Advertisement

(3)
               மல்லிகையும் தாமரையும் சிறுவயது முதலே ஒன்றாகப் படித்தவர்கள். அந்தச் சிற்றூரில் ஒரே தெருவில்தான் இருவரின் வீடும் அமைந்திருந்தது.
               மல்லிகையின் குடும்பம் வறுமையால் வாட்டம் கண்டது. தாமரையோ அந்த ஊரின் ஓரே பெரிய மளிகைக்கடை உரிமையாளர் கந்தசாமியின் மகள். பெரும் தனம் படைத்தவர்கள்.
               மல்லி நீ எவ்ளோ அழகாயிருக்கிறாய். நன்றாகப் படிக்கிறாய். உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். உன்னோடு சேர்ந்தே இருக்க வேண்டும் என்று நினகைகிறேன். எட்டாவது படித்து முடிக்கும் வரை தாமரை ஒரு நாளுக்கு ஒரு தடவையாவது இப்படிச் சொல்ல மறந்தது இல்லை.
               தாமரை நீயும் நன்றாகத்தானிருக்கிறாய். எனக்கு எவ்வளவு உதவி செய்கிறாய். உன்னை எனக்கும் ரொம்பப் பிடிக்கும் என்றாள் மல்லிகை.
               மல்லி எங்கள் வீட்டிற்கு இன்று வருகிறாயாஇ எதுக்குத் தாமரை என்ன விசேஷம்.
               எனது பூப்புனித நீராட்டுவிழா நடந்த அன்று நீ என்னுடனே இருப்பாய் என்று நினைத்தேன். நீ ஓடிவிட்டாயேஇ அதுவா ஆட்கள் கூட்டமாக வந்ததனால் எனக்கு பயமில்லை. ஆனால் எதுவோபோல் தோன்ற வீட்டிற்குச் சென்றுவிட்டேன். அதற்கு என்ன என்றாள் மல்லிகை.
               எனக்கு எத்தனை புடவைகள்இ கம்மல்கள்இ மோதிரங்கள்இ பாத்திர வகைகள் எல்லாம் அன்பளிப்பாக வந்து குவிந்துள்ளது. அவற்றையெல்லாம் உன்னிடம் காட்ட வேண்டும். நீ அவசியம் வரவேண்டும் பார்த்துக்கொண்டே இருப்பேன் என்றாள் தாமரை.
               அம்மா மல்லி வந்திருக்காம்மாஇ பீரோ சாவியைத் தாருங்கள். நான் பரிசுபொருட்களை அவளிடம் காண்பிக்க வேண்டும்.
               என்னடி அலறுறே. மல்லியா எந்த மல்லி சீமையிலிருந்தா வந்திருக்கா. ஓ அந்த கருவாட்டுக்காரன் பேத்தியாஇ அவட்டெல்லாம் ஒன்றும் காட்ட வேண்டாம்.
               அதுகளுக்கு உடுத்த நல்ல துணிமணியே கிடையாது. இங்குள்ளதைப் பார்த்து ஆ-ன்னு வாயைப் பொளக்கும். கண் திருஷ்டிபட்டு உனக்கு ஏதாவது வந்துவிடும். அவளையெல்லாம் நம் வீட்டிற்கு வரச்சொல்லாதே.
               சட்டியிலே ஆறுன காப்பித்தண்ணி கிடக்கும். ஒரு டம்ளர் ஊற்றிக்கொடுத்து வீட்டிற்குப் போகச்சொல் என்றாள் தாமரையின் தாய் கனகா.
               இது அத்தனையும் கேட்ட மல்லிகைக்கு அவமானமாய்ப்பட்டது. அன்றுதான் ஏழைஇ பணக்காரர் பாகுபாடு அந்த பிஞ்சு உள்ளத்திற்குப் புரிந்தது. தாமதியாது தன் வீட்டிற்கு ஓடிவிட்டாள்.
