விஜயேந்திரனுக்கு தாங்கள் திருமணம் செய்யும் முன் வெளி உலகத்திற்க்கு நந்தன் எங்கள் மகன் என்று தெரிய வேண்டும் என்று விரும்பினான்..
நந்தனுக்கு வேறு யாரோவாக தகப்பனாக வெளி உலகத்திற்க்கு காட்ட அவன் விரும்பவில்லை…. இது வரை எப்படியோ.. ஆனால் இனி… அது மகாவின் தந்தையாக இருந்தாலுமே..
இன்னொறு முக்கிய காரணம் நந்தனுக்கும் ஜெய்யேந்திரனுக்கும் இருக்கும் உருவ ஒற்றுமை.. இப்போது இது தெளிவு படுத்தாது விட்டு விட்டால்…
பின் நாளில்… பிரச்சனைகள் வேறு மாதிரி உருவாக வாய்ப்பு இருப்பதாக நினைத்தாக நினைப்பதும் ஒரு காரணம்…
விஜயேந்திரன் அதை நினைத்து தான் மகாவின் தந்தையிடம்..” எங்கள் திருமணத்திற்க்கு முன் நந்து எங்கள் மகனாக தான் வெளி உலகுக்கு காட்ட படுவான்..” என்று சொன்னதுமே…
மகாவின் தந்தை வெங்கடேஷின் பார்வை தனுஜாவிடம் தான் சென்றது…
தங்களிடம். இதனால் பாதிக்கப்பட்ட எங்களிடமே உண்மையை சொன்னதற்க்கே தனுஜாவின் முகத்தில் விருப்பமின்மையின் சாயலை அப்பட்டமாக பார்த்தவர் ஆயிற்றே.. அதனால் தனுஜாவை பார்த்தார்.
அவர் எதிர் பார்த்ததும் போல் தனுஜா.. “ இதுக்கு நான் ஒத்து கொள்ள மாட்டேன் விஜய்..” என்று சொல்லும் போதே தனு பக்கத்தில் இருந்த ஜெய்..
“ தனும்மா..” என்று அவள் கை பிடித்து மேல பேச விடாது தடுக்க பார்த்தான்..
ஆனால் அவன் கையை தட்டி விட்ட தனுஜா.. “ உண்மையை சொல்ல வேண்டும் என்றால்.. உங்கள் அம்மா செய்த தப்பில் சரி பாதி உங்களுக்கும் பங்கு இருக்கு விஜய்.” என்றவனின் பேச்சில் விஜயேந்திரன்..
“ தனு..” என்று அதிர்ந்து போய் அவளை பார்த்தான்..
“ ஆமாம் நீ என்ன தான் அம்மா சொன்னது. உங்கள் அண்ணனுக்கு நல்லது நினைத்து என்று நீ ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், எங்கள் விசயம்..
அதுவும் இது எவ்வளவு நுட்பமானது… அதை எங்க கிட்ட இருந்து மறைத்து.. எங்களுக்கு நல்லது செய்கிறேன் என்று நினைத்து .. எங்கள் வாழ்க்கையின் முக்கிய முடிவை நீங்க எப்படி எடுக்கலாம்…?” என்று தனுஜா பேசிய வார்த்தைகளுக்கும் சரி.. கேட்ட கேள்விகளுக்கு சரி விஜயேந்திரனால் பதில் சொல்ல முடியவில்லை…
“ என் தப்பு அன்னைக்கு அந்த ரிப்போர்ட் வாங்காது போனது தான்.. நான் ரொம்ப பயந்தேன்.. எல்லாம் பெண்களுக்கும் இருக்கும் அந்த பயம்..
பிரச்சனை என்னிடம் இருந்து விட்டால்…? ஜெய்க்கு என் மீது இருக்கும் காதல் குறைந்து விடுமோ..?” என்று மனைவி சொல்லும் போதே அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்ட ஜெய்யேந்திரன்..
“ இப்போ என் பிரச்சனை தெரிந்ததும், என் மீது உனக்கு காதல் குறைந்து விட்டதா தனும்மா…? சொல்.. குறைந்து விட்டதா..? இதோ எனக்காக என் தம்பியிடம் பேசுற… தானே… அப்போ எனக்கு மட்டும் எப்படி குறையும் தனும்மா..
இதோ எனக்கு தான் பிரச்சனை என்று தெரிந்ததும்… இதனால் நீ எந்த அளவுக்கு மன அழுத்ததிற்க்கு ஆளான.. மகா குடும்பம் நந்து இப்படியான கவலை தான் எனக்கு வந்தது தனும்மா… சிறிது கூட உனக்கு என் மீதான காதல் குறைந்து விடுமா ..? என்று நினைத்தது கூட இல்லை..” என்று சொன்னவன்..
