Advertisement

13 – முத்தக் கவிதை நீ
சிலருக்கு அவர்கள் வேண்டும் விஷயம் எல்லாம் கஷ்டப்பட்டு தான் கிடைக்கும். சிலருக்கோ தானாக எல்லாம் வந்தமையும். ஆனால் அது நீடிக்குமா என்பது தான் கேள்வி. மைக்கேல் இந்தியா வந்ததுமே எப்படி தனது பேபியை கண்டுபிடிக்க என்று திணறிய போது மாமியின் வடிவில் பதில் கிடைத்தது. இப்போது பெங்களூரில் எங்கே என்று தலையைக் குடையும் கேள்விக்கான பதிலும் ஹரிணியின் வடிவில் வந்தது. அவன் அந்த புகைப்படத்தை அப்லோட் செய்த ஐந்தாவது நிமிடம் தி டெட்டி கேர்ள் என்ற ப்ரொஃபைலில் இருந்து ஒரு குறுஞ்செய்தி அவனுக்கு வந்தது.
“ஹேய் மேன்!! நீங்க எங்க ஸ்பிரிங்கின் ஹீரோ!!!! அதனால உங்களுக்கு ஸ்பிரிங் பத்தி விபரங்களுக்கு நான் உதவறேன். வீ ஆல் லைக் யூ பிகாஸ் ஆஃப் தி லவ் யூ ஹேவ் ஃபார் ஸ்பிரிங். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.” என்று வந்த செய்தி அவனை அவனது சீட்டில் இருந்து துள்ளிக் குதிக்க வைத்தது. அவனை விநோதமாக வேற்று கிரகவாசியாய் பார்த்து வைத்த அடுத்த சீட் பையனிடம் ஒரு சிரிப்பைச் சிந்தி சமாளித்து வைத்தான்.
அவனைத் தேடி வந்து ஏர்ஹோஸ்டஸ் அவனிடம் மொபைலை ஃப்ளைட் மோடில் இடச் சொல்ல, மைக்கேலுக்கு வேறு வழியின்றிப் போனது. எப்போதடா பெங்களூர் சென்று தரைமிறங்குவோம் என்று சீட்டில் தவமிருக்கத் துவங்கினான். தனக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பெண் நம்பத்தகுந்தவளா என்ற சந்தேகம் திடீரென எழுந்தது. ஏனென்றால் ஸாஷா இப்படி ஒரு நாடகம் ஆடுவாள் என்று நினைத்தும் பார்த்திராத போது இனியும் இப்படி ஏதாவது செய்ய மாட்டாளென என்ன நிச்சயம்.
விமானம் பெங்களூரை அடைய எடுத்த அந்த ஒருமணி நேரமும் மைக்கேலுக்கு முள்ளின் மேல் அமர்ந்த நிலை தான். தனக்கு வந்த குறுஞ்செய்தி உண்மையென்றால் தன் பேபி இன்னும் தன்னைப் பற்றியே எண்ணியிருத்கிறாள் என்பதும் உண்மை தானே. நினையாத ஆளைப்பற்றி மற்றவரிடம் பேச வேண்டிய அவசியம் இல்லையே. அப்படி உண்மை என்னும் பட்சத்தில் முதலில் பேபியைச் சென்று பார்க்க வேண்டும். இருந்த இடத்திலேயே இறக்கையின்றி பறக்கும் உணர்வு. (ஃப்ளைட்ல இருந்தா அப்படித்தானே இருக்கும்)
பெங்களூரை அடைந்ததும் தனது லக்கேஜை சென்று எடுத்துக் கொள்ளும் ஆர்வம் கூட இன்றி ஃப்ளைட்டை விட்டு வெளியேறியதும் தனக்கு செய்தி அனுப்பிய பெண்ணிற்கு பதில்அனுப்பினான். “நீங்கள் ஸாஷாவின் கையாளா?” என.  எதிர்முனையில் இருந்து எந்தவிதமான பதிலும் வராததால் சற்றுக் காத்திருந்தான் பின்பு அலுப்புடன் தனது லக்கேஜ்களை எடுக்கச் சென்றான்.
விண்டோ ஷாப்பிங் என்று நான்கு மணி நேர அலைச்சல் நல்ல களைப்பை உருவாக்கியதால் மியாவும் நேத்ராவும் அசந்து உறங்கிவிட மைக்கேலுக்கு செய்தி அனுப்பிய ஹரிணி அவனது பதிலுக்காக காத்திருந்தாள். சிறிது நேரத்தில் அவளுமே தன்னை மறந்து அமர்ந்த நிலையிலேயே உறங்கிப் போனாள். மாலை எழுந்தவளுக்கு முதல் வேலையே தனது செய்திக்கான பதில் வந்ததா என்று பார்ப்பதாகத் தான் இருந்தது.
