Advertisement

சில மனிதர்களசில அனுபவங்கள..சந்திப்புகளஏன் சிலரோட இனிமையான இதழ்வளைவுகள்கூடஎப்ப நினைச்சாலும் உள்ளுக்குள்ள அப்படி தித்திக்கும்..!!
தேன்மிட்டாய கடவாயில ஒதுக்குனா மாதிரிசில்லிடும் குளிர்காற்று தேகம் தீண்டின மாதிரிரொம்ப அழகா.. வார்த்தைகளால் வரையறுக்க முடியா உணர்வது..!!
உள்ளத்தை வருடும் மயில்பீலியாய்..!!
ஃப்ரெஞ்ச் விண்டோ அளவு உயர்ந்து அகண்டு நின்ற கண்ணாடி யன்னலின் திட்டில்.. கைகளுக்குள் பொதிந்திருந்த அந்த காபி கோப்பையுடன் அப்பொழுது அமர்ந்தவள்தான் இன்னும் எழுந்தபாடில்லை!!
மழைக்காலம் வேறு!! சாரலின் துளிகள் வரையும் கோலங்களும்.. கண்ணாடியின் அருகாமையில் உணரும் குளுமையும்.. நீர்திவளைகள் ஒவ்வொன்றாய் அதில் பட்டுத்தெறிக்கும் கணம் ஏனோ தன்மேல் பனிமழையொன்று பொழிவதைபோல் உணர்வாள் அவள்.. ஆரபி.
வைத்திருந்த ரிமைண்டர் கினுகினுக்காவிடில் நிகழுக்கு வந்திருக்கமாட்டாள்.. இன்னும் சற்று நேரமேனும் நடுநடுங்கினாலும்.. அதை ஆனந்தமாகவே அனுபவித்திருப்பாள்.
ஆழ மூச்சிழுத்தவளுக்கு குளிர்காற்றை மனதின் அடியாழம்வரை நிரப்பியதாய் ஓரெண்ணம் எழ தாமாய் ஒரு புன்சிரிப்பு இதழோர இசையாய்..!!
காலையிலேயே அவன் நினைவு! இல்லை.. நேற்றிரவிலிருந்தேஅந்த பெயரை பார்த்ததிலிருந்தே.. இதுதான் சரி!
ஒரு பெயஅதுவும் சாதாரண பெயர் உள்ளுக்குள் உல்லாச ஊற்றை உருவாக்குமா?! என்றெழுந்த கேள்விக்கு அவளே பதிலாய்!!
நினைவில் மூழ்கி மகிழ்ந்த மனம் ஒருபுறம் இருந்தாலும் சுறுசுறுப்பாய் கிளம்பியிருந்தாள் அலுவலகத்திற்கு. இன்னும் அவள் அதே பழைய கல்லூரி மாணவி அல்லவே!? அன்றும் அவள் இப்படிதான்!! இருந்தும்இன்று கூடுதல் பொறுப்புகள் அவள் தோளில்..!!
அவளின் இத்தனை வருட உழைப்பும்கூட!! ஒரு ஸ்தாபனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவள் அதற்கேற்றார்போல அடுத்த ஒருமணிநேரத்தில் அலுவலகத்தில்..அவளறையில்..
அன்று அவள் இருந்தே தீர வேண்டுமென்ற கட்டாயம் இல்லையென்றாலும்.. ஏனோ உந்தித்தள்ளிய மனதை மதித்தவளாய் அந்நேரத்தில் அங்கிருந்தாள்.
வெளியே அன்று நடக்கவிருக்கும் இண்டர்வ்யூவிற்காக சிலர் காத்திருந்தனர்.
உள்ளே நுழையும்பொழுதே கவனித்திருந்தாள் அந்த வான் நீல நிற சட்டையை!!
இதேஎன்று பின்னோக்கி இழுத்த மனதை இழுத்தவளாய் இன்முகமாய் மற்றவர்களிடம் தலையசைத்து அறையினுள் புகுந்திருந்தாள்.
என்ன முயன்றும் இப்பொழுது நினைவுகளின் ஆட்சியே!!
