Advertisement

               கந்தசாமி ஒரு நாளும் அந்த நேரத்தில் வீட்டிற்கு வருவதேஇ வீட்டில் தங்குவதோ கிடையாது என்பது பிள்ளைகளுக்கு நிச்சயம் யாருமே இல்லை என்ற தைரியத்தில் அவர்கள் இஷ்டம்போல் பேசினார்கள். அண்ணன் கலங்கினான். தங்கை துள்ளி மகிழ்ந்தாள்.
               அன்று கந்தசாமி வீட்டிலிருந்தார். மகனும் மகளும் பேசிய ஒரு வார்த்தை கூட விடாது கேட்டார்.
               அட பாவிகளா நீங்கள் நான் பெற்ற செல்வங்களா தங்கை தான் தாயைப்போல ஆணவம் பிடித்து எடுத்தறிந்து பேசுகிறாள் வயது வரவும் பண்பட்டு விடுவான் என்று நினைத்தேன்.
               இவன் அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறக்கும் என்று சொல்வார்கள்களே நான் பணம் சம்பாதிக்க வேண்டும். அதுவும் உண்மையாய் உழைத்து நேர்மையாய் சம்பாதிக்க வேண்டும் நல்லவனாய் வாழ வேண்டும். என்று நினைப்பேன்
               பகையாளிக் குடியை உறவாடிக் கெடு என்று சொல்வார்கள். என் மகன் நண்பனின் குடியை அல்லவாக் கெடுத்;து விட்டான். இப்படி பிள்ளைகளா எனக்கு இவர்களைத் திருத்துவது எப்படி என்று எண்ணி மனம் கலங்கினார்.
               ஒரு பாவமும் அறியாத அந்தப் பிள்ளை மேல் இப்படி ஒரு பழியைப் போட்டிருக்கிறானே. எல்லாவற்றிற்கும் காரணம் தாமரை. தாமரை மல்லிகையின் மீது கொண்ட பெறாமையின் வெளிப்பாடுதான் இது.
               அன்று திருமணத்திற்குச் சென்று வந்து யதார்த்தமாகப் பேசிய பொழுது எடுத்தெறிந்துப் பேசினாள்.
               கடவுளே என் பிள்ளைகளுக்கு நல்ல புத்தியைக் கொடப்பா இவர்களைத் திருத்த எனக்கு வழிகாட்டு என்று நினைத்தார்.
               நெஞ்சில் சுருக் சுருக் என்று முள் குத்தியது போன்று வலியை உணர்ந்தார். இடது கை மணிக்கட்டிலிருந்து கடுகடுவென்று உழசை;சலுடன் வலியெடுத்தது. தோள் பட்டை வரை வலி வியாபித்தது. வியர்த்துக் கொட்டியது.
               ஐயோ அம்மா நெஞ்சு வலிக்குதே என்று கத்தினார். ஆ தாங்க முடியவில்லையே என்று பிதற்றினார்.
               குரல் கேட்ட பின்புதான் மகனும் மகளும் தந்தை இங்கு தான் படுத்திருந்திருக்கிறார். நாம் கவனிக்காமல் எதைஎதையோப் பேசி விட்டோமே என்று அறிந்தனர்.
               தந்தை நெஞ்சு வலியால் துடிப்பதை அறிந்து அம்மா ஓடி வாங்களேன் அப்பா நெஞ்சு வலியால் துடிக்கிறார் என்று கத்தினார். கனகா ஓடி வந்து வியர்வையைத் துண்டால் ஒற்றி ஒற்றி எடுத்தாள். மகன் போன் பண்ணி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல டாக்ஸி அரேஞ் பண்ண ஓடினான். மகள் தைலந்தடவி நீவிவிட்டாள்.
               தீவிர சிகிக்சைப் பிரிவில் சேர்;த்து ட்ரீட்மெண்ட் கொடுக்க ஐந்து மணி நேரம் கழித்து கண் விழித்த கந்தசாமி மலங்க மலங்க விழித்தார். சரியாகப் பேச முடியவில்லை.
