Advertisement

               மனக்களிப்பில் சாலையைக் கவனித்தாளில்லை. என்னமாய் பதிலளிக்கிறாள். பாவி உன்னையும் உன் அண்ணனையும் தவிர யாருக்கும் தெரியாது என்கிறாளே. சிக்கலை உருவாக்கியது என் அண்ணன்தான் என்பதை ஊகித்து விடுவாளே. நான் வேறு என் அண்ணன் உன் கணவனின் நண்பன் என்று கூறி வந்து விட்டேனே.
               மல்;லிகையைச் சிலந்தி வலையில் சிக்க வைக்கிறேன் என நினைத்து நானே இடியாப்பச் சிக்கலில் மாட்டி விட்டாளே நினைத்தவாறே நடந்தாள். பாம் பாம் லாரி ஒலியையும் க்கீ-க்கீயையின் ஒலியும் காதில் விழாது நடந்தாள்.
               எதிர் எதிரே வந்த வாகனங்கள் அவளை விலக்கி தம்தம் வழியில் செல்ல முயற்சித்த வேளை கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கால் தூக்கி வீசப்பட்டாள் தாமரை.
               என்னவோ உரசியது போன்று  தெரிந்ததே என்ற சிந்தனையிலேயே சுய உணர்விழந்தாள்.
               கிராமம் என்பதால் கூட்டம் கூடி விட்டது. பரமசிவத்தின் கடை அருகிலேயே இருந்ததால் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டாள். அவசர சிகிச்சைபை; பிரிவில் சேர்க்கப்பட்டாள்.
               மகள் ஐசியு வார்டில் சுயநினைவின்றிக் கிடப்பதைப் பாhத்த கந்தசாமிக்கு நெஞ்சை வலிப்பது போல் தோன்றியது.
               தான் நோய்ப்பட்டதும் மகள் திருந்திவிட்டாள் என்று நினைத்தது தவறோ என்ன நடக்கிறது. இவள் அங்கு எதற்காகச் சென்றாள். அன்றே அந்தப் பிள்ளையிடம் மன்னிப்பு கேட்டு விடு. பாவப்பட்ட அந்தப் பெண்ணின் மேல் உனக்கு என்ன அப்படி வெறுப்பு. தானும் நன்றாக இருக்க வேண்டும் அடுத்தவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும் என்றேனே.
               அண்ணனும் தங்கையும் நான் சொல்லியது எதையும் கேட்கவில்லையோ மேலும் குழப்பத்தை உருவாக்கி வந்திருப்பாளோ. எப்படியிருந்தாலும் என் கண் முன்னால் என் கண்மனி இறந்து விடக்கூடாது. அவர் பிழைத்துக்கொள்ள வேண்டும். அவள் திருந்தி நல்லவளாக வெகு காலம் வாழ வேண்டும் என்று இறைவனிடம்  வேண்டினார்.
               தாமரைக்கு தலையில் நல்ல அடிஇ உயிருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அன்;கான்சியசாய் இருக்கிறாள். ஒரு வாரத்திலும் குணமாகலாம். மாதக்கணக்கிலும் ஆகலாம் சொல்ல முடியாது என்றாள் டாக்டர். தாமரையின் பிறந்த வீடும்இ புகுந்தவீடும் வருத்தத்திலும் குழப்பத்திலும் ஆழ்ந்திருந்தது.
               அவர்களின் எதிர்பார்ததலுக்கும் பரிகாரமாய் தாமரை கண்ணைத் திறந்தாள். சுற்றிலும் பார்வையைச் செலுத்திய அவள் யாரையும் தன் கணவனையும் கூட கண்டுகொள்ளவில்லை. மாறாக நான் ஒன்றும் செய்யலை. அவள்தான்இ அவள் நல்லவள் தான் இல்லை நான் நல்லவள்தான் நான் என்ன செய்தேன். அண்ணன்தான் காரணம். இல்லையில்லை நான்தான் காரணம். இல்லையில்லை நான்தான் காரணம் என்று எதுவும் தொடர்பில்லாமல் பேசினாள்.