அந்த வகுப்பறையே அத்தனை ஆராவாரமாய் இருந்தது. கிண்டலும் விதவிதமான சிரிப்புச் சத்தங்களும்.. சிலரின் மௌனச்சிரிப்புமாய்..!!
அதற்கெல்லாம் காரணமான பேராசிரியையோ அதை சற்றும் கண்டுகொள்ளாது
படிச்சாதான் உங்களுக்கான மரியாதை கெடைக்கும்! இல்லன்னா..” என்று பசங்களிடம் திரும்பியவரோ.. “அப்பறம் நீங்கதான் வீட்டு வேலை எல்லாம் செய்ய வேண்டிவரும்!!” என்ற மறுகணம் மறுபடியும் அதே சிரிப்பு சத்தம்!!
ஆனால் இம்முறை ஏனோ ஆரபியால் சிரிக்க இயலவில்லை மாறாய் உள்ளுக்குள் ஏதோ ஒன்று உறுத்தியது. அவளால் ஏனோ அதை இரசிக்கவும் முடியவில்லை சிரிக்கவும் தோன்றவில்லை!! மாறாய் ஏன்?? என்ற கேள்வியெழ அதையே இன்னொரு குரல் உரக்கவே கேட்டிருந்தது.
அதனாலென்ன மேம்??” என்றெழுந்த குரலில் அனைவரின் கவனமும் முதல் வரிசையில் இருந்த இரண்டாவது பெஞ்ச் ஓரத்திற்கு தாவியிருந்தது அந்த பேராசிரியை உட்பட!!
முதலில் ஆச்சர்யமாய் விரிந்தவரது விழிகள் இரண்டும் பின் குறும்பில் மின்ன,
இப்போ அம்மாவுக்கு ஹெல்ப் பண்றது வேற! நாளைக்கு வைஃப்க்கு பண்றது வேற!” என்றார் கேலியாய்.
அதனாலென்ன மேம்?! அம்மாக்கு பண்றதுபோல என் வைஃப்க்கு நான்தானே பண்ணனும்?? அது என் வேலையும்தானே மேம்?!” என்ற குரலில் அத்தனை நேரம் பெரிய ஆர்வம் எழாததால் அப்பக்கமே தன் பார்வையை திருப்பாமல் இருந்தவளோ பட்டென திரும்பினாள்.
இத்தனை காலம் ஒரே வகுப்பில்தான் இருந்திருக்கின்றனர்.. இருந்தும் அவனிடம் ஒருமுறைகூட பேசியதில்லை! ஏன் அவனையே இப்பொழுதுதான் உற்றுப்பார்க்கிறாள்.
சராசரியானமிகவும் சாதாரணமான தோற்றத்துடன் இருந்தவன் ஏனோ அவளுக்கு வித்தியாசமாய்ப்பட்டான். அவனிடம் ஏதோ ஒன்று இருந்ததுமற்றவர்களிடமிருந்து தனித்து தெரிந்தான். உருவத்தால் அல்ல! உள்ளத்தால்!! சிந்தனைகளால்..
அப்போ என் சொந்தத்துலேயே ஒரு பொண்ண நம்ம வசீக்கு பார்த்துற வேண்டியதுதான்!” என்றவரது கமெண்ட்டெல்லாம் அவள் கவனித்திலேயே பதியவில்லை. மாறாய் அவன் அதற்கு விழியோரம் சிரிப்பால் சுருங்க புன்னகைத்து அதை கடந்த விதம் பதிந்துப்போனது.
இதற்கு முன்னும் ஒருமுறை இதேபோல் அவனது பதிலொன்று அவளை ஈர்த்திருந்தது!! ஆனால் இந்த அளவிற்கில்லை!!
அந்த ஆடிட்டோரியமே அமைதியாய் இருந்த நேரம்… ‘உங்களுக்கு ஒரே ஒரு ஆப்ஷன் குடுத்து.. ஒரு பொருள மட்டும் எடுத்துட்டு தனி தீவுக்கு போகனும்னா எத எடுப்பீங்க??’ என்றெழுந்த கேள்வி அது!