               ஓரு வாரம் சிகிச்சைக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகள் சொல்ல வேண்டாம். ஓய்வு எடுத்துக் கொண்டு நார்மலாக இருங்கள் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டாம் என்று கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
               மகளைப் பார்த்து பெண்கள் திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டில் சிறப்பாகக் குடித்தமை நடத்தினால்தான் பிறந்த வீட்டிற்குப் பெருமையாகும்.
               நீ உன் வீட்டிற்குச் சென்று நல்ல விதமாக வாழ்க்கை நடத்து என்றார்.
               ஆமாமம்மா உன் கவலையால்தான் அப்பாவிற்கு இப்படி ஆகிவிட்டது. இனி ஒரு தடைவ இப்படி வந்து விடக்கூடாது. அண்ணனுடன் சென்று நான் திருந்தி வந்திட்டேன் என்று கூறி வாழ்க்கையைத் தொடங்கு என்றாள் கனகா
               சரி அப்பா கவலைப்படாதீர்கள் என் கூறி அரை மனதுடன் புறப்பட்டுச் சென்றாள் தாமரை.
               நாம் பேசியது அனைத்தையும் அப்பா கேட்டிருப்பார்களோ. அதனால் தான் நெஞ்சு வலி வந்து விட்டதோ என்று தாமரையிடம் கேட்டான் கார்த்திஸ்.
               நாம் ஒன்றும் தப்பாகப் பேசவில்லையே உள்ளதைத்தான் பேசினோம் இதற்கெல்லாம் நெஞ்சுவலி வருமோ என்ன என்றாள் தாமரை.
               தாமரை எனக்கென்னமோ நாம் செய்வது தவறு என்று தான் என் மனம் இடித்துரைக்கிறது. நான் மாதவனைப் பார்த்துத் தவறுதலாகப் பேசிவிட்டேன். உன் மனைவி  தங்கமானவள் நீ புண்படுத்தாதே என்று கூறி மன்னிப்புக் கேட்டு விடலாம் என்று தோன்றுகிறது என்றான் கார்த்திஸ்.
               தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பது போல் நீ நல்லவனாகி விட வேண்டும் நான் பொல்லாதவளாகி விட வேண்டும் என்று நினைக்கிறாயா நான் தானடா உன் சதை நீ அவனைப் பார்;க்காதே எதுவும் பேசவும் வேண்டாம் புரிந்ததா என்றாள் தாமரை.
               நான் அப்பா அம்மாவிற்காகச் சிறிது காலம் செல்கிறேன். என் சொல்படி அவர் ஆடாவிட்டால் திரும்பி வந்துவிடுவேன புத்தியை நான் மாற்றுவதாய் இல்லை என்றாள்.
               தகவல் தொடர்பைக் கூட துண்டித்துக் கொண்ட கணவனிடம் நான் எப்படி நடந்து கொள்வது. பாராமுகம் காட்டும் அளவிற்கு நான் என்ன தவறு செய்தேன். தனக்குள்ளாகவே மருகிக் கொண்டாள் மல்லிகை.
               தாய் தந்தையின் வற்புறுத்தலுக்காக மாதவன் மூன்று மாதங்கள் நிறைவடைந்ததும் வந்து சேர்ந்தான்.
               இரவில் தூங்குவதற்கு மட்டுமே படுக்கை அறைக்குள் சென்றான். படுக்கை பிரிக்கப்படவில்லையென்றாலும் ஒருவரை ஒருவர் உரசுதல் கூட இன்றித் தூங்கி எழுந்தார்கள்.
               டாக்டரம்மாவும் பிரயாணம் வேண்டாம் என்று தான் நினைக்கிறேன் என்றார்கள்.
               மகிழம்பூ அம்மாவும் முதலில் இருந்தே இந்த அம்மாவிடம் காண்பிக்கிறோம். அதனால்; பிரசவம் ஆனபிறகே தாயும் சேயும் நலமாகச் சிங்கப்பூர் செல்லலாம் என்றார்கள்.
               மல்லிகைக்கும் சரியென்றேபட்டது. தன்னைத் திரும்பிக் கூடப் பார்க்காத கணவனுடன் வெளிநாடு சென்று வாழ முடியுமா. எங்கே தவறு என்ன தவறு என்ற ஆராய்ச்சியிலேயே பொழுது கழிந்தது.
