அத்தியாயம்….13

மகாலட்சுமிக்கு விஜய் ஜெய் இருவரையும் ஒரு சேர பார்த்ததில் அப்படியும் இருக்குமா..? என்ற சந்தேகத்தில் தான் முதலில் நந்தனின் மறு பதிப்பாக இருக்கும் ஜெய்யை, அதுவும் விஜய்யின் அNணன் எனும்  போது பார்க்க கூசிதான் போனாள்..

ஆனால் தனுஜா பேச்சுக்கு ஏதோ சொல்ல  மகா நிமிர்ந்து பார்க்கும் போது தான் விஜய் ஜெய் இருவருக்கும் இருந்த ஒற்றுமை அவள் கண்ணுக்கு அப்பட்டமாக  தெரிந்தது தான்..

ஆனால் குழந்தை பிறக்க வழி இல்லாதவர்கள் தான், அதாவது மனைவி குழந்தையை சுமக்க முடியாத போது தான்  இது போல் முறைக்கு முயல்வர். விஜய்க்கு திருமணம் ஆகாத  போது… என்று நினைக்கும் போதே எங்கோ ஒரு மூலையில் சுரந்த உற்சாகம் நொடியில் மறைந்தது…

பின் எது இருந்தாலும் நந்தனை தர முடியாது.. அதில் அவள் தீர்மானமாக இருந்தாள்.. அதனால் தான் அப்படி  கேட்டது…

அதற்க்கு உடனே..  ஆகாஷ் சொன்ன விசயத்தின் சாரம்சம் மகாவுக்கு புரிந்தது தான். புரிந்தும்.. முன் இதுவா..? அதுவா..? என்று யோசிக்கும் போது இருந்த அந்த நிலையில் அவள் இப்போது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..

மற்றைய பெண்களுக்கு முதலில் காதல்.. பின் திருமணம் அடுத்து குழந்தை என்று இருக்கும்.. ஆனால் தனக்கு என்று போதே.. எப்போதும் போல் அவள் கை தன்னால் அவள் அடி மடி மீது படிந்தது..

அவளை மட்டுமே அவளின் முக.த்தை மட்டுமே.. அவளின் செயல்களை மட்டுமே பார்த்து கொண்டு இருந்த விஜயேந்திரனுக்கு அவள் என்ன நினைக்கிறாள் என்று சரியாக தெரியாவிட்டாலும், அவள் கை அவள் அடி வயிறு நோக்கி செல்லும் போது, தன்னால் அவன் கண்  தன்னால் வேதனையில் மூடிக்  கொண்டது..

அவனுமே தானே பார்த்தான்.. விழுந்ததில் சேலை விலகியதோடு. நடுவில் விழ பார்த்து பின் மீண்டும் அவளை நன்றாக பிடிக்க வேண்டி இடை மீது இன்னும் கை அழுத்தம் கொடுக்கும் போது புடவை கொஞ்சம் கீழ் நோக்கி நெகிழ்ந்தது

…நெகிழ்ந்த அந்த இடைப்பட்ட பகுதியில் பார்த்த அந்த பிரசவத்தால் ஏற்படும் வடுவை பார்த்தவனுக்கு, இந்த வடு இவளுக்கு பதினெழு வயதில்  இருந்தே இருந்து இருக்கும்..

அதை நினைக்கும் போதே.. நான் செய்தது பெரிய தப்பு… தன் அம்மா அப்போது சொன்னதற்க்கு சம்மதித்து இருக்க கூடாது.. முன் மறுத்தாலும்..  பின்    அவன் யோசித்த என் குழந்தை அண்ணியிடம் வளரவில்லை.. வாடகை தாய் மூலம் தானே வளர்கிறது…

 பின் என்ன..? அம்மா ஆசைப்பட்டது போல அவங்க வாரிசு… எnRu  நினைத்தவனுக்கு அப்போது தனுஜாவின் மன உணர்வை மறந்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்..

ஆனால் இப்போது.. அனைத்தும் தவறு என்று நினைத்து நந்தனை பார்க்க பார்க்க.. இந்த குழந்தை கிடைத்து இருக்காது…  நினைத்தவன் அவனையே பார்த்தவனுக்கு கண்கள் கலங்கி விட்டது..

என் குழந்தை என்னை  அங்கிள் என்று அழைக்கிறான் என்று  நினைத்தவனுக்கு   கூடவே மகாவும் இந்த வேதனையை தினம் தினம் தானே அனுபவித்து  கொண்டு இருப்பாள் என்றும் நினைத்தான்..

