Advertisement

அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது அன்பான இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் செல்லகுட்டீஸ்… அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்..

பகுதி – 10

என்ன ரொம்ப ஓவரா போற. என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது.

நான் சொல்றத மட்டும் கேட்டா போதும். அப்புறம்  இந்த கட்டில்ல படுக்காத,  கீழ படுங்க அப்படிங்கிற பேச்சுக்கே இடமில்ல.  எனக்கும் இங்க சம உரிமை இருக்கு.  உங்களுக்கு பிடிக்கலைனா நீங்க கீழே படுத்துக்கோங்க. எனக்கு ஒன்னும் அப்ஜெக்ஷன் இல்ல.

நான் கீழ படுப்பேன்னு வேற ஒரு நெனப்பு இருக்கோ. அவ்வளவு தானா? இன்னும் இருக்கா?

அப்புறம் ரூமுக்குள்ள டாம் அண்ட் ஜெர்ரி யா  நாம  இருந்தாலும் வெளியிலே தேவைப்படும்போது நடிச்சி தான் ஆகணும்.

அது சரி. அப்புறம்.

அப்புறம் எந்த சூழ்நிலையிலயும் உங்கள் நிழல் கூட என் மேல படக்கூடாது.

அடிப்பாவி! ‘ஒருவேல நாம விஷ்வா கிட்ட பேசினத  ஒட்டு கேட்டிருப்பாளோ. நாம சொல்லனும்னு பேசினா அத்தனையும் ஒன்னு விடாம இவ சொல்றாளே. இவள புரிஞ்சிக்கவே முடியாது போலவே’ என நினைத்தவன், “அவ்வளவுதானா? இன்னும் இருக்கா?” எனக் கேட்க.

இன்னும் கூட இருக்கு.  போகப்போக செயல்ல  காட்டுறேன்.

நான் நேராவே கேட்கிறேன் ஆர்விகா.  நான் விஷ்வா  கிட்ட போன்ல பேசினாத ஒட்டு கேட்டுட்டு இப்படி பேசறியா?

இந்த ஒட்டு கேக்குற பழக்கம் எல்லாம் எனக்கு இல்லையே.

அப்புறம் எப்படி  நான் உங்ககிட்ட சொல்லணும்னு யோசிச்ச எல்லாத்தையும் ஒரு வரி விடாம சொல்லுவ.

ஓஹோ, நீங்க நினைச்சா சரி. அதுவே நாங்க நினைச்சா தப்பா? இப்படி யோசிக்கறவங்க எதுக்கு கல்யாணம் செஞ்சிக்கனும். அப்பவே வேணாம்னு உங்க வீட்டில சொல்லி இருக்க வேண்டியது தான.

எங்கம்மா பேச்ச மீறமுடியாம தான். அவங்க பாசத்துக்கு கட்டுப்பட்டு தான் இப்படி நிக்கிறேன். இல்லனா எதுக்கு உன்ன மாதிரி பட்டிகாட்ட கல்யாணம் பண்ணிட்டு இப்படி பேச்சு வாங்கிட்டு நிக்கப்போறேன்.

அதே நிலமை தான் எனக்கும். எங்கப்பா பாசத்த மீற முடியாம நானும் இந்த கல்யாணத்த செஞ்சிட்டேன். இங்க பாருங்க. இந்த பட்டிக்காடுனு பேசற வேலையெல்லாம் வேண்டாம். நானும் படிச்சவ தான். மைண்ட் இட்.

“சரிங்க படிச்ச மேடம்” என அவள் முன்னால் கைகட்டி நக்கலாக நின்றான்.

இந்த நக்கல்லாம் வேணாம் யாஷ். என்னோட பேர சொல்லி கூப்பிடுங்க. அப்புறம் இப்படியேலாம் தினமும் சண்டை போட்டுட்டு இருக்க முடியாது. உங்களுக்கு பிடிக்கலனா டைவர்ஸ் வாங்கிக்கலாம். ஆனா நீங்கலா தான் என்னைய வெளிய அனுப்பின மாதிரி இருக்கனும். நானா போகமாட்டேன்.

நீ நல்லவளா இருக்கனும். நான் மட்டும் கெட்டவனா இருக்கனும். நீ பெரிய கேடி தான்.

நானா போனா எங்கப்பா மனசு உடைஞ்சி போய்டுவாங்க.

அப்போ எங்கம்மாவுக்கு மனசு இல்ல. மண்சட்டி தான் இருக்கோ.

