Advertisement

11 – முத்தக் கவிதை நீ
வாழ்க்கையில் சிலது நடக்கும் என்று நினைப்போம். ஆனால் தட்டிப் போகும். நம் கைவிட்டுப் போனதென்று சிலவற்றை ஒதுக்கி நம்பிக்கை இழந்திருப்போம். ஆனால் எதிர்பாராத வேளையில் எதிர்பாராத விதமாக நமக்கு நம்பிக்கை பொய்த்த விஷயங்கள் நடந்து நம்மைத் திக்குமுக்காட வைத்து விடும். மைக்கேலுக்கு இப்போது அப்படித்தான் இருந்தது. அவனுக்கிருந்த சந்தோஷத்தில் அந்த மைலாப்பூரே அதிர்ந்து போகும் அளவு ஆடியிருப்பான் ஒரு ஸால்சா நடனம்.
இவ்வளவு விஷயங்களை யாரென்று கூடத் தெரியாத தன்னிடம் தெளிவுபடுத்திய  மாமி அவனுக்கு தெய்வமாகவே தெரிந்தார். இதே அவர்கள் தேசமாக இருந்தால் மாமியை தூக்கி ஒரு சுற்றேனும் சுற்றித் தன்னுடைய சந்தோஷத்தை தெரிவித்திருப்பான். ஆனால் அப்படி எதுவும் இங்கு செய்தால் தனது உயிருக்கு உத்திரவாதம் இருக்காது என்பதால் விரிந்த புன்னகை ஒன்றை சிந்தி வைத்தான்.
இவ்வளவு சொன்ன மாமி பேபி பெங்களூரில் என்ன செய்கிறாள் எங்கு இருக்கிறாள் என்றும் சொல்லி விட்டால் நன்றாக இருக்கும். ஆனால் இதை எதிர்பார்ப்பது கொஞ்சம் இல்லை ரொம்பவே அதிகம் என்று புரிந்தபடியால் மௌனம் காக்க வேண்டியதாகிப் போனது மைக்கேலுக்கு. பேபி தன்னை பிரிந்ததற்கான காரணமும் நினைவு வர முடிந்தவரை யாருக்கும் எந்த க்ளூவும் குடுக்க இஷ்டமில்லை.
அவன் மெல்ல எழுந்து நிற்கவும் மாமி “ஏன்டாப்பா அம்பி! கிளம்பிட்டியா? கமலா வந்தா யாரு வந்துட்டுப் போனதா சொல்லனும். இல்லை நீயே கீர்த்தியாண்ட பேசிடறியா?” கேள்வியும் நானே பதிலும் நானேவாக மாமி பேச,மைக்கேலுக்கு மாமி மயிலை கபாலீஸ்வரர் கோயில் கற்பகாம்பாளாகவே தெரிந்தாள்.  “நான் கால் பண்ணிக்கறேன்” என்று தனது மொபைலை எடுத்து காதுக்குக் கொடுத்தவனாக மெல்ல அகல முயன்றான். திடீரென ஏதோ நினைவு வந்தவனாக மாமியின் புறம் திரும்பி “தாங்க் யூ” என்று இரு கைகளையும் கூப்பி வணங்கி விட்டு திரும்பி நடந்தான். 
அவன் தங்கியிருந்த தி பார்க் ஹோட்டலுக்கு வந்தடைந்தான். அதன் லாபியில் அமர்ந்து சற்று நேரம் ஆர்ப்பரித்த மனதை தன்னை புரட்டிப் போடும் நினைவுகளைக் கட்டுக்குள் அடக்க முயற்சி செய்தான்.  ஏதோ குருட்டு நம்பிக்கையில் இந்தியா கிளம்பி வந்துவிட்டான் தான். அவனுக்கு என்னவோ ஒரு நம்பிக்கை ஒரு உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்தது. அவன் எப்படி அவனது பேபிக்காக தவிக்கிறானோ அதே தவிப்பு அவளுக்கும் இருக்கும் என. அவளும் தன்னையே எண்ணிக் கொண்டிருப்பாள் என.
அவனுக்கு எப்படியும் அவனது மேற்படிப்புக்காக பெங்களூர் தான் செல்ல வேண்டி இருந்தது. இந்த மேற்படிப்பு விஷயமே அவன் இந்தியா வருவதற்காக உபயோகித்த ஒரு சாக்கு தானே. இதுவரை தனக்கு துணையிருந்த அதிர்ஷ்டம் இனியும் உடனிருந்து தன் பேபியை தன்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்பினான். 
