Advertisement

18 – முத்தக் கவிதை நீ
பொதுவாகவே நமக்கு மிகவும் பிடித்தவர்களுக்கு ஏதாவது என்றால் அதை தடுக்க நம்மால் என்ன முடியுமோ அத்தனையையும் செய்யத் துடிப்பது மனித இயல்பு தான். இப்போது மைக்கேலுக்கும் அதே துடிப்பு தான் இருந்தது. அந்த ப்ரசாத் நேத்ராவை நோக்கி ஆசிட் இருக்கும் பீக்கரைத் தூக்கிக் கொண்டு ஓட எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்கும் முன் தடுத்து விட வேண்டும் என்ற வெறியோடு மைக்கேலும் ஓடினான்.
திடீரென கண்ணாடிக் குடுவைகள் வெடிக்கும் ஓசையும் ஒரே புகை மண்டலமுமாக இருந்தது லேப். தனது ஸ்பிரிங்கிற்கு ஏதோ ஆகிவிட்டது என நினைத்தவன் அடுத்த நிமிடம் தலைதெறிக்க ஓடினான். புகைமூட்டமாய் இருந்த இடத்திற்குள் சென்றவன் “பேபி!!!!!! ஸ்பிரிங்!!!!!! ஆர் யூ ஆல்ரைட்????? பேபி வேர் ஆர் யூ?????” பதட்டத்துடன் கத்தினான். சத்தம் எதுவுமின்றி போகவே இன்னும் வேகமாக ஓடித் தேடினான்.
கொஞ்சம் உள்ளே சென்று பார்த்தவனின் பார்வை வட்டத்துக்குள் விழுந்தவன் அந்த ப்ரசாத். ஆசிட் இருந்த பீக்கர் கீழே விழுந்ததால் வெடித்துக் கிளம்பிய சத்ததாலும் புகையாலும் ஏற்பட்ட அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்றான். ‘இவன் இங்க இருக்கான்…. அப்போ ஸ்பிரிங்???’ என்று பதட்டத்துடன் தேட ஒரு டேபிளின் கீழே காதுகளைப் பொத்திய வண்ணம் குனிந்து அமர்ந்திருந்தாள்.
கண் காது என்று அத்தனையையும் பொத்திக் கொண்டு வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தபடி கோழிக்குஞ்சாய் ஒடுங்கி அமர்ந்திருந்தவளைக் கண்டதும் தான்  மைக்கேலுக்கு மூச்சே சீராய் வந்தது. இவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லாத போது இவ்வளவு நேரம் தன் உயிரைக் கையில் பிடித்த ஓட்டம் தான். 
மெல்ல டேபிளுக்கு கீழே வந்தவன் அவளை நோக்கி கைகளை நீட்டினான். அவளிடம் எந்த அசைவுமின்றி போகவும் தானும் அந்த டேபிளின் கீழ் குறுகிக் கொண்டு மெல்ல அவளிடம் சென்றவன் அவளைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவனது ஸ்பரிசத்தினால் அதிர்ந்து விழித்தவள் அவனைக் கண்டதும் லேசாக சிரிக்க முயன்றாள்.
பின் அவனது கைவளைவுக்குள் ஒண்டிக் கொண்டாள். அவளது உடம்பில் இருந்த நடுக்கம் சொல்லியது அவளுமே பயந்து தான் போயிருந்தாளென. மெல்ல தட்டிக் கொடுத்தவன் “இட்ஸ் ஓவர் பேபி.. டோண்ட் வொர்ரி…. இட்ஸ் ஆல் கோயிங் டு பீ ஆல்ரைட். ஐம் தேர் வித் யூ” என்றான். ஏனோ அவனது இந்த ஆறுதல் அவளுக்கு இந்த நேரத்தில் ரொம்பவுமே தேவைப்பட்ட ஒன்றாக இருந்தது. இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் நானிருக்கிறேன் என்பதாய்.
அவளையும் அறியாமல் அவனின் தோள் மீது சாய்ந்து கொண்டாள். தன் மீது சாய்ந்திருந்த பூக்குவியலை மெல்ல அணைத்தபடி அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான் மைக்கேல். இயற்கையாகவே தைரியசாலியான நேத்ராவிற்கு அந்த ஆசிட் கீழே விழுந்ததும் ஏற்பட்ட சத்தமும் அது கிளப்பிய புகையுமே ஒரு பதட்டத்தை உண்டாக்கியிருந்தது. மைக்கேலின் அணைப்பும் ஆறுதல் வார்த்தைகளும் தந்த தைரியம் அவளை அந்த பதட்டத்தில் இருந்து வெளிவர நன்கு உதவியது.
