Advertisement

– 5 –
               பணம் பணம் பண்ணுவது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு தனது வியாபாரத்தை ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கிக் கொண்டிருந்தார் பரமசிவம். தனது மைந்தனும்இ மகளும் பருவம் எய்தி திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பது அவர் மனதுக்கு புரியவில்லை.
               ஏங்க நம்ம பொண்ணு தாமரை காலேஜ் படிப்பை முடித்து விட்டாள். காலாகாலத்pதில் அவளுக்குத் திருமணம் செய்ய வேண்டாமா. நீங்கள் இது பற்றி யோசித்திருக்கிறீர்களா? என்றாள் கனகா.
               என்ன கனகா எது பற்றி தாமரையின் திருமணம் பற்றித்தானே. அவளுக்கு என்ன வயசாகிறது. அவசரப் படாதே இன்னும் ஒரு வருடம் சென்றாள் அந்த பெரிய அரிசி ஆலையை வாங்கி விடுவேன். அதன் பின் தாமரையின் திருமணம் பற்றி யோசிக்கலாம்.
               எப்பப் பாரு அந்த நிலத்தை வாங்கனும். அந்த லாரியை வாங்கனும். அதுஇ இது வாங்குற சிந்தனையிலேயே இருங்க. வாங்கியிருக்கிறது போதாதா. தாமரையின் வயதில் எனக்கு தாமரையே பிறந்து விட்டாள்.
               பெண்ணுக்கே திருமண ஆசை வந்த பின் நாம் அதைத் தள்ளிப் போடக் கூடாதுங்க.
               சரி சரி என்னை என்னைப் பண்ணச் சொல்லுறே.
               இப்பொழுதே வரன் தேடத் துவங்கினால்தான் ஆறு மாதத்திற்குள்ளாவது திருமணம் நடக்கும். தரகரை வரவழைத்து சாதகத்தைக் கொடுத்து வரன் தேடச் சொல்லுங்கள் என்றாள்.
               மகன் கார்த்திக்கும் தந்தையிடம் தங்கைக்கு வரன் தேடச் சொன்னான். மாப்பிள்ளை வீட்டார் வந்து பெண் பார்க்கும் படலமும் சிறப்பாக நடந்தேறியது.
               நாங்கள் வீட்டிற்குப் போய் பெரியவர்களிடம் கலந்து பேசி நான்கு நாட்களில் தகவல் அனுப்புகிறோம் என்று கூறிச் சென்றனர்.
               நான்கு நாட்களுக்குப் பதிலாக பத்து நாட்களாகியும் தகவல் எதுவும் வராதது கண்டு என்னடி கனகா மாப்பிள்ளை வீட்டிற்குப் போன் பண்ணி கேட்போமா என்றார் பரமசிவம்.
               என்னங்க அவங்களுக்குப் பொண்ணைப் பிடிக்கவில்லை என்பதைத்தான் இப்படி நாசுக்காகச் சொல்லி தட்டிக் கழிக்கின்றனர். இது புரியாமல் போன் பண்ணுவோமா என்கிறீர்கள். வேறு வரன் தேடுவோம் என்றார்.
               இவ்வாறு நான்கைந்து வரன்கள் வந்துத் தட்டிச் சென்றது. மாதமும் மூன்று கடந்து விட்டது.
               தாமரை சமையல் கலையிலும் அலங்காரக் கலையிலும் ஆர்வத்தைக் காட்டி மல்லியை மறந்தே விட்டாள்.
               மல்லிகையின் மனம் தோழியின் அறிவுரையால் தெளிவடைந்தது. திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவித்தாள்.
               திருமண காரியங்கள் மடமடவென்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருமண அழைப்பிதழும் அச்சிட்டு வந்து சேர்ந்தது.
               அம்மா நான் தாமரையின் வீட்டிற்குச் சென்று வெகுகாலம் ஆகி விட்டது. திருமண அழைப்பிதழை நேரில் கொடுத்து திருமணத்திற்கு அழைத்து விட்டு வருகிறேன் என்று தாயிடம் ஞயமாகக் கேட்டாள் மல்லிகை.
               திருமணத்திற்கு அழைப்பதற்குத் தானே செல்கிறாய் சென்று வா. நேரம் கடத்தாமல் விரைவில் வந்து விடு. எதுவும் சாப்பிட வேண்டாம் என்று கூறி அனுப்பினாள் தாயார்.
