Advertisement

முகவரி 27:

 

நிலா-வினோத் நிச்சயதார்த்தம் அனைவரும் வியக்கும் வண்ணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.ருத்ர மூர்த்தி வியாபார உலகில் பெரும் புள்ளி என்பதாலும்…உதய குமார் புகழ் பெற்ற வக்கீல் என்பதாலும்…. நிச்சயதார்த்தமே கல்யாணத்தை போல் நடந்தது.

எதிர்கால மணப்பெண்ணான நிலா……தேவதையாய் ஜொலிக்க….. வினோத்தோ… தேன் குடித்த வண்டு போல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.நிலாவை அந்த கோலத்தில் பார்த்த உதய குமாருக்கு தன் மனைவியே நேரில் இருப்பது போன்ற பிரமை ஏற்பட…அவரின் கண்கள் தானாக கலங்க ஆரம்பித்தது.

மாலாவோ நிலாவிற்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தார்.இதை எல்லாம் பார்த்த ரம்யாவிற்கு சற்று பொறாமையாகக் கூட இருந்தது.அதே சமயம் அனைவரின் அன்பையும் ஒன்றாய் பெற்ற நிலாவைப் பார்க்கும் போது….ரம்யாவிற்கும் பெருமையாய் இருந்தது.தனக்கு சகோதரியாக.., தோழியாக இருக்கும் நிலாவின் வாழ்வு நல்லபடியாக இருக்க வேண்டும் என்று அவளும் மனதார வேண்டிக் கொண்டாள்.

காமிராக்கள் நிலாவையும் வினோத்தையும் மாறி மாறி பல போஸ்களில் புகைப்படங்களை எடுத்துத் தள்ளின.வினோத்தின் முகத்தில் வெற்றிக் களிப்பு அப்பட்டமாக தெரிய…நிலாவின் முகத்திலோ எந்த விதமான உணர்ச்சிகளும் காணப் படவில்லை.மாறாக….எப்பொழுதும் இருக்கும் ஒரு குறும்பு மட்டும் முகத்தில் நிலைத்திருந்தது.ருத்ர மூர்த்திக்கு மனதினுள் சந்தோஷம் பொங்கி வழிந்தது.எல்லாம் அவர் நினைத்தைப் போலவே நடந்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சிதான் அது.

 

நிச்சயதார்த்தம் முடிந்து பதினைந்து நாட்களில் திருமணம் என்று முடிவு செய்திருந்தனர்.வினோத்தோ பதினைந்து நாட்களா….? என்று யோசிக்க…. நிலாவோ பதினைந்து நாள் தானா…? என்று யோசித்தாள்.இருந்தாலும் அதை இயல்பாக எடுத்துக் கொண்டது நிலாவின் மனம்.

உதய குமாரும்,ருத்ரமூர்த்தியும் அடுத்து செய்ய வேண்டிய ஏற்பாடுகளில் மும்முரமாகினர்.அனைவரும் வியக்கும் வண்ணம் தன் மகளின் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று விரும்பியது அந்த தந்தை உள்ளம்.

என்னை உனக்கு பிடிச்சிருக்கா நிலா…?”என்றான் வினோத்.

அவனை மேலும் கீழும் பார்த்த நிலா…” நீங்க நல்லாதான இருக்கிங்க வினோத்…?ஏன் கேக்குறேன்னா….இந்த கேள்விய இப்ப வந்து கேக்குறிங்க. ம்ம்ம்ம் இருந்தாலும் பதில் சொல்றேன்….தெளிவா சொல்லத் தெரியலை…பட் நான் இந்த மேரேஜ் பண்ணிகிட்டா என் டாட் சந்தோஷமா இருப்பார்.சோ எனக்கு எந்த பிராப்ளமும் இல்லை…”என்று தோளைக் குலுக்கினாள்  நிலா.

வினோத்திற்கு அவளது பதில் எரிச்சலை தந்தது….”இந்த திமிர் தாண்டி உன்னை இங்கு வந்து நிறுத்தியிருக்கு…சீக்கிரம் அடக்குறேன் உன் கொட்டத்தை…”என்று மனதினுள் கறுவிக் கொண்டான் வினோத்.வெளியில் முகத்தை சிரித்தவாறு வைத்துக் கொண்டான்.

நிச்சயதார்த்த விழா நிலாவின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வீட்டின் தோட்டத்தில் வண்ண விளக்குகளும்…..பாபே முறையிலான உணவு முறையும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.அனைவரும் விருந்தில் ஒன்றிப் போயிருந்தனர்.

போட்டோக்கள் எடுத்து முடித்தவவுடன்…..நிலா,ரம்யாவுடன் செல்ல….வினோத் தனது நண்பர்களுடன் அரட்டையில் இருந்தான்.

தனது அறைக்கு சென்ற நிலா…..வேறு உடை மாற்றலாம் என்று எண்ணி தனது ஷெல்ப்பை திறக்க…அதில் உதய குமார் கொடுத்த கவர் கீழே விழுந்தது.

 

“என்ன கவர் இது…?” என்றபடி அதைக் கையில் எடுத்தவளுக்கு… அப்பொழுதுதான் நியாபகம் வந்தது…”ஹோ…இது அப்பா குடுத்த அந்த மாப்பிள்ளை கவர்…”என்று மனதில் நினைத்தவள்…”சரி இப்பவாவது பார்க்கலாம்…” என்று எண்ணி பிரிக்க போக…”இப்ப எதுக்கு நிலா உனக்கு…, அதான் உனக்கு மேரேஜ் முடிவாயிடுச்சே..”என்று அவளின் மனசாட்சி நியாபகப்படுத்த…அதைத் தேவையில்லை என்று நினைத்தவள்….அங்கிருந்த குப்பைக் கூடையில் எறிந்தாள்.ஆனால் அது அருகில் இருந்த டேபிளின் அடியில் சென்று மறைந்தது.அதை நிலா கவனிக்கவில்லை.

நிலா செல்லும் போதே கவனித்த வினோத்….யாரும் அறியாமல் அவளைப் பின்தொடர்ந்து சென்றான்.நிலாவே எதிர்பார்க்காத வண்ணம் அவள் அறைக்குள் நுழைந்தான்.டிரஸ் மாத்த ஆயத்தமான நிலா…அங்கு அவனை எதிர் பார்க்கவில்லை.அப்பொழுதுதான் அவளுக்கு நியாபகம் வந்தது…தான் கதவை அடைக்காதது.தன் மடத்தனத்தை எண்ணி தானே நொந்து கொண்டாள்.

என்ன வினோத்…?உங்களுக்கு என்ன வேணும்…அறைக்குள்ள வறதுக்கு முன்னாடி…கதவைத் தட்டிட்டு வர மேனர்ஸ்  கூடவா இல்லை…? என்று பொரிந்து தள்ளினாள்.

ஹே…ரிலாக்ஸ்…உன் கூட தனியா பேச சந்தர்ப்பமே வாய்க்கலை…சரி இப்பவாவது பேசலாம்ன்னு தான் வந்தேன்….சாரி ஏதோ ஒரு வேகத்துல உள்ள வந்துட்டேன்….”என்றான் வினோத்…மனதில் கடுப்புடனும்,முகத்தில் பணிவுடனும்.

ஆனா ஒரு விஷயம் சொல்லியே ஆகனும்….”யு லுக் சோ பியூட்டிபுல்… ” என்றபடி நிலாவின் அருகில் வர…தேங்க்ஸ் வினோத்….பட் நீங்க இப்ப இங்க வந்தது எனக்கு சரியா படலை….சோ…ப்ளீஸ்…”என்றபடி வாயிற் கதவை நோக்கி கை காட்ட…”ம்ம்ம் ஓகே…ஓகே…”என்று தோளைக் குலுக்கியவாறு வெளியில் சென்றான் வினோத்.

வினோத் வெளியில் சென்றவுடன் வேகமாய் கதவை சாத்தினாள் நிலா.”ஸ்ஸ்ஸ்….இப்ப எதுக்கு வினோத் இங்க வந்தான்….என்னமோ சரியில்லாததைப் போல் இருக்குதே…..” என்று யோசிக்க….”உனக்கு அறிவே இல்லை நிலா…உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்க போகுது….உன் கிட்ட தனியா பேசனும்ன்னு விருப்பப் பட்டு ஏதோ ஒரு வேகத்துல வந்துட்டான்…இதுக்கு போய்…” என்று ஒரு மனம் நக்கலடிக்க….அந்த நினைப்பை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டாள் .

