Advertisement

பகுதி – 15

டேய்! ஓவரா குடிச்சிட்டு என்ன பேசுறோம்னு தெரியாம வாய்க்கு வந்தபடி பேசாத. மரியாதையா போய் தூங்கு.

அத்தை  கொஞ்சம் சாப்பிட வெச்சு அப்புறமா தூங்க வைக்கலாம். அப்படியே தூங்க வேண்டாம்.

எனக்கு ஒன்னும் தேவையில்லடி.  நீ எதுக்கு பொய் சொன்ன.  எனக்கு இப்போ உண்மை தெரிஞ்சாகணும்.

“என்னடா பொய் சொன்னா? என்ன பேசுற. என்னம்மா அவன் என்னமோ சொல்றான். எனக்கு ஒன்னும் புரியல” எனக் கேட்க.

“எனக்கும் ஒன்னும் புரியல அத்தை. அவரு என்ன சொல்ல வராங்னு தெரியல. குடிச்சிட்டு பேசுறாருனு நினைக்கிறேன்” என சமாளித்தாள்.

யாஷ்மிதன் அதற்கு மேல் பேச முடியாமல் தட்டுத் தடுமாறி சோஃபாவில் அப்படியே சாய்ந்தான்.

“அப்படியே தூங்கட்டும் விடும்மா. நீ போய் படு” என்று கூற.

கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க அத்தை.  மெத்தையில படுக்க வச்சிடலாம்.

“இதெல்லாம் எனக்கு தலை எழுத்து”என மகனை திட்டி கொண்டே இருவருமாக கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு மெத்தையில் கிடத்தினார்.

“அதற்கு மேல் என்ன நடந்தது” என்று தெரியாமல் யாஷ்மிதன் உறங்கிப் போனான்.

ஆர்விகா உறக்கமில்லாமல் தவித்துக் கொண்டிருந்தாள். விஷ்வாவின் போன் நம்பர் வாங்கியதே அப்போது தான் ஞாபகம் வந்தது. உடனே விஷ்வாவிற்கு போன் பண்ணி  அங்கு நடந்தது என்னவென்று முழுமையாக கேட்டு தெரிந்து கொண்டாள்.

“விஷ்வாவிடம் யாஷ்மிதனின் எண்ணங்களையும் முழுமையாக சொல்லி ஆறுதல் கூறினாலும் நம்பிக்கை இழந்து போய் சிறகொடிந்த பறவையாக நின்றாள்.  தன்னுடைய கனவு, லட்சியம், எதிர்பார்ப்புகள் அத்தனையும் உடைந்துவிட போகிறதா?” என துடித்துக் கொண்டிருந்தாள். காலையில் என்ன நடக்கப் போகிறது என்பதை எண்ணி விடியவிடிய உறக்கம் வராமல் அனலில் இட்ட புழுவாய் தவித்துக் கொண்டிருந்தாள்.

‘என்னதான் நாம யோசித்தாலும் நடக்கப்போறத நாம ஏத்துக்கிட்டு தான ஆகனும். அடுத்து என்ன செய்யனும்னு தான் நாம யோசிக்கணும்’ என நினைத்தாள்.  ஆனாலும் அப்போதைய சூழ்நிலையில் அவளால் எதையுமே சிந்திக்க முடியாமல் போனது.

ஆதவன் மெதுவாக பூமியை பவனி வந்து கொண்டிருக்க. யாஷ்மிதன் தலை பாரமாக இருக்க தலையை பிடித்துக்கொண்டு மெதுவாக எழுந்தான்.

“ஆர்விகா அருகில் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் யாஷ்மிதனுக்கு கோபம் பயங்கரமாக வந்தது. நீ இன்னும் போகாம இங்கதான் இருக்கியா?” என்றான்.

நான் எதுக்குப் போகணும்.

அடுக்கடுக்கா  பொய் சொல்லி வச்சிருக்க. இதுக்கு மேல உன்னைய இங்க வச்சிக்க நான் என்ன பைத்தியமா?

உங்கள மாதிரி பொய்யா நான் சொல்றேன்.  நான் என்ன பெருசா பொய் சொல்லிட்டேன்.  இப்படி ஊதாரித்தனமா குடுப்பிங்க. குடிகாரன்னு எங்கிட்ட சொல்லவே இல்லையே. அதை விடவா நான் சொன்ன போய் பெருசா போயிடுச்சு.