               தந்தைதான் அருகில் வந்து என்னம்மா பேசுகிறாய். உனக்கு இந்த விபத்து எப்படி நடந்தது அங்கு ஏன் சென்றாய்? விபத்தா அவள் என்னைக் கொலை செய்து விட்டாள். நான் தான் அவள் நிம்மதியைத் தானே கொலை செய்தேன். அவள் என்னை எப்படி கொலை செய்யலாம். வாங்க எல்லோரும் கிளம்பிப் போய் தலைக்கனம் பிடித்த அவள் தலையை எடுப்போம் என்று சொல்லி ஆவேசமாக எழுந்தாள்.
               ஆத்திரப்படாதே ஒரு ஊசியைப் போட்டுட்டு வீட்டுக்குப் போயிடலாம். வீட்டில் போய் ஒய்வெடுத்தால் சரியாகிடும் என்றாள்இ தாய் கனகா. ஊசியா எதுக்கு உனக்குப் போடு. நான் சரியாய்த்தானே இருக்கிறேன். நல்லது சொன்னா உங்களுக்கெல்லாம் தெரியாது. இப்ப என்ன செய்யிறேன் பாரு என்று எழுந்தாள் தாமரை.
               மருத்துவர் வந்தார் உடல் நிலையைப் பொறுத்த அளவில் நன்கு குணம் கிடைத்து விட்டது. சம்பவ அதிர்ச்சியில் மனம் பேதலிக்கிறது. நீங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம்;. ஏதாவது மன அதிர்ச்சி ஏற்படும் பொழுது தானாகவே குணம் ஏற்பட்டு விட வாய்ப்பிருக்கிறது என்று சொல்லி விட்டார். டிஸ்ஐhர்ஐhகி வீட்டிற்கு கொண்டுவருகிற பாடாயிற்று.
               டாக்டர் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாமா கார்த்தீஸ்தான் கேட்டான். மனநல டாக்டரிடம் காட்டலாம். ஆனால் ஷாக் ட்ரீட்மென்;ட் எதுவும் தரப்பட்டால் முற்றிலும் குணமாகவும் செய்யலாம். முற்றிலும் மாறுபாடாக புத்தி தடம்புரண்டு விடவும் வாய்ப்பிருக்கிறது.
               எனக்கென்னவோ வீட்டில் வைத்து அணுசரனையாக நடத்தப்பட வேண்டும். விபத்துக்கு முந்திய நிகழ்ச்சிகளை அவளது கடந்த காலத்தை நினைவுக்கு கொண்டு வரக் கூடிய காசட் போன்றவற்றை போட்டுக் காட்டலாம்.
               உணவு கொடுத்ததுக் கொண்டே நீ முன்பு எப்படியிருந்தாய்இ உனக்கு என்னென்ன பதார்த்தம் பிடிக்கும் என்பனவற்றை கேட்டுக்கொண்டே இருந்தாலும்இ தூங்கும் நேரம் தவிர அவள் அருகில் இருந்து பழைய சம்பவங்கள் குறித்துப் பேசிக்கொண்டே இருந்தால் கூட தீடீரென்று பொறி தட்டினால் போல் நினைவலைகள் விழித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
               எனவே வீட்டில் பாதுகாப்பில் வைத்திருப்பது தான் நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது என்றார் டாக்டர். வீட்டில் அவளது அறையில் எப்பொழுதும் அண்ணன்இ அப்பாஇ அம்மா மாறி மாறி இருவர் பேசிக்கொண்டே இருந்தனர். தாமரையும் அவர்கள் பேச்சை செவி மடுக்காதுஇ அவளின் இஷ்டப்படி அவள் தானாகவே பேசிக்கொண்டே இருந்தாள்.
