Advertisement

பகுதி – 17

“அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. என் பையன் கொஞ்சம் கோபக்காரன். அவ்வளவுதான். பொண்ணுங்க தனக்கு பிடித்த துறையில் வளர்ச்சி அடையறது தப்பே கிடையாது. இப்போ இதெல்லாம் சாதாரணம் சம்மந்தி.  அத ஏன் நீங்க தப்பா நினைக்கறிங்கனு எனக்கு தெரியல.  நான் கூட எங்க மருமகள் வீட்டோட இருக்கணும்னு ஆசைப்பட்டது உண்டு.  அதே சமயம் இவ்வளவு பெரிய துறையில நம்பர் ஒன்னா இருக்கிறது சாதாரண விஷயம் இல்ல. என் மருமக அந்த இடத்துல இருக்கானு தெரிஞ்சதும்  எங்களுக்கு அத்தனை பெருமை. இதை விடவும் பெருமை என்ன வேணும். இதை எப்ப நீங்க புரிஞ்சுக்க போறீங்க…”

“ஒரு பெண்ணா இருந்த இந்த துறையில் சாதிக்க இத்தனை கஷ்டங்களும் வலிகளையும் கடந்து இருக்கணும்னு தெரியுமா? அதையும் தாண்டி நம்பர் ஒன்னாக இருக்கும் இதைவிட சாதனை என்ன இருக்க முடியும் நினைக்கிறீங்க..”

“இப்படி ஒரு பொண்ணு பெத்ததற்கு பெருமை அடையனும். அவரோட வளர்ச்சியில நீங்க கூட இருந்து அவள மேலே கொண்டு வந்து இருக்கனும். அதான்  பெத்தவங்களுக்கு அழகு” என அறிவுரைகளை சங்கர் அடுக்கிக் கொண்டே போக.

அதைக் கேட்ட மூர்த்தி சூழ்நிலையை புரிந்துகொண்டார்.  இத்தனை நாளும் இப்படி பக்குவமா எனக்கு எடுத்து சொல்ல யாரும் இல்லைங்க. நான் தப்பா தான் புரிஞ்சுட்டு இருந்தேன். என் பொண்ணோட அருமை இப்பதான் எனக்கு தெரியுது. இனி அவளோட லட்சியத்துக்கு கண்டிப்பா துணையா இருப்பேன்.  நீ உனக்கு பிடிச்சத செய்மா. இந்த அப்பா உனக்கு துணையா இருப்பேன்.

“நீங்க மட்டும் இல்ல சம்மந்தி. நாங்களும் தான்” என வானதி கூற.

ஆனா மாப்பிள்ளை வேற கோபமா போயிட்டாரு. இப்ப என்ன பண்றது. எப்படி சமாதானப்படுத்துறது.

“அதெல்லாம் தானா சரியாகும்.  சரி பண்ணிடலாம். நீங்க கவலை படாதீங்க” என சங்கர் கூறினார்.

ஆர்விகாவிற்கு அப்போது  ஒரு போன் வந்தது.  எதிர்முனையில் வந்த வார்த்தையைக் கேட்டு தலைகால் புரியாமல் ஆடினாள்.

“ரொம்ப சந்தோஷமா இருக்கு. தேங்க் காட்” என்றாள்.

என்ன விஷயம்மா.

எனக்கு ஒரு மிகப்பெரிய ப்ராஜெக்ட் ஒன்னு  கிடைச்சிருக்கு மாமா. அந்த கமிட்  முடிஞ்ச்சா கோடிக்கணக்குல லாபம் கிடைக்கும்.

“அப்படியா?  ரொம்ப சந்தோசமா இருக்கும்மா. உன்னோட கண்ணீர் அந்த கடவுளுக்கு தெரிஞ்சிடுச்சி போல.  நீ நல்லபடியா முடிச்சி கொடும்மா.  நாங்க எல்லாரும் உன் கூட இருக்கோம்” என்று சங்கர் கூற.

ஆர்விகா மகிழ்ச்சியிலும் கண்கலங்க. என்னோட லட்சியமா? என் கணவரா? என நினைத்தாள். அந்த நொடி மடை திறந்த வெள்ளமாய் கண்ணீர் முட்டிக் கொண்டு வழிய.