               இந்தத் திருமண அழைப்பிதழ் யாருடையது. அது ஏன் படுக்கை அறைக்கு வந்தது என்று யாரிடமோ கேட்பது போன்று கேட்டான் மாதவன்.
               ஏம்மாஇ தவாலின் நண்பனின் திருமண அழைப்பிதழ் வந்திருக்கிறது. மாமாவுக்கு அவுங்களெல்லாம் தெரியாது. அதனால் திருமணத்திற்குச் செல்லவில்லை. அங்கு ஸெல்பில் வைத்திருந்தால் கவன் குறைவால் எங்கும் காணாமல் போய்விடும். இதில் இருக்கட்டும் அவன் வரும்பொழுது அவனிடம் காண்பித்து விடு. அவன் நண்பர்களின் திருமணத்திற்கு அவனே சென்று வருவான். மறந்து விடாதே என்று வைத்துச்சென்றார்கள் என்றாள் மல்லிகை. அவளும் முகம் பார்க்காமலேயே பேசி முடித்தாள்.
               அதுதான் வந்தவுடன் அக்கறையாகக் காட்டிவிட்டாயாக்கும் ஏளனமாகக் கேட்டான்.
               நானே தேவையற்ற குப்பையாக ஒதுங்கிக் கிடக்கிறேன் அந்தக் குப்பையை நான் எப்படிப் பொறுக்குவது என்றாள் மல்லிகை
               உன் ஊர்க்காரனின் திருமணம் தானே நீ சென்று வந்திருக்கலாமே திருமணம் முடிந்து ஒரு மாதம்; ஆகியிருக்கிறது கண்டு கொள்ளவில்லையென்றால் எப்படி என்றான்.
               நானே கண்டு கொள்ள முடியாத வகை பொருளாய்த் தவிக்கிறேன். ஏன் ஏன் என்று கேள்வி மண்டையத் துளைக்கிறது. இதில் ஊரைக் கண்டேணா தேளகை; கண்டேனா நான் மல்லிகை.
               என்னுடன் புறப்பட்டு வர முடியுமா உங்கள் வீட்டிற்குச் சென்று விட்டு திருமணத்தன்று வர முடியாமைக்கு வருத்தம் தெரிவித்து ஒரு சிறிய பரிசு கொடுத்து விட்டு வந்து விடுவோம் என்றான் மாது.
               எங்கள் வீட்டிற்கு எதுக்கு ஏன் அப்பாவும் அம்மாவும் போன வாரம்தான் வந்து சென்றார்கள் அண்ணனும் போன வாரம் தான் தொலைபேசியில் பேசினான். வாந்தியும் மசக்கையுமாக இருக்கும். இந்த நேரத்தில் என்னால் எங்கும் வர இயலாது என்றாள்.
               நான் சென்று வருகிறேன் என்று கிளம்பினான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்றவன் இரண்டேமாதத்தில் திருமணம் செய்திருக்கிறான். காரணம் என்னவாக இருக்கும் என்று எழுத்த கேள்விக்குப் போய்த்தான் பார்ப்போமே என்று மனதை அடக்கினான்.
               தாமரையின் தந்தை கடைக்கு மட்டும் சென்று சிறிது நேரம் இருந்து விட்டு வரும் அளவுக்குத் தேறியிருந்தார்.
               அவர் வெளியில் வரவும் கார்த்திஸ் கடையில் சென்று வந்து இரண்டு நாட்களாகிறது. உன் திருமணத்திற்;கு வர முடியவில்லை உன்னைப் பார்த்து வாழ்த்தி விட்டுப் போகலாம் என்று வந்தேன்.
               திருமணமே செய்து கொள்ளப் போவது இல்லை என்றாய் சொல்லி இரண்டே மாதத்தில் திருமணம் செய்திருக்கிறாய் எப்படி என்றான்.