தான் சேரவேண்டிய யுனிவர்சிட்டி அது இருக்கும் இடம் அங்கு செல்லும் வழிமுறை மேலும் அங்கு தான் தங்குவதற்கான ஏற்பாடுகள் என எல்லாவற்றையும் இவன் கூகுள் செய்து கொண்டிருந்தான். இவன் தனது மொபைலில் ஆழ்ந்திருக்கும் நேரம் யாரோ இவனது அருகில் வந்து அமர்ந்து புரிபட்டது. ஆனால் ஏனோ தலை நிமிர்ந்து பார்க்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. எப்படியும் தனக்குத் தெரிந்தவர்கள் என்று இந்த ஊரில் யாரும் இல்லையே என்ற எண்ணம் தான். தவிர ஒரு ஹோட்டலின் லாபி என்றால் ஆயிரம் பேர் வருவார்கள் இதில் யார் வேண்டுமானாலும் வந்து அமரலாமே என்ற எண்ணம் வேறு.
“ஹேய் மைக்!! என்ன ரொம்ப நேரமா மொபைலயே பார்த்திட்டு இருக்க? பக்கத்துல யார் வந்து உட்கார்றாங்கனு கூட பார்க்க மாட்டியா?” மீண்டும் குயில் கூவ தன்னருகில் அமர்ந்தது யாரென்று நன்றாகவே புரிந்தது மைக்கேலுக்கு. அவள் புறம் திரும்பாமலே “ஸாஷா ஐம் பிஸி ப்ளீஸ்” என்றபடி தனது வேலையில் ஆழ்ந்தான்.
“ஓ கமான் மைக். இங்கே இந்தியாவுக்கு வந்து உனக்கு என்ன வேலை இருக்கப் போகுது. நீ இங்க சிங்கிள் ஸ்யூட் தான் எடுத்திருக்க. நான் பார்த்தேன். ஆல்ஸோ இங்கே நீ யாரையும் மீட் பண்ணினா மாதிரி எனக்குத் தெரியல. நானும் ஃப்ரீயா தான் இருக்கேன். ஒய் டோண்ட் வீ  ஹேவ் எ வெகேஷன் டுகேதர்?” மெல்ல மைக்கேலின் கைகளுக்குள் தன் கைகளை கோர்க்க முயன்றபடி கேட்டாள் ஸாஷா.
பட்டென்று கையை உதறியவனாய் எழ முயற்சி செய்து பின் ஹோட்டலில் மற்றவரது கவனத்தை ஈர்க்க வேண்டாமென்று  தோன்ற அவளிடமிருந்து விலகிச் சென்று சற்றுத் தள்ளி அமர்ந்தான். அவனது இந்த மறுப்பு அவளிடம் கொஞ்சம் கூட எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை அவளிடம். ஒரு வேளை அப்படி அவள் காட்டிக் கொண்டாளோ!! தன்னிடம் இருந்து விலகிய மைக்கேலின் அருகில் சென்று அமர்ந்தவள் மேலும் தனது கிள்ளை மொழிப் பேச்சைத் தொடர்ந்தாள்.
“கமான் மைக். சாமியார் வேஷம் போடாதே. இது ஆஸ்திரேலியா இல்லை. இங்கே யாருக்கும் நீ என்ன பண்றனு தெரியாது. நானும் ஃப்ரீயா தான் இருக்கேன். எனக்கு இது வெகேஷன் மாதிரி தான். ஸோ……” என்று மேலும் பிதற்ற அப்போது தான் மைக்கேலுக்கு அவளிடம் இருந்து மதுவின் வாடை அடிப்பது புரிந்தது.
இவள் நிதானத்தில் இல்லை. இப்போது எது சொன்னாலும் இவளுக்கும் புரியப் போவதுமில்லை என்பது புரிய இங்கிருந்து நகர்ந்து விடலாம் என்று முடிவு செய்தான். ஆனால் அவள் அமர்ந்திருந்த கோலம் அவனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டியதாயிற்று. அணிந்திருந்த ஸாட்டின் கௌனும் தொடைக்கு மேலேறிப் போய் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்ப்பது போல் இருந்தது.
.
நமக்கென்ன என்று நகர்ந்து விட மனமில்லை மைக்கேலுக்கு. அந்த இடத்தில் யாராக இருந்தாலும் அவன் விட்டுவிட்டு போக மாட்டான். எனவே “ஸாஷா!! இந்த ஹோட்டல்ல தான் ரூம் எடுத்திருக்கியா?” என்று கேட்டான். ஆம் என்று ஆமோதிப்பாய் தலையை ஆட்டினாள். மது போதையின் உச்சத்தில் இருந்ததாலோ என்னவோ அவளால் இப்போது தலையை நிமிர்த்தி  கூட பார்க்க இயலவில்லை.
