Advertisement

மனதோடுதான் உறவாடுவேன்
கொக்-கரக்-கோ சேவல் கூவும் சத்தம் மல்லிகையின் செவியில் ஒலித்ததுஇ திடுக்கிட்டு விழித்தாள்.
தன் நிலையை அறிந்தாள். கணவனின் அரவணைப்பில் அவன் கரத்துள் கட்டுண்டு கிடக்கிறேன். நான் மெலிதாக அசைத்தால்கூட அவர் தூக்கம் கலைந்துவிடுமே என்ன செய்யலாம்.
நேற்றைய இரவு நிகழ்வுகள் வலம் வந்தன. தன்னிடம் தரப்பட்ட பால் குவளையை டீப்பாயின்மீது வைத்தாள். கணவனின் பாதம் தொட்டு வணங்கினாள்.
ஏய்இ என்ன இதெல்லாம் கண்ணம்மா. சென்ற நூற்றாண்டு பழக்கமெல்லாம் வேண்டாமே சொல்லியபடியே அவளைத் தூக்கி நிறுத்தினான் மாதவன்.
என்னங்கஇ பெண்ணைப் பார்த்துப் பேசி இத்யாதி விஷயங்கள் எல்லாம் மனதுக்குப் பிடித்த பின்னரே திருமணத்திற்குச் சம்மதிப்பர் இந்தக் கால இளைஞர்கள்.
நீங்கள் என்னைப் பார்த்ததே கிடையாதே. பெற்றோர் பார்த்து அவர்களுக்குப் பிடித்த பெண்ணை மணந்து கொள்கிறேன் என்று என் கழுத்தில் மாலை சூட்டி உள்ளீர்கள்.
நானும்இ உங்களைப்போல் பண்பாய்த்தானே நடந்துகொள்ளவேண்டும். எனக்கு உங்களை மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கு என்னை என்றவளை இழுத்தணைத்து அதரங்களில் முத்தமிட்டான்.
மாதவனின் விரல் தொடுகைக்கே உடலில் மின்சாரம் பாய்ந்ததுபோல் இன்ப உணர்வை பெற்ற மல்லிகை முத்தத்திற்கு மயங்கி அவன்மேல் சாய்ந்தாள்.
அவளை மார்போடு அணைத்துக் கொண்ட மாதவன் சும்மாவாச் செல்லம் என் ஆருயிர் நண்பன் பள்ளி பருவத்திலே என் தங்கைஇ ரம்பைஇ ஊர்வசியை மிஞ்சிய அழகு படைத்தவள்இ அறிவிலும் ஆற்றலிலும் இந்திராகாந்திக்கு நிகரானவள் இன்னும் என்னவெல்லாமோ வர்ணனை செய்வான்.
அன்றிலிருந்தே கண்ணில்காணாக் காரிகையிடம் என் மனதையும் பறிகொடுத்தேன். காதல் வசமானேன். நண்பன் ஒரு மாசில்லா மாணிக்கம். அவன் தங்கையும் தங்கமாகத்தானே இருக்கவேண்டும். என் காதல் நாடகம் அரங்கேறியது. வேர்விட்டு கொடியானதும் நிஜத்தைப் பார்க்காவிட்டாலும் நிழலை வைத்து மல்லிகைக் கொடியைத் தழுவினேன் என்றான்.
உம் என்ற ஒலித் தவிர பேச்சற்றுக் கிடந்த மல்லிகையை பெரிய மெத்தையில் கிடத்தினான்.
அவனது ஸ்பரிசத்தில் சுகம் கண்ட மல்லிகை இன்னும் இன்னும் என்பது போல் செயலற்றுக் கிடந்தாள்.
இருவர் மூச்சும் ஒன்றாய்க் கலந்தது. மாதவன் மல்லிகையை அணைத்தபடியே நொடியில் தூங்கிவிட்டான். ஆனால் மல்லிகையோ சிந்தனையின் வாயிலாக ஒரு மணி நேரம் தாமதமாகவே துயில்கொண்டாள்.
இப்பொழுது மணி ஐந்தாயிற்றே நான் எழ வேண்டுமேஇ அவர் தூக்கமும் கலைந்து விடக்கூடாது.
