Advertisement

கண்மணி எழுந்து தாரிகையிடம் செல்ல அவள் கண்மணியை முறைத்தாள்.

என்னடி இப்படி முகத்தை வச்சிருக்க? 

அப்புறம் ஸ்ரீராம்,” எங்க என்னோட தாரினு தேடிட்டு போய்டப் போறாரு!” என்று கேட்கவும் முதலில் முகம் சிவந்தவள் மீண்டும் அவளை முறைத்துக் கொண்டே ஏண்டி,” நீங்க என்னோட கல்யாணத்துக்கு தான வந்தீங்க? இல்ல உங்க ஹீரோஸ் கிட்ட பேசுறதுக்கு வந்தீங்களா?” என்று போட்டுத் தாக்கவும் 

ஒரு நிமிடம் தடுமாறியவள் பின்பு,” அவளிடம் இல்லடி  உங்க ஆளால் உன்ன பாக்காம இருக்க முடியலையாம்!”

” அதான் மேக்கப் போடலைன்னாலும் பரவாயில்ல கொஞ்சம் சீக்கிரமா கூட்டிட்டு வந்துடுங்கனு ரெக்வஸ்ட் பண்ணிட்டு போனார்” என்றாள்.

அவளின் மீது நம்பாத பார்வை ஒன்றை செலுத்தி விட்டு,” எங்கடி அந்த கவி கழுதை என்று கேட்டாள் தாரிகை”. 

அவள் கூறியதும் தான் கண்மணிக்கு நினைவு வந்தது.

அவள்  தாரிகையிடம்,” அவசரமாய் அவள் தோட்டம் பக்கமா போனா”

” இன்னும் ஆளையே காணோம் ” என்று சிறு கவலையுடன் கூறினாள். 

அதற்கு தாரி ,”அவ கெஸ்ட் கூட பேசிட்டு இருப்பாடி!” 

” நீ கவலைப்படாத!”

 ஆனா ,”ப்ளீஸ்! நீ கொஞ்சம் என்னோடவே இருடி”

” எனக்கு கொஞ்சம் நர்வஸா  இருக்கு” என்ற  தன் தோழியின் மூக்கைப் பிடித்துக்கொண்டு ,”சரிங்க மேடம்! நான் இங்கயே இருக்கிறேன்” என்று கூறினாள் கண்மணி. 

கோகுலின் பேச்சை கேட்டு தோட்டத்திற்கு வந்த கவி அங்கு இருந்த கூட்டத்தில் அபியை தேடிக்கொண்டிருந்தாள். 

அதற்குள் அவளின் வருகையை கவனித்துவிட்ட ஹரி தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு அவள் அருகில் சென்றான். 

அவள் அழகு ஓவியமாய் நிற்கவும் ஹரி தன் நண்பர்களை அவளுக்கு அறிமுகப்படுத்தினான். 

அவள் அனைவருக்கும் சிறு புன்னகையுடன் தன் வணக்கத்தையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டாள். 

பிறகு ,”நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க !” என்று ராகேஷ் கூற அதற்கு,” என்னோட செலக்சன் ஆச்சே!” என்று தன் சட்டையின் காலரை தூக்கி விட்டான் ஹரி.

 கவி சிரித்துக்கொண்டே தன் வருங்கால  கணவனை பார்க்கவும் ,”இப்பதான் முதல் முறையா ஹரியை பார்க்கறீங்களா?” என்று கேட்டு வைத்தான் கவிஷ்.

கவி அவசரமாய் தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.

டேய்!!!

“ஏன்டா என் வைஃபை கலாய்க்கிறீங்க?” என்று ஹரி கேட்கவும் ,”ஒரு சின்ன திருத்தம் மச்சி!”  என்றான் ப்ரணேஷ்.

இப்போது கவியும் நிமிர்ந்து அவர்களை பார்த்தாள்.

“மூவரும் சேர்ந்து ஒரே  குரலில் இன்னும் அவங்க எங்களோட தங்கச்சி தான் சரியா?” என்று கேட்கவும் ஹரி சிரித்துக்கொண்டே தன் காதலியை பார்க்க  அவள் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவர துடிப்பதை உணர்ந்து அவளின் முன்னால் நின்றுகொண்டு,” இவ என்னோட வைஃப் மட்டும் தான்! உங்க தங்கச்சிக்கான லைசன்ஸ் எல்லாம் முடிஞ்சாச்சு” என்றான்.

