Advertisement

       கல்லூரி விழா தொடங்க, விருந்தினர் முன்னுரை எல்லாம் முடிந்து பட்டமளிப்பு நிகழ்வு தொடங்கியது. மாணவர்களின் பெற்றோர்களுக்கு என ஒதுக்கியிருந்த வரிசையில் செல்வம், அகிலா, தேவி, காசிநாதன், மலர், அவள் மடியில் ஆதி என குடும்பமாய் அனைவரும் வந்திருந்தனர். 

     மாணவர்கள் வரிசையில் ஒவ்வொருவராய் செல்ல, தாமரையும் நின்றிருந்தாள். அவள் பெற்றோர்கள் வரிசையில் பார்க்க, ஆதி மலர் மடியில் நின்று கொண்டு தாமரைக்கு கை அசைத்துக்கொண்டிருந்தான். பதிலுக்கு இவளும் உற்சாகமாய் கை அசைக்க, மலர் எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தாள். 

தாமரை முன்னின்ற ரோஜா அவளின் அம்மாவையும் அருகிலிருந்த அவளின் வேம்புவையும் பார்த்து கையசைதாலும் இதை ஏக்கமாக பார்க்க, அதை முகம் திருப்பி மறைக்க, சட்டென அதை கவனித்துவிட்டாள் தாமரை,

“ என்ன அண்ணா நியாபகமா இருக்கா ? “ என சரியாக கேட்க,

ஆமாம் என தலையசைக்க, அவள் பின்னே நெருங்கியவள்,

“ உன்னோட வேம்பு வந்துருக்கார்ல. அவர் லைவ்வா உங்க அண்ணாக்கு காட்டுவாரு, மச்சான் மேல அவ்ளோ ஆசை போல “ என தாமரை மெல்ல சொல்ல, ரோஜா தலை நிமிர்த்தி ஆர்வமாக தேட, வேம்பு தாமரை சொல்லியது போல தான் செய்துகொண்டிருந்தார், 

ஆனால் ரோஜா கண்கலங்க, 

“ என்ன ரோஜா ? “ என தாமரை அவள் கையை பிடிக்க, 

“ இல்ல தாமு, அண்ணா இந்நேரம் இங்கிருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டுருக்கும். வெளிநாடுல எங்கயோ ஒரு இடத்துல இப்படி உட்கார்ந்து பார்த்துருக்குமா. அப்பா போனதுக்கு அப்புறம், படிப்ப கூட நிறுத்திட்டு, வெளிநாட்டுல காண்ட்ராக்ட்ல வேலைக்கு போயிட்டுச்சு. ஆனா என்னைய எவ்ளோ கஷ்டபட்டாலும் படிப்ப நிறுத்தல. தங்கச்சி படிக்கணும்னு அம்மாகிட்ட உறுதியா சொல்லிருச்சு. அதான் நினப்பா இருக்கு. “

“ இந்தா பாரு ரோஜா பூ, உங்க அண்ணா ஆறு மாசத்துல வந்துருவார்ல, அப்போ நீயும் ஜாப்ல இருப்ப, நீயும் வீட்ட சேர்ந்து பார்த்துக்கலாம். உங்க அண்ணாவையும் டிகிரி கன்டினியூ பண்ண சொல்லு, ஒன் இயர்ல முடிசிடுவார். அப்போ நீ வந்து அவர் கான்வோக்கேஷன்ல உட்காந்து பாரு. 

அப்படி நினச்சு பாரு. இப்போ இந்த நிமிஷத்த மட்டும் மைண்ட்ல வை. 

நாளைக்கு நம்ப நினச்சாலும் இப்படி ஒரு மொமெண்ட் திரும்ப வராது. 

Believe you can and you’re halfway there

அப்படினு என் பக்கத்து வீட்டுக்காரரோடா தாத்தா சொல்லிக்காரு. “ என தாமரை லேசாக அனைக்க 

“ ரூஸ்வெல்ட் பேரன் எப்போயிருந்து உன் பக்கத்து வீட்டுக்கு குடி வந்தாரு. “ என ரோஜா இடிக்க,

“ உன் சிங்கரு அங்க படம் காட்டுனார்ல அப்போ இருந்து “ என தாமரை மேடையிலிருந்த அழகனை பார்த்து எள்ளலாக சிரித்து சொல்ல, ரோஜா தாமரையை கிள்ளி வைத்தாள்.

