Advertisement

               டேய் மாதவா மல்லிகை இங்கிருப்பதால் அடிக்கடி வந்து செல் லீவு கிடைக்கவில்லை. முக்கியமான வேலை என்றெல்லாம் சொல்லாதே.
               நான்கைந்து நாட்களாவது விடுமுறை எடுத்து வந்துவிடு. ஏழு மாத்தில் வளைகாப்பு விழா நடத்தலாமா ஒன்பது மாதத்தில் வைத்துக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
               ஏழு மாதத்தில் என்றால் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்து விடு. ஒன்பது மாதத்தில் என்றால் இடையில் ஒரு தடைவ வந்து செல் என்ன நான் சொன்னது காதில் விழுந்ததா என்று மகனிடம் கேட்டாள் மகிழம்பூ.
               சரியம்மா உங்கள் விருப்பப்படியே நடக்கட்டும் என்று கூறிய படியே மல்லிகையைப் பற்றி புன்முறுவலுடன் நினைத்தான்.
               மாதவனின் மொபைல் செல்லமாகச் சிணுங்கியது. அலோ என்ற குரலுக்கு என்ன மாப்பிள்ளை சார் நம்மைப் பற்றி நினைவேயில்லையா அல்லது மாப்பிளை முறுக்கா.
               என் தங்கையின் மீது கொண்ட மோகம் நண்பனையே நினைக்கத் தோன்றவில்லையா.
               மாப்பிளை சாருக்கு அப்பா பிரமோஷன் கிடைச்சிருக்காமே என்னிடம் இந்தச் சந்தோஷச் செய்தியை ஏன் சொல்லவில்லை.
               எங்கள் வீட்டிலும்இ என்னிடமும் போன் இல்லையென்பதால் அப்பா மடல் மூலம் இந்த மகிழ்ச்சி செய்தியை இன்று தான் எனக்குத் தெரிவித்தார்கள்.
               இப்பொழுது தான் ஸெல்போன் வாங்கி ஹார்டு போட்டேன். முதன்முதல் என் போன் ஹால் பண்ணியது உன் எண்ணைத்தான் நம்பரைச் சொல்கிறேன். எழுதிக் கொள் நான் முருகேஷ்.
               எழுதியாயிற்று சொல் எப்படியிருக்க என்றான் மாதவன் ஏன் நானே பேசிக் கொண்டிருக்க வேண்டும். நீ கேட்க மட்டும்தான் செய்வாயா மாதவா என் மருமகனோஇ மருகளோ பிறப்பதற்குள் எங்கள் சிறிய வீட்டைப் பெரிய வீடாகக் கட்ட வேண்டும் என்று நினைத்தேன்.
               என் தங்கைக்கு இமாலய வாழ்வு கொடுத்து எனக்கு வாழவும் வழிகாட்டிய உன் குழந்தை எங்கள் புதிய வீட்டில் பிறக்க வேண்டும் என்று நினைத்தேன்.
               நீங்களிருவரும் துரிதகதியில் இயங்கிவிட்டீர்கள். வீட்டை அவசரப்பட்டு கட்டக் கூடாது. நிதானித்து கட்ட வேண்டும் என்பதால் வீடு கட்டி முடிப்பதற்கு இரண்டு ஆண்டுகள் கூட ஆகலாம் உன் பிள்ளை எங்கள் பழைய வீட்டிலேயே பிறக்கட்டும் நீ ஊருக்குச் சென்று வந்தாயா என் தங்கை எப்படி இருக்கிறாள். இந்த அண்ணனின் நினைவு தங்களது பாசப்பிணைப்பால் அறுத்து விட்டது. போல முன்பு மாதமொரு மடல் எழுதும் அவள் இப்பொழுது நான்கு மாதங்களாக மடலே எழுதவில்லை என்றான் முருகேஷ்
               மடல் ஏன் எழுதவில்லை என்று உன் தங்கையிடம் தான் கேட்க வேண்டும் இந்த அண்ணன் தங்கை விவகாரமெல்லாம் நமக்குத் தெரியாதப்பா என்றான் மாதவன்.