இயல்பாகவே அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்துவிடுவது வழக்கம். எழுந்து பல்துலக்கிய பின்பே படிப்பு எந்த வேலையானாலும் செய்வேன். பல் துலக்கவேண்டும் போல் தோன்றுகிறதே எப்படி எழுவது என்று நினைத்தாள்.
கால்களை பின்னோக்கி இழுத்து அவனது கரத்துக்கு இடையே தலையை உருவிக்கொண்டு எழுந்துவிட நினைத்தாள். கால்களை நகர்த்தி தலையை முற்றிலும் உருவிக்கொண்ட வேளை கூந்தலின் நுனியும்இ மலர்கூந்தலில் சூடியிருந்த மலர்க்கற்றையும் அவன் நெஞ்சின்மீது மிக மெல்லியதாக உராய்ந்து விட்டது.
அந்த உரசலில் மாதவன் விழித்தான். ஏய் இந்த விடிகாலை என்ன செய்யப் போகிறாய். குளிருக்கு இதமாய் சிறிதுநேரம் படுத்துக்கொள் என்று படுக்க வைத்தான். அணைத்து முத்தமிட முயன்றான்.
ஆசை தோசை அப்பள வடை வாய் நாற்றமடிக்கும் பல் தேய்க்காமல் எச்சில் வாயால் முத்தமிட்டால் நோய் வரும். அட அசடே சின்னக்குழந்தைகளுக்குத்தான் அப்படியாக்கும்.
இங்கு எச்சில் வாயால் முத்தமிட்டால்தான் மணக்கும். கிக் உண்டாகும். சொல்லியபடியே படுக்க வைத்து அடுத்த செயலுக்குத் தயாரானான்.
சீ என்னங்க இது ஐந்து மணிக்கே எழுந்திராவிட்டால் எனக்கு எதுவோ தவறு செய்துவிட்ட மாதிரித் தோன்றும்இ என்னை விட்டுடுங்க.
தவறு செய்வதற்குத் தானே நாம் உரிமம் பெற்றுள்ளோம். அந்தத் தவறை ஒழுங்காகச் செய்யவேண்டும். இப்பொழுது போய் முற்றம் தெளித்து கோலமிடவா போகிறாய். அந்த வேலைக்கெல்லாம் ஆள இருக்கிறது என்று அணைப்பை இறுக்கினான். நீ நான் சொல்கிறபடி கேள். அது போதும்.
மல்லிகை மலர்க்கொடியாய்த் துவண்டு அவன் அணைப்பில் கிடந்தாள். விழித்து மணி பார்த்தாள். மணி 6.30 வெட்கம் அவளைப் பிடுங்கித் தின்றது.
இம்முறை அவன் கைகளை எடுத்து விலக்கிவிட்டு எழுந்தாள். அது குளிரூட்டப்பட்ட அறை. அறைக்குள்ளே பாத்ரூம் கழிவறை வசதி உடையதாக இருந்தது.
விறு விறு என்று காலைக்கடன்களை முடித்துஇ குளித்து உடைமாற்றி தேவதையாய் ஹாலுக்குள் வந்தாள். மாமனாரும்இ மாமியாரும் தேனீர் அருந்தியபடியே நேற்றைய வரவேற்பு நிகழ்ச்சிப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
உறவினர் சிலர் விழித்தும் சிலர் இன்னும் தூங்கிக் கொண்டும் இருந்தனர்.
இவளைக் கண்டதும் வாம்மாஇ வா மாதவன் சாதாரணமாகவே ஏழுமணி வரைத் தூங்குவான். இன்று எத்தனை மணிக்கு எழுவானோ சொல்லமுடியாது.
நீ அப்பொழுதே எழுந்துவிட்டாயாம்மாஇ காப்பியா டீயா எது வேண்டும் குரலில் அன்பைக் குழைத்துக் கேட்டாள் மகிழம்பூ அம்மாள்.
மாமனாருக்கும்இ மாமியாருக்கும் காலை வணக்கம் கூறினாள் மல்லிகை. சாதாரணமாக டீஇ காப்பியெல்லாம் விரும்பிக் குடிப்பதில்லை. இன்று மிகவும் களைப்பாகத் தோன்றுகிறது. காப்பிக் குடிக்கலாம் என்று நினைக்கிறேன்.