 அவர்கள் அனைவரும் அவனை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டு கவியிடம் திரும்பி,”ஹலோ சிஸ்டர்!  நாங்க சொன்னது சரிதானே!” என்று கேட்டனர். 

“அவளும் சிரித்துக்கொண்டே கண்டிப்பாக மறுக்க முடியாத உண்மை” என்று கூறினாள்.

அனைவரும் சிரித்துக்கொண்டே ஹரியை பார்க்க அவன் அவர்களிடம் ,”என்னடா!  உங்க பாசமலர் ஸ்டோரி எல்லாம் முடிஞ்சதா?” என்று கேட்கவும் ,”சரி ஓகே வாங்கடா ஸ்ரீ கோவிச்சுக்க போறான்” என்று கூறினான் கவிஷ். 

ஹரி தன் கண்களால் கவிக்கு தூது அனுப்பினான். 

அதை கவனித்துவிட்ட ராகேஷ்,” கவியிடம் நீங்க போய் தாரிகையோட இருங்க சிஸ்டர்! நாங்க அரவிந்த கூட்டிட்டு வருகிறோம்” என்றான். 

உள்ளே சென்று கொண்டிருந்த கவியை அழைத்தார் ரேவதி.

“என்ன ஆன்ட்டி!” என்று அவள் கேட்க அதற்கு அவர் பதில் கூறாமல் கண்மணியை பற்றிய தன் கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கவும் கவி,”ரேவதியிடம் ஆன்ட்டி அரவிந்த் ஒரு பொண்ண லவ் பண்றான்”.

“அதுவும் ரொம்ப சின்சியரா!”

” எதுக்கும் நீங்க ஒரு முறை அவன் கிட்ட பேசுங்க!” என்று தன் விளையாட்டை ஆரம்பித்து வைத்தாள். 

அதைக் கேட்டதும் ரேவதியின் முகம் கன்றியது. 

அதை கவனித்த கவி ரேவதியிடம் தான் ஒரு நிமிடத்தில் வருவதாக கூறி விட்டுச் சென்றாள். 

எங்கு தேடியும் அரவிந்தை காணாததால் மாடிக்குச் சென்று தேடினாள் கவி.

அங்கும் அவனில்லை.

 இயற்கை அன்னை தன் எழிலை பன்மடங்கு கூட்டிக் கொண்டிருந்தாள். 

மொட்டை மாடியில் அவள் நிற்க அவளை தாய் மடி போல் தாலாட்டியது தென்றல் காற்று. 

அவள் முழுவதுமாய் தன்னை இயற்கையுடன் இணைந்து விட்ட தருணம்,”ஹரி அவளின் பின்னால் வந்து நின்று கொண்டதை அவள் கவனிக்கவில்லை”. 

தென்றலின் அதிகப்படியான தாலாட்டினாள் ஒருபுறம் அவளின் சேலை முந்தானை காற்றில் பறக்க மற்றொருபுறம் அவளின் கலைந்த கூந்தல் காற்றில் ஊஞ்சல் ஆடியது. 

வானத்தில் மெதுவாய் மேகங்கள் நகர இடி மின்னல் எட்டி எட்டிப் பார்க்க மழை என்னும் காதலன் மண்/பூமி என்னும் காதலியை நோக்கி வந்துகொண்டிருந்தான். 

அவர்களின் சந்திப்பின் நினைவாய் வானவில் தோன்ற இவர்களின் கதையை இரவில் மதியும் பகலில் ஆதவனும் காவியமாய் வரைகின்றனர்.

தன் மனதில் தோன்றிய கற்பனைகளுக்கு தடை போடாமல் அதன் இஷ்டப்படி அவளும் அதை ரசித்துக்கொண்டிருந்தாள்.

 திடீரென மழைமேகம் வேகமாய் நகர்ந்து மழைப்பொழிவை அதிகரித்தன.

அவள் மழை நீரை தன் கைகளில் பிடித்து அங்குமிங்கும் வீசி விளையாடிக் கொண்டிருந்தாள். 

மழையில் முழுவதுமாக நனைந்து சிறுபிள்ளை போல் விளையாடிக்கொண்டிருந்தவள் வேகமாய் தாக்கிய இடி மின்னலுக்கு பயந்து பின்னே நகர்ந்தாள்.

 அவளின் புடவை நுனி கால்களில் மாட்டிக் கீழே விழுந்தவளை தாங்கி பிடித்தான் ஹரி.

