Advertisement

பகுதி – 09

ஹலோ, யோசிக்கிறத பாத்தாவே தெரியுது பிடிக்காம தான் இந்த கல்யாணத்த செஞ்சிகிட்டிங்கனு. நீங்க எப்படி வேணா பண்ணிக்கோங்க. எனக்கு எங்க அப்பாவோட சந்தோஷம், நிம்மதி தான் முக்கியம். அவருக்காக என்ன வேணா செய்வேன்.

ரொம்ப செல்ஃபிஷா இருக்க. நீ என்னைய கேள்வி கேட்கற.

ஆமா. நான் அப்படி தான். எனக்கும் முதல்ல இந்த கல்யாணம் பிடிக்கல தான்.. பட் இப்போ ஓகே தான். எனக்கு பொய் சொல்றது பிடிக்காது. நான் கொஞ்சம் பிடிவாதக்காரி. எனக்கு கோவம் அதிகமா வரும். போகப்போக என்னைய பத்தி புரிஞ்சிப்பிங்க.

இவங்க பெரிய இங்கிலாந்து எலிசபெத் ராணி. இதுக்கு மேல இன்னும் என்ன தெரியனும். மொத்தத்துல நீ ஒரு  அடங்காப்பிடாரினு ஒத்த வார்த்தைல சொல்ல வேண்டியது தான.

இந்த வார்த்தையை கேட்ட ஆர்விகாவிற்கு கோவம் பயங்கரமாக வந்தது.

“அடங்காப்பிடாரி” ங்கிற  வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?  நானாவது என்னோட கேரக்டர் பத்தி  சொல்லிட்டேன்.  நீங்க இப்ப வரை எதுவும் சொல்லாம மௌனம் சாதிக்கிறிங்க.  அப்போ உங்கள என்னனு சொல்லலாம்.

தேவையில்லாத வார்த்தைக்கு அர்த்தம் நான் ஏன் தேடனும்.

தேட வேணாம். தெரிஞ்சிக்கலாமே.

தெரிஞ்சிக்க தேவையில்ல.  அதுவும் தவிர தன்னைத் தானே புகழ்ந்துக்கறது  எனக்கு பிடிக்காது.

அவ்வளவு நல்லவரா? நம்பிட்டேன். அதான்  உங்க  முகத்திலயே  தெரியுதே.

அப்போது  வளர்மதியும், அனிஷாவும் தட்டில் காஃபி பலகாரம் எடுத்துக்கொண்டு வந்தனர். அவர்களோடு மூர்த்தியும் வர.

“காஃபி சாப்பிடுங்க மாப்ள” என வளர்மதி காஃபி கப்பை நீட்ட.

உங்களுக்கு எதுக்கு சிரமம். சொல்லி இருந்தா  நானே அங்க வந்திருப்பேனே.

இதுல என்ன இருக்கு மாப்ள.

“ஆர்விகா  தனது அப்பாவின் முகத்தைப் பார்த்தவள், காஃபி சாப்பிடுங்க மாமா” என யாஷ்மிதனிடம்  காஃபி கப்பை எடுத்து நீட்டினாள்.

அதைப்பார்த்த மூர்த்திக்கு மனது நிம்மதியாக இருந்தது.

யாஷ்மிதன் அமைதியாக வாங்கிக் கொண்டான்.

“கொஞ்ச நேரத்தில சாப்பாடு ரெடி ஆகிடும்.  நான் மீதி வேலையை பாக்கறேன்” என கூறிவிட்டு வளர்மதி நகர.  மூர்த்தியும் கூடவே சென்றார்.

“நீங்க பேசிட்டு இருங்க. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என அனிஷாவும் சொல்ல.

ஹலோ! லண்டன்.  அவங்க தான் பெரியவங்க. சோ  போறாங்க.  உங்களுக்கு என்ன?  கொஞ்ச நேரம் மொக்க போடலாமே.  நீங்க ஏதாவது பேசுவிங்க. உங்களுக்கு நடுவுல நான் எதுக்குனு நாகரீகமா ஒதுங்கினா. இது கூட புரியாத போல இருக்கே.