பின் ஏதோ யோசித்தவனாக.. “ நீ எனக்கு புரிய வைத்த காதலை.. நான் உனக்கு உணர்த்த தவறிட்டேனா தனும்மா..?” என்று அவள் கன்னம் பிடித்து கேட்டான்..
அது மற்றவர்களின் வீடு.. தாங்கள் இருப்பது நடு ஹால்.. அங்கு தன்னை சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள்.. என்று எல்லாம் ஜெயேந்திரனின் நினைவில் இல்லை…
அவன் முன் நின்றது எல்லாம் தனுஜா எப்படி அப்படி நினைத்து இருக்கலாம்.. தான் அவள் அளவுக்கு அவள் மீது தனக்கு இருக்கும் காதலை உணர்த்த தவறி விட்டோமா..? “ என்பதே..
அவர்கள் இருவர்களையும் பார்த்து கொண்டு இருந்து மகாவின் மொத்த குடும்பத்தினர்.. ஆம் மொத்த குடும்பத்தினர் என்று தான் சொல்ல வேண்டும்..
மகா நந்தனின் வயிற்றில் சுமந்த நாள் முதல் தங்களுக்கு அனைத்திலும் உறுதுணையாக இருந்த தன் தம்பியையும் தம்பி மனைவியிடம் அனைத்தும் சொல்லி விட்டார்.. தெரிந்ததும் இதோ கிளம்பி வந்து விட்டனர்..
பார்த்தவர்கள் அனைவரும் ஒன்று போல் இதை தான் நினைத்தனர்.. பிரச்சனை என்று இவர்களிடம் சொல்லி இருக்கலாம்.. கண்டிப்பாக இதை விட நன்றாகவே பிரச்சனையை கைய்யாண்டு இருப்பார்கள் என்று..
மகாவுக்கு அவர்களின் இருவரின் காதலை பார்த்ததும் தன்னால் அவள் பார்வை விஜயேந்திரனிடம் தான் சென்றது…
‘தன்னால் இவர்களை போல் விஜயேந்திரன் மீது காதல் கொள்ள முடியுமா..? என்று… விஜயேந்திரனும் அந்த சமயம் என்ன நினைத்தானோ.. அது வரை தனுஜா ஜெய்யையே பார்த்திருந்த விஜயேந்திரனும் சட்டென்று மகாவின் பக்கம் திரும்பி பார்த்தான்…
மகாவின் பார்வையில் விஜயேந்திரன் என்ன உணர்ந்தானோ… ஒரு சிறு புன்னகை.. அந்த சூழ்நிலையிலும் கண் சிமிட்டிக் கொண்டு புரிந்த அந்த புன்னகையின் மதிப்பு யாருக்கு தெரிந்ததோ இல்லையோ மகாவுக்கு தெரிந்தது…
பின் மகாவின் பார்வை தனுஜா ஜெய்யிடம் சென்றது… பார்த்தவள் இதை தான் நினைத்தாள்… குழந்தைக்கு தந்தையாகும் தகுதி என்ன..? கணவான இருக்க முடியாத தகுதியை ஜெய்யேந்திரன் இழந்து இருந்தாலும், ஜெய் மீதான தனுஜாவின் காதலில் குறை இருக்காது என்று…
அதை தான் ஜெய் தனுவிடம் சொன்னான்.. “ நான் உனக்கு புருஷனா இருக்க முடியவில்லை என்றாலும்,, உனக்கு என் மீது இதே காதல் இருக்கும்..
அதில் சிறிதளவும் குறையாது என்று எனக்கு உன் காதல் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு தனு… உனக்கு ஏன் மீது இல்லாது போனது.. உனக்கு நான் உணர்த்த வில்லையா..?”
ஜெய்யேந்திரன் அப்போதும் எப்படி நீ அப்படி நினைத்து இருக்கலாம் என்று கேட்கவில்லை.. நான் உனக்கு என் காதலை உணர்த்த தவறி விட்டேனா..? என்பதே அவனின் கேள்வியாக இருந்தன..
“ இல்ல ஜெய் இல்ல… கண்டிப்பா இல்ல ஜெய்… உன் காதல் தான் ஜெய் எனக்கு தான் குழந்தை பிறக்கும் தகுதி இல்ல என்று சொல்லியும்… அடுத்து என்ன இப்படி தான் நான் யோசித்தேன்..
உங்க குழந்தையை சுமந்து உங்களுக்கு கொடுக்க முடியலையே என்று நினைத்தேன்.. ஆனால் சாகனும் என்று நினைக்க.. நினைத்தது நந்து உங்களை மாதிரி. இருந்ததை பார்த்து தான்..
