Advertisement

(2)
               மல்லிகை இங்கே வாம்மா என்ற குரலுக்குப் பவ்யமாய் வந்து நின்றாள்.
               தவாவுக்கு இன்னும் பதினைந்து நாட்கள்தானே விடுமுறை இருக்கிறது. அவனுடன் உன்னையும் அழைத்துச் செல்வான். உனக்கு விசாஇ பாஸ்போர்ட் எல்லாம் வாங்குவதற்கு அலைய வேண்டியதிருக்கும்.
               மணி எட்டு ஆகிறது. துரை இன்னும் எழுந்திருக்கவில்லை. அவனை எழுப்பிவிட்டு இருவரும் சாப்பிட்டு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நாளை மறுவீடு செல்லவேண்டும். உன் அண்ணன் உங்களை அழைத்துச் செல்ல வருவார். நேற்று ஓடிஇ ஆடி அலைந்ததில் அலுப்பாக இருக்கிறது. நான் சற்று ஓய்வெடுக்கிறேன் என்று பெட்ரூமுக்குள் சென்றுவிட்டாள்.
               மல்லிகை தவா படுத்திருந்த பெட்ரூமுக்குள் வந்தாள்.
               சோம்பல் முறித்து கைகால்களை ஆட்டி படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தான் தவா.
               மல்லிகையைப் பார்த்துக் குறும்புடன் சிரித்தான். என்னங்க இன்னும் எழுந்திருக்கவில்லை. எனக்கு ரொம்பப் பசிக்குது. உங்களுக்குப் பசிக்கலையா? நீங்கள் எழுந்து குளித்து எப்பொழுது சாப்பிட நான் எங்கள் வீட்டில் எட்டு மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிடுவேன் தெரியுமா செல்லமாகச் சிணுங்கினாள்.
               என் கண்ணுல்ல செல்லம் அழாதம்மா. நான் ஒரு சோம்பேறி. நான் ரெடியாவதற்குள் நேற்று ராத்திரி வைத்த பழங்கள் பட்சணங்களில் உனக்குப் பிடித்ததை மேய்ந்துகொள். நேற்று ஒன்றுமே சாப்பிடவில்லையல்லவா. எனக்கும் பசிக்கிறது. இன்று ஒரு நாள் மட்டும் பல்தேய்க்காமல் உன்னுடன் சேர்த்து நானும் இதில் மேயட்டுமா என்று கேட்டபடி சாப்பிடத் துவங்கினான்.
               உனக்கு எது பிடிக்கும் எனக்கு இனிப்புத்தான் பிடிக்கும் இப்படிப் பேசியபடியே சாப்பிட்டார்கள்.
               மாதவம் செய்து பெற்ற பிள்ளைக்கு மாதவன் என்று பெயரிட்டிருக்கிறார்கள். தவா என்று அழைக்கிறார்கள். நான் உங்களை எப்படி அழைப்பது என்றாள் மல்லிகை.
               என்னங்கஇ ஏங்க என்று அழைப்பதுதான் இந்த பட்டிக்காட்டுப் பைங்கிளிக்குப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். கேலிப்பேசி சீண்டாதீங்கஇ சொல்லுங்க மாது என்றால் பெண்ணாகிவிடுவீர்கள் மது என்று அழைக்கவா என்று குழைந்தாள். உனக்கு விருப்பமானால் அப்படியே அழைக்கலாம் என்றான்.
               நான் உன்னை மல்லிகை என்று நீட்டி முழக்கமுடியாது. நீ மல்லிகை மலரிலுள்ள தேன்தான் எனக்கு. எனவேஇ ஹனி என்று தான் அழைப்பேன். மதுவும் தேனுமு; ஒன்றுதானே நாம் பெயரிலும் ஒன்றாகக் கலந்துவிட்டோம் சரிதானே ஹனி என்றான் மாதவன்.
               நீங்கள் சிறந்த புத்திக் கூர்மை உடையவர். இப்படி விளக்கம் எனக்கெல்லாம் தெரியாது. நீங்கள் சொல்வது சரிதான். நீங்கள் என் மது நான் உங்கள் ஹனி. நான் தமிழ். நீங்கள் ஆங்கிலம் என்றாள் மல்லிகை.
               ஆமாம்இ என்னைச் சிங்கப்பூர் கூட்டிச் செல்கிறீர்களாமே. உண்மையா. அங்கு எல்லோரும் ஆங்கிலத்தால்தான் பேசுவார்களாமே. நான் எப்படி ஆங்கிலத்தில் பேசுவேன்.
               அதுவா இப்படித்தான் என்று அவளின் செம பவள வாயினைத் தொட்டுக் காட்டினான். வாய்வழியேதான பேச வேண்டும் அதைத்தான் சொன்னேன்.
