Advertisement

பகுதி – 05

‘இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்ல. எப்ப பாரு யார் கால்லயாவது விழ சொல்றது. அவங்க போகட்டும். இன்னைக்கு இருக்கு உனக்கு’ என மனதில் நினைத்து கொண்டாள்.

“ஆர்விகா .. ஏய்.. ஆர்வி .. உன்ன தான்மா” என வளர்மதி தன் குரலை உயர்த்த.

ஆர்விகா வானதியின் காலில் விழ.

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்மா. மரியாதை மனசில இருந்தா போதும்” என்றார் வானதி.

“அது எங்கம்மாக்கு தெரியலையே” என மனதில் முணுமுணுத்தாள்.

யாஷ்மிதனோ அவளையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தான். “அடிப்பாவி. ஆர்விகானு பேரவச்சிட்டு அருக்காணினு சொல்லிட்டாளே. பயங்கர கேடியா இருப்பா போலவே. அப்படினா இவ ப்ளஸ்டூனு சொன்னதும் பொய்யா இருக்குமோ?” என யோசித்தான். “பேசாம கேட்ருவோம். யார கேட்கலாம். சரி அம்மாவையே கேட்டு போட்டு வாங்கலாம்” என நினைத்தவன், “அம்மா  ஒரு விஷயம்” என தயங்கினான்.

“என்னப்பா விஷயம். தயங்காம சொல்லலு” என வளர்மதி கேட்க.

“அதான் நிச்சயதார்த்தம் தேதியே முடிவு பண்ணியாச்சு. சம்மந்தி அம்மாவே  கேட்கறாங்க. சொல்லு யாஷ்” என வானதி மகனுக்கு சொல்ல.

பொண்ணோட பேரு என்ன?

“ஆர்விகா தான் மாப்ள” என வளர்மதி மகிழ்ச்சியோடு கூற.

‘என்ன மாப்ளையா? இன்னும் நிச்சயதார்த்தமே நடக்கல. அதுக்குள்ள மாப்ளையா?’ என நினைத்து கொண்டு, “அப்போ அருக்காணினு” என இழுத்தான்.

“ஹஹஹஹ.. அதுவா. அது அவங்க பாட்டி அவங்க அம்மா பேர வச்சே ஆகனும்னு செல்லமா அருக்காணினு வச்சி கூப்பிடுவாங்க. இந்த காலத்துல அப்படி பேர் வச்சா அவ்வளவு தான். ஆர்விகா தான் என் பொண்ணு பேரு” என்றார்.

“உங்க பொண்ணு என்ன படிச்சிருக்காங்க” என மெதுவாக கேட்டுவிட்டு ஆர்விகாவை பார்த்தான்.

“பயபுள்ள விவராமா தான் இருக்கும் போல. நான் சொன்னத நம்பாம கேட்குதே. அம்மா எல்லாத்தையும் சொல்லி தொலஞ்சிடுமோ? எதாவது உளறி கொட்டுமோ” என கொஞ்சம் படபடப்பாக அவளது இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது..

“வளர்மதி என்ன சொல்லப்போகிறாரோ” என யாஷ்மிதன் இதயம் எதிர்பார்ப்புடன் துடித்தது.

“ஆர்விகா பி.பி ஏ முடிச்சிருக்கா. அப்புறம் அதுக்கு மேல படிக்க பிடிக்கலனு வீட்டோட  இருந்துட்டா. நாங்களும் வயசு புள்ள. எதுக்கு வீணானு விட்டுட்டோம்” என்றார்.

‘எவ்வளவு பெரிய பொய். எனக்கா படிக்க பிடிக்கல. இந்த அம்மாவுக்கு பொய் பேசறதுல பி.ஹெச் டி பட்டமே தரலாம்மா’ என ஆர்விகா நினைத்தாள்.

” யாஷ்மிதனோ, அடிப்பாவி!. ஷாக் ஆகியே நான் வீணா போய்டுவேன் போல இருக்கே. பொய் பொய்யா சொல்றாளே. இந்த  கல்யாணம்  ஒரு வேல நடந்தா இவ எத்தனை ஆயிரம் பொய் சொல்லப்போறாளோ தெரியலையே. ரொம்ப பெரிய புழுகுமூட்டையா இருப்பா போல.  சொல்வதெல்லாம் பொய். பொய்யை தவிர வேறு ஒன்றும் இல்லை.. அப்படி கேரக்டர் போல இவ. இவள எப்படி சமாளிச்சி கல்யாணத்தை நிறுத்த போறேனோ தெரியலையே. பட்டிக்காடுனு வந்தா இவ வேற லெவல்ல இருப்பா போல என்ன பண்றது” என யோசித்தான்.