ஏற்கனவே இயற்கையின் இதத்தை உணர்ந்தவளுக்கு இப்போது இவனின் பரிசத்தையும் உணர எங்கே அவனுள் கரைந்து விடுவோமோ என்ற நினைவில் அவசரமாய் விலக முயல அவன் அவளைத் தடுத்து நிறுத்தினான். 

அவள் அவனை துரத்தவும் முடியாமல் அவனுடன் சேரவும் முடியாமல், “இருதலைக் கொள்ளி எறும்பாய்” நின்றாள். 

இப்போது அவளின் கை பிடித்து மென்மையாக வருடிக் கொண்டே,” வா கீழே போகலாம்”. 

ஆனால், ” இதற்கும் சேர்த்து அன்றைக்கு தந்துவிட வேண்டும்” என்று கூறி அவளை கன்னம் சிவக்க அழைத்துச் சென்று அவள் அறையில் விட்டுவிட்டு தன் நண்பர்களை தேடிச் சென்றான். 

“தோட்டத்தில் அரவிந்தை நடுவில் அமரவைத்து கவிஷ் ராகேஷ் பரணேஷ் மூவரும் அவனை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர்”. 

ஹரி அங்கு சென்றதும் கவிஷ் அவனிடம் ,”டேய் மச்சி! எங்கடா போய் தொலைஞ்ச?”

“இவன் என்ன காரியம் பண்ணி இருக்கான்னு தெரியுமா?” என்று கேட்டு விட்டு மற்ற தன் தோழர்களை பார்க்க ப்ரணேஷ் ஹரியிடம் ,”நம்ம அரவிந்த் ஒரு பொண்ணை சைட் அடிக்கிறான்”. 

ஆனா,” ஆள் தான் யாருன்னு தெரியலை!” என்று கூறினான்.

 இவ்வளவு தானா என்பது போல் ஹரி மற்றவர்களை பார்க்க அவர்கள் அவனிடம் என்ன என்பது போல் புருவம் உயர்த்தினர்.

அதற்கு ஹரி,” பொறுங்கடா! இன்னும் எவ்ளோ நாள் தான் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியும்” என்றதும் அனைவரும் சமாதானம் ஆகிவிட்டனர். 

அனைவரும் உள்ளே சென்று மணமகன் அறையில் நிற்க அவர்களுக்கு எதிரே தாரிகையின் தோழியாய் கவியும் கண்மணியும் நின்றிருந்தனர். 

மங்கல இசை முழங்க அன்பிற்குரியவர்களின் ஆசியுடன் ஸ்ரீராம் தாரிகையை தன்னுடையவளாக்கிக் கொண்டான். 

நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அறிமுகம் மற்றும் வாழ்த்து பரிமாறல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க அந்த மண்டபத்தில் ஒரு ஜீவன் மட்டும் சோகமாய் அமர்ந்திருந்தது.

அங்கு தனியாக அமர்ந்திருந்த ரேவதியிடம் சென்று பேச்சு கொடுத்தாள் கண்மணி. 

ஏற்கனவே அவளை ரேவதிக்கு மிகவும் பிடித்திருந்தது.

 இப்போது அவள் வந்து விசாரித்த விதத்தில் இன்னும் அதிகமாய் பிடித்து விட அவளிடம் சிறிது நேரம் பேசியவர் நல்லா இரும்மா என்று கூறிவிட்டு எழுந்து உள்ளே சென்று விட்டார். 

அனைவரும் திருமணம் முடிந்து கிளம்பிக் கொண்டிருந்தனர்.

 ஹரி கவியிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பிவிட்டான்.

அபி அக்சு கோகுல் என அவரின் குடும்பம் ரேவதியுடன் கிளம்பி வரவும் அவளும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.

 ஒரு காரில் சேரன், அபி ,அக்சு ,கோகுல் ஏறிக்கொள்ள மற்றொன்றில் கவி, ரேவதி தேவகி ஏறிக்கொண்டனர். 

ரேவதி மட்டும் அமைதியாய் இருக்க அவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தார் தேவகி. 

வீட்டிற்கு சென்றதும் அனைவரும் களைப்பில் உறங்கி விட்டனர். 

ஆனால் கவி மட்டும் விழித்துக்கொண்டிருந்தாள். 

 அவளுக்கும் களைப்பு இருந்தாலும் உறக்கம் மட்டும் வரவில்லை. 

