Advertisement

21 – முத்தக் கவிதை நீ
சிலர் பேசியே கொல்லும் ரகம். சிலர் பேசுவதற்கு காசு கேட்பார்கள். ஒரு சிலர் மட்டுமே தேவைக்கு அளவாகப் பேசும் திறம் படைத்தவர்கள். கீர்த்தி அப்படித்தான். தன் தங்கையின் படிக்கும் ஆசையை மதித்தவனாய் அவளை தன்னுடன் அழைத்து வந்து அவளுக்கு நல்ல கல்லூரியில் இடம் வாங்கி பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து பொறுப்பான அண்ணனாய் தனது கடமையைச் செய்தான். 
அவன் எவ்வளவோ சொல்லியும் தனக்கு என்று அலைபேசி வேண்டாம் என்று மறுத்து நேத்ரா ஹரிணியின் எண்ணை அண்ணனுக்கு கொடுத்தாள். பொதுவாகவே அதிகம் பேசாத கீர்த்தி தங்கையை அழைக்க வேண்டுமெனில். எப்போதும் ஹரிணியின் எண்ணுக்கு ஒரு மெஸேஜ் அனுப்பிய பின் தான் அந்த எண்ணுக்கு அழைப்பான். ஆனால் இன்று அவனிருந்த மனநிலையில் செய்தி அனுப்பவெல்லாம் அவனுக்கு தோன்றவேயில்லை.
அழைத்தவனின் குரலில் தென்பட்டதென்ன பதட்டமா?, தடுமாற்றமா?, சந்தோஷமா?? இன்னதென்று சொல்ல இயலாதபடிக்கு கரகரத்தது. “நேத்து!!! அட்வான்ஸ்  பர்த்டே விஷ்ஷஸ். நீ நாளைக்கு எந்த ப்ளானும் வச்சுக்காத. நாளைக்கு என்னோட ஃப்ளாட்டுக்கு வா. கொஞ்சம் முக்கியமான விஷயம். ஹரிணியும் சௌமியாவும் கூட கூட்டிட்டு வா. சரியா” என்றான்.
எப்போதும் கலகலப்பு என்பதெல்லாம் கீர்த்தியிடம் இருக்காது தான். ஆனால் இப்படி எதையோ மெல்லவும் இயலாமல் விழுங்கவும் இயலாமல் தடுமாறுவது இருக்காது. சொல்ல வேண்டியதை பட்டுக் கத்தரித்தாற் போல் நறுக்கென்று பேசிவிடுவான். இன்று என்னவாகி இருக்கும்????? “அண்ணா!!!!!! அது …. வந்து…. ஏன் ஒரு மாதிரி இருக்க? குரலே சரியில்லையே” தயங்கித் தயங்கி கேட்டாள் நேத்ரா.
“நேத்தும்மா….. வந்து அண்ணா உனக்கு எப்பவுமே தப்பா எதுவும் செய்ய மாட்டேன். உனக்கு நல்லது மட்டுமே தான் நடக்கனும்னு நினைப்பேன். அதை நீ நம்பற தானே?” என்றான் கீர்த்தி. அவனது குரலில் சொல்லவா வேண்டாமா என்பதான தயக்கம் அப்பட்டமாகத் தெரிந்தது. “இதென்னண்ணா புதுசா கேட்கிற?” குழப்பம் அதிகமாகியது நேத்ராவிற்கு. ஏதோ சொல்லியது ‘சம்திங் இஸ் ராங்” என.
“நேத்தும்மா!!! என்கூட வேலை பார்க்கிற ப்ரதீபனுக்கு உன்னைக் கேட்கிறா. நல்ல பையன். நல்ல குணம். நல்ல குடும்பம். எந்த பிக்கல் பிடுங்கலுமில்லை.  கல்யாணம் பண்ணிண்டு நீ படிப்பை கண்டின்யூ பண்ணலாம். அவனோட அம்மா இன்னிக்கு பெங்களூர் வந்திருக்கா. நாளைக்கு வந்து உன்னைப் பார்க்க வரேன்னு சொல்லியிருக்கா. அதான் நீ நாளைக்கு இங்கே வந்துருன்னு சொன்னேன்” கடகடவென சொல்ல வந்ததை ஒரே மூச்சில் சொல்லி முடித்தான்.
சட்டென்று மூச்சை அடைத்தது நேத்ராவிற்கு. இது அவள் எதிர்பாராதது. அதுவும் தற்போது…. ஊரில் இருந்து கிளம்பும் போது தான் சீனிவாசன் சொல்லியிருந்தார் “உனக்கு எவ்வளவு படிக்கனுமோ படி” என்று. அப்படியிருக்க இது ஏன்?? அதுவும் இப்போது??? “நேத்து!!!!! நேத்தும்மா!!!?? லைன்ல இருக்கியா????” கேட்டான் கீர்த்தி.
