Advertisement

20 – முத்தக் கவிதை நீ
வாழ்க்கை எப்போதும் தெளிந்த நீரோடையாய் செல்வதில்லை. அவ்வப்போது ஒரு சில திருப்பங்களுடன் இருந்தால் தான் நமக்கும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்தியா வந்து தனது ஸ்பிரிங் பேபியை சந்தித்ததுமல்லாமல் அவளுடன் ஓரளவு சுமூகமாக பழகவும் தொடங்கியாயிற்று. அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாத நிலை இருந்த போதும் ஏனோ அவளுடன் கழிக்கும் நேரங்களே போதும் என்று எண்ண வைத்தது.
காலத்தின் கட்டாயம் ஏற்படும்போது நிச்சயம் அடுத்த கட்டத்துக்கான முடிவுகளை தானே ஸ்பிரிங் முடிவெடுப்பாள் என்று காத்திருப்பதைத் தவிர அவனுக்கு வேறு வழியிருக்கவில்லை. அடுத்த இரு தினங்களில் வரும் அவளது பிறந்தநாளை மைக்கேல் ரொம்பவுமே எதிர்பார்த்து காத்திருந்தான். அன்று தான் அவளிடம் திருமணத்திற்கு ப்ரபோஸ் செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தான்.
அவன் வளர்ந்த நாட்டில் திருமணம் என்பதெல்லாம் எப்போது ஒருவரின்றி நம்மால் உயிர் வாழ முடியாது என்ற நிலை வருமோ அப்போது மட்டுமே அதைப் பற்றி யோசிப்பர்.. இல்லையென்றால் திகட்டும் வரை ஒன்றாக வாழ்ந்து விட்டு வேண்டாம் என்ற பின் ஒரு கைகுலுக்கலுடன் பிரிந்து போய்விடுவர். காலுக்கு ஒத்து வராது செருப்பாக கழட்டிவிட்டு கடந்து போய்விடும் கலாச்சாரமே அங்கு பார்த்து பழக்கப்பட்டவன்.
ஆனால் அவனது தாய் தந்தை பிரிந்து அதன்பின் அவனுக்குக் கிடைத்த அவல வாழ்க்கை அவனுக்கு வாழ்க்கையில் எந்தப் பற்றும் இல்லாது இருக்க வைத்தது. ஏனோ அவனுக்குப் பெண்கள் என்றால் ஒரு ஒதுக்கம் வந்து போனது. அவன் வயது பிள்ளைகள் டேட்டிங் என்றும் கேர்ள்ஃப்ரெண்ட் என்றும் சுத்தும் போதெல்லாம் அவனால் அதை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை.தன்னைச் சுற்றியே ஒரு கல்கோட்டையை கட்டி வைத்திருந்தான்.
தனது பெற்றோருக்குப் பின் யாராலும் தன்னை தனது உணர்வுகளை காயப்படுத்த கூடாது என்றே ஒதுங்கி வாழந்து வந்தான். ஆனால் பாவம் அவனது தவம் முதன்முறை இந்தியா வந்ததுமே கலைந்து போனது. தனக்கு தப்பு என்று தோன்றினால் எவரென்றும் பாராது தட்டிக் கேட்கும் குணம், பிறரது இயலாமையை யாரும் எள்ளி நகையாடினால் பொறுக்காத இயல்பு, மனதில் பட்டதை பேசிவிடும் யதார்த்தம், தான் செய்தது தவறென்று தெரிந்தால் அதற்காக பொறுப்பேற்றுக் கொள்ளும் நேர்மை, யாரையும் கண்ணைப் பார்த்து பேசும் கண்ணியம் இந்த எதில் வீழ்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. 