அந்த வயதில் மற்ற பெண்கள் போல மகா இருந்து இருக்க மாட்டாள்… அந்த வயதில் தான் எப்படி வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தேன் ஆனால் மகா…

இது எல்லாம் நான் எப்படி சரி செய்ய போகிறேன் என்று குழப்பமாக இருந்தது.. முன் நந்தன் தன் குழந்தை என்று தெரிந்த பின்னும் அவனை அனுகாததிற்க்கு காரணம்..

மகாவின் பெற்றோர்… எதற்க்கு நந்தனை தங்கள் குழந்தையாக வெளி உலகத்திற்க்கு காட்டினார்கள்.. மகாவை பற்றி தவறாக வெளியில் பேச கூடாது.. அடுத்து அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்க  வேண்டும் என்று தானே..

அது அப்படியே இருக்கட்டும்..  விசயம் சொல்லி பின் இப்போது தான் அனைத்தும் மறந்து கொஞ்ச நிம்மதியாக இருக்கிறார்கள்… அவர்கள் நிம்மதியை ஏன் கெடுக்க வேண்டும் என்று நினைத்தும் தான் ஒதுங்கி இருந்தான்..

ஆனால் இன்று அவன் அவ்வாறு நினைக்கவில்லை.. காரணம் மகாவின் வயிற்றில்  இருந்த வடு…

பெண்கள் பிரச்சனைகள் சரியாக தெரியாததால் இப்படி நினைத்தவன். இப்போது இது மறைக்கும் விசயம் கிடையாது.. அதுவும் கணவனிடம் முடியாது.. அதோடு மகாவின் அந்த வடுவை கூட மற்றவன் பார்ப்பான் எனும் போதே முடியவே முடியாது.. என்ன ஏற்கிறாளோ இல்லையோ.. ஆனால் என்னை திருமணம் செய்து கொண்டாவாது தள்ளி வைக்கட்டும். 

என் குழந்தையின் அம்மாவை மற்றவனுக்கு தாரை வார்க்க முடியாது என்று  முடிவு செய்தவனாக அனைவரையும் ஒரு பார்வை பார்த்தான்.. 

அதில் என்ன உணர்ந்தானோ ஜெய்யேந்திரன் “ குழந்தைங்க எவ்வளவு நேரம் தான் ரூமிலே இருப்பாங்க. வாங்க கார்டனுக்கு கூட்டிட்டு போகலாம்..” என்று சொல்லி கொண்டு ஜெய் நந்தன் கை பற்ற… தனு ஆதியின் கை பற்றிக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியே செல்லும் போது எங்கு நகாரது நின்ற இடத்திலேயே ஆணி அடித்தது போல் நின்று கொண்டு இருந்த ஆகாஷை பார்த்த ஜெய்.

“ என்னடா வெளியா வா போகலாம்..” என்று அழைத்தான்..

மகாவை காட்டி ஆகாஷ்.. “ நான் கேட்டதுக்கு  மகா பதில்  சொல்லலே அத்தான்..” என்று சொன்னவனை விஜய் ஜெய் இருவரும் ஒரு சேர முறைத்தனர்..

விஜய்.. “  தனுவை  போல அக்கா சொல்… என்று  முன் சொன்ன பல்லவியையே பாடினான்..

அதற்க்கு ஆகாஷ்.. “ தனு அக்காவை  நீங்க அண்ணி என்று  கூப்பிடுறிங்களா..?  என்று கேள்வி கேட்டவனை ஜெய் கை பிடித்து இழுத்து செல்ல வேண்டிய நிலை ஆகி விட்டது..

அப்போது கூட போகும் போது, கதவின் முடிவில் முகத்தை மட்டும் உள்ளே நீட்டி. “ இப்போ சொல்லுங்க நான் வில்லனா..?” என்று கேட்டான்..

விஜயேந்திரனின் மனநிலைக்கு   எதிர்  பதமான சூழ்நிலையை சட்டென்று கொண்டு வந்து விட்டான் .. ஆகாஷ்..

“ நீ எனக்கு  எப்போதும் வில்லன் தான்டா போ..” என்று வெளியில் அனுப்பி விட்ட விஜய்..

உப் என்று மூச்சை இழுத்து விட்டவனுக்கு எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.. சாதரணமாக  தன் காதலை ஒரு பெண்ணிடம் முதலில் சொல்லும்  போதே ஒரு வித தயக்கம் வரும்.

இங்கு காதலோடு இவர்களின் இந்த உறவு..இப்படியான சூழ்நிலையில் பேச்சை எங்கு இருந்து ஆரம்பிப்பது என்பதை விட..

மகாவின் மனது புண் படாத படி எப்படி என்ன  சொல்வது என்பது தான் அவனின் கவலையாக இருந்தன..

அதுவும் தன்னிடம்  தனியாக பேச தான்  அனைவரையும் அனுப்பி விட்டேன் என்று தெரிந்தும் .. எதுவும் பேசாது முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது. தன்னையே பார்த்துக் கொண்டு இருந்த மகாவை இப்போது விஜய்யும் நேர்க் கொண்டு பார்த்தான்..