               தாமரை எப்படியிருக்காப்பா. நீ அன்று எனக்கு சொன்ன புத்திமதியை ஏற்று திருமணத்திற்கு சம்மதித்து விட்டேன்.
               எனக்கு எது நல்லது என்றாலும் முதலில் நினைவில் வருவது நீ தான். திருமண அழைப்பிதழ் அச்சிட்டு இன்று காலையில் தான் வந்தது. உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உந்தியது. முதல் அழைப்பிதழ் உனக்குத் தந்து உன்னை நேரில் அழைக்கவே ஓடி வந்தேன்.
               ஓ அப்படியா. மிக்க மகிழ்ச்சி. திருமணத்திற்கு வந்தால் போச்சு. அவ்வளவுதானே.
               அழைப்பிதழை வாங்கிப் பார்த்தத் தாமரை மிகச் சாதாரணமாக அடித்துள்ளீர்கள். சாப்பாட்டிற்குக் கஷ்டப்படுகிறவாகள் கூடி இதை விட காஸ்ட்லியாக அழைப்பிதழ் அடிப்பார்கள்  என்றார்.
               எங்கள் வீட்டுத் தகுதிக்கு இது போதும் என்று அப்பா நினைத்திருப்பார்கள். மாப்பிள்ளை வீட்டில் தரமான கார்டாக அடித்திருப்பார்கள். மல்லிகை எனக்கும் எங்கள் வீட்டில் வரன் தேடுகிறார்கள். மூந்தாநாள்தான் ஒருவரன் வந்து பார்த்துச் சென்றுள்ளார்கள். மாப்பிள்ளை சூரியா மாதிரி செம பெர்ஸனாலிட்டி. எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அவருக்கும் என்னைப் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.
               எங்கப்பா எனக்கு நூறு சவரன் நகை போடுகிறார். டவுரி எத்தனை லட்சம் என்று தெரியவில்லை. இந்த ஊரே வியந்து மூக்கில் விரலை வைக்கும்படி அவ்வளவு விமரிசையாக என் திருமணம் நடக்க வேண்டும் என்று என் அம்மா நினைகிறார்கள்.
               என் திருமண நிச்சயதார்த்தம் உன் திருமணத்திற்கு முன் நடைபெற்று விட்டால் நான் உன் திருமணத்திற்கு வரமாட்டேன். ஏனென்றால் நிச்சயமான பின் வெளியே வர அம்மா அனுமதிக்க மாட்டார்கள் என்ற தாமரை சென்று வா என்று மல்லிகையை வழியனுப்பி வைத்தாள்.
               அவள் முதுகு மறைந்ததும் அவளது திருமண அழைப்பிதழைக் கசக்கிக் கிழித்துக் குப்பைக் கூடையில் போட்டாள்.
               தாமரையின் மனது ஏனோ அமைதி இழந்து தவித்தது. இரவு எட்டு மணிக்கு கந்தசாமியின் செல் அழைத்தது.
               செல்லுக்குக் காது கொடுத்தவர் முகம் களை இழந்தது. காரணம் பார்த்துச் சென்ற மாப்பிள்ளையின் தந்தை என் பையனுக்குப் பெண்ணை பிடிக்கவில்லை. தயவு செய்து வேறு வரன் பாருங்கள் என்று கூறியது தான்.
               செய்தியறிந்தத் தாமரை மேலும் அமைதி குறைந்து தவித்தாள்.
               என்னை எதற்காக ஒதுக்குகின்றனர். நான் என்ன குறைந்து போனேன் என்று புலம்பித் தீர்த்தாள்.
               மல்லிகைக்கு மட்டும் திருமணம் நடக்கப் போகிறது. அவள் திருமணத்தை தடுப்பார் யாருமில்லை. அவள் என்ன பெரிய ரதி. அவள் திருமணத்திற்கு நான் செல்ல மாட்டேன் என்று நினைத்தாள்.
               மல்லிகை திருமணத்தன்று தனக்குத் தலைவலி என்று மூடி படுத்துக் கொண்டாள். ஒரே ஊர்த் திருமணம் என்ற காரணத்திற்காக கந்தசாமி சென்று வந்தார்.