வீண் பேச்சு வேண்டாம். நீங்க உங்க ஃப்ரண்ட் கிட்ட பேசியத கேட்டேன். உங்களுக்கு என்னைய பிடிக்கலனு தெரியுது. எனக்குனு ஒரு லட்சியம் இருக்கு. அந்த லட்சியத்துல நான் ஜெயிக்கனும்.

எங்களுக்கும் தான் பெரிய பெரிய லட்சியமெல்லாம் இருக்கு. யார் ஜெயிக்கவிடுறாங்க. எனக்கு தூக்கம் வருது. நான் தூங்கலாமா?

யார் வேண்டாம்னு சொன்னா. உங்க வீடு, உங்க மெத்தை. அதுக்கு முன்னாடி இந்த பாலை கொஞ்சம் குடிச்சிட்டு படுங்க.

ஆர்விகாவை ஏற இறங்க பார்த்தான்.

உங்க வீட்டு பால்தான். நம்பி குடிக்கலாம். நடிக்கறதுனு முடிவாகிடுச்சி. நடிச்சி தான ஆகனும்.

ஆர்விகா உண்மையா உனக்கு இதெல்லாம் கஷ்டமா இல்லையா? எப்படி இவ்ளோ ஈஸியா எடுத்துட்டு பேசற.

“தெரிஞ்சே வேலில போற ஓணான எடுத்து மடில விட்டுகிட்டேன். இனி யோசிச்சி என்ன ஆகப்போவுது” என்று அவன் முகத்தை பார்த்தாள்.

என்னைய பார்த்தா உனக்கு ஓணான் மாதிரி தெரியுதா? ரொம்ப தான் கொழுப்பு.

“ஆமா அப்படி தான் தெரியுது யாஷ். நாம ஒண்ணா சேர்ந்து வாழனும்னு விதி இருந்தா அத யாராலும் தடுக்க முடியாது. அதே சமயம் பிரிஞ்சி போகனும்னு விதி இருந்தா அதையும் தடுக்க முடியாது. நடக்கிறது நடக்கட்டும். வாழ்க்கைய அந்த விதி கிட்டயே ஒப்படைக்கிறேன்” என மெத்தையின் ஒரு ஓரமாக சென்று அமர்ந்தாள்.

“யாஷ்மிதன் அமைதியாக கொஞ்சம் பாலைக் குடித்து விட்டு மீதியை வைத்தான். ஒரு ஆப்பிளை எடுத்து கட் பண்ணினான். உனக்கு வேணும்னா எடுத்துக்கோ” என்றான்.

“உங்க அன்பிற்கு நன்றி” என கூறியவள் மெத்தையின் ஓரமாக சுருண்டு படுத்தாள். “லட்சியத்துக்காக அவசரப்பட்டு தப்பு பண்ணிட்டேனா? இப்படி எத்தனை நாள் வாழப்போறேன். அடுத்து என்ன பண்ணனும்” என யோசித்தவளின் விழிகளில் ஈரம் எட்டிப் பார்த்தது.

‘அம்மாவோட பாசத்துக்கு கட்டுப்பட்டு ஒரு பொண்ணோட மனச காயப்படுத்தறேனா? நான் பண்றது சரியா? தப்பா?’ என யோசித்தான்.

“ரொம்ப தான் தைரியம் உனக்கு. மெத்தைலயே படுத்துட்ட” என்றான்.

“எனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு. குட் நைட்” என்று  வராத தூக்கத்தை வரவழைக்க முயற்சி செய்து இமைகளோடு போராடிக் கொண்டிருந்தாள்.

இத்தனை நாளும் தனியாக உறங்கிய அந்த அறையில் தன்னோடு புதியதாக ஒரு பெண் இருக்கிறாள் என்பதை எப்படி உணர்வது என்று கூட தெரியாமலேயே அவன் மனம் போராடியது. இமைகளை மூடிக்கொண்டு உறங்க முயற்சி செய்தான். அந்த இரவு இருவருக்கும் போராட்டமான இரவாக தான் தோன்றியது. இருவருமே எப்போது உறங்கினோம் என்று தெரியாமல் உறங்கிப்போனார்கள்.

மறுநாள் காலை ஆதவன் பனித்துளிகளை முத்தமிட்டு கொண்டு இருக்க. வெட்கத்தால் பனித்துளிகள் மாயமாய் மறைந்து கொண்டிருந்தது.

