Advertisement

பகுதி – 14

‘பட்டிக்காடுனு நெனச்சா பட்டிக்காடு எப்படி இங்கிலீஷ் பேசுறா? ஒருவேளை  கான்வென்டில படிச்சிருப்பாளோ? ஒரு வார்த்தை கூட இங்கிலீஷ் தெரியும்னு நம்மகிட்ட சொல்லவே இல்லையே. மும்பையில் இருந்து வந்த ஒரு சிலரிடம் ஹிந்தியிலும் பேசினாள். இதையெல்லாம் கவனித்த யாஷ்மிதனுக்கு அவள் மேல் மேலும் சந்தேகம் அதிகமாக உருவானது. நிச்சயமா இவ கிட்ட வேற ஏதோ இருக்கு’ என நினைத்தான்.

வானதி மருகளை அழைக்க.  தனது அத்தையை நோக்கி சென்றாள்.

மும்பையில் இருந்து வந்தவர்கள்,  நீங்க ரொம்ப லக்கி.  உங்களுக்கு ஏத்த பொண்ண தான் செலக்ட் பண்ணி இருக்கீங்க.

நீங்க என்ன சொல்றீங்க. எனக்கு புரியலையே.

“இவங்கள ஒருமுறை பார்க்க முடியாதா? பேச முடியாதானு எத்தனையோ பேர் வெயிட் பண்றாங்க.  இவங்க உங்களுக்கு மனைவியா கிடைச்சது ரொம்ப லக்கு” என்று கூற.

யாஷ்மின் அவர்கள் சொல்வதை புரியாமல், “என்ன சொல்றீங்க. கொஞ்சம் புரியும்படி சொல்லுங்களேன்” எனக் கேட்டான்.

நிஜமாவே உங்களுக்கு ஒன்னும் தெரியாம தான் கேட்கறிங்களா?

ஆமா சார். நீங்க எதப்பத்தி சொல்றிங்கனு தான் கொஞ்சம் குழப்பம். அதான் கேட்டேன்.

“உங்க மனைவிய பத்தி தாங்க. எவ்வளவு பெரிய அட்வர்டைஸ்மென்ட் கம்பெனியோட ஓனர் அவங்க. உங்க மனைவி இன்னைக்கு வரைக்கும் எங்கயும் முகம் காட்டல.  ஒரு சிலருக்கு மட்டும் தான் இவங்கள தெரியும். கம்பெனியோட பேர் மட்டும் தான் எல்லாருக்கும் தெரியும். எவ்வளவு பேர் பார்க்க முயற்சி பண்ணியும் இவங்க வெளி உலகத்துல முகம் காட்டாம தான் இருக்காங்க. ஆனா நீங்க எப்படி இவங்கள செலக்ட் பண்ணிங்க.  நீங்க பிசினஸ்ல வெளுத்து வாங்கறிங்க. உங்க மனைவி மும்பையில அட்வடைஸ்மென்ட் கம்பெனில நம்பர் ஒன்னா கொடிகட்டிப் பறக்கிறாங்க.  சூப்பரான ஜோடி. வாழ்த்துகள் சார்” எனக்கூற.

விஷ்வா  இப்போ நம்பறியா?  எனக்கு தலையே  சுத்துதுடா. மயக்கம் வராத குறை தான். அட்வடைஸ்மென்ட் கம்பெனியாம்.  இத்தனை நாளா நம்ம கிட்ட உண்மைய சொல்லாம மறச்சிட்டா.

இது சந்தோஷமான விஷயம் தான்டா.  ஏதோ ஒரு காரணத்துக்காக மறச்சி இருக்களாம்.

யாஷின் கண்கள் சிவக்க, கோபம் மனதிற்குள் நெருப்பாய் எரியத் தொடங்கியது. “எவ்வளவு பெரிய பொய் சொல்லி கல்யாணத்த பண்ணி இருக்காங்க.  நெஜமாவே பிபிஏ தானா? வாய்ப்பில்ல.  இன்னும் எத்தனை பொய் இருக்குன்னு தெரியலையே.  கோபத்தின் உச்சத்திற்கே சென்றான். பார்ட்டி முடியும் வரை பொறுமையாக இருக்க வேண்டும்” என காத்திருந்தான்.

என்னடா பார்ட்டின்னு ஜாலியா இருக்கலாம்னா, உன் முகத்தை பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே.