நடுக்கம் நின்று மெல்ல சீரான அவளது சுவாசம் அவள் நார்மல் ஆகிவிட்டாள் என்று சொல்லியது. ‘மை பேபி இஸ் பேக் டு ஃபார்ம்’ மனதுக்குள் சொல்லிக் கொண்டவன் எழுந்து அவளும் வெளிவர உதவினான். இருவரும் மெல்ல புகையினூடே நடந்து வர ப்ரசாத் இன்னமும் அதிர்வில் இருந்து வெளிவராத நிலை. மைக்கேல் நேத்ராவை வெளியே காத்திருக்குமாறு அனுப்பி வைத்துவிட்டு ப்ரசாத்திடம் விரைந்தான். 
ப்ரசாத்திற்கு இன்னும் அதிர்ச்சி விலகவில்லை. நேத்ராவைத் துரத்திக் கொண்டு ஓடியவன் அவளை நெருங்கும் வேளையில் சற்று அவசரமாகக் திரும்பும் போது அங்கிருந்த டேபிளின் முனை இடித்து அவன் கைகளில் பிடித்திருந்த பீக்கர் சற்றுத் தள்ளிப் போய் விழுந்தது. இவர்களின் நல்ல நேரம் பீக்கர் விழுந்த இடம் இவர்கள் இருவருமே நின்ற இடத்திற்கு எதிர்திசை. விழுந்த வேகத்தில் அங்கிருந்த மற்ற சில குடுவைகளையும் உபகரணங்களையும் உடைத்தெறிந்து அந்த லேபையே ரணகளப்படுத்தியிருந்தது.
அது ஏற்படுத்திய சத்தமும் புகைமண்டலமும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் ப்ரசாத்தை அதிர்ச்சியில் தள்ளியது. அந்த பள்ளியின் ஒரு மூலையில் இந்த லேப் இருந்த காரணத்தால் வெளியே அவ்வளவாக சத்தம் கேட்கவில்லை.  லேபின் வெளியே காத்திருந்த நேத்ராவிடம் வந்த மைக்கேல் “யூ கோ பேக் டு யுவர் ப்ராக்டிஸ். நான் இவனை பார்த்துக்கிறேன். யாரிடமும் எதுவும் சொல்ல வேண்டாம். சரியா? நான் இருக்கேன். பார்த்துக்கிறேன் எதுவானாலும்” என்று அவளிடம் தனது கட்டை விரலைத் தூக்கிக் காட்டி அவளைத் தேற்றி அனுப்பி வைத்தான்.
போகவே மனமில்லை நேத்ராவிற்கு. பொதுவாகவே அவளாக எந்த ப்ரச்சனைக்கும் வலிய செல்வதில்லை. ஆனால் ஓரிடத்தில் தப்பு நடந்தால் அவளால் பொறுத்துக் கொள்ளவும் முடிவதில்லை. நேத்ரா ப்ரசாத்தின் நடத்தை அன்றைய தினத்தில் தனது தோழியைக் காயப்படுத்தியதால் அவனை அடித்து துவைத்தாள் தான். ஆனால் அதற்காக இன்னமும் அதே கோபத்தை ப்ரசாத்தின் மீது சுமந்து கொண்டு இருக்கிறாளா என்றால் இல்லை. 
இப்போது அவன் அதிர்ந்து நின்றிருந்த கோலமே கண்முன்னிருக்க அவனை இப்படியே விட்டுச் செல்வதும் தவறாகவே பட்டது. சீனிவாசன் அடிக்கடி சொல்வார் ‘தவறு செய்தவன் தனது தவறுக்கான பொறுப்பேற்று அதை சரி செய்வதே அதற்கான சிறந்த பரிகாரம்’ என்று. இப்போது லேபில் நடந்த விஷயத்திற்கு தானும்  அல்லவா பொறுப்பேற்க வேண்டும். அதை விட்டு விட்டு இப்படி ஒன்றும் சொல்லாமல் ஓடிப்போவது நியாயமில்லை என்றே தோன்றியது.