தடுமாற்றத்துடன் தன் கைப்பையைக் குடைந்து தனது ரூமிற்கான சாவியை எடுத்து மைக்கேலின் கையில் திணித்து விட்டு அவனது தோளில் சரிந்து விட்டாள். இவளை மெல்ல தன் மேல் சாய்த்து அப்படியே எழுந்து அவளது இடுப்பைப் சுற்றி பிடித்துக் கொண்டு மெல்ல நடந்து சென்று லிஃப்ட்டை அடைந்தான். லிஃப்டிற்குள் செல்லும் போது ஏதோ காமிரா ஃப்ளாஷ் அடித்தாற் போன்ற உணர்வு ஏற்பட்டது மைக்கேலுக்கு. ஆனால் திரும்பி பார்த்த போது அப்படி எதுவும் தட்டுப்படாது போக நாலாவது ஃப்ளோருக்கான பொத்தானை அழுத்தினான்.
ஒருவழியாக ஸாஷாவை அவளது ரூமிற்குக் கொண்டு சென்று அவளது பெட்டில் தள்ளிவிட்டு அவளது பிதற்றல்களை காது கேளாதவன் போல் கடந்து வந்து தனது அறைக்கு வந்து சேர்ந்த போது மணி பத்தரை ஆகியிருந்தது. ஏனோ உடம்பெல்லாம் அடித்துப் போட்ட உணர்வு.  பாத்ரூமிற்குள் நுழைந்தவன் நல்ல வெந்நீர் குளியல் ஒன்றைப் போட்டு விட்டு வெளியேறும் போது அவ்வளவு புத்துணர்வாய் உணர்ந்தான்.
தனது வழக்கம் போல் படுக்கும் முன்பு தனது வாலட்டில் இருந்த அந்த மங்கிய புகைப்படத்தில் லயித்து அதனுடன் பேசத் துவங்கினான். ஆறு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் அது. அன்று பள்ளியில் ஏதோ போட்டிகள் நடக்க அவனது பேபி பரதநாட்டியம் ஆடிவிட்டு வந்ததும் அவளுடன் சேர்ந்து அவன் எடுத்துக் கொண்ட புகைப்படம். அவள் நினைவாக அவனிடம் இருக்கும் ஒரே புகைப்படமும் இதுவே.
அந்த ரத்தச் சிவப்பு பரதநாட்டிய உடையிலும் தலையில் சூடியிருந்த மல்லிகைப்பூ கொடுத்த அழகிலும் அவள் ஆடைக்கேற்ப அணிந்திருந்த அணிகலன்களாலும் ஏனோ தாரகைப் போல ஜொலித்தாள் அவள். “ இது எதுவுமே இல்லாவிட்டால் கூட பேபி நீ ரொம்பவே ப்ரிட்டி தான். சாதாரணமாக ஸ்கூல் யூனிஃபார்ம்ல எந்த மேக்கப்பும் இல்லாம நீ வந்தாலே நான் ஃப்ளாட் பேபி.எங்கே இருக்க பேபி நீ? என்னை மறந்துட்டியா? நான் உன்னைத் தேடி பெங்களுர் வரேன். சீக்கிரமா உன்கிட்ட வந்துருவேன் பேபி. மிஸ் யூ லைக் ஹெல். இந்த முறை ப்ளீஸ் என்னை போனு சொல்லாத. நான் போக மாட்டேன். உனக்காக உன்னோட இடத்துக்கே வந்துட்டேன். இனி இங்கே தான். உன்னோட தான்.”. அவனையும் அறியாமல் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்ட அவன் தனது பேபியுடன் கதைத்துக் கொண்டிருந்தான்.  மறுநாள் காலை பதினொரு மணி ஃப்ளைட் அவனுக்கு பெங்களூருக்கு.
அவ்வளவு நேரம் தனது மனதிலிருப்பதை எல்லாம் கொட்டிக் தீர்த்த நேத்ராவையே கண்கொட்டாமல் பார்த்திருந்த மியாவும் டெட்டியும் அவர்களையும் அறியாது கண்கலங்கினர். நேத்ராவைக் கட்டிக் கொண்ட மியா “பேபி வாட் யூ ஹாவ் டன் இஸ் ஃபார் யுவர் ஃபேமிலி. நீ செஞ்சது சரி தான் பேபி. வருத்தப்படாத. ஐ ஸ்டாண்ட் பை யூ.” என்று அவளைச் சமாதானம் செய்ய முயன்றாள்.