அப்பொழுது கதவு தட்டப்படும் சத்தம் கேட்க….”இப்ப யாரா இருக்கும்…?ஒரு வேளை மறுபடியும் வந்துட்டானோ…?” என்றபடி கதவைத் திறக்க….அங்கு இடுப்பில் கை வைத்து முறைத்தவாறு ரம்யா நின்றிருந்தாள்.

“இப்ப இவ எதுக்கு பத்ரகாளி ரேஞ்சுக்கு நிக்குறா…?”என்று எண்ணிய நிலா…”எதுக்கு இப்படி ராணி மங்கம்மா போஸ் குடுக்குற…?”என்றாள்.

“எருமை…இவ்வளவு நேராமாடி….ஆமா மாப்பிள்ளை சார்க்கு இங்க என்ன வேலை…? என்ன நடக்குது இங்கே…?” என்றாள் ரம்யா மிரட்டும் தொணியில்.

“ம்ம்ம் ஒன்னும் நடக்கலை…நீ வாடி முதலில் உள்ள…”என்று ரம்யாவை இழுத்து அறைக்குள் விட்டவள்…வேகமாய் கதவை சாத்தினாள்.ரம்யாவிடம் திரும்பியவள்…”என்கிட்ட தனியா பேசனும்ன்னு சொல்லி அவன் கேட்காம கொள்ளாம ரூம்க்குள்ள வந்துட்டான்…”என்று நிலா சொல்ல…”ம்ம்ம்ம் அப்பறம்…”என்று கதை கேட்கும் ஆர்வத்துடன் ரம்யா கேட்க….”அப்பறம்..  விழுப்புரம்…” என்றாள் நிலா கடுப்பாக.

“சரி சரி…சொல்லு…அப்பறம் என்ன நடந்தது…? என்ன சொன்னார்…நீங்க ரெண்டு பேரும் என்னவெல்லாம் பேசுனிங்க..?” என்றாள் ரம்யா.

“ம்ம்ம்…அப்பறம்.., “ அப்பறம் என்று நிலா வெட்கப்பட…”சொல்லுடி….”என்று ரம்யா அவசரப் படுத்த… “போங்க சார் வெளியன்னு சொல்லி அனுப்பிட்டேன்…” என்று நிலா சொல்லி முடிக்க….ரம்யா கோபத்தின் உச்சிக்கே சென்றாள்.

“சீசீ…போடி எருமை மாடு…உன்கிட்ட போய் கேட்டேன் பாரு….”என்று அருகில் இருந்த தலையணையை எடுத்து நிலாவின் தலையில் அடித்தவள்… மாலாவின் குரல் கேட்டு… “சீக்கிரம் வாடி பசிக்குது…” என்றபடி சென்றாள்.

 

நிலாவிற்கு மன நிறைவாய் இருந்தது….பாசமான தோழி…சதோதரி…அன்பை அள்ளிக் கொட்ட ஒன்றிற்கு இரண்டு அப்பா….தன் தாயின் நினைவே வர விடாமல் தன்னைத் தாங்கும் மற்றொரு தாய்…பிடித்த வேலை….இப்படி அவளை சுற்றிலும் சந்தோஷம் மட்டுமே நிறைந்திருந்தது.”எனக்கு எல்லாமே இருக்கிறது” என்ற சிறு கர்வம் கூட நிலாவின் மனதில் வந்து போனது.

 

கல்யாணத்திற்கு ஒரு வாரம் இருந்த நிலையில்…..

டாட் அந்த கேஸ் விஷயம் என்னாச்சு…” என்றபடி நிலா வந்து நிற்க….”அதெல்லாம் ஜெட் வேகத்துல போய்கிட்டு இருக்கு…சீக்கிரமா இந்த கேஸ்ல சம்பந்தப்பட்டவங்களை கண்டு பிடிச்சுடலாம் நிலா..” என்றார் உதய குமார்.

ஹோ…,தேங்க்ஸ் டாட்….கண்டிப்பா இதில் சம்மந்தப் பட்ட குற்றவாளிகள் யாரும் தப்பிக்க கூடாது…தப்பிக்கவும் முடியாது…” என்றாள் நிலா தீர்மானமாய்.

உதய குமார்…” நிலா இன்னைக்கு நீ கோர்ட்டுக்கு  வர வேண்டாம். இனி கல்யாணம் முடியற வரைக்கும் நீ வீட்ல இருமா.அப்பறம் சொல்ல மறந்திட்டேன் பாருமா…இன்னைக்கு வினோத் வீட்ல ஏதோ பூஜையாம்…. அவங்க போன் பண்ணியிருந்தாங்க….நீ மாலாவையாவது…… இல்ல ரம்யாவையாவது கூட்டிட்டு போய்ட்டு வந்துடுமா…எனக்கு இன்னைக்கு ஒரு கேஸ் இருக்குடா….”என்றார்.

டாட்…..! நான் அங்க எல்லாம் போக மாட்டேன் என்று பிடிவாதமாய் கூறினாள் நிலா.அவளுக்கு ஏனோ முதலில் இருந்தே ஒரு ஒட்டுதல் இல்லாமல் இருந்தாள்.

“அப்படி இல்லை நிலா….,போகாம இருந்தா நல்லா இருக்காதுடா….அது மட்டுமில்லாம இது பெண்கள் விஷயம்…போய் கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்துடுங்க…”என்றார் உதய் பாவமாய்.

 

சரி சரி…போறேன்…ஆனா அது கூட உங்களுக்காகத்தான் டாட்….” என்று சின்னப் பிள்ளை போல் முகத்தை வைத்துக் கொண்டு கூற…..”குட் கேர்ள்…” என்று அவளின் தலையை தட்டியவர் கோர்ட்டிற்கு கிளம்பி சென்றார்.

வினோத்தின் வீட்டில்…..

வெளியில் தனது ஸ்கூட்டியை நிறுத்தியவள்   இறங்க…பின்னால் இருந்து இறங்கிய ரம்யா அந்த வீட்டைப் பார்த்து பிரமித்து நின்றாள்.

ஹேய் நிலா…ம்ம்ம்…,எவ்வளவு பெரிய வீடு…சுத்திப் பார்க்கவே ஒரு வாரம் ஆகும் போல…”என்று வாய் பிளந்து நின்றாள் ரம்யா.

அப்படியா..நீ வேணும்ன்னா இருந்து ஒரு வாரம் சுத்திப் பார்த்துட்டு வா…நான் போறேன்…”என்றபடி நிலா கிளம்ப…”சரி கோவிச்சுக்காத செல்லம்..வா உள்ள போகலாம்…” என்று நிலாவையும் இழுத்துக் கொண்டு உள்ளே போனாள் ரம்யா.

வாம்மா நிலா….வாம்மா ரம்யா…” என்று வினோத்தின் தாய் அவர்களை வரவேற்றார்.அந்த ஹாலை சுற்றி கண்களை சுழற்றியபடி உள்ளே சென்றாள் ரம்யா.நிலாவோ எதைப் பத்தியும் யோசிக்காமல் சென்றாள்.அங்கு பூஜைக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தது.பெண்கள் பலரும் குழுமியிருந்தனர்.

வினோத்,அங்கிள் எல்லாம் வீட்ல இல்லையா ஆண்ட்டி…”என்றாள் நிலா.

வினோத் மேல தான் இருக்கான் நிலா.என்னன்னு தெரியலை அவன் பிரண்ட்ஸ் எல்லாம் வந்தாங்க…ஏதோ முக்கியமான பிஸ்னெஸ் பத்தி பேசனும்ன்னு…மேல பேசிட்டு இருக்கங்க…அங்கிள் இப்போ வர நேரம் தான்மா…” என்றார் வினோத்தின் தாயார்.

பூஜை நடந்து முடிந்து…ஒவ்வொருவராய் செல்ல ஆரம்பிக்க…அப்பொழுதும் வினோத் கீழே வரவில்லை.நிலா அதை கண்டு கொள்ளாமலிருக்க…. வினோத்தின் அம்மாவிற்கு சற்று சங்கடமாக இருந்தது.

“தப்பா நினச்சுக்காத நிலா….வினோத்துக்கு நீ இங்க வரதே தெரியாதுமா…நீங்க வீட்டை சுத்திப் பாருங்க…நான் போய் அவனைக் கூட்டிட்டு வரேன்…” என்று அவர் கிளம்ப…”இல்ல ஆண்ட்டி பரவாயில்லை…முக்கியமான வேலைன்னா ஏன் தொந்தரவு பண்ணனும்…” என்றவள் ரம்யாவுடன் சேர்ந்து வீட்டை சுற்றிப் பார்க்கத் துவங்கினாள்.

