Advertisement

தாமரையின் நெஞ்சம் கறுவியது அண்ணனின் மடலை வாசித்துப் பார்த்து புத்தகத்துள் வைத்துக் கொடுத்தவளே தாமரைதான். மடலை வாசித்து மயங்கிக் காதல் வலையில் விழுவாள் படிப்பில் கவனம் சிதறிக் கல்யாணம் என்று வரும்பொழுது எங்கள் தகுதிக்கு நீ பொருந்தமாட்டாய் என்று கூறி மனஉளைச்சல் பட வைக்க வேண்டும் என்று நினைத்தால் சண்டாளி முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டாளே. என் அண்ணின் காதல் பயிர் கருகி விட்டதே என்று உள்ளம் குமுறினாள் தாமரை.
தாய் அறியா வண்ணம் தமயனிடம் மடலைக் கொடுத்தாள். வாசித்துக் கிழித்தான் கார்த்திஷ். ஏய் தாமரை நீ தானே அந்தப் பெண் என் மேல் ஒரு கண் வைத்திருக்கிறாள் அது இது என்றாய்.அந்தப் பெண் நல்ல மாதிரி போலஇஅவள் என்னைப்  பற்றித் தவறுதலாக நினைக்க வைத்துவிட்டாயே ஏன் என்றான்.
               எல்லாம் காரணமாகதான் செய்தேன். இது சமயம் தப்பித்து விட்டாள். இனியும் காலம் வராமலா போய்விடும். அப்பொழுது பார்த்துக் கொள்கிறேன்  என்றாள் தாமரை. அவளும் எனக்கு ஒரு தங்கைதான் இனி அவளுக்கு எந்தத் தீங்கும்  செய்யாதே என்று கூறி சென்று விட்டான் கார்த்திஷ்.
               காலச் சக்கரச் சுழற்சியில் பி.எஸ்.ஸி பட்டதாரியாயினர் மல்லிகையும் தாமரையும் மதிப்பெண் வாங்க கல்லூரிக்கு சென்றனர்.மல்லி நீ தொன்னூற்றெட்டு சதவீதம் வாங்கிருக்கியே மேற்கொண்டு என்ன செய்ய நினைக்கிறாய்.
               எப்படியாவது எம்.எஸ்-ஸியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. அண்னனுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. காலேஐ;  பீஸெல்லாம் கட்டுவதற்கு வீட்டில் கஷ்டம். யாருடைய சிபாரிசின் பேரிலாவது பேங்கில் கல்விக்கடனுதவி பெறலாம் என நினைக்கிறேன். அப்பாவும் அம்மாவும் என்ன நினைக்கிறார்களோ தெரியவில்லை என்றாள் மல்லிகை.
மேற்படிப்பு படிக்க வைக்க முடியாத சூல்நிலையில் உள்ள நீ எதற்காக கஷ்டப் பட்டு படித்தாய். இவ்வளவு பெரிய மதிப்பெண் பெற்றாய். தான் எப்படி முயன்று படித்தும் தனக்குக் கிடைத்தது இவ்வளவுதான் என்று மனது இடித்துரைத்த போதும்இ எங்கள் வீட்டில் எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கவைப்பார்கள். நானும் கஷ்டப்பட்டு முயன்று படித்திருந்தால் உன்னை விட அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பேன். வீட்டில் புத்தகத்தை தொடவே இல்லாமல் காலேஐpல் கவனித்ததை வைத்தே நாற்பத்தைந்து சதவீதம் பெற்றிருக்கிறேன்.
அதிக மதிப்பெண் பெற்றிருந்தால் ஒரு வேளை மேற்படிப்பிற்கு அனுமதித்திருப்பார்கள். பட்டம் வாங்கியாச்சு வீட்டில் இரு. நல்ல வரன் வந்தால் திருமணத்தை நடத்திடலாம் என்கிறார்கள் என்றாள் தாமரை. மல்லி நான் வேண்டுமானால் உன் மேற்படிப்பிற்கு உதவ முன் வரட்டுமா. என் அப்பாவிடம் சொல்லிக் கடனுதவிக்கும்  வழி செய்யட்டுமா என்று கேட்டாள் தாமரை.
 பிச்சைபுகினும் கற்கை நன்றே என்று எண்ணிய மல்லிகை நான் என் பெற்றோரிடம் பேசுகிறேன். என் அண்ணனும் வேலைக்கு முயன்று  கொண்டிருக்கிறார்கள். வேலை கிடைச்சுட்டா என்னை எப்படியும் படிக்க வைப்பார்கள். எம்.எஸ்.ஸி-யில் சேர்வதற்கு நாள் இருக்கிறதல்லவா. நம் கல்லுரியில் எனக்கு இடமில்லை என்று கூறி விடவாப் போகிறார்கள்.நாம் அடுத்தவாரம் சந்திப்போம். அச்சமயம் பேசிக்கொள்வோம் என்று கூறியபடியே விடை பெற்றாள் தாமரை.
