Advertisement

திருமணம் முடிந்த சில மாதங்களில் மலருக்கு தனியாக ஒரு சொத்து வாங்க வேண்டும் என பாண்டியன் நினைத்திருக்க, அழகன் வேறு அரசியல், செக்கு ஆலை, இது இல்லாமல் தனியாக சிலைகள் விற்கும் கிஃப்ட் ஷாப், என அவன் தனியாக ஒரு பாதையில் செல்ல, அவன் என்ன செய்கிறான் ஏது செய்கிறான் என செவிக்கு வந்தாலும் அவன் மீது ஒரு பிடிமானம் இல்லாமல் ஆகிவிட கூடாது என யோசித்தவர், மலருக்கும் அழகனுக்கும் சேர்த்து சொந்தமாய் ஒரு சூப்பர் மார்க்கெட் வாங்கி அவர்கள் பொறுப்பில் விட்டார். 

அழகனை வற்புறுத்தி எல்லாம் எதுவும் செய்துவைத்து விட முடியாது, மலரின் நட்பு என்னும் தளையில் அவனை இழுத்துவைத்தால் அன்றி அவனை சம்மதிக்கவைக்க முடியாது என இப்படி செய்து விட்டார். மலர் முதலில் நன்றாக பார்த்துக்கொண்டவள், குழந்தை வந்த பிறகு நேரம் போதாமல் சிலகாலம் ஒதுங்கியிருக்க, தாமரை படிப்பை முடிக்கவும் சரியாக இருந்தது.    

மலர், தான் பார்த்துக்கொள்ள வரும்வரை தாமரையை பார்க்கச் சொல்ல, முதலில் மாட்டேன் என அடம் பிடிக்க, பாண்டியனே அவளை அழைத்து பேசினார், தேவி வேறு.  ” கண்ணு நீ அங்க கடைல இருந்தா, அக்காக்கு சப்போர்ட்டா இருக்கும்ல, நீயும் படம் வரையர, அதுக்கும் தனி இடம் பார்த்து வைக்கணும்னு சொல்லிட்டு இருந்த, இதுவே அங்கனா உனக்குனு ஒதுக்கி அக்கா இடம் தருவா. “ 

என பேச, அப்போதும் தாமரை முடியாது என நிற்க, அவளிடம் தேவி தனியாக, 

“ உங்க அக்காவ நம்ப பெரிய இடத்துல கட்டிக்கொடுத்தாலும், அங்க ஒரு சங்கடம்னா இங்க சொல்ல மாட்டா, மனசுக்குள்ளயே வச்சுப்பா, இதே நீ உங்ககிட்ட மனசு விட்டு சொல்லுவால” 

என அவர் எதிர்ப்பார்ப்பை சொல்ல, மலருக்காக அவள் கடையின் பொறுப்பை எடுக்க, கடந்த எட்டு மாதங்களாக அவன் முகத்தை தினம் பார்க்க வேண்டிய நிலை. 

இதற்கு இடையில் அவன் கல்லூரி படிக்கும் போது இருவரும் சந்தித்ததில்லை, சிலகாலம் கழித்து அவன் திரும்பி அவளை பார்த்தது மலர் திருமணத்தில் தான். பார்க்கும் போது சிநேகமாக தான் பேசினான். அவன் பேச்சில் செயலில் அவன் வயதிர்கே உரிதான முதிர்ச்சி இருந்தது. 

ஆனால் அவன் மீது தாமரைக்கு நம்பிக்கை இல்லை, அவள் அப்போது கல்லூரி முதலாம் ஆண்டு தொடக்கதிலிருந்தாள். அதனால் எப்போதும் போல அவனிடம் முகம் கொடுக்காமல் பேசிவைக்க, அவனும் திருப்பி கொடுக்க, எப்போதும் போல் இருவர் நடுவிலும் முட்டல் தான்.

பள்ளிக்காலத்திலே அவளை ஒருவழியாக்குவான், இப்போது தன் இடத்திலே அவள் வந்துவிடவும் கேட்கவும் வேண்டுமா, அவனுக்கு பொழுதுபோகவில்லை என்றால் அவள் தான் அவனது விளையாட்டு பந்து.  ஆனால் பந்து திரும்பி அடித்து அவ்வப்போது அவனையே பதமும் பார்க்கும். இதுவரை இப்படி தான் அவர்களின் உறவு. 

அவர்கள் வீடு வந்ததும், அனைவரும் இறங்க, ஆதி தாமரையின் நீள கூந்தலின் நுனியை பிடித்து இழுத்து விளையாடியபடி இறங்கச் சொல்ல, விழித்தது அழகன் முகத்தில். 

“ எல்லாரும் உள்ள போயிட்டாங்க, இறங்குற ஐடியா இருக்கானு உன் சித்திய கேட்டு சொல்லு ஆதி.” என்று ஆதியை அசட்டையாய் கேட்டுக்கொண்டிருந்தான். 