“பரவாயில்லைடி…உன்னோட வருங்கால மாமியார் ரொம்ப நல்லவங்க போல….இருந்தாலும் கொஞ்சம் பார்த்து நடந்துக்க…”என்றபடி வந்த ரம்யா…அங்கு பறவைக் கூண்டில் இருந்த பறவைகளைப் பார்த்த வண்ணம் அதன் அருகில் சென்றாள்.இதை அறியாத நிலா….தன் கால் போன போக்கில் சென்று கொண்டிருந்தாள்….ரம்யா உடன் வருவதாய் நினைத்துக் கொண்டு.

ஒரு சுவற்றில் வரையப் பட்டிருந்த ஓவியம் நிலாவைக் கவர….அதன் அருகில் சென்று அதனை ரசித்துக் கொண்டிருந்தாள்.அப்பொழுதுதான் அந்த பேச்சு சத்தம் கேட்டது.சரி…வினோத் தான் தொழில் சம்மந்தமாய் பேசிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தவளின் கவனம் மீண்டும் அந்த ஓவியத்தில் செல்ல….அப்பொழுதுதான் கவனித்தாள் அங்கு ரம்யா இல்லாததை.

“எங்க போனா…இவ..?என் கூட தான வந்தா…?” என்று யோசித்துக் கொண்டே நகரும் வேளையில்…உள்ளிருந்து வந்த குரல் அவள் நடையைக் கட்டிப் போட்டது.

“என்ன மச்சான்…,ஒரு வழியா நீ நினைச்சதை சாதிச்சுட்ட போல….” என்றான் ஒருவன்.

“ஹேய் அவன் யாரு…ருத்ர மூர்த்தியோட பையன்னா சும்மாவா…” என்றவன்…”என்ன சொல்லு மச்சான்…எனக்கு உன்ன நினைச்சா ரொம்ப பெருமையா இருக்குடா…” என்றாள் வார்த்தைக் குளறியபடி.

அவர்களது பேச்சில் இருந்தே அவர்கள் குடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நிலாவிற்கு தெளிவாய் தெரிந்தது…”அடப் பாவிங்களா..இதுதான் உங்க பிஸ்னெஸ் மீட்டா…கீழ பூஜை நடக்குது….மேல குஜாலா நடக்குதா….” என்று மனதில் எண்ணிக் கொண்டிருக்கும் போதே…வினோத்தின் குரல் நிலாவின் காதுகளில் விழுந்தது.

பின்னே சும்மாவா….அவ திமிரை அடக்க வேண்டாம்….அவனவன் பேசாம வாய மூடிட்டு போனா…இவ மட்டும் கேஸ் அப்பீல் பண்ணுவாளாம்… நியாயம் கேட்பாளாம்…இதுல ரோட்ல நின்னு போராட்டம் வேற….முதல்ல இவளைத் தீர்த்துக் கட்ட தான் நினைச்சேன்…ஆனா பார்த்தா ஆள் கிழங்கு மாதிரி சும்மா கும்ன்னு இருக்கா…சரி…இவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா….அவளை அணுஅணுவா ரசிச்ச மாதிரியும் ஆச்சு…இந்த கேஸ்ல இருந்து வெளிய வந்த மாதிரியும் ஆச்சு…பின்னாடி ஏதாவது பிரச்சனைன்னா…அப்பனோட சேர்த்து ஒன்னுக்கு ரெண்டு வக்கீல் கிடச்ச மாதிரியும் ஆச்சு….” என்றான் வினோத்.

“மொத்தத்துல ஒரே கல்லுல மூணு மாங்கா….!”இல்லையா வினோத் என்றான் இன்னொருவன்.

“ஹா…ஹா..என்று வெடி சிரிப்பு சிரித்தவன்…பின்னே இந்த வினோத் கிட்டவே அவ வேலைய காட்டுறாளா…அவளோட அப்பன் நாயா அலையறான்,….இந்த கேஸ்ல ஏதாவது தடயம் கிடைக்குமான்னு…ஆனா நான் அதுக்குள்ள அவன் பொண்ணையே கல்யாணம் பண்ணி… அவனை லாக் பண்ணப் போறேன்….” என்று சொல்லி வினோத் அவனது சிரிப்பைத் தொடர….

இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நிலா சமைந்த கல்லாய் நின்றிருந்தாள்.இன்னமும் அவளால் நம்ப முடியவில்லை.ஆனால் நிலாவின் காதுகளோ….”உண்மை நிலா…” என்று எதிரொலித்துக் கொண்டிருந்தது.

சூப்பர் மச்சான்…..ஒன்னுக்கு மூணு பொண்ணுங்களை ரேப் பண்ணி….அதையும் தடயமே இல்லாம பண்ணி….அதுக்கு ஒரு ஆபத்துன்னு வரும் போது…அந்த ஆபத்தையே உனக்கு வசமா ஆக்கிட்ட….என்றான் வினோத்தின் நண்பன்.

வினோத்..”உண்மைதாண்டா…ஆனா…இதுக்கு காரணம் என் அப்பா தான்.அவர் தான் இந்த ப்ளானையே எனக்கு போட்டுக் கொடுத்தார். பொண்ணுங்களை ரேப் பண்ண விஷயத்துல ஆரம்பத்துல என்னைத் திட்டினாலும்…அதுக்கப்பறம் முழு சப்போர்ட் அவர் தான்…நமக்கு பிஸ்னெஸ்ல ஆயிரம் தில்லு முள்ளு இருக்கும்…ஏதாவது பிரச்சனைன்னு வந்தா நமக்கு ரெண்டு வக்கீல் கிடைப்பாங்கன்னு எங்கப்பாதான் சொன்னார்….” என்றான்.

“அந்த மூணு பொண்ணுங்களையும் ரேப் பண்ணி கொன்றது வினோத்தா…? இது தெரிந்து தான் இவனோட அப்பா….என்னை பெண் கேட்டாரா…? இது அப்பாவுக்கு எப்படி தெரியாம போச்சு…? என்று நிலா யோசித்துக் கொண்டிருக்கும் போதே…அவளின் கைகள் எல்லாம் தானாக வியர்க்க ஆரம்பித்தது.ஏதோ தவறு நடக்கப் போவது போல் அவளின் உள்மனம் அவளை எச்சரித்தது.

“நிலா முதல்ல நீ இங்க இருந்து கிளம்பு….இங்க இருக்க இருக்க உனக்கு ஆபத்து தான்…” என்று அவளின் மனசாட்சி அவளை எச்சரிக்க….கிளம்ப ஆயத்தமாக…ரம்யாவை எங்கு போய் தேடுவது….என்று மனம் நொந்தாள். போன் பண்ணிப் பார்க்கலாம் என்று நினைத்தவள்….போனை எடுத்து… ரம்யாவிற்கு டயல் செய்ய…அதற்குள் நிலாவினைப் பார்த்த வினோத்தின் நண்பன்….அதை வினோத்திடம் சொல்ல….வேகமாய் விரைந்தான் வினோத்.

“ஹேய் நிலா நீ இங்க என்ன பன்ற…? ஆமா வீட்டுக்கு எப்ப வந்த…?” என்றான் சகஜமாய்.

சகஜமாய் பேசு…பேசு…என்று அவளின் மனம் எச்சரித்தாலும்…பேசுவதற்கு நாக்கு எழும்புவேனா என்று பிடிவாதம் பிடித்தது.நிலாவின் அமைதி வினோத்திற்கு சந்தேகத்தைக் கிளப்பியது…”ஒருவேளை நாங்க பேசுனதை எல்லாம் கேட்டு இருப்பாளோ…” என்று நினைத்தவன்…அவளை கூர்ந்து பார்த்தான்.

அதற்குள் போனை அட்டென் செய்த ரம்யா…அங்கு போனில் ஹலோ…ஹலோ என்று கத்திக் கொண்டிருந்தாள்.

இதை அறியாத வினோத்…..நிலாவின் முகத்தை வைத்தே ஓரளவு ஊகித்தவன்….சட்டென்று அவளை அந்த அறைக்குள் தள்ளி கதவை சாத்தினான்.

“இப்ப எதுக்கு கதவை சாத்துனா…?ப்ளீஸ் கதவைத் திற…நான் போகனும்…” என்றாள் நிலா.