               கள்ளம் கபடமற்ற அந்த மனிதன் ஜோடிப் பொருத்தம் கனகச்சிதமாகப் பொருந்தியுள்ளது. எளிமையான அருமையான திருமணம். விருந்துச் சாப்பாடும் மிக அருமையாக இருந்தது. ஏன் கனகா இந்தப் பொண்ணு தாமரைக்குத் தோழிதானே அவள் திருமணத்திற்குப் போகவில்லை.
               அவளுக்கு ஒரே தலைவலின்னு எழுந்திருக்கவே இல்லை. சும்மா சொல்லக் கூடாது கனகு அந்தப் பொண்ணு ரொம்ப அழகு முதத்திலே சாந்தம் ததும்புது. உதட்டில் புன்னகை மறையவேயில்லை. நல்லா இருக்கனுப்பா என்றார்.
               இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டே இருந்த தாமரை விர்ரென்று எழுந்து வந்தாள். மாற்றான் தோட்டத்து மல்லிகை மனக்குது. மயக்குது பேசுவதற்கு உங்களுக்கு வெட்கமாயில்லை.
               நம் மகள் தாமரை மலர்ந்து மணம் வீச வேண்டியவள். வர்ற வரனெல்லாம் தட்டிப் போகக் கூம்பிக்கிடக்கிறாளே என்ற கவலையில்லாமல் கலியாணச் சாப்பாடு என்ன வேண்டிக் கிடக்குது என்று கடுப்புடன் பேசிவிட்டு படுக்கையில் குப்புற விழுந்தாள்.
               இதுவரை மகளின் குணமறியாதவர் இப்ப என்ன நடந்தது. எதற்காக இப்படிப் பேசினாள் அழுகிறாள் இது நம் மகள்தனா என்று சிந்தித்த வேளை
               மனைவி கனகா கத்தினாள். என்னங்க உங்களுக்கு என்ன பேசனும்னு தெரியுதா. அற்பனுக்கு பவர் வந்தா அர்த்த ராத்திரி குடை பிடிப்பான்னு சொல்லுவாங்க. அது மாதிரி அந்த அற்பங்கள் திருமணம்னு ஒன்ணை வைச்சு பவுசு கொண்டாடுதுக.
               அதுகளெல்லாம் கோயிலிலோ குளத்திலோ வைத்து மாலை மாத்திக்கிட்டா ஆவாதாக்கும். இப்படி ஒரு தடபுடல் செய்யனுமாக்கும். அட அதுங்கதான் சவடால் பண்ணுதுக என்றால் நீங்க கலியாணத்திற்குப் போனோமா கவரைக் கொடுத்தோமா வந்தோமா என்றில்லாமல் அதுகளைப் பற்றி பேசியது என் மகள் மனதை வாட்டி விட்டது. போயி நான் பேசுனது தப்புத்தாம்மா இனி பேசலைன்னு சொல்லிட்டு கடையைப் பார்த்துப் போங்க என்றாள் தாயார்.
               என்னடி நீங்க மட்டும் தான் மனுஷர். மற்ற வங்களெல்லாம் மிருகமாரி. பணத் திமிருடி உங்களுக்கு. நேற்று வரை எங்கப்பன் வீட்டு ஜட்காபறைக்குக் காணுமா என்று ஆணவம் பேசியவள் தானே நீ. பணம் நான் சம்பாதித்துக் கொட்டிக் கொண்டிருக்கும் பணம் தான். என்னிடத்தில் நீ ஒட்டிக் கொண்டிருப்பதற்குக் காரணம் பணம் மட்டும் இல்லையென்றால் கட்டியவன் என்ற எண்ணம் கூட இன்றித் தூசியாய்த் தட்டியிருப்பாய். உன் வயிற்றில் பிறந்த பீடை இப்படித்தான் இருக்கும்.
               நல்லவிதமாய் எதிர்பார்த்தது என் தவறு தான் இன்று குப்பையிலே கிடக்கும் குன்றுமணி நாளைக் கோபுரத்திலே ஒளி வீசும்படி. பணம் இன்று ஒருவன் கையிலிருந்தான் நாளை ஒருவன் கையிலிருக்கும். பணம் வருவதும் தெரியாது. போவதும் தெரியாது. மனித உயிர் அப்படியல்ல. விலை மதிக்க முடியாதது. மனித நேயம் வேணுமடி. மனிதரை மதிக்கத் தெரியனும். பணத்தினால் ஒருவன் உயாந்து நிற்க முடியாது. உண்மையான உழைப்பு நல்ல பண்புகள் ஒழுக்கத்தால் தான் உயர்ந்து நிற்க முடியும். மதிப்பையும் பெற முடியும்.