“ சித்தி வா, நாம உள் போலாம். “ என மழழையாக அழைக்க, 

“ போலாம் டா, அப்படியே உங்க சித்தப்பா சொன்னதும் என்னைய கூப்பிடுவியா நீ. 

உங்க டப்பா கார்ர நான் ஒன்னும் வச்சிக்கமாட்டேன். “ என ஆதியிடம் சொல்லிக்கொண்டு இறங்க, 

“ டப்பா சொல்லாத, என்து சூப்பர் காரு. “ என ஆதி விரல் நீட்டி தாமரையை மிரட்டினான். அடியின் பேச்சில் மெலிதாக புன்னகை செய்த அழகன்,

“ அப்படி சொல்லு டா செல்லகுட்டி. 

பாருடா உங்க சித்தி, நல்ல டிரைவர் கிடச்சானு விழுந்து விழுந்து தூங்கிட்டு, நம்ப கார்ர டப்பா காருனு சொல்றத. 

நல்லா கரடிகுட்டி மாதிரி அக்காமடியில உட்கார்ந்து வர பார்த்த பொண்ணு, நம்ப கார்ல கூட்டிட்டு வந்தா, பேச்ச பாரு.” 

“ ஐ என்கு பிடிக்கு. என்கு டெடி வேணும் சித்து. “ என ஆதி அழகனிடம் தாவிவிட்டான்.

“ வீட்டினுள் செல்ல பார்த்தவள், விறுவிறு என திரும்பி அழகன் புறம் வந்து, 

“ முள்ளமன்றி மாதிரி தலை வச்சுருக்குறவங்கலாம் கரடிய பத்தி பேசக்கூடாது. 

நான் கேட்டனா எங்கள உங்க கார்ல கூட்டிட்டு வாங்கனு. 

பெரிய பருப்பாட்டம் எங்கள கூட்டிட்டு வந்துட்டு, என்னைய சொல்றது.

அதுசரி, அரசியல்வாதி தான நீங்க, பின்ன உங்க கிட்ட வேற என்ன எதிர்பார்க்கமுடியும். “ 

என எள்ளல் தொனியில் முடித்து ஆதியை அவனிடமிருந்து வம்படியாய் வாங்கிக்கொண்டு உள்ளே செல்ல பார்க்க, ஆதியை கொடுக்காமல் கீழே இறக்கி அவனை உள்ளே போக சொன்னவன், அவளை இம்மி கூட மதிக்காத பார்வை பார்த்து, 

“ ஏ வெண்டக்கா, பள்ளு இருக்குனு என்ன வேணா பேச கூடாது, தட்டி எடுத்து கொக்குக்கு போட்டுடுவேன். “ என அடிக்குரலில் சிரித்தவாரே மிரட்டிவிட்டு ஒரு கரத்தால் தலையை கோதியபடி உள்ளே சென்று விட்டான். யாரும் பார்த்தால் கூட அவன் ஏதோ எதர்தமாக பேசுகிறான் என்றே தோன்றும். ஆனால் அவன் திமிர் அவளுக்கு மட்டுமே தெரியும். 

இந்த பேச்சு வேறு யாரேனும் அவனை பார்த்து பேச துணியாத வார்த்தைகள். 

சொல் செயல் எல்லாம் அவனுக்கு எதிராய் மட்டுமே. அவனுக்கு வேறு யாரும் இப்படி பேசியிருந்தால் நடப்பது வேறு தான். ஆனால் சிறுவயதில் இருந்தே அவள் பேச்சிற்கு அவன் பழகியிருந்தான். அதனால் மதிப்பதில்லை. 

அவர்கள் உறவு ஊஞ்சல் போல தான். சில நேரம் பள்ளிக்காலங்கள் போல பாடாய்ப்படுத்துவான்,  சில நேரம் உறவினனாய் உரிமையாய் வம்பிழுப்பான், சில நேரம் தோழமையாய் பேசுவேன், அந்த தோழமையில் நட்பு இருக்கிறதா இல்லை எள்ளல் இருக்கிறதா என குழம்பி நிற்பாள் தாமரை. 

உள்ளே செல்லும் அவனை தான் முறைத்து பார்த்து நின்றிருந்தாள் தாமரை. அப்போதும் அவள் மனதில் ஒலித்தது ஒன்று தான், “ நீ என் பள்ள தட்டுற வர வேடிக்க பார்ப்பேனா, உன்ன சீக்கிரமா உப்பு கண்டம் போடுறேன் டா. “ 

அதற்கு அடுத்த வாரமே வாய்ப்பு வரும் என இருவருமே எதிர்பார்க்கவில்லை. 

     

   

 

Advertisement