“ ஏ அறிவிருக்கா, எதுக்கு கிள்ளுன, உன் ஃபான் கேர்ள் பெர்ஃபார்மன்ஸ்லாம் என்கிட்ட வேண்டாம். He is my enemy. “ என தாமரை முறைத்தாள்.

“ அப்புறம் எதுக்கு புள்ள அவர் கடைல வேலை பார்க்குற. தனியா செய்ய வேண்டியது தான. “ 

“ எங்க அக்காவுக்கு ஈக்வல் ஷேர் இருக்கு. எங்க அக்காவுக்காக தான் போறேன். “ 

“ இங்க பாரு ஃபங்சன் முடியர வர உன் சிங்கர் பத்தி என்கிட்ட பேசாத. “ என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டு திரும்பி நின்றாள். 

சரியாக இவர்களுக்கு பத்து பேர் முன் அமைச்சருக்கு முக்கியமான அழைப்பு வர, அழகனை தொடர்ந்து கொடுக்க சொல்லிவிட்டு, கொஞ்சம் நகர்ந்துவிட்டார். இதை இருவரும் எதிர்பார்க்கவில்லை, அவர்கள் வரிசை மெல்ல நகர்ந்து இவர்கள் முறை வர, ரோஜாவின் கண்கள் எல்லாம் ரோஸ் நிற ஹார்டின் தான் பறந்துக்கொண்டிருந்தது. அவளுக்கு நேர்மாறாய் கண்காளால் அவனை வறுத்து நின்றிருந்தாள் தாமரை.

   ரோஜாவிற்கு பட்டமளிப்பு நடக்க, அவள் ஏதோ அவன் அருகே கை காட்டி  சொல்ல, அவன் ரோஜாவின் தாயாருக்கு கையசைத்து வணக்கம் சொல்ல, அவரும் பதிலுக்கு எழுந்து வணக்கம் சொன்னார். 

இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தாமரை மனதில் ஒரே எண்ணம்         ‘ இந்த மக்களின் அன்பிற்கும் இவன் தகுதியானவன் தானா ‘ என்று தான் நினைக்க தோன்றியது. அவளின் நிலைப்பாடு அவன் மீது தனி தான். இவன் கையால் பட்டம் வாங்க தான் இத்தனை தூரம் கிளம்பி வந்தோமா என்றிருந்தது அவளுக்கு. அவளின் முகத்தில் லேசாக தகிப்பு டேக் ஆஃப் ஆக, அவனை முறைத்தும் முறைக்காமலும் வரிசையில் நின்றிருந்தாள். 

அவளை மிகவும் சோதிக்காமல், அமைச்சர் திரும்பிவிட, கொஞ்சம் தனிந்தாள். ஆனால் அமைசரோ அழகனையும் சேர்த்தே கொடுக்க வைத்தார். இருவர் கையிலும் பட்டத்தை தாமரை வாங்க, 

“ ஆல் தி பெஸ்ட் மா. 

உங்க சிங்கர் மாதிரி நீங்களும் சாதிக்கணும். “ 

என அவர் வாழ்த்த, காதிலிருந்து புகை வந்தாலும் அவரிடம் புன்னகை முகமாக நன்றி சொன்னவள், அழகனை ஒரு நொடி பார்க்க, அவன் கண்களில் எள்ளளுடன் கூடிய அடக்கபட்ட புன்னகை நர்தனமாடியது. தாமரை விரைவாக வந்துவிட்டாள்.  

மேடையிலிருந்து கீழே வந்தவள், ரோஜா அருகில் உட்கார்ந்து, “ உப்ஃப் “ என வாய் குவித்து கண்கள் மூடி நிதானமாக மூச்சு விட, 

“ என்ன தாமு, மாமா கையாள டிகிரி வாங்கியாச்சா ? “ என கண்ணடித்து கேட்க, 

“ அவன மாமானு சொல்லாதனு எத்தன தடவ சொல்லிருக்கேன். “ என பல்லை கடித்து சொன்னவள். “ இன்னைக்கு எவ்ளோ ஆசையா கிளம்பி வந்தேன் தெரியுமா, இவன் கையாள வாங்குவேன் தெரிஞ்சிருந்தா லைன்ல ஃபர்ஸ்ட்டே போகிருப்பேன், ச்சே Why this is happening to me “ என அங்கலாய்ப்பாய் சொன்னவள் சேரில் உம் மென்ற முகத்துடன் சாய, 

“ விடு டா தாமு, இதுக்கு எல்லாம் ஃபீல் பண்ணலாமா. 