               குறிப்பு: உணவுஇஉடை தனது தேவையை யாருடைய உதவியும் இன்றி அனிச்சை செயல் போல தானே செய்துகொணடிருந்தாள்இ ஆனால் எந்நேரமும் பேச்சு நான் ஒன்றும் காரணம் அல்ல. அவள் மட்டும் தான் உசத்தியோ. அவதான் பேசினா நீ எங்க போற இன்னிக்கு பார்த்திருவம். இந்த வகையிலே பேச்சு நீடித்துக் கொண்டிருந்தது.
               கந்;தசாமி தாள முடியவில்லைஇ கடவுளே இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கவா எனக்கு உயிர் பிச்சைக் கொடுத்தாய். என்னை எடுத்துக் கொள். என் மகள் மனநிலையைச் சரிபடுத்தி அவளை நல்ல முறையில் வாழவையப்பா. கடவுள் எந்த மனிதனுக்கும் இந்த நிலைமை வரக் கூடாதப்பா. மகள் அருகில் இருக்கும்பொழுதெல்லாம் இப்படித்தான் வேண்டிக் கொண்டிருந்தார்.
               நாட்கள் நகர்ந்துஇ வாரங்கள் ஆயின. வாரங்கள் கடந்து மாதமாயிற்று. இரண்டு மாதம் ஆகிவிட்டது. தாமரையில் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. கந்தசாமி சொல்ல முடியாத அளவு மன வேதனை அடைந்தார். லேசாக நெஞ்சு வலிப்பது போலிருந்தது. கனகாம்பாள் நகர்ந்துவிட கார்த்தீஸ் வந்தமர்ந்தான். அவன் தோற்றமும் தூசு படிந்த நிழல் ஓவியம்போல் கண்ணில் பட்டது.
               எனக்கொன்னும் தெரியாது. கார்த்தீஸ் அண்ணன்தான் என்று நினைக்காவிட்டால் எல்லாம் சரியாய் இருந்திருக்கும். எல்லாம் அவன் தான் தூங்;கப் போறேன் தொப்பென்று விழுந்து குப்புற படுத்துக்கொண்டாள் தாமரை. கந்தசாமி உடல் குலுங்க அழுதார். என்னடா நடந்தது அவள் அண்ணன் என்ற சொல்லை எத்தனை முறைஇ எத்தனை வழியில் சொல்கிறாள். இப்பொழுதாவது உண்மை சொல் எதாவது செய்ய முடியுமா பார்ப்போம். நீ அந்தப் பையனிடம் மன்னிப்புக் கேட்டாயா? கேட்கவில்லையா சொல் என்றார் பரமசிவம்.
               அப்பா என்னை மன்னித்து விடுங்கள். நான் அவனிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. தங்கை என்னை மன்னிப்புக் கேட்கக்கூடாது என்று கூறிவிட்டாள். நடந்த  அனைத்;து நிகழ்வுகளையும் வரிசைக் கிரகமாகச் சொல்லி முடித்தான். இதையெல்லாம் அறியாத நான் கடிதத்தை கிழித்துக் கையோடு மறந்து விட்டேன்.
               ஆனால் படிக்க விரும்பிய மல்லிகை படிப்பை விடுத்துத் திருமணம்  செய்து கொண்டாள். ஆடம்பரமாகத்  திருமணம் செய்து கொண்டு உல்லாசமாக வலம் வந்தாள். மல்லிகையை ஏங்க வைக்க நினைத்த தாமரைக்கு வாழ்க்கை அமையவில்லை. வந்த மாப்பிள்ளையெல்லாம் பெண்ணை பிடிக்கவில்லை என்று சொல்ல வெறுப்படைந்தாள். அவனது சினம் மல்லிகையின் மேல் தாவியது.