கொழுப்பா?  அதான் தெரியுதில்ல.  அப்புறம் எதுக்குடா கேக்குற.

நான் கேட்காம வேற யாருடா கேட்பாங்க.

இப்ப எதுவும் கேட்காத. நான் ரொம்ப கோவத்துல இருக்கேன்.

“ரொம்ப பண்ணாதடா. அப்படி என்னத்த பெருசா கண்டுபிடிச்சிட்ட சொல்லுடா” என விஷ்வா கேட்க.

நீ என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட். உங்கிட்ட எதையும் மறைக்க மாட்டேன்னு உனக்கே தெரியும்.

ஆமா யார் இல்லேன்னு சொன்னா. இப்ப உனக்கு என்னடா பிரச்சினை.

நான் அன்னைக்கே சொன்னேன். இவ நிறைய பொய் சொல்றானு.

ஆர்விகாவ சொல்றியா? சந்தோஷமா தூக்கி வச்சி கொண்டாட வேண்டிய விஷயத்த இப்படி பெருசு பண்ற.

ஆமா. அவள தான் சொல்றேன். அப்படி தான் செய்வேன்.

இப்ப என்னடா ஊர்ல இல்லாத பொய் சொல்லிட்டாங்க.

இங்க வந்த பிறகுதான் அவள பத்தின மிகப்பெரிய உண்மை எனக்கு தெரிஞ்சது.

அப்படி என்னடா ரகசிய கண்டுபிடிச்சிட்டிச்சிட்ட.

ஆமாடா. ரகசியம்தான். அதுலயும் முழுசா தெரியல.  இன்னும் எத்தனை பொய் அடங்கியிருக்கோ.  கடவுளுக்கு தான் வெளிச்சம்.

டேய் சுத்தி வளைக்காம பேசு.

அதான் மும்பைக்காரன் பேசினத  கேட்டல்ல. அவங்க மூலமா தான இந்த உண்மை தெரிய வந்தது.  இத்தனை நாளும் இவ்வளவு பட்டிக்காடுனு நினைச்சேன். ஆனா உண்மை அது இல்லையேடா. பயங்கர கோவமா வருது.

இதுல உனக்கு என்னடா கோவம். இப்படி ஒரு வைஃப் உனக்கு அமைய நீ கொடுத்து வச்சிருக்கணும்.

நான் கொலவெறியில இருக்கேன். அப்படியே திரும்பி பாக்காம ஓடி போய்டு.

என்னடா இப்படி  சொல்ற. அவங்க எவ்வளவு பெரிய பொசிஷன்ல இருக்காங்க.  அதை நினைச்சு பெருமை படாம ஏன்டா இப்படி கேவலமா நடந்துக்கற.  மும்பையில நம்பர் ஒன் கம்பெனி. அவங்க முகம் கூட காட்டியதில்ல.  A.A கம்பெனி நான் கேள்வி பட்டிருக்கேன்.

கூடவே இருந்தும் உண்மைய மறச்சது தான் ரொம்ப வருத்தமா இருக்கு.  ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல.

சொல்லி இருந்தா அப்படியே வாழ்த்தி வரம் கொடுத்து  இருப்பியா?

இல்ல தான்.  இருந்தாலும்…

அப்புறம் எதுக்குடா சொல்லணும். அவளுக்கு என்ன சூழ்நிலையோ. காரணம் இல்லாம இவ்வளவு பெரிய விஷயத்தை யாரும் மறைக்க நினைக்க மாட்டாங்க.

ஒரு பொண்ணு இவ்வளவு பெரிய உண்மைய மறைக்கறாங்கனா அதுக்கு பின்னாடி நிச்சயமா ஒரு காரணம் இருக்கும். கொஞ்சம் யோசிச்சுப் பாரு யாஷ்.

என்ன காரணமா இருந்தாலும் அத பத்தி எனக்கு கவலை இல்ல. என்கிட்டே எதுக்கு பொய் சொன்னா?

எதுவா இருந்தாலும் நல்ல விஷயம்தானே. கொஞ்சம் பொறுமையா இருடா.

எப்படிடா பொறுமையா இருக்க சொல்ற. அப்ப மேற்படிப்பு எங்க படிச்சா? என்ன பண்ணா? என்ன காரணத்துக்காக பட்டுக்காட்டுல வந்து இப்படி உட்கார்ந்துட்டு எல்லா உண்மையும் மறச்சா.

இதெல்லாம் சிஸ்டர் வரட்டும். பெருமையா கேட்டுக்கலாம்.