எங்களுக்கு எல்லாம் புரியும். லண்டன் ஹார்ஸ் ஊருக்கு பறந்து போய்டுமே. அதுக்குள்ள நாலு வார்த்தை பேசலாம்னு பார்த்தா.

என்னது லண்டன் ஹார்ஸ்ஸா.

தமிழ்ல சொன்னா தான் தெரியுமா?

ஓவரா பண்ணாதிங்க மாம்ஸ். லண்டன் குதிரைலாம் கொஞ்சம் ஓவர் தான்.  என் அக்கா கூடவே இருக்காங்க. அவங்க கூட பேசுங்க.  எனக்கு வேலை இருக்கு.

அப்படி என்ன பேச முடியாத அளவுக்கு அவசர வேல.

“ஒவ்வொரு வேலையும் சொல்லிட்டு செய்ய முடியுமா? நான் வேலைய  முடிச்சிட்டு வரேன்.  நீங்க ரெண்டு பேரும் பேசிட்டிருங்க” என  அனிஷா நகர்ந்தாள்.

உங்க சிஸ்டர் லண்டன்ல என்ன ஒர்க் பண்றாங்க.

எவ்வளவு கொழுப்பு இருந்தா என் முன்னாடியே அவள லண்டன் ஹார்ஸ்னு சொல்லுவிங்க.

“உன் முன்னாடி தான சொன்னேன். உனக்கு தெரியாம சொல்லலையே. நான்கூட உன்ன மாதிரி தான்.  ஓப்பன் டைப்” என்றான்.

இருக்கலாம். ஆனா இந்த டைப் நல்லதுக்கு இல்ல. கொஞ்சம் பாத்துக்கோங்க.

சரிங்க.  உன்னை எப்படி சொல்லி கூப்பிடுறதுனு தெரியலையே.

அது உங்க இஷ்டம்.

அது என்ன உங்க அப்பாவ பார்த்தா மட்டும்  மாமானு சொல்ற.

அது என்னோட இஷ்டம். எங்க எப்படி நடந்துக்கணுமோ அப்படி சரியா நடந்துக்க தெரியும்.

“பெரிய லண்டன் யுனிவர்ஸிட்டில படிச்சிட்டு  வந்துட்டாங்க.  ரொம்ப நாகரீகம் தெரிஞ்சவங்களாம்.  பட்டிக்காடு..  பட்டிக்காடு” என்றான்.

ஏன் பட்டிக்காட்டுல பிறந்து வளர்ந்தவங்களுக்கு நாகரீகம் தெரியாதா? இது உங்களோட டிக்ஷனரில இருக்கா?

நான் உன்கிட்ட ஆர்கியூ பண்ண விரும்பல.  உனக்கு எப்படி உங்க அப்பாவோட சந்தோஷம் தான் முக்கியமோ,  அதே போல எனக்கு எங்க அம்மாவுடைய சந்தோஷம் முக்கியம்.

ஆக மொத்தம் ரெண்டு பேருமே நடிக்க வேண்டியிருக்கும் அப்படித்தானே. அதை நேரடியாக சொல்லலாமே யாஷ்.

“இப்போதைக்கு இதைப் பற்றி என்ன பேசினாலும் சரியா இருக்காது. நடக்கிறது நடக்கட்டும் பார்க்கலாம்” என்றான்.

“இருவரின் மனதிலும் வாழ்க்கை எப்படி நகர போகிறதோ?” என்ற குழப்பம் இருந்தது.  நேரம் சென்று கொண்டிருந்தது.

இதற்குள் யாஷ்மிதன்  குடும்பத்தார் இவர்களை அழைத்து செல்ல வந்திருந்தனர்.

அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.  இத்தனை நாளா சிறு குழந்தை எனும் பெற்றோர் மனதில் வலம் வந்து கொண்டிருந்த ஆர்விகா இன்று தனது புகுந்த வீட்டிற்கு செல்வதை நினைத்து மூர்த்திக்கு  மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் தனது மகளை விட்டு பிரிவது தாங்க முடியாத வலியாகத்தான் இருந்தது. ஆனாலும், தன் செல்ல மகளை மகிழ்ச்சியோடு வழியனுப்ப தயாராக இருந்தார்.

