Advertisement

பகுதி – 04

“யாஷ் பொண்ண நல்லா பாத்துக்கோடா. நம்ம வீட்டு மகாலட்சுமி” என வானதி மகிழ்ச்சியோடு சொல்ல..

யாஷ்மிதனின் இமைகள் சில நொடிகள் இமைக்க மறந்தது.. அவளது படபடக்கும் இமைகளை கண்கொட்டாமல் பார்த்தான். ‘பேருக்கும் இவ அழகுக்கும் சம்மந்தமே இல்லையே. செம ஃபிகரா இருக்கா.. என்ன ஒரு ஸ்ட்ரெக்சருடா சாமி. செமையா இருக்காளே. அந்த லிப்ஸ் எப்பா.. செம..செம.. இவ்வளவு அழகா இருக்காளே’ என நினைத்தான்.

‘இந்த  ஃபிகரு தான் மாப்ளையா. நல்லா தான் இருக்கான். இருந்தாலும் நமக்கு சரியா வருவானானு தெரியலையே’ என நினைத்தாள்.

“யாஷ் பொண்ண பிடிச்சிருக்கா?” என வானதி மெதுவாக அவன் காதருகே குனிந்து கேட்க.

‘எனக்கு பிடிச்ச கருநீல கலர் புடவைல சூப்பரா இருக்காளே.  சிம்ப்ளி சூப்பர். அதுக்காக இவள கல்யாணம் பண்ணிட்டு நம்மாள குப்பை கொட்ட முடியாது. நமக்குனு ஒரு லக்ஸுரி லைஃப் இருக்கு.. அதுக்கு ஏத்த ஸ்டைலான பொண்ணு தான் நமக்கு செட் ஆகும். அழகா வேற இருக்காளே. அம்மா என்ன சொன்னாலும் கேட்கமாட்டாங்க. இப்ப என்ன பண்றது’ என மனதிற்குள் வேகமாக சிந்தனை குதிரைகளை தட்டி விட்டான்.

யாஷ்.. யாஷ்.. எல்லாரும் பாக்கறாங்க. இப்படி வச்ச கண்ணு வாங்காம பொண்ணையே பாக்கற. உனக்கு ரொம்ப பிடிச்சிருக்குனு புரியுது டா.

அச்சோ! இந்த அம்மா ஏன் இப்படி தாறுமாறா யோசிக்கிறாங்க. அம்மா அது வந்து… நான்.. எனக்கு..

“பிடிச்சிருக்கு.. அதான. இதுக்கு இத்தனை தடுமாற்றமா. ஹஹஹ. எங்க பையனுக்கு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு.. என்னம்மா உனக்கு என் மகன பிடிச்சிருக்கா?” என வானதி பட்டென்று கேட்க.

“வள்ளியம்மா குறுக்கே புகுந்து இப்படி ஒரு தங்கமான பையன யாருக்கு தான் பிடிக்காது. எங்களுக்கு பரிபூரண சம்மதம் தான். என்ன மூர்த்தி சரி தானே” என தன் மகனைப் பார்க்க.

“சரிதாம்மா. எங்களுக்கு சம்மதம் தான்” என தன் மகளைப் பார்த்தார்.

“தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்று அமைதியாக நின்றாள்.

“யாஷ்மிதன் பொறுக்க முடியாதவனாய்
அம்மா நான் கொஞ்சம் பொண்ணு கிட்ட பேசனும்” என்றான்.

அனைவரும் யாஷ்மிதனை பார்க்க.

“இதெல்லாம் இப்போ சாதாரணம் தான். பேசட்டும் விடுங்க. அப்போ தான் அவங்களும் ஒரு தெளிவான முடிவுக்கு வருவாங்க” என மூர்த்தி கூறினார்.

யாஷ்மிதன் அவளையே பார்த்து கொண்டு இருக்க.

அவளது விழிகள் எங்கோ பார்த்து கொண்டு இருந்தது.

“அதான் பொண்ணோட அப்பாவே பர்மிஷன் கொடுத்துட்டாரே. போய் பேசு யாஷ்” என வானதி யாஷ்மிதனை போகச் சொன்னாள்.

“தனியா போய் பேசி நிச்சயதார்த்தம் வரை போகாம நிறுத்திட வேண்டியது தான். இதான் நமக்கு கிடச்ச நல்ல வாய்ப்பு” என யாஷ்மிதன் மெதுவாக எழுந்து தயங்கி தயங்கி சென்றான்.