               டேய் மாப்பிள்ளை தங்கையின் வளை காப்புக்கு எப்படியும் வந்துவிட வேண்டும் என்று அப்பா எழுதியருக்கிறார்கள் நீயும் வருவாயல்லவா நாம் உங்கள் திருமணத்தோடு பார்த்துப் பேசிக் கொண்டது தான். ஒன்றே கால் வருடம் ஆகிவிட்டது. இருவரும் சந்திப்போம் பிறகு பேசிக்கொள்வோமா என்று கூறி ஸெல்லை நிறுத்தினான் முருகேன்
               ஒளிவு மறைவு இல்லா கள்ளங்கபடமற்ற இந்தப் பேச்சால் தானே என் மனதை ஈர்த்தாய் உன் தங்கை மீது ஈடுபாடு கொள்ளவைத்தது.
               உன் தங்கை உன் போன்று இல்லையே ஏன் நான் வாங்கி வந்த வரம் இவ்வளவு தானா வேலையில் மனம் செலுத்துவதற்கு முயன்றான் முடியவில்லை. கீரல் விழுந்த ரெக்கார்டு போல் சுற்றிச் சுற்றி அந்த வட்டத்திலே தான் வந்து நின்றது.
               கவனச் சிதறலினால் விபரீதம் ஏதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்றெண்ணி தலைவலிக்கிறது என்று கூறி அனுமதி விடுப்புப் பெற்றுக் கொண்டு வெளியில் வந்தான்.
               பளிங்கு போன்ற ரோட்டில் காலாற நடந்தான் மனது இலகுவாகியது. தனது அறைக்குச் சென்றான் மாதவன்.
               ஒவ்வொரு இடமும் அவர்கள் முத்தம் பரிமாறிக் கொண்டது. ஒண்டிக்கொண்டது. இன்னும் என்னவோ நிகழ்வுகளை நினைவுறுத்தியது.
               மனதில் கள்ளமுள்ள ஒருத்தியால் எப்படி வெளிப்படையாக நடந்து கொள்ள முடிந்தது. ஒரு வருடம் வாழ்த்த இன்ப வாழ்வின் தவறுகள் மனதில் நிழல் படமாக ஓடியது. உண்மையிலேயே மல்லிகைத் தவறு எதுவும் செய்திருக்க மாட்டாளோ.
               அவளைச் சுற்றி சூழ்ச்சி வலைபின்னல் கார்த்திசைப் பற்றி முருகேனிடமே கேட்டுவிடுவோமா என்று ஸெல்லைக் கையில் எடுத்தான் லெஸ்; தானாகவே சிணுங்கியது. அம்மா என்றவனின் காதில் அம்மாவின் குரல்; அமுதமாக இறங்கியது.
               மாதவா ஏழாவது மாதத்திலேயே வளைகாப்பு விழா நடத்தி விடுங்கள் அத்தை என்று சொல்கிறாள் மல்லிகை. அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி வளர்பிறை நாளில் வைத்துக் கொள்ளலாம் என்று சோதிடர் சொன்னார்.
               மல்லிகையும் உன் அருகாமையை மிகவும் விரும்புகிறாள் என்று நினைக்கிறேன். நீ எப்படியாவது வந்துவிடு இப்பொழுதே விடுமுறைக்குச்; சொல்லி வைத்து விடு. உன் உடம்பைப் பார்த்துக் கொள் வைத்து விடுகிறேன் என்று கூறி வைத்து வி;ட்டாள் மகிழம்பூ.
               மாமியார் பேசியதைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள் மல்லிகை மல்லிகையிடமும் பெயரளவில் ஒரு ஸெல் இருந்தது. தன் மனைவி தன்னிடம் அந்தரங்கமாகப் பேசிக் கொள்வதற்கென்று வாங்கிக் கொடுத்திருந்தான் மாதவன். எந்த நேரத்தில் வாங்கினானோ அந்தஸெல்லில் கணவனுடன் ஒரு தடவை கூடப் பேசியது இல்லை.
               வெறுமனே ஸெல்லைக் காதுக்குக் கொடுத்து தான் எப்படியெல்லாம் பேசி மகிழ்ந்திருக்க நினைத்தாளோ அப்படியெல்லாம் அவளே கேள்வி கேட்டும் எதிர் முனையில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் செல்வது போன்றும் தானாகவே பேசிச் சிரித்துக்கொள்வாள் மாமனார் மாமியார் கண்களுக்கு மல்லிகை மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று தெரிய வேண்டுமாம். நன்றாக நடித்துக் கொண்டிருந்தாள் மல்லிகை.
               ஒரளவுக்கு மேல நடிக்க அவளால் முடியவில்லை அழுகை முட்டிக்கொண்டு வந்தது. இந்த அவதி எதற்கு நம் வீட்டிற்குச் சென்று விட்டால் பேசவும் நடிக்கவும் வேண்டாம்.