               மல்லிகை வதனம் வாடிச் சோர்ந்ததைக் கவனித்தத் தாய் மருதாணி என்னம்மா என்றாள்.
               மகள் கூறக்கேட்ட தாய் தாமரை வேண்டுமானால் நம் வீட்டிற்கு வந்து செல்லட்டும். நீ அந்த மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்றாள்.
               அடுத்த நாளே தாமரை மல்லி புறப்பட்டுட்டியா வாஇ நாம் சேர்ந்தே பள்ளி செல்வோம் என்று கூறி மல்லிகையின் வீட்டிற்கு வந்தாள்.
               பள்ளி செல்வதற்கும்இ வருவதற்கும் பள்ளி நேரத்திலும் இணைபிரியா தோழிகளாயினர்.
               தாமரையின் நெஞ்சில் மல்லிகை தன்னைவிட வசதி வாய்ப்பில் குறைந்தவள். அறிவும்இ அழகும் இருந்து என்ன செய்யமுடியும் என்ற ஏளனமான எண்ணம் வேரூன்றியது.
               தன் பணபலத்திற்கு முன் அவளது அழகு எடுபடாது. தான் என்ன சொன்னாலும் அவள் செய்துத் தரவேண்டும். ஏன் அவள் தனக்கு ஒரு கைக்கூலியாகவே இயங்கவேண்டும் என்று நினைக்கலானாள்.
               மல்லிகையின் மனதைக் காயப்படுத்தக்கூடிய சொற்களை சில வேளைகளில் பேசலானாள்.
               மல்லி உன் சடங்கிற்கு நூறு ஆட்கள் கூட வரவில்லையாமே. ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி நடக்கலையாமேஇ அப்படியா.
               என்ன அப்படியா ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்பதுபோல் ஆடம்பரமில்லாமல் இனிமையாக நடந்தது.
               ஆடை அலங்காரம் என்று அமளி தூள் கிளப்பாமல் உண்மையான அன்புடன் நல்லாசி கூறி வாழ்த்தினார்கள் என் பெற்றோர். மிக மகிழ்ச்சியாக இருந்தனர். மனநிறைவுடன் வாழ்த்துபெற்ற நான் நிச்சயம் நன்றாக வாழ்வேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
               தளராத நம்பிக்கையும் தும்பிக்கையான் ஆசியும் அயராத உழைப்பும் இருக்கும்பொழுது கவலைப்படவே தேவையில்லை. சரிஇ சரி இப்பொழுது நமக்கு அந்தப் பேச்சு எதற்கு.
               காமராஜர் பிறந்த தினவிழா கொண்டாட்டத்திற்கு நடைபெறும் பண்பாட்டு போட்டியில் நீ எதிலெல்லாம் பங்கேற்கப் போகிறாய் என்று கேட்டாள் மல்லிகை.
               ஒன்றிலுமில்லைஇ நீ படித்து ஒன்றும் ஆகப்போவது இல்லை. பேசாமல் நேரத்தைப் போக்குவதற்குப் பள்ளி சென்றுவா. நாளைக்கு மாப்பிள்ளை பார்க்கும்பொழுது என் பெண் படித்துப் பட்டதாரி ஆகி இருக்கிறாள். என்று பெருமையாகப் பேசிக்கொள்ளலாம். அதற்காகத் தான் பள்ளி அனுப்புகிறேன் என்று என் அம்மா சொல்லிவிட்டார்கள்.
               ஆனால்இ உன் நிலை அப்படியில்லைஇ நீ கஷ்டப்பட்டு படித்தால்தான் ஏனோதானோ என்று காலம் தள்ளமுடியும் நீ எல்லாவற்றிலும் பங்கேற்றுக்கொள் என்றாள் தாமரை.
