Advertisement

நால்வரும்   ரிசப்ஷனில் காத்திருந்தனர்.

 சரியாய் பத்து நிமிடங்கள் கழித்து அங்கு வந்த ஒரு பெண் ஒருத்தி அவர்கள் நால்வரிடமும் அப்பாயின்மென்ட் ஆர்டரை கொடுத்துவிட்டு “வெல்கம் டு அவர் கம்பெனி” என்று கூறி புன்னகைத்தாள். 

“இது கனவா இல்லை நிஜமா!” என்று அவர்கள் குழப்பத்திலேயே இருக்கவும் அவள் அவர்களின் முன் இருந்த டேபிளை லேசாக தட்டவும் சுயநினைவுக்கு வந்தவர்கள் அவளையும் கையிலிருந்த ஆர்டரையும்  மாறி மாறி பார்த்து விட்டு அவளுக்கு நன்றி சொல்லி விட்டு தங்களை தேர்ந்தெடுத்து அந்த இறைவனுக்கு நன்றி கூறினான் ஹரி. 

எம்டியிடம் நாங்க எப்ப ஜாயின் பண்ணனும்?”  என்று கேட்கவும் அவன் சிரித்துக்கொண்டே,” நீங்க நம்ம கம்பெனில ஜாயின் பண்ணி அரை மணி நேரம் ஆகுது!” என்றார்

பிறகு தன் மேசை மேல் வைக்கப்பட்டிருந்த பிள்ளை அழுத்தியதும் ஒரு பெண் உள்ளே வந்தாள்.

” இவள் பெயர் மாது!” என்று அவர்களுக்கு அறிமுகப்படுத்தி விட்டு அவளிடம் “இவர்களின் சீட் மற்றும் வேலைகள் பற்றி எல்லாம் கூறிவிடு என்று கூறிவிட்டு தன் வேலையில் மூழ்கி விட்டான் அந்த சாது இளைஞர்”

மாது மிகவும் சுலபமாக பழக கூடியவராக இருந்ததால் சீக்கிரமே அவர்களின் வேலைகள் மற்றும் கம்பெனியின் முக்கிய குறிப்புகளை பற்றி எல்லாம் தெரிந்து கொண்டனர்.

அடுத்த நாளில் இருந்து வேலைக்கு வர வேண்டும்.

அதனால் இப்போதே இதைப்பற்றி வீட்டில் சொல்லியாக வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தான் ஹரி. 

இரவு வீட்டில் அனைவரும் சாப்பிட்டதும் தோட்டத்தில் 3 நாற்காலிகளைப் போட்டு விட்டு தன் பெற்றோருடன் அங்கு சென்றான். 

அவன் செய்கைகளை ஆர்வமும் ஆச்சரியமுமாய் கவனித்துக் கொண்டிருந்தவர்களிடம்  வேலை மாற்றம் பற்றி அறிவித்தான். 

முதலில் அதிர்ச்சி அடைந்தவர்கள் பிறகு சமாளித்துக் கொண்டு அவனிடமே,” என்ன செய்வது?” என்று கேட்டனர்.

அவன் சிரித்துக்கொண்டே,” பெரிதாய் ஒன்றும் இல்லை அம்மா!”

” கல்யாணம் மட்டும் சிம்பிளா பண்ணலாம்னு கேட்கிறேன். அவ்வளவுதான்!” என்ற தன் மகனின் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டே பேச ஆரம்பித்தார் கனீஷ். 

“நீ சொல்றது எங்களுக்கு புரியுது ராஜா”

 ஆனா,” நீயும் அவங்களை பத்தி கொஞ்சம் யோசிச்சு பாரு!”

 அவங்க வீட்டு பொண்ணு மேரேஜ் அதுவும் செல்ல பொண்ணுணு  கூட சொல்லலாம்.

 சும்மாவே சேரனுக்கு இந்த கல்யாணத்துல தான் உயிரே இருக்கு ஹரி.

“அதுவும் இல்லாம நாம என்ன சொல்ல வரோம் அப்படிங்கறத அவங்க வேற மாதிரி புரிஞ்சுகிட்டா இன்னும் பிரச்சனை தான்”.  

“நம்மளால முடிஞ்சது முடிஞ்சவரைக்கும் அவங்களுக்கான செலவை குறைக்க பார்க்கணும்” என்றார்.

 அவர் பேசி முடித்ததும்,” அவனிடம் நீ முதல்ல கவி கிட்ட பேசு  அவ சொன்னா அவங்க வீட்டுல ஒருவேளை கேட்கலாம்” என்றார் அணு.

” சரிமா நான் பேசிட்டு சொல்றேன்”

” நீங்க ரெண்டு பேரும் தூங்குங்க” என்று தன் பெற்றோரை வழியனுப்பி வைத்தான். 