அத்தை நான் தயாரித்துக் கொள்ளவா என்றாள். வேண்டாம்மா பாரி சின்னம்மாவுக்கு ஒரு கப் காப்பிக் கொண்டுவா என்று உத்தரவிட்டபடியே அருகிலிருந்தச் ஷோபாவில் மல்லிகையை அமரச் செய்தாள். பாரிஜாதம் என்ற பெயர் பாரி என்று மருவியது.
காபியை ரசித்துப் பருகினாள் மல்லிகை. அத்தை என்றாள்.
காப்பி மட்டும் தானா? வீடு எப்படி?
அத்தை வீடும் நன்றாக உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் மனது மிகவும் நன்றாகவே உள்ளது என்றாள்.
எப்படிச் சொல்கிறாய்? அத்தை ஒரு வீடு சொந்தமாக இருந்து ஏதோ ஒரு வேலையில் இருந்தால் போதும். குறைந்தது ஐம்பது பவுன் நகைஇ ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கம் தந்தால்தான் உங்கள் பெண் வேண்டும்இ சாதகப் பொருத்தம் இருந்தால்கூட வேறு பெண் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறுகின்றனர் இன்றைய காலத்து பிள்ளையைப் பெற்றவர்கள். எஸ் கே ஜி விட்டு விட்டுக் கைகழுவிச் சென்றுவிடுவர்.
ஆனால்இ நீங்கள் உங்கள் பெண்ணை எங்கள் பையனுக்கு மணம் முடித்துத் தருவதற்குச் சம்மதமா என்று மட்டும் தானே கேட்டீர்கள். மற்ற சம்பிரதாயப் பேச்சு என்று என் தந்தை சொல்லியபொழுதுஇ சம்மதம் என்றால் மணநாள் குறிப்போம். வேறு எந்தப் பேச்சும் வேண்டாம். எங்கள் ஒரே பையனின் திருமணம் சிறப்பாக நடக்க வேண்டும். அனைத்துச் செலவு வகைகளும் எங்களைச் சேர்ந்ததே என்றீர்களே அந்தப் பெருந்தன்மை யாருக்கு வரும். அதனால்தான் சொல்கிறேன். உங்களனைவரின் மனமும் தங்க மனசுதான் என்றாள் மல்லிகை.
பெயருக்கேற்ற அழகியாய் இருப்பதுபோல பேச்சும் நன்றாகவே உள்ளது.
நாங்களும் இதுவரை கஷ்டங்கள் அனுபவித்தவர்கள்தானே. ஒரு சிறிய வீடும் ஒரு நாலரை மரக்கால் வயல் மட்டுமே இருந்தது. என் மகன் எங்களுக்குத் திருமணமாகிப் பத்து ஆண்டுகள் கழித்துத்தான் பிறந்தான். நாங்கள் செய்த மா தவத்தால் பிறந்ததனால் மாதவன் என்று பெயரிட்டோம். நாங்கள் தவா என்றுதான் செல்லமாக அழைப்போம்.
எங்கள் பிள்ளை வளர்ந்தான். படித்தான்இ அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட பணமின்றி சஞ்சலப்பட்டிருக்கிறான்.
எங்கள் தவா தன் திறமையால் சென்னை அண்ணா யூனிவர்சிட்டியில் இஞ்சினியரிங் கல்வி கற்றான். படித்துக்கொண்டிருக்கும் பொழுதே கம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆனான். சிங்கப்பூரில் உள்ள பெயர் எதுவோ சொன்னான். நினைவில் வரவில்லை. பெரிய கம்பெனியில் வேலை கிடைத்தது. மகனைப் பிரிந்திருக்க வேண்டுமே என்ற கவலை ஒருபுறமிருந்தாலும் அவனாவது பொருளாதாரச் சிக்கலின்றி வாழட்டுமே என்று எண்ணிதான் சிங்கப்பூர் அனுப்பினோம்.
சிங்கப்பூர் வேலை தந்த பரிசுதான் குளிரூட்டப்பட்ட இந்த வீடு. வீடு கட்டி ஒரு வருடம்தான் ஆகிறது. ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த எங்களுக்கு இந்தப் பங்களா வாசம் மலைப்பாகவும்இ மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
என் மகன் இன்னும் எவ்வளவோ சம்பாதிப்பான். அவன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அதனால்தான் அவன் விரும்பிய உன்னையே மணம் முடித்து வைத்தோம். நீங்கள் இருவரும் சந்தோசமாகத் திருப்தியாக வாழவேண்டும். இறைவன் அதற்கு வழிகாட்ட வேண்டும் என்றாள் மகிழம்பூ அம்மாள்.