நேத்ரா அவனை காந்தம் போல் இழுக்கத் தான் செய்தாள். ஆனால் அவளோ அவனை மேக்னெட் என்றாள். ஏனோ அவளைக் கண்ட போது ஏற்பட்ட உணர்வு அவனுக்கு வேறு யாரின் மீதும் ஏற்படுமா என்று தெரியவில்லை. அவனால் நேத்ராவின் இடத்தை வேறு யாருக்கும் கொடுக்க இயலாது என்பதை நன்கு புரிந்து கொண்டான். இந்த வாழ்க்கையில் அவனுக்கு அவள் மட்டுமே என்பது நன்கு புரிந்து போனது. அதனாலேயே எத்தனை வருடமானாலும் சரி, எப்பேர்ப்பட்ட போராட்டமானாலும் சரி அவளுக்காக எதையும் எதிர்கொள்ள தயாராகியே வந்தான். 
நேற்று ஒரு திருமணம், இன்று ஒரு விவாகரத்து, நாளை மற்றொரு திருமணம் என்று பார்த்து வளர்ந்தவனுக்கு தனக்கு ஒருத்தி மட்டுமே அதுவும் ஸ்பிரிங் மட்டுமே என்ற எண்ணம் ஆழமாக மனதில் பதிந்து போனது. நேத்ராவை கைப்பிடிக்க வேண்டுமானால் அவளது வீட்டில் இருப்பவர்களிடம் என்ன மாதிரியான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டும் என்று யோசித்து தன்னை அதற்காக தயார்படுத்திக் கொண்டான். அவளுக்காக அவளுக்குப் பிடித்த அவளது தாய்மொழியை பேசக் கற்றுக் கொண்டான். உணவு பழக்கவழக்கங்கள் கூட அவளுக்காக தன்னை மாற்றிக் கொள்ள தயாரானான்.
இந்த முறை அவளது பிறந்தநாளுக்கென அவளுக்கு அவர்கள் நாட்டு முறைப்படி திருமணத்திற்குச் சம்மதம் கேட்க  மோதிரமும், அவளுக்குப் பிடித்த மாம்பழ வர்ணத்தில் பட்டுப் புடவையும் வாங்கி வைத்திருந்தான். இதையெல்லாம் பார்த்து அவள் தன்னைப் போட்டுத் துவைத்து எடுக்கும் போது தன்னைக் காப்பாற்றுவதற்காக டெட்டிக்கு ஹோட்டல் லீலா பேலஸ்சில் ட்ரீட் கொடுப்பதாக ஒப்பந்தம் வேறு செய்திருந்தான். மியா கூட இப்பொழுது ஓரளவு இவனை நம்புவது போலத்தான் தெரிந்தது.
“எங்க பேபிய நீங்க உங்க நாட்டுக்குக் கூட்டிட்டுப் போயிருவீங்களா?” கண்களில் பயம் தெரிய ஒருமுறை கேட்டு வைத்தாள் மியா.. “இல்லை சிஸ். நாந்தான் உங்க நாட்டிலேயே என்னோட பேபிக்காக செட்டிலாகப் போறேன்” என்றான். “என்ன அண்ணா இப்படி சொதப்பறீங்க???? நீங்க உங்க நாட்டுக்குக் கூட்டிட்டு போனா நாங்க அவளைப் பார்க்க வர்ற சாக்குல ஆஸ்திரேலியா ட்ரிப் போட்டிருப்போமே. இப்படி எங்களை டிஸ்ஸெப்பாயிண்ட் பண்ணிட்டீங்களே” நெஞ்சில் கைவைத்துக் கொண்டு ஏதோ காயப்பட்டது போன்று ஓவர் டிரமாடிக்காக வசனம் பேசினாள் டெட்டி.
மைக்கேலும் சிரித்தபடி “அதனால என்ன சிஸ். உங்களுக்கு அங்கேயே ஒரு பையனைப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிட்டாப் போச்சு. உங்களைப் பார்க்க வர்ற சாக்குல நாங்க ஆஸ்திரேலியா வந்துட்டுப் போறோம்” என்றான். “ஐயே!!!!! வேண்டாண்ணா. நமக்கு இந்த பர்க்கரும் பீட்ஸாவும் வேண்டாம். எனக்கேத்த தயிர்சாதம் இங்கேயே எங்கப்பா பார்த்து வச்சிருவார்” என்னவோ தனது சோகம் பெரிது என்பது போல் பாவனையுடன் சொன்னாள் டெட்டி.
