Advertisement

பகுதி – 06

“யாஷ் என்னப்பா மெஸேஜ் அது. அப்படியே நிக்கற. எதாவது முக்கியமான விஷயமா?” என வானதி கேள்வி கேட்க.

“ஆமாம்மா. ரொம்ப முக்கியமான விஷயம் தான். இதோ பாருங்க” என செல்போனை தாயிடத்தில் நீட்டினான்.

அதிலிருந்த செய்தியை படித்து பார்த்த வானதிக்கு சிரிப்பு அடங்கவில்லை.. வாய்விட்டு பயங்கரமாக சிரித்தார்.

“இதைப்பார்த்த சங்கர் அப்படி என்ன தான் மெஸேஜ் குடு யாஷ்” என வாங்கிப் பார்த்தவர் மெலிதாக உதட்டில் புன்னகையை தவழ விட்டு இதுல உனக்கென்ன வானதி சிரிப்பு வேண்டி கிடக்கு. மருமகளா வரப்போற பொண்ணு தான. அவ கேட்டதுல ஒண்ணும் தப்பில்லையே. இதுல உனக்கென்னடா கோவம்.

அவ இன்னும் உங்க மருமகளா வரல. அதுக்குள்ள ஏன் இந்த ஆர்ப்பாட்டம் பண்றீங்களோ தெரியல. எவ்வளவு கொழுப்பு இருந்தா எனக்கு இந்த வேலையை வைப்பா.

இது எல்லாரும் பண்றதுதான். இதுல என்ன குற்றத்த கண்டுபிடிச்ச. வானதி, உன் பிள்ளைக்கு இத பத்தி சொல்லி கொடு. நிச்சயதார்த்தத்துக்கு கட்டிக்கப்போற புடவை அழகா இருக்கணும்னு தான் எல்லா பொண்ணுங்களும் ஆசைப்படுவாங்க. இப்போ இருக்கிற பிள்ளைங்க டிசைன் டிசைனா துணிய தச்சு போடத் தான் ஆசை படுவாங்க.

அப்பா நான் இல்லைன்னு சொல்லல. ஆனா இவ பண்றது கொஞ்சம் ஓவர்னு தான் சொல்றேன்.

அப்படி என்னடா பெருசா பண்ணிட்டா. பிளவுஸ் டிசைன் இதுதான் வேணும்னு போட்டோ அனுப்பி இருக்கா.

அந்த பிளவுஸ் தைக்க கூலி ஏழாயிரம்னு அவளே சொல்லியிருக்காப்பா.

நேரடியா சொல்லிவிட்டாளேனு சந்தோசப்படு யாஷ்.

“அம்மா பணத்தை கூட நான் பெருசா நினைக்கல. ஆனா அத அளவு பிளவுஸ வந்து வாங்கிட்டுப் போனேன்னு சொல்லி இருக்காளே அதுதான் எனக்கு கோவமா வருது. என்னோட லெவல் என்ன? என் படிப்பு என்ன? நான் போய் பிளவுஸ் வாங்கிட்டு வரணுமா?”

“மகனே! நீ எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் பொண்டாட்டிக்கு இந்த வேலையை செஞ்சுதான் ஆகணும். இதுல தப்பு ஒன்னும் இல்ல. கௌரவ குறைச்சல் இல்ல. நானெல்லாம் உங்க அம்மாவுக்கு இந்த வேலையை இன்னும் செய்யறேன்” என சிரித்தார்.

நீங்க என்ன வேணாலும் சொல்லுங்க. இதெல்லாம் என்னால செய்ய முடியாது.

நீ செஞ்சுதான் ஆகணும் மகனே. இதுக்கு எல்லாம் வேற ஆள் வைக்க முடியாது.

“ஏம்பா நீங்களும் இப்படி பண்றீங்க” என யாஷ்மிதன் சலித்து கொண்டான்.

இதுதாண்டா நம்ம நடைமுறையே. எதுக்காகவும் நம்ம பழக்கவழக்கத்தை மாத்திக்க முடியாது. மோதிரம் புடவை எல்லாம் வாங்கிட்டு அந்த பொண்ணுகிட்ட காட்டிட்டு அப்படியே மாடல் பிளவுஸ் வாங்கிட்டு வந்துரு.

