Advertisement

பகுதி – 13

‘உற்சாகத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான். ஆர்வமாக ட்ரஸ் பேக் பண்ணிட்டியா? ரெடியா இருக்கு” என்றான்.

“பண்ணிட்டேங்க.”

ஓகே எனக்கு பேச நேரமில்ல. நான் உடனே கிளம்பனும். அம்மா எங்க.

“அம்மா கோவிலுக்கு போய் இருக்காங்க…”

“ஓகே.  வந்தாங்கன்னு சொல்லிடு” என தனது அறைக்குச் சென்றவன் லக்கேஜை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

“ஏதோ சர்ப்ரைஸ்னு சொன்னாரு. இப்போ கண்டுக்காம போறாரே” என ஆர்விகா ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டு நின்றாள்.

ஆர்வி இங்க வாயேன்.

என்னங்க.

“லவ் யூ டி பொண்டாட்டி. உன்ன எனக்கு பிடிச்சிருக்கு” என அவளை இறுக்கி அணைத்து இதழோடு இதழ்பதித்து முத்தமிட்டான்.

இதை சற்றும் எதிர்பாராதவள் சிலையென நின்றாள். தான் காண்பது கனவா?  இல்ல நிஜமா?

ஹேய் ஆர்வி டியர் எனக்கு டைம் ஆகுது.

பதிலுக்கு ஒன்னும் இல்லையா?

வெட்கத்தை மட்டுமே பதிலாக கொடுத்தாள்.

“ப்ளீஸ் டி எதாவது குடுத்து அனுப்பு” என்றான்.

ஆர்விகா தயங்கி தயங்கி வெட்கத்தோடு அருகில் வரவும் வானதி வரவும் சரியாக இருந்தது.

என்னப்பா மும்பை கிளம்பிட்டியா?

“சிவ பூஜைல கரடி மாதிரி” என உள்ளுக்குள் நினைத்துக்கொண்டு, “ஆஆ… ஆமாம்மா” என்றான்.

ஆர்விகா இங்க தனியா தான இருப்பா. அவளையும் கூட்டிட்டு போலாம்ல.

இல்லாம்மா.  ஆஃபீஸ் வொர்க்கா வெளியில போக வேண்டியிருக்கும். இவளையும் கூட்டிட்டு அலைய முடியாது. இன்னொரு நாள் நாங்க தனியா போறோம்மா.

“சரிப்பா. பார்த்து பத்திரமா போயிட்டு வா. அங்கு போயிட்டு போன் பண்ணு” என வழியனுப்ப.

“நான் கிளம்புறேன்” என ஆர்விகாவை பார்த்து கண் சிமிட்ட.

“வெட்கத்தில் கன்னம் சிவக்க. சரி” என தலையசைத்தாள்.

“இந்த நேரம் பார்த்தா இந்த மும்பை ப்ரோக்ராம் வரணும். எல்லாமே பழிவாங்குதே” என மனதில் சலித்துக் கொண்டு போக விருப்பம் இல்லாமல் மனதை இங்கேயே விட்டுவிட்டு உடலை மட்டும் சுமந்து சென்றான்.

ஆர்விகா தன்னவனின் பிரிவை எதிர்கொள்ள முடியாமல் அன்று இரவு முழுவதும் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

யாஷ்மிதனுக்கும் அப்படித்தான் இருந்தது.

ஆர்விகா அவனது புகைப்படத்தை எடுத்து வைத்துக் கொண்டு அதனோடு பேசத் தொடங்கியிருந்தாள்.

யாஷ்மிதன் அங்கே சென்ற உடனே ஆர்விக்கு  போன் பண்ண. இருவருக்கும் வார்த்தை வராமல் ஊமையாகிப் போனது.

ஆர்வி இப்பவாது அந்த வார்த்தைய  சொல்லேன். எனக்கும் கேட்க ஆசையா இருக்கும்ல.

“எந்த வார்த்தை சொல்லனும் யாஷ்…”

“அதான் நான் சொன்ன மாதிரி நீயும் சொல்லணும்…”

“நீங்க நேர்ல சொன்னீங்களே. அப்போ நானும் நேர்ல தான் சொல்லணும்..”