               ராமர் இருக்கும் இடம்தானே சீதைக்கு அயோத்தி என்று நினைத்தேன். மாமியார் மெச்சிய மருமகளாய் சமைத்துப் போட்டுஇ இந்தப் பசுமை மாநகர் பாராட்ட குடித்தனம் பண்ணவா நினைத்தேன்.
               ஹனியே என்னை வாட்டி விடாதம்மா. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க வேண்டும். இருவரும் டவுனுக்குச் சென்று விசா எடுப்பதற்கு ஆவண செய்ய வேண்டும். இன்றே முயன்றால்தான் புறப்படும்பொழுது எல்லாம் ரெடியாக இருக்கும். உன்னுடைய சர்டிபிக்கட்ஸ் எல்லாம் பாதுகாப்பாய் வைத்திருக்கிறாயா? இது இனி எதற்கு என்று குப்பையில் கிழித்து போட்டு விட்டாயா என்று கிண்டலாகக் கேட்டான் மாதவன்.
               உங்களுக்கு எல்லாம் விளையாட்டுதான். சர்டிபிகேட்ஸை யாராவது கிழிப்பார்களா? அந்த அளவுக்கு தலையில் மசாலா இல்லாமல் இருப்பேனா. அவையெல்லாம் பத்திரமாக எங்கள் வீட்டு பீரோவில் இருக்கிறது என்றாள் மல்லிகை.
               வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்களுக்கு விசா மற்றும் பாஸ்போர்ட் வழங்குவதற்கு ஏஜென்ஸிகள் உள்ளன. அதில் தூத்துக்குடியில் உள்ள பொன்சிங் ஏஜென்ஸி சிறப்பாக இயங்கி வருவதை அறிந்தான் மாதவன். அங்கு சென்றான். தானும தன் துணைவியும் சிங்கப்பூர் செல்வதற்கு விசாவிற்கு விண்ணப்பித்தான். அவர்கள் கேட்ட ஆவணங்கள் அனைத்தையும் இரண்டு நாட்களில் சேகரித்து வருவதாகக் கூறி விடைபெற்றான்.
               மறுவீடு விருந்திற்குச் சென்றிருந்தபொழுது சிங்கப்பூர் செல்வது பற்றித்தான் பேசப்பட்டது.
               மல்லிகையின் தாயார் மருதாணி அம்மாள் ஏண்டி மொழி தெரியாத நாட்டில் போய் பேந்த பேந்த விழிக்காதே. மருமகன் மட்டும் வேலைக்குச் செல்லட்டும். இரண்டு மாதத்திற்கொருமுறை வந்து செல்லவேண்டியதுதானே. நீ மாமியார் வீட்டில் இருந்து அவர்களைக் கவனித்துக் கொள்வது தானே கடமை.
               நீ பக்கத்து ஊர்pல் இருந்தால் நாங்களும் அடிக்கடி வந்து பார்த்துக் கொள்வோம். அதை விட்டு கண்காணாத இடத்திற்குச் செல்கிறேன் என்கிறாய். உன்னைப் பார்க்காமல் எப்படி இருக்கமுடியும் என்றார்.
               அம்மா பத்தாம் பசலி மாதிரி பேசாதீர்கள். திருமணம் ஆனால் மனைவி கணவனுடன்தான் இருக்கவேண்டும். மேலும்இ விஞ்ஞான யுகத்தில் உலகம் சுருங்கி விட்டதம்மா. எந்த இடத்திற்கு யாரும் எப்பொழுது வேண்டுமானாலும் செல்லலாம்.
               தொடர் வண்டியில் நாம் சென்னை செல்லும் நேர அளவிற்கு முன்னதாகவே விமானத்தில் சிங்கப்பூர் சென்றுவிடலாம். தினமும் தொலைபேசியில் பேசிக்கொள்ளலாம். அவர் என்னருகில் இருக்கும்பொழுது எனக்கு எந்தக் குறை வரப்போகிறது.
               மேலும்இ உங்கள் பெண் படிப்பறிவில்லா பதறா என்று நானும் சமாளித்துக் கொள்வேன். நீங்கள் கவலையே படாதீர்கள் என்றாள் மல்லிகை.
               மருதாணிக்குத்தான் மனம் சரியே இல்லைஇ சஞ்சலப்பட்டுக்கொண்டே இருந்தது.
               திருவனந்தபுரம் வரை மாதவன் காரில் பயணித்துஇ அங்கிருந்து விமானத்தில் சிங்கப்பூர் செல்ல ஏற்பாடாயிருந்தது.
               குறிப்பிட்ட நாளில் தேவைப்பட்ட பொருட்களுடன் இரு குடும்பத்தாரும் மாதவனுடைய சன்ட்ரோம் காரில் பயணம் செய்து திருவனந்தபுரம் வந்தார்கள்.