ஒரு வாரம் என்றது இரண்டு வாரம் கடந்தும் மல்லிகை வரவில்லையே என்று எண்ணிய தாமரை தான் மல்லிகையை நாடிச்சென்றாள்.எப்படியும் படிப்பிற்கு உதவுகிற சாக்கில் மல்லிகையை இந்;;தத் தடவை வீழ்த்திவிட நினைத்தாள் தாமரை.
               தாமரையைக் கண்டும் காணாமலும் செல்கிற மருதாணி அம்;மாள் வாம்மா வா தாமரை சௌக்கியமா முகமன் கூறி வரவேற்றாள். என்ன இந்தம்மா பேச்சில் எதுவோ நெருடுகிறதே என்று நினைத்த தாமரையிடம் உன் தோழிக்கு நீயாவது புத்தியை எடுத்துக் கூறம்மா என்றார்கள்.
மல்லிகையின் கண்கள் அழுது சிவந்திருந்தது கன்னம் ஆப்பிளாக சிவந்து உப்பியிருந்தது மல்லிகையைப் பார்வையால் ஊடுருவி என்ன என்பது போல் சைகையில் கேட்டாள் தாமரை.மல்லிகை மேலும் அழத்துவங்க மருதாணி ஏன்டி அழுகிறாய் அம்மா அப்பா உனக்கு நல்லதைத்தானே செய்வோம். நீ அழாமல் யோசித்துப் பார். உனக்கு புரியும்.
ஏம்மா தாமரை நீயே சொல்லு இவள் மேற்படிப்பு படிக்கிறேன் என்கிறாள். என் பிள்ளை முருகேஷ் படித்துவிட்டு இத்தனை நாள் சரியான வேலை அமையாமல் இருந்தான்.
 இப்பதான் ஒரு நல்ல வேலைக்கு வழி பிறந்தருக்கிறது. நண்பன் மாதவன் மாதம் பன்னிரண்டாயிரம்ருவாய்ச் சம்பளத்தில் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறான். அதற்கு கைமாறாக எந்தச் செலவுமே இல்லாமல் இவளை எனக்கு மனம் முடித்துத் தாருங்கள். அவள் மேலே படிக்க விரும்பினால் நான் படிக்க வைத்துக் கொள்கிறேன் என்கிறான்.
அவன் சிங்கப்பூரில் ஒரு பெரிய கம்பெனியில் எஞ்சினியராக வேலை பார்க்கிறான். கை நிறையச சம்பாதிக்கிறான் மல்லிகையை மணம் முடித்துச் சிங்கப்பூருக்கே கூட்டிச்செல்கிறேன் என்கிறான். நாங்கள் விசாரித்ததில் பையன் மிகவும் நல்லவனாகத்தான் தெரிகிறான்.
 அப்பாவும் அம்மாவும் ரொம்ப நல்லவர்களாகத்தான் தெரிகிறார்கள். வீடு தேடி வந்து பெண்னை பார்த்து எங்களுக்கு மிகவும் பிடிச்சிருக்கு திருமணத்திற்கு நாள் குறிப்போம் என்று கூறிச்  சென்றார்கள்.
அதிலிருந்து  இவள் ஒரே அழுகைதான். எனக்குத் கல்யாணம் வேண்டாம். படிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறாள். ஏவ்வளவு சமாதானம் பண்ணியும் கேட்கவில்லை நீ சொல்லி அவள் மனதைத் தேற்றம்மா என்று கூறி காப்பிக் கொண்டு வந்து தாமரைக்குக் கொடுத்தாள் மருதாணி அம்மாள்.
இந்தச் செய்தியைக் கேட்ட தாமரைக்கு அடிவயிறு கலங்கிக் கொண்டு வந்தது. குடலைப் புரட்டியது. இவளுக்கு இந்தக் குப்பையில் தோன்றிய காளானுக்கு கோபுர வாழ்க்கையா? அவளால் ஐPரணிக்க முடியவில்லை.
அவளை ஆசை வார்த்தைக் கூறி படிக்க வைத்துவிட்டு பின் கடன் தர வசதியில்லை. அப்படி இப்படி என்று கூறி கதி கலங்க வைக்க வேண்டும். அதற்குள் தனக்கு நல்ல வரன் கிடைத்து அமோகமாக வாழ வேண்டும்.
