Advertisement

பகுதி – 12

வானதி  பதறிப் போக.  சங்கர் உடனே தங்களது குடும்ப டாக்டருக்கு போன் போட்டு வர வைத்தார்.

குடும்பம்  மொத்தமும் யாஷ்மிதனை சுற்றி இருந்தது.

டாக்டர் யாஸ்மிதனை பரிசோதித்துவிட்டு, “சாதாரண காய்ச்சல் தான். பயப்பட ஒன்னுமில்லை” என்று கூறிவிட்டு, சில மாத்திரைகளை எழுதி  கொடுத்து விட்டு இன்ஜக்ஷன்  போட யாஷ்மிதனை திரும்பி படுக்க சொன்னார்.

வேண்டாம் டாக்டர். மாத்திரை எவ்வளவு வேணா குடுங்க. இன்ஜக்ஷன் மட்டும் வேணாம். ப்ளீஸ்.

இன்னும் நீ மாறவே இல்லை யாஷ். இன்ஜக்ஷன் போட்டா தானே ஃபீவர் குறையும்.

யாஷ் வழியில்லாமல் கண்களை மூடிக்கொண்டு திரும்பி படுத்தான்.

“நீண்ட போராட்டத்திற்கு பிறகு இன்ஜெக்ஷன் போட்டார்.  ரெண்டு நாளைக்கு கஞ்சி,  இட்லி,  பிரெட்  மட்டும் கொடுங்க” என கூறிவிட்டு கிளம்பினார்.

அந்த இரவு முழுக்க ஆர்விகா உறக்கம் இன்றி கவனித்துக் கொண்டாள்.

மாத்திரையும் நன்றாக வேலை செய்ததால் யாஸ்மிதன் அவனையும் அறியாமல் நன்றாக உறங்கிவிட்டான்.

மறுநாள் காலை பொழுது விடியும்போது யாஸ்மிதன் அருகில் உட்கார்ந்த நிலையிலேயே ஆர்விகா உறங்குவதை பார்த்தான்.

‘ரொம்ப நல்ல பட்டிக்காடா தான் இருக்கா’ என நினைத்துக்கொண்டு, “ஆர்விகா” என எழுப்பினான்.

மெல்ல கண்விழித்து பார்த்தாள். “பொழுது விடிஞ்சிடுச்சா. உங்களுக்கு ஹாட் வாட்டர் கொண்டு வரேன். கொஞ்சம் பிரெட்டும் கொண்டு வரேன்.  அப்புறம் இட்லி ரெடி பண்றேன்” என வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போக.

அவளிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் பேசும் இதழ்களையும் அவளது விழிகளையும்  பார்த்துக் கொண்டிருந்தான்.

என்னங்க நான் சொல்லிட்டே இருக்கேன். நீங்க பாத்துட்டே இருக்கீங்க.

ஒன்னும் இல்ல ஆர்விகா.  உனக்கு என் மேல கொஞ்சம் கூட கோபமே வரலையா?

“எதுக்கு வரணும்.”

நான் எவ்வளவு செல்ஃபிஷா உன்னைய கல்யாணம் பண்ணிட்டேன். என் மேல உனக்கு கோபம் வராதா?

அப்படி பார்த்தா நானும் ஒரு வகையில செல்ஃபிஷா தான் உங்கள கல்யாணம் பண்ணி இருக்கேன்.

“என்ன சொல்ற ஆர்விகா.”

“ஆமா நீங்க உங்க அம்மாவுக்காகவும், நான் என் அப்பாவுக்காகவும் தானே கல்யாணம் செஞ்சிகிட்டோம். அவங்க நிம்மதியா தான் இருக்காங்க.  நாமதான்”  என வார்த்தையை நிறுத்திவிட்டு தலை குனிந்தாள்.

ஏனோ யாஷ்மிதனின் மனதில் அவளது கைகளைப் பிடித்து ஆறுதல் கூற வேண்டும் போல தோன்றியது.  அப்போது வளர்மதியின் குரல் கேட்க.

“எங்க அம்மாவோட குரல் கேட்குது” என வெளியே எட்டிப்பார்த்தாள். வளர்மதியும், ஷங்கரும் வந்திருக்க.

“என்னம்மா இவ்வளவு காலையில வந்திருக்கீங்க” எனக் கேட்க.

“நீதான் மாப்ளைக்கு உடம்பு சரி இல்லைனு சொன்ன.  அதான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தோம்” என உள்ளே வந்தனர்.

“இப்போ பரவாயில்லையா மாப்ள. திடீர்னு உடம்புக்கு என்ன ஆச்சு.  டாக்டர் கிட்ட போனிங்களா? டாக்டர் என்ன சொன்னாங்க. இப்போ எப்படி இருக்கு?” என அன்பாக விசாரிக்க.