ஏனோ அவளுக்கு மைக்கேலின் மீது அபார நம்பிக்கை வந்திருந்தது. அவர்களது ஸ்பிரிங் பேபியை அவன் தனது உயிராக பார்த்துக் கொள்வான் என்று பெரும் நம்பிக்கை அவளுக்கு. “நேரம் வரும் போது கீர்த்திண்ணாகிட்ட நம்ம தான் பேசனும் மியா. இவங்க மேட் ஃபார் ஈச் அதர்.” என்று சொல்வாள். 
சரியாக அடுத்த நாள் நேத்ராவின் பிறந்தநாள் என்ற நிலையில் அவளுக்குத் தெரியாது என்ற நினைப்பில் டெட்டியும் மியாவும் அதற்காக ஏதேதோ இரகசிய ஏற்பாடுகளைச் செய்தபடி இருந்தனர். நேத்ரா தனது அறைக்குள் அவளது அசைன்மெண்ட்டுகளை செய்து கொண்டிருக்கும் போது சார்ஜ் போட வைத்திருந்த ஹரிணியின் அலைபேசி சிணுங்கியது. ஏதோ புது நம்பரிலிருந்து அழைப்பு வந்தது.
நேத்ரா ஹரிணியை இருமுறை அழைத்துப் பார்த்தாள். அவள் வருவதற்கான அறிகுறி இல்லாத காரணத்தால் இவளே அழைப்பை எடுத்தாள். மறுமுனையில் “ஐ நீட் டு டாக் டு நேட்ரா. ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்” என்று குயிலின் குரல் கேட்டது. ஹரிணியின் அலைபேசியில் அவளை கீர்த்தி மட்டுமே அழைப்பான். அப்படியிருக்க இது தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு என்றதும் டெட்டிக்காக தான் இருக்கும் என்ற எண்ணத்தில் எடுத்து விட்டாள். தன்னை கேட்கவும் ஒன்றும் புரியவில்லை. ஆனால் பேசியது பெண் தான் என்பதால் நேத்ரா “யெஸ் நேத்ரா ஹியர்” என்றாள்.
“நேட்ரா!!!!!! ஐ நீட் டு மீட் யூ. இட்ஸ் அர்ஜெண்ட்” என்றாள் எதிர்முனையில் இருந்த பெண். “மன்னிக்கவும். எனக்கு நீங்க யாருன்னே தெரியல. நீங்க கேட்கிற ஆள் நான்தானான்னு தெரியாது. அப்படியிருக்கும் போது எதுக்கு உங்களை மீட் பண்ணனும்?” என்றாள் நேத்ரா.  “உனக்கு மைக்கேலைத் தெரியும் பட்சத்தில் நானும் தெரிஞ்சவளாகத்தான் இருக்கனும் நேட்ரா” கசந்த குரலில் பதில் வந்தது.
“ஓ!!!!!!! ஸாஷா!!!!!!!!” என்றாள் நேத்ரா. “பரவாயில்லையே!! மைக்கேலின் பேரோட நான் ஏதோ ஒரு வகையில் இணைஞ்சிருக்கேன். குட். நௌ லிசன் நேட்ரா. எனக்கு மைக் வேணும். அவனுக்கு எப்படியெல்லாமோ சொல்லிப் புரிய வைக்க முயற்சி செஞ்சுட்டேன். அந்த இடியட் புரிஞ்சுக்க மாட்டேங்கிறான். நீ தான் டீசண்டா ஒதுங்கிக்கனும். இல்லைன்னா…….” என்று நிறுத்தினாள் ஸாஷா.