பாதி தூரம் போனவள் மீண்டும் திரும்பி லேபை நோக்கி நடந்தாள். இதற்குள் மைக்கேல் ப்ரசாத்தை ஒருவழியாக நடப்பிற்கு கொண்டு வந்து அவனை வெளியே அழைத்து வந்திருந்தான். நேத்ரா அங்கே வரும் போது இருவரும் வெளியில் இருந்த பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நேத்ராவைக் கண்டதும் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி கேள்வியாய்ப் பார்த்த மைக்கிடம் “ஐம் ஈக்வலி ரெஸ்பான்சிபல் ஃபார் திஸ். அதனால் சேர்ந்தே இதுக்கு பொறுப்பெடுத்துப்போம்” என்றாள்.
‘வேண்டாம் நீ போ’ என்பதாய் மைக் சைகை காட்டியும் அசையாமல் நின்றிருந்த நேத்ராவைப் பார்த்த ப்ரசாத் “ஐம் வெரி சாரி. நான் மிருகம் மாதிரி நடந்துகிட்டேன். கோபம் என் கண்ணை மறைச்சிருச்சு. தப்பு தான். என்னை மன்னிச்சிடு.” என்றவன் நேத்ராவின் முன் தலைகுனிந்து நின்றான். “ஹேய் இட்ஸ் ஆல்ரைட். இனி யாரோட பலவீனத்தையும் கேலி பண்ணாத. அவ்வளவு தான். வா கெமிஸ்ட்ரி டீச்சர் கிட்ட போய் சொல்லலாம்.” என்றாள். ‘ என்னடா பீஸ் இவ.’ என்பதாய் பார்த்திருந்த மைக்கைப் பார்த்து ஒரு சின்ன புன்னகை சிந்திய நேத்ரா “ஐ டோண்ட் வாண்டு மிஸ் த ஃபன்.” என்றாள் கண் சிமிட்டியபடி.
இது தான் நேத்ரா. நூறு சதவிகிதம் அக்மார்க் நல்லவள் என்றும் முத்திரை குத்திவிட முடியாது. அதே சமயம் தவறென்று பெரிதாக செய்வதும் கிடையாது.சராசரி மனுஷி. ஆனால் கொஞ்சம் மனசாட்சி அதிகமாகவே தலைகாட்டி அதனால் அவ்வப்போது தவறுகள் கண்ணில் படும்போது தட்டிக் கேட்பாள். அவளும் வால்தனங்கள் செய்வாள் தான். விதிகளை மீறுவாள் தான். ஆனால் அவள் செய்யும் விஷயங்கள் பிறர் நோகா வண்ணம் பிறரைக் காயப்படுத்தா வண்ணம் இருக்கும்.
இப்போதும் கெமிஸ்ட்ரி டீச்சரிடம் ப்ரசாத்துடன் சென்று நடந்தவற்றைச் சொல்லி இருவருமாக ஒரு வாரம் சஸ்பென்ஷனை சந்தோஷமாக வாங்கிக் கொண்டார்கள்.  இவளது எதையும் அசால்ட்டாக எடுத்துக் கொள்ளும் குணம் மைக்கேலை கவர்ந்தது தான். ஆனாலும் இவள் இப்படி ஏதாவது செய்து பெரிய ப்ரச்சனைகளில் மாட்டிக் கொள்வாளோ என்ற பயமும் அதிகமாகவே இருந்தது. 
கேண்டீனில் போடப்படும் உப்புமாவில் ரவையின் தரம் மோசமாக இருந்தது என ஒருமுறை மாணவர்களுடன் சேர்ந்து ப்ரின்ஸிபலின் அறைக்கு படையெடுத்தாள். சும்மா வெறும் வாய்ப்பேச்சால் சொன்னால் நம்ப மாட்டார்கள் என இவள் புழுக்கள் இருந்த உப்புமாத் தட்டையும் ஒலிம்பிக் தீபம் போல் ஏந்திக் கொண்டே கேண்டீனில் இருந்து ப்ரின்ஸிபலின் அறை வரை அரசியல் ஊர்வலம் போல் சென்று புகார் அளித்தாள்.கேண்டீன் கான்ட்ராக்ட் வேறு ஒருவருக்கு மாற்றப்பட்டது அதன்பின்.