பொழுதுவிடிந்தது தெரியாமல் இருவரும்  உறங்கிக் கொண்டிருக்க.  ஆர்விகா முதலில் மெல்ல தன்பூவுடலை அசைத்தாள். மெதுவாக விழிகளை திறந்தாள். தனது அறையை சுற்றிலும் பார்த்தாள். அனைத்தும் புதுமையாக தெரிய,  “புகுந்த வீட்டிற்கு வந்துவிட்டோமே” என உணர்ந்தவளாய் மெதுவாக எழ முயன்றாள். ஏதோ பாரம் அவளை அழுத்துவது போன்ற உணர்வு. கண்களை கசக்கிக்கொண்டு நன்றாக பார்த்தாள்.

யாஷ்மிதனின் கைவிரல்கள் அவளது கொடியிடையை வளைப்பது போன்று இருக்கி பிடித்திருந்தது.

ஒரு ஆணின் அந்த முதல் தீண்டல் அவளுக்குள் சொல்ல முடியாத உணர்வை கொடுத்தது. ஒரு கணம் தடுமாறினாள். பிறகு  “திடிக்கிட்டவளாய் அவனது கையை தள்ள முயற்சி செய்து தோற்றுப் போனாள். யாஷ் எழுந்திருங்க” என அவனை உலுக்கினாள்.

‘மெதுவாக கண்விழித்த யாஷ் தனது கை அவளது கொடி இடையில் இருப்பதைப் பார்த்து திகைத்தான். என்னடா யாஷ் இப்படி பண்ணிட்டியே. இவ சும்மாவே பேசவா. இப்ப சொல்லவா வேணும்’ என நினைத்தவன், வெடுக்கென்று கையை இழுத்துக் கொண்டான்.

“ரொம்ப நம்பினேன். இதான் உங்க கேரக்டரா யாஷ்” என எழுந்து அவசரமா உடையை சரி செய்து கொண்டாள்.

அது ஏதோ தூக்கத்துல தெரியாம கைகால் பட்டா அதுக்கு நான் என்ன பண்றது. நான் ஒன்னும் வேணும்னு பண்லையே.

“யாருக்கு தெரியும்” என சொன்னவள், ஆமா இங்க மாடர்ன் ட்ரஸ் போடலாமா? இல்ல போடக்கூடாதா? உங்கம்மாவுக்கு பிடிக்குமா?

உன்னோட இஷ்டப்படி தான் நடப்பேனு சொன்ன. இப்ப இப்படி கேட்கற.

ஆமா. சொன்னேன். உங்களுக்காக யோசிக்கனும்ல.

“அவ்வளவு நல்லவளா? பரவாலையே. போடலாம். ஒன்னும் சொல்லமாட்டாங்க. பட்டிக்காடு என்னத்த பெருசா போடப்போறா?” என நினைத்தான்.

ஓகே. தேங்க்ஸ் என்றவள், அவசரமாக குளித்துவிட்டு பீக்காக் கிரீன் அண்ட் நேவி புளூ அனார்கலி சூட் வித் பனாரஸ் துப்பட்டாவில் தேவதை போல வந்தாள்..

“அவள் வேணாம்” என நினைத்தவனுக்கு அவளைப் பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போலத் தோன்றியது. நிஜமாவே சூப்பரா ரொம்ப சூப்பரா இருக்காளே. பேசாம இவளையே ஓகே பண்ணிக்கலாமா? நம்ம மனசு ஏன் இப்படி ரெட்டை வேஷம் போடுது.

யாஷ் நீங்க போய்ட்டு குளிச்சிட்டு வாங்க.  உங்க அம்மா கூப்பிடறதுக்குள்ள போலாம்.

“ஓகே ஆர்வி” என்றவன் குளித்துவிட்டு வந்தான்.

இருவருமாக சேர்ந்து வெளியில் வந்தனர். ஹாலில் யாரும் இல்லை.

உங்க அம்மா எங்க இருப்பாங்க.

உங்க மாமியார் சமையல் கட்டுல தான் இருப்பாங்க. அவங்களுக்கு அவங்களே சமைச்சா தான் பிடிக்கும். நாங்களும் அப்ப தான் சாப்பிடுவோம்.

ஆர்விகா எதுவும் பேசாமல் சமையல் கட்டிற்கு போனாள்.

“வாம்மா. அதுக்குள்ள முழிச்சிட்டியா? இப்ப தான் உங்களுக்கு கொடுத்து அனுப்பலாம்னு காஃபி போட்டேன். இந்த உன் புருஷனுக்கு முதல்ல இந்த காஃபிய குடுத்துட்டு வாம்மா” என காஃபி கப்பை அவளிடம் நீட்ட.

