Advertisement

              
– 6 –
               தாமரை சோர்வடைந்தாள். அண்ணன் முயற்சியில் தோல்வி கண்டு துவண்டாள். அதிலும் மல்லி மிகச் சந்தோசமாகச் சிங்கப்பூரில் குடித்தனம் நடத்துகிறாள் என்ற செய்தி வேப்பங்காயாய் கசந்தது.
               பக்கத்து டவுணில் அரிசி ஹோல் சேல்ஸ் வியாபாரி சுந்தரவேல் என்பவரின் மகன் பாலசுப்பிரமணியத்தின் சாதகம் பொருந்தி வருவதாகத் தரகர் தகவல் கொண்டு வந்தார்.
               ஒரு மாதத்திற்குள் திருமணம் தடபுடலாகச் சிறப்பாக நடந்தேறியது. தாமரை பாலசுப்பிரமணியத்தின் கரம்பற்றி பக்கத்தில் இல்லறம் துவக்கினாள்.
               வியாபாரமும் வியாபாரமும் கைகோர்த்தது. வாரத்திற்கொரு தடவை ஸ்கூட்டர் கொண்டுவாஇ பிரிஜ் வாங்கி வாஇ வாஷிங் மிஷின் வாங்கி வா. நியூ மாடல் நெக்லஸ் வாங்கிப் போட்டுக் கொள். எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு கறந்தார்கள். ஆறு மாதத்திற்குள் புகுந்த வீட்டில் இருந்த நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். தாய் வீட்டில் தான் அதிக நாள் வாசம் செய்தாள்.
               அத்தனையிலும் தாயைப் போல பிள்ளை நூலைப்போல சீலை என்பதால் பிறந்த வீட்டு புகழ் பாடுவதில் பெருமளவு நேரத்தைச் செலவிட்டாள்.
               தன் கனவுபோல் இல்வாழ்க்கைத் தாமரைக்கு இனிக்க வில்லை. எட்டிக்காயாய் கசக்கவில்லை என்றாலும் திருப்தி தரவில்லை.
               ஏழாவது முறையாகக் கோபித்துக் கொண்டு தாய் வீடு வந்து விட்டடாள் தாமரை. பாலாவும் நானாக உன்னை வந்து அழைக்க மாட்டேன். நீயாக உன் தவறை உணர்ந்து திருந்தி வருவதனால் வா ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டான்.
               கார்த்திஷீம் தாமரையம் மருவி மருவிப் பேசுவார்கள். கார்த்திஷ் என்ன இருந்தாலும் நீ மாப்பிள்ளையின் பெற்றோருக்கு மரியாதைக் கொடுக்க வேண்டும். மாப்பிள்ளையின் முன்னால் அவர்களை எடுத்தெரிந்து பேசியது தவறுதான் என்பான்.
               நீ என்னையே குறை கூறு. நான் என்ன அவர்கள் வீட்டுக்குச் சும்மாவா வாழச் சென்றிருக்கிறேன். எவ்வளவு அள்ளிக் கொடுத்திருக்கிறோம். அவரை அந்த பாலாவை விலை கொடுத்து தானே வாங்கியிருக்கிறோம். அவரும்இ அவருடைய பெற்றோரும் என்னை மதிக்க வேண்டும். என் சொல்லுக்குக் கட்டுப் பட்டுத்தான் நடக்க வேண்டும். நான் நினைப்பது எந்த வகையில் தவறு சொல் பார்க்கலாம் என்பாள் தாமரை.
               அண்ணணும் தங்கையும் மாறி மாறிப் பேசிக் கொண்டிருக்கையில் ஒருநாள் தாமரை உன் தோழி மல்லி சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கிறாள். எப்படி இருக்கிறாள் தெரியுமா. முன்பே நல்ல அழகு. இப்ப கலியாணப் பூரிப்பில் தளதள வென்று லட்டு மாதிரி இருக்கிறாள். ஒரு வேளை உன்னைப் பார்க்க வந்தாலும் வருவாளல்லவா என்றான் கார்த்திஷ்.
               அவள் நல்லாயிருக்காளா? அவளைப் பற்றி என்னிடம் பேசாதே என்றிருக்கிறேன். நீ கேட்க மாட்டாய். என் மனதைக் கெடுத்தவள்இ வாழ்வைக் கெடுத்தவள் அவள். நான் புலம்பிக் கொண்டிருக்கையில் அவள் மட்டும் எப்படி நல்லாயிருக்கலாம். அவளும் என்னை மாதிரி புலம்பித் தவிக்க வேண்டும். அதற்கு ஒரு வழி காண்கிறேன் என்றாள் தாமரை.
               அந்தப் பெண் பாவம். அது உன்னை என்ன செய்தது. அது நல்ல குணம் படைத்தது. அதாவது நல்லார்க்கட்டுமே. அதை ஏன் கறுவுகிறாய் என்றான் கார்த்திஷ்.
