிடம் பேசவைக்கவே அதிகம் ப்ரயத்தனப்பட வேண்டியிருந்தது. அன்று தன் மேல் மோதியதிலிருந்தே தன்னைக் கண்டதும் ஒதுங்குவதும் தான் அவளைப் பார்க்காத போது அவள் இவனையே பார்ப்பதுமாய் இருந்தாள். அவனுக்கு இவளிடம் பேச வேண்டும் பழக வேண்டும் அவளைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகமாகியது. 
ஏனோ அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவனுள் ஒரு இனம்புரியாத உணர்வு. அனைவரிடமும் விளையாடும் அவள் தன்னைக் கண்டதும் நத்தையாய்ச் சுருண்டு கொள்வது அவனை அவள் புறம் இன்னும் இழுத்தது. எப்படியாவது அவளது ஃப்ரெண்டாக வேண்டும் என்று தோன்றியது. எல்லாவற்றுக்கும் மேல் ஏனோ இது எதிர்பாலின ஈர்ப்புக்கும் அப்பாற்பட்ட ஏதோ ஒன்று என்பதில் அவனுக்கு உறுதியான நம்பிக்கை உண்டானது.
மூன்றாவது முறையாக மைக்கேலும் நேத்ராவும் பள்ளியில் இன்னுமொரு ப்ரச்சனை நடக்குமிடத்தில்  பார்த்துக் கொண்டார்கள். அடுத்து தொடர்ந்து வந்த நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் அன்றும் நிறைய ஆசிரியர்கள் வரவில்லை பள்ளிக்கு. அதனால் நேத்ராவின் வகுப்பினர் பெரும்பாலும் விளையாட்டு மைதானத்திலேயே தான் கழிக்கும்படி ஆயிற்று. ஏனோ அன்று காலையில் இருந்தே நேத்ராவிற்கு ஏதோ சரியில்லாத உணர்வு. அவளையும் அறியாமல் ஒரு எச்சரிக்கை உணர்வினோடே இருப்புக் கொள்ளாமல் இருந்தாள் நேத்ரா.
லைப்ரரியில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த மைக்கேலுக்கு ஏதேதோ கூச்சலும் கத்தலும் காதில் விழ சத்தம் வந்த திசையை நோக்கி விரைந்தான். நேத்ராவின் வகுப்பிற்கு திரும்பும் வளைவில் இருந்து தான் யாரோ ‘ஹெல்ப்’ என்று கத்தும் சத்தம் கேட்டது. யாராக இருக்கும் என்று ஓடிய மைக்கேலின் பார்வையில் பட்ட காட்சி அவனுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. 
அங்கே ஒருவனை கீழே தள்ளி அவன் மேல் அமர்ந்து கீழே விழுந்தவனின் முகத்தில் கை எலும்பு முறியும் அளவு சரமாரியாக குத்திக் கொண்டிருந்தாள் ஒரு பெண். அவள் அணிந்திருந்த ஹூடி அவளது முகத்தையும் மறைந்திருந்தது.  “இன்னொரு தடவை மத்தவங்களோட டிஸ்ஸெபிளிட்டியைப் பத்தி பேசினா, உன்னோட முகத்தைப் பஞ்சராக்கிருவேன் பார்த்துக்கோ. யூ டம்போ” கோபத்தில் தலையைச் சிலுப்ப ஹூடி தலையில் இருந்து நழுவ மைக்கேலின் பார்வை அவளில் உறைந்தது. இது அவனது ஸ்பிரிங்!!!!!
கவிதையாவாள்!!!!!!!!!

Advertisement