               அவள் தான் தன்  வாழ்க்கையை கெடுத்தாள். அவள் தன் அண்ணனைக் காதலித்திருந்தால் தான் அவள் அண்ணனைக் காதலித்து மணம் செய்து சந்தோசமாயிருக்கலாம். இப்ப என் வாழ்க்கை ஊசலாடுகிறது. என் வாழ்வைக் கெடுத்த அவள் எப்படி நிம்மதியாக இருக்கலாம். இருக்கக்கூடாது. அவள் வாழ்விழந்து அலக்கழிய வேண்டும். அவள் கணவன் உனக்கு வகுப்புத் தோழன் என்கிறாயே அவனிடம் சென்று உன் மனைவி உத்தமி அல்லஇ அணில் கடித்த எச்சில் பழம். என் உயிருக்கு உயிரான காதலி என் வாழ்வைப் பறித்து விட்டாளே என்று கூறு.
               அதன் பின்னும் அவன் அவளுடன் மகிழ்வுடன் வாழ்ந்திடுவானா என்ன என்றாள். அந்த நேரம் எனக்கும் என் தங்கைக்கும் கூறியது சரியென்றே பட்டது. ஏனென்றால் படிக்க வேண்டும் என்றவள்இ அழகான படித்த பணமுள்ள மாப்பிள்ளை என்றதும் திருமணம் செய்துகொண்டாளே என்ற வெறுமை.
               அவன் தானாகவே என்னைப் பார்கக வந்த போது. நான் தங்கை கூறியது போல் அனைத்துக் கதைகளையும் அளந்து விட்டேன். அவன் முகம் பேயறைந்தது போல் ஆயிற்று. கூடுதலாக நான் மல்லிகையின் நினைவாகத் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்த விடுவேன். நீ அவளை மகிழ்ச்சியாக வைத்துக்கொள் என்றேன்.
               அதனால் அவன் திருமணமே செய்ய மாட்டேன் என்றவன் இரண்டு மாதத்தில் செய்து கொண்டதன் காரணம் என்ன என்று கேட்;டாள். அதற்குத் தான் எங்க அப்பாவிற்கு   ஹார்ட் அட்டாக் என் தங்கை என் காதலை என் தந்தையிடம் கூறி கண்டிப்பாகத் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து விட்டார்கள் என்று கூறினேன். அவன் மனம் உடைந்து விட்டதை உணர்ந்தேன்.
               விபத்திற்கு முந்திய நாள் மல்லிகை பிரசவத்திற்காகப் பிறந்த வீடு வந்திருப்பதாக நான் தாமரையிடம் கூறினேன். அவள் அன்று அம்மாவிற்குத் தெரியாமல் மல்லிகையை பார்க்க போவதாக என்னிடம் சொன்னாள். அங்கு போயிருப்பாள்.
               அங்கு போயிருப்பாள் என்னவெல்லாம் சொல்லி அவள் மனதை கூறு போட்டாளோ தெரியாது. தன் வினைத் தன்னைச் சுடும் என்பதால் மனம் பேதலித்துத் தவிக்கிறாள். அப்பா மல்லிகை ஒரளவு மனது தேறி படிப்பில் கவனம் செலுத்தலானாள். செல்போன் தேடுவாரற்றுக் கிடந்தது. மாமியாரின் வேண்டுகோளை ஏற்று மாதவன் ஒரு 2நாள் முன்னதாகவே வந்திருந்தான்.
               முருகேஷ் ஊருக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன் பிள்ளைப் பேறு விஷயத்தில் தகப்பனை விட தாய்மாமா தான் அதிகம் முக்கியத்துவம் பெறுகிறார். அண்ணா என் பிள்ளையைத் தாய்மாமா தான் முதலில் கையில் வாங்க வேண்டும் என்று கூறி டவல்இ கைலிஇ வாங்கி வைத்திருந்தாள். பிரசவ வலி ஏற்பட்டவுடன் தன் தாயிடம் சொல்லி அவற்றையெல்லாம் சேகரித்துக் கொண்டு மருத்துவமனை புறப்பட்டார்கள்.