ஆனால் இப்போ சொல்றேன் ஜெய்.. நான் உன் காதலை சந்தேகித்தது போல நீ செய்து இருக்க மாட்ட .. என்னை வேறு யாரோட பார்க்க முடியாத நிலையில் பார்த்தால் கூட..” என்று சொன்னவள் ஜெய்யின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டவளின் தலை மீது கை வைத்து கொண்ட ஜெய்.. இன்னும் அவளை தன்னுள் அழுத்தமாக புதைத்து கொண்டவனுக்கு கண்களில் கண்ணீர் ஊற்று…
அதை பார்க்க. பார்க்க அனைவருக்கும் இது தான் தோன்றும்.. தன் மனைவி மீதோ தன் காதலி மீதோ இவர்கள் போல் காதல் செய்ய முடியுமா..? என்று..
அனைத்தும் பார்த்த மகா விஜயேந்திரனிடம்.. “ இப்படியே இருக்கட்டும்…” என்று சொல்லி விட்டு அவள் அறைக்குள் நுழைந்து விட்டாள்..
குழந்தைகளை வெளியில் எவ்வளவு நேரம் வைத்து இருக்க முடியும்..? அவர்களின் அட்டகாசத்தை தாக்கு பிடிக்க முடியாத ஆகாஷ்.. அதுவும் ஆதியாவது பரவாயில்ல.. இந்த நந்து..
ஆதியிடம் சிறிது நேரம் விளையாடுவது. பின் தன்னையே குறு குறு என்று பார்ப்பது என்று அவனின் செயல்களை பார்த்த ஆகாஷ்..
‘பார்க்க ஜெய் அத்தான் போல இருக்கான். ஆனா அந்த பார்வை அப்படியே விஜய் போல தான்..’ என்றூ நினைத்தாலும் இரு குழந்தைகளும் நன்றாக தான் பார்த்து கொண்டு இருந்தான்..
ஆனால் நந்தன் அவன் கை பிடித்து இழுத்து தன் அருகில் தன் உயரத்துக்கு தகுந்தது போல அருகில் அமர வைத்தவன்..
“ ஏன் என்ன அப்போ அப்போ பார்த்துட்டே இருக்கிங்க… எங்க அம்மூ சொல்லி இருக்காங்க.. இது போல யாராவது பார்த்துட்டே இருந்தா.. வீட்டுக்கு ஒடி வந்துடுன்னு .. நான் வீட்டுக்கு போறேன்..” என்று சொல்லி வீட்டுக்குள் போகும் நந்தன் அவன் தந்தையை போலவே ஆகாஷை வில்லான ஆக்கிய பின்னவே வீட்டுக்குள் நுழைய பார்த்தவன் பின் ஆதியை பிடித்து கொண்டு வரும் போது தான் தனுஜா பேசிய அனைத்தும் கேட்டான்..
இந்த இவர்களின் காதலுக்காக தானே அன்று அறிந்தும் அறியாத வயதில்
கேட்ட செய்தி மனதுக்கு உவப்பனாதாக இல்லாது போனாலும் தன் தாயிடம் கூட சொல்லாது விட்டு விட்டான்..
இருவரின் காதலையும் பார்த்து கொண்டு இருந்த ஆகாஷின் கண்களில் அப்படி ஒரு நிறைவு தெரிந்தது…
மகா அப்படி சொன்னதும் வுஜயேந்திரனுக்கு தன் இயலாமையை நினைத்து அவனுக்கே அவன் மீது அவ்வளவு கோபம்..
தன் ஒட்டலை மேற்பார்வை இட்டுக் கொண்டு வந்தவன் மனதில் இது தான் ஒடிக் கொண்டு இருந்தது..
இவ்வளவு இருந்து என்ன பிரயோசனம்..? தன் மகனை மகன் என்று சொல்ல முடியாது.. என்று நினைத்தவன் மனதில் எதன் மீது நாட்டம் இல்லாது போய் விட்டது.
மகாவை பேசியில் கூட அழைக்கவில்லை.. நந்தனை முதலில் நிழல் உருவமாக பேசியில் பார்த்து கொண்டு இருந்தவன் அதை பார்க்க கூட முடியாத நிலையில் தான் அவன் மனம் இன்று இருந்தது..
என் மகன்.. ஆறு வயது ஆகிறது… தனக்கு மகன் என்று ஒருவன் இருக்கிறான் என்று தெரியாத போது எப்படியோ.. ஆனால் இன்று..
அன்று தன் விந்துவை கொடுத்தவனுக்கு தெரியவில்லை.. அதன் வீரியம் என்ன என்று..?
அன்னை சொன்ன அந்த செயற்கை கரு உருவாவது தோல்வியில் முடிந்து விட்டது என்று சொன்ன போது கூட .. ஒரு தோள் குலுக்கலோடு முடிந்து விட்டான்..