அத்தை என்ன சொல்றீங்கஇ அவர் என்னை விரும்பினாரா? எப்படி அவரை ஒருநாள்கூட நான் பார்த்ததே இல்லையே எப்படி என்றாள் மல்லிகை.
மல்லிகை உனக்கு ஒன்றும் தெரியாதா? உன்னுடைய அண்ணன் பெயர் தானே முருகேஷ். தவாவும் முருகேஷீம் பள்ளிப்படிப்பிலிருந்தே பிரியமான நண்பர்கள். அந்த முருகேஷன் ரொம்ப நல்ல பையன். தன் வீடு பற்றி பேசுகையில் உன்னைப் பற்றி மிகப் பெருமையாகப் பேசுவானாம். தனியனாக வளர்ந்துகொண்டிருந்த தவா தன்ககும் இப்படி ஒரு தங்கை இருந்தால் நன்றாக இப்படிப் பேசலாமே. டேய் எனக்குத்தான் தங்கைஇ அண்ணன் தம்பி யாருமே இல்லை. உன் தங்கையை எனக்குத் தருவாய் என்று அறியாப் பருவத்தில் விளையாட்டாகக் கேட்டிருக்கிறான்.
முருகேஷ{ம் சிறுவன்தானே என் தங்கையை எப்படிடா தரமுடியும் என்று பதில்கூற.
அவன் பதிலையே திரும்பத் திரும்பச் சொல்லிப்பார்த்து தரக்கூடிய முறையில் தரவைக்கிறேன் என்று மனதில் உறுதிப்படுத்தியிருக்கிறான்.
உன் அண்ணன் வேறு கல்லூரிக்குப் படிக்கச் சென்றுவிட்டாலும் இருவரும் அடிக்கடிச் சந்தித்தார்கள். உன் புகைப்படத்தை அவன் அறியாமலே இவன் வாங்கிக்கொண்டான்.
கல்லூhயிpல் படிப்பு படிப்பாக இருந்தாலும் உன்னிடம் காதல் வயப்பட்டது உண்மையாகி உறுதிப்பட்டுவிட்டது. வீடு கட்டி முடித்ததும் கிரஹப் பிரவேசத்திற்கு வந்த முருகேஷிடம் உன் தங்கையை எனக்கு மனைவியாகத் தருகிறாயா? என்று கேட்டிருக்கிறான்.
அவன் மலங்க விழித்திருக்கிறான். பெற்றோர் மூலNமு என் பெற்றோரை அணுகச்சொல். என் தங்கை உன் மனைவியானால் என்னைப்போல் பேறுபெற்றவன் யாரும் கிடையாது. ஆனால்இ நடக்குமாஇ நானோ படித்துவிட்டு வேலையின்றி அப்பாவிற்கு சப்போர்ட் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.
நான் சம்பாதித்துதான் என் தங்கைக்கு நகைகள் செய்யவேண்டும். இப்போதைக்கு என்ன செய்வது என்று இவனிடமே கேட்டிருக்கிறான்.
எனக்கு ஒரு தங்கை இருந்திருந்தால் உனக்கு கொடுத்துவிட்டு உன் தங்கையை நான் கேட்டிருக்கலாம். எனக்கு தங்கைதான் இல்லையே. தங்கைக்குப் பதிலாக உனக்கு ஒரு நல்ல வேலை வாங்கித் தருகிறேன். மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி அனுப்பியிருக்கிறான்.
எங்களிடம் முழு விபரமும் கூற நாங்கள் வந்து கேட்டது. மணம் முடிந்தது. எல்லாம் நீ அறிவாய் தானே என்றாள் மகிழம்பூ.
அண்ணன் என்மீது எத்தனை பாசம் உள்ளவர். ஆனால் இதுபற்றி இதுவரை ஒரு வார்த்தை கூறியது கிடையாதே என்றாள் மல்லிகை.

Advertisement