பார்த்ததும் பிடித்த பெண் இவள்..  அந்த ஆசை ஒரு பக்கம் இருக்க.. என் குழந்தைக்கு அம்மா இவள்.. அதை நினைத்த உடன்  அவளிடம் ஒரு உரிமை உணர்வு தன்னால் எழுவதை அவனால் தடுக்க முடியவில்லை…

திருமணம் இல்லாது.. இருவருக்கும் தாம்பத்தியம் பந்தம் ஏற்படாது… என் குழந்தையின் தாய்.. அதற்க்கு உண்டான அடையாளமாக வடு ஒரு பக்கம் நினைக்க ..வேதனை மறுப்பக்கம் இவள் எனக்கே எனக்கே ஆனவள் என்ற உரிமையின் குரல் அவன் மனதில் தோன்றுவதை அவனால் தடுத்து நிறுத்த முடியவில்லை..

அதுவும் முன் அவன் தவறு என்று நினைத்தது.. இப்போது உரிமை என்று நினைக்க தோன்றியது..

மெல்ல மகாவின் அருகில் சிறிது இடம் விட்டு தான் அவள் இருந்த கட்டில் மீது அமர்ந்தான்..

அமர்ந்ததும் மகாவின் முகத்தை தான் பார்த்தான்.. அதில் ஏதாவது பயம்.. இல்லை அருவெருப்பு என்று, அதில்  எதுவும் இல்லாததில் மெல்ல அவளை  பார்த்து சிரித்தான்..

மனதில் என்ன இது டீன் ஏஜ் பையன்  போல மனது பட பட என்று அடித்து கொள்கிறது என்று நினைத்தாலும், அவன் இதயம் தன்னால் அதன் வேலையை காட்டியது தான்..

“ பயமா இருக்கா..?” என்று விஜய் மகாவிடம் கேட்டான்..

மகா.. “ இல்லை..” என்பது போல் தலையாட்டவும்..

“ஏன்…?” என்றும் கேட்டான்…

“ தெரியல..?” என்று மகாவே கேள்வி எழுப்பினாள்..

“ இல்ல தனியா என் கூட இருக்கலே.. அதற்க்கு தான் கேட்டேன்..”  

மகாவிடம் அதற்க்கும்.. “ இல்லை..” என்ற தலையாட்டல் மட்டுமே விஜயேந்திரனுக்கு கிடைத்தது..

மகா எப்படி சொல்வாள்…? இதே முகத்தை தினம் தினம் பார்த்து பழகியதால் கூட இருக்கலாம் என்று…

பின்.. “நந்துவை நம்பி அனுப்பி விட்ட.. அதுல ஏதாவது பயம்…?” என்று திரும்பவும் கேள்வியே கேட்டான். அவள் மனதை அறியும் பொருட்டு…

“ பெரியப்பா கூட தானே அனுப்பினேன்..” என்று சொல்லி விட்டாள்.. சொன்ன பின் தான் அதன் அர்த்தம் புரிந்தது..

 இது வரை அவனின் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தவள் சட்டென்று தலையை குனிந்து கொண்டவளை விஜய் அவள் மோவாவின் மீது கை வைத்து தலையை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தான்..

அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்து விட்ட விஜய்.. “ எதுக்கு மகா அழுகுற..?” என்று கேட்டதும்..

சிறு பட படப்புடன். “ நந்து நந்து…” அதற்க்கு மேல் எப்படி கேட்பது என்று தெரியாது மகா 

பரிதவித்து போனவளை இன்னும் பரிதவிக்க விடாது.

“ நந்து என் குழந்தை தான்… தப்பு தப்பு நம்ம குழந்தை தான் மகா.. நானும் ஜெய்யும் ஒரே மாதிரி தான்.. என்ன ஒன்னு நம்ம நந்து மொத்த உருவமா அவன் பெரியப்பா போல வந்துட்டான்..” என்று அவளின் பரிதவிப்பு உண்டான காரணத்தை உணர்ந்து அதை தெளிவும் படுத்தி விட்டான்..

அடுத்து சிறிது நேரம்…  அந்த அறையில் அமைதி மட்டுமே நிலவியது..

பின் விஜயேந்திரனே.. “ நாம கல்யாணம் செய்துக்கலாமா மகா. ..? உன்னிடம் முதல்ல காதல் சொல்ல தேர்ந்தெடுத்த நாள் மகா இன்னைக்கு.. ஆனால் காதல்  சொல்லாது கல்யாணம் செய்துக்க என்று கேட்பதால், உன் மீது காதல் இல்லை என்று நினைத்து விடாதே..