அவர்கள் காட்டும் அன்பில் யாஷ்மிதன் திகைத்துப் போனான். “இத்தனை அன்பான மனிதர்கள நாம எப்படி ஏமாற்ற முடியும். ஆர்விகாவிற்கு மாடர்னா இருக்க சொல்லிக் கொடுக்கலாம். இவளும் நம்ம மேல பாசமா தான் இருக்கா.  ஆர்விகா உடைய அன்பு கடைசி வரை நமக்கு கிடைச்சா போதும்” என்று தோன்றியது.

என்ன மாப்ள.  பேச முடியலையா?

அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா.  நீங்க உக்காருங்க.  சும்மா வெறும் காய்ச்சல்தான்.  சரியாகிடும்னு டாக்டர் சொன்னாங்க.

நாங்க என்னமோ ஏதோன்னு பயந்துட்டோம்.  “காய்ச்சலுக்கா இத்தனை ஆட்டம் போட்டவ” என வளர்மதி ஆர்விகாவை கேட்க.

அம்மா நீ சும்மாவே இருக்க மாட்டியா? கொஞ்சம் இருங்க.  நான் மாமாவுக்கு சுடுதண்ணி வச்சு கொண்டு வரேன். இவருக்கு இன்னும் எதுவும் கொடுக்கல.

சரிம்மா.  இந்த பழத்தை அப்படியே வாங்கிட்டு போ.

“இதெல்லாம் எதுக்கு அத்தை…”

உங்களுக்கு உடம்பு சரி இல்லைன்னு சொன்னா. என்ன ஏதுன்னு சொல்லவே இல்லை.  சுடுதண்ணி கால்ல கொட்டுன மாதிரி சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டா. என்னமோ ஏதோன்னு பதறிப்போய் கிளம்பி வந்தோம்.

“அவ எப்போதும் அப்படிதான் மாப்ள.  ரொம்ப குழந்தைத்தனமா இருப்பா. அதே சமயம் அவளை மாதிரி பாசமா யாராலும் இருக்க முடியாது. பழகிட்டா உசுரையே கொடுப்பா” மூர்த்தி சொன்னார்.

யாஷ்மிதன்  மனதில் ஆர்விகா  இன்னும் ஒருபடி உயர்ந்து நின்றாள்.

ஆர்விகா  சுடு தண்ணீர் கொண்டு வந்து வைத்துவிட்டு,  தனது பெற்றோரை சாப்பிட அழைத்தாள்.

“நீ எப்படி இருக்க போறியோனு நினைச்சி பயந்தேன். இப்போது பாக்க மனசுக்கு நிம்மதியா இருக்கு ஆர்விமா.  இந்த நேரத்தில சாப்பிட முடியாது. இன்னொரு நாள் வந்து பொறுமையா சாப்பிடறோம். மாப்ளைய பாத்துக்கோடா”  என கூறிவிட்டு கிளம்பினார்கள்.

அன்றைய இரவே யாஸ்மிதனுக்கு உடல்நிலை சரியாகி இருந்தது. ஆர்விகா வழக்கம்போல உறங்குவதற்கு படுத்தாள்.

“என்ன அதுக்குள்ள தூக்கமா?”

நேத்து தான் நைட் தூங்கலையே. பகல்லயும் தூங்கலங்க. அதான் இப்ப  கொஞ்சம் தூக்கம் வருது.

“சரி படுத்துக்கோ…”

“நீங்க தூங்கலையா?”

“தூக்கம் வரும்போது தூங்குவேன்.  நீ படுத்துக்கோ” என்றான்.

முதல் நாள் இரவு முழுக்க தூங்காமல் இருந்ததால் தன்னையுமறியாமல் சிறிது  நேரத்தில் உறங்கி விட்டாள்.

அவளது உறக்கத்தை கண்டு நெற்றியில் பறக்கும் கற்றை கூந்தலை ஒதுக்கி விட்டு, அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். முதல்முறையாக உறங்கிக்கொண்டிருந்த அவளது பட்டுப் போன்ற கரத்தைபிடித்து தனது விரல்ளுக்குள் அவளது விரல்களை  சிறை பிடித்தான். மெல்ல இதழ் பதித்தான். என்னமோ தெரியல ஆர்வி. இப்போலாம்  உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. “ஐ லவ் யூ” என்றான்.