ஆனால் அதின் எதிரொலியாக தன் கண் முன் மொத்தமாக நின்றதில்… அதன் தாக்கம் அவனால் தாங்க முடியவில்லை…
எப்போதும் ஒரு விரைப்போடு சுற்றி கொண்டு இருக்கும் விஜயேந்திரன்… அவனின் அந்த இன்றைய ஒய்ந்த தோற்றம் … அந்த ஒட்டலில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கு தெரிந்த போது.. உடன் பிறந்த அவனின் சகோதரன் ஜெய்யேந்திரனின் கண்ணுக்கு தெரியாது போய் விடுமா என்ன…?
விஜயேந்திரனை பார்க்க வந்த ஜெய்.. அவனை பார்த்ததும்.. “ நீ சொன்னது போல நந்தன் யார் என்று சொல்லிட்டே மகாவை கல்யாணம் செய்துக்க விஜய்… நான் தனுவிடம் பேசிக்கிறேன்..” என்று சொன்னவனை இழுத்து அணைத்து விடு வித்தவன்..
அந்த கணமான நேரத்தை மாற்றும் பொருட்டு… “ எதுக்கு உன் பொண்டாட்டி அடிச்சே என்னை கொல்லவா..? போ போ .. அது என்ன எப்போ பார்த்தாலும், இப்போ எல்லாம் என்ன பார்க்க வந்துட்டு இருக்க. ..?
என்ன இப்போ எல்லாம் என் மீது காதல் வந்து விட்டதா என்ன…? இரு இரு தனுவிடம் சொல்றேன் உன் மீது இருக்கும் காதல் என் மீது ஜெய்க்கு திரும்பி விட்டது என்று..” என்றவனை தள்ளி நிறுத்திய ஜெய்..
“சொல்… சொல்லுடா.. சொல்லி தான் பாறேன்.” என்று சொன்ன ஜெய் சொன்ன தோரணை . நீ என்ன சொன்னாலும் அவள் நம்ப மாட்டாள் என்று தான் இருந்தது..
பின் “ மகா கிட்ட பேசினியாடா..?” என்ற கேள்வி ஜெய்யிடம் இருந்து வரவும், தான் ஜெய் இங்கு வந்ததுக்கு உண்டான காரணம் தெரிந்தது..
ஜெய் கேட்ட கேள்விக்கு விஜயிடம் இருந்து பதில் இல்லை.. ஆனால் பார்வை தன் அண்ணனிடம் மட்டுமே நிலைத்து இருந்தது.
அவனின் பார்வையில் .. “ நேற்று மகா தனு கிட்ட போனில் பேசினா..?” என்று சொன்னதுமே விஜயிடம் இருந்து..
“ தனு கூப்பிட்டு பேசினாளா? இல்ல மகா கூப்பிட்டாளா..? என்று கேட்டான்..
எதற்க்கு இந்த கேள்வி ஜெய்யிக்கு புரியவில்லை.. ஆனால் உண்மையான பதிலான..
“ மகா தான் கூப்பிட்டா..” என்று சொன்னவள் அவள் என்ன பேசினால் என்று ஜெய் தொடங்கும் முன்..
“வேண்டாம் அவள் என்ன பேசினா என்று உங்க மூலமா எனக்கு தெரிய தேவையில்லை..” என்ற அவன் பேச்சே சொன்னது விஜய் என்ன எதிர் பார்க்கிறான் என்று..
பின் ஜெய்யின் பேச்சு தொழிலை மட்டுமே தான் ஒட்டி இருந்தது. ஜெய் அங்கிருந்து போகும் முன் விஜய் ஜெய்யிடம்..
“ அம்மாக்கு போன் செய் ஜெய்… “ என்ற பேச்சில்.. “ கண்டிப்பா ஆனா இப்போ முடியாது..” என்றதோடு விஜயிடம் இருந்து ஜெய் விடைப்பெற்றான்..
விஜயேந்திரன் எதிர் பார்த்தது போல் மறு நாள் இரவே மகாவின் பேசியில் இருந்து விஜய்க்கு அழைப்பு வந்தது..
“ நாளைக்கு நான் உன்னை பார்க்கனும்.. வரும் போது நந்துக்கு ஏதாவது பரிசு வாங்கிட்டு வா..” என்ற பேச்சோடு..
விஜய்.. “ கிப்ட் கண்டிப்பா நான் அவனுக்கு கொடுப்பேன் மகா.. ஆனா நாளைக்கு வந்து கொடு.. ஏன் ஏதாவது க்ளாஸ் பஸ்ட் அது போல..?” என்ற கேள்விக்கு மகாவிடம் வந்த பதில்..
“ நாளை நந்தனின் பிறந்த நாள்..” என்று மகா சொன்னதை விஜய் எந்த மாதிரி உணர்கிறான்.. அதை வார்த்தையால் சொல்ல முடியாது…