அதேசமயம் கவி அங்கு தன் டைரியில் கீழ்கண்ட வரிகளை எழுதிக் கொண்டிருந்தாள்.

 பிரிவின் வலி

 வேதனை தான்

 என்றாலும் 

உன்னை 

பிரிந்திருக்கிறேன்

 என்பதை மறுக்கும்

 என் இதயத்தின் 

துடிப்பை நீ அறிவாயா???

என் கண்ணனே!!

அவள் எழுதி முடிக்கவும் அவள் மொபைல் அதிரவும் சரியாய் இருந்தது.

 அவனாக இருக்குமோ என்று எண்ணிக்கொண்டே ஸ்கிரீனில் நம்பரை பார்த்தவளின் கண்கள் அவளை ஏமாற்றவில்லை. 

அவசரமாய் எடுத்து ஹலோ சொன்னால் மறுமுனையில் சத்தம் ஏதும் கேட்காமல் போகவே மீண்டும் ஹலோ என்றாள்.

அப்போது,” ஹலோவைத் தவிர உனக்கு வேறு ஏதும் பேச வராத கண்ணு?” என்று ஹரி கேட்டதும் அவள் ரோஷத்துடன்,” ஏன் வராது! டேய் ஹரி மடையா, சோம்பேறி என்று யோசிக்க தொடங்கும் போதே,போதும் தாயே இன்னிக்கு இந்த அர்ச்சனை!” என்றதும் அவள் அமைதியாகி விட்டாள்.

“அவன் அவளிடம் தன்னுடைய வேலை மாற்றம் பற்றி கூறிவிட்டு முடிந்தவரை அதிக செலவு வேண்டாம் எனக்கூறி வீண் செலவுகளை தடுக்க பார் கவி” என்றான்.

சரி!

” ஓகே! அப்போ போன வச்சிவா?” என்று அவன் கேட்டதும் அவள் ம்.. என்று மௌனராகம் பட “ஐ லவ் யூ கண்ணம்மா” என்றான் அவன்.

 “ஐ லைக் யூ ஹரி” என்றாள் அவள்.

அடிப்பாவி!!! 

“இப்பதான் லைக்கே பண்றியா???”

 “நீ முதல்ல அன்லைக் பண்ணிட்டு லவ் பண்ணு சரியா???”

” அப்புறம் மேரேஜ் டேட் ஃபிக்ஸ் பண்ணனும் இல்லையா நாளைக்கு வீட்ல மீட் பண்ணலாம்.”

“பாய் டா ஹனி!!”

“குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்று கூறி வைத்து விட்டான்.

நீ இல்லாத 

என் வாழ்க்கை

 வண்ணம் இல்லா வானவில்லாக

 விரைவில் வந்து

 உன் வ()ண்ணங்களை

 சேர்த்துவிடு என்னில்

 அடுத்த நாள் காலையில் கவி ஆபீசுக்கு கிளம்பி விட தேவகி வீட்டு நிர்வாகத்தை தன் மற்ற பிள்ளைகளிடம் விட்டுவிட்டு ரேவதியின் வீட்டிற்கு சென்றார். 

அவரைப் பார்த்ததும் ஓடி வந்து உள்ளே இழுத்துச் சென்றார் ரேவதி.

“அரவிந்த் எங்கே ஆளைக் காணோம்?” என்று தேவகி கேட்க அதற்கு ரேவதி அவன் வேலை விஷயமா மும்பை போயிருக்கான் என்றார். 

சரி,” கவிக்கு கல்யாண நாள் குறிக்க வேண்டும் அதான் உன்கிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்” என்றார் தேவகி. 

அதற்கென்ன தேவா,” நீ தேதியை மட்டும் குறிச்சிட்டு சொல்லு மத்தத நாங்க பார்த்துக்குறோம்” என்றார் ரேவா. 

“அவர் மாப்பிள்ளை வீட்டுக்கு இதைப்பற்றி பேச போயிருக்கார் இருந்தாலும் எனக்கு தான் மனசு கெடந்து தவிக்குது” என்றார் தேவா. 

அவர்கள் பேசிக் கொண்டே இருந்தனர். 

இந்த உலகை மறந்து அப்போது அங்கு வந்த கவியும் ஹரியும் அவர்களின் கவனத்தை ஈர்த்தனர். 

“வந்தவர்கள் அவர்களின் இருவரிடத்திலும் ஆசி பெறவும் அவர்களை வாழ்த்தி விட்டு சம்பிரதாயப்படி கவியிடம் பூ மற்றும் குங்குமத்தை தந்து விட்டு சமையல் அறைக்குள் ரேவா செல்ல இருவரும்  பேசிக் கொண்டிருங்கள் என சொல்லிவிட்டு தேவகியும் உள்ளே சென்று விட்டார்”. 