               ஏதாவது புத்தங்கள் வாங்கிப்படிக்கலாம் சித்தப்பா பிள்ளைகள் உடன் சேர்ந்து நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருக்கலாம். இங்கிருந்து அகன்றால் போதும் என்ற எண்ணம் மல்லிகைக்கு உருவாயிற்று. அதனால் தான் ஏழாவது மாதம் வளைகாப்பு நடத்தும்படிச் சொன்னாள்.
               மாதவனுக்கு ஊருக்குச் செல்ல மனமில்லை. விடுமுறைக்கு முயற்சிக்கவே இல்லை. எப்பொழுது கிளம்புகிறாய் என்று கேட்ட தாயிடம் அம்மா விடுமுறை கிடைப்பதாகவே தெரியவில்லை.
               அவள் என் அருகில் இல்லாததால் எனக்கு மிகவும் போர் அடிக்கிறது. எனவே இஞ்சினியரிங்கில் எம்.எஸ் என்ற மேல்படிப்பு படிக்கலாமென்று நினைத்தேன். முயற்சி எடுத்தேன். படிக்க அனுமதி கிடைத்து விட்டது.
               இப்பொழுது தான் படிக்கத் துவங்கியுள்ளேன். இப்பொழுது போய் விடுப்பு எடுத்தால் நன்றாக இல்லை. பிரசவ சமயத்தில் கண்டிப்பாக வந்து விடுவேன். ஒரு வாரத்திற்கு முன்னதாகச் சொல்லி விடுங்கள். நான் வந்து பத்து நாட்களாவது தங்கியிருப்பேன்.
               வளைகாப்பு விழாவை மல்லிகைக்கு எந்தவித மன உறுத்தலுமின்றி வெகு சிறப்பாக நடத்தி விடு;ங்கள். எந்தச் செலவிற்கும் அவள் பிறந்த வீட்டிலிருந்து பணம் கேட்க வேண்டாம்.
               நானும் மல்லிகையிடம் பேசியிருக்கிறேன். நீங்களும் என் நிலையை எடுத்துக் கூறி விழாவிற்கு நான் வராதது குறித்து வருத்த வேண்டாம் என்று சொல்லுங்கள் என்றான் மாதவன்.
               இங்கிருந்தால் எப்படியும் எப்பொழுதும் அவர் நினைவுதான் நிழலாய் வருகிறது. அங்கு சென்றாலும் வயிற்றில் வளரும் குழந்தை நினைவுபடுத்திக் கொண்டுதான் இருக்கும்.
               எனினும் இந்தச் சூழலை விட அந்தச் சூழலில் அவர் நினைவை மறக்க முயற்சிப்பது எளிதாக அமையும் என்று மல்லிகை எண்ணினாள்.
               அதனாலேயே வளைகாப்பு விழாவை ஏழாவது மாதத்திலேயே நடத்தச் சொன்னாள்.
               மகிழ்பூ அம்மாள் கூறியதைக் கேட்டு அவள் என்னிடமும் அப்படித்தான் சொன்னார். அத்தைஇ வரமுடியவில்லை என்றால் என்ன செய்ய முடியும். அதற்காக நான் வருத்தப்படவில்லை என்று கூறி சமாளித்தாள்.
               விழா எண்ணமோ சிறப்பாக நடைபெற்றது. அண்ணன் முருகேஷ் வந்திருந்தான் மாதவன் வராதது குறித்து வருத்தம் என்றாலும் காட்டிக் கொள்ளவில்லை.
               மல்லி என்னடி பெரிய பொம்பளைமாதிரி திரிவாய். பரமசாதுவாய் காட்சி அளிக்கிறாய் என்றான் முருகேஷ் வெட்கப்படுவதுபோல் முகத்தைத் தாழ்த்திக் கண்ணீரை அணை கட்டினாள்.
               மருதாணிதான் பிள்ளைத்தாச்சிப் பெண் ஓடிப் பிடித்து விளையாடவா முடியும் என்றாள். அண்ணா நீங்கள் எனக்கு ஒரு உதவியை செய்வீர்களா என்றாள் மல்லி.