               வழிநெடுகிலும் மாதவன் இருவீட்டாருக்கும் ஆறுதல் கூறிவந்தான். தான் தன் கண்மணியாம் மல்லிகையை கவனமுடன் பார்த்துக் கொள்வேன். தமிழ் குடும்பங்கள் வாழும் குடியிருப்பில்தான் கம்பெனி எனக்கு ஒரு ப்ளாட் தந்திருக்கிறது. உணவுஇ உடைஇ மொழி எந்தப் பிரச்சினையுமின்றி நாங்கள் சந்தோசமாக இருப்போம் என்றான்.
               இருதரப்பு பெற்றோரும் அடிக்கடி போன் பண்ணுங்கள். உடம்மைப் பேணிக் கொள்ளுங்கள் என்று கூறி விடைபெற்றனர்.
               மாதவனும் மல்லிகையும் எல்லாம் நிறைவடைந்து விமானத்தில் ஏறினர். முதல் விமானப் பயணம் என்பதால் சற்றுத் திகிலும்இ திகைப்பும் அடைந்தாள் மல்லிகை சமாளித்து இயல்பானாள்.
               புதுமணத் தம்பதிகளை நண்பர்கள் குழாம் இசை முழங்க இனிதே வரவேற்றது.
               தம்பதிகளுக்கென ஏற்பாடு செய்திருந்த வீட்டை தோரணங்களால் அலங்கரித்து புதுமனை புகச் செய்தனர். விருந்து உபசாரங்கள் சிறப்பாக நடைபெற்றது.
               இரவில் இருவரும் தனித்து விடப்படடனர். ஹனி தேன்நிலவு என்று எல்லோரும் சொல்வரே. நாம் நம் தேனிலாவிற்கு எங்கு செல்லலாம்.
               என்ன மது மறந்துவிட்டீர்களா? இந்தச் சிங்கப்பூர்தான் நம் தேனிலவுஇ வளர் நிலவு மனநிலவு எல்லாம். தனிமையில் இயற்கையோடு இணைந்து அனுபவிப்பது தானே தேன் நிலவு.
               இங்கு நாம் தனியாகத்தானே இருக்கிறோம். இந்தச் சிங்கப்பூரின் நேர்த்தியைப் புத்தகத்தில் தான் படித்திருக்கிறேன். நேரில் பார்;த்தபிறகல்லவா புரிகிறது. இது பூலோக சவுர்க்கம் என்று. தேனிலவிற்கென தனியிடம் வேண்டுமா என்ன கேட்டவாறே மாதவன் மார்பில் சாய்ந்தாள்.
               நாளைக்கு நாம் ஜெலானி ஸ்டுடியோ செல்கிறோம் என்றான் மாதவன். எதற்கு திருமணத்தின் போதுதானே அலுக்கஇ நலுங்க புகைப்படம்இ வீடியோ என்று நாள்கணக்கில் எடுத்துத் தள்ளினார்கள். இன்னுமா என்றாள் ஹனி.
               அது வேறுஇ இது வேறு நாளை சென்றுதான் வருவோமே.
               நீங்கள் அலுவலகம் செல்ல வேண்டாமா? சென்று வந்தபின்பு மாலையில் செல்ல வேண்டுமா மது. நாளை உங்களுக்குப் பிடித்ததைச் சமைக்கிறேன். உண்டுகளித்துச் செல்லலாம் என்றாள் ஹனி.
               ரொம்பத்தான் கரிசனம் வழியுது. அம்மோவ் இன்னமும் நான்கு நாட்கள் அய்யாவுக்கு விடுமுறைதான். சிங்கப்பூரை வலம் வருவோம்.
               என்ன மது காலை எட்டுமணிக்கே ஸ்டுடியோ வந்துவிட்டோம். மாலை ஐந்து மணியாகிறது. இன்னும் வீட்டிற்குக் கிளம்பும் வழியைக் காணோம்.
               ஏதோ இரண்டு புகைப்படம் எடுப்பீர்கள் என்று நினைத்தால் ஒரு குட்டிக்கதைக்கான ஷ_ட்டிங்கே நடத்திவிட்டார்கள்.