               அதுவா அது பெரியகதை ஏட்டில் எழுத முடியாதது சோகக்கதை. நீ சந்தோஷம் அனுபவிக்க வந்திருப்பாய் என் சோகத்தை உன்னிடம் காட்;ட வேண்டுமா என்று நினைத்தேன் சொல்லித்தான் ஆக வேண்டுவர் என்றான் கார்த்திஸ்
               என் தங்கையின் புகுந்த வீடு அவ்வளவு சரியல்ல அவள் எந்நேரமும் கோபித்துக் கொண்டு இங்கு வந்து விடுகிறாள் ஏன் அப்பாவும் அம்மாவும் அவள் ஒரே பெண் என்பதால் அதிகமாகச் செல்லம் கொடுத்து விட்டார்கள். புகுந்த வீட்டிலும் இவளை எல்லோரும் தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டும் என்று நினைக்கிறாள்.
               அங்கு அவள் சாதாரணமாகக் கருதப்படுகிறாள். சிறு குற்றத்திற்கும் பின்னி எடுக்கிறார்கள்.
               அவள் இங்கு வருவதால் அம்மாஇ அப்பாவிடம் இவனுக்கு ஒரு திருமணத்தைச் செய்து வைத்து விடுவோம். வருகிறவள் ஓண்ட வந்த பிடாதி ஊர் பிடாரியை ஒட்டியது போல் அவளை விரட்டி அடித்தால் சரியாகிவிடும் என்றார்.
               என் தங்கையும் அப்பா இவன் ஒரு பெண்ணை லவ் பண்ணியிருக்கிறான் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகிவிட்டதாம் அதனால் திருமணமே வேண்டாம் என்றிருக்கிறான். இவனுக்கு நீங்கள் திருமணம் செய்த வைக்கவில்லையென்றால் இவன் சாமியாராகி விடுவான்.
               பின் உங்கள் சந்ததி கட்டாகி விடும்இ திருமணம் செய்து வைத்து குடித்தனம் நடத்தினால் அந்தப் பெண்ணை மறந்து விடுவான். நான் சொல்வதைச் சொல்லி விட்டேன் இனி உங்கள் பாடு உங்கள் பிள்ளை என்று சொல்லியிருக்கிறாள்.
               என் மகன் ஏமாற்றப்பட்டானா வாழ வேண்டும் அவன் நல்லவன் தானே அவனுக்கு ஏன் இந்தச்சோதனை என்று வேதனைப்பட்டிருக்கிறார்.
               வயதும் ஆகிவிட்டதால் அட்டக் வந்து பெரும் பிரச்சனையாகி விட்டது. தீவிர சிகிச்சை ஒரு லட்சம் வரை கரைந்து விட்டது.
               இனி என் கதை எப்படியெப்படியோ நான் கண்ணுள்ள போதே உன் திருமணத்தைக் கண்குளிரப் பார்க்க வேண்டும் என்றார்.
               என்னால் தட்டவும் முடியவில்லை தயங்கி நிற்கவும் முடியவில்லை. அவசரக் கோலத்தில் மணக்கோலம் கண்டேன்.
               பெண் என்னவோ நல்லவளாகத்தான் தெரிகிறாள் ஆனால் நான் சூடு பட்ட பூனை என்பதால்இ மனம் ஒப்பி வாழத் தயங்குகிறேன்.
               ஹீரோ ஹோண்டா சூப்பர் டீலக்ஸாக அமைய வேண்டிய வாழ்க்கை மாட்டுவண்டிஇ ஜடகர் வண்டிபோல் தட்டுண்டு தடுமாறுகிறது. தடம் புரளாமல் இருந்தால் சரி என்று அதுபோக்கில் விடுகிறேன் என்றான் கார்த்திஸ்.
               மாதவனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. நீ மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்டு அப்பா அம்மாவிற்கு அனுசரணையாக நடந்து கொள்”.
               நான் வரட்டுமா என்று கிளம்பினான் என்ன அவசரம் சற்று நேரம் பேசிக் கொண்டிருக்கலாம்இ என்றான் கார்த்திஸ்.
               மல்லிகையை நீ மகிழ்ச்சியாக வைத்திருப்பது குறித்து சந்தோஷம் என் அப்பாவை டாக்டர் காயத்திரியிடம் அழைத்துச் சென்ற அன்று பகலில் தான் மல்லிகை மந்திலி செக்கப்புக்காக வந்திருந்தாளாம்.