“அதுவும் சரிதாங்க. இந்த காலத்துல புள்ளைகள எதுக்கும் கட்டாயப்படுத்தவே கூடாது.. அவங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கட்டும்” என வானதி கூறிவிட்டு, “பொண்ணுக்கு நிச்சயதார்த்தத்துக்கு மோதிரம் எடுக்கனும். அளவு எடுத்துக்கட்டுமா?” எனக் கேட்டார்.

“எடுத்துக்கோங்க. இத கேட்கனுமா? ஆர்விமா விரல நீட்டு” என்று கூறிய வளர்மதி உள்ளே சென்று ஒரு நூல்கண்டை கொண்டு வந்து நீட்டினார்.

“எவ்வளவு விவரமா இருக்கு மம்மி.. ஹிக்கும்” என சலித்துக்கொண்டு வானதியிடம் ஆர்விகா தன் பட்டுபோன்ற விரலை நீட்டினாள்.

வானதி அளவெடுத்து கொண்டார். நிச்சயதார்த்த வேலைய பாக்கலாம். நாங்க கிளம்பறோம். எதாவதுனா போன் பண்ணுங்க என்றார்.

“சரிங்க” என வளர்மதி தலையாட்ட. சங்கரும் எழுந்து நின்று கரம் கூப்ப. மூர்த்தியும் எழுந்து நின்று வழியனுப்ப தயாரானார்.

“யாஷ்மிதன் ஆர்விகாவை கண்களுக்குள் சிறைப்பிடித்து கொண்டு சிந்தித்தான். இவ தான் நமது வாழ்க்கையில் வரப்போகும் விதியா? தப்பிக்க எதாவது வாய்ப்பு கிடைக்குமா? ஒண்ணும் புரியலையே” என்று யோசிக்க.

“இவன் என்ன இப்படி வச்ச கண்ணு வாங்காம பாக்கறான். விட்டா முழுங்கிடுவான் போலவே” என ஆர்விகா அவனை பார்க்க.

“யாஷ் பாத்தது போதும் டா. வேலை நிறைய இருக்கு. போலாமா?” என வானதியின் குரல் யாஷ்மிதனின் காதில் ஒலிக்க.

யாஷ்மிதனின் குடும்பம் ஆர்விகா குடும்பத்தாரிடம் விடைபெற்று கொண்டு வெளியே வர.

டுமீல் ஓடி வந்து தன் பாசத்தை யாஷ்மிதன் குடும்பத்தாரிடம் வாரிவழங்கி கொஞ்சி தீர்த்தான்.

யாஷ்மிதன் டுமீலை தடவி கொடுத்து விட்டு காரில் ஏறினான். கார் வீட்டிற்கு கிளம்ப அவனது மனமோ ஆர்விகாவை சுற்றி வட்டமிட்டு கொண்டிருந்தது.

இவ அழகா இருக்கும் போதே கொஞ்சம் டவுட்டா தான் இருந்துச்சு.. இவ மேக்கப்புக்கும் அருக்காணிங்கற பேருக்கும் சம்மந்தமே இல்லனு. நல்ல வேல. எம்.பி.ஏ பண்ல. கொஞ்சம் ஓகே தான். ஆனா எவ பொண்டாட்டியா வந்தாலும் நமக்கு கீழ தான் இருக்கனும் என்பதில் தெளிவாக இருந்தான். மனதில் குழப்பங்கள் இழையோடிக் கொண்டிருந்தது.

வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் சங்கர் அவசரமாக தனது மகள் சமீராவிடம் பேசினார். மருமகன் சபரிஷிடம் பேசி தகவலை சொல்லி உடனடியாக இருவரையும் கிளம்பி வரச்சொன்னார்.

“வானதி இன்னைக்கு நல்லநாள் தான். மோதிரம் எடுத்துட்டு வந்துடுவோம். யாஷ் நீயும் வாப்பா” என்றார்.

நானா. அதெல்லாம் எனக்கு பழக்கம் இல்லப்பா. நீங்களே போய்ட்டு வாங்க என்றவன் கைவிரல்கள் செல்போனில் படபடத்தது கொண்டிருந்தது. மனம் ஒருபக்கம் ஆர்பரித்துக் கொண்டிருந்தது.

உன் கல்யாணம். உனக்கு மனைவியா வரந்போற பொண்ணுக்கு நீதான்டா செலக்ட் பண்ணி வாங்கனும். நீ வர்லனா நாங்க போகல. அப்புறம் நீ தனியா போய்
வாங்கிட்டு வரவேண்டி இருக்கும் என்றார்.

இந்த ப்ளாக் மெயிலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. வந்து தொலைக்கிறேன் என்றான்.