               நான் திருமணத்திற்குச் சென்று வந்தேனே. அந்தக் குடும்பம் மதிக்கத் தக்கதாகும்.
               உன் குணத்திற்கும் உன் பெண் குணத்திற்கும் யாரும் உங்களைச் சீண்டக் கூட மாட்டார்கள்.
               உன் பெண் திருந்த வேண்டும். மனித மனைதைப் புரிந்து கொண்டால்தால் போற வீட்டில் குப்பைக் கொட்ட முடியும். என்னை மாதிரி ஒரு இளிச்ச வாயன் கிடைத்தால் போயிற்று. இல்லையென்றால் உன் பெண்ணின் வாழ்வு அதோ கதிதான்.
               மற்றவர்களின் சுய கௌரவம் போற்றப் பட வேண்டும் புரிந்து கொண்டு வாழ உன் பெண்ணைப் பழகச் சொல். நான் வருகிறேன் என்று கூறியவாறே கடைக்குச் சென்று விட்டார்.
               இந்த மனுஷனுக்கு என்ன வந்தது. இந்த குதி குதிக்கிறார். முழுதாக நான்கு வார்த்தை சேர்ந்தாற்போல் பேசியது கிடையாது. இன்று தத்துவம் பேசித் தள்ளுகிறார்.
               எல்லாம் காலத்தின் கோலம். என் பெண்ணின் வாழ்வைக்கண்டு அவரே பெருமைப் பட்டுக் கொள்ளும் காலம் வரத்தான் செய்யும்.
               நீ கவலைப்படாதம்மா. உனக்கென்று பிறந்திருக்கும் ஒருவன் வரத்தான் போகிறான். மணமான பின் நீ கணவனைக் கைக்குள் போட்டுக் கொள். மாமனார் மாமியாரை ஒரு அடி தள்ளியே நிற்கும்படி பார்த்துக் கொள். மாப்பிள்ளையின் உடன் பிறந்தாரை ஒதுங்கி விடச் செய். இல்லையென்றால் பணத்தைக் கறந்து விடுவார்கள். கவனமாக நடந்து கொள் என்றாள் தாய் கனகா.
               என்னம்மா நீங்க திருமணமே இன்னும் நிச்சயமாகவில்லை. அதற்குள் அப்படிச் செய். இப்படிச் செய்னு கனவு காண்கிறீர்களா? என் மணவாழ்வு கனவுக் கோட்டையாகித் தகர்ந்து விடுமோ என்று நான் அஞ்சுகிறேன் என்றாள் மகள் தாமரை.
               மகளின் வாயைப் பொத்திய கனகா அப்படியெல்லாம் சொல்லாதே. வந்த வரன்களெல்லாம் உதவாக்கரையாக இருக்கலாம். நம் வசதிக்கு இதைவிட நல்ல வரனாகக் குதிரும். நல்ல வாழ்க்கை அமையும். நாமென்ன ஒன்றுமில்லாதவர்களா. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதையாகவா ஆசைப்படுகிறோம். பணம் பாதாளம் மட்டும் பாயும் என்பார்கள். வானம் வசப்படும் வானவில்லைக் கூட கயிறாகத் திரித்து உனக்கு விளையாடத் தரமுடியும். நீ நிம்மதியாக தூங்கியெழு மனம் தெளிவடையும் என்றாள் கனகா.
               கந்தசாமி தரகரை முடுக்கி விட்டு வரன் வேட்டையில் தீவிரமானார். கிட்டப் போனால் முட்டப் பகையென்பது போல் நெருக்கி வரும் வரன்கள் பெண்ணுக்கு பாவ ஜாதகம் பொருத்தம் சரியில்லை என்று விலகிச் சென்றார்கள்.
               நாட்கள் மாதங்கள் என்று உருண்டோடியது. தாமரைக்கே தன்மேல் கழிவிரக்கம் உண்டாகியது. தாமரை தன் அண்ணனிடம் கார்த்திக் மல்லியின் அண்ணன் முருகேஷ் நல்ல வேலையில் இருப்பதாகக் கேள்விப் பட்டேன். நீ அப்பாவிடம் சொல்லி அவனையே எனக்கு மாப்பிள்ளையாகப் பார்க்கச் சொல்.