“இருவரும் வெளியே வந்து நின்றார்கள்.
சிலநிமிடங்கள் அமைதியாக சென்றது. யார் முதலில் பேசுவது” என ஒரு தயக்கம்..

“அவன் தான பேசனும்னு சொன்னான். அவனே பேசட்டும்.. நாம ஏன் பேசனும்” என தனது விழிகளை எங்கோ செலுத்தி நின்றாள்.

“இவங்க வீட்டுக்கு தான வந்தோம். இவ தான பேசனும். கொஞ்சம் கூட அறிவே இல்ல. திமிரு பிடிச்சவளா இருப்பா போல. இவ போன்ல பேசினதே கேட்க சகிக்கல.. இதுல நேர்ல வேற கேட்கனுமா? இவளுக்கு இதுவே ஓவர்” என யாஷ்மிதனே முதலில் பேசத் தொடங்கினான்.

“என்ன பேசித்தொலைக்க. எப்படி ஆரம்பிக்க. ஹலோ சொல்லலாமா? ஹாய் சொல்லலாமா? அருக்காணினு ஆரம்பிக்கலாமா?  இதுக்கே இவ்வளவு யோசிச்சா இவ நம்மள பத்தி என்ன நெனைப்பா?” என யாஷ்மிதன் சிந்தித்துக் கொண்டு நிற்க.

அவளை ஒரு முறை பார்த்தான். நல்லா தான் இருக்கா. பேச்சு தான் ஒரு டைப்பா இருக்கு. நாம எதாவது சொல்லி கத்தி ஊர கூட்டிடுவாளோ. எப்படி சொல்றது. இந்த கல்யாணம் வேண்டாம். உன்ன பிடிக்கலனு நேரடியா சொல்லிடலாமா? இவ எப்படி எடுத்துப்பானு தெரிலையே. முதல்ல பேசி பாக்கலாம்.

ஹலோ.. மிஸ்டர் யாஷ்மிதன்.. ரொம்ப யோசிக்காதிங்க. மர கழண்டுட போகுது. அங்க பேசனும்னு சொல்லிட்டு இங்க வந்து ஓவரா யோசிக்கறீங்க. இப்ப என்ன பேசனும்னு வந்திங்க. அத பளிச்சினு நேரடியா சொல்லுங்க என்றாள்.

“யாஷ்மிதன் ஒரு நொடி ஆடிப்போனான். நேத்து போன்ல இழுத்து இழுத்து ஒரு டைப்பா பேசினா. இப்ப நார்மலா பேசறா. இவ டபுள் கேம் ஆடப்போறாளா? இவ நம்மள விட கேடியா இருப்பாளோ?” என வாயடைத்து போய் அவளை ஏறிட்டு பார்த்தான்.

ஹலோ.. என்ன கற்பனையா? மிஸ்டர்..
என்ன பேசனும் சொல்லுங்க.

அது வந்து.. இல்லங்க. நான்.. உங்கள.. இல்ல.. உங்க கிட்ட..

“இது கொஞ்சம் ஓவரா தான் இருக்கு.. நார்மலா பேசுங்க” என தனது இருகைகளையும் கட்டிக்கொண்டு அவனை பார்த்தாள்.

நேத்து நீங்க போன்ல அப்படி பேசுனிங்க.. இப்போ இப்படி பேசறிங்க அதான். ஒண்ணும் புரியலங்க.

ஏன் அப்படி இப்படி பொண்ணுங்க பேச கூடாதுனு எதுவும் புதுசா சட்டம் இருக்கா? எப்படி பேசினா என்னங்க. நேத்து சும்மா பேசினேன் அவ்வளவு தான்.

நீங்க எப்படி வேணாலும் பேசுங்க. ஆனா நேத்து ஏன் அப்படி பேசினீங்கனு தெரிஞ்சிக்கலாமா?

அவசியம் தெரிஞ்சிக்கனுமா?

ஆமாங்க.

எதுக்கு? சார்.

“ஒருவேள உங்களுக்கு” என யாஷ்மிதன் வார்த்தைகளை விழுங்க.