               என் அம்மா நான் கல்லூரி படிப்பிற்கு வந்த பின்புதான் நைட்டி போடுவதற்கே அனுமதித்தார்கள். அதுவும் நைட்டியோடு வெளியில் வந்து விடக்கூடாது என்ற கட்டளையுடன் இங்கானால் சுடிதார் நீச்சல் உடைஇ மினி ஸ்கர்ட்இ ராஜாராணி ஆடைஇ சிங்கப்பூரின் பாரம்பரிய உடை என்று எனக்கும் உங்களுக்கும் விதஇ விதமான ஆடை அலங்காரம் பண்ணி ஒரு ஆல்பம் தயாரித்துவிட்டர்கள். இது நாமா என்று வியக்கும்படி உள்ளது. சினிமா சூட்டிங் பார்க்கவேண்டும் என்று எப்பொழுதோ நினைத்தது உண்டு. இந்தச் சிங்கப்பூர் ஸ்டுடியோ நம்மையே நடிகர்களாக்கி சூட்டிங் நடத்திவிட்டதே.
               மது இந்த ஆல்பத்தையெல்லாம் எங்கள் வீட்டில் உள்ளவர்கள் கண்ணில் காட்டிவிடக்கூடாது. கண்ணில் காட்டிவிடக்கூடாது. கண்ணில் பட்டது என்றால் என்னை ஒரு கதைப் பண்ணிவிடுவார்கள்.
               அப்படியா கண்மணி என் அப்பாஇ அம்மாவிடம் காண்பிப்பதற்காகத்தானே இந்த ஏற்பாடே. என்ன செய்யலாம். நீயே சொல் என்றான் மாதவன்.
               அத்தைஇ மாமா ஓரளவுக்குப் புரிந்துகொண்டு ரசிக்கத்தான் செய்வார்கள். நாம் ஊருக்குச் செல்லும்பொழுது அவர்களுக்கு மட்டும் காண்பிக்கலாம்.
               நேற்று என் அம்மாவும் போனில் பேசினார்கள். அத்தைஇ மாமாவும் பேசினார்கள். என்ன கேட்டார்கள் தெரியுமா?
               சொன்னால்தானே தெரியும். உலக மகா அதிசயமாக என்ன பேசியிருப்பார்கள். நல்லாச் சாப்பிடுங்கள்இ தூங்குங்கள்இ உடம்பைப் பார்த்துக்கோங்கஇ அப்படித்தானே.
               ஊகூம். அதுதான் இல்லை. மல்லிகை மாதம் மூன்று ஆகிவிட்டதே. ஏதும் விசேஷம் உண்டா என்று கேட்டார்கள். என்ன விசேஷம் நாங்கள் சந்தோசமா இருக்கிறோம் என்றேன். சந்தோசம் சரிதான் எங்களுக்குச் சந்தோசம் தரும் செய்தியை விரைவில் சொல் என்றார்கள்.
               ஓகோ அப்படியா நம் சந்தோசம அவர்களுக்குச் சந்தோசம் இல்லையா?
               நாட்டுக்குத் தேவை சேவை என்றால் வீட்டுக்குத் தேவை வாரிசு என்பார்கள்.
               எனக்கும் குழந்தை என்றால் கொள்ளைப் பிரியம்தான். ஆனால் குழந்தை வந்துவிட்டால் என் ஹனியைத் திகட்டத் திகட்டப் பருக முடியாது. குழந்தை நலனில் அக்கறை காட்ட வேண்டும். ஆரோக்யமான குழந்தையே ஆற்றல் மிக்க குழந்தையாய் இருக்கும். நாட்டுக்கும்இ வீட்டக்கும் தொண்டாற்றி நன்மையை உருவாக்கும்.
               ஒரு வருடம் ஒரே வருடம் ஜாலியாக இருப்போம். பின்பு அந்த பொறுப்பு மிக்க செயலில் ஈடுபடுவோம் என்றான் மாதவன்.
               எப்பொழுது நாம் ஊருக்கும் போவோம். வீட்டில் உள்ளவர்களைப் பார்க்க ஆசையாய் உள்ளதே என்றாள் மல்லிகை.
               என்னம்மா சொன்னாய். நான்தான் உன் வீட்டுக்காரன்மா. என்னில் எல்லோரையும் நீ காணலம். அம்மணியைக் கைப்பிடிக்கவென்று அத்தனை விடுப்புகளையும் எடுத்தாகிவிட்டது. இனி நமது திருமண ஓராண்டு நிறைவுநாள் வரும்பொழுதுதான் விடுமுறை எடுக்கமுடியும். ஊருக்கும சென்று வரலாம்.
               அதுவரை இங்கு தேனிலவு கொண்டாட்டம்தான் என்றான் மாதவன்.
               தான் எதுவொ பெரிய நன்மை செய்திருக்க வேண்டும். அதனால்தான் இத்தனை பாசமிக்க பொறுப்புள்ள அன்பான மது தனக்கு கணவனாகக் கிடைத்திருக்கிறான். இந்தச் சொர்க்கம் தனக்கு நிலைக்க வேண்டுமே என்று மனதில் எண்ணிக் கொண்டாள் மல்லிகை.

Advertisement