               என்னம்மா வேண்டும் பிள்ளைத் தாச்சிப் பெண் கேட்பதை அப்படியே செய்யவும் வேண்டியது என் கடமையல்லவா
               அண்ணா கலியாணத்தப்பவே நான் மேலும் படிக்க வேண்டும் என்றுதான் கூறினேன் எல்லோருடைய வற்புறுத்தலுக்காகத் தான் திருமணம் செய்து கொண்டேன்.
               இந்தப் பிள்ளை வயிற்றில் வந்ததிலிருந்து படிப்பின் மேல் ஒரு தாகமே ஏற்பட்டுள்ளது. அவர் வேறு அங்கிருப்பதால் எனக்குச் செமபோர்.
               எனக்குக் காலேஜில் எம்எஸ்ஸி படிப்பதற்குரிய ஏற்பாடுகள் எல்லாம் செய்துத் தருகீறீர்களா?
               அத்தை உன் கைச் செலவிற்கு வைத்துக் கொள்ளம்மா என்று பணம் தந்திருக்கிறார்கள். நீங்கள் விடுப்பில் இங்கிருக்கும் நாட்களில் எனக்குப் படிக்க வசதிசெய்யுங்கள் என்று கேட்டாள்.
               பிள்ளைத்தாச்சிப் பெண் சொல்வதால் மறுக்காமல் முயற்சி எடுக்கிறேன் என்றான் முருகேஷ்.
               வரும் நாட்களில் பொழுதைத் தள்ள என்ன செய்யலாம் என்ற யோசனைக்கு இடமில்லை. ஆர்வத்துடன் படிப்பைத் தொடரலாம். அழியாக் கல்விச் செல்வம் நம் வாழ்விற்குக் கை கொடுக்கும் என்று நம்பலானாள் மல்லிகை.
               தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்தபடியால் சென்ற தாமரைக்கு அங்கு இருப்புக் கொள்ளவில்லை.
               அவள் எப்படித் தாம்தூம் என்று குதித்தாலும் கனிவாக இன்மொழி பேசினாலும் யாரும் மறுத்துப் பேசவும் இல்லை. காது கொடுத்துக் கேட்கவும் இல்லை.
               தன் மனம்போல் இயங்கியதும் அவளுக்கு இன்பத்தை தரவில்லை. என் அப்பாவைப் பார்த்து விட்டுவருகிறேன். என்று கூறி கிளம்பி விட்டாள்.
               தாமரை மாப்பிளை வரவில்லையா வீட்டில் எல்லோரும் நல்ல சுகமா என்று உடசாரமாக வரவேற்றாள். கனகா ஆம் எல்லாம் சரிதான் போரடிக்குதுன்னு வந்துட்டேன். நாலைந்து நாள் இருந்து விட்டு போய் விடுகிறேன். மாப்பிளை வரலை உடனே கிளம்பு என்று விரட்டிடாதே என்றாள் தாமரை.
               தற்செயலாகக் கடைக்கு வந்த பழனிவேல் கார்த்திஸிடம் எங்கள் மல்லியக்கா பிரசவத்திற்காக வந்திருக்கிறார்கள் எங்க அத்தான் அன்றைக்கு உங்களிடம் பேசிக்கிட்டியிருந்தால் அதான் சொன்னேன்;. எங்க வீட்டில் எல்லாருக்கும் சந்தோஷம் உங்களுக்கும் சந்தோஷமாயிருக்கட்டும்னு சொல்லிட்டேன் என்றான்.
               வீட்டிற்கு வந்த கார்த்திஸ் ஏய் தாமரை எப்ப வந்த உங்க வீட்டிற்குப் போய் மாதங்கள் கடந்திட்டதே ஏதாவது விஷேசம் உண்டா என்றான்.
               என்ன விசேஷம் ஒரு சனியனும் எதிர்த்துப் பேசி கலாட்டாவே பண்ணமாட்டேன்னு உளுந்தரைச்ச அம்மி மாதிரி எல்லாம் வழுக்கிட்டுப் போகுதுக சுரத்தே இல்லை அதுதான் அப்பாவைப் பார்த்துட்டு வாரேன் என்ற சாக்கில் கிளம்பி வந்துவிட்டேன் என்றாள் தாமரை.