என்ன உங்களுக்கு.. இதோ பாருங்க சும்மா இப்படி சுத்தி வலச்சி பேசாம விஷயத்துக்கு வாங்க.

ஓகே. எனக்கென்ன. நேரடியாவே கேட்கறேன். உங்களுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா?

ஏன் உங்களுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா? மிஸ்டர்..  மிஸ்டர்..

யாஷ்மிதன்..

ஆங்.. யாஷ்மிதன்..

“உண்மைய சொன்னா இவ என்ன நினைப்பா? பிரச்சினை பண்ணுவாளா? ஒருவேள இவளுக்கும் இந்த கல்யாணம் பிடிக்காம தான் நேத்து அப்படி பேசினாளா? இப்ப என்ன சொல்றது” என யாஷ்மிதன் தடுமாறினான்.

நேத்து நீங்க ஏன் அப்படி பேசினிங்கனு தெரிஞ்சிக்கனும் என்றான்.

அது சும்மா. அவ்வளவு தான். இப்ப நல்லா தான பேசறேன். பாத்தா தெரியலையா?

நல்லாவே தெரியுதுங்க.

அப்புறம். வேற என்ன பேசனும் யாஷ்.

என்ன யாஷ்னு பேர சொல்றிங்க.

அதான உங்க பேரு. அப்புறம் என்ன?

“இவ கொஞ்சம் ஓவரா தான் இருப்பா போல. இப்ப எதுவும் பேசினா வம்பு தான். இந்த அம்மாவ வீட்டில போய் பேசிக்கிறேன்” என நினைத்துக் கொண்டு, “ஆமாங்க. என் பேரு அதான். உங்க பேரு தான்” என இழுக்க.

“என் பேருக்கு என்ன? யாஷ்மிதன் வெட்ஸ் அருக்காணி.. ரொம்ப வித்தியாசமா இருக்கும்ல. இது நியூ ஃபேசன்னு சொல்லுங்க.. ஹிஹிஹி” என சிரித்தாள்.

அடிப்பாவி. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பேசறாளே.  ‘யாஷ்மிதன் வெட்ஸ் அருக்காணி’ என உள்ளுக்குள் ஒருமுறை சொல்லி பார்த்தான். சத்தியமா சகிக்கல. வேணும்னே பண்றாளா? ஆக மொத்தம் இப்ப எது பேசினாலும் ஆப்பு எனக்கு தான் வரும்.

“ஹலோ. அடிக்கடி கனவுலகத்துக்கு போறிங்க. பகல்கனவு அதிகமா வருமோ.  பாத்து சார். பழிச்சிட போகுது” என்று கூறியவள்,   ‘இவன் தான் நம்ம லட்சியத்துக்கு சரியான ஆளா இருப்பான் போல. பாக்கையிலே தெரியுது. கடவுளே.. நன்றியோ நன்றி.. பேக்கு மாதிரி தான் இருக்கு. ஓகே சொல்லிட வேண்டியது தான். அப்பாவ எதிர்த்து பேசவும் முடியாது. ஆனா யாஷ் நமக்கு சரியா தான் இருக்கும் போல’ என நினைத்தாள்.

ஆமாங்க. நமக்கு நல்ல பேர் பொருத்தம். அதான் மனசுகுள்ள  சொல்லி பார்த்தேன்.

“அவ்வளவு தானா. போலாமா?. இன்னும் எதாவது பேசனுமா?” என்றாள்.

நீங்க என்ன படிச்சிருக்கிங்கனு சொல்லையே.

இப்பவே சொல்லனுமா? இல்ல கல்யாணம் முடிஞ்ச பிறகு சொல்லவா?

கல்யாணமாஆஆஆஆ.. இவ முடிவே பண்ணிட்டாளா?. இப்பவே சொல்லுங்க.

“நான் ப்ளஸ் டூ தாங்க. கிராமத்தில அவ்வளவு தான் படிக்க முடிஞ்சது. எனக்கும் படிப்புல பெருசா ஒண்ணும் ஆர்வமில்ல. அதுக்கு மேல போகலங்க” என்றாள்.

‘என்னது ப்ளஸ்டூ வா. யாஷ்மிதன் எம்.பி.ஏ எங்க.. ப்ளஸ்டூ எங்க. அம்மா. நீ இன்னைக்கு வீட்டுக்கு வா. தொலஞ்ச’ என நினைத்து கொண்டான்.