மல்லிகையைப் பார்ககும் பொழுதெல்லாம் அழகும் அறிவும் படிப்பெல்லாம் இந்தக் காலத்தில் சோறு போடதும்மா. சபைக்குதவாது பணம் பணம் அது தான் வேண்டும் நான் பணம் படைத்த வீட்டில் பிறந்ததால் பவுசு அனுபவிக்கிறேன் நீ பார் படி படி என்று காலமெல்லாம் கஷ்டப்பட்டு படிச்சுக்கிட்டே இரு என்று சொல்ல வேண்டும் என நினைத்தேன்.
 நிலைமை தலைகீழாக மாறி உள்ளதே என்று  நினைத்த தாமரை. அகத்தின் அழகை முகத்தில் காட்டாதுஇ மல்லி இந்த செய்தியைக் கேட்டு எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.
நீ திருமணத்திற்குச் சம்மதித்து விடம்மா. இது நல்ல தருணம் கிடைத்த வாய்ப்பைக் கை நழுவ விட்டு விடாதே படிப்பென்ன பெரிய படிப்பு அது தான் நீ வீட்டிலிருந்தே படித்து விடுவாயே.
நான் உன் படிப்பி;ற்கு பண உதவி செய்வது பற்றித்தான் பேச வந்தேன். இங்கு உனக்கு சுவர்க்கபுரியே கிடைத்திருக்கிறது. அழுகையை நிறுத்து அனுபவி ராஐh அனுபவி என்று கிடைத்ததை  மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள் நான் சென்று வருகிறேன் என்று கூறி விடைபெற்றாள் தாமரை.
 தாமரைக்கு இந்தச்செய்தியை ஐPரணிக்கவே முடியவில்லை கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. நான் நினைப்பது ஒன்றும் நிறைவேறவில்லை. அந்த மல்லிக்கு எனக்கு முன்பாகவே எனக்குத் திருமணம் நடந்தது முனுமுனுத்துக் கொண்டிருந்தாள் தாமரை.
தற்செயலாக ஹாலுக்குள் வந்தத் தாமரையின் அம்மா என்னடி உனக்குள்ளாகவே பேசிக்கொண்டிருக்கிறாய் என்ன விஷயம்  முகவாட்டமாகத் தெரிகிறாய் என்றாள்.
இந்தக் கேள்வி;க் கொன்னும் குறைச்சலில்லை சும்மாக் கிடந்தச் சங்கை ஊதிக்கெடுத்தானாம் என்பதாய் என் மனதில் திருமண ஆசையைத் தூண்டி  விட்டது நீங்கள் தானே.
ரொம்பப் பணம் படைத்தவங்க நாம் பெரிய இடத்தில் உன்னை மணம் முடித்து கொடுப்போம். நீ நல்லா இருப்பாய் என்று சவடால் பேசீனிங்க. அதற்காக எந்த முயற்சியும் எடுத்தீங்களா? பெரிய படிப்பு முடித்தபின் தான் கலியாணத்தை பற்றி நினைப்பேன் என்றவளுக்கு தானாகவே திருமணம் கூடி வந்து விட்டது.
என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது அவளுக்குத் திருமணம் நடப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகவே எனக்குத் திருமணம் நடந்ததாக வேண்டும் என்று கடுப்புடன் கூறினாள் தாமரை.
என்னப் பேச்சு பேசுகிறாய் எடுத்த எடுப்பில் பிள்ளையைப் பெற்றுத்தா என்றால் எப்படி முடியும்இ திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் நன்கு தீர விசாரித்து பார்த்துப் பதனமாக பக்குவமாக செய்ய வேண்டியதாகும்.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்று சொல்வாங்க. உனக்கென்று ஒருவன் எங்காவது பிறந்திருப்பான். இனி பிறக்கப் போவது இல்லை.சமயம் வரும் பொழுது நன்றாக நடக்கும். அவசரப்பட்டு ஆழம் தெரியாமல் காலை விட்டு விடக் கூடாது.
நாங்கள் பார்த்து ஒருவனுக்கு கழுத்தை நீட்டச் சொல்லும் வரை ஐhலியாகப் பொழுதைப் போக்குவாயா என்ன? அந்த நகையை வாங்கித் தாங்க இந்த ஆடையை எடுத்துத் தாங்கள் கேட்டு வாங்கிக் கிட்டே இரு. அதை விட்டு அவளுக்கு ஆயிற்று.
எனக்கும் ஆகணும் என்று புலம்பாதே என்றாள் கனகா.