நேத்ராவிற்கு சிரிக்கவா அழவா என்று தெரியவில்லை. இவள் என்ன லூசா என்றே தோன்றியது. இவளுக்கு மைக்கேலின் மீது காதலென்றால் அது அவனிடம் பேச வேண்டிய விஷயம். தன்னிடம் வந்து அதுவும் எவ்வளவு திமிராக???? “இல்லைன்னா?????” நேத்ராவின் குரலில் நான் ஒன்றும் உனக்கு சளைத்தவள் இல்லை என்ற திடம் இருந்தது.
“என்னை ஆத்திரப்படுத்தாதே நேட்ரா. உனக்கு மைக்கேல் வேண்டாம். அவன் எனக்குத் தான். நீ ஒதுங்கிக் கொள்.  உன்னோட நல்லதுக்குத் தான் சொல்றேன்.” கோபத்தை அடக்கிய குரலில் சொன்னாள் ஸாஷா. “என்னோட நல்லது பற்றி அக்கறை காட்டினதுக்கு தாங்க்ஸ். ஆனா நீங்க தப்பான ஆள்கிட்ட பேசிட்டிருக்கீங்க. உங்களுக்கு மைக்கேலைப் பிடிச்சிருந்தா கோ டீல் வித் ஹிம். இன்னொன்று, என்னோட ஃப்ரெண்ட்டோட நம்பர்ல கால் பண்ற வேலையை நிறுத்திக்கோங்க சரியா? குட் பை” என்றாள் நேத்ரா.
“இவ்வளவு திமிர் உனக்கு ஆகாது நேட்ரா. இதுக்கு நீ ரொம்ப வருத்தப்படுவ. மாடலிங் உலகத்துல ஐம் எ ஸ்டார். எனக்கும் மைக்குக்கும் தான் சரியா இருக்கும். குள்ளமா இருக்கிற நீ எல்லாம் அவனுக்கு செட்டே ஆக மாட்ட.” என்று உறுமினாள் ஸாஷா. “தேங்க்ஸ் எ லாட். அண்ட் ஐ டோண்ட் வாண்ட் டு ஹியர் பேக் ஃப்ரம் யூ” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தாள் நேத்ரா. என்ன தான் ஸாஷாவிடம் கெத்தாக பேசிவிட்டாலும் மனம் படபடவென அடித்துக் கொண்டது. அவளுக்கு பயம் என்று எல்லாம் இல்லை. ஆனால் தன்னவனை பங்கு போட அதுவும் தன்னிடமே வந்து மிரட்டலா என்ற எண்ணம் தான்.
‘அவளுக்கு தேவையென்றால் மைக்கேலிடம்  நேராக பேசிக் கொள்ள வேண்டியது தானே. நான் என்ன இங்க குரியர் சர்வீஸ் வச்சிருக்கேனா இல்லை மேட்ச் மேக்கிங் சர்வீஸ் நடத்துறேனா. என்ன திமிர்.அவ்வளவு தைரியம் இருந்தா மேக்னெட்கிட்ட போய் பேசிப் பார்க்கட்டுமே’ என்று தோன்றியது. ஒருநிமிடம் கற்பனை செய்து பார்த்தாள். 
நினைவே கசந்தது ஒருபுறம். மற்றொரு புறம் உள்ளூர கோபம் கொப்பளித்தது. ‘இவளை என்ன செய்யலாம்’ என்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே டெட்டியின் அலைபேசி மீண்டும் அலறியது. திரையில் கீர்த்தியின் எண்ணைக் கண்டதும் மற்றதனைத்தும் மறந்தவளாய் அழைப்பை எடுத்தாள் நேத்ரா. மறுநாள் தனது பிறந்தநாளுக்காக தனக்கு வாழ்த்து சொல்ல அண்ணன் அழைக்கிறான் என்று எடுத்துக்குங்க தலையில் இடியை இறக்கினான் கீர்த்தி.
கவிதையாவாள்!!!!!!!!!

Advertisement