               அங்குள்ளவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள். அவர்கள் சொன்னார்கள் உங்களிருவரின் அன்புச் சின்னம் கருவாக அவள் வயிற்றில் வளர்வது தெரிந்ததும் மகிழ்ச்சி அடைந்தேன்.
               நான் இத்தனை சொன்ன பிறகும் என் வார்த்தைக்காக அவளை அன்புடன் நடத்துவது குறித்து சந்தோஷம் என்றான் கார்த்திஸ்
               என் தங்கைக்குத்தான் மல்லிகை மீது கடுங்கோபம் ஆகையால் காதலித்துக் கைவிட்டு அடுத்தவனை மணந்து மகிழ்கிறாளே என்று ஒரே அங்கலாய்ப்பு அவளைப் போய் வாழைப் பழத்தோலை உரிப்பது போல் நான்கு வார்த்தைக் கேட்டு வரவா என்கிறாள். நான் தான் வேண்டாம் பெண் பாவம் பொல்லாதது அந்தப் பிரச்சனையும் நமக்கெதற்கு என்று கூறி சமாதானப் படுத்தி வைத்திருக்கிறேன் என்றான் கார்த்திஸ்
                உன் தங்கை சொல்லியதால் தான் திருமணத்திற்குச் சம்மதித்தேன். என்றாளே மல்லிகை நீ இப்படிச் சொல்கிறாய் என்று கேட்டான் மாதவன்.
               அது வந்து யோசித்து அது வந்து அப்பொழுது நான் மல்லிகையைக் காதலித்தது என் தங்கைக்குத் தெரியாதல்லவா அதன் பின்தானே சொன்னேன் என்;று சமாளித்தான்.
               என் தந்தையே படுக்கையிலிருக்கும் பொழுது அப்பெண்ணிடமும் அந்தப் பையனிடமும் நான் சொன்னது தவறு. உன் மனைவி உத்தமி எண்ண மன்னித்து விடு என்று கேட்டு வந்த பின்தான் திருமணம் என்று சொன்னார். அவன் வெளிநாடு சென்று விட்டான் வந்ததும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். என்று சொல்லிய பிறகே திருமணத்திற்குச் சம்மதித்தார் என் தங்கை உன் மனைவி மல்லிகை நிம்மதியாக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறானே நான் கூட மன்னிப்பு கேட்கத்தான் நினைத்தேன். ஆனால் என் தங்கையின் முகம் மேலும் மேலும் கட்டுக் கதைகளை அளந்து விட வைக்கிறதே என்ன செய்வது என்று மனதில் எண்ணமிட்டபடியே சிந்தனையில் லயித்திருந்தான் கார்த்திஸ். என்னை ஓட்டத்தை வாய்திறந்து ஒரு சொல் சொன்னான் இல்லை.
               என்ன கார்த்திஸ் ஏன் மௌனத்தில் மூழ்கிவிட்டாய் உனக்கிந்த பிரச்சனை என்னால் தான் என்னும் பொழுது என் இதயம் பாராங்கல் அழுத்துவது போல் வேதனை அடைகிறது. ஆனால் நம் இருவராலும் ஒன்றுமே செய்வதற்கில்லை. விதி வழி நடக்கட்டும் சென்று வருகிறேன் என்று புறப்பட்டான் மாதவன்.
               ஏமாறுகிறவன் இருக்கும் வரை ஏமாற்றுகிறவர்கள் இருப்பார்கள். உன்னைப் போல் ஓர் ஏமாளி இருப்பானா இனியும் நீ என்னிடமும் என் தங்கையிடமும் என்ன பாடுபடப் போகிறாயோ நினைத்தவாறே எண்ணி நகைத்தான்.
               மாதவன் வீடு சென்று படுக்கையில் போய் தொப்பென்று விழுந்தான். மல்லிகையும் கண்டு கொள்ளவில்லை. நிச்சயம் அவர் வேதனைக்கு நான் காரணம் அல்ல நான் தவறு எதுவும் செய்யவில்லை.
               வலியச் சென்று எத்தனையோ முறை கேட்டுப் பார்த்தாயிற்று. பதில் எதுவும் கிடைக்கவில்லை. இப்பொழுது பாராமுகம் வேறு எதுவும் நடந்து விடக் கூடாது.