“பிடிவாதம் பிடிக்காத ஆர்வி. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. சொல்லு ..”

“அதெல்லாம் முடியாது.  நானும் நேர்ல தான் சொல்லுவேன். நீங்க முதல்ல போன வேலையை முடிச்சுட்டு சீக்கிரம் வர பாருங்க. சண்டை போடும் போதெல்லாம் கூடவே இருந்தீங்க. புரிஞ்சுகிட்டு ஒன்னு சேரும்போது விட்டுட்டு போய்ட்டீங்களே…”

இது என்ன ரெண்டு நாள் தானே. நேரம் போறதே தெரியாது.  சீக்கிரம் ஓடி வந்து விடுவேன் பாரேன். ஒன்னும் பீல் பண்ணாத செல்ல பொண்டாட்டி..

“நான் எதுக்கு பீல் பண்ண போறேன்…”

“நிஜமாவா?”

உண்மையா தான் சொல்றேன்.  நைட்டிலாம் நிம்மதியா தூங்கினேன். எனக்கு பசிக்குது. நான் இப்ப சாப்பிட போறேன். நீங்க.

சரி.  நல்லா தூங்கு.  நிம்மதியா சாப்பிடு. நான் அப்படியே இன்னும் ஒரு வாரம் இங்கே இருந்துட்டு அப்புறமா ஊருக்கு வரேன்.

அச்சோ. ஒன்னும் வேணாம். நான் விளையாட்டுக்கு சொன்னேன் யாஷ்.  சீக்கிரம் கிளம்பி வாங்க.

“அப்படி வா வழிக்கு” என்றவன் உரையாடலை முடித்துக் கொண்டு போன வேலையை பார்க்க தொடங்கினான். வேலையை எதுவும் பிடிபடாமல் சற்று தடுமாறினான். ஆனாலும் வேலையை வெற்றிகரமாக முடித்தான்.  நேரம் போனதே தெரியாமல் இரண்டு நாட்கள் முடிந்திருக்க.  ஊருக்கு திரும்பினான்.

அவனைப் பார்த்த அந்த நொடி தான் அவளுக்கு வாழ்க்கையில் முக்கியமான நாளாகத் தோன்றியது.

“அம்மா எங்க” எனக் கேட்டான்.

“சமையலறையில இருக்காங்க…”

“சூப்பர்” என வந்த வேகத்தில் அவளை கட்டிக்கொண்டான்.  “ஐ லவ் யூ” ஆர்விகா. இப்ப நீ சொல்லேன். ரொம்ப ஆசையா இருக்குடி.

“என்னது ‘டி’ யா?”

“ஆமா டி. என் பொண்டாட்டி. அப்படி தான் சொல்லுவேன்..”

“ஆர்விகா கோவப்படாமல் சிரித்தாள்…”

“நான் சொன்ன மாதிரி சொல்லலையே. இதுக்கு இவ்வளவு வெட்கமோ…”

“நீங்க சொன்ன மாதிரி தானே சொல்றேன்…”

“இல்லையே.  நான் முத்தம் எல்லாம் கொடுத்து தானே சொன்னேன்…”

“இது நம்மளோட ரூம் இல்ல.  ஹால். அது ஞாபகம் இருக்கட்டும்…”

“சரிங்க மகாராணி…”

“அப்போது வானதி கையில் காஃபியோடு வர…”

“பாத்தியா.  இதான்  எங்கம்மா. கரெக்ட் டைமுக்கு காஃபி கொண்டு வராங்க…”

உன் குரல் கேட்டப்பவே காஃபி ரெடி பண்ணிட்டேன் டா.  ஆமா என் மருமகளுக்கு என்ன வாங்கிட்டு வந்த.

“உனக்கும் அவளுக்கும் சூப்பர் டிசைன்ல புடவை  வாங்கிட்டு வந்தேன். எப்படி இருக்குனு பாருங்க” என எடுத்து நீட்டினான்.

