Advertisement

பகுதி – 18

இப்ப கொஞ்சம் முன்னாடி உனக்கு ஒரு பெரிய கமிட் கிடச்சிருக்குமே.

ஆமா உங்களுக்கு எப்படி தெரியும்.

“உன்னோட விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைகும், என் பொண்டாட்டிக்கு நான் கொடுக்கிற அன்பு பரிசு தான் அந்த கமிட்” என்றான்.

“ஆர்விகா சுற்றி அனைவரும் இருப்பதையே மறந்து போனாள். தன்னையும் மறந்து அவன் மேல் இருக்கும் கோபம் கூட மறந்து யாஷ்” என அருகில் வந்து கண்கலங்க கட்டிக் கொண்டாள்.

நிஜமாவா யாரஷ். நீங்க தானா இத கொடுத்தீங்க.

உன் மேல சத்தியமா நானே தான் ஆர்வி.  புதுசா நமக்கு கிடச்ச ப்ராஜெக்ட்டுக்காக நான் கொடுத்த கமிட் தான் இது.  நீ சூப்பரா பண்ணுவனு எனக்கு நம்பிக்கை இருக்கு.  யாருக்கோ  கோடிக்கணக்கான பணத்தை கொடுக்கறத என் பொண்டாட்டிக்கே கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

“என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே. கொஞ்ச நேரத்தில இப்படி என்னைய அழவச்சி தவிக்க விட்டு.. ச்ச்சீ போடா. நான் எப்படி இத உங்ககிட்ட சொல்லப் போறேன். நீங்க எப்படி எடுத்துக்கப் போறிங்களோன்னு தூக்கம் இல்லாம தவிச்சிருக்கேன்.

போடாவா? எல்லாரும் இருக்காங்கடி. புருஷனுக்கு கொஞ்சம் மரியாதை குடு செல்லம். தனியா எவ்வளவு டா வேணாலும் சொல்லிக்கோ டியர்.

என்ன எவ்வளவு அழ வச்சிட்டிங்கள்ல.

நீ அழுதத விட அதிகமா உன் தங்கச்சி அழுதாடா. உண்மையாவே உனக்கு அனிஷா தங்கச்சியா  கிடைச்சது வரம். உனக்காக  அவ்வளவு போராடினா. அப்படி அழுதா. இப்படி ஒரு தங்கச்சி எத்தனை பேருக்கு கிடைப்பா.  நீ நெஜமாவே கொடுத்துவச்சவ.

இவ்வளவு நடந்திருக்கு. அவ என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல யாஷ்.

நான் தான் உன்கிட்ட எனக்கு உண்மை தெரியும்னு இப்போதைக்கு சொல்ல வேண்டாம்னு ப்ராமிஸ் வாங்கிட்டேன்.  ரெண்டு நாள்ல நானே அவகிட்ட சொல்லிக்கிறேன்னு சொன்னேன். அவளும் ஓகே சொல்லிட்டா.

அடிப்பாவி! அதுக்காக என்கிட்ட உண்மைய மறச்சிட்டாளா? வரட்டும் பேசிக்கறேன்.  “சாரி யாஷ்” என அவனது விரல்களை பிடிக்க.

என் மேல இருந்த கோவம் நிஜமாவே போய்டுச்சா ? ஆர்வி.

இன்னும் போகல தான். ரொம்பவே கஷ்டப்படுத்திட்டிங்க. இப்ப தான் அதிகமாக இருக்கு.  பதிலுக்கு நானும் செய்வேன்.

“ஆமா இப்படியே மாத்தி மாத்தி நீங்க பழிவாங்கிக்கோங்க. நடுவுல நாங்க என்ன பண்றது.  எங்களுக்கு என்ன பண்ணுவீங்களோ தெரியாது. நீங்க எப்படியோ சண்டை போடுங்க. எங்களுக்கு எங்க பேரப்பிள்ளை வேணும். அத பெத்து கொடுத்துட்டு எப்படியோ என்னமோ பண்ணுங்க” என வானதி குரல் கொடுக்க. “வளர்மதியும் ஆமா” என்றார்.

கன்னம் சிவக்க  வெட்கத்தால் ஆர்வி சிணுங்கினாள்.

யாஷ்மிதன், “என் பொண்டாட்டி வெட்கமெல்லாம் வருதே” என கை நீட்ட.

ஆர்விகா சுற்றி இவர்கள் இருப்பதையே மறந்து  யாஷ்மிதனின் நெஞ்சத்தில் சாய்ந்துகொள்ள. யாஷ்மிதன் தன்னவளை தன்னோடு அணைத்துக் கொள்ள.

நாங்க எல்லாம் எங்க தான் இருக்கோம். அதை மறந்துடாதீங்க.

“எத்தனை பேர் இருந்தாலும் அதை பத்தி எனக்கு கவலை இல்லை. என் பொண்டாட்டிய நான் கட்டிக்கிறேன். வேணும்னா நீங்க தூரமா போங்க” என மேலும் இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“நாம காஃபி குடிச்சிட்டு அப்படியே தோட்டத்த சுத்திப் பார்த்துட்டு வரலாம் வாங்க” என வள்ளிப் பாட்டி கூற.