மைக்கேலிடம் இருந்து வந்த கேள்வி முதலில் டெட்டியை கோபப்படுத்தியது. ‘இருந்திருந்து இவனுக்கு உதவி செய்யனும்னு நினைச்சா இப்படி கேட்கிறானே. சுத்த வேஸ்ட்டு டா தம்பி நீ’ மனசுக்குள் அவனைத் திட்டித் தீர்த்த பின்பு அவனது கேள்வியின் பின் இருக்கும் நியாயத்தை உணர்ந்தவளாய் அவனுக்கு பதில் அனுப்ப முடிவு செய்தாள்.
தாங்கள் மூவரும் இருக்கும் புகைப்படத்தை எடுத்து அதில் தங்கள் இருவரின் முகத்தையும் கண்டுபிடிக்க இயலாதவாறு ப்ளர் செய்து அவனுக்கு அனுப்பி “இதுவரை நான் பார்த்திராத சகோதரா. எனக்கு என் நேத்ரா வின் சந்தோஷம் ரொம்பவே முக்கியம். அப்படி இருக்கையில் அவள் வாழ்க்கையில் எந்த ரிஸ்க்கும் நான் எடுக்க விரும்ப மாட்டேன். உங்களைப் பற்றிய அவளது கருத்துக்களும் நம்பிக்கையுமே இந்த செய்தியை நான் அனுப்ப காரணம். இதுவுமே அவளுக்குத் தெரியாமல் தான் அனுப்புகிறேன். நீங்கள் பெங்களூர் வந்தால் எனக்குச் செய்தி அனுப்புங்கள்” என்று அனுப்பி விட்டுத் தனக்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்பது போல் தனது வேலைகளில் மூழ்கிப் போனாள்.
உறங்கி எழுந்த மியாவின் தலையைக் குடைந்த கேள்வி “மைக்கேல் அப்லோட் செய்த ஃபோட்டோவை நேத்ராவின் வீட்டில் எவரேனும் கண்டுவிட்டால் அடுத்து என்ன??. இந்த வெளிநாட்டு விநோதம் ஏன் இவ்வளவு அவசரப்பட்டதோ?????” என்பது தான். எழுந்ததும் முதல் வேளையாக அந்த புகைப்பட்த்தில் யாரெல்லாம் கமெண்ட்டிருக்கிறார்கள் என்று பார்த்தாள். மாடலிங் உலகில் உள்ள பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தும் அடுத்து மைக்கேலின் மாடலிங் துறை சம்பந்தபட்ட ப்ளான் என்று கேட்டும் கமெண்ட்கள் குவிந்திருந்தன.
குறிப்பிடும்படியான எந்த அனர்த்தமோ யாருடைய துவேஷமுமோ இல்லாததால் சற்றே நிம்மதியடைந்தவள் ஹரிணியிடம் தனது சந்தேகத்தை கேட்டாள். சற்று நேரம் அமைதியாக இருந்த ஹரிணி “இப்போதைக்கு உடனேயே எந்த பாதிப்பும் இருக்காது. ஆனா பாரு இணையம் நல்லது கெட்டது ரெண்டும் கலந்தது. அதனால் இதை இப்படியே விடவும் முடியாது. கீர்த்தி அண்ணாவுக்கும் தெரிஞ்சவங்க யாரும் பார்த்து சொல்லாத வரை ஒன்னும் ஆகாது. நம்ம மேடமும் மொபைல் உபயோகிக்கிறதில்லை. ஆனா சீக்கிரமா இந்த ஃபோட்டோவை எடுக்கனும். அதுக்கான வேலையைச் செய்யனும்” உறுதியான குரலில் சொன்னாள்.
“டா டெட்டி நீ பேசறதெல்லாம் பார்த்தா நீ ஏற்கனவே ஏதோ பண்ணிட்டா மாதிரி தான் இருக்கு. என்னடா பண்ணின?” என்றாள் மியா. “ஒரு கேள்வி கேட்ட நீ. அதுக்கு பதில் சொன்னேன். உடனே என்னவோ நான் ஏதோ பண்ணிட்டா மாதிரி பேசறியே. போம்மா போய் ஸ்பிரிங்க பள்ளியெழுப்புங்க.கும்பகர்ணி இப்படியா தூங்குவா?” அலுத்துக் கொள்வது போல் மியாவின் கவனத்தை திசைதிருப்பினாள்.
