Advertisement

பகுதி – 11

யாஷ்மிதனின் இந்த செயலால் ஆர்விகா  செய்வதறியாமல் அவனைப் பார்த்தாள். ஒரு ஆணின் ஸ்பரிசம் முதல் முத்தம் அவளை இனம் புரியாத உணர்வுகள் மனதில் ஆட்டி வைத்தது.

அண்ணா நாங்க இங்க தான் இருக்கோம். மறத்துடாத.

அதனால தான் லிமிட்டா நடந்துக்கிறேன் சமீரா. இல்லனா அவ்வளவு தான்.

போதும் போதும். உங்க அப்பா நேரமாவே ஆஃபீஸ் போய்ட்டாங்க. இந்த மனுஷன் என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லல. வரட்டும் பேசிக்கிறேன்.

அம்மா ஸ்வீட்டி பண்லாமா? இன்னைக்கு ஸ்பெஷல் ஐட்டம்ஸ் பண்ணனும்.

பண்ணிட்டா போச்சு. சமீரா நீ கூட வா. பூங்கொடிய வரச்சொல்லி இருக்கேன். கூட கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும்.

“அத்தை நானும் வரேன்” என ஆர்விகா கூற.

இனி எப்பவும் நீதானம்மா பாத்துக்க போற. கொஞ்சம்  ஓய்வெடுடா கண்ணு. ஒரு வாரம் போகட்டும். கல்யாணம் முடியயற வரை நல்லா சாப்பிட்டு இருக்க மாட்ட. தூங்கி இருக்க மாட்ட. நீ போம்மா நான் பாத்துக்கறேன்.

இல்லங்க அத்தை. நானும் வரேன். தனியா இருக்க கஷ்டமா இருக்கு.

ஆர்விகா வானதியின் தாயன்பில் கரைந்து போனாள். ஆர்விகாவிடம் மிகவும் கனிவாக நடந்து கொண்டார். எதிலும் மருமகளை விட்டு கொடுக்காமல் நடந்து கொண்டார்.

ஆர்விகா என்னம்மா பண்ற.

அத்தை சும்மா தான் இருக்கேன். சொல்லுங்க. என்ன வேணும். எதுவும் செய்யனுமா?

ஒன்னும் இல்லடா. சமீரா நாளைக்கு ஊருக்கு போறா. அவளுக்கு பொருள் வாங்க வேண்டி இருக்கு. கடைவீதிக்கு போலாம்னு. உனக்கும் எதாவது வேணும்னா வந்து வாங்கிக்கோடா கண்ணு.

எனக்கு ஒன்னும் வேணாம் அத்தை. அவர் தான் கேட்காமலே எல்லாம் வாங்கி கொடுக்கறாரே. இதுக்கு மேல என்ன வேணும்.

உனக்கு என்ன வேணும்னு உனக்கு தான தெரியும். அதான் சொல்றேன். வாடா போலாம்.

இல்லங்க அத்தை. எனக்கு ஒன்னும் வேணாம்.

அம்மா அண்ணன் வர நேரமாகுது. இப்ப கூப்பிட்டா அண்ணி எப்படி வருவாங்க.

அதுவும் சரிதான்.

“அப்போது ஆர்வி” என குரல் கொடுத்துக்கொண்டே யாஷ் வீட்டிற்குள் நுழைந்தான்.

ஆயுசு நூறு. சொல்லி வாயமூடல. யாஷ் வந்தாச்சு.

என்னம்மா சொன்னிங்க.

என் மருமகள வெளில போலாம்னு கூப்பிட்டேன். நீயே எல்லாம் வாங்கித்தரியாம். வரலனு சொல்லிட்டாப்பா.

ஆமா பின்ன. நான் என் செல்ல பொண்டாட்டிக்கு என்ன குறை வச்சேன். கேட்காமலே எல்லாம் வாங்கி தரேனு. ஆர்வி டியர் கொஞ்சம் திரும்பி நில்லேன்.

“எதுக்குங்க”.

“திரும்பு சொல்றேன்” என்றவன் கொண்டு வந்த மல்லிகை சரத்தை மொத்தமாக எடுத்து ஆர்வியின் தலையில் வைத்தான்.

உன் தங்கச்சி இருக்கா. அவளுக்கு கொஞ்சம் கோடுத்து இருக்கலாமேடா.

அவளுக்கு எங்க மாமா வாங்கித் தருவாரு. என் பொண்டாட்டிக்கு நான் தாற வாங்கி தரனும்.

அம்மா விடும்மா. அவங்க சந்தோஷமா இருந்தா அதுவே நமக்கு போதும்.