               நம் பெற்றோர் ஆசைப்படி திருமணம் நடந்துவிட்டது. அதுவும் சாதாரணமாய் அல்ல. மகள் பூலோக சுவர்க்கத்தில் சுகம் அனுபவிக்கிறாள் என்ற நினைப்பிலிருக்கும் அவர்களுக்கு என் வாழ்வின் அவல நிலை எதுவும் தெரிய வேண்டாம்.
               என் வாழ்;க்கை ஓராண்டு குறுகிய காலம் தான் என்று பிரம்மன் எழுதி விட்டான் போலும். பரவாயில்லை மகனோஇ மகளோ பிறந்த பின்பு அவர்களுக்காக வாழ்ந்து விடலாம். தடைபட்டு விட்ட என் படிப்பைத் தொடர்ந்து படிக்க வேண்டும் வேலை தேட வேண்டும்.
               மனம் புழுங்கிக் கொண்டே இருக்கும் இவர் நம்மை விவாகரத்து செய்து விட்டு வேறு மணம் முடிப்பாரா அல்லது தானும் நொந்து நம்மையும் நோகடித்து இந்த நாடக வாழ்க்கைத் தொடர் கதையா சிந்தித்தவாறே தூங்கிப் போனால் மல்லிகை.
               பாரேன் நெஞ்சழுத்தத்தை ஒரு வார்த்தை நண்பரைப் பார்த்து வந்தீர்களா என்று கேட்கிறாளா அவன் ஊர் என்ன பெரிய சென்னைப் பட்டணமா எங்கள் ஊரில் உங்கள் நண்பர் யாருங்க அவர் உங்களிடம் எப்படி நண்பரானார் ஏதாவது கேட்கலாம்.
               இவளிடம் குற்றம் இருக்கிறது. அதனால் தான் பேசாமல் இருக்கிறாள். வயிற்றில் வளரும் குழந்தை நம்முடையது குழந்தைக்காக மன்னித்து ஏற்றுக் கொள்வோமா?
               உடலால் கெடவில்லை நிச்சயம் மனதால் கெட்டு விட்டேன் மன்னியுங்கள் என்று கேட்டால் மறுக்கவா போகிறேன். வயதிலிருந்தே இதயத்தில் ஏற்று பூஜித்த என் தேவதையை வெறுக்க மனம் வரவில்லை. அவள் தன்னையும் வருத்தி என்னையும் வருத்தி வாழ்க்கையை நரகமாக்குகிறேனே இற்குத் தீர்வுதான் என்ன இப்படி தொடர்கதையாகி விடுமா சிந்தித்து தவித்த இதயத்துடன் டிங்கில் போனான் மாதவன்.
               பொருளாதாரப் பற்றாக்குறை இருக்கும் பொழுது மனம் மகிழ்ச்சியாயிருந்தது. பொருளாதாரச் சிக்கல் தீர்ந்து தன்னிறைவு அடையும் பொழுது மனம் துவண்டு கசங்குகிறது.
               பிரச்சனையேயில்லாத மனிதன் கிடையாது. எல்லோருக்கும் ஏதாவதொரு பிரச்சனை இருந்தே தீர வேண்டும் என்பது விதிதானோ?
               இல்லையென்றால் இமயத்தின் சிகரத்தைத் தொட்டுவிட்டால் போன்று அத்தனை மகிழ்வுடன் இல்லறத் தோணியில் காவெடுத்து வைத்த எனக்கு ஏன் இந்த நிகழ்வு என் வாழ்க்கையே பிரச்சனை ஆகிவிடக் கூடாது.
               பிழைப்பைத் தேடிச் செல்லும் நான் அடுத்தமுறை வரும்பொழுது எஸ் ஆர் நோ ஏதாவது ஒரு தீhக்கமான முடிவை எடுத்த ஆக வேண்டும் என்று நினைத்தான் மாதவன்.
               இருவரும் மிகவும் நெருக்கமாய் இருப்பது போல காட்டிக் கொள்வதற்காக அடிக்கடி பெட் ரூமூக்குள் சென்றார்கள். தங்களையும் ஏமாற்றி அடுத்தவர்களையும் ஏமாற்றினார்கள்.

Advertisement