ஒருமுறை மாணவிகளிடம் ஓவராக வழிந்த டிராயிங் மாஸ்டரின் வகுப்பில் இருந்து சன்னல் வழியாக வெளியேறி போய் தங்கள் வகுப்பாசிரியரை அழைத்து வந்து அவரிடம் நடப்பதைக் காட்டி அந்த மாஸ்டருக்கு மெமோ வாங்கிக் கொடுத்தாள். அவளைப் பொறுத்தவரை தவறு செய்தால் அதற்கான தண்டனையையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். 
இன்டர்ஸ்கூல் காம்படிஷனில் மைக்கேலின் உதவியால் இவர்களுக்கு முதல் பரிசு கிடைத்த போது அவனிடம் சென்று “திஸ் ப்ரைஸ் இஸ் யுவர்ஸ்.” என்றாள் கைகுலுக்கி. அவனோ “நாட் ஜஸ்ட் மைன் ஸ்பிரிங். திஸ் இஸ் அவர்ஸ்.” என்றான் குலுக்கிய கைகளை விடாது. மற்ற அனைவரும் மைக்கேலின் பெருந்தன்மையை பாராட்டியபடி செல்ல நேத்ராவிற்கவோ இவனது வார்த்தையில் வேறெதுவும் தொணித்ததோ என்ற சந்தேகம் வர அவனையை ஆழ்ந்து நோக்கினாள்.
இப்போதெல்லாம் நேத்ராவால் மைக்கேலின் கண்களைப் பார்த்து பேச முடிவதில்லை. பொதுவாகவே யாராக இருந்தாலும் கண்களைப் பார்த்து பேசுபவள் அவள். ஒருவரின் கண்களைப் பார்த்து பேசும் போது ஓரளவு அவர்களால் உண்மையை மட்டுமே பேச இயலும். ஏனோ மைக்கேலின் கண்கள் அவளை உள்ளிழுத்துக் கொள்வது போன்ற உணர்வு. அவன் பார்வை அவளுக்கு ஏதோ சொல்லத் துடிப்பது போன்ற உணர்வு. அவளால் அவனது பார்வையின் தாக்கத்தை புரிந்தது கொள்ள இயலவில்லை.
இவளுக்காக என்று நிறைய விஷயங்கள் பார்த்துப் பார்த்து செய்கிறான். இவளைமே நிழல் போல பல நேரங்களில் தொடர்கிறான். முதலில் எதேச்சையாக நடப்பது போன்று இருந்தது இப்போது நேத்ராவிற்கு தெளிவாகவே புரிந்தது. ஒரு வேளை அவனுக்கும் தன்னைப் போன்றே ஈர்ப்பாக இருக்குமோ என்ற எண்ணம் வரவே அவனிடம் கேட்டு விடலாம் என்று தோன்றியது.
காம்படிஷன் முடிந்த அன்று இவர்கள் அனைவரும் பள்ளி பேருந்தில் பள்ளிக்கு திரும்பி வரும் வழியில் கடைசி வரிசை இருக்கையில் தான் இடம் கிடைத்தது நேத்ராவிற்கு. அவளும் அவளது எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் என்று அழைக்கப்படும் பானுவுமாக கடைசி வரிசையில் அமர அது வரையில் வெளியே நின்றிருந்த மைக்கேல் வந்து இவர்களுடன் இணைந்து கொண்டான்.
இதைவிட தனது சந்தேகம் தீர நல்ல சந்தர்ப்பம் அமையாதென்பதால் மெல்ல அவனிடம் “ஒய் டு யூ ஃபாலோ மீ ஆல் டைம்?” என்றிருந்தாள். அவளது கேள்வியை எதிர்பார்த்திருவன் போல் சற்றும் அலட்டிக் கொள்ளாமல் “இஃப் யூ ஆர் மைன் பேபி, தென் ஒய் ஷுட் ஐ நாட்? உன் பின்னாடி நான் வராம வேறு யாரு வருவாங்க?” என்று சர்வசாதாரணம் போல் சொல்லிவிட்டு பானுவிடம் ஏதோ கதைக்கத் திரும்பினான்.
இதை எதிர்பார்த்திருந்தும் ஏனோ அதிர்ச்சியாய் சமைத்து போனாள் நேத்ரா.
கவிதையாவாள்!!!!!!!!!

Advertisement