Advertisement

அவளை அமைதியாய் தன் காரில் ஏற்றி விட்டு தானும் ஏறிக்கொண்டு காரை ஓட்ட ஆரம்பித்தான் ஹரி.

அவள் கண்களை மூடி கோபத்தை கட்டுப்படுத்துவது நன்றாகவே தெரிந்தது.  

அவன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவள் புறம் திரும்பி அமர்ந்தான்.

அவள் அமைதியாய் சாலையை வெறித்துக் கொண்டிருந்தாள். 

“சொல்லு கவி” என்று அவன் கேட்டதும்,” நீங்கதான் சொல்லணும் மிஸ்டர் ஹரிகேஷ்” என்றாள் கவி .

அவள் எப்போதும் அழைக்கும் ஹரி என்றுமில்லாமல் ஹரிகேஷ் என்ற அழைப்பிலேயே கோபம் கொண்டவன்,” மேடம் என்ன செய்யணும்னு சொல்றீங்களோ அதையே செய்யலாம்”

“அதனால நீங்க நேரா விஷயத்துக்கு வாங்க!”

 “எனக்கு இந்த சுத்தி வளைத்து பேசுவது சுத்தி வந்து முக்கத் தொடுவது அதெல்லாம் பிடிக்காது என்றான்.

“இப்போது கவிக்கும் ரோஷம் வந்து விட இந்த கல்யாணம் வேண்டாம் நிறுத்திவிடலாம் என்று அவள் கூறும் போதே அவள் குரல் உடைந்துவிட்டது”.

ஹரி இதை எதிர்பார்க்கவில்லை என்பதை அவனின் முகம் நன்றாய் காட்டியது. “ஏன்? என்ன ஆச்சு?” என்று அவன் கேட்டான். 

அவனை பார்த்து முறைத்துக் கொண்டே,” இன்னும் என்ன ஆக வேண்டும் என்கிறீர்கள்?” என்று கேட்டாள் கவி.

அவன் தன் குரலில் குழைவை வரவழைத்துக் கொண்டு,” கவி நீ என்ன சொல்றனு புரியல?”

” எதுவாயிருந்தாலும் பேசினா தானே தெரியும் கண்ணம்மா!” என்று அவன் கூறவும் அதற்கு மேல் அவளுக்கு கோபம் என்ற ஒன்றே மறந்து விட்டது. 

அவள் அமைதியாய் எதுவும் பேசாமல் அவனின் முகத்தையே பார்க்கவும்,”ஏய் இப்படி எல்லாம் என்ன பார்க்காத!”

“அப்புறம் நான் உன்னோட பார்வையில கரைஞ்சிட போறேன்!”.

“நான்னா என்னோட வைஃப்க்கு  உயிர்!”

” அப்புறம் அவ கிட்ட என்னால பதில் சொல்ல முடியாது”. 

“அவள் சும்மாவே அங்க ஜாண், இங்க முழம் குறையுதுனு சொல்லுவா!” என்றவனின் பேச்சில் தன்னையும் மீறி சிரித்து விட்டு அவன் காதை பிடித்து திருகினாள். 

“இப்பவாவது உன்னோட கோபம் குறைந்ததா?” என்று கூறவும்,” எல்லாம் உன்னாலதான் ராஸ்கல்” என்றாள் கவி. 

10 நாட்களாக ஒரு காலும் பண்ணல வீட்டு பக்கமும் வரவில்லை.

“எல்லார்கிட்டயும் சமாளிக்கிறதுகுள்ள நான் ஒரு வழியாகி விட்டேன் என்றவளின் இரு கைகளையும் பிடித்து மெல்ல வருடிக்கொண்டே சாரிடா புது கம்பெனி இல்லையா இது!”

“நம்ம மேல நம்பிக்கை வரணுமே அதனால கொஞ்சம் ஒர்க் அதிகமா பார்க்க வேண்டியதா போச்சு” 

“அதேசமயம் அப்பாவுக்கு  உனக்கு எல்லாம் ரெஸ்ட் கொடுக்கணுமே”

 அதான்  ஓவர்டைம் ஒர்க்ல உங்க எல்லாரையும் மறந்துட்டேன் என்றவனிடம் முதல்ல,” நம்ம ஹெல்த் ஹரி அப்புறம் தான் வேலை சரியா என்று அவள் கூற அதற்கு அரசியின் ஆணைப்படி அனைத்தும் நடக்கும்” என்றான் ஹரி.

“அவள் ஹரியிடம் நான் ஐந்து நாட்கள் மும்பை போகணும்”.