அது ஒரு பெர்ஸனாலிட்டி டெவலெப்மெண்ட் ப்ரோகிராம். அவர்கள் கல்லூரியில் அடிக்கடி நடைபெறும் ஒன்று! ஆனால் அன்று கொஞ்சம் ஸ்பெஷல்!! காரணம் வந்த பதில் அப்படி!!
பல விடைகள் வந்து விழுந்தன.. பலதும் குலுங்கல் சிரிப்பிற்கு உத்திரவாதம் கொடுக்க ஒன்று மட்டும் இரசனையால் கட்டியிழுத்திருந்தது.
புக்ஸ் சர்!” என்ற பதிலும் அதை தொடர்ந்து அதில் சேர்ந்துக்கொண்டடைரியும் பென்னும்அவளை ஈர்த்திருந்தது!
மூன்று வருடங்கள்..மூன்று முழு வருடங்கள் அதே கல்லூரியில் ஒரே வகுப்பில் பயின்றிருக்கின்றனர். இருந்தும் அவள் அவனிடம் பேச முற்படவில்லை!
எத்தனையோ முறை அவனுக்கு வெகு அருகில் இருந்திருக்கிறாள்.. இருந்தும் அவனிடம் ஒருவார்த்தை உதிர்த்திருக்கவில்லை!!
வசீகரன்என்றவனின் பெயரை கேட்கும் பொழுதெல்லாம் உள்ளத்தில் எழும் உற்சாகத்தையும்..பரவும் குளுமையையும்.. விழிகளை தொற்றிக்கொள்ளும் ஆர்வத்தையும் ஒருமுறையேனும் சொல்லியிருக்கலாம்.. என்று இன்றுவரை அவள் ஒருகணம்கூட வருந்தியதே இல்லை!
வெளியில் சொன்னதும் இல்லை..
உள்ளம் வருடும் உணர்வு.. காதலாய்தான் இருக்க வேண்டுமா என்ன??!! 
நிலவுடனான காதலைப்போலதூரத்தில் இருக்கும்வரை உள்ள ஆர்வம் பக்கத்தில் சென்று குறைந்திடுமோ?! என்று பல முறை யோசித்ததுண்டு.. ஆனால் இன்றோ அதற்கு விடையாய்.. வாழ்க்கையின் இத்தனை தூரம் கடந்து வந்தப் பிறகும் அந்த பெயரின் தாக்கமும் குளுமையும் கொஞ்சமும் குறையவில்லை!! கூடுதலாய் மெல்லிதழ் வளைவு வேறு!!
தலையை மென்மையாய் அசைத்து அதிலிருந்து வெளிவந்தவள் மேசையின்மேல் அத்தனை நேரம் அவளுக்காய் காத்து நின்ற ப்ளாக் காஃபியிடம் கவனம் பதித்தாள்.
அதை கையில் எடுத்தவளுள்ளோ யன்னலை எட்டிடும் எண்ணமெழ அங்கு நகர்ந்திருந்தாள் கோப்பையுடன்.
அதிலிருந்து ஒரு சிப் உறிஞ்சியவளின் கவனம் முழுதும் எதிர்ப்புற ப்ளாட்ஃபார்மில்.. மயங்கி விழுந்த வயோதிகரில் படிய அடுத்த கணமே அங்கு விரைய துடித்த மனதை அடக்கியது அங்கு அவள் கண்டகாட்சி!!
நீல நிற சட்டையும் கருப்பு நிற பேண்டுமாய் கையில் ஒரு பையுடன் இளைஞன் ஒருவன் பெரியவரிடம் விரைய அவனை தொடர்ந்து அவர்களை கடந்துச் சென்ற மற்ற சிலரும்.. பக்கத்து கடையில் சோடா ஒன்றை வாங்கி அவரை பருக வைத்து வண்டியில் ஏற்றி அனுப்பியவனை காண காண அவள் கண்மணிகள் விரிந்து அதிர்ச்சியில் உறைந்து நின்றது.