இருக்கட்டும் நம்ப சி‌எம்க்கு மெசேஜ் போட்டு, இப்படி சிங்கரு சொல்லாம டிகிரி கொடுத்துட்டாரு சொல்லுவோம். அப்போ தான் நம்ப வருதபடாத வாலிபி சங்க தலைவி  தாமு யாருனு ஊருக்குள்ள தெரியும். “  என ரோஜா தாமரை தோள் மேல் கை போட்டு தேற்ற, சிரித்துவிட்டாள் தாமரை. 

“ ஹேய் உனக்கு ஒன்னு எடுத்துட்டு வந்தேன். “ என சொல்லி நிமிர்ந்து அமர்ந்த தாமரை அவள் பையில் கொண்டு வந்த ஒரு கண்ணாடியில் செய்யபட்ட ஃபிரேம் தர, அதில் அழகாய் மஹாலக்ஷ்மி படம் நேர்தியாய் அலங்கரித்து வரையபட்டிருந்தது. 

செந்தாமரை வரைந்த தஞ்சாவூர் ஓவியம், தோழிக்கு என தனியாக வடிவமைத்து எடுத்து வந்திருந்தாள். அதை பார்த்த ரோஜாவிற்கு வைத்த கண் இமைக்கவில்லை. 

இருவரும் பயின்றது மூன்றாண்டுகள் ஓவியக்கலை. படிப்பு முடித்துவிட்டாலும் ஓராண்டாக நேரம் கிடைக்கும் போது எப்போதாவது தான் ரோஜா வரைந்து பயிற்சி செய்வாள், பிறகு அரசு வேலை தேர்வுக்கு படிப்பது என்றிருக்க, தாமரை கல்லூரி முடிந்ததிலிருந்து அதுவே சிறிய தொழிலாக செய்ய, ஆன்லைன் வழியாக ஓரளவு ஆர்டர்கள் அவளுக்கு வந்த வண்ணம் இருந்தது.  

 “ தாங்க்ஸ் தாமு. ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.” 

“ உனக்கு தான் கொண்டு வந்தேன், ஃபங்சன் முடிஞ்சதும் கொடுக்கலாம்னு இருந்தேன். பத்திரமா வச்சிக்கோ. “ என புன்னகை முகமாய் சொல்ல, பொக்கிஷமாய் வைத்துக்கொண்டாள் ரோஜா. தாமரையின் கைகளை இறுக்க அனைத்து சாய்ந்துக்கொண்டாள். ரோஜாவிற்கு அவள் அண்ணனுக்கு பிறகு தனக்கென பரிசுகள் என தருவது தாமரை மட்டும் தான் என தனி பாசம். வேறு யாரும் அத்தனை நெருக்கம் கிடையாது. வேம்புவை கூட பரிசு வாங்கி தர அனுமதித்ததில்லை, அப்படி இருக்க, இது அவளுக்கு தனி மகிழ்ச்சியை கொடுத்திருந்தது. 

     பட்டமளிப்பு விழா நிறைவு பெற்று அவரவர் பெற்றோகளிடம் செல்ல, 

“ சித்தி தா, என்க்கு தா. “ என ஆதி முதல் ஆளாய் தாமரையின் கல்லூரியில் கொடுக்கப்பட்டிருந்த மேல் அங்கியை பிடித்து இழுத்து கேட்க, அவனிடம் அதை கொடுத்தவள், அவனிடம் சான்றிதலை கொடுத்து அவனுடன் செல்ஃபி எடுக்க, மற்றவர்கள் வரிசையாக வாழ்த்தினர். 

இறுதியாக மலர் வாழ்த்த, “ ஃப்ளவர் அக்கா எங்க அத்தான் வரல ? “ என தாமரை சிறுகோபமாக கேட்க,

“ வேலையா வெளியூர் போயிருக்கார். நாளைக்கு வந்துடுவார். உனக்கு கொஞ்ச நேரத்துல கூப்பிடுவார் டா. “ என சமாதானம் செய்தாள்.

சில மணி நேரங்களில் விழா முடிந்தது. எல்லாரும் வெளியில் வந்து காசிநாதன் காரில் ஏற போக, அது கொஞ்சம் சிறிய வண்டி யாராவது ஒருவர் மடியில் அமர வேண்டும் , அதனால் மலர் மடியில் தாமரை, அவள் மடியில் ஆதி என வைத்துகொள்ள, காசிநாதன் கிளம்ப, சரியாக அழகன் வந்துவிட்டான். 