“மும்பை போய் வாங்கிட்டு வந்திருக்கீங்க. மாடர்ன் டிரஸ் எடுத்துட்டு வந்திருக்கலாமே…”

“எடுத்துட்டு வந்துட்டாலும். அதெல்லாம் உனக்கு போட தெரியுமா?..”

ஆர்விகா அமைதியாக நிற்க.

கொஞ்சம் மேக்கப் கிட் ஏதாவது வாங்கிட்டு வந்து இருக்கலாமேடா.

அதெல்லாம் இவளுக்கு  யூஸ் பண்ண தெரியுமா?  இனிமேதான் கொஞ்சம் கொஞ்சம்ம சொல்லிக்கொடுத்து மாத்தனும்மா.

என் மருமக மேக்கப் போடாமலே தேவதை மாதிரி தான் இருக்கா. போடா.

ஆர்விகாவின்  முகம் வாடி இருந்ததை அப்போதுதான் கவனித்தான்.

“என்ன ஆச்சு பட்டிக்காடு…”

“என்ன சொன்னீங்க. பட்டிக்காடா?  போனா போகுதுன்னு  பொருத்துகிட்டு இருக்கேன். ரொம்ப மட்டமா பேசாதீங்க. நானும் பொண்ணு தான். எனக்கும் மனசு இருக்கு. ரொம்ப சீண்டிப் பார்க்காதிங்க” என கோவமாக பேச.

“இப்போ என்ன சொல்லிட்டேன்னு உனக்கு இவ்வளவு கோவம் வருது. உண்மையத்தான சொன்னேன். அந்த காஸ்ட்யூம்,  மாடர்ன் ட்ரஸ் உனக்கு போட தெரியாதுல.  நீ பட்டிக்காட்டுல வளர்ந்த பொண்ணு. ஏதோ காலேஜ் போய் படிச்சிட்டேனா  எல்லாம் தெரியும்னு அர்த்தமா?  நம்ம ஊருல அது மாதிரி எல்லாம் யாரும் போட்டு பார்த்தது இல்ல. அதனால தான் சொன்னேன்.  உனக்கு உங்கம்மா வீட்டுக்கு போகனும்னு ஆசையே வராதா?.”

என்ன திடீர்னு ரொம்ப அக்கறையா கேக்குறீங்க.

எனக்கு பொய் சொல்ல பிடிக்காது. நேரடியா விஷயத்துக்கு வரேன்.  இன்னைக்கு ஈவினிங் பார்ட்டி இருக்கு. நம்ம கம்பெனி தர பார்ட்டி தான். நானும், அம்மா, அப்பா மூணு பேரும் போறோம். அங்க ரொம்ப பெரிய பெரிய ஆளுங்க வருவாங்க.  எல்லாம் நுனி நாக்குல இங்கிலீஷ் பேசுவாங்க.  அவங்கல்லாம் ரொம்ப மாடர்னா இருப்பாங்க. வெளிநாடுகளில் இருந்தெல்லாம் இந்த பார்ட்டிக்கு வருவாங்க.

இப்ப எதுக்கு இத்தனை விளக்கம். என்ன சொல்லனுமோ அத மட்டும் சொல்லுங்க.

அந்த மாதிரி உனக்கு இங்கிலீஷ் பேச வருமா? மாடர்னா ட்ரஸ் பண்ண தெரியுமா? அங்க எப்படி நடந்துக்கனும்னு தெரியுமா? இதுல ஒன்னு கூட தெரியாத உன்னைய எப்படி அங்க கூட்டிட்டு போறது. வெறும் அழக மட்டும் வச்சிட்டு என்ன பண்றது.

“அப்போ நீங்க லவ் யூ சொன்னது எல்லாம் வேஷமா?”