               நிச்சயம் பங்கேற்பேன். செய்யும் தொழிலே தெய்வம் என்பதுபோல் இப்பொழுது நமது கடமை படிப்புஇ படிப்பில் முதலில் இருக்க வேண்டும். தோண்டத் தோண்ட ஊரும் மறைகேணிபோல் படிக்கப் படிக்கத்தான் அறிவு ஒளி வீசும் என்று என் அண்ணன் சொல்வார். என் அண்ணனும் நன்றாகப் படிப்பார். அதனால் நானும் நன்றாகப் படிக்க முயல்வேன் என்றாள் மல்லிகை.
               உனக்கு அண்ணன் இருக்கிறானா? நான் பார்த்ததே இல்லையே. அவனும் உன்னைப் போல் அழகாய் இருப்பானா? என்றாள் தாமரை.
               என் அண்ணன் என்னைவிட பத்து வயது மூத்தவர். டவுனில் கல்லூhயிpல் படிக்கிறார். அவரை மரியாதையில்லாமல் அவன் இவன் என்று பேசாதே என்றாள் மல்லிகை.
               பெரிய அண்ணன் எனக்கும்தான் அண்ணன் இருக்கிறான். அவன் பெயர் கார்த்திஷ். பன்னிரண்டாம் வகுப்பு மூன்று தடைவ முயன்றும் தோல்வியைத் தழுவினான். எங்களுக்குப் பெரிய கடை இருப்பதனால் கடையைக் கவனித்துக் கொண்டு கவலையில்லாமல் இருக்கிறான். நான் அவனையே அவன் என்றுதான் பேசுவேன். நீ தான் என்று பேசினால்தான் பாசம் வெளிப்படும். மரியாதைக் கொடுத்தால் பாசம் அகன்றிடுமே என்றாள் தாமரை.
               ஸ்வீட் சிக்ஸ் டீனில் தாமரையின் நெஞ்சில் காதல் உணர்வுகள் எழும்பி ஆர்ப்பரிக்கத் தொடங்கின. என்னதான தாமரையின் தாய் மல்லிகையின் குடும்பம் நம் தகுதிக்கேற்றதல்ல. அவளிடம் நீ நெருங்கிப் பழகாதே. பணக்கார வீட்டுப் பிள்ளைகளுடன் பேசுஇ பழகு என்று உபதேசித்தாலும் மல்லிகையின் அண்னன் அழகாய் இருப்பானாமேஇ நல்லா படிப்பானாமேஇ அவனைப் பார்க்க வேண்டும்இ பேசவேண்டும் என்று மனம் கட்டுப்பாடற்றுத் துள்ளியது.
               மல்லிகைப் பாடங்கள் பற்றியும்இ செயல்முறை பற்றியும் பேச விழைந்தாலும்இ மல்லி உன் அண்ணன் எப்பொழுது வருகிறார். அவர் எப்படி இருப்பார். இந்தத் தடைவ வரும்பொழுது என்னை அறிமுகப்படுத்தி வைப்பாயா என்று கேட்டாள் தாமரை.
               கடமையில் கருத்தாயிருந்த மல்லிகைக்குத் தாமரையின் பேச்சில் உள் அர்த்தம் புரியாமல் சரி என்று ஒரு வார்த்தையில் கூறி விடுவாள்.
               தாமரை மல்லியின் அண்ணன் முருகேஷைக் காதலிக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தாள். எப்படியும் அம்மா அவர்களை வீட்டில் உறவு வைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். திருமணப்பேச்சு வரும் வரை ஒரு நேரப் போக்கிற்காகவாவது அவனைக் காதலிக்கவேண்டும். மனதை அலைக்கழித்து அல்லல்பட வைத்துவிடவேண்டும். அப்படிச் செய்தால் மல்லிகையும் பாதிக்கப்படுவாள் தானே.
               அவள் மனதையும் கெடுத்து நம் அண்ணன்மேல் காதல்வயப்படுத்த வேண்டும். நாம் படிப்பில் கவனமில்லாமல் இருக்கும்பொழுது அவள் மட்டும் எப்படி படித்து முன்னுக்கு வருவது தனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை அவளுக்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் என்று எண்ணமிடத் துவங்கினாள்.