“போகலாம் நிலா….போகலாம்.ஆமா நாங்க பேசுனதை எல்லாம் கேட்டுட்ட போல இருக்கு.சரி கல்யாணம் பண்ணி…சாந்தி மூகூர்த்தம் எல்லாம் முடிந்த பிறகு சொல்லலாம்ன்னு நினைச்சேன்….என்ன முன்னாடியே தெரிஞ்சுடுச்சு… அதனால இப்ப சாந்தி மூகூர்த்தத்தை முடிச்சுடுவோம் சரியா…அப்பதான நீ வெளிய போய் வாயத் திறக்க மாட்ட,…” என்று ஒரு பக்கா ரவுடியைப் போல் பேசினான் வினோத்.

“த்த்தூ…என்று துப்பினாள் நிலா…போடா பொறுக்கி….கண்டிப்பா நான் உன்னை சும்மா விட மாட்டேன்.இவ்வளவு பெரிய அயோக்கியனா நீ….எதுக்காக இப்படி நடிச்சு எங்களை ஏமாத்துன..” என்றாள்.

“இது என்னடா வம்பா போய்டுச்சு….நான் பேசாம ரேப் பண்ணமா….. சந்தோஷமா இருந்தோமான்னு இருந்தேன்.நீ என்ன பண்ணியிருக்கனும்… நீயும் மத்தவங்களை மாதிரி பேசாம போய் இருக்கனும்…அதை விட்டுட்டு கேஸை கிளறிப் பார்த்தா…இந்த நிலமைதான்….” என்றான் வினோத் வக்கிரமான முகத்துடன்.

இதை எல்லாம் போனில் கேட்டுக் கொண்டிருந்த ரம்யாவிற்கு முதலில் நடப்பது என்னவென்று புரியவில்லை.ஆனால் ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது….வினோத் கெட்டவன் என்பது மட்டும்.இப்போது என்ன செய்வதென்றே அவளுக்கு தெரியவில்லை.அந்த வீட்டின் ஒவ்வொரு அறையாய் பார்த்துக் கொண்டு ஓடி வந்தாள். இதில் இடையில் வினோத்தின் அம்மாவையும்….அழைத்தபடி கத்திக் கொண்டே வந்தாள்.நேரம் செல்ல செல்ல ரம்யாவிற்கு பதட்டம் அதிகரித்தது.அந்த வீட்டில் எந்த பக்கம் சென்றாலும் ஒரே பக்கம் சென்றது போல் இருந்தது.

அதே நேரம் அங்கு உதய குமாரிடம்,ருத்ரமூர்த்தி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்.இருவருக்கும் இடையில் காரசாரமான விவாதம் நடந்துகொண்டிருந்தது.

கண்டிப்பா இதை செய்தே ஆகனும் உதய குமார்.இந்த கேஸ்ல சம்பந்தப்பட்டவங்க எனக்கு ரொம்ப முக்கியமானவங்க….அதனால் இதோட உங்க ஆராய்ச்சி எல்லாம் ஸ்டாப் பண்ணிடுங்க……”என்றார் ருத்ரமூர்த்தி.

நோ வே….கண்டிப்பா இதை என்னால் செய்ய முடியாது.அது மட்டுமில்லாம இதை எதுக்காக நீங்க சொல்றிங்க….? அப்போ இதில் சம்பந்தபட்ட அயோக்கியனுகளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்….?” என்றார் உதய்.

ருத்ரம்…”அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம்….நான் சொன்னதை உங்களால் செய்ய முடியுமா…?முடியாதா…?” என்றார்.

என்ன ருத்ரமூர்த்தி……,உங்க பேச்சைப் பார்த்தா மிரட்டுற மாதிரி இருக்கு….?” என்றார் உதய்….இடுங்கிய பார்வையுடன்.

அப்படியும் எடுத்துக்கலாம் உதய குமார்.ஒரு விதத்துல இது உங்களுக்கு எச்சரிக்கை தான்.நீங்க இனி இந்த கேஸில் தலையிடக் கூடாது.அதையும் மீறி இதில் நீங்க ஆஜர் ஆவேன்னு சொன்னிங்கன்னா…..ஏற்பாடான கல்யாணத்தை நான் நிறுத்த வேண்டியதா இருக்கும்….” என்றார் ருத்ரம்.

இதோ பாருங்க ருத்ரம்…..பொண்ணைப் பெத்தவன்….பயந்துகிட்டு நாம சொல்றதுக்கு எல்லாம் தலைய ஆட்டுவான்னு கனவு கூட காணாதிங்க….. என் பொண்ணு ஒன்னும் கூனோ குருடோ கிடையாது.உன் பையன் இல்லைன்னா…வேற பையனே இல்லைன்ற  ரேஞ்சுக்கு பேசுற.

அப்பறம் மறந்திட்டேன்….நானே இந்த கேஸ்ல இருந்து விலகினாலும் என் பொண்ணு விலகமாட்டா. நீங்க என்ன சொல்றது…நானே சொல்றேன் இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க……இப்படி அயோக்கியனுக்கு சப்போர்ட் பண்ணும் வீட்டில் என் பொண்ணு எப்படி நிம்மதியாக வாழ்வாள்…” என்றார் உதய்….”வினோத் தான் அந்த அயோக்கியன்..”என்று அறியாமல்.

உதய குமாரை ஆழ்ந்து பார்த்த ருத்ரம்….”இதுக்காக பின்னாடி ரொம்ப ரொம்ப வருத்தப்படுவிங்க உதய குமார்….”என்று ஆவேசமாய் சொன்னபடி வெளியேறினார்.பிரமை பிடித்ததைப் போல் நின்றிருந்த உதய குமார்…. தன்னுடைய செல்போன் சத்தத்தில் மீண்டார்.செல்போனை எடுத்து காதில் வைத்தவர்…அதில் கேள்விப் பட்ட செய்தியைக் கேட்டு அதிர்ந்து…அவசர அவசரமாக அந்த இடத்திற்கு விரைந்தார்.

அங்கே நிலாவோ வினோத்திடம் இருந்து தப்பிக்கப் போராடிக் கொண்டிருந்தாள்.பெண்களுக்கு மனதில் வலிமையைக் கொடுத்த கடவுள்…..உடல் வலிமையை ஆண்களுக்கு கொடுத்தது தான் அங்கு பிரச்சனையாகிப் போனது.எவ்வளவு மன திடத்துடன் போராடினாலும்…. அவளால் ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை.

 

ரம்யா வெளியில் இருந்து  கதவை தட்டிக் கொண்டிருந்தாள்……”டேய் கதவைத் திறடா….விடுடா….அவளை விடுடா…..ராஸ்கல் விடுடா…” என்று ரம்யா கத்திக் கொண்டிருக்க….அவளின் சத்தம் கேட்டு மேலே வந்த வினோத்தின் தாய்….நிலமையை ஒரு நொடியில் ஊகித்துக் கொண்டார்.

வினோத்….என்ன பன்ற..விடு அவளை…கதவைத் திற வினோத்…. ஐயோ…கடவுளே..!எது நடக்கக் கூடாதுன்னு நினைத்தேனோ…. இப்ப அதுவே நடக்குதே ” என்று புலம்பியவர் தன் பங்கிற்கு அவரும் கத்திக் கொண்டிருந்தார்.

வினோத்தின் நண்பர்கள் எப்பொழுதோ அந்த இடத்தை காலி செய்திருந்தனர்….அதனால் வரும் பிரச்சனைகளில் எங்கு தாங்களும் மாட்டிக் கொள்வமோ என்ற பயம் அவர்களை அவ்விடத்தை விட்டு காலி செய்ய தூண்டியது.

ஏற்கனவே பதட்டத்தில் இருந்த ரம்யா….பிரபுவிற்கும்,உதய்க்கும் போன் பண்ணியிருந்தாள்.வினோத்தின் தாய் இன்னொரு சாவியை எடுக்க கீழே செல்ல….ரம்யாவோ…அங்கிருந்த ஒற்றை சோபாவைத் தூக்கி அந்த அறையில் இருந்த கண்ணாடியை உடைத்துக் கொண்டிருக்க….அங்கு நிலாவோ வினோத்தின் பிடியில் இருந்து நழுவப் போராடிக் கொண்டிருந்தாள்.

என்னடி போக்குக் காட்டுறியா…..இன்னைக்கு உன்னக் கொல்லாம விட மாட்டேண்டி…தானா வந்து வலைல சிக்கிட்ட…இன்னையோட உன்னோட சேப்டர் குளேஸ்….” என்றவன் வெறி பிடித்தது போல் அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான்.