அதுவும் சரி தான். இதுக்கு மேல இங்க நமக்கு வேலை இல்ல. வாங்க என அனைவரும் சிரித்துக்கொண்டே வெளியில் சென்றனர். டுமீல் வேறு இவர்களைக் கண்டு பெருங்குரலோடு அன்பு மழை பொழிந்தான். அவனையும் சேர்த்து தோட்டத்திற்கு அழைத்துச் சென்றனர். “எப்படியோ பிள்ளைங்க சந்தோஷமா சேர்ந்து வாழ்ந்தா போதும்” என்று நினைத்தனர்.

“ஆர்வி…”

“ம்ம்ம்ம்…”

நம்ம கல்யாணம் எப்படியோ எதிர்பாக்காம நடந்துடுச்சி. ஆனா அது கூட மறக்க முடியாது தான்.

அதுல என்னங்க இருக்கு.

நான் முதல்முறையா கால் பண்ணும் போது நீ அருக்காணினு சொன்னது தான். பயந்து எனக்கு மயக்கமே வந்துடுச்சி.

ஹஹஹஹ.  அது சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.

இனி அப்படி இருக்க மாட்டேன் ஆர்வி. நாகரீகம், ஆடம்பரம் மட்டுமே வாழ்க்கை இல்லனு புரிஞ்சிக்கிட்டேன்.

ரெண்டு பேர்ல ஒருத்தர் கல்யாணம் வேணாம்னு பின்வாங்கி இருந்தா கூட இப்படி ஒரு பொண்டாட்டிய நான் லைஃப்ல மிஸ் பண்ணி இருப்பேன்.

நானும் தான் யாஷ். முதல்ல கல்யாணம் வேணாம்னு தான் நினைச்சேன். ஆனா என்னமோ தெரில. உங்கள பாத்த உடனே ரொம்ப பிடிச்சது. நீங்க படிச்சவரு. கண்டிப்பா என் நிலமைய புரிஞ்சிட்டு எனக்கு துணையா இருப்பிங்கனு நம்பினேன். என் நம்பிக்கை வீண் போகல யாஷ்.

“சாரிடா…”

எதுக்கு யாஷ்…”

உன்ன கொஞ்சம் கஷ்டப்படுத்திட்டேன்ல அதுக்கு தான்.

அதான் இனி சந்தோஷமா வச்சிக்கப் போறிங்களே.

ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்கிட்டேன் ஆர்வி.

என்னங்க.

பெண்களோட திறமைய எப்போதும் குறைச்சி மதிப்பிடக் கூடாதுனு. அவங்களுக்கு உறுதுணையா கூட இருந்தா உலகத்தையே விலைக்கு வாங்கலாம். அத்தனை சக்தி இருக்கு பெண்கள் கிட்டனு புரிஞ்சிக்கிட்டேன்.

ரொம்ப சந்தோஷம் யாஷ். எனக்கு இது போதும்.

என்னோட எண்ணங்கள மொத்தமா மாத்திக்கிட்டேன் ஆர்வி. உனக்கு வலிக்கனும்னு உன்ன அழவச்சதும் தப்பு தான்.. அதுக்கும் சாரி கேட்டுக்கிறேன் டா.

அச்சோ! இன்னும் எத்தனை சாரி வச்சிருக்கிங்க யாஷ். போதும் விடுங்க. நீங்க புரிஞ்சிக்கிட்டதே எனக்கு போதும் யாஷ். நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்.

நான் சாரி சொன்னா நீ நன்றி சொல்லுவியா? நல்லா இருக்கே.

ஹிக்கும். அப்படி இல்ல யாஷ். நீங்க புரிஞ்சிக்கிட்டு மனசு மாறி என்னைய ஏத்துக்கிட்டதே மிகப்பெரிய சந்தோஷம்.

என்னோட லட்சியத்துல ஜெயிக்க வழி இல்லாம வறண்ட போன பாலைவனமா கிடந்த என் மனசுல  இப்போ “என் மனதை நனைக்கும் சாரலா” நீங்க வந்துட்டிங்க. இனி என்னோட மனசு பசுமையா துளிர் விட்டு லட்சியத்துல விருட்சமா வளரப்போறேன்” என அவன் நெஞ்சத்தில் தஞ்சம் கொண்டாள்.

தன்னவளை தன் இதயத்தில் சிறைபிடித்தவன் “என் மனதை நனைக்கும் சாரல் நீயடி” என அணைத்துக் கொண்டான்.

இனி இருவரின் மனமும் சேர்ந்து காதலெனும் சாரல் மழையில் நனைந்து வாழ்க்கைப் பயணத்திலும் மகிழ்ச்சியோடு வாழ அவர்களை நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்…

                          ??சுபம்??

அன்பு நெஞ்சங்களுக்கு

இதுவரை எனது கதையை படித்து என்னை உற்சாகப்படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. உங்களோடு பயணிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது..

இங்கு வரும் போது ஆழ் மனதில் ஒரு பயம் இருந்தது.. இந்த தளத்திற்கு நான் புது எழுத்தாளர்.. என்னை ஏற்றுக் கொள்வார்களா? என்னிடம் பேசுவார்களா? என்று நினைத்தேன்.. ஆனால் நீங்கள் எனக்கு கொடுத்த உற்சாகம் கொடுத்து என் எழுத்திற்கும் உயிர் கொடுத்தது. வார்த்தைகளால் சொல்ல முடியாத மகிழ்ச்சி அளிக்கிறது தங்கங்களே..

நன்றி.. நன்றி… நன்றி….

Advertisement