இதுக்கு மேல என்னடா பெருமை வேண்டி கிடக்கு.  இன்னைக்கு வீட்டுக்கு வரட்டும். இவ்வளவுதான் மறைச்சாளா? இல்ல இதுக்கு மேலயும் ஏதாவது இருக்கான்னு தெரிஞ்சுக்கணும்.  மொத்தமாக முடிவு கட்டறேன்.

யாஷ் இப்பவும் சொல்றேன். அவசரப்பட்டு தப்பான முடிவுக்கு போகாத. என்னவா இருந்தாலும் பொறுமையா பேசு. அவங்க பக்கத்துல இருக்குற நியாயத்த புரிஞ்சுக்கோ. என்னை பொருத்தவரைக்கும் அவங்களோட வளர்ச்சிக்கு உதவி செஞ்சா அவங்க இன்னும் பெரிய லெவல்ல வருவாங்க.  உனக்கும் நல்ல பேரு தாண்டா. புரிஞ்சுக்கோ யாஷ். உன்னோட வைஃப்னு  பெருமையா சொல்லிக்கலாம். இவ்வளவு பெரிய திறமையான பொண்ணு. எத்தனையோ பெண்கள்  திறமை இருந்தும் வளர முடியாம கஷ்டப்படுறாங்க. ஆனா இவங்க இவ்வளவு உயர்ந்த இடத்தில இருந்தும் ஏதோ காரணத்துக்காக அத்தனையும் விட்டுட்டு இங்க வந்து இருக்காங்க. அது என்னன்னு கண்டுபிடிச்சி அவங்கள திரும்ப அந்த இடத்தில் உட்கார வைக்கனும். அதுதான் ஒரு புருஷனா அவங்களுக்கு நீ செய்யற மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்.  நீ என்னடா பேசிட்டு இருக்க. எனக்கு இதுக்கு மேல பொறுமையே கிடையாது.

எனக்கு ட்ரிங்க்ஸ் வேணும்.

அம்மா வந்திருக்காங்க  டா. மறந்துட்டு பேசுறியா?

அம்மாவா.  அவங்களால  தான் இத்தனை பிரச்சினையும்.  எனக்கு இனி அதை பத்தி கவலை இல்ல. அவங்களுக்கு நான் குடிப்பேன்னு தெரியும் இல்ல. அப்புறம் என்ன?

என்ன இருந்தாலும் தப்புடா. இப்போ வேணாம். அப்பா நைட்டு இங்கேயே இருக்க வேண்டிய சூழ்நிலை. நானும் இப்ப கிளம்பிடுவேன். நீயும் குடிச்சிட்டு மட்டையாகிட்டா அவங்க எப்படி வீட்டுக்கு போவாங்க.

எப்படியோ போகட்டும். எனக்கென்ன. இப்ப கொண்டு வர முடியுமா? முடியாதா? நான் ரொம்ப கோவத்துல இருக்கேன்.

“நான் சொல்றத கேளுடா. அவ பக்கம் பேசுற யாரும் எனக்குத் தேவையில்ல. முதல்ல நீ கிளம்பு” என அவனை தள்ளி விட்டு வேகமாக சென்றான்.

விஷ்வா ஆர்விகாவிடம் சென்று நடந்த விஷயத்தை கூற. அவள் அதிர்ச்சி அடைந்தாள். “எந்த உண்மை இதுவரை தெரியக்கூடாதுனு நினைச்சமோ அந்த உண்மை இப்போது உடைந்து விட்டதே.  இதற்கு மேல் எப்படி சமாளிக்கப் போகிறோம்” என்று பலவாறாக சிந்திக்க.

விஷ்வா ஆறுதல் சொல்லிவிட்டு அவனது தொலைபேசி எண்ணையும் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

யாஷ்மிதனின் நிலையைப் பார்த்த சங்கரும், வானதியும் மிகவும் வருத்தப்பட்டனர்.

“ஆர்விகா அவனது நிலையை பார்த்து கண் கலங்கி நின்றாள். அ.. அத்தை.. அவரு குடிப்பாரா?” எனக் கேட்டாள்.

அது..  வந்து..  எப்பவாது கொஞ்சம் குடிப்பான்..

இத ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல அத்தை.