ஆமாடி.  நீ சொன்ன பொய் பெருசுதான். பி.பி.ஏன்னு சொன்ன. ஆனா நேத்து நான் கேள்விப்பட்ட வரைக்கும் மும்பைல அட்வடைஸ்மென்ட் கம்பெனி வச்சி நடத்தற.  அதுல நம்பர் ஒன் கம்பெனினு சொன்னாங்க. இப்பவாது உண்மையை சொல்றியா? அந்த நம்பர் ஒன் கம்பெனி உன்னோடது தானா?

ஆர்விகா எதற்கும் யோசிக்காதவளாய் தைரியமாக ஆமா. அந்த கம்பெனி என்னோடது தான். அதுக்கு  இப்போ என்ன பண்ணனும்.

எதுக்குடி பொய் சொன்ன.  உங்க அப்பன் ஆத்தா எல்லாருமா சேர்ந்து தான உண்மையை மறைச்சி இருக்கிங்க. பொய் பேசுறது உங்க குடும்ப பழக்கமா? இதுவரைக்கும் கார் ஓட்ட தெரியும்னு  நீ என்கிட்ட சொல்லவே இல்ல. ஆனா நேத்து கார் ஓட்டிட்டு வர.  இன்னும் எத்தனை பொய் மறச்சு வச்சு இருக்க.

எனக்கு இது தெரியும் அது தெரியும்னு புகழ் பாடுற பழக்கமெல்லாம் கிடையாது. தேவைப்படும்போது தெரிஞ்சா போதும்னு  நினைக்கிறவ.

அத கூட பொறுத்துக்கலாம்.  மும்பையில அட்வடைஸ்மென்ட் கம்பெனி வச்சிருக்க.  அப்போ அதுக்குனு இன்னும் ஏதாவது படிச்சு இருப்பேன்னு நினைக்கிறேன். நீயா சொல்லு. இன்னும் என்ன எல்லாம் பொய் சொல்லி இருக்க. நீயே மொத்தமா சொல்லிடு.

இதுக்கு மேல வேற எந்த பொய்யும் கிடையாது. எனக்கு விளம்பரத்துறையில ரொம்ப ஆர்வம் அதிகம். அதனால எனக்கு பிடிச்சத நான் செஞ்சேன்.

A.A கம்பெனினு பேர் வச்சிருக்க. ஒரு ‘A’ ஆர்வினு நினைக்கிறேன். இன்னொரு   ‘A’ யாரு?

அனிஷா. என் தங்கச்சி. உங்க பாணியில சொல்லனும்னா “லண்டன் ஹார்ஸ்”.

இப்போ உன்னோட காமெடிக்கு சிரிக்கற மன நிலையில நான் இல்ல.  இன்னும் எத்தனை பொய்ய மறச்சி வச்சிருக்க. அத மட்டும் சொல்லு.

இதுக்கு மேல எந்த பொய்யும் இல்ல யாஷ்.  என்னோட லட்சியம், கனவு எல்லாமே விளம்பரத்துறையில் நம்பர் ஒன் ஆகறது தான். இப்போதைக்கு அனிஷாவ வச்சி பாத்துக்குறேன். நான் நேரடியா இறங்கணும். இப்பவரை  நாங்க ரெண்டு எங்கயும் பேருமே முகம் காட்டல. முக்கியமானவங்களுக்கு மட்டும் தான் எங்கள தெரியும். இனி அதற்கான அவசியமே இருக்காதுனு நினைக்கிறேன்.

ஓஹோ! மேடம் அதுக்குள்ள நீங்களாவே ஒரு முடிவுக்கு வந்துட்டீங்களா?

உங்ககிட்ட பொறுமையா சொல்லிப் புரிய வச்சி என்னுடைய லட்சியத்துக்கு நீங்க உதவி செய்வீங்க அப்படின்னு எதிர்பார்த்தேன். ஆனா உங்க கோபத்தை பார்க்கும் போது அதற்கான வாய்ப்பே இல்லனு தெரியுது.  ஏன் லேடிஸ் இதெல்லாம் பண்ணக் கூடாதா?

லேடிஸ் தாராளம பண்ணலாம். ஆனா என்னோட பொண்டாட்டிய பண்ண விடமாட்டேன்.  எனக்குனு ஒரு மரியாதை இருக்கு. எனக்கு மனைவியா வரவ  எனக்கு கீழ தான் இருக்கணும்னு நினைக்கிறவன். என்கிட்டயே பொய் சொல்லி ஏமாத்திட்டா.  என்னால் அத தாங்கவே முடியலை. என்னால உன்னைய மன்னிக்கவே முடியாது.