அவள் மனம் ஏனோ என்றும் இல்லாத அளவு சஞ்சலம் அடைந்திருந்தது. 

அவள் உடனே ஹரிக்கு கால் செய்து பேச,” அவன் அமைதியாய் சொல்லுடா கண்ணா! மாமா ஞாபகம் வந்திருச்சா?” என்று அக்கறையாய் கேட்டான். 

அவள் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும்,” என்னடா ஆச்சு? ஏதாவது ப்ராப்ளமா சொல்லும்மா!” என்று மென்மையை கேட்கவும் அவள் அழுதுகொண்டே,” என்னன்னே தெரியல ஹரி! யாரோ இதயத்தைக் கசக்கிப் பிழிய மாதிரி வலிக்குது ஆனா வலியை மனசளவுல தான் உணர முடியுது”. 

“இப்பவே வந்து என்னை கூட்டிட்டு போய்டுங்க ப்ளீஸ்!” என்றவளை அணைத்து ஆறுதல் சொல்ல துடித்த மனதை கட்டுப்படுத்திக்கொண்டு அவளிடம்,” கவி நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றான். 

அவள் ம்… என்றதும் நம்ம கல்யாண வேலைனால லீவு நிறைய எடுத்திட்டேன் அதனால நாளைக்கு நான் வேலையில் ஜாயின் பண்ணியாகணும் என்றவனிடம் “சரி பத்திரமா போயிட்டு வாங்க” என்றாள் கவி .

அதற்கு அவன்,” எப்படி டி உன்னால உடனே மாறமுடியுது?”

“இப்பதான்  என்னோடவே இருக்கணும்னு அழுத!”

“அதுக்குள்ள போயிட்டு வாங்கன்னு சொல்ற!” என்றான் அவன். 

“என்னுடைய இடத்தில் இருந்து யோசிச்சப்ப நீங்க என்னோட இருக்கணும்னு தோணிச்சு”

” அதே உங்களோட இடத்திலிருந்து யோசிச்சா நீங்க போகனும் அதுதான் சரின்னு தோணுது”  என்றாள் கவி.

“தேங்க்ஸ் கவி டார்லிங்” என்று கூறி விட்டு போனை வைத்தவன் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டான். 

ஸ்ரீராம் திருமணம் முடிந்தவுடன் ஆனந்தமாய் வந்தவனின் சந்தோஷத்தை கெடுத்தது ஒரு போன் கால். 

கால் வந்தது நம்பரை பார்த்த ஹரி,” அட! இது ஆபீஸ் நம்பர் ஆச்சே!”

” பாசக்கார பயலுக கொஞ்சநேரம் கூட பிரிஞ்சு இருக்க மாட்டாங்க” என்று மனதில் நினைத்துக்கொண்டே காலை அட்டெண்ட் பண்ணி,” ஹலோ” என்றான்.

மறுமுனையில் சிறு மௌனம் பிறகு,” டேய் மாப்ள! நீ இப்ப எங்க இருக்க?” என்றான். 

“உன்னோட தங்கச்சியோட டைம் ஸ்பென்ட்  பண்ணனும்னு ஆசைதான்!”

 “ஆனால் மூணு தடிமாடு தாண்டவராயன்  அண்ணண்களா இருக்கானுங்க இல்ல!”

அதனால,” நான் இப்ப என்னோட வீட்லதான் இருக்கேன்” என்றான்.

சரி,” நீ இப்பவே கிளம்பி என்னோட அபார்ட்மெண்டுக்கு வா!”

“ரொம்ப முக்கியமான விஷயம்” என்று கூறி போனை வைத்து விட்டான். 

என்னவாக இருக்கும் என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் கவி அவனுக்கு கால் செய்ததும் அவன் கனிஷ்கரிடம் மட்டும் கூறிவிட்டு கிளம்பிவிட்டான். 

வழியெல்லாம் என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே கவிஷின் அப்பார்ட்மெண்ட்டை அடைந்தான். 

ஆனால் அவனுக்கு முன்பே ப்ரணேஷ், ராகேஷ், கவிஷ் அங்கிருந்தனர். 

அவர்களின் முகத்திலிருந்தே  பிரச்சனையின் தீவிரம் புரிய உள்ளே போய் பேசலாம் என்று கூறி அவர்களை அழைத்துச் சென்றான் ஹரி. 