எப்படியும் அவன் மனச  நீ புரிஞ்சிப்பனு தான் அப்பவே சொல்லல. அவங்கவங்க என்னென்னமோ பொய் சொல்லி கல்யாணம் பண்றாங்க. நாங்க பெருசா ஒன்னும் சொல்லலையேம்மா. தப்பா எடுத்துக்காதம்மா.

“இப்போ எதுவும் பேசமுடியாத சூழ்நிலை. பேசவும் கூடாது” என அமைதியாக நின்றாள்.

வானதி சங்கரைப் பார்த்து, “என்னங்க இப்போ இவன் கார் ஓட்ட நிலைமையில இல்ல. யாராவது டிரைவர் ரெடி பண்ணுங்க” எனக்கூற.

“ஒன்னும் வேண்டாம் அத்தை.  நானே ட்ரைவ் பண்றேன்.  அவர பின் சீட்டில படுக்க வைங்க. நாம கிளம்பலாம்” என்று சொல்ல.

என்னம்மா சொல்ற.  உனக்கு கார் ஓட்ட தெரியுமா?

நல்லாவே தெரியும்.  நீங்க வந்து உட்காருங்க. இத்தனை நாளா ஒரு வார்த்தை கூட சொல்லல.

சொல்ல வேண்டிய நேரம் வரல.  சூழ்நிலையும் கார் ஓட்ட வேண்டிய சூழ்நிலையும்  வர்ல.  தெரியும்போது தெரியட்டும்னு தான் சொல்லல.

கேக்கறதுக்கு ரொம்ப சந்தோசமா பெருமையா இருக்கு ஆர்விகா.

சங்கர் கைத்தாங்கலாக தனது மகனை காரின் பின் சீட்டில் படுக்க வைத்தார். வானதி காரின் முன் இருக்கையில் அமர. ஆர்விகா காரை லாவகமாக ஓட்டத் தொடங்கினாள்.  சற்று நேரத்தில் வைத்திருக்க பத்திரமாக வந்து சேர்ந்தனர்.

ஆர்வி தப்பா எடுத்துக்காதம்மா. உன்னை பார்த்த உடனே எங்களுக்கு ரொம்ப பிடிச்சது. எப்படியாவது உன்னையே கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டோம். அதான் இந்த உண்மையை நாங்க மறச்சோம்.  மத்தபடி வேற எதுவும் பொய் சொல்லல. மன்னிச்சிடும்மா.

யாஷ்மிதனை உள்ளே அழைத்து வந்தனர். வீட்டிற்குள் வந்த யாஷ்மிதன், “அம்மா இவள என் முன்னாடி நிக்க வேணாம்னு சொல்லுங்க. விடுடி” என கையை உதறி விட்டான்.

“ஆர்விகா அடுத்து என்ன நடக்கப் போகிறதோ” என துடித்துக் கொண்டிருந்தாள். “இவருக்கு உண்மையெல்லாம் தெரிஞ்சிடுச்சு. இத  எப்படி எடுத்துக்கப் போறாரோ?” என பயந்து போய் நின்றாள்.  ‘இப்ப தான் தெரியுது.  பெண்கள் முன்னேற்றம் இவருக்குப் பிடிக்காதுனு. இவரு பேசியத வச்சி நல்லாவே தெரியுது. என்னோட லட்சியத்துக்கு இவர் முக்கியத்துவம் கொடுக்க மாட்டாரு. பிரச்சனை ஆரம்பம் ஆகிடுச்சு’ என மனதிற்குள் நினைத்து கொண்டாள்.

ஏண்டா அப்படி சொல்ற. அந்த பொண்ணு எவ்ளோ அழகா கார் ஓட்டிட்டு வந்து இருக்கா. உன்னை நம்பி வந்தா நான் தெருவுலதான் நிக்கனும். நல்லவேளை இவளுக்கு கார் ஓட்ட தெரிஞ்சதால வீடு வந்து சேர்ந்தோம்.

கார் ஓட்டத் தெரியும்னு இத்தனை நாள் ஆகி ஏன் சொல்லல.  இது மட்டும் தானா?  இன்னும் எத்தனை பொய் சொல்லி இருக்கானு தெரிஞ்சா உங்க  மருமகள நீங்களா தூக்கி வெளியே வீசிடுவிங்க.

“என்னடா சொல்ற” என வானதி அதிர்ச்சியோடு அவன் முகத்தைப் பார்க்க.

“ஆர்விகா என்ன நடக்கப் போகிறதோ” என தவிப்போடு இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு நின்றாள்.

சாரல் தொடரும்…

Advertisement