நான் உங்ககிட்ட மன்னிப்பு கேக்கலையே. என் மேல இருக்க கோவத்துல  ஆட்டம் போட்டு பார்ட்டியிலயே  குடிச்சிட்டு ஆட்டம் போட்டீங்க.  நான் உங்கள மாதிரியா சண்டை போடுறேன். எதுவும் பிராக்டிகலா யோசிக்க பழகுங்க.

எப்படி?  நீ சொல்ற ஒவ்வொரு  பொய்யையும் நான் பிராக்டிக்கலா எடுத்துக்கணும்.  அப்படி தான.

நான் ஆர்க்யூ பண்ண விரும்பல. உண்மை இதுதான்னு தெரிஞ்சு போய்டுச்சா.  நான் உங்ககிட்ட பக்குவமா சொல்ல நெனச்சேன். அதுக்குள்ள என்னென்னமோ நடந்துருச்சு. இதுக்கு மேல என்ன பண்ணனும் நினைக்கிறீங்களோ அதை மட்டும் சொல்லுங்க. தேவையில்லாத பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

நான் பேசுறது உனக்கு டைம் வேஸ்ட்டா தெரியுதா? ஓகே. நான் நேரா விஷயத்துக்கு வரேன்.  இவ்வளவு நடந்த பிறகு நாம இனி சேர்ந்து வாழ முடியாது. டிவோஸ் பண்ணிக்கலாம்.

கல்யாணம் ஆகி இன்னும் ஒரு மாதம் கூட ஆகல.  அதுக்குள்ள எல்லாம் விவாகரத்து வாங்க முடியாது  யாஷ். இந்த சின்ன விஷயம் கூட யோசிக்க தெரியாதா?

ஓஓ.. அந்த நினைப்பில தான் தைரியமா நிக்கிறீங்களா?

“அப்படி இல்ல யாஷ். அம்மா மேல உயிரையே வச்சிருக்கிங்க. உங்க  அம்மா கிட்ட இத சொல்லுவீங்களா?..”

அவள் கேட்ட கேள்வியை அப்போது தான் யோசிக்கத் தொடங்கினான். தன்னோட கோபத்தை இவகிட்ட காட்டலாம். அம்மாகிட்ட சொன்னா நிச்சயமா இதை ஏத்துக்க மாட்டாங்க. அதற்கு மாறா சந்தோஷப்படுவாங்க. மருமகளை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க. அப்பா அதுக்கு மேல தான் இருப்பாங்க. நான் தான் தனியா போராட வேண்டியிருக்கும். என்ன பண்றது.  இன்னும் ஒரு வருஷத்துக்கு டிவோஸ் வாங்க முடியாது. அது வரை இவளோட குப்ப  கொட்டணுமா?  அவங்க அப்பா அம்மாவை வரவச்சி பேசினாலும் பிரச்சனை பெருசாகும். கொஞ்ச நாளைக்கு இப்படியே ஓட்ட வேண்டியதுதான்.

“இதோ பாருடி.  ஈவ்னிங் வரும்போது பத்திரம்  வாங்கிட்டு வருவேன். அதுல நீ  கையெழுத்துப் போட்டுக் கொடுக்கனும். எனக்கு தேவைப்படும் போது நான் யூஸ் பண்ணிக்கிறேன். நம்ம ரெண்டு பேருக்கும் விவாகரத்து பத்திரம் அதுதான்னு நினைச்சுக்கோ. இப்போதைக்கு உங்க அப்பாகிட்ட நான் பேச முடியாத சூழ்நிலை.  உங்க வீட்டிலயும் சொல்ல வேணாம். எங்க வீட்டிலேயும் சொல்ல வேணாம். பிரச்சனை நம்ம ரெண்டு பேருக்குள்ளயே இருக்கனும்.  நீ வேணா உங்க அம்மா வீட்டுக்கு போய் கொஞ்ச நாளைக்கு இரு” என்றான்.

நான் போக முடியாது. நீங்க வேணும்னா அத்தை கிட்ட சொல்லி என்னைய வெளியே போகச் சொல்லுங்களேன். உங்களுக்கு அவ்வளவு கஷ்டம்லாம் வேணாம். நானே போறேன். எல்லா உண்மையும் அத்தைகிட்ட மாமா வரட்டும்னு நானே சொல்லிடுறேன். இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

“நீ அடங்காபிடாரினு தெரியும். ஆனா ரொம்ப திமிர் புடிச்சவனு இப்பதான் தெரியுது.  நான் உன்கிட்ட பேச தயாரா இல்ல. நான் கிளம்புறேன்” என குளித்து ரெடியாகி டிபன் சாப்பிட வந்து அமர்ந்தான்.