ஆர்விகாவின் மனதில் தன்னுடைய லட்சியம் பற்றிய எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது. லட்சியத்துக்காக தன் வாழ்க்கையையே பணயம் வைத்தவள்.  கிளம்பும் முன் அனிஷாவை தனியாக அழைத்துச்சென்று  பேசினாள்.  பிறகு மன நிம்மதியோடு பெற்றோரிடம் கூறிக்கொண்டு புகுந்த வீட்டிற்கு கிளம்பத் தயாரானாள்.

அவளுடைய செல்ல நாய் டுமீல்  அவனை அனுப்ப மனமின்றி அவளை சுற்றி சுற்றி வந்து  கத்தியது.  அவனை ஆசையோடு கொஞ்சிவிட்டு காரில் ஏறினாள்.

யாஸ்மிதன் குடும்பத்தார் ஆர்விகாவின் பெற்றோரிடமும், பாட்டியிடம் கூறிவிட்டு கிளம்பினார்கள்.  நல்லா நேரம் முடிவதற்குள் தங்களது வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

உற்றார் உறவினர்கள் அனைவரும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள். சமீராவும்  கிளம்புவதாக இருந்தாள்.

“இப்போ உனக்கு என்ன அவசரம். உடனே கிளம்புறவ.  அண்ணன் கல்யாணம் முடிஞ்சு ஒரு நாள் கூட ஆகல.  இது எல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல பார்த்துக்கோ” என வானதி அவளை திட்டிக் கொண்டு இருக்க.

“மாமா இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு போங்க.  உடனே கிளம்பினா எப்படி” என யாஷ்மிதன் தன் பங்கிற்கு  கேட்டான்.

“வேலை நிறைய இருக்கு டா.  வேணும்னா சமீரா இருந்துட்டு வரட்டுமே. நான் மட்டும் கிளம்புறேன்” என சபரிஷ் சொன்னான்.

“அவரை விட்டுட்டு நான் எப்படி” என சமீரா வார்த்தைகளை இழுக்க.

“சமீரா சொன்னா கேளு”  என வளர்மதி சொல்ல.

“சரிம்மா” என சமீரா அமைதியானாள். சபரீஷை  மட்டும் வழி அனுப்பி வைத்தார்கள்.

ஆர்விகா புது இடம் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் அமர்ந்திருக்க.

“சமீரா அண்ணி வாங்க வீட்டை சுத்தி பாக்கலாம்” என அவளது கையைப் பிடித்து கொள்ள. சரியென ஆர்விகாவும் அவள் பின்னால் சென்றாள்.

சமையலறை முதற்கொண்டு வீடு மொத்தத்தையும் சுத்தி காட்டத் தொடங்கினாள்.

யாஷ்மிதனின் அறையையும்  காட்டினாள்.  ஆடம்பரமான மிகப்பெரிய அறையாக காணப்பட்டது.  கபோர்டு ஒர்க் செய்யப்பட்டு மிகவும் நாகரீகமாகவும் நவீனமாகும் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த அறை மட்டும் மிகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  ஆர்விகா அசந்து போனாள்.  ‘மிகவும் ரசனையுள்ள ஜீவன் தான்  போல’ என நினைத்துக் கொண்டாள்.

இதற்குள் வானதி இடமிருந்து இவர்களுக்கு அழைப்பு வந்தது.  “சாமி கும்பிடணும் பொண்ண கூட்டிட்டு வாம்மா” என குரல் கொடுக்க. ஆர்விகாவின்  வீட்டிலிருந்த சம்பிரதாயத்திற்கு மூன்று பேர் மட்டும் வந்திருக்க.  சமீரா, ஆர்விகாவை அழைத்து வந்தாள்.

பூஜை அறையில் விளக்கு ஏற்றி கடவுளை வணங்கி பெரியோர்களின் ஆசீர்வாதத்தையும் பெற்றனர்.

அது வரை வேறு திசையில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த அவர்களது மனது நேரம் நெருங்க நெருங்க ஒரே திசையில் பயணிக்கத் தொடங்கி இருந்தது.