               அவன் என்றால் சொத்தை சொள்ளை என்று சொல்லாமல் நம் பணத்திற்கு ஆசைப்பட்டு உடனே சம்மதித்து விடுவான். உள்ளுர் மாப்பிள்ளை எல்லாக் காரியங்களுக்கும் வசதியாகப் போகும். மாமன் மாமியார் தொல்லையின்றி நானும் அவன் வேலை பார்க்கும் ஊருக்கே சென்று விடுவேன். வாழ்க்கை என் வழியிலே அமையும். என்ன செய்வாயோ ஏது செய்வாயோ இந்தத் திருமணம் நடக்க வேண்டும் என் அண்ணன் என்ற முறையில் எனக்காக நீ இதை நடத்தியே ஆக வேண்டும் என்றாள்.
               கார்த்திக் யோசித்தான். தாமரையின் கூற்று சரியாகத்தான் தோன்றியது. தந்தையிடம் பேசினான்.
               கந்தசாமியும்இ கார்த்திக்கம் தரகர் துணையின்றி நேரடியாக நீலமேகம் வீட்டிற்குச் சென்றார்கள்.
               நீல மேகமும் மருதாணி அம்மாளும் இன்முகத்துடன் இருவரையம் வரவேற்று உபசரித்தார்கள்.
               கந்தசாமி எனக்கு சுற்றி வளைத்துப் பேசத் தெரியாது. நேரிடையாக விசயத்திற்கு வருகிறேன். உங்கள் மகள் மல்லிகையில் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. ஓர் ஆண்டு நிறைவு நெருங்கிக் கொண்டிருக்கிறது.
               உங்கள் மகனும் நல்ல வேலையில் இருப்பதாகக் கேள்விப் பட்டேன். என் பெண்ணும்இ திருமணத்திற்குத் தயாராய் உள்ளாள். உங்க பையனுக்கு என் பெண்ணைத் தரலாம் என்று கேட்கத்தான் வந்துள்ளோம் என்றார்.
               ஐயா உங்கள் எண்ணம் நல்லது தான். ஆனால் அதை நான் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.
               என் மகள் திருமணத்தின் போது மாப்பிப்ளை வீட்டார் பெரும்பங்கு செலவை ஏற்றுக் கொண்டாலும் நாங்கள் தகுதிக்கு ஏற்றால் போல் கடன் உடன் வாங்கிச் செலவு செய்தோம். அத்தனையும் என் மகன் அடைத்து விட்டான்.
               நம் ஊரில் ஒரு வசதியான வீட்டைக் கட்ட வேண்டும். அதன் பிறகே திருமணம் பற்றி யோசிக்க வேண்டும் என்றான். இரண்டு வருடங்கள் கழித்துதான் திருமணம் பேச்சையே எடுக்க வேண்டும் என்றிருக்கிறான் என்றார்.
               பரமசிவன் நான் வேண்டுமானால் என் மகளுக்கு கொடுக்கும் சீராக வீடு கட்டித் தந்து விடுகிறேன். முதலில் திருமணத்தை நடத்தி விடுவோமே என்றார்.
               ஐயா இல்லையில்லை. என் மகன் மனைவியாக வரப்போகிறவளிடம் நகைகளொ வரதட்சணையோஇ சீரோ எதுவும் பேசக்கூடாது வாங்கவும் கூடாது என்ற தன் கொள்கையில் உறுதியாயிருக்கிறான்.
               என் மகன் சுயகௌரவத்தை மிகவும் பேணுவான். மேலும் அவன் வேலை பார்க்கும் கம்பெனினியின் பார்ட்னர் ஒருவரின் மகளைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார்களாம். இரண்டு வருடங்கள் கழித்தே  பேச்சு வார்த்தை என்று கராராகக் கூறி விட்டானாம். நேற்றுதான் தொலைபேசியில் பேசினான் என்று நீலமேகம் கூறிவிட்டார்.
               மேற்கொண்டு பேசுவதற்கு இயலாமல் இருவரும் கிளம்பி வந்துவிட்டனர்.
                

Advertisement