“இதுதான் அவன் குணம்”

 எல்லோரும் கவலையை நினைத்து கலங்கி கொண்டிருந்தால் அவன் மட்டும் அதற்கான தீர்வை மிகவும் பொறுமையாக யோசித்துக்கொண்டிருப்பான். 

அந்த சமயங்களில் அவன் முகத்தைப் பார்க்கும்போது மேக மூட்டத்தில் மாட்டிக்கொண்ட சூரியனின் முயற்சி தெரியும்.

 உள்ளே சென்று அமர்ந்ததும் ,”இப்ப சொல்லுங்க டா!” என்று ஹரி கேட்க மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு சில நிமிடங்கள் பிடித்தன.

இப்பவும் சரி அவர்களை அவசரப்படுத்தவில்லை மாறாக பொறுமை காத்தான். 

இப்போது ராகேஷ் மெல்ல விஷயத்தை சொல்லத் தொடங்கினான். 

அவர்களின் கம்பெனி நிர்வாகம் வேறொரு எம் என் சி(MNC) க்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் அவர்கள் பழைய வேலையாட்கள் குறிப்பிட்ட சிலரை மட்டும் வேலைக்கு வைத்துக் கொண்டு மற்றவர்களை விரட்டி விடுவதாகவும் கூறினார். ஒரு நிமிடம் உறைந்து போனான் ஹரி.

“பிறகு சமாளித்துக் கொண்டு எம்டி என்னடா சொன்னார்?” என்று கேட்டான்.

மூவரும் அவரால் இதில் தலையிட முடியாது என்றனர்“. 

ஒரு முடிவு எடுத்தது போல் ஹரி எழவும் அனைவரும் அவனது பதிலுக்காக காத்திருந்த நேரம் அமைதியாய் அனைவரையும் ஒரு முறை நோக்கிவிட்டு,” இது என்னோட ஐடியா மட்டும் தாண்டா! நீங்க உங்களோட ஐடியாஸ்  சொல்லலாம் என்று கூறிவிட்டு முதல்ல நாம எல்லோரும் இப்போதைக்கு வேற கம்பெனில ஜாயின் பண்ணுவோம்”.

 அப்படியே பார்ட் டைம் ஜாபா பில்டிங் டிசைன் பண்ணி சின்ன சின்ன அபார்ட்மெண்டுக்கு கொடுக்கலாம். 

“எப்படியும் ஒன்னு இல்லனா ஒன்னு நமக்கு கை கொடுக்கும் டா மச்சி!” என்றவனை தூக்கி சுற்றினர் அவனது ஆருயிர் நண்பர்கள்.

பிறகு அனைவரும், “உன்னோட மேரேஜை என்ன பண்ணப்போற?” என்றதும் சிரித்துக்கொண்டே,” பண்ணிக்கப் போறேன் ட!  அவள அங்க தனியா விட்டுட்டு எனக்கு இங்க வேலையே ஓடாது”.

“அப்புறம் நாம எப்ப லைஃப்ல செட்டில் ஆகுவோம்னு நமக்கே தெரியாது”.

 “அவ கிட்ட என்னனு சொல்றது?”

 “அபி அக்சு ரெண்டு பேரையும் வேற ஆன்ட்டி சமாளிக்கணும் டா”. 

“என்ன! ரொம்ப ஆடம்பரமா நடக்க இருந்த கல்யாணம் ரொம்ப சிம்பிளா நடக்கப்போகுது. அவ்வளவுதானே!” என்றவனை இமைக்க மறந்து பார்த்தனர் மூவரும். 

ஹரியின் முடிவின்படி அடுத்தநாள் காலையில் வேலை தேட ஆரம்பித்தனர். 

அப்போதுதான் ஆரம்பித்திருந்த “பீல் லைக்  நேச்சர்” என்ற கட்டுமான நிறுவனத்திற்கு சென்றபோது நால்வருக்குமே இங்கு வேலை கிடைக்கும் என்பதில் சிறிதளவும் நம்பிக்கை இல்லை.

“அங்கு இன்டர்வியூ செய்த இளைஞன் இவர்களின் குறிப்புகளை பார்த்துவிட்டு நீங்கள் செல்லலாம் முடிவு இன்னும் ஒரு மணி நேரத்தில் தெரியப்படுத்தப்படும் என்றார்“.

ஆரம்ப நிலையில் உள்ள கம்பனி என்பதால் நால்வரின் அனுபவத்திறனை பயன்படுத்த முடிவு செய்தார் எம் டி.

Advertisement