“தன் அம்மாவை பார்த்தவாறு நின்றிருந்த கவியின் கைகளில் இருந்த பூவை எடுத்து அவள் தலையில் ஹரி சூட்டவும் திடீரென சுயநினைவு பெற்றவள் போல் பின்புறம் திரும்பியவள் அவன் மேல் மோதிக்கொண்டாள்”. 

அவனிடமிருந்து விலகும் பொருட்டு தலையை திருப்பிவள் மீண்டும் அவன் மேல் சாய்ந்தாள்.

அதுவரை அமைதியாய் இருந்த ஹரி முகத்தில் ஒரு விஷமச் சிரிப்புடன் ,”பொறுடா கவி! பொத்தான் அறுந்திட போகுது!  நானே எடுத்து விடுகிறேன்” என்று கூறி அவன் சட்டையில் மாட்டி இருந்த அவள் கூந்தலை பிரித்து எடுத்தான்.

அவள் அமைதியாய் உள்ளே சென்று படுத்தவள் இருந்த அசதியில் உறங்கிவிட்டாள்

“என்னப்பா ஹரி! வெதர் ரொம்ப மோசம் இல்ல!” 

“கவலைப்படாத! போக போக சரியாகிடும்” என்று சொல்லிவிட்டு அவனிடம் அன்னாசிப்பழ கேசரி கொடுத்தார் ரேவதி. 

அதேசமயம் தேவகி கவியை அழைத்து கொண்டிருந்தார். 

அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க கவி மட்டும் தூக்கத்திலேயே இறங்கி கீழே வந்தாள். 

“என்னம்மா! ஏன் கூப்பிட்டீங்க? ஒரே தூக்கம் ரொம்ப டயர்டா இருக்கு நான் போய் தூங்க போறேன்” என்று கூறியவாறு ரேவதி மீது சாய்ந்து கொண்டாள் கவி. 

தேவகி கவியைப் பற்றி புலம்பிக் கொண்டிருந்தார். 

“பரவாயில்லை ஆன்ட்டி”

” நான் அவகிட்ட அப்புறமா பேசிக்கிறேன்”

” மேரேஜ் டேட் ஆடி18னு  நாங்க முடிவு பண்ணி இருக்கோம்”. 

“நீங்களும் கலந்து பேசிட்டு ஓகேவானு சொல்லுங்க”

” இப்ப நான் கிளம்புறேன் என்று கூறிக்கொண்டு கிளம்பியவன் யாருக்கும் தெரியாமல் கவியின் தலையில் ஒரு குட்டு குட்டிவிட்டு சென்றான்”. 

திருமண தேதி நிச்சயம் ஆனதும் அனைவரும் திருமண வேலைகளில் இறங்க அதேசமயம் கவியும் ஹரியும் தங்கள் வேலைகளில் மூழ்கினர்.

ஹரி தினமும் 12 மணி நேரம் ஆபீஸில் இருந்தான். 

அதே சமயம் தன்னுடைய வேலைகளை அவ்வப்போது முடித்து விட்டு அடுத்தது என்று அவன் கேட்கும் போது எம் டிக்கு உச்சி குளிர்ந்து போகும்.

அதே சமயம் அவனது பார்ட் டைம் ஜாபையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். 

“அவ்வப்போது பில்டிங் டிசைன்ஸ் சேன்ஞ் செய்வது, கம்பெனிக்கு ஆர்டர் கேட்டு மாடல்ஸ் அனுப்புவது என தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்தான் ஹரி”.

திருமணத்திற்கு இன்னும் பத்தே நாட்கள்  இருக்கும் இந்த நேரத்தில் கூட ஹரி கவியிடம் பேசவில்லை. 

அதேசமயம் கவிக்கு ப்ராஜெக்ட் விசயமா 5 நாட்கள் மும்பை செல்ல வேண்டி இருந்தது. 

“அவனுக்கு கால் செய்தால் ஸ்விட்ச் ஆஃப் என்று சொல்ல என்ன செய்வது என்று தெரியாமல் அவனை தேடி அவன் ஆபீசுக்கு சென்றாள்”

“அவன் பிசியாக இருப்பதாகவும் யாரையும் இப்போது பார்க்க முடியாது என்று அங்கு கூறியபோதும் பரவாயில்லை நான் வெயிட் பண்ணி பார்த்துட்டு போறேன்” என்றாள். 

சரியாய் இரவு  9 மணிக்கு அவன் தன் வேலைகளை முடித்துக் கொண்டு வெளியில் வரவும் அவன் முன்னால் சென்று நின்றாள் கவி. 

அவன் மகிழ்ச்சியில் லேசாய் அவள் கன்னம் வருட உடனே அவன் கையை தட்டி விட்டாள கவி. 

அவன் என்ன என்பது போல் புருவம் உயர்த்தி கேட்க அவள் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

Advertisement