ஆர்வி டியர்.

என்னங்க.

எனக்கு ஒரு கப் டீ கிடைக்குமா?

எப்பவும் காஃபி தான குடிப்பிங்க. இன்னைக்கு என்ன டீ.

கொஞ்சம் லைட்டா தலைவலிக்குதுடா.

என்னோட வயித்தெறிச்சல் சும்மா விடுமா என நினைத்தவள், அச்சோ! என்னங்க ஆச்சு.

ஒன்னும் இல்லடா. கொஞ்சம் அலச்சல் தான். அதான் லைட்டா தலைவலிக்குது.

சரிங்க. டீ எடுத்துட்டு மாத்திரை கொண்டு வரேன். ரெஸ்ட் எடுங்க என்றவள் பரபரப்பாக சமையல் கட்டிற்கு சென்று டீ வைத்து எடுத்துக்கொண்டு மாத்திரையும் எடுத்துக்கொண்டு தனது அறைக்குச் சென்றாள்.

பாத்தியாம்மா. அண்ணன பாத்துக்க ஆள் வந்தாச்சு. இனி உனக்கு கவலையே இல்ல.

ஆமா சமீரா. தங்கமான பொண்ணு. ரொம்ப அன்பா இருக்கா.

அதற்குள் யாஷ் சோர்ந்து போய் மெத்தையில் படுத்தக் கொண்டான்.

தலைநிறைய பூவ வச்சிட்டு ரூமுக்கு வந்தா கத்துவான்னு தலைவலிக்குதுனு படுத்துட்டீங்களா?

இல்ல ஆர்வி. என்னால நிஜமாவே முடியல. பூ அம்மா நம்மள தப்பா நினைச்சிடக் கூடாதுனு தான் வாங்கிட்டு வந்தேன்.

“நிஜமா முடியலையா?” என அவனது நெற்றியை தொட்டுப் பார்த்தாள். அனலாக கொதித்தது. காய்ச்சல் வேறு இருந்தது. உங்களுக்கு காய்ச்சல் இப்படி கொதிக்குது. டாக்டர் கிட்ட போலாம் வாங்க.

ஒன்னும் வேணாம். மாத்திரை போட்டா சரியாப்போகும்.

“அப்போ டீ வேணாம். அரிசி வறுத்து சீரகம் சேர்த்து கஞ்சி வச்சி கொண்டு வரேன். அத குடிச்சிட்டு மாத்திரை போடுங்க” என அவசரமாக சமையலறைக்கு போனாள்.

என்னம்மா. அவசரமா வர. டீ வேணாம்னு சொல்லிட்டானா?

இல்லங்க அத்தை. அவருக்கு உடம்பு அனலா கொதிக்குது. காய்ச்சல், தலைவலி. ஹாஸ்பிடல் போலாம்னா வரமாட்டேங்கறாங்க. அதான் கஞ்சி வச்சி கொண்டு போகலாம்னு.

அவனுக்கு இன்னும் ஊசினா பயம்மா. அதுக்கு பயந்துட்டே ஹாஸ்பிடல் வரமாட்டான். முடியலனா டாக்டர இங்கயே வர சொல்லலாம்மா.

சரிங்க அத்தை.

நான் யாஷ பாத்துட்டு வரேன். நீ கஞ்சி வச்சிடுவியாடாம்மா.

வச்சிடுவேன் அத்தை. நீங்க போங்க.

சரியென வானதி மகனைப் பார்க்க போனாள்.

“வீராப்பா கஞ்சி வச்சி தரேனு சொல்லிட்டு வந்துட்டேன். எப்படி வைக்கனும்” என யோசித்தவள் உடனே தனது அம்மாவுக்கு போன் பண்ணினாள்.

இப்ப தான் அம்மா நினைப்பு வந்துச்சா. எப்படிடா தங்கம் இருக்க.

“அம்மா நான் நல்லா தான் இருக்கேன். அரிசி வறுத்து எப்படி கஞ்சி வைக்கனும்னு சொல்லு அவசரம்” என்றாள்.

யாருக்காவது உடம்பு சரியில்லையா?

உன்கிட்ட கதைபேச நேரமில்ல. உன் மருமகனுக்கு தான் உடம்பு சரியில்லை. சொல்லு .

என்னடி ஆச்சு. இப்போ எப்படி இருக்காரு. ஹாஸ்பிடல் போனிங்களா? டாக்டர் என்ன சொன்னாங்க.

அம்மா கடுப்பேத்தாம கஞ்சி எப்படி வைக்கனும் சொல்லு.