ஒரு கைகள் அவளது கண்ணீரை துடைத்தது.  ஆர்விகா யாரெனப் பார்த்தாள். அந்த நிமிடமே விழிகள் அதிர்ச்சி அடைந்து இமைகள் இமைக்க மறந்து நின்றது.

யாஷ்மிதன் விரல்கள்தான் அது.

“தான் காண்பது கனவா? இல்லை நிஜமா?” என்று நம்ப முடியாமல் அவனைத் தொட்டுப் பார்த்தாள். நிஜமாகவே வந்திருந்தான். அனைவருக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

“சொல்ல சொல்ல கேட்காம அவள கொண்டுவந்து இங்க விட்டுட்டு இப்போ எதுக்குடா வந்த. கொஞ்சம் கூடவா இரக்கமே இல்ல” என வானதி கோபமாக தன் மகனைப் பார்த்து கேட்க.

ரொம்ப கோவப்படாதம்மா. எல்லாம் ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க தான்.

என்னடா சொல்ற.

என்னைய மன்னிச்சிடுங்க மாப்ள.  என் பொண்ண  வெளிநாட்டுல படிச்சது கம்பெனி வச்சிருந்தது எல்லாத்தையும் உங்ககிட்ட மறச்சது தப்புதான். எனக்கும் அது பிடிக்காது தான். பொண்ணுங்கனா இப்படி தான் இருக்கனும்னு கட்டுப்பாட்ட பாத்து வளர்ந்தவன் நானு.

அப்போ எதுக்கு படிக்க மட்டும் லண்டன் அனுப்புனிங்க.

“அது அவ சித்தி பிடிவாதமா கூட்டிட்டு போனா. சரி படிப்பு தான. படிச்சிட்டு போகட்டும்னு விட்டுட்டேன். அப்புறம் ஏதோ கம்பெனினு மும்பைலாம் போனாங்க. அது பிடிக்காம தான் அவள இங்கே வர வச்சி  கல்யாணத்தை முடிச்சுட்டோம்.  நாங்க வேணும்னு பண்ணல. அவர் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் உங்க கிட்ட சொல்லல. நாங்க செஞ்சது தப்புதான். தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க மாப்ள” என மூர்த்தி கையெடுத்து கும்பிட்டார்.

மாமா என்ன இது. நீங்க  வயசுல பெரியவங்க.

நாங்க பண்ண தப்புக்கு எங்க பொண்ண தண்டிச்சிடாதிங்க. உங்க கால்ல வேணா விழுறேன். மூர்த்தியிம் கண்களில் இருந்து கண்ணீர் வழிய.

“அப்பா” என ஆர்விகா கதறினாள்.

நான் செஞ்ச தப்புக்கு நீங்க எதுக்குப்பா மன்னிப்பு கேட்கனும்.  எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும். உங்க மரியாதை தான் எனக்கு முக்கியம். அதுக்காக இது எல்லாத்தையும் தூக்கி போடணும்னாலும்  யோசிக்கவே மாட்டேன்.  எனக்கு நீங்க தான் முக்கியம். யாஷ்மிதன் இப்பதானே வேணாம்னு விட்டுட்டு போனீங்க. அப்புறம் எதுக்கு திரும்பி வந்திங்க. நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கல.

ஓகே டார்லிங். ஆனா  மும்பை போயிட்டு வரும்போதே நான் ஒரு முடிவோட தான் வந்தேன்.

என்னது.  மும்பை போயிட்டு வரும்போதா?

ஆமாடி. என் செல்ல பொண்டாட்டி.

என்ன செல்ல பொண்டாட்டியா?  எனக்கு ஒன்னுமே புரியல.

உனக்கு எது தான் புரிஞ்சிருக்கு. இது மட்டும் புரிய.

நான் மும்பை போனப்பவே உன்னைப்பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன். அதை வெளிக்கொண்டு வர நான் போட்ட டிராமா தான் பார்ட்டில ஆரம்பிச்சது.

என்ன சொல்றிங்க?  எப்படி தெரிஞ்சுகிட்டிங்க? உண்மை தெரிஞ்சு பிறகு ஏன் இத்தனை பிரச்சினை பண்ணிங்க?