               எல்லா ஆசிரியர்களும் மல்லிகையைப் பாராட்டி பேசுகிறார்கள். படிப்பிலு; சரிஇ விளையாட்டிலும்இ பண்பிலும் மல்லிகை எல்லோருக்கும் முன்னணியிலும் இருக்கிறாள். முன் மாதிரியாகவும் இருக்கிறாள். எல்லோரும் அவளைப் பின்பற்றி நடக்க முயலுங்கள். மல்லிகையின் பெற்றோர் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். இப்படிப் பலவிதங்களில் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
               என்னைப் பற்றி ஒரு வார்த்தைப் பாராட்டி பேசுவார் யாருமில்லை. எனக்கு எவ்வளவு வசதி இருக்கிறது. நானும் என்ன அழகில் குறையா? படிப்பில் மட்டும் கவனம் சிதறுவதால் சற்று பின்னடைந்துள்ளேன். அதற்காக அவளைப் பாராட்டுவதை தான் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா?
               அவள் கவனத்தைச் சிதறடைத்து கீழே தள்ளுவேன். அவளைப் பலரும் இகழ்வதைக் கேட்டு களித்திருப்பேன். அந்த நாள் எப்பொழுது வரும் தாமரை ஏக்கப் பெருமூச்சுடன் காத்திருந்தாள்.
               டேய் கார்த்திஷ் என் தோழி மல்லிகையை உனக்குத் தெரியுமாடா. எவ்வளவு அழகாயிருக்கிறாள். ஆனால் ஏழைடா. நம் பணத்தின் மீதும்இ உன்மீதும் அவளுக்கு ஒரு கண். நீ ஏன் அவளை டாவடிக்கக்கூடாது. அவள் பேச்சிலிருந்து உன்னை அவள் நேசிக்கிறாள் என்றுதான் தோன்றுகிறது என்றாள் தாமரை.
               ஏய் தாமரை என்ன கதைவிடுகிறாயா? அந்தப் பெண்ணை சில அபூர்வமான சமயத்தில் தான் நான் பார்த்ததே. அந்தப் பெண்ணும் என்னைப் பார்த்திருக்கவே முடியாதே. எப்படி காதல் உருவானது. உன் தோழி சரியான கைகாரியாய் இருப்பாள் போலிருக்கிறது.
               என்னையும் ஒரு பெண் விரும்புகிறாள் என்றால் சந்தோசம். எங்கள் காதலுக்கு நீ தூது செல்வாயா என்றான் கார்த்திஷ்.
               எனக்கு அதுதான் வேலை. விடுமுறை துவங்கிவிட்டது. அவள் நிறைய புத்தகங்கள் படிப்பாள். நூல் நிலையம் சென்று புத்தகம் எடுக்க வக்கில்லாதவள். நீ வேண்டுமானால் புத்தகங்கள் எடுத்துத் தந்தால் அவளிடம் கொடுக்கிறேன். காதல் பயிர் வளரட்டும் என்றாள்.
               தானுமு; மல்லிகையின் வீட்டிற்குச் சென்று வரஒ ரு காரணம் கிடைக்கும். மல்லிகையின் அண்ணனையும் பார்க்க நேரிடலாம் என்று உள்ளுக்குள் எண்ணமிட்டாள்.
               கார்த்திஷ_ம் வாலிபன்தானே புத்தகங்கள் எடுத்துக் கொடுக்கலானான். மல்லிகையும தனது படிப்புப் பசிக்கு இனிய தீனி கிடைத்ததில் நேரம் போவது தெரியாமல் நாவல்களைப் படித்தாள்இ ரசித்தாள்.
               தாமரையை என்னவோவென்று நினைத்தேன். என் ரசனையைப் புரிந்து கொண்டு எவ்வளவு உதவுகிறாள். நல்ல பெண் என்று நினைத்துக் கொண்டாள்.
               நாவல் பரிமாற்றம் தொடர்ந்தது. கல்லூரிக்குக் காலெடுத்து வைத்தார்கள்.