“என்ன புடலங்கா ரைட்டு. மியா நீ அவளைத் தப்பா கைட் பண்ணாத. அவ மனசுக்குப் பிடிச்ச விஷயத்தை எதுக்கு அவ மத்தவங்களுக்காக விட்டுக் கொடுக்கனும். இவங்க ரெண்டு பேரும் பொறுமையா இருந்து கரெக்டான டைம்ல வீட்ல பேசியிருக்கனும். ஐ அக்ரி ஸ்கூல் டைம்ல சொன்னா வீட்டுல டின் கட்டுவாங்க. ஆனா படிப்பு முடிஞ்சதும் வேலைன்னு செட்டில் ஆகிட்டு சொல்லலாமே. வீட்டில புரிஞ்சுப்பாங்க. கீர்த்தி அண்ணா போதுமே இவ சப்போர்ட்டுக்கு. அதை விட்டுட்டு வீட்டு நிலைமையாம், மேடம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டாங்களாம். கேட்கவே காமெடியா இருக்குப்பா” ஆகாசத்துக்கும் பூமிக்குமாய் துள்ளித் கொண்டிருந்தாள் டெட்டி.
“நீ ஏன் இப்போ இப்படி குதிக்கற? இவ சொன்னது நியாயம்னு புரிஞ்சு அந்த மைக் கூட ஒதுங்கிட்டாரு தானே. இது நடக்கும்னு இருந்தா டூ யூ திங்க் ஹீ உட் ஹாவ் லெஃப்ட்? ஸோ நீ அவளை இப்போ குழப்பாத டெட்டி.அவ செஞ்சது சரிதான்.” மியாவுக்கு நேத்ராவை அவளது குற்றவுணர்ச்சியில் இருந்து விடுபட வைக்க வேண்டும் என்ற ஆதங்கம் இருக்க ஹரிணி அவளால் முடிந்த அளவு அதைக் கெடுத்துக் கொண்டிருக்கிறாளே என்ற கோபம் கிளம்பியது.
“நீ எங்கிட்ட வந்து என் வாழ்க்கையில இருக்காதே. போயிடுனு அழுதுகிட்டே சொன்னா எனக்கு வலிச்சாலும் நான் பொறுத்துகிட்டு போகத் தானே செய்வேன். அப்படித்தானே அவரும் செஞ்சிருப்பார். ஆனா எனக்கென்னவோ அந்த மைக் இவளை மறந்திருப்பார்னு தோணல மியா. ஹீரோ வருவார் பாரேன். வந்து என் பேபிய கட்டாயம் தூக்கிட்டுப் போயிருவார் அவர்கூட” நேத்ராவை அணைத்துக் கொண்டு கொஞ்சினாள் டெட்டி.
அவள் சொன்ன விஷயம் ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும் மறுபுறம் இது நடக்காதே என்ற ஆதங்கமும் முன்னிட வந்த அழுகையை விழுங்கியவளாய் அவளது அணைப்பில் ஆழ்ந்து போனாள் நேத்ரா. மியாவும் சேர்ந்து கொள்ள மூவரும் அணைத்த நிலையிலேயே சற்று நேரம் அமர்ந்திருந்தனர். 
ஹரிணி தான் இப்படியே இருந்தால் சரி வராது என்று தோன்ற “பேபீஸ்!!! நாம ஏன் ஷாப்பிங் போகக் கூடாது இப்போ?” என்றாள். “எதுக்காம்?” என்றாள் மியா. ‘என்ன லூசுத்தனமான கேள்வி?’ என்பதான பார்வையை அவளிடம் செலுத்திய ஹரிணி “டு வீ நீட் எ ரீசன் ஃபார் ஷாப்பிங்?” ஒற்றைப் புருவத்தை உயர்த்தியபடி கேட்டாள். அவளது அகராதியில் எந்த விதமான ப்ரச்சனையையும் மறக்க வழி ஷாப்பிங், சாப்பாடு இவை ரெண்டும் தான். 
“மேடம் மாசக்கடைசியில ஷாப்பிங் கூப்பிடுறியே? அக்கௌண்ட்ல நிறைய இருக்கோ?” மியா சந்தேகமாக கேட்க “இவ்ளோ தத்தியாவா இருப்ப மியா நீ? விண்டோ ஷாப்பிங்குக்கு அதெல்லாம் தேவையா?” என்றாள். ஹரிணியின் நாடகத்தனமான முகபாவத்தில் சிரிப்பு பொத்துக் கொண்டு வர கலகலவென சிரித்து விட்டாள் நேத்ரா. அவளது சிரிப்பைக் கண்ட மற்ற இருவரும் அவளுடன் இணைந்து கொண்டனர். 
அடுத்த நாள் வரப்போகும் பூகம்பம் தெரியாமல் மூவரும் தங்களது உலகத்தில் சந்தோஷமாக இருந்தனர். 
கவிதையாவாள்!!!!!!!!!!!!!!!!!

Advertisement