“இன்று இரவு என்ன நடக்கப்போகிறதோ” என எதிர்பார்ப்புகளை கூட்டும் வண்ணம் நிமிடங்கள் கரைந்து கொண்டிருந்தது. அதற்கான தருணம் நெருங்கி வர யாஷ்மிதனை முதலில் அவனது அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு ஆர்விகாவின் கையில் சம்பிரதாயத்திற்கு பாலைக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.

பல சிந்தனைகளுடன்  அறைக்கதவை திறந்தாள். அங்கு  யாஷ்மிதன்  படபடப்புடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.

அவன் அவளைப் பார்த்த நொடியில் அப்படியே நின்றான்.  உள்ளே வந்து கதவை தாளிட்டாள்.  டேபிளின் மீது பாலை வைத்துவிட்டு அவனது முகத்தையே பார்த்துக் கொண்டு கைகளைக் கட்டியபடி நின்றாள்.

அவள் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து யோசித்தவன், என்ன அப்படி பாக்குற?  நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இங்க ஒன்னும் நடக்காது.

ஹலோ!  நான் என்ன நெனச்சேன்.  என்ன நடக்குது?  கொஞ்சம் சொல்ல முடியுமா?

என்ன நெனச்சேன்னா இது என்ன கேள்வி.  எல்லா பொண்ணுங்களும் நினைக்கிற மாதிரி தான்.

நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.  என்னோட கேரக்டரே வேற.  மத்த பொண்ணுங்க மாதிரி நான் இருக்க மாட்டேன்னு. ரொம்பலாம் எதிர்பார்க்காதீங்க.

“ஆமா.. ஆமா..  நீ தான் அடங்காபிடாரி ஆச்சே.  நீ எப்படி எதிர்பார்ப்ப. நீ  என்ன வேணா பேசு. அதுக்கு முன்னாடி நான் சில விஷயங்கள் உன்கிட்ட பேசணும்” என்றான்.

“தாராளமா பேசலாமே” என்றாள்.

‘இவகிட்ட இப்போதைக்கு நமக்குள்ள ஒன்னும் இல்லைனு தெளிவா பேசி புரியவைக்கனும்’ என நினைத்தவன், அது வந்து பெருசா ஒண்ணும் இல்ல.

யாஷ், “ஒரு நிமிஷம். அதுக்கு முன்னாடி நான் சொல்ல வந்ததை சொல்லிக்கிறேன். அதை கேட்டுட்டு அப்புறமா நீங்க பேசுங்களேன்” என மெல்ல அவனருகில் வந்து நிற்க.

இப்ப எதுக்கு இவ்வளவு பக்கத்துல வந்து நிற்கிற. சொல்லவந்தத தூரமா தள்ளி நின்னே சொல்லலாமே.

உங்கள ஒன்னும் பண்ணிற மாட்டேன். பயப்பட வேண்டாம்.

உன்ன பார்த்து நான் ஏன் பயப்படனும்.  நீ சொல்லு. என்ன சொல்லணும்.

அவனை ஏற இறங்கப் பார்த்தாள்.  கண்டிஷன் நம்பர் ஒன். என்னோட விருப்பம் இல்லாம  என் பக்கத்திலேயே வரக்கூடாது.

“இப்ப தான் வர்லாம்னு இருக்கேன். இது ரொம்ப ஓவர் தான்.  இத நான் சொல்லணும்” என்றான்.

பேசும்போது குறுக்க பேசினா எனக்கு பிடிக்காது.

இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. அடுத்து சொல்லு.

கண்டிஷன் நம்பர் டூ.  நான் என்னோட இஷ்டப்படி தான் இருப்பேன்.  என்ன உங்க கண்ட்ரோல்ல வெச்சுக்கணும்னு நினைக்கக் கூடாது. என்னோட ஃப்ரீடத்த எதுக்காகவும் விட்டுத்தர மாட்டேன்.

இந்த கண்டிஷனுக்கு என்னால அக்சப்ட் பண்ணிக்க முடியாது. நெக்ஸ்ட்  சொல்லு.

அவனை முறைத்துக்கொண்டே அடுத்த கண்டிஷன்களை சொல்லத் தொடங்கினாள்.

அவளது அடுத்த  கண்டிஷன்களை கேட்ட உடனே யாஷ்மிதன் ஆடிப்போனான்.

சாரல் தொடரும்…

Advertisement