தன்னுணர்வு பெற்றவளாய் “ஆங்!!!!! அண்ணா!!!!” தடுமாறினாள். “சாரிம்மா. இப்படி திடுதிப்புனு சொல்லிட்டேன். இது ஒன்னும் முடிவாகல. அம்மாகிட்ட சொன்னேன் இந்த மாதிரி ப்ரதீப்புக்கு உன்னை கேட்கிறான்னு. அவதான் வந்து பார்க்கட்டும் அப்புறமா பிடிச்சிருந்தா மேற்கொண்டு பார்த்துக்கலாம்னு சொன்னா. உனக்குப் பிடிச்சிருந்தா தான்… இப்போவே ஒன்னும் யோசிக்காத. நீ வா..,. சரியா?” தான் இறக்கும் இடியின் தாக்கம் தெரியாமல் இறக்கி முடித்தான் கீர்த்தி.
காலின் கீழிருந்து யாரோ பூமியை உருவியது போன்ற உணர்வு. அண்ணன் இப்படி பொறுப்பானவனாக இருந்து படுத்துவான் என்று அவள் சற்றும் எதிர்பாராதது. எப்படியும் வீட்டில் பேசித்தான் ஆகவேண்டும். ஆனால் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளித் தள்ளிப் போட்ட விஷயம் இன்று இப்படி வரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
கத்திரி எடுப்பதற்காக அறைக்குள் நுழைந்த டெட்டி பேயறைந்தாற் போல் அமர்ந்திருக்கும் நேத்ராவைப் பார்த்து பதறி அவளருகே ஓடி வந்தாள். டெட்டிக்கு சில நாட்களாக உள்ளுணர்வு ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது. அந்த ஸாஷா அவ்வளவு ப்ளான் போட்டு தனக்கும் மைக்கேலுக்குமான உறவு என்று உலகுக்கு பிரகடனப்படுத்தியவள் சட்டென்று விட்டு விட்டு போவாளா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அதனாலேயே அவள் எங்கே நேத்ராவை எங்கேனும் காயப்படுத்த முயல்வாளோ என்ற எச்சரிக்கை உணர்வினாலேயே அலர்ட்டாக கண்காணித்து வந்தாள்.
ஆனால் ஸ்பிரிங்கின் பிறந்த நாளுக்கான கொண்டாட்ட ஏற்பாட்டுகளைக் கவனிக்கும் குஷியில் சற்று கவனம் செலுத்த அதற்குள் இங்கே அறையில் ஸ்பிரிங் கையில் அலைபேசியுடன் மின்சாரம் தாக்கினாற் போல் இருந்தாள். நேத்ராவிடம் ஓடி வந்தவள் அவளது கையில் இருந்து அலைபேசியை உருவி காதுக்கு கொடுத்து “ஹலோ” என்க மறுமுனையில் “நான் கீர்த்திம்மா. யாரு ஹரிணியா? நான் சத்தமே இல்லைன்னதும் கால் கட்டாச்சோன்னு நினைச்சேன். நேத்ரா கிட்ட சொல்லிடும்மா நாளைக்கு காலையில் பத்தரைக்கு மேல நல்ல நேரம். அதனால அவளை சீக்கிரமே இங்கே வரச்சொல்லு. நீங்களும் வாங்க. சரியா. அவகிட்ட விபரம் கேட்டுக்கோ.” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.
என்ன தான் தங்கையின் நட்பு தனக்கும் தங்கை என்றே நினைத்து நடந்து கொண்டாலும் கீர்த்தி ஹரிணியிடமோ இல்லை சௌமியாவிடமோ அதிகம் பேசிக் கொள்வதில்லை. ஓரிரு வார்த்தைகளில் நலம் விசாரிப்பு அவ்வளவே. கீர்த்திண்ணா எதுக்கு நாளை நல்ல நேரம் என்று எல்லாம் சொல்றாங்க என்ற குழப்பத்துடன் பார்த்தால் ஸ்பிரிங் கண்களில் கண்ணீர் வழிய உறைந்து போய் அமர்ந்திருந்தாள்.
“பேபி!!!! என்னாச்சு???? ஏன் அழற????? பேபி!!!!!!!” நேத்ராவைப் போட்டு உலுக்கி எடுத்தாள். டெட்டி கத்தியதில் பதறியவளாய் அறைக்குள் ஓடி வந்தாள் மியா. அவளுக்கும் நேத்ரா இப்படி எதுவும் பேசாமல் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தது அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது. நேத்ராவின் அருகே வந்து அமர்ந்து மெல்ல அவளைத் தன் தோளில் சாய்த்தவளாய் “பேபி!!?? அழாத!!!!! வாட் எவர் பீ இட். இட்ஸ் கோயிங் டு பீ ஆல்ரைட்.” மெல்ல முதுகை வருடியபடி சொன்னாள். 