ஆர்விகா எதுவும் சொல்ல முடியாமல்  காஃபியை எடுத்துக்கொண்டு யாஷ்மிதனை நோக்கி வர. பின்னால் வானதியும் காஃபியோடு வந்தாள்.

“அம்மா எனக்கு காஃபி” என சமீரா வர.

“கிச்சன்ல இருக்கு. எடுத்துட்டு வாம்மா” என கூற.

சமீரா கிச்சனுக்கு சென்று எடுத்துக்கொண்டு வந்து அம்மாவுடன் சோஃபாவில் அமர்ந்தாள்.

“இந்தாங்க காஃபி” என நீட்டினாள்.

அண்ணா பாத்தியா அண்ணி வந்த உடனே உனக்கு காஃபி கொண்டு வந்து தராங்க.

“என் பொண்டாட்டி எனக்கு தராம” என காஃபியை கையில் எடுத்துக்கொண்டு, ஆர்வி செல்லம் நீயும் காஃபி குடி டா.

‘நம்மள விட பயங்கர நடிகனா இருக்காரே’ என நினைத்தாள். மெதுவாக தலையசைத்தவள் காஃபியை எடுத்து உறிஞ்சத் தொடங்கினாள். ‘நம்ம வீட்டு காஃபிய விட சூப்பரா இருக்கு’ என நினைத்தாள்.

என்ன அண்ணா கொஞ்சம் ஓவரா இருக்கு.

“என் பொண்டாட்டி நான் கொஞ்சுவேன். உனக்கென்ன வந்தது” என்றான்.  அப்போது ஆஃபீஸில் இருந்து கால் வந்தது.

என்ன ராகவ். எதுவும் ப்ராப்ளமா?

இல்ல சார். ஒரு ஹேப்பி நியூஸ் சார். நம்ம கம்பெனிக்கு ரொம்ப நாளா கிடைக்கனும்னு ஆசைப்பட்ட அந்த ப்ராஜெக்ட் கிடைச்சிடுச்சி சார்.

ரியலி.

எஸ் சார்.

வாவ். சூப்பர் ராகவ்.

கங்கிராஜுலேஷன் சார்.

தேங்க்ஸ் ராகவ். நான் வீட்டில எல்லார்கிட்டயும் சொல்றேன்.

சார் அப்பா தான் இந்த ப்ராஜெக்ட் கூட இருந்து சைன் பண்ணி எல்லாம் முடிச்சு கொடுத்தாங்க. நீங்க கல்யாணத்துல பிஸியா இருந்ததால உங்க கிட்ட சொல்ல முடியல.

ஓகே ராகவ். பரவால விடுங்க.

சார்  எல்லாரும் பார்ட்டி கேட்பாங்க.

சூப்பரா கொடுத்திடலாம் ராகவ். நாள் பிக்ஸ் பண்ணிட்டு ரெடி பண்ணலாம்.

“ஓகே சார்” என ராகவ் இணைப்பை துண்டிக்க.

“என்னடா ரொம்ப சந்தோஷமா இருக்க. என்ன விஷயம்” என வானதி கேட்க.

அம்மா நாம ரொம்ப நாளா எதிர்பார்த்த ஒரு ப்ராஜெக்ட் நமக்கு கிடைச்சிடுச்சி.

அப்படியா? எல்லாம் என் மருமக வந்த நேரம் தான்.

ஏன் இப்படி சொல்றிங்க. நான் இப்போ தான் வந்து இருக்கேங்க.

என்னது இருக்கேங்க வா. அத்தைனு வாய் நிறைய கூப்பிடனும் ஆர்விகா.

சரிங்க அத்தை.

இது எவ்வளவு நல்லா இருக்கு.

அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்.

என்ன? சமீரா.

காஃபி க்கு அண்ணிய கொஞ்சின நீ இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு. இப்ப சைலண்டா பேசற.

யார் சொன்னா. என் பொண்டாட்டி வந்த நேரம் எனக்கு இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு. கொஞ்சாம விடுவேணா? என ஆர்விகாவின் அருகில் சென்றவன், “ஆர்விகா மை டார்லு. என் செல்ல பொண்டாட்டி” என அவளை அருகில் இழுத்து அவளது கன்னத்தை தன் இரு கரங்கள் கொண்டு பிடித்து  நெற்றியில் அழுத்தமாக தன் இதழ் பதித்தான்.

சாரல் தொடரும்…

Advertisement