“எங்க ஊருலயே நான் தான் அதிகம் படிச்ச பொண்ணுங்க” என்றாள்.

ஆமா. ஆமா. ரொம்ப பெரிய படிப்பு தான். ‘நல்ல பொண்ணு நல்ல பொண்ணுனு சொல்லி என்னோட வாழ்க்கையவே முடிக்கபோறாங்களா? என்னோட லட்சியமே வேற. இவள கட்டிட்டு நான் என்ன பண்றது. கடவுளே. உனக்கு கொஞ்சம் கூட கருணையே இல்லையா?’ என நினைத்தான்.

“வந்து ரொம்ப நேரம் ஆகுது. போகலாமா?”  என்றாள்.

இவ கிட்ட பேசி ஒண்ணும் ஆகப்போறது இல்ல. அம்மா கிட்ட தான் பேசனும்.

அடிக்கடி சைலண்டா இருக்கிங்க. அப்படி என்ன தான் யோசிக்கறீங்க. ஓவர் இமேஜினேஷன் உடம்புக்கு ஆகாதுங்க.

அதெல்லாம் ஒண்ணும் இல்லங்க. போலாம் என்றான்.

“இத பேச தான் வந்திங்களா? நான் கூட என்னமோனு நினைச்சேன். சரி வாங்க” என நகர.

யாஷ்மிதன் மௌனமாக அவளுக்கு பின்னால் நடந்தான்.

‘வானதி தன் மகனின் முகத்தையே பார்த்தாள். பொண்ணுகிட்ட என்ன பேசினானு தெரியலையே. ஏடாகூடமா எதாவது பேசி இருப்பானோ’ என சிந்தனை மனதில் ஓடியது.

“பொண்ணுக்கு என் மகன பிடிச்சிருக்கா?” என வானதி கேட்க.

“வளர்மதி தன் மகளை பார்க்க. பிடிச்சிருக்கு” என தலையசைத்தாள். ‘பிடிக்கலனு சொன்னா மட்டும் விட்ரவா போறிங்க’ என நினைத்தாள்.

“உங்க பையனுக்கு பிடிச்சிருக்கானு ஒரு வார்த்தை சொல்லிட்டா மத்தத பேசி முடிவு பண்ணிடலாம்” என வளர்மதி கேட்க.

என் பையன் நான் கிழிச்ச கோட்ட தான்டமாட்டான். நான் அப்படி தங்கமா வளர்த்து இருக்கேன். உங்க பொண்ணுக்கு பிடிச்சா சரி. அதான் பொண்ணே சம்மதம் சொல்லியாச்சே. இனி மேற்கொண்டு ஆக வேண்டியது பேசுவோம்.

“வர புதன்கிழமை நாள் நல்லா இருக்கு.. அன்னைக்கே நிச்சயதார்த்தம் வச்சிக்கலாம். நீங்க என்ன சொல்றிங்க” என சங்கர் கேட்க.

மூர்த்தியும்,வளர்மதியும் மகிழ்ச்சியோடு சம்மதம் சொல்ல.

யாஷ்மிதன் தனது பெற்றோரை பார்க்க. இவனை யாரும் கண்டுகொள்வதாக இல்ல.

சரிங்க. அப்போ புதன்கிழமை நிச்சயதார்த்தம். சொந்தபந்தங்கள்ல முக்கியமானவங்களுக்கு மட்டும் சொல்லிடலாம். உங்க பக்கம் ஒரு பத்து பேர். எங்க பக்கம் ஒரு பத்து பேர் போதும்.

“அதான் இப்போதைய நிலமைக்கு சரியா இருக்கும்” என வளர்மதியும் சம்மதம் கொடுத்தார்.

“சரிங்க. ரொம்ப சந்தோஷம். அப்போ நாங்க கிளம்பறோம்” என எழுந்து நிற்க.

“வளர்மதி தன் மகளின் பேரை சொல்லி அழைத்து பெரியவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோமா” என அழைக்க.

“யாஷ்மிதன் ஆடிப்போனான். அப்போ அவளோட ஒரிஜினல் பேர் அருக்காணி இல்லையா? இவ பெரிய கேடியா இருப்பா போலவே” என அவளை விழுங்கிவிடுவதைப் போல பார்த்தான்.

தொடரும்…

Advertisement