               கார்த்தி நீ என் உடன் பிறந்தவன்தானே. என் நலனில் உனக்கு அக்கறை உண்டுதானே. என் நலனில் உனக்கு அக்கறை உண்டுதானே. என் நலனில் அக்கறை உண்மையென்றால் நான் சொல்வதைக் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்து. நான் எப்படியும் கெட்டழிந்து போகட்டும். அந்த மல்லி மட்டும் நல்லாயிருந்தால் போதும் என்றால் விட்டு விடு என்றாள்.
               என்ன இது உனக்குப் பின் தான் அவள் என்ன செய்ய வேண்டும் என்றான்.
               நான் சொன்னபடி நீ முதலிலேயே அவளை நீ காதல் வசப் படுத்தியிருந்தால் அவள் அண்ணனை நான் காதல் வசப்படுத்தி கட்டியிருப்பேன்.
               இனி உனக்கு அவள் மாதிரி அழகான பெண் கிடைப்பாளா. நீ அவளைக் கட்டியிருந்தால் நான் அவள் அண்ணனிடம் என் சொல்படி கேட்டால்தான் உன் தங்கை என் வீட்டில் வாழ முடியும் என்று கூறி அவனை கைக்குள் அடக்கி வைத்திருப்பேன். நம் இருவர் வாழ்க்கையும் நன்றாக இருந்திருக்கும்.
               அவளால்தான் நம் இருவர் வாழ்க்கையும் கெட்டு குட்டிச் சுவராகி விட்டது. நம் வாழ்வைக் கெடுத்த அவள் நிம்மதியாக இருக்கக் கூடாது என்றாள்.
               தாமரை சொல்வதும் சரியாகத்தான் தோன்றுகிறது. நம் முதல் காதலை அவள் அழித்து விட்டாளே. படிக்கப் போகிறேன் என்று கூறி விட்டு இப்பொழுது உல்லாச வாழ்வை அனுபவிக்கிறாளே. ஒரே குட்டையில் ஊறிய மட்டைதானே கார்த்திஷின் சிந்தனையும் தங்கையின் வழி சென்றது.
               என்ன விழிக்கிறாய். அன்று அவள் அண்ணன் என்று சொன்னதும் பதறிக் கொண்டு காதலைப் பறி கொடுத்தாய். முதன்முதலாய் ஒரு பெண் அவள் மல்லி உன் இதயத்தில் இடம் பெற்றது உண்மை தானே. அவள் உன் இதயத்தை நொறுக்கிவிட்டு அவள் மட்டும் மகிழ்ச்சியாய் இருக்கலாமா.
               நீ மட்டும் அன்று உன் காதலில் உறுதியாயிருந்து மீண்டும் மீண்டும் மன்மதனின் காமக் கணையை வீசியிரந்தால் அவள் எப்படியும் வீழ்ந்திருப்பாள்.
               உன்னை நான் மணந்து கொள்ள வேண்டுமானால் என் தங்கையை உன் அண்ணன் மணக்க வேண்டும் என்று கூறி இருவர் திருமணமும் சிறப்பாக நடந்திருக்கும்.
               இந்த பாலாவை விட அந்த முருகேசு எவ்வளவு அழகுஇ படிப்புஇ கை நிறைய சம்பாதிக்கிறான். அவனை மணந்தால் நான் சந்தோசமாயிருந்திருப்பேன். எப்படிப் பார்த்தாலும் நம் இருவரின் இனிய வாழ்வைக் கெடுத்தவள் அவள்தான். அவள் நிம்மதியாக இருக்கக் கூடாது.
               அந்த மல்லியின் புருஷன் மாதவன் உன்னுடன் பள்ளியில் படித்தவன் தான் என்று சொல்லியிருக்கிறாயே. அவனைச் சந்தித்து அந்த மல்லி உன்னுடைய காதலி என்று சொல். மேலும் என்னென்ன பேசி அவன் மனதை அவளுக்கே திருப்ப முடியுமோ அப்படியெல்லாம் செய்.
               அவளும் அல்லாடட்டும். கதறி அழட்டும். ஆங்காரம் தொனிக்கத் தாமரை சொல்லி முடித்தாள்.
               மாதவன் என்னுடன் படித்தவன் மட்டுமல்ல நல்ல பண்புள்ளவன். இரக்க சுபாவம் கொண்டவன்.
               பதினோராம் வகுப்பு இறுதித் தேர்வில் அறிவியல்இ சமூகவியல் இரண்டு பாடத்திலும் நான் தோற்கும் நிலை. அந்த இரண்டு நாளிலும் அவனுடைய நம்பரைக் கேட்டு என் தாளில் எழுதி விட்டேன்.
               நம் கடையிலுள்ள இங்க் ரீமுவரை எடுத்துச் சென்று அவன் பேப்பரைக் கொடுக்கவும்இ என் பேப்பரில் நம்பர் எழுத மறந்து விட்டேன் என்று கூறி அவன் பேப்ரை வாங்கி அவன் நம்பரை அழித்து விட்டு என் நம்பரை எழுதி அனுப்பி விட்டேன்.