அதற்குள் உள்ளே வந்த ரம்யா….அங்கிருந்த  பித்தளையால் ஆன பூ ஜாடியை எடுத்து….வினோத்தை பின் மண்டையில் அடித்துத் துவட்ட….வெறி பிடித்த மிருகமாய் ரம்யாவின் பக்கம் திரும்பிய வினோத்…”ஏய் உன்னை…” என்ற படி அவளிடம் பாய…ஆனால் ரம்யாவோ வெறி பிடித்ததைப் போல் அவனை அடிக்கத் துவங்கினாள்.

ஆனால் அந்த நிலமையிலும் அவன் ரம்யாவிடம் இருந்து அதை வாங்கி எறிந்தான்.சற்று மூச்சு வாங்கிய நிலா நடப்பிற்கு வர…அங்கிருந்த டேபிளில் எதாவது கிடைக்குமா என்று தேட….டிராவினுள் இருந்த கத்தி அவளின் கைகளுக்கு சிக்கியது.

வினோத்…அவளை விடு…”என்று கத்தியைக் காட்டி எச்சரிக்க…அவனோ அதைக் காதில் வாங்காமல்…ரம்யாவின் குரல் வலையை இறுகப் பிடித்திருந்தான்….அவளோ மூச்சு விட முடியாமல் திமிறிக் கொண்டிருந்தாள். பிரபுவும் மாலாவும் பதறியடித்துக் கொண்டு வர…. உதய குமாரும் அவ்விடம் நோக்கி விரைந்தார்.

“வேண்டாம் வினோத் அவளை விட்டுடு…..இல்லை.. நான்…நான்… குத்திடுவேன்..” என்று நிலா சொல்லிக் கொண்டிருக்க..அதை அவன் காதில் வாங்கவே இல்லை.ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத நிலா “டேய்ய்ய்ய்ய்….” என்று கத்தியவாறு அவனைக் வயிற்றில் குத்தி விட்டாள்.

நிலவினில் இருக்கின்ற கலங்கத்தை

இவளது பெருவிரல் துடைத்துவிடும்…!

புதுயுக மகள் இவள் அணிகின்ற

வளையல்கள் சிறைகளை உடைத்திடுமே….!

சாவி எடுத்து வந்து அவசர அவசரமாக கதவைத் திறந்து வந்த வினோத்தின் தாய் பார்த்தது…. வினோத் குத்து வாங்கியதைத் தான்….அவனின் ரத்தத்தைப் பார்த்து அவர் அவ்விடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தார்.

நிலா குத்தும் பொழுது…வினோத் சற்று விலகியதால்….கத்தி அவனின் உடலில் ஆழமாகப் பதியவில்லை.

“ஏய்ய்ய்ய்ய்…உன்ன்னைஐஐ….” என்று கத்தியவன்….தன் வயிற்றில் இருந்து உருவிய கத்தியை நிலாவை நோக்கி குத்தப் போக…அப்பொழுது உள்ளே நுழைந்த உதய குமார்…”நிலாம்மா..” என்றவாறு அவளை விலக்கப் போக…..குத்து அவருக்கு சரியாக நடு வயிற்றில் பாய்ந்தது.

பதட்டத்துடன் வந்த பிரபு அதிர்ச்சியில் சிலையாய் நிற்க…உதய் குத்து வாங்கியதைப் பார்த்த மாலாவோ….”அண்ண்ணாஆஆஆஆஆ” என்று அதிர்ச்சியில் கத்த…..மூவரையும் பார்த்து கத்திய அந்த அதிர்ச்சியில் ….அவரது பேச்சு அந்த நிமிடம் சென்று விட்டது என்பது அப்பொழுது அவருக்கு தெரியவில்லை.

நிலாவோ….கண்ணைக் கூட இமைக்க முடியாமல் அப்படியே நின்றிருந்தாள்.மயக்கத்தில் இருந்த மீண்ட ரம்யாவோ…”உதயப்பா…..” என்று கத்த….

அந்த நிமிடம் வந்த ருத்ரம்…தன் மகனைப் பார்த்து….”வினோத்த்…” என்று அவர் பங்குக்கு கத்த…தன் தந்தையைப் பார்த்த வினோத்….”நிலாவையும் ரம்யாவையும் மாறி மாறி கை காட்டியவன்….”அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் கீழே விழுந்தான். அந்த இடமே ரத்தமாய் காட்சியளித்தது.

வேகமாக வினோத்தை ஆஸ்பிட்டலுக்கு தூக்கியவர்….” என் பையனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உங்க ஒருத்தரைக் கூட நான் உயிரோட விட மாட்டேன்….”என்றவர்…நிலாவின் பக்கம் திரும்பி…”என் பையன் பொழச்சாலும்…பொழைக்கலைன்னாலும் நீ தான் அவனுக்கு பொண்டாட்டி….இது என் பையன் மேல் சத்தியம்…” என்றவாறு அவசர அவசரமாக அவனைத் தூக்கிக் கொண்டு ஓடினார். ருத்ரத்தின் அக்னிப் பார்வைக்குப் பயந்து அந்த வீட்டின் வேலைக்காரர்கள் அப்படியே அடங்கினர்.

பிரபு கண்களில் கண்ணீருடன் …உதய குமாரைத் தாங்க…”வேண்டாம் பிரபு….பிள்ளைங்கள இங்க இருந்து கூட்டிட்டு போய்டு….நிலா….நிலா…இனி உன் பொறுப்பு…..என் பொண்ணு எப்பவும் இதே மாதிரி சிரிச்சுகிட்டே இருக்கனும்…”என்று நிலாவின் கையில் ஒரு பெண் டிரைவைக்  கொடுத்து விட்டு நிலாவைப் பார்த்தவாரே உயிரை விட்டார் உதய குமார்.

அனைத்து சில நிமிடங்களில் நடந்து முடிந்திருந்தது…….

 

 

 

 

முகவரி 28:

 

கடந்த கால நினைவுகளின் பிடியில் இருந்து மீள முடியாமல்.., அதன் தாக்கம் இன்னும் குறையாமல்…..தனது கால்களில் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள் நிலா.தன் அப்பாவின் நினைவு அப்பொழுது அவளுக்கு விஸ்வரூபம் எடுத்தது. எல்லா சந்தோஷங்களையும் கொடுத்த கடவுள்…அதை அடுத்த நிமிடமே பறித்துக் கொண்டது போல் உணர்ந்தாள் நிலா.

அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று யாராலும் வரையறுக்க முடியாத ஒரு விசித்திர உலகில் பிறந்தமைக்காக இப்பொழுது வருத்தப்பட்டாள் நிலா.தன் அப்பாவின் சொல்லுக்கிணங்கி….டெல்லியை விட்டு சென்னை வந்து…. அப்பொழுதும் அந்த ருத்ரம் விடாமல் துரத்தி….இப்பொழுது சென்னை வரை வந்திருப்பது நிலாவிற்கு ஏனோ நல்லதாகப் படவில்லை.

வினோத்….சூர்யா ஒன்றாய் இருந்த புகைப் படம் அவள் மனதை கரையான் அரித்ததைப் போல் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கொண்டிருந்தது.”ஒரு வேளை அன்று வினோத் பேசிக் கொண்டிருந்த நண்பர்களில் இவனும் ஒருத்தனாய் இருப்பானோ..!” என்று அவளின் மனம் ஒவ்வொரு விதத்திலும் சிந்திக்கத் தொடங்கியது.

இறுதியில் நிலாவிற்கு கிடைத்த பதில் யாரையும் எளிதில் நம்பக் கூடாது என்ற வாசகம் தான்.தான் மீண்டும் ஒரு முறை ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்ற நினைப்பே அவளுக்கு வேதனையைத் தந்தது.

“இல்லை நிலா சூர்யாவைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது…..? அவன் முகம் அவனைக் கோபக்காரனாக காட்டினாலும்….கெட்டவனாகக் காட்டவில்லை….” என்று ஒரு மனம் எடுத்து சொல்ல…”போடி போக்கத்தவளே..!அந்த வினோத் கூட தான் பார்க்க ஒழுக்க சிகாமணியா தெரிஞ்சான்…கடைசில என்ன ஆச்சு…..வெளுத்ததெல்லாம் பால் இல்லை நிலா…முழிச்சுக்கோ..ஜாக்கிரதை” என்று இன்னொரு மனம் அவளைப் பார்த்து நக்கலடித்தது.