மியா சென்று நேத்ராவை எழுப்ப முயலும் நேரத்தில் தனது மொபைலில் இருந்து கடகடவென சில செய்திகளை அனுப்பி முடித்தாள். பின் தனது வழக்கம் போல் காதில் ஹெட்ஃபோனை மாட்டியபடி ஏஆர் ரகுமானுடன் இசை உலகில் ஆழ்ந்து போனாள். மனம் மட்டும் ஓயாது ப்ராத்தித்தது “கடவுளே!! எங்க பேபி தனக்குத் தானே குடுத்துக்கிற தண்டனை போதும். இனியாவது அவளை சந்தோஷமா வாழவைங்க” என்று.
தூங்கி எழுந்து வந்த நேத்ராவிற்கு ஓரளவு தெளிவு வந்திருந்தது.  மியாவிடமும் டெட்டியிடமும் தெளிவாக பேசிவிட வேண்டும் என்று எண்ணியிருந்தாள். அவளுக்கு நன்றாகத் தெரியும் தனக்காக இவர்கள் இருவரும் எந்த ஒன்றையும் துணிந்து செய்வார்கள் என. ஆனால் குடும்பமா தானா என்று வரும் போது எக்காரணம் கொண்டும் தன்னால் குடும்பத்தை விட்டுக் கொடுக்க இயலாது என்பதும் நன்றாகவே புரிந்தது.
மியாவையும் ஹரிணியையும் அழைத்தவள் “பேபீஸ்!! எனக்கு நல்லாத் தெரியும் என் மேல் நீங்க ரொம்பவே அன்பு வச்சிருக்கீங்கனு. ஆனா இந்த மேக்னெட் விஷயத்துல நீங்க என்னைக் கேட்காம எந்த ஒரு முடிவையும் எடுக்க மாட்டேன் னு எனக்கு சத்தியம் பண்ணிக் குடுங்க. ப்ளீஸ். ஏன்னா இது நான் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமில்லை. நான் எதுக்காக அவனை வேண்டாம்னு சொன்னேன்னும் உங்ககிட்ட சொல்லியிருக்கேன். என்னை புரிஞ்சுப்பீங்க தானே” பார்வையால் மன்றாடினாள் நேத்ரா.
மியாவுக்கு ஆதங்கம். அவள் ‌பார்த்த நேத்ரா இதுவரை எதற்கும் ஆசைப்படாதவள். அவளுக்கான ஒரே ஆசை காதல் எல்லாம் இவன் தான். ஆனால் அவனையும் தனது குடும்பத்துக்காக இழக்க வேண்டுமா என்று ஆற்றாமை பொத்துக் கொண்டு வந்தாலும் வேறு வழியின்றி நேத்ராவின் கைகளில் கரம் பதித்தாள். அவள் கையை வைக்கும் போதே அவளது கையை சரேலென தட்டிவிட்ட டெட்டி “லூசா பேபி நீ!! அவ தான் பித்தம் தலைக்கேறிப் போய் ஏதோ உளர்றான்னா நீ அவளுக்கு மேல் ஆடற?” கண்கள் சிவக்க பொரிந்தாள்.
“டெட்டி ப்ளீஸ். என்னைப் புரிஞ்சுக்கோ. ப்ளீஸ் ஐ பெக் யூ” என்று கைகளைக் கூப்பியபடி மண்டியிடவும் ‘ஐயோ இவ ஓவர் டிரமேடிக்கா பேசறாளே!!! இப்போ இந்த மியா கவுந்திருவாளே!! என்ன செய்யலாம். யோசி ஹரி!!!’ தனக்குள்ளேயே புலம்பித் தள்ளினாள் ஹரிணி.  ஆனால் அவள் நினைத்தது போலவே மியா நேத்ராவின் அழுகையால் உருகி “உன்கிட்ட சொல்லாம நான் எதுவும் செய்ய மாட்டேன் பேபி” என்று சத்தியம் செய்து விட்டாள்.
அடுத்து ஹரிணியைப் பார்த்து கையை நீட்டியவளிடம் இவளை என்ன சொல்லி சமாளிப்பது என்று மனதிற்குள் அவசரமாக கணக்கிட்டபடியே அவளைப் பார்த்தவள் “எனக்கு மனசுல பட்டத நான் சொன்னேன் பேபி. அதுக்காக நீ இவ்வளவு அழனுமா? ஏய் டெட்டி இப்படிச் செய் இப்படி செய்யாதன்னு சொன்னா உடனே கேட்டுக்கப் போறேன். இப்போ என்ன உன்னோட பர்மிஷன் இல்லாம நான் எதுவும் செய்யக் கூடாது. அவ்வளவு தானே. நீ சொல்லாம நான் சாப்பிடக் கூட மாட்டேன். போதுமா. இதுக்கும் போய் இவ்வளவு டென்ஷனா? இந்த கீர்த்தியண்ணாகிட்ட சண்டை தான் போடனும்பா. இப்படி ஒரு அழுமூஞ்சிய நம்மகிட்ட தள்ளிட்டாங்களே” அலுத்துக் கொண்டபடி நேத்ராவைக் கட்டிக் கொண்டாள்.