               திருத்துவதற்கு சென்ற இடத்தில் அவன் தோல்வி என்று வந்து விட்டது. தலைமையாசிரியர் தவறு செய்தவன் நான் என்பதைக் கண்டு பிடித்து விட்டார். என்னையும் அவனையும் ஆபீஸ் ரூமிற்கு அழைத்து விசாரித்து என்னைப் பள்ளியை விட்டு விலக்க முடிவு செய்தார். ஏனென்றால் அவன் மிகவும் நன்றாகப் படிக்கும் மாணவன். அவனுக்கு இழுக்கு வந்தது ஆசிரியருக்கே பொறுக்கவில்லை என்னைத் தாறுமாறாக திட்டினார்.
               ஆனால் அவன் என்ன செய்தான் தெரியுமா. ஐயா தயவு செய்து எனக்காக அவனை மன்னித்து விடுங்கள். அவன் தேறியதாகவே இருக்கட்டும். நான் வேண்டுமானால் திரும்பவும் தேர்வை எழுதித் தருகிறேன். என்னையும் வகுப்பில் சேர்ந்து படிக்க அனுமதியுங்கள். இந்த விஷயம் நமக்கு மட்டும் தெரிந்ததாக இருக்கட்டும். அதை விட்டு அவனை வெளியேற்றினால் அவன் வாழ்வும் பாதிக்கப்படும். நம் பள்ளிக்கும் கெட்ட பெயர்தானே. ஐயா எனக்காக இந்தப் பிரச்சினையை இத்துடன் விட்டு விடுங்கள் இனி இப்படித் தவறு அவன் செய்ய மாட்டான் என்று மன்றாடினான். என்னையும் விரோதியாக நினையாமல் எப்பொழுதும் போல் நன்றாகவே பழகினான். ஆனால் நான் பன்னிரெண்டாம் வகுப்பில் தோல்வியைத் தழுவினேன். மளிகைக் கடை வியாபாரத்தில் நுழைந்து விட்டேன். அவன் நல்ல மனதிற்கு மேல்படிப்பு படித்து உயாந்த உத்தியோகத்தில் இருக்கிறான் போலும். பள்ளிப் படிப்பு காலத்திற்குப் பின் நான் அவனை பார்த்ததே இல்லை.
               அந்த மல்லிகைக்குக் கெடுதல் செய்ய வேண்டி அவன் வாழ்க்கையைக் கெடுக்கச் சொல்கிறாயே. அது நல்லதாகப் படவில்லை என்று கார்த்திஷ் கூறினான்.
               அண்ணா உனக்கு நான் என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது. அவன் நல்லவன் என்றால் அவள் கூடுதலாக நன்றாகத்தானே வாழ்வாள். நம் வாழ்க்கையைக் கெடுத்த அவளை நாம் கெடுக்க வேண்டாமா. அவன் நல்லவன் வல்லவன் என்றெல்லாம் பாராதே. அந்த வயதிலேயே இங்க் ரீமூவர் கொண்டு அழித்துத் திருத்தத் தெரிந்திருக்கிறதே. இப்ப உனக்கு முடியுமா முடியாதா சொல்லு.
               நானே ஒரு வழியைக் கண்டுபிடித்து அவள் முன் நின்றே அவனிடம் உன் மனைவி என் அண்ணனின் காதலி. உங்களுக்கெல்லாம் தோல் மஞ்சளாக பளபளவென்றிருந்தால் அணில் கடித்த எச்சில் பழம்தான் சுவைக்கும் போல என்று கேட்டு விட்டு வந்த விடுகிறேன் என்றாள் தாமரை.
               ஐயோ தாயே அப்படியெல்லாம் செய்து விடாதே. நான் பார்த்துக் கொள்கிறேன். நீயே கணவன் வீட்டில் கோபித்துக் கொண்டு வந்திருக்கிறாய். அவள் வீட்டிற்குச் சென்றுவந்தால் மேலும் வம்பாகி விடும் என்றான் கார்த்திஷ்.
               இரண்டு நாட்கள் சென்றிருக்கும். கார்த்திஷ் கல்லாப்பெட்டி முன் அமர்ந்திருந்தான். பையன்கள் கொடுக்கப்பட்ட பில்களுக்கு சரியான சாமான்கள் எடையிட்டுக் கட்டுகிறார்களா என்பதைக் கவனித்தவாறே ரோட்டில் ஒரு பார்வையைச் செலுத்தினான். தூரத்தில் டிப்டாப்பாக இரண்டு பேர் நடந்து வருகிறார்கள். அதில் ஒருவன் மாதவன் போன்றல்லவா தெரிகிறது. இதைத்தான் கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல் என்று சொல்லுகிறார்களோ. இன்று இவனிடம் பேசியே ஆக வெண்டும் என எண்ணமிட்டான். நாம் இவனிடம் இவன் மனைவியைப் பற்றிப் பேசப் போய் இவன் உன் வண்டவாளம் எனக்குத் தெரியும். என் மனைவி பத்தரை மாத்துத் தங்கள். அவளைப் பற்றிப் பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது என்று கேட்டு மூக்கை உடைத்து விட்டால் என்ன செய்வது என்றும் நினைத்துக் கொண்டான்.

Advertisement