 

ஒரு முடிவுடன் நிமிர்ந்தாள் நிலா….”போதும் இதுவரை பயந்தது எல்லாம் போதும்….இனி யாருக்கும்,எதற்காகவும் பயப்படக் கூடாது….திரும்பி நின்று அடிக்கனும்….அந்த ருத்ரமும் அவன் மகனும் ஒவ்வொரு நிமிஷமும் துடிதுடிச்சு  சாகனும்…இனி ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு ஆக்கப் பூர்வமாவும்….அந்த ருத்ரத்துக்கு அழிவுப் பூர்வமாகவும் இருக்கனும்….கமான் நிலா…உன்னால் முடியும்..” என்று தனக்குத் தானே சபதம் எடுத்துக் கொண்டவாளாய் கண் அயர்ந்தாள் நிலா.மணி அதிகாலை 4.

போன் பேசிவிட்டு வந்த சூர்யாவும் அங்கு நிலாவைக் காணாமல்                       உள் அறையைப் பார்க்க…அது சாத்தப் பட்டிருந்தது கண்டு….பெருமூச்சு விட்டான்…”விடு சூர்யா அவளுக்கு நடந்தது எல்லாம் அதிர்ச்சியா இருக்கும்..கொஞ்சம் கொஞ்சமாக தான் வெளிய வருவா…! நீ தான் காத்திருக்கனும்…” என்று நினைத்தவன்…படுத்தவுடன் தானும் உறங்கிப் போனான்.அங்கே அவன் மனைவி…அவள் கடந்த காலத்தை அசை போட்டுக் கொண்டிருப்பதை அறியாமல்.

காதல் வலியும்…பாசப் போராட்டமும்….தனக்கான அங்கீகாரத்தையும் பெருவதில் தூக்கத்தை இழந்திருந்த சூர்யா….பல நாட்கள் கழித்து…. நிம்மதியாய் தூங்கினான்.அனைத்தையும் வென்று விட்ட மகிழ்ச்சியில் அவன் உறங்கிக் கொண்டிருக்க….”இது தான் உனக்கு நிம்மதியான கடைசி தூக்கம் …” என்று விதி அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.

வலிகளையும்,துன்பங்களையும் அதிகம் தாங்குபவர்களை…. மேலும் சோதித்துப் பார்ப்பதே…. விதிக்கு வேடிக்கையான ஒன்று.அதில் சூர்யாவும் சிக்கிக் கொண்டான்.

காலையில் எழுந்த தீபா…ஜீவாவைப் பார்க்க…அங்கு அவனைக் காணவில்லை.”எங்க போனான்…?” என்று யோசித்தவள்…குளித்து முடித்து…மகேஷ்வரியைத் தேடி சென்றாள்.

மகேஷ்வரியும் அதிகாலையிலேயே குளித்து முடித்து…மங்களகரமாய்… சமயலறையில் நின்று சமைத்தும் கொண்டிருந்தார்.”மகியைப் பார்த்த ஒரு நிமிடம் தீபாவால் நம்ப முடியவில்லை.நேற்று வரை எதையோ பறி கொடுத்தது போல் இருந்த அவரின் முகத்தில் தான் இப்பொழுது எவ்வளவு தெளிவு…எவ்வளவு தீர்க்கம்….” என்று எண்ணியவள்…”குட்மார்னிங் ம்மா….” என்றாள் முகம் முழுதும் சந்தோஷ ரேகையுடன்.

குட்மார்னிங் தீபா…” என்றவர்…”என்னடா இவ்வளவு சீக்கிரம் ஏன் எழுந்த..? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாம்ல…” என்றார்.

இல்ல மகிம்மா…!எப்பவும் இந்த டைம்க்கு எழுந்து பழக்கமாகிட்டது அதான். ஆமா ஜீவா எங்க…? ரூம்லயும் காணோம்….மகிம்மா.” என்றாள் தீபா.

ஜீவாவும்,சூர்யாவும் ஜாக்கிங்க் போயிருக்காங்க தீபா…,”  இப்போ வந்துடுவாங்க ரெண்டு பேரும் என்றவர்..,”இந்தடா இந்த காபிய குடி முதல்ல…” என்றார்.

தேங்க்ஸ் மகிம்மா..” என்றபடி காபியை வாங்கிக் கொண்டு ஹாலிற்கு வர…ஜீவாவும் சூர்யாவும் வந்து சேர்ந்தனர்.”ஜீவாவை கண்ணால் முறைத்தவள்…” அவனை கண்டு கொள்ளாது காபியை குடிக்கத் தொடங்கினாள்.

ஜீவா…என்னாச்சு..,எதுக்கு இந்த கோபம்..? என்று கண்ணால் கேட்க…அதைப் பார்த்த சூர்யா…”முடியலைடா சாமி…நீ வாயத் திறந்து பேசுனாலே என் தங்கச்சிக்கு புரியாது…இது கண்ணால வேற….கொடுமை..” என்று தலையில் அடித்தவாறு தன் அறையை நோக்கி சென்றான் சூர்யா.

“என்ன டார்லிங் எதுக்காக இப்ப கோவமா இருக்கிங்க…?”என்றான் ஜீவா.

“மண்ணாங்கட்டி….,ஜாக்கிங்க் போறேன்னு என்னை எழுப்பி ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போய்ருக்கலாம்ல….”என்றாள் தீபா.

“என்ன நீ இப்பவே இந்த அதிகாரம் பன்ற…கல்யாணம் முடிஞ்சு ரெண்டு நாள் தான் ஆகுது…அதுக்குள்ள என்பாடு இப்படியா ஆகனும்…” என்று ஜீவா புலம்ப…”ஐயோ..! எதுக்கு  ஹால்ல இப்படிக் கத்துறிங்க….யாராவது கேட்டா என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க…” என்று தீபா கடிந்து கொண்டாள்.

ஒன்னும் நினைக்க மாட்டாங்க டார்லிங்…என்றவன்,”அவள் எதிர்பாராத வண்ணம் இறுக்கி அணைத்து..கன்னத்தில் ஒரு முத்தத்தையும் பதித்தவன்… மீண்டும் அவள் எதிர்பாரா வண்ணம் அவளை விலக்கி நிறுத்தினான்.”

அவனின் எதிர்பாரா இதழ் ஒற்று மனதிற்குள் இனித்தாலும்….முகத்தை கடுப்பாக வைத்துக் கொண்ட தீபா..”உங்களுக்கு கொஞ்சமாவது விவஸ்தை இருக்கா…இப்படியா நடு ஹால்ல வச்சு முத்தம் கொடுப்பிங்க….யாராவது பார்த்து இருந்தா என்ன ஆகியிருக்கும்….என் மானமே போகுது..” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

“சரி வா…” என்றான் ஜீவா சீரியசான குரலில்…”எங்க..?” என்று தீபா கேட்க…”ரூமுக்கு தான்…நீ தான கேட்ட….நடு ஹால்ல வச்சா குடுப்பாங்கன்னு…அதான் ரூமுக்கு கூட்டிட்டு போய் தரலாமேன்னு நினச்சேன்…” என்றான் அசால்ட்டாய்.

அவனின் பதிலில் தீபாவின் முகம் சிவக்க…அதை மறைத்தவளாய்……. “இருந்தாலும் உங்களுக்கு லொல்லு ஜாஸ்திதான்….,நான் மகிம்மாக்கு போய் கிச்சன்ல உதவி செய்ய போறேன்…” என்று அவன் கைகளுக்குள் சிக்காமல் சென்று விட்டாள்.

“எஸ்கேப் ஆகிட்டாளே..! விடு ஜீவா…எப்படியும் வந்து தான ஆகனும்..” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டிருக்க…”அதான் தெரியுதுல… அப்பறம் எதுக்குடா ஹால்ல வச்சு ரொமான்ஸ் பண்ணிகிட்டு இருக்க…?” என்ற சூர்யாவின் குரலில் விதிர்விதிர்த்து திரும்பினான்.

“மச்சான் நீ எப்படா வந்த..?”என்றான் சங்கடமாய்.

“நான் எங்க போனேன்… திரும்பி வரதுக்கு.செல்லை மறந்துட்டு போய்ட்டேன்….. எடுக்கலாம்ன்னு வந்தா…நீ இலவசமா படம் ஓட்டிட்டு இருக்க…நானும் எவ்வளவு நேரம் வெய்ட் பன்றது….” என்று ஜீவாவைப் பர்க்காமலே…சூர்யா செல்லை எடுத்தவாறு  அசால்ட்டாய் சொல்லிவிட்டு போக…ஜீவாதான் “பே..” என்று நின்றிருந்தான்.