               உன் தோழி மல்லிகை பிரசவத்திற்காக தாய்வீடு வந்திருக்கிறாளாம். உனக்கும் அந்த விசேஷம் உண்டா என்றான். இல்லை அப்படி எதுவும் இல்லை. மல்லியைப் பார்த்து ரொம்ப காலமாயிற்று அம்மாவிடம் சொன்னால்ன விடமாட்டார்கள். அம்மாவிற்கு தெரியாமலே மல்லி வீட்டிற்குச் செல்கிறேன் குழம்பிக் கிடக்கும் அவள் மனக்குட்டையைக் கலக்கி மீன் பிடித்து வருகிறேன். எனக்கு சினிமா பார்ப்பது போல் இனிய பொழுது போக்கு  அமைந்து விட்டது என்றாள் தாமரை
               வா தாமரை எப்படியிருக்க வரவேற்றது மல்லி நான் நல்லாருக்கேன் நீ என்னடி தொண்டுக்கிழவி மாதிரி தோற்றம் உன் அழகு கொள்ளை அழகு எங்கே போயிற்று மனதிற்குள் எந்த நிலையிலும் உன் அழகு கூடத்தான் செய்கிறது என்று நினைத்தாலும் என்று கேட்டு வைத்தாள் தாமரை.
               தோழியைப் பார்த்ததும். அவள் கேட்ட கேள்வியில் நிலை குலைந்து போனாள் ஆற்றமைத் துயரம் கண்ணீரைப் பொத்துக் கொண்டு வந்தது. வெகு நாட்களாகக் கண்ணாடியில் முகம் பார்க்காதக் காரணத்தால் தன் அழகையும் இழந்து விட்டோமாகவும் நினைக்கவும் செய்தாள்.
               தாமரை நீ சொன்னதால் தான் திருமணத்திற்கே சம்மதித்தேன். படிக்கும் ஆவலை அடக்கி வைத்தேன் சிங்கப்பூரில் இருந்த ஓராண்டு சந்தோசமாகவே இருந்தேன்
               வயிற்றைத் தொட்டுக்காட்டி இது வந்த நாளிலிருந்து எனக்கு மன அமைதியே இல்லாமல் போயிற்று என்றாள்.
               எத்தனை பேர் குழந்தை பாக்கியத்திற்காகத் தவம் இருக்கிறார்கள் உனக்கு கிடைத்தவுடன் உங்களின் இல்வாழ்க்கைக்கு இடையூறாக வந்துவிட்டது என்று சொல்கிறயா என்றாள் தாமரை. இப்படிக் கேட்டால் தான் அவர்கள் இருவருக்குமிடையே உள்ள பிரச்சனையைக் கூறுவாள் என்று எதிர் பார்த்தாள்.
               அப்படி இல்லடி அவருக்கும் எனக்கும் சரியான அன்டர்ஸ்டாண்டிங்கே இல்லை.
               இங்கு வரும் பொழுது என்னிடம் பிரியமாகத்தான் இருந்தார். இரண்டு நாட்கள் நன்றாக இருந்தார் கடைத்தெருவிற்குச் சென்று வருகிறேன் என்று சென்றார்.
               வரும்பொழுதே முகத்தில் களையின்றி பேயறைந்தவன் போன்று வந்தார். அன்றிலிருந்து மனம் திறந்து என்னிடம் பேசவில்லை என்னிடம் எதுவும் கேட்கவும் இல்லை. என்னிடம் எதுவும் கேட்காமல் நான் என்ன சொல்ல முடியும். என்னிடம் உறவு வைத்துக் கொள்வதையே அவர் விரும்பவில்லை என போகிறாறாம். நானும் மேலே படிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றாள் மல்லி.
               படிப்பதற்கெல்லாம் ஆசைப்படாதே. இனி பிரசவம் மறுபடி பிள்ளை வளர்ப்பு குட்டிப் பாப்பா உன்னை படிக்கவிடுமோ என்ன படிப்பை மறந்து விடு என்று சிரித்தப்படியே கூறினாள் தாமரை.
               அதுசரி உன்னவர் ஏன் அப்படி மாறினார் நீ நல்ல பெண்ணாயிற்றே காதல் கத்தரிக்காய் என்று அலைகிறவள் இல்லை. யாரும் உனக்கு வேண்டாதவர்கள் அவரிடம் உன்னைப்பற்றி அவதூறாகப் பேசியிருப்பார்களோ நீ யாரையாவது ஏமாற்றியது உண்டா என்றாள்.