நான் மும்பை போனப்ப ஆஃபீஸ் வேலையா உங்க கம்பெனிக்கு ஒரு கமிட் கொடுக்க தான் போனேன். லண்டன் ஹார்ஸ பார்த்தேன்.

லண்டன் ஹார்ஸா? என்னடா சொல்ற.

சாரி.. சாரி. இவ தங்கச்சி அனிஷாவ பாத்தேன்.

என் தங்கச்சியவா?  அனிஷா பேசினாளா?

பேசிட்டாலும். அவ என்னைய பார்க்கவே இல்ல. நம்ம கம்பெனிக்காக ஒரு கமிட் கொடுக்கலாம்னு தான் அந்த  கம்பெனிக்கு போனேன்.

அப்பதான் அனிஷா கார்ல இருந்து இறங்கி மேல போறதை பார்த்தேன். கார் டிரைவர் கிட்ட விசாரிச்சதுல தான் இந்த கம்பெனி ஓனர் தான் அனிஷானு தெரிஞ்சது. முதல்ல ஷாக்காயிட்டேன்.  சரி லண்டன்ல படிச்ச பொண்ணு. இதெல்லாம் சாதாரணமானது தான்னு நெனச்சேன்.

அவளைப் பார்த்து பேசினீங்களா?

அவ யார் கிட்டயோ பேசிட்டு இருந்தா. பேசும்போது ஆர்விகா அவ ஹஸ்பண்ட் கிட்ட பேசறேன்னு சொன்னா. அதுவரைக்கும் நான் கொஞ்சம் சமாளிச்சி தானே ஆகனும். ஆர்விகாவும் தான் இதுக்கு பார்ட்னர். நான் மட்டும் முடிவு பண்ண முடியாது.  ப்ளீஸ் கொஞ்சம் புரிஞ்சிக்கோங்கனு சொல்லிட்டு இருந்தா.  அவ போன கட் பண்ற வரைக்கும் வெயிட் பண்ணிட்டு அவ முன்னாடி போய் நின்னேன்.

என்னைய பார்த்த உடனே முதல்ல ஷாக் ஆனா. அப்புறம் வாங்க மாம்ஸ். நீங்க எப்படி இங்கனு கேட்டா.

இதெல்லாம் ஏன் என் கிட்ட சொல்லல. அவ உண்மைய சொல்லிட்டாளா?

அவ முதல்ல சொல்லல. நீ இங்க என்ன பண்றனு கேட்டேன். அதுக்கு கொஞ்சம் சமாளிச்சி பேசினா.  ஆனாலும் நான் அவள விடல. அப்புறம் தான் உண்மைய சொன்னா.

எல்லாத்தையும் சொல்லிட்டாளா?

ஆமா. சொன்னா.  உன்னுடைய லட்சியம், அதுக்காக நீ பட்ட கஷ்டங்கள்னு  சொல்லி ரொம்ப அழுது கெஞ்சினா.  அவ இப்படி அழுவானு நான் எதிர்பார்க்கவே இல்ல.  அவ அழுதது இப்பவும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கு. என்னால தாங்கிக்க முடியல. அந்த நிமிஷம் பயங்கர கோபமா தான் இருந்தேன்.  ஆனாலும் அவளோட அழுகையிலே என் கோபம் காணாமலே கரைஞ்சி போய்டுச்சி.

‘அனிஷா எனக்காக இவ்வளவு அழுதாளா? என் தங்கச்சி எவ்வளவு பாசமா இருக்கா. அனிஷாவுக்கு நான் என்ன செய்யப் போறேன். லவ் யூ அனிஷா’ என மனதில் நினைத்துக் கொண்டாள்.

உன்னுடைய லட்சியம், நீண்ட நாள் ஆசை, அதுக்காக எவ்வளவு போராட்டங்கள சந்திச்சி இருக்கேன்னு ஒன்னு விடாம  சொன்னா. அவ சொன்னத கேட்டு அதிர்ச்சியடையறதா? சந்தோசப்படுறாதானு  எனக்கு தெரியல.  ஒரு பொண்ணா இருந்து நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு தூரம் சாதிச்சு மேல வந்திருக்கீங்க.

“தேங்க்ஸ் யாஷ்” என்றாள்.