“ச்ச்ச…எப்பப் பாரு இவன் கிட்ட பல்ப் வாங்குறதே உனக்கு வேலையா போச்சு ஜீவா..” என்று தனக்குத் தானே  புலம்பிக் கொண்டிருந்தான்.“என்ன புலம்பல்..”என்று தீபா உள்ளிருந்து குரல் கொடுக்க…”ஒன்னுமில்லை தீபு….”என்று அவசரமாக சொன்ன ஜீவா..”இனி உன் பாடு திண்டாட்டம் தான் ஜீவா..” என்று சொல்லிக் கொண்டான்.

மேலே தன் அறைக்கு சென்ற சூர்யா….திகைத்தான்.ஏனென்றால் நிலா இருந்த அறை இன்னும் திறக்கப் படாமலேயே இருந்தது. “என்னாச்சு…இவ்வளவு நேரமா என்ன பன்றா…? ஒருவேளை அசந்து தூங்கியிருப்பாளோ..” என்று எண்ணிய சூர்யா….”நிலா…நிலா…” என்று கதவைத் தட்டினான்.

ஆனால் அவனின் அழைப்பிற்கு எந்த விதமான பதிலும் நிலாவிடம் இருந்து வரவில்லை.கதவும் திறக்கப்படவில்லை.”சரி ரம்யாவை அழைத்து வரலாம்..”என்று எண்ணி சூர்யா வெளியேரும் நேரம்…நிலா கதவைத் திறந்தாள்.

வேகமாக நிலாவின் அருகில் சென்றவன்…”என்னாச்சு நிலா…?அசதியில் தூங்கிட்டயா…? இவ்வளவு நேரம் கதவைத் தட்டியும் திறக்கவே இல்லை…” என்றான்.

எந்த பதிலும் சொல்லாமல் சூர்யா வெறித்த பார்வை பார்த்தாள் நிலா. “நீயும் ஒரு நம்பிக்கை துரோகிதானே…?” என்ற அர்த்தத்தில் இருந்தது அவளின் பார்வை.

அவளின் பார்வை சூர்யாவிற்கு பெரும் சவாலாக அமைந்தது.அவளையே ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்தவன்…”உனக்கு என்னம்மா ஆச்சு….நைட் வரைக்கும் நல்லாதான இருந்த…?இப்ப ஒரு மாதிரி இருக்க..?” என்றான் சூர்யா தன்மையாய்.ஆனால் நிலாவோ  மனம் முழுதும் கனலுடன்……..தன் வெறித்த பார்வையை மாற்றாமல் அப்படியே இருந்தாள். சூர்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

சொல்லு நிலா…!உனக்கு என்ன பிரச்சனை…? என்றான் சூர்யா.ஆனால் அப்பொழுதும் நிலா அமைதியாய் இருக்க..ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த சூர்யா….”வாயத் திறந்து பேசு நிலா.நான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்….”என்றான் கோபமாய்.

என்ன பேசனும்..? எனக்கு உன்கிட்ட பேச எதுவும் இல்லை.உன்னை எனக்கு பிடிக்கலை.உன் கூட பேச பிடிக்கலை.எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை…. போதுமா…” என்றாள் ஆங்காரமாய்.

என்னை பிடிச்சிருக்கான்னு நான் கேட்கவே இல்லையே…?இங்க இருப்பதில் உனக்கு என்ன பிரச்சனை…வாயத் திறந்து பேசாம எந்த பிரச்சனையும் முடிவுக்கு வந்துடாது…” என்றான் சூர்யாவும் அவளுக்கு மிஞ்சாத கோபத்துடன்.

உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாது…எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கலை..உன்னை பார்த்தாலே எனக்கு அருவெருப்பா இருக்கு…கடைசில நீயும் ஒரு சாக்கடைதான்னு நிரூபிச்சுட்ட…எதுக்காக என்னை கல்யாணம் பண்ணின…என்னை அடையனும்…அனுபவிக்கனும்…அது தானே உன் எண்ணம்..உனக்கும் அந்த வினோத்துக்கும் என்ன வித்யாசம்…” என்று கத்த தொடங்கினாள் நிலா.சூர்யாவும்,வினோத்தும் ஒன்றாய் இருந்த புகைப்படம்… அவளை  என்ன பேசுகிறோம் என்று புரியாமல் பேச வைத்தது.

“ஸ்டாப் இட் நிலா…!”என்று கிட்டத்தட்ட உறுமினான் சூர்யா.

“எதுக்கு ஸ்டாப் பண்ணனும் …உண்மைய சொன்னா கோபம் வருதா….ஹிம்ம்..” என்றாள் நிலாவும் கோபமாய்.

தன் போக்கில் கத்திக் கொண்டிருந்த அவளை…முரட்டுப் பிடியாக இழுத்து இறுக்கி அணைத்தவன் அவளின் இதழ்களை அதே முரட்டுத் தனத்துடன் சிறை பிடிக்க….நிலாவின் இதழ்கள் அவனிடம் இருந்து விடுபட போராட…. இறுதியில் சூர்யாவே வென்றான்.இதழ்கள் சங்கமித்த அந்த நிகழ்வில்….. சில மணித்துளிகள் நீடித்த அந்தப் போராட்டத்தில் வென்று…நிலாவை விடுவித்தவன்….அதே வேகத்தில் அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தான்.

சூர்யா கொடுத்த அறையில் நிலாவின் காதுகள் ஒரு நிமிடம் செயலிழந்து பழைய நிலைக்கு திரும்பியது.கன்னத்தில் வைத்த கையுடன்…சீறிய பாம்பாய் நிலா அவனைப் பார்க்க…சூர்யாவே உன் பார்வை என்னை ஒன்றும் செய்யாது என்பதைப் போல் இருந்தான்.

“ச்சீ…..! நீ இவ்வளவு கேவலமானவனா…?” என்றாள் நிலா.

“வாங்குன அறை பத்தலையா…என்னடி கேவலத்தைக் கண்ட என்கிட்ட…. உன்ன அடையனும்ன்னு நினச்சிருந்தா நேத்து நைட்டே என்னால் செய்திருக்க முடியும்….இல்லைன்னு உன்னால் மறுக்க முடியுமா…? சொல்லு மறுக்க முடியுமா..? என்னைப் பார்த்தால் உனக்கு அருவெருப்பா இருக்கா…?அப்படி நீ அருவெருப்படையும் அளவுக்கு நான் என்ன பன்னினேன்.நான் சாக்கடையா…?”என்று முகம் செந்தணழாய் கொதிக்க சூர்யா கேட்க..அவனின் முக மாறுதலில் நிலா ஒரு நிமிடம் நடுங்கி நின்றாள்.

ஒரு நிமிடம் மூச்சை உள்ளிழுத்து தன் கோபத்தை அடக்கியவன்…”இப்போ சொல்றேன் கேட்டுக்கோ….இனி நான் உன் முகத்துல முழிச்சா…என்னடா நாயேன்னு என்னை செருப்பால அடி….உனக்கு இங்க இருக்க பிடிக்கலைன்னு சொன்ன இல்லையா….கொஞ்ச நாள் பொறுத்துக்கோ… எல்லாத்துக்கும் ஒரு வழி பன்றேன்.” என்று கண்களை மூடி சொன்னவன்….திரும்பி சென்றான்.

கதவு வரை சென்ற சூர்யா…திரும்பி நிலாவைப் பார்த்து…”உனக்கெல்லாம் யார் லாயர் பட்டம் கொடுத்தது…?எல்லா நேரமும் மனசு சொல்றதைக் கேட்காம…சிலசமயம் மூளை சொல்றதையும் கேட்டு வேலை செய்..” என்றவன்,..”உண்மையான காதல்ன்னா என்னன்னு தெரியுமா…?” என்று ஒரு நிமிடம் நிறுத்தியவன்…” ஹிம்ம்….உனக்கெங்க தெரியப் போகுது…. உயிரோட கொன்னுட்டடி….இங்க வலிக்குது…” என்று தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டியவன்…விருட்டென்று அந்த இடத்தை விட்டு அகன்றான்.

நிலா ஒரு நிமிடம் பிரமை பிடித்ததைப் போல் நின்றிருந்தாள்.சூர்யா அறைந்த இடம் தீயாய் எறிந்தது.அதற்கேற்றார் போல் நிலாவின் மனமும் எறிந்தது.இருந்தாலும் கடைசியாக சூர்யா சொன்ன வாக்கியம் அவளை மேற்கொண்டு யோசிக்க விடாமல் செய்தது.”காதல்ன்னா என்னன்னு தெரியுமாடி…?” என்று கேட்ட  சூர்யாவின் குரல்…திரும்பிய பக்கம் எல்லாம் கேட்பதைப் போல் இருந்தது.