               மாதவனும் மாமியாரும் வீட்டிலிருந்ததால் அவர்களும் உடன் சென்றனர். மாதவன் மல்லிகையின் வேதனையையும் பல்லைக் கடித்துச் சமாளிப்பதையும்இ தன்னைப் பார்ப்பதை தவிர்ப்பதையும் அறிந்தான். பிரசவ வலி என்பது எல்லாப் பெண்களுக்கும் பொது தானே. பிரசவம் ஆனவுடன் சாதாரணமாயிருப்பாள் என்று எண்ணினான். முருகேசனுக்கு போன் செய்து செய்திச் சொன்னான்.
               டாக்டரம்மா பார்த்துவிட்டு மிகவும் கிரிட்டிக்கல் பொஷிஷனாக உள்ளது. சற்று நேரம் பார்த்துவிட்டு அறுவை சிகிச்சைதான் செய்யவேண்டும்  என்றார்கள். சில மருந்துகளை எழுதிக் கொடுத்து உடன் வாங்கி வரச் சொல்லவும் மாதவன் ரிசீப்டை பெற்றுக் கொண்டு அவசரமாக வெளியில் வந்தான்.
               என் தங்கையின் வாழ்விற்காக யார் காலை வேண்டுமானாலும் பிடித்து மன்னிப்பு கேட்கத் தயார்தான். ஆனால் மல்லிகைதான் இங்கு இருக்கிறாள். அவள் சதிவலை பற்றி எதுவும் அறிய மாட்டாள். மாதவனிடமல்லவா மன்றாடி மன்னிப்புக் கேட்க வேண்டும். அவன் மனதைத்தானே நான் உடைத்தேன். அவன் தான் மல்லிகையை பதற வைத்திருப்பான் என்ன நடந்ததோ தெரியவில்லை.
               மாதவனைப் பார்க்க வேண்டும் என் பொய்யுரையை விட்டுவிட்டு மல்லிகையை வாழ வை என்று மன்றாடிக் கேட்க வேண்டும். என் தங்கiயின் நிலை எடுத்துரைக்க வேண்டும். இதற்கு கால அவகாசம் வேண்டுமே என்று கண்ணீர் வடியக் கூறி நின்றான்.
               செய்வதையெல்லாம் செய்து விட்டு நீலிக் கண்ணீரா அந்தப் பெண் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும். பிள்ளைத்தாச்சிப் பெண்னைப் பாடுபடுத்திய உங்களுக்கு பாவமன்னிப்பே கிடையாது. அவன் இனி உங்கள் சொல்லை கேட்க மாட்டான். நான் அந்தப் பையனை பார்க்க வேண்டும். இப்படி பட்ட பிள்ளைகளைப் பெற்ற நான் போகிற போக்கில் புண்ணியம் சேர்த்துக் கொள்ள அவனிடம் மன்றாடி அந்த அபலைப் பெண்ணின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் பெற வேண்டும்.
               அவன் வருவானா அவனைப் பார்ப்பேனா அதுவரை என் உயிர்தரிக்குமா கடவுளே பொறுக்க முடியவில்லையே என்று கதறி சாய்ந்தார். அவரை காரில் ஏற்றி மருத்துவமனை கொண்டு சென்றார்கள். தாமரை ஒன்றும் செய்யத் தெரியாமல் தேம்பித்தேம்பி அழுதாள். மாதவா என்ற குரல் கேட்டுத் திரும்பினான். கார்த்தீஷ் அவன் தந்தையை ஸ்டெச்சரில் வைத்துத் தள்ளிக்கொண்டு வந்தான் நர்ஸ்கள் குடும்பத்தினர் சூழ வந்து தவித்து நின்றனர். என்ன கார்த்திஸ் அப்பாவிற்கு என்ன மாதவன்  கேட்டான். பேச முடியாத நிலையிலும் கந்தசாமி தம்பி உன்னைக் காணாமாலே என் உயிர் பிரிந்துவிடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். உன்னிடம் ஒரு சில வார்த்தைகள் பேசியே ஆக வேண்டும். அது வரை என் உயிர் பிரியக்கூடாது என்றார்.