“இதைக்கேட்ட யாஷ்மிதனுக்கு உள்ளூர கோபம் இருந்தாலும் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கேற்ப சரி” என்று கூறிவிட்டு காரில் சென்று அமர்ந்தான்.

ஏங்க நாம கூட ஒரு எட்டு போய் வாங்கிட்டு வந்துடலாம்ல.

“நீ சும்மா இரு வானதி. சில விசயங்கள்ல இப்படி தான் நடந்துக்கணும். போகப்போக நீயே புரிஞ்சுக்கவ. வா” என்று இருவரும் காரில் வந்து அமர. கார் கடை வீதியை நோக்கி மெதுவாக நகர்ந்தது.

நகைக் கடைக்கு வந்து சேர்ந்த யாஷின் குடும்பம் நேராக மோதிரம் எடுக்கும் செக்ஷனில் சென்று அமர்ந்தனர்.

யாஷ், “அந்த பொண்ணு அனுப்புன போட்டோ காட்டு” என வானதி கேட்க.

யாஷ்மிதன் ஒருவித கடுப்போடு போட்டோவை ஓப்பன் பண்ணி தாயிடம் நீட்டினான்.

வானதி அதை கடைக்காரரிடம் காட்ட. அந்த டிசைனில் மோதிரங்களை எடுத்துக்காட்டினார்.

“இங்க பாருடா. இந்த டிசைன் ரொம்ப நல்லா இருக்கு. அந்த பொண்ணு அனுப்புனதுல இதுதான் சூப்பரா இருக்கும். இது எடுத்துக்கலாமா?”

“அதெல்லாம் உங்க இஷ்டம். எதையோ எடுங்க” என்றான்.

நீ சரின்னு சொன்னா தான் நான் பில்லே போட சொல்லுவேன்.

“யாஷ்மிதன் கடுப்போடு அதை பார்த்துவிட்டு, ஓகே.. நல்லா தான் இருக்கு. இதையே வாங்கலாம்” என்றான்.

சரியென மோதிரத்திற்கு பில் போட்டு விட்டு சாரி இருக்கும் செக்ஷனுக்கு சென்று ஒரு மணி நேரமாக மொத்த புடவையையும் கலைத்துப் போட்டு தேடி இறுதியில் ஸ்கை ப்ளூ கலர் புடவை மயில் கலர் பார்டர் கலந்த ஒரு புடவையை தேர்வு செய்து யாஷ்மிதனிடம் காட்டினாள்.

யாஷ் இது அந்த பொண்ணுக்கு சூப்பரா இருக்கும்.

உங்க செலக்சன் நல்லாத்தான் இருக்கும். சீக்கிரம் எடுத்துட்டு வாங்கம்மா போலாம்.

“டேய்! ஒழுங்கா பதில் சொல்லணும். இல்லன்னா இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். பரவாயில்லையா?” என்று கேட்க.

“அம்மா நிஜமாவே இந்த புடவை சூப்பரா இருக்கும்மா” என கையில் வாங்கி பிரித்துப் பார்த்தான்.

அந்த பொண்ணு இந்த கலர் தான் ரொம்ப பிடிக்கும்னு சொல்லியிருந்தா.

“அப்படியா? நீங்க சொன்னா சரியா தான் இருக்கும். இதையே பில் போட்டுருங்க” என்றான்.

அந்த புடவையை பில் போட்டு வாங்கிக்கொண்டு வெளியில் வந்தனர்.

யாஷ் எங்கள வீட்டுல விட்டுட்டு கையோட பொண்ணு வீட்டுக்கு போயிட்டு அளவு பிளவுஸ் வாங்கிட்டு வந்துருப்பா.

இப்பவே போகனுமா?

ஆமாடா கண்ணா. டைம் இல்ல. போய்த்தானே ஆகணும். என் செல்லம்ல. கொஞ்சம் கஷ்டம் பார்க்காம போயிட்டு வந்துட்டுப்பா.

“சரிங்கம்மா” என மனதில் முனகிக்கொண்டே பெற்றோரை வீட்டில் இறக்கி விட்டு தாயின் பிடிவாதத்தால் மீண்டும் பைத்தூர் கிராமத்தை நோக்கி காரை செலுத்தினான்.