“உனக்கு சரியா தான் பொண்ணு படிச்சிருக்கா. அழகா இருக்கா. நல்ல குடும்பம். இன்னும் என்னடா வேணும்” என சங்கர் மகனை ஏறிட்டு பார்க்க.

அழகா தான் இருக்கா. படிச்சி தான் இருக்கா. யார் இல்லைனு சொன்னாங்க. அவ பி.பி.ஏ படிச்சது எனக்கு பிடிக்கலப்பா.

இதெல்லாம் உனக்கே ஓவரா தெரிலையாடா மகனே. எம்.பி.ஏ படிக்கலையேனு நினைச்சி சந்தோஷப்படுடா. உன் புத்தி எப்பவும் கேவலமா தான் டா இருக்கு. நான் உன்னை மாதிரி நினைச்சு இருந்தா இந்த சொத்துங்க எதுவும் இருந்திருக்காதுடா. உங்க அம்மா பேச்ச கேட்டதால தான் இத்தனை வசதியும் வந்தது. பொண்ணுங்கனா நமக்கு கீழ தான் இருக்கனும்ங்கற நெனப்ப முதல்ல மாத்திக்கோடா என்றார்.

அப்படி ஒரு வசதி எனக்கு தேவையில்லப்பா. பொண்ணு படிச்சவளா இருக்கனும். அதே சமயம் எனக்கு அடங்கினவளா இருக்கனும். இவள பாத்தா எனக்கு அப்படி தெரிலப்பா. ஆரம்பத்திலயே பேரு  அருக்காணினு பொய் சொன்னா. இன்னும் எத்தனை பொய் பேலன்ஸ் வச்சிருக்காளோ என்றான்.

ஏன் நாம இப்ப பொய் சொல்லலையா. உன்ன பத்தி முழுசா தெரிஞ்சா தான் அவ தான் உன்ன வேண்டாம்னு சொல்லிட்டு போக வேண்டி இருக்கும். நெனப்பு வச்சிக்கோடா என்றார்.

நான் உங்கள பொய் சொல்லி கல்யாணம் பண்ணி வைங்கனு கேட்டனா? என அவர்களைப் பார்த்து யாஷ்மிதன் முறைக்க.

“எங்களுக்கு கையில எடுத்து கொஞ்ச பேரப்பிள்ளைகள் வேணும்டா. அதுக்காக இன்னும் எத்தனை பொய் வேணாலும் சொல்லுவோம்” என வானதி கண்கலங்க கூறினார்.

“அம்மா ப்ளீஸ். அழாதிங்க. நீங்க அழுதா நான் தாங்கமாட்டேன். உங்களுக்காக என்ன வேணா செய்வேன். இப்ப என்ன அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும் அவ்வளவு தான. பண்ணி தொலைக்கிறேன்” என்றான்.

“எனக்கு இது போதும் யாஷ். எல்லா அம்மாவுக்கும் இருக்க ஆசை தான் எனக்கும் இருக்கும்” என்றாள்.

‘ஹிக்கும். உங்க ஆசைல தீய வைக்க’ என நினைத்தான்.

அப்போது அவனுக்கு ஒரு மெஸேஜ் வந்தது. எடுத்துப் பார்த்தான்.

ஆர்விகாவிடம் இருந்து தான் அந்த மெஸேஜ் வந்திருந்தது.

“உங்க இஷ்டப்படி மோதிரத்த வாங்கிடாதிங்க. எனக்குனு ஒரு டேஸ்ட் இருக்கு.. நான் அனுப்பி இருக்க இந்த மாடல்ல வாங்குங்க. பிடிக்குதோ இல்லையோ நான் தான விரல்ல போட்டுக்கனும்” என அனுப்பி இருந்தாள்.

ஆர்விகா அனுப்பி இருந்த மாடல்களை பார்த்தான். ஆச்சர்யத்தில் விழிகள் விரிந்தது.

‘இவ நிஜமா பி.பி ஏ தானா. இவ டேஸ்ட் செமையா இருக்கே. ரொம்ப டிஃபரெண்டா செலக்ட் பண்றா. எனக்கு மேல இருந்தா கண்டிப்பா பிரச்சனை தான். பாக்கலாம்’ என நினைத்து கொண்டு வாங்க போலாம் என்றான்.

அதுக்குள்ள திடீர்னு இப்படி ஒரு மாற்றம்.. நல்லது தான்டா மகனே.. கிளம்பலாம் என்றார்..

அவர்கள் கிளம்ப அடி எடுத்து வைக்கும் போது யாஷ்மிதனின் செல்போனிற்கு அடுத்த மெஸேஜ் ஆர்விகாவிடம் இருந்து வந்திருந்தது..

அதை படித்து பார்த்த யாஷ்மிதனின் கண்களில் கோபம் பொங்கியது.

தொடரும்…

Advertisement