அவள் எண்ணியது போலவே நேத்ராவின் கவனம் திசை மாறி “நான் அழுமூஞ்சியா? இரு உன்ன…..” என்று துரத்த துவங்கினாள்.  “ஐயையோ என் உயிருக்கு ஆபத்து. யாராவது காப்பாத்துங்களேன்.” என்று வெளியே கேட்காதபடி ஓலமிட்டுக் கொண்டே அறையைச் சுற்றி இவள் ஓட மற்ற இருவரும் துரத்தினர். ஹரிணி மனசுக்குள் சிரித்துக் கொண்டாள் ‘சத்தியமா கேட்கிற? நானெல்லாம் சத்தியம் பண்ணிட்டாலும்’ என்று. அன்றிரவு மறவாது அவனுக்கு மெஸேஜ் செய்து அடுத்த கட்ட நடவடிக்கையை உறுதி செய்து கொண்டாள்.
——————————————————————————————————————————————
“ஆர் யூ சீரியஸ்? யூ டோண்ட் ரிமம்பர் மீ?” குரலில் ஆச்சர்யத்துடன் ஏமாற்றத்தின் வலியும் போட்டிபோட்டது மைக்கேலுக்கு. வேறு யாரும் தன்னை நினைவில்லை என்று சொல்லியிருந்தால் இவ்வளவு தைத்திருக்காதோ? யாருக்காக இத்தனை வருடங்கள் காத்திருந்தானோ, யாருக்காக கடல்கடந்து சொந்தம் பந்தம் தாய்மண் என அத்தனையையும் விட்டுவிட்டு வந்தானோ அவளுக்குத் தன்னை தெரியவில்லையா? நம்ப முடியாத பார்வை ஒன்றைப் பார்த்தான்.
‘இவன் எப்போதடா வழிவிடுவான் நாம் வகுப்புக்குப் போகலாம்?’ என்று சிந்தித்தவாறே தன் ஜீன்ஸ் பாண்ட்டின் பாக்கெட்டுக்குள் கைகளை விட்டுக்கொண்டு கால் மாற்றி கால் நின்று தன் பொறுமையின்மையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள் நேத்ரா. பென்சில் ஹீல்ஸ் அணிந்தும் கூட அவனைவிட குள்ளமாகவே தெரிந்தாள். அதுவேறு கடுப்பாக இருந்தது. 
“யூ ஹேட் லாங் ஹேர் பிஃபோர். ஐ நோ இட்ஸ் யூ. உனக்கு ஞாபகமில்லையா?” இவளுக்காக தான் கற்றுக் கொண்ட தமிழில் மழலை கொஞ்ச பரிதாபமாகக் கேட்டான் மைக்கேல். “ஐம் சாரி. ஐ கெஸ் நீங்க யாரோன்னு நினைச்சு என்கிட்ட பேசறீங்க. ஐம் நாட் ஹூம் யு திங்க். ஒகே!” என்று உறுதியாகச் சொல்லிவிட்டு ஒதுங்கி அவனிடம் இருந்து விலகி நடந்து தன் வகுப்பிற்குள் நுழைந்தாள்.
படபடப்பு அதிகமாகியது. முன்னே பின்னே பொய் சொல்லி பழக்கமிருந்தால் பரவாயில்லை. முதன்முதலாக பொய் சொன்னால் இப்படித்தான் ஆகுமோ. வகுப்பிற்குள் வந்து தன்னிருக்கையில் அமர்ந்து தண்ணீர் அருந்தியும் படபடப்பு குறையவே இல்லை. ஒருவேளை அவன் வகுப்பிற்கும் வந்துவிடுவானோ என்ற பயம் அதிகமாகவே இருந்தது.
யாருக்கும் தெரியாமல் ஓரப்பார்வையால் வாயிலை நோக்கவும் வகுப்பிற்கு வெளியில் இருந்த தூணில் சாய்ந்து அவளையே வெறித்தபடி அவன் பார்க்கவும் சரியாக இருந்தது. மாட்டுனியா நேத்ரா!!!!!
கவிதையாவாள்!!!!!!!!

Advertisement