“வளர்மதி சொல்ல சொல்ல ஆர்விகா கஞ்சி வைத்தாள். ஓகே. நான் அப்புறம் பேசறேன்” என இணைப்பை துண்டித்தாள்.

கஞ்சியை சூடாக எடுத்துக்கொண்டு தனது அறைக்குச் சென்று யாஸ்மிதனிடம் நீட்ட.

யாஷ்மிதன் மெதுவாக எழுந்து உட்கார்ந்தான்.

யாஷ் டாக்டர வரச்சொல்லவா.

இல்லம்மா. நான் கொஞ்சம் தூங்கினா சரியாப்போகும். முடியலனா சொல்றேன்.

சரிப்பா. கொஞ்சம் கஞ்சிய குடிச்சிட்டு மாத்திரைய போடு.

யாஷ்மிதன் ஒரு டம்ளர் மட்டும் கஞ்சியை குடித்துவிட்டு மாத்திரை போட்டான். மெதுவாக படுத்துக்கொண்டு கண்களை மூடி உறங்க முயற்சி செய்தான்.

ஆர்விமா  பாத்துக்கோடா. எதாவது முடியலனா கூப்பிடும்மா.

சரிங்க அத்தை.

வானதி தனது அறைக்கு போக. ஆர்விகா போர்வையை எடுத்து யாஷ்மிதனுக்கு போத்திவிட்டாள். நெற்றியை தொட்டுப் பார்த்தாள். தலைவலி அதிகமாக தான் இருந்தது.

தலைவலி தைலத்தை கொண்டு வந்து இதமாக தேய்த்து விட்டாள். யாஷ்மிதனுக்கு கொஞ்சம் இதமாக தான் இருந்தது.

‘நமக்காக நாம பேசின எதையும் மனசுல வைக்காம இவ்வளவு பண்றாளே. ரொம்ப நல்லவ தான்’ என நினைத்தான்.

தலையில் வைத்திருந்த மல்லிகைப்பூவை எடுத்து வைத்தாள்.

ஏன் ஆர்வி. பூவ எடுத்துட்ட.

உங்களுக்கு இவ்வளவு தலைவலி இருக்கும் போது பூவ வச்சிட்டு பக்கத்தில படுத்தா இன்னும் தான் தலைவலிக்கும். பூ எப்ப வேணா வச்சிக்கலாம் யாஷ். உங்களுக்கு சரியானா போதும்.

என் மேல இவ்வளவு பாசம் வச்சிருக்கியா? நான் தான் உன்ன புரிஞ்சிக்கல ஆர்வி.

இப்ப எதுவும் பேச வேணாம். ரெஸ்ட் எடுங்க.

யாஷ்மிதன் இமைகளை மூடினாலும் மனக்கதவு ஆர்விக்காக கொஞ்சமாக திறந்தது. அவளைப்பற்றிய சிந்தனைகள் நதியாக மெல்ல மனதில் ஓடத் தொடங்கியது.

ஆர்விகா வழக்கம் போல மெத்தையின் ஒரு ஓரமாக படுத்துக் கொண்டாள். யாஷ்மிதன் பற்றிய சிந்தனைகள் தான் அவள் மனதிலும் ஓடியது. ‘அம்மாவுக்காக தன் வாழ்க்கையவே தியாகம் பண்றாரு. நல்ல மனசு தான். என்ன கொஞ்சம் கொழுப்பு தான் அதிகமா இருக்கு. ஆனா எப்போதும் சிரிச்ச முகமா இருக்காரு. நல்லா தான் இருக்கு. எல்லாம் ஓகே தான். என்னோட லட்சியத்துக்கு சம்மதிக்கனுமே. நேரம் கிடைக்கும் போது மெதுவா சொல்லி பாக்கலாம்’ என நினைத்தாள்.

அப்போது யாஷ்மிதன் வாந்தி எடுக்க. ஆர்விகா அவசரமாக எழுந்து யாஷ்மிதன் தலையை பிடித்துக் கொண்டாள்.  அவனுக்கு வாந்தி நின்றதும் ஓடிப்போய் சுடுதண்ணீர் போட்டுக்கொண்டு வந்து வாய்க்கொப்பளிக்க வைத்து,  முகமெல்லாம் துடைத்து விட்டாள்.  அவனை படுக்க வைத்துவிட்டு,  அந்த இடத்தை சுத்தம் செய்தாள். அத்தையை  அழைக்கவும் அந்த சமயம் வெளியில் சென்ற சங்கர் சரியாக இருந்தது.

Advertisement