“நாமளா எப்படி ஆர்விகிட்ட சொல்றது.  நம்ம மனசுல இருக்கற மாதிரி ஆசை அவளுடைய மனசுலயும் இருக்கா இல்லையானு எப்படி தெரிஞ்சுகிறது” என யோசித்துக் கொண்டிருந்தான். அவளது கையை வைத்துக்கொண்டு அப்படியே உறங்கிவிட்டான்.

மறுநாள் பொழுது விடியும்போது, சோம்பலோடு  மெதுவாக கண்களைத் திறந்தாள்.  தனது  விரல்களுக்குள்  யாஷ்மிதனின் விரல்கள் இருப்பதை உணர்ந்தாள்.  இது தூக்கத்துல பிடிச்ச மாதிரி தெரியலையே. ஒரு வேல இவருக்கு என்ன பிடிக்குமா?.  எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா நான் எப்படி முதல்ல சொல்ல முடியும். என் மனசுல இருக்க மாதிரி இவர் மனசுலயும் இருக்கான்னு எப்படி தெரிஞ்சுகிறது.  என்னமோ தெரியல இப்போலாம்  ரொம்ப பிடிக்குது.  அதே சமயம் என் லட்சியத்தையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.  பட் “ஐ லவ் யூ”  என அவனது கரங்களில் தன் மெல்லிய இதழ்களால்  முத்தமிட.

தூக்கத்தில் இருந்த யாஷ்  மெதுவாக  புரண்டு படுக்க.  ஆர்விகா பேலன்ஸ் இல்லாமல் அவனது மார்பின் மேல் சரிந்து விழ. யாஷ்  மறுநொடியே கண்விழித்தான்.

பூக்குவியல் மொத்தமும் தன்மேல் இருப்பதாகவே உணர்ந்தான். கண் இமைக்காமல் அவளைப் பார்த்தான்.

ஆர்விகா இந்த தருணத்தை எதிர் பார்க்காததால் செய்வது அறியாமல் தவித்தாள்.  வெட்கம் அவளை உருக வைத்தது. வார்த்தை வராமல் இதழ்கள் துடித்தது.

யாஷ்மிதனோ அதையும் தாண்டி செயலிழந்த காணப்பட்டான். இருவருக்கும் இடையேயான அந்த முதல் ஸ்பரிசம் அவர்களை உணர்விழக்க செய்திருந்தது. யாஷ்மிதனின் கைகள் அவளை அணைக்க துடித்தது.  அந்த இடத்தில் சில நிமிடங்களை மௌனங்கள் ஆக்ரமித்துக் கொண்டது.  “இப்படியே இருக்கக் கூடாதா?” என நினைக்க வைத்தது. அங்கு மௌனமே காதல் மொழியாகி நின்றது.

ஆர்விகா தான் முதலில் ஆரம்பித்தாள்.  அது வந்து நான்.. எனக்கு.. உங்கள…  வார்த்தைகளை தேடத் தொடங்கி தோல்வியடைந்தாள். அதற்கு மேல் பேச முடியாமலும், விலக முடியாமலும்  தவிக்க.

அப்பொழுது  சமீராவின் குரல் கேட்க.  பிரிந்தே ஆக வேண்டிய கட்டாயத்தின் பேரில் இருவரும் விலக.

ஆர்விகா  தனது உடைகளை அவசரமாகச் சரிசெய்துகொண்டு  கதவைத் திறந்தாள்.

“என்ன அண்ணி.  இன்னும் தூக்கமா? அண்ணாவுக்கு இப்போ எப்படி இருக்கு” எனக் கேட்டுக் கொண்டே வர.

இப்போ பரவால்ல சமீரா. என்ன இந்த நேரத்தில ரெடியாகி நிக்கற.

அண்ணா நான் ஊருக்கு கிளம்பறேன்.  நேரமாவே போகணும்.  அதான் இப்பவே கிளம்பிட்டேன்.

“நான் கொண்டுவந்து விடவா?”

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.  அப்பா கூட வராங்க. உன்கிட்ட சொல்லிட்டு போக தான் வந்தேன்.

“சரிடா போயிட்டு போன் பண்ணு…”

“ஓகே! அண்ணா. சரி நான் கிளம்புறேன்…”

“நேரம் கிடைக்கும்போது கால் பண்ணுங்க அண்ணி.  பை” எனக் கூறிவிட்டு சமீரா கிளம்பினாள்.

காலை உணவாக உணவாக இட்லி தயாராக இருக்க.  யாஷ்மிதன் சாப்பிடத்  தொடங்கினான்.

“இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க” என ஆர்விகா இரண்டு இட்லியை எடுத்து வைக்க.

“அப்படின்னா உனக்கு பாதி எனக்கு பாதி” என்று அவளுக்கு ஊட்டி விட.