               என்னடி அப்படிக் கேட்கிறாய் என்னைப் பற்றி உனக்குத் தெரியாதா நீ கூட என்னை சரியான புத்தகப் பைத்தியம் என்பாயே ஒரு முறை அண்ணன் எழுதிய மடலையே கிழித்து விட்டு நான் உங்களின் தங்கை என்று எழுதிக் கொடுத்தேனே உன்னையறியாமல் நான் யாரிடம் பேசினேன் யாரிடம் நட்பு கொண்டேன். அப்படி யாராவது என்னைப் பற்றி குறைகூறி இருந்தால் என்னிடம் நேரிடையாகக் கேட்கவேண்டியது தானே இப்படி மௌன யுத்தம் நடத்த வேண்டும் என்றாள் மல்லிகை.
               உள்ளுக்குள் மல்லிகையின் வேதனையைத் தேனை ருசிப்பது போல் ரசித்துப் பருகினாள். தாமரை உதட்டில் உன் அழகில் உனக்கு கிடைத்த வாழ்க்கையில் பொறாமை கொண்ட யாரோ ஒருவர் தான் உன் கணவரிடம் எதுவோ கூறியிருக்க வேண்டும் உன் போறாத காலம் மாட்டிக் கொண்டது போலும் என்றான் தாமரை.
               கீரல் விழுந்த கண்ணாடி ஒன்று சேருமா என்னி என் மனம் அறியாத அவருடன் எப்படி உறவாடுவேன் இனிஅவர் அவர்தான் நான் என் குழந்தைக்காக உயிர் வாழ்வேன் சாகத்துனிய மாட்டேன். பெரிய படிப்பெல்லாம் படித்து உயர்ந்த பதவி வகித்து சாதித்துக் காட்டுவேன் என்றாள் மல்லிகை.
               எதுக்கு நீ அப்படி கஷ்ட்பட வேண்டும். அவரிடமே நேரில் சென்று நான் உண்மையானவள் நம்பத்தகுந்தவள் என்று கூறலாமே என்றாள்.
               எப்படி கேள்வி எழாமல் பதில் தருவது முட்டாள் தான் தன் போக்கில் பேசுவான் என்றாள் மல்லி.
               மல்லி நீ எப்பவும் இப்படித்தான் என்னிடம் உண்மை இருக்கிறது நியாயம் இருக்கிறது என்பதற்காக எடுத்தெறிந்து பேசி விடுகிறாய் அது எல்லோராலும் தாங்கவும் முடியாது ஏற்றுக் கொள்ளவும் முடியாது.
               அறிவுத் திமிரில் இப்படிப் பேசுகிறாள் எடுப்பெடுத்து நிற்கிறாள் இடுப்பொடிந்து சரிவாள் என்று சாபம் கூட இடலாம் யாருடைய சாபமோ தான் உன்னை ஆட்டிப் படைக்கிறது.
               அவர் வரும் பொழுது அவர்காலில் விழுந்து மன்னிப்புக் கேள் எனக்கு வேண்டாதவர்கள் எதுவும் உங்கள் மனது பாதிக்கும்படி பேசியிருக்கலாம். நான் இத்தனை நாள் இப்படி நடந்து கொண்டதற்கு மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறு.
               மல்லி ஒரு வேளை என் அண்ணனுக்கு நீ மடல் எழுதியதை யாரும் தவறாக அவரிடம் கூறியிருப்பார்களோ என்றாள். அது உன்னையும் உன் அண்ணனுக்கு நீ மடல் எழுதியதை யாரும் தவறாக அவரிடம் கூறியிருப்பார்களோ என்றாள். அது உன்னையும் உன் அண்ணனுக்கும் தவிர்த்து யாருக்குமே தெரியாதே அதில் என் தவறு என்ன இருக்கிறது என்றாள் மல்லிகை. என் அண்ணன் அவரது வகுப்பறை தோழனாம் என் அண்ணனை வேண்டுமானால் அவரிடம் பேசச் சொல்லட்டுமா என்று பரிவுடன் கேட்டாள் தாமரை. பார்க்கலாம் என்றாள் மல்லிகை. சரி நான் விடைபெறுகிறேன் என்ற கூறிப் புறப்பட்டாள். என்றுமில்லாத அளவு என் உள்ளம் மகிழ்கிறதே மல்லியின் இந்த மனநிலை பரிதவிப்புஇ ஏக்கம்இ திண்டாட்டம் என் நெஞ்சை இன்பமாய் நிறைக்கிறது.
               அண்ணனிடம் இன்றைய நிகழ்ச்சியைக் கூறி மேலும் எப்படிச் சிக்கலை உருவாக்கலாம் என்ற சிந்தனையிலேயே சென்றாள் தாமரை.

Advertisement