நேத்ராவின் அழுகையில் பொறுமை போனவளாய் ஹரிணி செய்வதறியாது தவித்து “ஸ்பிரிங் என்னாச்சுனு சொல்லு. அண்ணா என்ன சொன்னாங்க? ஊரில் எல்லாரும் ஓகே தானே???? என்னாச்சு பேபி???” குரலில் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை பறந்து போனது தெளிவாகத் தெரிந்தது.
நேத்ரா பதிலளிக்காமல் அழுகையைத் தொடரவே ஹரிணி மெல்ல தனது அலைபேசியை எடுத்து “இதெல்லாம் வேலைக்காகாது. பேசாம நான் கீர்த்திண்ணாகிட்டவே கேட்டுடறேன்.” என்றதும் பதறியவளாய் அவளிடம் இருந்து அலைபேசியை பிடுங்கி கட்டிலில் தூக்கிப் போட்டு விட்டு மியாவின் மடியில் படுத்துக் கொண்டு வெடித்து அழத் தொடங்கினாள் நேத்ரா.
பொறுமை காற்றில் பறக்க இவளையே செய்வதறியாமல் முறைத்தபடி நின்ற டெட்டியை பொறுமை காட்டும்படி சமிக்ஞை செய்த மியா மெல்ல நேத்ராவின் தலைகோதியபடி “பேபி!!!!! இட்ஸ் ஆல்ரைட். அழாத. என்னானு சொன்னாதானே தெரியும்.” என்றாள் மெல்லிய குரலில்.
அழுது ஓய்ந்தவள் மெல்ல விசும்பியபடியே இருவரிடமும் கீர்த்தி சொன்னவற்றைச் சொல்லி முடித்தாள். அதுவரை அமைதியாக கேட்டிருந்த டெட்டி “ஃப்பூ!!!! இதுக்குத் தானா?? ஸ்பிரிங் அழாத. அதான் அண்ணா சொல்லிட்டாங்களே, உனக்குப் பிடிச்சா தான்னு. அப்புறமென்ன???? மியா நம்ம நாளைக்கு கீர்த்திண்ணாகிட்ட பேசிறலாம். சரியா?” என்றாள் டெட்டி.
மியாவும் ஆமோதிப்பாய் தலையசைத்தாள். நேத்ரா மட்டும் இல்லை என்பது போல் மறுத்து தலையசைத்தபடி “இல்லை. அண்ணா ஒரு விஷயம் முடிவெடுத்தா அதை மாத்திக்க மாட்டான். இந்த ப்ரதீப் அண்ணாவோட பெஸ்ட் ஃப்ரெண்ட். அண்ணாவுக்கு அவனை ரொம்ப பிடிக்கும். அதனால் அண்ணா முடிவு பண்ணிட்டுத் தான் சொல்றான். ஐயோ நான் எப்படி இவங்ககிட்ட மைக் பத்தி சொல்லப் போறேன்? எப்படி சம்மதிக்க வைக்கப் போறேன்?” நின்ற அழுகை மீண்டும் துவங்கியது.
“இதெல்லாம் யோசிக்காமயா அவன் லவ் ஏத்துகிட்ட? சொல்லித்தான் ஆகனும். போராடனும்.” பொங்கி விட்டாள் ஹரிணி. “ஷ்ஷ்ஷ்!!!!! டெட்டி ஸ்டாப் இட்” அடிக்குரலில் சொன்ன‌ மியா கண்ணசைவால் அவளை அமைதி காக்கும்படி கெஞ்ச, அப்போது தான் ஹரிணிக்கு தான் கோபப்பட்டு ஸ்பிரிங்கிடம் கத்தியது புரிந்தது. “ஐம் சாரி பேபி!!!!”நான் உன்கிட்ட இப்படி கத்தியிருக்கக் கூடாது.” என்று நேத்ராவின் கரம் பற்றி அவளிடம் மன்னிப்பு கேட்டாள் டெட்டி.
பின் சற்று நேரம் யோசித்தவளாய் இங்கும் அங்கும் நடை பயின்றவள் பின்பு நேத்ராவிடம் “நாங்க பேசிப் பார்க்கிறோம் பேபி. அண்ணாகிட்ட நாங்க பேசறோம்.” என்றாள். மியாவுக்கு உதறல் எடுத்தது. கீர்த்தியைப் பார்த்தாலே அவளுக்குள் உதறல் தான். அவளாவது அவனிடம் போய் நேத்ராவின் காதலைப் பற்றி பேசுவதாவது. அதற்கு தண்டவாளத்தில் தலையை வைக்கலாம் என்ற எண்ணம் அவளுக்கு.