எதுக்காக அப்படி சொன்னான்…?” கடைசியா அவன் கண்கலங்கியதைப் போல் இருந்ததே…ஐயோ கடவுளே…! இப்ப நான் என்ன தான் பன்றது….என்று கண்களை மூடியவள்…”அப்பா…எனக்கு யார் மேலயும் நம்பிக்கை வர மாட்டேங்குது….எந்த ஒரு தெளிவான முடிவும் எடுக்க முடியலை….எனக்கு வழி காட்டுங்கப்பா….என் வாழ்க்கையில் மட்டும் ஏன் இத்தனை சிக்கல் வரனும்…” என்று தன் தெய்வமாகிவிட்ட தன் தந்தையை வேண்டிக் கொண்டிருந்தாள் நிலா.

தெளிவற்ற மன நிலையில் கீழே இறங்கி வந்தாள் நிலா.”வாம்மா நிலா….” என்ற மகேஷ்வரியின் கண்களில்…”இரவு நிலா எப்படி சென்றாளோ…அதே மாதிரி இப்பொழுதும் இருப்பது” தவறாமல் பட்டது.

எல்லாம் ஒரே நாளில் சரியாகி விடாது  என்று எண்ணிய மகி….”இந்தாடா நிலா…காபி…” என்று கொடுக்க….நிலாவிற்கு அப்பொழுது அது மிகவும் தேவையாய் இருந்தது.

ரொம்ப தேங்க்ஸ் அத்தை…!”என்றவாறு காபி வாங்கி பாதிக் குடித்துக் கொண்டிருக்கும் போதே…அங்கு வந்த ரம்யா….அதைப் பிடுங்கி மீதியை அவள் குடித்தாள்.

ஏன் ரம்யா…உனக்கு தனியா காபி தரேன்மா..” என்று மகேஷ்வரி கேட்க…”ஐயோ அத்தை…இது எங்களுக்குள்ள சகஜம்…எனக்கு இவகிட்ட இருந்து பிடுங்கி குடிச்சாதான் அது டேஸ்ட்டாவே இருக்கும்..” என்று அசடு வழிந்தவாறு சொல்ல…”நல்ல பிள்ளைங்க…” என்றவாறு சென்றார் மகி.

“அப்பறம் சொல்லுடி…அத்தான் நைட் எல்லாம் ஒரே கவனிப்பா…கன்னம் எல்லாம் இப்படி சிவந்திருக்கு” என்று ரம்யா கேட்க….சூர்யா அறைந்தது நியாபகத்திற்கு வர….”நிலாவின் கை தன்னால் கன்னத்திற்கு சென்றது…”

நிலா பதில் சொல்லும் முன்…”அப்பறம் எங்கண்ணன் யாரு…?” என்றவாறு வந்தாள் தீபா.

“வாங்க மேடம்…அவ சொல்றது இருக்கட்டும்….உங்க கதை என்னாச்சு…ம்ம்ம்?” என்று ரம்யா கிண்டல் அடிக்க…”சும்மா இரு ரம்யா….” என்று தீபா வெட்கப் பட…அதைப் பார்த்து ரம்யா வாய்விட்டு சிரித்தாள்.

ஆனால் நிலாவிற்கு கவனம் எல்லாம் அங்கு இல்லாமல்…. சூர்யா சொன்ன வாக்கியத்தின் மேலேதான் இருந்தது.சூர்யா சொன்னதைப் போல் நாம் மூளை சொல்வதையும் கேட்க வேண்டுமோ…? என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

என்ன மேடம் இன்னும் கனவுலகிலேயே இருக்கிங்க போல…?:” என்ற ரம்யா நக்கலடிக்க..நடப்பிற்கு வந்த நிலா…”எருமை எருமை… காலங்காத்தால உனக்கு வேற வேலையே இல்லையா…?” என்று சிடுசிடுத்தாள்.

இல்லவே இல்ல….உன்னை கண்காணிப்பது மட்டும் தான் என் முழு நேர வேலை…எதையாவது சொல்லி தப்பிக்கலாம்ன்னு பார்க்காத…. சொல்லிட்டேன்..” என்று ரம்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதே….சூர்யா கீழிறங்கி வந்தான்.

அலுவலகம் செல்ல தயாராகி வந்த சூர்யா மருந்துக்கும் நிலாவைப் பார்க்கவில்லை.அங்கு நிலா என்று ஒருத்தி இல்லாததைப் போலவே..நேராய் சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தவன்…”அம்மா டிபன்…வைங்க….ஆபீஸ்க்கு லேட்டாச்சு..” என்று குரல் கொடுக்க….”ஆபீஸ்” என்ற வார்த்தையில் ஜீவா அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வந்தான்.

என்னடா மச்சான் ஆபீஸா….!”என்றான் அதிர்ச்சியாய்.அவனை மேலும் கீழூம் பார்த்த சூர்யா…”ஆபீஸ் போகனும்ன்னு தானடா சொன்னேன்.நீ என்னமோ பேய பேட்டி எடுக்க சொன்ன ரேஞ்சுக்கு அலறிகிட்டு வர…” என்றான் சூர்யா.

டேய் உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா…?கல்யாணம் ஆகி இரண்டு நாள் தான் ஆகுது…அதுக்குள்ள ஆபீஸா…” என்றான் ஜீவா அழாத குறையாய்.

ஜீவாவின் முகத்தைப் பார்த்த தீபாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய் விட்டு சிரிக்கவும் முடியவில்லை….”இருந்தாலும் உன் ஆள் இவ்வளவு ஈடுபாட்டோட இருக்க கூடாது…” என்று ரம்யா தீபாவின் காதில் முனு முனுக்க…தீபாவின் காது மடல் எல்லாம் சிவந்தது.

ஜீவாவைப் பார்த்து பல்லைக் கடித்த சூர்யா…”டேய்..நான் தான் ஆபீஸ் போறேன்னு சொன்னேன்….உன்ன எங்கடா வர சொன்னேன்…” என்று சொல்ல…”ஹோ அப்படியா…கொஞ்ச நேரத்துல நான் பயந்துட்டேன் மச்சான்..: என்று அசடு வழிந்தான் ஜீவா.

என்ன சூர்யா..? ஆபீஸ்க்கு உடனே போகனுமா..?இன்னும் ஒரு ரெண்டு நாள் கழிச்சு போகலாம்ல…” என்று மகேஷ்வரி சொல்ல…”அம்மா நான் வேலை பார்க்கலை.சொந்த பிஸ்னெஸ்…நான் போய் பார்த்தாதான் சரியா இருக்கும்.ஏற்கனவே பத்து நாளைக்கு மேல போகலை…” என்று சொல்லியபடியே சாப்பிட்டு முடித்தவன்…”வரேன்மா..” என்று மகியிடம் சொன்னவன்…நிலாவை திரும்பியும் பார்க்கது சென்று விட்டான்.

யாரின் கண்களுக்கும் புலப்படாத இவர்களின் விலகல் தன்மை மகேஷ்வரின் கண்களுக்கு தவறாமல் பட்டது.தாய் அறியாதா சூழா…?

நிலாவிற்கு தான் மனதிற்குள் எங்கோ இடித்தது.அவன் நெருங்கி வந்த போதெல்லாம் எரிச்சலடைந்த மனம்…அவன் விலகி செல்லும் போது எதையோ இழந்ததைப் போல் இருந்தது.தான் மட்டும் தனித்து விடப் பட்டதைப் போல் உணர்ந்தாள் நிலா.

நிலாவைப் பார்க்காமல்சென்ற சூர்யாவிற்கும்….அந்த நிமிடம் நரக வேதனையாய் இருந்தது. என் மனம் உனக்கு புரியவே இல்லையா நிலா…? என்று வேதனையுடன் தனக்குத் தானே கெட்டுக் கொண்டான். சூர்யாவின் ஆதங்கம்,கோபம் எல்லாம் அவன் காரை   எடுத்த விதத்தில் தெரிந்தது.  

 

காதல் என்பது எனது பெயர்….

கண்ணீர் என்றால் எனக்கு உயிர்…

உருவம் எனக்கு கிடையாது….

உணர்ச்சிப் பிழம்பாய் வரும்போது…

கட்டுக்கடங்கா காட்டாறு…

என்னைக் கட்டுப்படுத்த முடியாது…

அன்பாய் வளரும் ஆன்மீகம்…

ஆராய முடியா விஞ்யானம்….

Advertisement