“அதுவும் நாளைக்கே கிளம்பனும்”.

” அதைப்பற்றி பேச தான் முக்கியமா உங்களை பார்க்க வந்தேன்”. 

“ப்ராஜெக்ட் விஷயம் அதனால வேற யாரையும் அனுப்ப முடியாது”.

” நானும் கண்மணியும் தான் போகப் போறோம்” என்றவளை இமைக்காமல் பார்த்தான் ஹரி. 

அவள் மீண்டும் அவனிடம்,” நீங்க என்ன சொல்றீங்க?” என்று கேட்கவும்

 ” பிரிந்திருக்கிறது கஷ்டம் தான் ஆனாலும் உன்னோட வேலையாச்சே சரி நீங்க பத்திரமா போயிட்டு வாங்க”. 

“அரவிந்த் இப்ப மும்பையில் தான் இருக்கான்”. 

“அவன்கிட்ட நான் பேசுறேன் என்றவனிடம் அவனுக்கு எதுக்கு கஷ்டம் நாங்களே பாத்துக்குறோம் ஹரி” என்றாள் கவி.

“அதற்கு ஹரி பரவாயில்லை எனக்கு இந்த வேலை இல்லைனா நான் உன் கூட வந்து இருப்பேன்” என்றான்.

“நான் தான் வர முடியல அட்லீஸ்ட் உங்களுக்கு ஒரு செக்யூரிட்டியாச்சும் அரேன்ஞ்ச் பண்ண வேணாமா!”.

” எனக்காக இந்த பூமியில பொறந்து 22 வருஷமா எனக்காக காத்திட்டு இருந்தியே அதுக்காகவாவது நான் இதை செய்தே ஆகனும்” என்றான். 

அவள் பதிலேதும் பேசாமல் அமர்ந்திருக்க அவள் தலையை ஆட்டிவிட்டு,” ஏய் போக்கிரி! என்றான்

“என்ன! ஒரே பீலிங்கா!” 

“இந்த அத்தான பிரிஞ்சு இருக்க முடியலையா டா சொல்லிடு” என்றவனின் மூக்கை பிடித்து நன்றாக திருகி விட்டு காரை எடுக்கச் சொன்னாள் கவி. 

ரொம்ப நேரமாய் மகளை காணாததால் வாசலிலேயே அமர்ந்திருந்த தேவகியை கண்டதும் கண்கள் கலங்கிவிட்டன கவிக்கு. 

“அம்மா” என்றழைத்தவாறு ஓடிச்சென்று தன் அம்மாவை அணைத்துக் கொண்டாள் அவர்களின் சீமந்த புத்திரி. 

“வாங்க மாப்பிள்ளை” என்ற சேரனின் அழைப்பில் மருமகனை பார்த்த தேவகி “உள்ளே வாப்பா”  என்று கூறிவிட்டு தன் மகளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்

“என் மாமாவிற்கு யார் ஜூஸ் கொடுப்பது என்று அபியும் அனுவும் சண்டையிட கோகுல் ஒரு ஐஸ் வாட்டர் பாட்டில் உடன் சென்று தன்  மாமாவின் தாகத்தை தீர்த்து வைத்தான்”.

” என்ன மாம்ஸ் மேரேஜ் டிரஸ் எல்லாம்  செலக்ட் பண்ணியாச்சா?” என்ற கோகுலின் கேள்விக்கு இனிமேல்தான் செலக்ட் பண்ணணும்.

 அதுவும் உங்க அக்காவோட செலக்ஷன் தான் மச்சான்.

 “உங்க அக்காக்கிட்ட எனக்காக ரெகமெண்ட் பண்ணுடா” 

“இந்த ஹெல்ப மாமா மறக்கவே மாட்டேன்” என்ற தன் மாமாவிடம்,” சரி ஓகே! நாம ஒரு டீல் பண்ணிக்கலாமா மாமா!” என்றான் கோகுல்.

ஹரி அவனிடம் ஓகே என்பது போல் தன் பெருவிரலை நீட்ட அவனும் தன் பெருவிரலை நீட்டி மூடிக்கொண்டனர். 

பிறகு மாமா ஒன்னும் பெருசா உங்ககிட்ட கேக்கல என சொல்லிவிட்டு,” என்னோட ஆள கொஞ்சம் சீக்கிரமா என்கிட்ட காண்பிச்சிங்கனா நானும் லைஃப்ல செட்டில் ஆயிருவேன்” என்றவனின் இதயத்தை தட்டி இங்க பொறுமை வேணும் மச்சான். 