               தாய் என்ன கூறினாலும் தாமரையின் நெஞ்சுக் கொதிப்பு அடங்கவில்லை. மல்லிகை நல்ல பெண்தானே அவள் நன்றாக வாழ்ந்தால் பார்த்து மகிழ்வதை தவிர்த்து அவள் கஷ்டப்பட்டு தவிக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய் என்று மனதைக் கேட்டுப் பார்த்தாள்.
               அம்மா தானே சொன்னார்கள் அவங்களெல்லாம் நம்மைப்போல் உயர்ந்தவர்கள்இ பணம் படைத்தவர்கள் அல்ல. அவங்கக் கஷ்டப்படுறதுக்கென்றே பிறந்தவர்கள். அவர்களிடம் சேர்ந்தால் அவர்களின் அவலம் நம்மேல் படிந்து விடும் என்றார்கள்.
               நான் அவளிடம் சேர்ந்ததினால் எனக்குக் கிட்ட வேண்டிய நல்லதெல்லாம் அவளுக்குப் போய்ச் சோந்து விட்டது போலும் இனி அவளிடம் சேரக் கூடாது.
               அவளுக்கு நல்லது நடக்கோ நடக்கலியோ எனக்கு எல்லாம் நல்லதாக நடக்க வேண்டும். அவளைவிட நான் எல்லாவிதத்திலும் உயர்ந்து நிற்க வேண்டும் அவள் என் வாழ்வைப் பார்த்து ஏக்கம் கொள்ள வேண்டும் என்றுதான் அவள் மனது கூறியது.
               ஏன் மல்லியிடம் மட்டும் இந்த மனது. இப்படி மல்லுக் கட்டுகிறது. ஊரில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள். கல்லூரியில் உடன் படித்த மாணவியர் எத்தனை பேர் உள்ளனர். அவர்களில் யாரேனும் தன்னிடம் ஒப்பிட்டுப் பார்க்கிறதா இல்லையே.
               ஏன் மல்லியிடம் மட்டும் போட்டி போடுகிறது. அவள் அழகாலும்இ அறிவாலும் என்னை ஈர்த்து நெருங்கிப் பழகிவிட்டாள். அது அவள் செய்தத் தவறா.
               மனதை எப்படிச் சமாதானப் படுத்திப் பார்த்தாலும் மல்லி உன்னை விடத் தாழ்ந்த நிலையிலும் உன்னை அண்டி உதவிகள் கோரியும் தான் வாழ்ந்து ஆக வேண்டும் என்பது தான் விதி என்பது போல்தான் மனம் எடுத்துரைத்தது.
               அண்ணன் கார்த்திக்கிடம் நான் அப்பொழுதே சொன்னேன் அவளை நீ லவ் பண்ணு. அவள் காதல் வலையில் விழட்டும். அப்படியாவது அவள் வாழ்வு அல்லாடட்டும் என்று நீ கேட்டியா. பெரிய பண்பாளர் மாதிரி தங்கை என்று சொல்லி விட்டாய்.
               தவறு செய்யக் கூடாது என்று சொல்லி விட்டாய். இப்பொழுது பார் அவளுக்குத் திருமணமாம். மாப்பிள்ளை சிங்கப்பூரில் வேலை பார்க்கிறானாம். நல்ல வசதியாம். அவளுக்கு வந்த வாழ்வைப் பார்த்தாயா என்றாள் தாமரை.
               அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்தால் நல்லது தானே. அண்ணனாக இருந்து மகிழ்ச்சியடைகிறேன் என்று சாதாரணமாக கூறினான் கார்த்திக்.
               உடன் பிறந்த தங்கை நான் அல்லாடிக் கிட்டிருக்கேன். உனக்கு அந்த தங்கையின் வாழ்வில் மகிழ்ச்சியா. நீ ஒரு அண்ணனா எனக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துத் தர எண்ணமில்லை என்று கோபமாகத் தாமரைக் கத்தினாள்.
               கார்த்திக்கிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. தங்கையைச் சாமாதானம் செய்யும் பொருட்டு அப்பாவிடம் சொல்லி நல்ல வரன் பார்த்து விடுவோம் அதற்கு ஏன் கவலைப்படுகிறாய் என்றான்.
               விரைவிலேயே நம் வீட்டில் பீப் பீப் டும் டும் மங்கள ஒலி கேட்கும். அதன் பிறகு ஐயாவுக்கு லைன் கிளியர் இந்தக் காரியத்தை இந்த மர மண்டைக்கு எடுத்துரைத்த அன்புத் தங்கைக்கு நன்றி என்று நகைத்தவாறே கூறி போலியாக கரம் குவித்து வணங்கினான். விதியின் வழியை யாரும் அறிந்ததில்லை.

Advertisement