அவன்தானா?? அவனேதானா?? என்ற வினாவிற்கு விடையாய் கையிலிருந்த வாட்ச்சை பார்த்தவன் பின்பு தலையில் தட்டியவாறு அவள் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்திருந்தான்.
அப்பொழுதே விளங்கியது வசீகரனின் வருகையின் காரணம்!!
இவன் மாறவேயில்ல!!” என்று விரிந்த இதழை அடக்க மறுத்தவளாய் இருக்கையில் சாய்ந்தமர்ந்தாள் அவள்.
அப்போ கடைசிவர நீ சொல்லவே இல்லையா??!!” என்று ஆச்சர்யமும் அதிர்ச்சியும் போட்டி போட கேட்டிருந்தவனையே சில கணங்கள் நிதானமாய் நோக்கியவளோ,
ப்ச் ப்ச்என்றாள் தலையசைத்து.
ப்ச்! என்ன ரபீ நீ!?” என்பதாய் தலையில் தட்டிக்கொண்டவனை பார்த்து, “ஹே! என்ன??!” என்றாள் கேள்வியாய்.
ம்ம்ம்சொல்லிருந்தா செட்டாயிருக்கும்லநானும் தப்பிருப்பேன்…”என்றிழுக்க அவளோஹான்! டோன்ட் ப்ளஃப்! நான் எப்போ காதலிச்சதா சொன்னேன்?!! இரசிச்சேன்!! ஏன் இப்போவும் அந்த பேர கேக்கும்போது அத்தனை தித்திப்பா இருக்குலபழைய ஞாபகங்கல்லாம்.. இதையே சொல்லிருந்தா..சந்தேகம்தான்!! சிலதெல்லாம் சொல்லாதவரைதான் அழகே!! உள்ளுக்குள்ள அப்படியே ஆயிரம் பனிமழை பொழியும் தெரியுமா??!!” என்றவளின் குரல் எதிரில் இருந்தவனின் இரசனைப்பார்வையில் தடைப்பட..
அந்த கடலோர ரிசார்ட்டில்.. அலை நெருங்கா இடத்தில் வளர்ந்து நின்ற ஒற்றை குடையின் அடியில் போடப்பட்டிருந்த டேபிளில் எதிரெதிரில் அமர்ந்திருந்த இருவரிடத்திலும் மௌனமே மொழியாகிட.. அதை உடைப்பதுபோல் அவர்கள் செவிப்பறையை தீண்டியது அப்பெயர்..
வசீ!!!” என்ற அதட்டல் குரலில் அலையை காலால் அலைந்தபடியிருந்த சிறுவனை அவன் அன்னை அதட்டிக்கொண்டிருக்க அதில் பட்டென இவள்புறம் திரும்பியவனின் கண்களிலோ குறும்பு வழிய அதை கண்டுக்கொண்டவளாய்யூ!!!” என்று கையை ஓங்கியவளிடம் இருந்து தப்பும் முயற்சியில் அவனும் துரத்தும் முயற்சியில் அவளுமாய்..!!
சில ஞாபகங்கள் பொக்கிஷத்திற்கு சமமானவை!! 
என்று எடுத்துப் பார்த்தாலும் உள்ளுக்குள் உயிரோட்டமாய்..!!
இரசனைகள் எல்லாம் காதலாக வேண்டிய கட்டாயமில்லையே..
எனக்கு இப்பவும் வசீகரன் பேர கேட்கும்போது உள்ளுக்குள்ள அத்தன இனிமையா இருக்கும்
அனா அது காதலாதான் இருக்கனுமா என்ன..??!!
நான் இரசிப்பதை இரசிக்கும் ஒருவனிடம் முதன் முதலாய் மயங்குகிறேன்
ஆரபி
ரபீமா!!! அந்த லைட்ட ஆஃப் பண்ணேன்டா!!” என்று அரைகுறை உறக்கத்திலும் அழகாய் உளறியவனை கண்டவளோ..
டைரியை வைத்துவிட்டு விளக்கை அணைத்தவளாய் அந்த பெரிய யன்னலில் வந்தமர்ந்தாள் ஆரபி

Advertisement