“ மாமா, என்ன அதுக்குள்ள கிளம்பிடிங்களா. “ என கதவு வழியாக விசாரிக்க, 

அவனின் கையை புன்னகையுடன் பிடித்துக்கொண்டவர் 

“ ஆமா மாப்பிள்ளை, பாப்பாக்கு ஃபங்சன் முடிஞ்சதுல, நீங்க அமைச்சர் கூட இருந்தீகள்ள, அதான் எல்லாம் கிளம்பிட்டோம்.  “ என சொல்லிக்கொண்டே வண்டியை விட்டு கீழே இறங்கினார். அவர் பின்னே வரிசாய் எல்லாரும் இறங்க, செந்தாமரையின் மடியில் இருந்து இறங்கவில்லை தாமரை. “சித்து“ என தாவிய ஆதியையும் விடவில்லை.

“ அமைச்சர் கிளம்பிட்டார். உங்களுக்காக தான் மாமா வைட் பண்ணிட்டு இருக்கேன். நம்ப எல்லாரும் வந்துட்டு தனி தனியாவா கிளம்புறது. வாங்க எல்லாம் நம்ப வண்டில போலாம். வாங்க அத்த. 

மலரு நீயும் வா, நம்ப ஆளுங்கள வச்சு வண்டிய எடுத்துக்காலாம். வா. “ என அனைவரையும் விடாமல் வற்புறுத்தி அழைத்தவன் தாமரையை அழைக்கவில்லை. அவள் ஏதாவது சொல்லுவாள் என பொதுவாய் அழைத்தான். அவர்கள் வேண்டாம் என சொன்னாலும் விடாமல் அவனின்  வண்டியில் அமரவைத்தான். அவனின் உதவி ஆள் ஒருத்தரை வைத்து அவர்களின் வண்டியை வீட்டில் விட சொன்னவன், இவனே வண்டியை எடுத்தான். 

முன்னால் அவன் ஓட்டுனர் இருக்கையில் அமர, அருகே காசிநாதன், பின்னால் செல்வம், அகிலா, தேவி, அவர்கள் பின்னே மலர், தாமரை ஜன்னலோரம் வேடிக்கை பார்த்தபடி ஆதி நிற்க வண்டி கிளம்ப, எல்லாரும் அவரவர்களுக்குள் பேசியபடி புறப்பட்டனர். 

தாமரை மலரின் கையை சுரண்டினாள். 

“ இவன யாரு வண்டில கூட்டிட்டு போக சொன்னது. நம்ப வண்டிலயே போயிருக்கலாம். உன் கொழுந்தனாருக்கு கொஞ்சம் கூட மத்தவங்க ப்ரைவசி பத்தி கவல இல்லையா. “ என மெதுவாய் பேச,

“ அடி பிச்சுடுவேன், எத்தன தடவ சொல்லிருக்கேன், அவன் இவன் சொல்லாதனு. எனக்கு கல்யாணமாகி மூணு வருஷமாக போகுது. உனக்கு இன்னும் முறை வச்சு கூப்பிட முடியலையா ? “

“ ஆமா முடியல. இப்போ அதுக்கு என்ன. கார் நிறுத்த சொல்ல, நான் இறங்கிக்குறேன். “ என அடம் பிடித்தாள்.

“ கிளம்புன வண்டிய உனக்காக நிறுத்த முடியாது. மரியாதையா மாமானு கூப்பிட்டு பழகு. என்கிட்ட வர பேச்சு தான் நாள பின்ன எல்லார்கிட்டவும் உனக்கு வரும். அப்படி என்னடி அடம் உனக்கு. ஒரு நாளைல பாதி நாள் டெய்லி அழகன தான கடைல பாக்குற. எட்டு மாசமாக ஆக போகுது. இன்னும் அவன் கூட ஒரண்டை இழுத்துகிட்டு இருக்க“ என அடிக்குரலில் திட்ட, 

“ ராஜா மாமா கிட்ட சொல்லி இவன உங்க ஃபேமிலில இருந்து டவ்வோர்ஸ் பண்ண சொல்லணும் “ என சொல்லி கண்களை மூடி சாய்ந்துக்கொண்டாள்.‌ 

 மலர் இருபக்கமும் தலையை ஆடியவள் தாமரையை மாற்றமுடியாது என வெளியில் இயற்கையை ரசிக்க சாய்ந்தமர்ந்து விட்டாள். 