ஆளாளுக்கு சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்கள். நேத்ரா இந்த ப்ரச்சனையில் இருந்து எப்படி கையாளப்போகிறோம் தனது வீட்டில் தனது காதலைப் பற்றி எப்படி சொல்லிப் புரிய வைப்பது என்ற ஆழ்ந்த யோசனையில் இருந்தாள். அறையின் இன்னொரு புறத்தில் டெட்டி குட்டிப் போட்ட பூனையாய் ஹரிணி இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தாள். இவர்கள் இருவரையுமே பார்த்திருந்த மியாவின் மனதுக்குள் எப்படி இதை சமாளிப்போம் என்ற பெருங்கவலை அலையாய் ஆர்ப்பரித்தது.
மறுநாள் நேத்ராவின் பிறந்தநாள்…. அது மட்டுமின்றி தான் அவளிடம் திருமணம் பற்றி பேசப்போவதால் எப்படி பேசப் போகிறோம் என்னவென்று ஆரம்பிப்பது என்று ஆயிரம் ஒத்திகைகளை மனதுக்குள் நடத்தியபடி இருந்தான் மைக்கேல். அவனுக்கு அவளது காதலின் மீது சந்தேகம் இல்லை. ஆனால் இந்தப் பேச்சை எடுத்தாலே முகம் வாடி தலைகவிழ்ந்து கொள்வாள். மைக்கேலுக்கு அவளது மனநிலை நன்கு புரிந்தது.
சிறிது காலம் பார்ப்பான், அப்படியும் ஒன்றும் ஆகவில்லை என்றால் அவனே கீர்த்தியிடம் சென்று பேசிவிடலாம் என்று முடிவெடுத்திருந்தான். நேத்ரா எப்படியும் தன் குடும்பத்தின் மனவருத்தத்தை விரும்ப மாட்டாள். அதனால் தான் தான் இதற்கு எதாவது செய்ய வேண்டும். கீர்த்தியிடம் என்ன பேச வேண்டும் எப்படி சமாளிக்க வேண்டும் என்றெல்லாம் யோசித்து வைத்திருந்தான்.
அடுத்த நாளுக்கான ஆயத்தங்களில் ஈடுபட அவனுக்கு புதியதொரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. யாராக இருக்கும் என்று சிந்தனையோட எடுக்கவா வேண்டாமா என்ற பட்டிமன்றம் நடத்தினான் மனதுக்குள். அழைப்பு நின்றதும் சற்று நேரத்தில் அதே எண்ணில் இருந்து அவனுக்கு மெஸேஜ்கள் வரத் துவங்கின.
“என்ன மைக்?? அந்த பரட்டைத்தலை பெண் உன்னை வேண்டாம்னு சொல்லிட்டாளா???? நீ எனக்குத் தான் மைக். என்னை விட்டு உன்னால் யாரையும் மணக்க முடியாது. அதுக்கான அத்தனை வேலையையும் நான் செய்வேன்.” என்றது முதலில் வந்த செய்தி. இது யாராக இருக்கும் என்று யோசிக்கும் போதே அடுத்த மெஸேஜ் வந்தது.
“இது உனக்காக நான் வாங்கிய இந்தியா சிம் கார்டு. நான் அந்த குள்ளச்சிகிட்ட தெளிவா சொல்லிட்டேன். அவளா ஒதுங்கிக்கலைன்னா நான் எந்த எல்லைக்கும் போய் உன்னை மீட்டுப்பேன்னு. இப்போதாவது புரியுதா பேபி இந்த ஸாஷாக்கு உன் மேல் எவ்வளவு காதல்னு” என்று வந்தது.
கோபம் கண்ணை மறைக்க உடனே அந்த எண்ணுக்கு அழைத்தவனின் அழைப்பை முதல் ரிங்கிலேயே எடுத்தவள் பேசப் பேச மைக்கேலுக்கு தலை சுற்றியது. “ஹாய் பேபி!!!!! என்ன ஷாக் போதுமா? நீ என்னை ரொம்பவே அண்டர் எஸ்டிமேட் பண்ணிட்ட. எப்போ நீ அந்தப் பரட்டைத்தலைப் பெண்ணோட ஃபோட்டோ அப்லோட் பண்ணியோ அப்போவே முடிவு பண்ணிட்டேன் நீ அவளுக்கு கிடைக்கக் கூடாதுன்னு. உன்னை ஃபாலோ பண்ணி அவளைப் பிடிச்சிட்டேன் பேபி. உனக்கு அவ நல்லாயிருக்கனும்னா நீ என்கூட வந்துரு. யூ ஹேவ் நோ சாய்ஸ் பேபி” விஷம் வழிந்தது அவளது குரலில்.
கவிதையாவாள்!!!!!!!!!!!!!!

Advertisement