இல்ல ஆர்வி. அது உண்மை தான். போகப்போக நான் உனக்கு சொல்லி கொடுத்து இதெல்லாம் சரி பண்ணிக்கிறேன். அதுவரை மட்டும் கொஞ்சம் பொறுத்துக்கோ. இப்போ டைம் ரொம்ப கம்மி. இது எல்லாம் சொல்லி கொடுத்தது கூட்டிட்டு போறது  இப்ப நடக்காது. அதுவும் தவிர நீ  அங்க வந்த அசிங்க பட்டா அத என்னால தாங்கிக்க முடியாது.

“உங்களுக்கு நான் பார்ட்டிக்கு வரக்கூடாது. அத நேரடியா சொல்லிட்டு போக வேண்டியது தானே. அதுக்கு ஏன் சுத்தி வளைச்சி இவ்வளவு கஷ்டப்பட்டு பேசணும்” என சொல்லும் போதே ஆர்விகாவின் கண்களில் இருந்து கண்ணீர் திரண்டு முத்துக்களாக கொட்டியது.

இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன்னு இப்படி அழற.

“நீங்க சொன்னது எல்லாமே தப்பு தான். என்ன ஒரு மனுஷியாவே நீங்க நினைக்கல. அப்புறம் எதுக்கு வெளிவேஷம். நான் உங்க கூட வந்தா உங்களுக்கு அவமானம். அப்போ நான் உங்களுக்கு வீட்டில பொண்டாட்டியா மட்டும் இருக்கலாமா? அது மட்டும் எதுக்கு?”

இவர்களது வாக்குவாதத்தை கேட்டு  வானதி வெளியே வந்தார். உனக்கு இப்போ என்னடா பிரச்சனை. என் மருமக வரக்கூடாது. அதான.  அவளும் நானும் வராமலே இருந்துக்கறோம்.  நீ மட்டும் போயிட்டு வா.

ஏன்மா நீங்களும் புரிஞ்சிக்காம பேசுறிங்க.  அவ பட்டிக்காடும்மா. அங்க ரொம்ப பெரிய பெரிய ஆளுங்க வருவாங்க. இன்னைக்கும் அவ புடவை சுத்திட்டு வந்து நிப்பா.

“டேய்! போதும் நிறுத்துடா.  அவளும் படிச்ச பொண்ணு தான். அவளுக்கு நாகரீகம் தெரியும்.  ரொம்ப பேசாத. அவ்வளவு தான். அவளும் பார்ட்டிக்கு  வருவா.  ஈவினிங் ஆறு மணிக்கு போகணும்.  நீ ரெடியா ஆகும்மா” என  வானதி கூற.

இல்ல அத்தை. வேணாம். நான் வர்ல. நீங்க போய்ட்டு வாங்க.

“என் பேச்சுக்கு மரியாதை தரதுனா நீ ரெடியா இருக்க. அவ்வளவு தான்” என கூறிவிட்டு வானதி நகர்ந்தார்.

‘இவ்வளவு கேவலமா பேசின இவரு முன்னாடி நிச்சயமா நான் யாரு? என்னோட திறமை என்னனு காட்டணும்’ என மனதில் நினைத்துக் கொண்டாள்.

“கேவல படுறதுனு முடிவாகிடுச்சி. என்னமோ பண்ணுங்க” என யாஷ்மிதன் தனது அறைக்குப் போனான்.

அன்று மாலைவரை அவனிடம் கோபத்தில் பேசாமலேயே இருந்தாள்.

மாலை நேரம் நெருங்க  நெருங்க யாஷ்மிதன்,  ‘எந்த புடவைய சுத்திட்டு வந்து  நிக்கப் போறாளோ தெரியலையே’ என நினைத்துக் கொண்டிருக்க.

“ஆர்விகாவோ அவன் சற்றும் எதிர்பாராத வண்ணம் ராயல் ப்ளூ வித் பிங்க் கலர் ஜாக்குவார்ட்டில், அழகான ஹேர் ஸ்டைல், அதற்கு மேட்சிங்கான வளையல், தோடு, பொட்டு” என பார்க்க தேவதை போல மிகவும் அழகாக ஒயிலாக நடந்து வர.