               ஜெயகாந்தனின் நாவல் ஓன்றைக் கொடுத்தனுப்பும் பொழுது மடல் ஒன்று எழுதி உள் வைத்துவிட்டான். நாவல் படித்த ரசனையில் அதற்குள் இருந்தக் காகிதத்தை எடுத்துப் பாடப் புத்தகத்தினுள் வைத்து விட்டாள். கல்லுரிக்குச் சென்று புத்தகத்தை விரிக்கும் பொழுது அந்தப் பேப்பர் கீழே விழுந்தது. தாமரை எடுத்தாள்.
என்னடி இது லவ்லெட்டர் மாதிரி இருக்கிறது யாரை டாவடிக்கிறாய் எனக்குத் தெரியாமல்இநான் படிக்கலாமா என்றாள் தாமரை.ஏய் நான் யாரையும் டாவடிக்கவில்லை. அதெல்லாம் என் புத்திக்கு அப்பாற்பட்ட செயல்.நான் ஒரு போதும் அப்படிச் செய்யமாட்டேன்.
               இந்தப் பேப்பர் நீ அன்று தந்த நாவலில் இருந்தது. கதை மும்முரத்தில் இந்தப் புக்கில் வைத்து விட்டேன்.கொண்டா பார்ப்போம் என்று வாங்கி  வாசித்தாள் மல்லிகை.  வாசித்து முடிக்கும் முன்பே கேவிக் கேவி அழுது விட்டாள்.
என்னடி ஏன் அழுகிறாய் என்று கேட்டாள் தாமரை. தூமரை நீ என் தோழி என்றாலும் உடன்;பிறவாச் சகோதரி தானே. உன் அண்ணன் எனக்கும் அண்ணன் தானே. அண்ணன் இப்படியல்லாம் அசிங்கமாக காதல் கடிதம் எழுதலாமா?
எனக்கு கவலையாகவும் பயமாகவும் இருக்கிறது. என்று கூறியவாறே  காகிதத்தைச் சுக்கலாக கிழித்து குப்பைக் கூடையில் போட்டாள்.தாமரை நீ உன் அண்ணனிடம் என்னைத் தங்கையாக ஏற்றுக் கொள்ளச் சொல்.என் சூழலில் நான் படித்து பட்டம் வாங்கி என் காலில் நான் நிற்கும் தகுதியை அடைய வேண்டும். இப்படிக் கவனச்சிதறல் ஏற்பட்டால் குறிக்கோளில் வெற்றி அடைய முடியாது.
இந்த தங்கையின் முன்னேற்றத்திற்கு உதவி புரியச் சொல் அண்ணன் என்னைப் போல் தான் உன்னையும் தங்கையாக மதிக்கிறார்.உனக்கு கதைப் புத்தகமெல்லாம் தந்து உதவுகிறாளே நல்ல பெண் என்று சொன்னான். நீ உன் அண்ணனிடம் என் கருத்தையெல்லாம் எடுத்துக் கூறி இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள் என்றார்.
               அதெல்லாம் எனக்குத் தெரியாது நான் என் அண்ணனை எவ்வளவு நம்பினேன்இ அவன் இப்படிச் செய்திருக்கிறானே.அவனிடம் பேசவே எனக்கு அவமானமாக இருக்கிறது. வேண்டுமானால் உன் கருத்தை நீயும் எழுதித் தா நான் அவனிடம் கொடுத்து விடுகிறேன்;. என்றாள் தாமரை.
மல்லிகையும் அன்புள்ள அண்ணா என்று தொடங்கி தன் கருத்தை எழுதி இவன் அன்புத் தங்கை என்று கையெழுத்திட்டாள். படித்து விட்டுக் கடிதத்தை கிழித்து விடுங்கள் என்று எழுதியிருந்தாள். தாமரையிடமும் படித்துவிட்டுக் கடிதத்தை கிழித்து விடச் சொல் என்று கூறினார் மல்லிகை.

Advertisement