தாமரை மனதில் , ‘ நான் என்ன தப்பு செஞ்சேன்னு இவன் கூடவே இருக்க மாதிரி லைஃப் என்னைய வச்சுருக்கு. ‘ என நினைத்தபடி வர, சிறிது நேரத்தில் தூங்கி விட்டாள். 

    மூன்றாண்டுகளுக்கு முன் மலர் கல்லூரி முடித்து வீட்டில் வரன் பார்த்துக்கொண்டிருந்த சமயம். 

பாண்டியனின் டிராவல்ஸை மிக பெரிதாக்கி விரிவுப்படுத்தி ‌ராஜேந்திரன் அதனை நன்றாய் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் வீட்டில் ரஞ்சனி  என்ற பெண்ணைப் பார்த்து நிச்சயக்கபட்டிருந்தது. திருமணத்திற்கு இரண்டு வாரம் முன் ரஞ்சனி வீட்டை விட்டு சென்று அவள் விரும்பியவனை கரம் பிடிக்க, இரு வீட்டிலும் நிலைமையை புரட்டிப் போட்டிருந்தது.          

எப்படியும் திருமணம் நடக்க வேண்டும் என பாண்டியன் அவசரமாய் சொந்ததில் பெண் தேட, ஒன்றும் அமையவில்லை, மலர் ஜாதகம் பக்கத்து வீட்டினார் வழி பாண்டியன் கைக்கு எதிர்பாராமல் கிடைக்க, எல்லாம் பொருந்தி வந்தது. ஆனால் பெண் வீட்டில் என்ன நினைப்பாரோ என நினைத்து பெருவுடையரிடம் பேச, அவர், “ செல்வம் கிட்ட நான் பேசுறேன், அவங்க அண்ணார் கிட்ட விஷயத்த சொல்லி கேட்டு பார்க்கட்டும். நான் பேசுறேன். “ என அவரே நேராய் செல்வத்திடம் வீடு தேடி வந்து பேச, கட்சியினர்குள் சலலப்பு. எதிரெதிர் கட்சியை சேர்ந்தவர்கள் உறவினறாய் ஆவது பத்திரிகை செய்தி வரை வந்துவிட்டது. 

காசிநாதன் தடுமாறி விட்டார். பெருவுடையார் வீட்டில் நிச்சயத்த பெண் இப்படி செய்திருக்க, அது மட்டும் இல்லாமல் இத்தனை ஆண்டுகளில் ராஜாவின் வீட்டின் வசதி பன்மடங்கு பெருயிருக்க, அது யோசிக்க வைத்தது.       

நாளை ஏதாவது இதை கொண்டு பேச்சு வந்துவிட்டால் மலர் வாழ்க்கை என்னாவது என மிகவும் யோசிக்க, அழகன் தான் அவர் தோப்பில் தனியாக சந்தித்து ராஜாவை பற்றி நம்பிக்கையாக எடுத்து சொல்ல, இரண்டு நாட்கள் கழித்து சம்மதம் வந்தது. 

ராஜாவின் தம்பியாக மட்டும் பேசலாம் மலர் நண்பனாகவும் பேசியது தான் காசிநாதனை அசைத்திருந்தது. அதன் பின் திருமணம் சிறப்பாக நடக்க, அதன் பின்னான அவர்கள் வாழ்வும் நல்லபடியாக அமைய, நிச்சயமாக தான் நல்ல முடிவு தான் எடுத்தோம் என காசிநாதன் மனம் நிம்மதி ஆனது. இம்முடிவுக்கு முக்கிய காரணம் அழகன் எனும் போது, அவன் மீது தனி பிரியமும் மரியாதையும் வந்திருந்தது. அவருக்கு மட்டும் இல்லை, மொத்த குடும்பத்தினருக்கும் அப்படிதான், தாமரையை தவிர.

அவள் எண்ணம் எல்லாம், ‘ பேசி பேசி எங்க பெரியப்பாவ மயக்கிட்டான்.’ அவன் மீதான அவள் எண்ணம் எதிலும் இன்று வரை மாற்றம் இல்லை. ஆனால் இருவர் வாழ்விலும் ஒரே ஒரு மாற்றம்.

  

Advertisement