               அப்பா முதலில் சிகிச்சைக்குச் செல்வோம் அதன்பின் பேசிக்கொள்வோம் என்றான் மாதவன். இல்லை முதலில் பேசிவிடுவோம். இல்லையென்றால் ஒரு அபலைப் பெண்ணைக் காப்பாற்ற முடியாத கபோதியாய் என் உயிர்பிரிந்து விடும். தம்பி மாதவா இந்த உண்மையை நான் உன்னிடம் சொல்லாமலே போயிருந்தால் நீயும் வாழ்நாள் பூராவும் அவளை வதைத்திருப்பாய்.
               அவள் நல்லவள் உண்மையானவள் என்பதால் உன்னிடம் பேச கடவுள் எனக்கு வாய்ப்புத் தந்திருக்கிறார். என் மகள் செய்த சதி அவளே புத்தித்  தடுமாறி நிற்கிறாள். என் மகன் கசடன் கபட நாடகமாடியிருக்கிறான். இவனை அந்தப் பெண் ஒரு போதும் விரும்பியதில்லை.
               இந்த அற்பன் விரும்பியதாகக் கூறியதற்கு என் தோழியின் அண்ணன் எனக்கும் அண்ணன் தான் என்று கூறிய கபடமற்ற குணம் படைத்தவள் மல்லிகை.
தம்பி மாதவா என் பிள்ளைகள்தான் அடுத்தவர் துன்பத்தைக் கண்டு ரசிக்கும் கேவலமானவர்கள் என்றால் நீ எவ்வளவு நல்லவன். நீ இவன் சொன்னதை நம்பலாமா. இவன் பள்ளிப்பருவத்திலேயே தேர்வுத்தாள் எண்களை மாற்றியவன் தானே. இவன் சொல்லியதை நம்பி சிறுவயதிலிருந்தே மனதோடு உறவாடி விரும்பிய பெண்னிடம் பாராமுகம் காட்டியிருக்கிறாயேஇ அதுவும் ஒரு பிள்ளைத்தாச்சிப் பெண்ணிடம்.
               இந்தப் பத்துமாதப் பந்தமும் அவள் என்ன பாடுபட்டிருப்பாள்இ அவள் மனவேதனை உன்பிள்ளையைப் பாதித்திருக்காதா சுகப்பிரசவத்திற்கே உலை வைத்;து விட்டாயே. என் மனைவி தானும் தன் பிள்ளைகள் மட்டுமே வாழவேண்டும். வானத்திலிருந்து பொத்தென்று குதித்த நபர்கள் மட்டும் நன்றாயிருக்க வேண்டும். அவர்கள் கண் முன்னால் யாரும் நல்லார்க்கக் கூடாது என்ற எண்ணமுடையவர்கள்.
               என் மகள் அவள் நெருங்கிய தோழி நன்றாயிருக்க விரும்புவாளா. அவள் அவனைத் தூன்டி அவன் உன் அனுபவித்தாளோ. போ உடனே சென்று முழு மனநிறைவோடு வாழ்க்கையைத் தொடர்வாய் என்றார் பரமசிவம்.
               கேவிக் கேவி அழுது கொண்டிருந்த தாமரை அப்பா என்னை மன்னித்து விடுங்கள். என் உள்ளத்தில் எழுந்த பொறாமை உணர்ச்சியால் இப்படிச் செய்து விட்டேன். நான் என் கணவருடன் மனமொத்து வாழ்ந்து காட்டுகிறேன். எங்களை விட்டுச் சென்று விடாதீர்கள் என்று கதறினாள்.
               கார்த்திஸ் செய்வதறியாது விழித்து நிற்க அப்பா எனக்கு மறுவாழ்வு அளித்த நீங்கள் சாகக் கூடாது உங்களைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்று ஐ.சி.யூ வார்டுக்குள் ஸ்டெச்சரை தள்ளிச் சென்றான் மாதவன்.