அதே போல் தான். நந்து நிஜமா அவனை பார்த்த போதே.. நேரில் என்ன நிழலா அவனை போட்டாவில் பார்த்த  போதே. என் உடம்பு அப்படி நடுங்கி  விட்டது மகா… இப்போ நேரில்…

ப்ளீஸ் மகா உனக்கு நடந்தது..” என்று பேசிக் கொண்டே எழுந்து அவளின் இந்த பக்கம் தோதாக அமர்ந்த வாறு அவளின் இடது கையை பற்றிக் கொண்டே பேச ஆரம்பித்தவனை தடுத்து நிறுத்திய மகா..

“ எனக்கு  இந்த பக்கம் அவ்வளவா கேட்காது…” என்று  சொன்னவளிடம்..

“ ஒ..’ என்று  சொல்லிக்  கொண்டே மீண்டும் அவளின் வலது பக்கம் அமர்ந்து மீண்டும் தன் பேச்சை தொடர்ந்தவனை மகா இப்போது யோசனையுடம் பார்த்து இருந்தாள்..

இவன் என்ன இதற்க்கு எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை என்பது  போல்..

விஜயேந்திரனுக்கு மகாவின் கவனம் தன் பேச்சில் இல்லை என்பது புரிந்து கொண்டவனாக..

“என்ன மகா என் கிட்ட ஏதாவது கேட்கனுமா..?” என்று கேட்டவனிடம்..

“ எனக்கு இந்த காது சரியா கேட்காது என்று சொன்னேன்.. ஆனால் நீங்க எந்த ரியாக்ஷனும் கொடுக்கல… நான் எப்படி இருந்தாலுமே என்னை தான் கல்யாணம் செய்துக்கனும்  வேறு வழி இல்லை என்று என்னிடம்  கல்யாணத்தை பற்றி பேசுறிங்களா..? என்றும் கேட்டாள்..

தன் கேள்வி அபத்தம் என்று தெரிந்தே… அது தான் முன்னவே சொல்லி விட்டானே.. கல்யாணம் செய்ய கேட்கிறேன் என்று காதல் இல்லை என்று அர்த்தம்  இல்லை என்று..

விஜயேந்திரனுக்கு  மகாவின் மனநிலை புரிந்து தான் இருந்தது மேலும்… அவளை பற்றிய முழு விவரமும் தான் அவனுக்கு தெரியுமே. ஆனாலும் அதை சொல்லாது..

“ உனக்கும் நான் நந்தனின் அப்பா என்பதால் தான் கல்யாணம் செய்துக்க போகிறாயா..?” என்று கேட்டான்…

“நான் இன்னும் ஒத்துக் கொள்ளவே இல்லையே.. “ என்ற அவளின்  பதிலில் விஜய் அவளை பார்க்க… அவளும் அவனை பார்த்த அந்த பார்வையில்..

“ நந்தன் வளர்வதற்க்குள் நாம கல்யாணம் செய்துக்கனும் மகா.. இதுவே எப்படி உறவு  முறையில் மாற்றுவது என்று யோசனையா இருக்கு… ஆனா ஒன்று மட்டும் நிச்சயம் மகா.. அவனுக்கு நாம பெற்றோர்களா தான் இருக்கனும்.. அவன் கூப்பிடும் அந்த அங்கிள்… வேண்டாம் வேண்டாவே வேண்டாம்..” என்று  சொல்லி தலையை அப்படி இப்படி ஆட்டி மறுத்து  பேசிக் கொண்டு இருந்தவனிடம் மகா..

“ ஒரு நாள்… ஒரே நாள்.. அந்த வார்த்தை உங்களால் தாங்க முடியவில்லை.. அவன் பிறந்து ஆறு வருடம் ஆகிறது.. அவன் பேசும் ஆரம்பிக்கும் போதே என் அம்மாவை தான் அம்மா என்று அழைத்தான்..

என்னை என் வீட்டில் எல்லோரும் கூப்பிடுவது போல அம்மூ… நீங்க என்ன தப்பு செய்திங்க இல்ல.. நிஜமா இன்னும் இன்னும் என் வயிற்றில் அவன் எப்படி வந்தான் என்று எனக்கு புரியவே இல்ல.. இதில் உங்களோட பங்கு யாரோட பங்கு எவ்வளவு என்று எனக்கு தெரியல.. ஆனா ஒன்று மட்டும் தெரியும்..

இந்த விசயத்தால் மொத்தமும் பாதிக்கப்பட்டது எங்க குடும்பம் தான்.” என்று  

சொன்னவளுக்கு என்ன சொல்வது..? எப்படி அவளை சமாதானம் செய்வது என்று  தெரியாது இருந்தான் விஜயேந்திரன்…