உண்மையாகவே ஆச்சரியமாக இருக்கு ஆர்வி.  எவ்வளவோ பேரு இது மாதிரி பல சாதனைகளை செஞ்சதா கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வரிசைல  என் பொண்டாட்டியும் இருக்கானு இப்போ  ஹேப்பியா ஃபீல் பண்றேன். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.  எனக்கு ஈகோ நிறைய இருக்கு. எனக்கு மனைவியா வரப் போறவ எனக்கு கீழ தான் இருக்கணும்னு நினைச்சேன் தான். இல்லன்னு சொல்லல. ஆனா உன்னோட போராட்டத்தையும், உங்க அப்பாவோட எண்ணங்களையும், அனிஷா சொன்னப்போ அந்த இடத்திலயே உன் மேல இருந்த கோபம் எல்லாம் போயிடுச்சு. ஆனாலும் என்னோட வலி குறையல. அதனால தான் அந்த வலிய கொஞ்ச நேரமாவது உனக்கு கொடுக்கணும்னு ஒரு கேவலமான எண்ணம் புத்தில தோணுச்சு.

பார்ட்டிக்கு மும்பைல இருந்து அவங்கள நானாதான் வரவச்சேன். வேணும்னு தான் உன் டிரஸிங் பத்தி நான் கேவலமா பேசினேன். அப்போவாது நீ உண்மைய சொல்லுவனு எதிர்பார்த்தேன். அப்பவும் நீ உண்மையா சொல்லல.

நான் சொல்லனும்னு பலமுறை நினைச்சி இருக்கேன். ஆனா கேரக்டர் முழுசா புரியாம சொல்ல வேணாம்னு தான் யோசிச்சேன்.

அது சரி… இப்பவும் நானா கண்டுபிடிக்கலனா நீயா சொல்லி இருக்க மாட்ட. அந்த மும்பை பார்ட்டி முன்னாடி உண்மைய சொன்னத தெரிஞ்சி நீ அதிர்ச்சி அடைஞ்சியே தவிர உன்னோட லட்சியத்தில இருந்து  பின்வாங்கல.  எனக்காக விட்டுக் கொடுத்து இருந்தா தான் நான் உன்ன தப்பா நினைச்சு இருப்பேன்.

எதுக்காகவும் இலட்சியத்த  விட்டுக்கொடுக்க மாட்டேன்னு சொன்ன பாரு. அப்பதான் உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சது.  நீ அடிக்கடி மொபைல், லாப்டாப் யூஸ் பண்ணத நான் பெருசா எடுத்துக்கல. ஒருமுறை கவனிச்சு இருந்திருந்தா கூட அப்பவே கண்டுபிடிச்சி இருப்பேன்.

எவ்வளவு தைரியமான தன்னம்பிக்கையான பொண்டாட்டி. ஆனாலும் நீ என்கிட்ட பொய் சொன்னத அது என்னால தாங்க முடியல. அதுக்கு தான் பத்திரத்தை கொண்டு வந்து கையெழுத்து போட சொன்னேன். உனக்கு வலிய காட்டனும்னு உங்க அப்பா வீட்டுக்கு வந்து விட்டது. ஆனா இப்படி பண்ணது ரொம்ப தப்புனு இப்போ புரிஞ்சிக்கிட்டேன். இந்த கொஞ்ச நேரம் வலி உனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்னு எனக்கு தெரியும்.

ஏண்டா! அறிவு கெட்டவனே! சின்ன புள்ள மாதிரி இப்படியா செய்வா. உன் புத்தி இப்படி கேவலமா போகுது.  நாங்கள் எல்லாம் பயந்து போய்ட்டோம்.

“அவ பொய் சொல்லிட்டாளேனு கோவம் தாம்மா. சாரி ப்ளீஸ்.. ப்ளீஸ்” என்றான்.

என்னமோ போடா. கொஞ்ச நேரத்தில உயிரே இல்லாம பண்ணிட்ட.

இதைவிட இன்னொரு விஷயம்  சொல்லவா? அது இன்னும் உங்களுக்கு ஷாக்கா இருக்கும்.

என்ன? என்பது போல ஆர்விகா,  அவனைப் பார்க்க.

சாரல் தொடரும்….

Advertisement