               அவன் சொன்னான் என்றால் அதை அப்படியே நம்பி விடுவதா உனக்கு மட்டும் அவளை ஏக மனதாக விரும்பும் யோக்யதை உண்டு போலும். அவள் யாரையும் விரும்பியிருக்கக்கூடாது என்று நீ நினைக்கலாமா சரி நினைக்க வேண்டாம்.
               ஓராண்டு அவளிடம் வாழ்ந்திருக்கிறாயல்லவா அவளைப் பற்றி நீ அறிந்தது என்ன. என் மனைவியைப் பற்றி எனக்குத் தெரியும். நீ ஒன்றும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று முகத்தில் அடித்தால் போல் கேட்டிருக்க வேண்டும். அப்ப நீயும்;;; மனிதன் இல்லை நேரடியாக மனைவியிடம் சென்று என் நண்பன் இப்படி கூறுகிறானே என்ன நடந்தது என்று கேட்டிருக்க  வேண்டும். அவள் நியாயத்தை கேட்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை விட்டு அவள் நம்பிக்கையற்று நீ ஒரு ஆண் என்ற மிதப்பில் அவளைப் பார்க்காமலேஇ பேசாமலே வதம் செய்வது எந்த வகையில் நியாயம்இ சம தர்மம் என்று கூறிக்கொண்டே பெண்களைச் சோதிக்கிறோம்.
               அவளே இது தான் நடந்தது என்னை மன்னித்து விடுங்கள் என்று கேட்க வேண்டியது தானே. அவரிடம் தப்பு இருக்கிறது என்று நாமே கற்பனை வேறு செய்து கொள்வது. நம் மீது தப்பில்லை. நாம் ஏன் சுய தம்பட்டம் அடிக்கவேண்டும் என்று அவள் நினைக்கக் கூடாது போலும்.
               மல்லிகையைத் தான் இப்படி ட்ரீட் பண்ணியது தவறோ என்று எண்ணியவாறு பொது ஹாலுக்கு வந்தான்.
               மருந்து வாங்கிக் கொடுத்து விட்டுச் சென்ற மருமகனைக் காணவில்லையே என்று மருதாணிக் கூறிக் கொண்டிருக்க இந்தாங்க பேரன் பிறந்திருக்கிறான் என்;;;;;;று நர்ஸ் குழந்தையுடன் வந்தாள்.
               வாஇ வா முருகேஷ் உன் தங்கை விருப்பப்படியே உன் மருமகனை நீயே முதலில் வாங்கு என்றார் மருதாணி.
               ஏய் குட்டிச் செல்லம் என் பெண்னை என்னப் பாடு படுத்திவிட்டாய். மருதாணி செல்லமாகக் கொஞ்சினாள். முருகேஷ் எங்கே மாப்பிள்ளையைக் காணோம் என்று சொல்லவும் இதோ  வந்துக்கிட்டே இருக்கேன் என்றான் மாதவன்.
               அத்தை என் ஹனி எப்படியிருக்காஇ இந்தச் சுட்டிப்பயல் என் ஹனியை  வதைத்தெடுத்து வெளியே வந்துவிட்டான். ஒளி பிரகாசிக்கும் மின்மினிக் கண்களுடைய குழந்தையைப் பார்த்தான். இனி எனக்கும் ஹனிக்கும் ஒளிமயமான வாழ்வுதான் என்று மகனைக் கையில் வாங்கினான் மாதவன். மகிழம்பூ அம்மாவும் பேரனைப் பார்த்து பரவசம் கொண்டாள். மகனை தூக்கிக் கொண்டு மனைவியிடம் சென்று அவளை அணைத்துக் கொண்டு மனநிறைவோடு உறவைத் தொடர்வோம் என்று முத்தமொன்று பரிசளித்தான்.
சுபம்

Advertisement