ஆர்விகா தன் செல்போனில் எதையோ டைப் செய்து கொண்டிருக்க.

“அடேங்கப்பா. என்ன ஒரு நடிப்பு. என்ன ஒரு நடிப்பு” என பெருமூச்சு விட்டுக்கொண்டே வள்ளி பாட்டி ஆர்விகா அருகில் வந்த நிற்க.

என்ன பாட்டி. பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கு. என்ன நக்கலா?

ஆமாடி அம்மா. எள்ளுருண்டை வேண்டாம்னு உரல்ல தலைய விட்டு கதையா சொல்லுவாங்க. அப்படி இங்க ஒரு ஜீவன் சுத்திட்டு இருக்கு.

எதுவா இருந்தாலும் நேரடியாக சொல்லு பாட்டி. ஓவரா பேசாத. நேரடியா பேச பயமா?

நான் ஏண்டியம்மா பயப்பட போறேன். அருக்காணி அருக்காணினு இங்க ஒரு மானஸ்தி இருந்தா. அவளை தான் காணம்னு தேடிக்கிட்டு இருக்கேன்.

கிழவி உனக்கு லொள்ளு ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கு. மொத்தமா சேர்த்து வச்சி கொடுக்கிறேன். இப்ப என்ன பிரச்சனை உனக்கு. எதுக்கு என்ன வந்து சீண்டி பார்த்துட்டு இருக்க.

கல்யாணமே வேண்டாம்னு வீரப்பா சொல்லிட்டு இருந்த. இப்ப என்னன்னா மாப்பிள பையனுக்கு போட்டோவ அனுப்பி வச்சிட்டு இருக்க.

பாட்டி தெரிஞ்சா பேசு. நான் மோதிரம் தான் மாடல் அனுப்பினேன். ரொம்ப ஓவரா பேசாத. அளவு பிளவுஸ் வந்து வாங்கிட்டு போக சொன்னேன். எனக்கு புடிச்ச மாதிரி தான் நான் போடுவேன்.

நல்லா போட்டுக்கடி அம்மா. நான் வேண்டாம்னு சொல்லலை. நான் கேட்டது இந்த காரணத்த இல்ல.

இப்ப உனக்கு என்ன தெரியனும்.

கல்யாணம் வேண்டாம்னு சொன்னியே. இப்ப மட்டும் எப்படி திடீரென இந்த மாற்றம்.

ஆமாம் சொன்னேன். அதுக்கு என்ன இப்போ. அப்ப அப்போ வேண்டாம்னு சொன்னேன். இப்போ பிடிச்சிருக்கு. ஓகேனு சொல்றேன். உனக்கு என்ன பிரச்சனை.

சத்தியமா உன்னை கட்டிக்க போறவன் ரொம்ப பாவம்டி. கூட இத்தனை வருஷமா இருக்க என்னாலையே புரிஞ்சுக்க முடியல. யாரு பெத்த புள்ளையோ? அது வந்து மாட்டிக்கிச்சு.

பாட்டி நீ ஓவரா சீன போடாத. அவ்வளவு சீன்லாம் உனக்கு இல்ல. அப்ப வேணாம்னு சொன்னேன். இப்ப எனக்கு பிடிச்சிருக்கு ஓகே ன்னு சொல்றேன். அவ்வளவு தான்.

அதாண்டி எனக்கு ரொம்ப சந்தேகமா இருக்கு. காரணம் இல்லாம நீ எதுவுமே பண்ண மாட்டியே. நீ கல்யாணம் வேண்டாம்னு அத்தனை ஆர்ப்பாட்டம் பண்ண. இப்ப எப்படி ஓகேன்னு சொல்ற.

அது என்னுடைய இஷ்டம். நீ உன் வேலையை பாரு.

சரிடி அம்மா. கல்யாணம் முடியற வரைக்கும் உன்னைய கொஞ்சம் கவனிச்சுக்கிட்டு தான் இருக்கணும். உன்னைய நம்பமுடியாது.

சரி நல்லா கவனிச்சுக்கோ. இந்த கல்யாணம் கண்டிப்பா நடந்தே தீரும். நான் என் மனசை மாத்திக்கிட்டேன் பாட்டி.