“அவளைப் பார்த்து யாஷ்மிதன் அதிர்ச்சியடைந்தான்.  பட்டிக்காடுனு நெனச்சுக்கிட்டு இருந்தேன். இவ்வளவு மாடனா வந்து நிக்கறா?” என அவளது அலங்காரத்தின் மேல் அவனுக்கு சிறிய சந்தேகம் உண்டானது. ‘பியூட்டி பார்லர்லயே ஊறிப்போய் இருந்த ஒருவரால் தான் இத்தனை அழகாக மேக்கப் போட முடியும்.  ஒருவேளை பியூட்டிஷியன் கோர்ஸ் ஏதும் படித்திருப்பாளோ?’ என நினைத்தான்.

ஆர்விகா அவனைப் பார்க்காமல் திரும்பிக்கொண்டாள்.

ஆர்வி எனக்கு ஒரு டவுட்டு.

என்ன என்பது போல் அவனை பார்த்தாள்.

அவளது காந்தப் பார்வையும், அந்த உடையும் அவனை மேலே பேச விடாமல் கிறங்கடித்தது. அத்தனை அழகாக இருந்தாள்.

“இவ்வளவு அழகா எப்படி மேக்கப் போடுற.  பியூட்டிஷியன் கோர்ஸ் எதுவும் படிச்சியா?”

அவனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் வெளியில் வந்தாள். அவளது  உடையும், மேக்கப்பும் அனைத்துமே வித்தியாசமாக தெரிந்தது. “அத்தை போகலாமா?” எனக் கேட்க.

என் மருமக இவ்வளவு அழகா இருக்காளே. பாருடா என் மருமகள.

யாஷ்மிதன் எதுவும் பேச முடியாமல் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். ‘சாதாரணமா பட்டிகாட்டுல இருந்த ஒரு பொண்ணால இப்படி டிரஸ் பண்ண முடியாது. இப்படி ஒரு மேக்கப் போடுவும் முடியாது. இந்த மேக்கப்ப பார்த்தா நம்பவே முடியல. இதுல ஏதோ ஒன்னு இருக்கு’ என நினைத்தான்.

“டைம் ஆகுது போகலாம்” என யாஷ்.

அப்பா எங்கம்மா.

அவரு நேரா பார்ட்டிக்கு வரேன்னு சொல்லிட்டாரு.

“சரிம்மா” என யாஷ் கூற. மூவரும் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு சென்றார்கள். அங்கு பயங்கர வரவேற்பு. அவர்களை வரவேற்றனர். வெளிநாடுகளிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் இந்த பார்ட்டிக்கு அமர்ந்திருந்தனர்.

மேலை நாட்டு நாகரீகம் அங்கு கொடிகட்டி பறந்தது.

‘யாராவது இவகிட்ட இங்கிலீஷ்ல பேசினா நாலு வார்த்தை பேசுவாளா? தெரியல. கடவுளே! என் மானத்தை காப்பாத்து’ என உள்ளூர நினைத்துக் கொண்டான். “என்னோட மனைவிதான்னு எப்படி அறிமுகப்படுத்த. கல்யாணத்துக்கு வந்தவங்களுக்கு மட்டும் தெரியும். மத்தவங்களுக்கு.  இந்த அம்மா சொன்னா கேட்டாதான” என அம்மாவை பார்த்து முறைத்தான்.

தெரிந்தவர்கள் பலரும் வந்து கைகுலுக்க, வழியின்றி தனது மனைவியை அறிமுகப்படுத்தி வைத்தான்.

“வந்தவர்கள் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்க. மானம் போகப்போவுது. இதுக்குதான் படிச்சி படிச்சி சொன்னேன். கேட்டாங்களா? இப்போ எப்படி சமாளிக்கிறது” என நினைக்கும்போதே ஆர்விகா ‘படபடவென’ ஆங்கிலத்தில் சாதாரணமாக அவர்களுடன் உரையாடத் தொடங்கினாள். யாஸ்மிதன் அதிர்ச்சியுடன் அவளது விழிகளை தனது விழிகள் விலகாமல் பார்த்துக் கொண்டு நின்றான்.

சாரல் தொடரும்….

Advertisement