ஆர்விகா அவன் பின்னால் வந்தாள். தட்டில் இட்லி வைத்து கொஞ்சம் சாம்பார், சட்னி  வைக்க.

உன்னைய  யாரு வைக்க சொன்னாங்க.  நீ என் முன்னாடியே வராதனு சொல்றேன்ல.

யாஷ்மிதன் கூறும் போது வானதி  அங்கு வர.

“ஆர்விகா கொஞ்சம் தோசையை எடுத்து யாஷ்மிதனுக்கு ஊட்டி விட்டு நல்லா சாப்பிடுங்கனு சொன்னா கேட்கிறீர்களா?”  என்றாள்.

அம்மாவின் முன் வழியில்லாமல் கோவத்தோடு மென்று முழுங்கினான். அவனிடம் ஒரு வார்த்தை கூட முகம் கொடுத்து பேசாமல் வானதி உள்ளே சென்றாள்.

“அதைப்பார்த்த யாஷ்மிதன், உன்னால தான் அம்மா என் மேல கோபமா இருக்காங்க. உன்ன சாயங்காலம் வந்து வச்சுக்கிறேன்” என கைகளை கழுவிவிட்டு கிளம்பினான்.

அப்பொழுது சங்கர் வீட்டிற்கு வந்து சேர. தனது மாமனாரையும், அத்தையும் சோஃபாவில் அமர வைத்து அவளை பற்றிய உண்மைகளை சொல்ல தொடங்கினாள்.  தான் லண்டனில் படித்தது முதல் மும்பையில் அட்வடைஸ்மெண்ட் கம்பெனி வைத்திருப்பது வரை  ஒன்றுவிடாமல் கூறினாள்.

இதை கேட்ட சங்கருக்கு பயங்கர ஆனந்தமாக இருந்தது. இப்படி ஒரு மருமக கிடைக்க நாம கொடுத்து வச்சிருக்கணும்.  “எப்படிப்பட்ட ஒரு விஷயத்தை சொல்லாமல் மறச்சிட்டியேம்மா. வாழ்த்துகள்மா. உனக்கு இன்னும் என்ன வேணும் சொல்லும்மா. தான் பண்றேன். தைரியமா பண்ணுமா” என்று கூற.

வானதியும் அதிர்ச்சியில் இருந்து விலகாமல் அவளை பார்த்தாள். “இதெல்லாம் என் பையனுக்கு நிச்சயமா பிடிக்காது. அவன் எப்படி தாங்கிக்கப் போறான்” என வானதி புலம்ப.

“சங்கரோ வானதிக்கு பொறுமையாக எடுத்துக் கூறி புரிய வைத்தார்.  இப்படி ஒரு மருமகள் கிடைக்கிறது வரம்தான் வானதி. நீயும் உன் பையனை மாதிரி யோசிக்காம  புரிஞ்சு நடந்துக்கோ. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார்.

வானதியும் முதலில் ஏற்றுக் கொள்ள சற்று கடினமாக இருந்தாலும் பிறகு புரிந்து கொண்டாள். ஆர்விகாவிற்கு தன்னம்பிக்கையும், ஆறுதலும் கூறினார்.

“அன்று மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருக்க.  ஆர்விகாவிற்கு நிஜமாவே கையெழுத்து வாங்கி விடுவானோ?” என்ற பயம் உள்ளூர இருந்தது.  ‘அத்தை, மாமா ரெண்டு பேரும் நம்ம பக்கம் இருக்காங்க. அதனால என்ன நடந்தாலும் தைரியமா ஃபேஸ் பண்ணலாம்’ என நினைத்துக் கொண்டிருந்தாள்.

‘எப்படியும் அவருடைய அம்மாவுக்காக நிச்சயமா அப்படி எல்லாம் செய்யமாட்டார்’ என நினைத்தவருக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது.

யாஷ்மிதனின் முடிவு அதற்கு நேர்மாறாக தான் இருந்தது. வீட்டிற்குள் நுழைந்து நேராக தனது அறைக்குச் சென்றான்.

“என்ன நடக்கப் போகிறதோ?” என்ற பதட்டத்துடன் அங்கு சென்ற மவுனமாக நின்றாள்.

யாஷ்மிதன் மெத்தையின் மீது ஒரு பத்திரத்தை  தூக்கி வீசினான்.

சாரல் தொடரும்….

Advertisement