நான் உங்க அக்கா கிட்ட பேசறேன் என்று கூறிக்கொண்டிருக்கும் போதே தலை குளித்து விட்டு நைட்டியில் வந்த கவியை பார்த்ததும் கோகுல் நழுவி விட அவள் தலையை துவட்டிக் கொண்டே அவனிடம் நீங்க இன்னும் கிளம்பலையா என்றாள். 

அப்போது அங்கு வந்த அபி,” உனக்கு தான் மாமாவ அனுப்புற உத்தேசத்த காணமே!”

 இல்லைன்னா,” இப்ப போய் இப்படி ஹெட்பாத் நைட்டினு நிப்பியா அக்கா?” என்றதுமே நில்லடி என்று அவளைத் துரத்த ஆரம்பிக்கவும் தேவகி தன் மக்களை கடிந்து கொண்டார். 

பிறகு அவர் அனைவரையும் சாப்பிட அழைத்ததும்,” இல்ல ஆன்ட்டி நாங்க சாப்பிட்டு தான் வந்தோம் என்று ஹரி கூறிக் கொண்டு இருக்கும்போதே அம்மா இன்னிக்கு என்ன டின்னர்?” என்று கவி கேட்டாள். 

அதற்கு தேவகி ஒன்னும் பெருசா இல்லை நீ பேசிட்டு வா என்று கூறியவாறு சென்றுவிட்டார்.

 கவிக்கு கோபம் தான் என்றாலும் ஹரி அவளை பார்த்த பார்வையில் அப்படியே உறைந்து விட்டாள்.

அவன் எழுந்து அவள் முகம் பார்க்காமல்,” சரி நான் கிளம்புறேன் நாளைக்கு நீ கிளம்பிட்டு கால் பண்ணு” என்று கூறிவிட்டு அவன்  கேட்டை நோக்கி நடக்க கவி ஓடிச்சென்று அவனை பின்னாலிருந்து கட்டிக்கொண்டே,” சாரி ஹரி நீங்க டைமுக்கு போய் தூங்கணும் னு தான் அப்படி சொன்னேனே தவிர எனக்கு மட்டும் உங்களை விட்டு பிரியவே கஷ்டம் தானே!”.

 “நான் இப்பதான் மனச கஷ்டப்பட்டு கடிவாளம் போட்டு கட்டி வச்சிருக்கேன்” என்ற அவளின் இரு கைகளையும் பிடித்து அவளை முன்னே இழுத்தான் ஹரி.

அவள் அமைதியாய் தரையை பார்த்தபடி நிற்கவும் கவி ,”உனக்கான பனிஷ்மென்ட் கூடிட்டே போகுது பார்த்துக்கோ!” என்றவனின் மார்பில் செல்லமாய் குத்தி வீட்டு கேட்டை திறந்து அவனை அனுப்பி வைத்தாள். 

உள்ளே சிரித்துக்கொண்டே வந்த தன் மகளைப் பார்த்து புன்னகை செய்தனர் கவியின் பெற்றோர்கள்.

“என்னக்கா! மனசே வரல போல!” என்ற தன் தங்கைகளிடம் பேசிக்கொண்டே உள்ளே சென்றுவிட்டாள் கவி. 

அடுத்த நாள் சீக்கிரமாய் கவி மும்பை கிளம்ப ஆரம்பித்து விட்டாள்.

மும்பையில் அவர்களை வரவேற்ற அரவிந்த் அவர்களின் ஆபீஸில் இறக்கிவிட்டு ஈவினிங் பார்க்கலாம் என்று கூறி சென்றுவிட்டான் “. 

அவர்கள் சென்று தங்கள் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தனர். 

அது புது இடமாக இருந்தாலும் அடிக்கடி மீட்டிங்கில் அறிமுகமான மனிதர்கள் என்பதால் வெகு விரைவாகவே பழகிவிட்டனர். 

ஈவினிங் ஆனதும் அரவிந்த் அவர்களை தனது அபார்ட்மெண்டுக்கு  அழைத்துச் சென்றான். 

எப்போதும் போல அவனின் அறை ஒரு குப்பை போல் இருக்கவும் இருவரும் சேர்ந்து அவற்றை அடுக்கி வைத்தனர்.

 பிறகு ஈவினிங் ஸ்நாக்ஸ் வீட்டிலேயே தயாரிக்கும் பொருட்டு அதற்கு தேவையான பொருட்களை வாங்கி வர அரவிந்தை அனுப்பிவைத்தனர்.

Advertisement