ஆர்விகா சிரித்துக் கொண்டே சாப்பிட.  அங்கு வந்த வானதி சிரித்துக் கொண்டே உள்ளே சென்றார்.

அம்மா வந்தாங்க. அதான் ஊட்டி விட்டேன்.

நானும் அத்தை வந்தத பாத்தேன். அதான் அமைதியா சாப்பிட்டேன்.

தேங்க்ஸ். அப்புறம்  இன்னைக்கு ஈவினிங் பிளைட்ல மும்பை போக வேண்டி இருக்கு. போய்ட்டு வர ரெண்டு நாள் ஆகும். ஆஃபீஸ் போயிட்டு வரேன். என்னோட டிரஸ் மட்டும் பேக் பண்ணி வெச்சிடு ஆர்வி ப்ளீஸ்.

என்னது மும்பை போறிங்களா? என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல. திடீர்னு கிளம்புறேன்னு சொன்னா என்ன அர்த்தம். என்னால இங்க தனியா இருக்க முடியாது.  நானும் கூட வரலாமா?

ஆஃபீஸ் விஷயமா போறேன். நிச்சயமா உன்ன கூட்டிட்டு போக முடியாது. நான் மட்டும் தான் போகணும்.

“வெளியூருக்கு எல்லாம் போகமாட்டேன்னு தானே சொன்னீங்க.  அப்போ அது பொய்யா?” எனக் கேட்க.

நீ கூட தான் ஆரம்பத்திலேயே பொய் சொன்ன.  நான் அதை பெரிசா எடுத்துக்கல.

நான் ஒன்னும் பெரிய பொய் எல்லாம் சொல்ல. ஏதோ சின்ன சின்னதா அதுகூட விளையாட்டுக்கு தான் சொன்னேன்.

நான் அங்கே போய் செட்டில் ஆகலையே. ஆஃபீஸ் விஷயமா அப்பப்போ போவேன் வருவேன். அவ்வளவுதான்.

எப்படி சொன்னாலும் பொய் பொய்தானே.

இப்போ அதுக்கு என்ன பண்ணலாம். என்னுடைய மிகப்பெரிய ஆசையே நான் வெளிநாட்டில போய் செட்டில் ஆகணுங்கறது தான்.  அதுவும் எங்க அம்மா பிடிவாதமாய் போக கூடாதுன்னு சொல்லி  கல்யாணங்கிற பேருல என்ன கட்டி போட்டுட்டாங்க.  இது தவிர வேறு எந்த பொய்யும் என்கிட்ட இல்ல. என்னோட லைஃப்ல நான் சொன்ன ஒரே போய் இதுதான். போதுமா?

நிஜமாவே இந்த ஒரு பொய் தானா? இல்ல இன்னும் இருக்கா? இருந்தா இப்பவே சொல்லிடுங்க.

அதுக்கு மேல எதுவும் இல்ல.  அம்மாவுக்காக எவ்வளவு வேணாலும் விட்டுத்தருவேன்.

ஆர்விகா  மௌனமாகவே நிற்க.

“என் மேல கோவமா? ஆர்வி” என அவளது கைகளை பிடிக்க.

எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தாள்.

“ப்ளீஸ் கோபப்படாத.  நான் தான்  போகலையே. அந்த எண்ணமே இப்ப இல்ல.  இது வேலை விஷயமா போயிட்டு ரெண்டு நாள்ல திரும்பி வந்துடப்போறேன். அவ்வளவுதானே. என்னுடைய டிரஸ் மட்டும் பண்ணு” என கூறினான்.

“சரி” என தலையாட்டியபடி வாசல் வரை சென்று அவனை வழியனுப்ப நின்றாள். “உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. ஈவினிங் வரை  வெயிட் பண்ணு. வந்து சொல்றேன்” எனக் கூறி விட்டு கிளம்பினான்.

“இரண்டு நாள் எப்படி இங்க தனியா இருக்க போறேன். பேசாம  அம்மா வீட்டுக்கு போகலாமா?” என்று கூட எண்ணினாள்.  “கல்யாணம் முடிஞ்சி ஒரு மாதம் கூட ஆகல. அதுக்குள்ள தனியா போனா பாக்கறவங்க தப்பா நினைப்பாங்க.  இங்கேயே இருக்க வேண்டியதுதான்” என்று நினைத்தவாறு யாஷ்மிதனின் துணிகளையும் அவனுக்கு தேவையான பொருட்களையும் எடுத்து வைத்தாள்.

அன்று மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.  யாஷ்மிதனுக்காக காத்துக் கொண்டிருந்தாள்.  அவனது  காரும் வந்தது.

சாரல் தொடரும்…

Advertisement