சரிடியம்மா. நானே நம்பிட்டேன். நான் ஒன்னும் உங்க அம்மா வளர்மதி இல்ல. நீ சொன்னத அப்படியே நம்ப. நான் வள்ளி.

“நீ வள்ளி இல்ல. எனக்கு வாச்ச வில்லி. எடத்த காலி பண்ணு” என்று கடுப்பாக கூற.

பாக்கறேன். நீ எவ்வளவு தூரம் நடிக்கிறனு. உண்மையைக் கண்டு பிடிக்காம விடமாட்டா இந்த வள்ளி.

சரி சரி நல்லா கண்டு பிடிச்சுக்கோ.

“என்கிட்டயேவா உன் நடிப்ப காட்ற. பாத்துக்கலாம்” என்று கூறிவிட்டு பாட்டி வெளியே வர.

“வர வர இந்த பாட்டு தொல்லை தாங்கல” என்று கடுப்போடு அருகில் இருந்த டம்ளரை எடுத்து வீசு.

யாஸ்மிதன் அங்கு வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

டம்ளர் சரியாக யாஷ்மிதனின் இதயத்தின் அருகில் வந்து விழுந்தது.

“அதை பார்த்த பாட்டி, என்ன காரியம் பண்ணிருக்க அருக்காணி.

அவ ஏதோ விளையாட்டுத்தனமாக பண்ணிட்டா. நீங்க எதும் தப்பா எடுத்துக்காதீங்க. உள்ள வாங்க தம்பி” என்று அவனை அழைத்தாள்.

ஆர்விகா பாட்டியின் குரல் கேட்டு எட்டிப் பார்த்தாள். அங்கு யாஷ்மிதன் நின்றதைப் பார்த்துவிட்டு, “பரவாலையே ரொம்ப வேகமாக வந்து இருக்கீங்க. கொஞ்சம் இருங்க வரேன்” என்று கூறிவிட்டு உள்ளே சென்று தனது அளவு ப்ளவுசை கொண்டு வந்து கொடுத்தாள்.

என்னடி இது எங்ககிட்ட கூட ஒரு வார்த்தை சொல்ல. ஒன்னும் சரியில்ல அருக்காணி. பெரிவங்கனு நாங்க எதுக்கு இருக்கோம்.

பாட்டி என்ன கடுப்பேத்தாத. உன் வேலைய மட்டும் பாரு.

அப்போது அங்கு வந்த வளர்மதி, “வாங்க தம்பி. போன வேகத்தில் திரும்பி வந்துட்டிங்க. என் பொண்ணு பார்க்காம இருக்க முடியலையா?” என என்னைக் கிண்டல் அடிக்க.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல ஆண்ட்டி. அம்மா அளவு பிளவுஸ் வாங்கிட்டு வர சொன்னாங்க. அதான் வந்தேன். அப்படியே இந்த மோதிரத்தையும் காட்டிட்டு வரச் சொன்னாங்க” என்று கூறி மோதிரத்தை எடுத்து நீட்டினான்.

“வாவ் உங்களுக்கு நல்ல ரசனை தான். சூப்பரா இருக்கு யாஷ். எனக்கு டபுள் ஓகே” என்றாள்.

அதென்னடி மரியாதை இல்லாம மாப்ளைய பேர் சொல்றது.

“அதெல்லாம் இப்போ சாதாரணம். போம்மா” என்றாள்.

“யாஷ் மோதிரத்தை வாங்கிக் கொண்டு, நான் கிளம்பறேன் ஆண்ட்டி” என்றான்.

இருங்க மாப்ள. காஃபி சாப்பிட்டு போங்க.

இல்ல. பரவால. நேரம் ஆகுது. வேலை நிறைய இருக்கு.

எங்களுக்கும் தான் வேலை கிடக்கு என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே வாசலில் கார் ஒன்று வந்து நின்றது.

தொடரும்…

அன்பு நெஞ்சங்களுக்கு

எனக்கு தொடர்ந்து விமர்சனம் கொடுத்து என்னை உற்சாகப்படுத்தி வழி நடத்தும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றியோ நன்றி..

நிறைய பேர் படிக்கிறிங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு..  தொடர்ந்து உங்கள் ஆதரவை கொடுங்க செல்லம்ஸ்…

Advertisement